நிலை மாற்றம்...

    மண்டை ஓட்டு படத்தை வைத்து எதையோ  தேடிக்கொண்டு இருந்த தன் அப்பாவிடம், முகியின் ஓவியக்கண்காட்சிக்கு அழைத்து போகுமாறு கேட்டாள்..மதி

    "இல்லை எனக்கு முக்கியமான வேலை இருக்கு நீ மட்டும் போயிட்டு வா" என்றார் வைத்தி

    "இந்த மண்டை ஒட்டு படங்களை எத்தனை வருடங்கள்தான் ஆராய்ச்சி பண்ணுவிங்க உங்க மகளோட கொஞ்ச நேரம் ஒதுக்குங்க" என்று ஒருவழியாக சண்டை போட்டு அங்கு போக சம்மதிக்க வைத்தாள் மதி..

    வைத்தி இப்போது இருக்கும் மூளை சிகிச்சை மருத்துவர்களில் முதன்மையானவர்..இது சம்பந்தமாக பல விதமான ஆராய்ச்சிகள் செய்து பல விருதுகளை வாங்கி இருப்பவர்..தனது வீட்டின் ஒருபகுதியை தனது ஆராய்ச்சி கூடமாக மாற்றியிருந்தார்...அவரின் இப்போதைய ஆராய்ச்சி மூளை மாற்று அறுவை சிகிச்சை....அதை செய்யும் வழிமுறைகள், அதில் வரும் சிக்கல்கள் போன்றவற்றை பற்றி

    கண்காட்சி இடத்தில் அதிக கூட்டம்..ஓவியர் முகி மிக பிரபலமானவர்..அவரது இயற்கையுடன்  இக்கால நவீனத்துவம் நிறைந்த ஓவியங்கள் பிரபலம்..

     உள்ளே நுழைந்து மதி ஒவ்வொறு ஓவியமாக ரசித்து பார்த்துகொண்டு இருக்க..வைத்தி வேண்டாவெறுப்பாக அவளை பின் தொடர்ந்து கொண்டு இருந்தார்..சில இடங்களில் நின்று அவள் பார்த்த ஓவியத்தை பற்றி அவரிடம் விளக்கும் போது "உம" மட்டும்  கொட்டினார்...

    கடந்து செல்லும் வழியில் முகியை சுற்றி பலபேர் நின்று பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தவள் தன் அப்பாவிடம் தன்னையும்  அறிமுகம் செய்து வைக்கச்சொல்ல...இருவரும் அவரை நெருங்கினார்கள்..

    அறிமுகம் செய்து கொண்ட வைத்தி..முகியின் ஓவியத்தின் மீது தனது மகளுக்கு இருக்கும் ஆர்வத்தை பற்றி சொல்லி தனது மகளை அறிமுகம் செய்து வைத்தார்...மதிக்கு சந்தோசம்....

    வீட்டிற்கு செல்லும் வழியில் "என்ன மண்டை ஓட்டு படங்களை விட முகியின் ஓவியம நன்றாகத்தானே இருக்கு?" என்றாள்

    "ஆமாம் நல்லத்தான் இருக்கு ஆனால் எனக்குத்தான் ஒண்ணுமே புரியலை" என்றார் வைத்தி சிரித்துக்கொண்டே...

    மறுநாள் வைத்தி மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு அவசர அழைப்பு வந்தது...

    பிரபல ஓவியர் முகி விபத்தில் சிக்கி அவரது கீழ்வயிற்று பகுதி முழுவதும் சிதைந்து விட்டதாகவும்..தலையில் சிறிய காயங்கள் இருப்பதாகவும் ஆனால் நினைவு இழந்து இருப்பதாகவும் சொன்னார்கள்...


   வைத்திக்கு அதிர்ச்சி..நேற்று இரவுதான் சிரித்து பேசினார்...விரைவாக முகி வைக்கபட்டு இருந்த அறைக்கு சென்றார்...

     அடிவயிற்றில் பெரிய ரத்தகறை படிந்த கட்டுடன் கிடத்தபட்டு இருந்தார்....முதலில் அவரது மூளை என்ன நிலையில் இருக்கின்றது என்பதை ஆராய வேண்டும்...

     சிறிய காயம என்பதால் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை..அதிர்ச்சியில் நினைவு இழந்து இருக்கலாம்..நினைவு வந்தபிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்ற தனது அறிக்கையை சமர்பிக்கும்போது....முகியின் உடல்நிலையை பற்றி சக மருத்துவரிடம் கேட்டார்...

     நெஞ்சுபாகம் முதல் வயிறு வரை சிதைந்து இருப்பதாகவும்...இதனால் நுரையீரல் நசுங்கி பாதிப்பு அடைந்து இருக்கின்றது...தானக இயங்கும் சக்தி இல்லை...பிழைப்பது கடினம் என்று சொன்னார்கள்...

    வைத்திக்கு வருத்தம்..நேற்றுதான் தனது அன்பு மகளின் ஆசையை இந்த முகியோடு நிறைவேற்றினார்...இப்போது..

     வருத்தத்தோடு உட்கார்ந்து இருந்தார்...ஒரு யோசனை.... இவரது நெடுங்கால கனவும்கூட....முகியின் மூளையை ஏன் மாற்றி மற்றொருவருக்கு பொருத்தி அதை  செயல்பட வைக்கக்கூடாது...அவரது கடந்த கால ஆராய்ச்சிகளும் இதை பற்றி என்பதால் ஆர்வம அதிகமானது..

     சக மருத்துவரை அழைத்து பேசினார்..முகி உயிர் பிழைக்க இருக்கும் சாத்தியகூறுகளை பார்க்கும் போது அவர் பிழைக்க மாட்டார் என்றே சொன்னார்கள்...அவரது இந்த மூளை மாற்று விசயத்தை சொன்னபோது தயக்கத்தோடு சம்மதித்தார்கள்...

    முதலில் அதே மருத்துவமனையில் மூளை பெறும் பாதிப்புக்கு உள்ளாகி உடல் நன்றாக செயல்படும் விதத்தில் இருக்கும் ஒரு ஆளை தேர்ந்து எடுத்தார்கள்...அந்த ஆள் இளம் வயதுக்காரர்...மூளையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால தனது உடலின் செயல்பாட்டை இழந்து இருப்பவர்...

    வைத்தி யோசித்தது..முகியின் மூளையை இந்த ஆளுக்கு பொருத்துவதின் மூலம் ஒருவரின் உயிரை காப்பாற்றலாம்...அதே நேரத்தில் முகியின் ஓவியதிறனும் மறையாமல் இருக்கும்....

     வைத்தி அறுவை  சிகிச்சைக்கு முன் சக மருத்துவர்களுக்கு உணர்த்தியது......இது நாம் செய்ய போகும்  முதல் மூளை மாற்று அறுவை சிகிச்சை...முதலில் முகியின் மூளையை தனியாக பிரித்து எடுப்போம்..அப்படி எடுக்கும்போது முதலில் அவரது மூளைக்கு தங்கு தடையின்றி oxygen செல்லுமாறு பார்த்துகொள்ளவேண்டும்...அதன் neuron கள் பாதிப்பு அடையாமல் காப்பாத்துவது  முக்கியம் ....ஒரு வினாடி தடைபாட்டலும் நமது முயற்சி வீண்...அதே நேரத்தில் யாருக்கு முகியின் மூளையை பொறுத்த போகின்றோமா அவரது மூளையை முழுவதும் வெளியில் எடுப்பதற்கு முன்..ஏற்க்கனவே வெளியில் செயற்கையாக இயங்கி கொண்டு இருக்கும் முகியின் மூளையின் கட்டளைகளை அந்த நபரின் nerve cell களோடு இணைப்பதின் மூலம் அந்த நபரின் உடல் இயக்கங்களை  நாம் எளிதாக கட்டுபடுத்தலாம்....அப்புறம் அந்த நபரின் பாதிக்கப்பட்ட மூளையை முற்றிலும் அகற்றிவிட்டு முகியின் மூளையை இயங்க செய்வது .....

      ஆனால் இது எல்லாம் சாத்தியமாக இருவரின் neuron களும் சரியாக பொருந்த வேண்டும்...என்பது வைத்தியின் கருத்து ...


     செயலில் இறங்கினார்கள்...முதலில் முகியின் மூளையை செயற்கையான முறையில் சுவாசிக்க செய்தனர்..பின் அதன் nerve cell களை அகற்றி வெளியில் குறைந்த வெப்பநிலையில் வைத்தனர்...அடுத்து மற்ற நபரின்  சரியான nerve  cell களை கண்டறிந்து தனிமைபடுத்தி அதை வெளியில் செயற்கையாக சுவாசம் பெறும் முகியின் மூலையோடு இணைத்தனர்....அடுத்து அந்த நபரின் துண்டிக்கப்பட்ட மூளை அகற்றப்பட்டு முகியின் மூளை சரியாக பொருத்தப்பட்டு... இயக்கபட்டது ...

     அந்த நபரின் அனைத்து உடல் விசயங்களும் சோதனை செய்யபட்டது...ஏதாவது ஒரு neoron தகவலை சரியாக கடத்தவில்லை என்றாலும் அது ஏதாவது பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்பதே அனைவரின் கவலை...அதிருஷ்டவசமாக எல்லாம் சரியாக பொருந்தி செயல்பட்டது...

     அவர்  கண் விழித்தார்...கைகள் அசைந்தன..எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள்...கண்கள் முழுவதும் திறக்க கஷ்டப்பட்டார்....வைத்தி உட்பட அனைவருக்கும் மகிழ்ச்சி...அந்த நபர் கொஞ்சநேரத்தில் பேச ஆரம்பித்தார்...

    அனைவரும் காண விரும்பியது முகியின் மூளையை வைத்து இருப்பவர் அவரைப்போலவே ஓவியம வரைவார? என்றுதான்...

    அவரை சில சோதனைகள் எடுக்க அழைத்து செல்லும்போது வைத்தி அந்த நபரிடம் சில வார்த்தைகள் பேசினார்...

"நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" என்றார் வைத்தி..

    "தலையில் வலி கொஞ்சம் அதிகமாக இருக்கு...அப்புறம் என் கண்ணுக்கு கருப்பு வெள்ளையை தவிர மற்ற வண்ணங்கள் எதுவும் தெரியவில்லையே  ஏன்?" என்றார் அந்த நபர்..

     வைத்திக்கு எங்கு தவறு நடந்து இருக்கின்றது என்பது புரிந்தது.....ஒன்று விபத்தில் முகியின் மூளை அடிபட்டதில் ..அல்லது..அறுவை சிகிச்சையின் போது தவறான இணைப்பில் நபரின் பார்வை நரம்புகள் பாதிக்க பட்டு இருக்கின்றது....

      சில சோதனைகள் செய்த பின்னர் எல்லோரும் ஆர்வமாக காத்து இருக்கும் அறைக்கு அந்த நபர் கொண்டுவரப்பட்டார்.அங்கு வைத்தி இல்லை...அவரது முன் ஒரு வரைபலகையும்..தூரிகையும் இருந்தது...அங்கு இருந்த ஒருவர் "ஒரு நிலை மாற்றத்துக்கு பின் நீங்கள் வரையும் முதல் ஓவியத்தை வரையுங்கள்" என்று சொல்ல...

    அந்த நபர் கோபமாக பார்த்து கொண்டே .."எத்தனை தடவை சொல்வது எனக்கு கருப்பு வெள்ளையை தவிர வேற வண்ணங்கள் தெரியவில்லை என்று..இதில் எப்படி வண்ண ஓவியம வரைவது"..






(மூளை மாற்று அறுவை சிகிச்சை எனபது இப்போது சாத்தியமில்லைதான....இன்னும் இதற்கு எலிகளை வைத்துதான் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கிறோம்....ஆனால் சீக்கிரம் வரலாம்...இது என் கற்பனைதான்...ஆனால் மேலே நான் சொல்லி இருக்கும் பிரச்சினைகள் ஒரு மூளை மாற்று சிகிச்சை செய்யும்போது ஏற்ப்படும் சில அடிப்படையானவை ...மற்றபடி சிகிச்சை முறை என் கற்ப்பனை...)

11 comments:

Ramesh said...

அருமையான நடை நண்பரே... அருமையாய், வித்தியாசமாய் இருக்கிறது உங்கள் சிந்தனை...

Philosophy Prabhakaran said...

அருமை.... கடந்த கதையைப் போலவே வித்தியாசமாக இருந்தது...

கணேஷ் said...

பிரியமுடன் ரமேஷ் said...@



உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி...

கணேஷ் said...

Blogger philosophy prabhakaran said...@


கருத்துக்கு மிக்க நன்றி..

test said...

வழமை போல் அருமையாக! :-)

கணேஷ் said...

ஜீ... said...@

கருத்துக்கு நன்றி ...

ஆனந்தி.. said...

அப்டியா கணேஷ்...மூளை மாற்று அறுவை சிகிச்சை முதலில் சாத்தியமா....அது முதுகெலும்பு தண்டுடன் சம்பந்தப்பட்டது இல்லையா...நிறைய systemetic இருக்குமே...ஸ்டெம் செல்ஸ் மட்டுமே இதுக்கு போதுமானதாய் இருக்கும் தோணலை கணேஷ்...பட் இதெல்லாம் சாத்தியம் ஆசுனால்...சாவு எண்ணிக்கை கட்டுபடுத்தலாம் இல்லையா...இதுவும் கூட ஒரு மாதிரி க்ளோனிங் ...இல்லையா..!! ஆரம்பிச்சது...கதையை கொண்டுபோனது...எல்லாமே நல்ல இருக்கு..அதுவும் தலைப்பு ரொம்ப பிடிச்சது...கலக்குங்க வழக்கம்போலே...:)))

கணேஷ் said...

இல்லைக்கா மருதுவ் முறைப்படி சாத்தியம் என்கிறார்கள்...ஆனால் அந்த நுட்பம் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை...

இப்போதைக்கு மூளையில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஸ்டெம் செல்களின் மூலம் இறந்த அல்லது பாதிப்படைந்த செல்களை சரி செய்கிறார்கள்...

மற்றபடி இதுவரை முயற்சி செய்ய எலிகளை சோதனை செய்கின்றார்கள்..அவ்வளவுதான்..ஆனால் விரைவில் எதிர்பார்க்கலாம்..


இது ஒருமாதிரி க்ளோன் இல்லை..முற்றிலும் மூளையை மாற்றுவது..

ஆனால் ஸ்டெம்செல் களை வைத்து உறுப்புகளை தனியாக வளரசெய்யும் முறையும் சோதனையில் இருக்கின்றது..இது நீங்கள் சொன்ன க்ளோனிங் முறையை சேரும்..

ஆனந்தி.. said...

மனிதனின் நினைவாற்றலை அப்டியே மாற்றும் ஒரு கற்பனை கதையை சின்ன வயசில் பொதிகை டிவியில் பார்த்து இருக்கேன் கணேஷ்...அனேகமா சுஜாதா னு நினைக்கிறேன்..அதோட முடிவு எப்படி தெரியுமா இருக்கும்...புது நினைவில் எதுவும் புரியாமல் அந்த ஆளு மெண்டல் ஆயடுவார்...ம்ம்...சில இயற்கையான விஷயங்களை இயற்கைக்கு புறம்பாய் செய்யும்போது நிறைய ஆராய்ச்சி..பரிசோதனை தேவை இல்லையா...பட் இந்த கற்பனை கதை சுவாரஸ்யம்...நன்றி கணேஷ் உங்க விளக்கத்துக்கு...:)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

நன்றி!

Learn said...

அருமை பாராட்டுக்கள்

www.tamilthottam.in