ஜடைமாட்டி...

     போனமுறை ஊருக்கு போயிருந்தபோது, நாங்கள் இருவரும் சேர்ந்து பேசுவதை பார்த்துவிட்ட யாரோ அவளின் வீட்டில் சொல்லிவிட...அடுத்தவந்த நாள்களில் என்னை பார்ப்பதை கூட நிறுத்தி இருந்தாள்...வருத்தப்பட்டேன்..

     இந்த முறை போனாலும் பேசுவது கஷ்டம்தான்...எப்படி அவளின் வீட்டுக்கு தெரியாமல் பேசுவது? ..........ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்து பார்த்தேன்....அதுவும் கிராமத்தில் பேசுவது என்பது முடியாத காரியம்.......ஏதாவது செய்யவேண்டும்...

     அலைபேசி கொடுக்க அதை அவள் மறைத்துவைத்து பேசுவது என்பது தேறாது..ஆனால் அதே நேரத்தில் மறைவாக பேச எனக்கு ஒரு யோசனை......இது தேறும்...செயல்படுத்துவதும் எளிது...வேலையில் இறங்கினேன்..ஊருக்கு போக இன்னும் சில நாட்களே இருந்தன..அதற்குள் முடிக்க வேண்டும்...

     நான் செய்ய போவது, ஒரு ஜடைமாட்டியில் two way radio வை இணைப்பது...இதை அவள் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் பயன்படுத்தமுடியும்...சந்தேகம் வராது....

    
     எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்பதால் எனக்கு தேவையான மற்றொரு பகுதியை  கொஞ்சம் பெரிய அளவில் வடிவமைத்துகொள்ள எண்ணியிருந்தேன்...


      முதலில் கொஞ்சம் பெரிய பொருத்தமான ஜடைமாட்டி தேட வேண்டும்......கிடைத்தது....இரண்டு மூன்று வகையில் தேர்வு செய்து வாங்கினேன்...முதலில் அதில் உள்ள இரும்பு பொருள்களை நீக்கி...அதன் மேல்பகுதியில் சிறு நீளவடிவ பள்ளங்கள் ஏற்படுத்தி அதில் சிறிய ஆன்டெனாக்களை இரண்டு வரிசையாக பதித்தேன்..வெளியில் இருந்து பார்க்க அதுவும் ஜடைமாட்டியின் ஒரு பகுதி போல இருக்குமாறு...

      அதன் உட்புறத்தில் ஒரு இடத்தில பாட்டரி பொருத்த இடத்தை ஒதுக்கி விட்டு ஒரு முனையில் mic ம் மறு முனையில் speaker ம்...மீதி இருக்கும் இடத்தில்.. மற்ற receiver & transmitter களை பொருத்தினேன்..

       ஒரே ஒரு channel  மட்டும் கொண்டு இயங்குமாறுதான் அதை வடிவமைத்தேன்..கிராமம் என்பதால் வேறு யாரும் உபோயோகிக்க வாய்ப்பு இல்லை..அதனால் channel இடையூறுகள் இருக்காது...உபோயோகபடுத்துவது  intermediate frequency என்பதால் பெரிய  பிரச்சினை இருக்காது எனபது என் முடிவு...

      நான் அந்த ஜடைமாட்டியில் பொருத்த வாங்கிய பொருள்கள் எல்லாம் மிகசிறியன என்பதால் விலையும் அதிகம்...எப்படியோ ஒருவழியாக அதை தயாரித்து...கொஞ்சம் தொலைவில் வைத்து இரண்டு பகுதிகளையும் சோதித்து பார்த்தேன்...சரியாகத்தான் இருந்தது..குரல் கொஞ்சம் கர கர என்று இருந்தது..........பேசாமல் இருப்பதற்கு இது பராவாயில்லை என்பதால் போதும் என்ற முடிவு......

      இதை தயாரிப்பது கூட பெரிய விசயமாக இல்லை.. என் வீட்டில் உள்ளவர்களின் கண்களில் படமால் மறைத்து வைக்கவேண்டும்...அவளை பார்த்து இதை கொடுக்கவேண்டும்......இயங்கும் விதத்தை சொல்ல வேண்டும் இதுதான் பெரிய விசயம்...

      ஊருக்கு சென்ற அடுத்தநாளில் அவளை பார்க்க சென்றேன்...எப்போதும் போல வழியில் செல்வது போல சென்று அவள் இருக்கிறாளா என்று பார்க்க..அவள் தோழியுடன் இருந்தாள்...சிரித்தாள்...அப்போதுதான் அந்த ஆச்சர்யம் நடந்தது..

"எப்படி இருக்கிறே? எப்ப வந்தே?" என்றாள்

என்னால் நம்பமுடியாமல்...பதில் அளித்தேன்..

"பயப்படாதே பேசலாம் ...வீட்டில் யாரும் இல்லை...வெளியில் போய் இருக்கிறார்கள்."என்றாள்

     இதுதான் சரியான நேரம் என்று எண்ணி.."கொஞ்சநேரம் இரு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வீடுவந்து அந்த ஜடைமாட்டியை எடுத்துக்கொண்டு ஓடினேன்..

"என்ன இது?" என்றாள்

அதை திருப்பி காட்டி அதன் செயல்முறை விளக்கங்களை அளித்தேன்

"சத்தம் அதிகம் வராதே?" என்றாள் அப்பாவியாய்

     "வராது..தேவையான போது இதை உன் காதுக்கு அருகில் வைத்தால்தான் கேட்க முடியும்" என்றேன்

"இதை ஜடையில் மாட்டுவதால் முடி ஏதும் கொட்டாதே?" என்றாள்

"கொட்டினா என்ன எப்படின்னாலும் உன்னை கட்டிக்கிட்டு அழப்போறது நான்தானே முடியே இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை"

சிரித்தாள்.."சரி எப்ப பேசுவே?"

"இரவில் நானாகவே தொடர்புகொள்வேன்...சிறிய சத்தம் வரும் புரிந்து கொள்" என்றேன்

"சரி" என்று தலையாட்டினாள்

     அன்றைய இரவில் வீட்டை விட்டு வெளியில் வந்து உலாவுவது போல அவளிடம் பேசினேன்....சத்தமாக பேச பயந்தாள்...எப்படியோ பேசினோம்..நிறையா பேசினோம்...இதை
முதலிலேயே செய்து இருந்தால் போன முறை பிரச்சினை இருந்து இருக்காதில்லே என்று அலுத்து கொண்டாள்...

     அவள் கண்களை பார்த்து நேராக கேட்க முடியாத ஒன்றை கேட்டேன் கொடுத்தாள்..அதையே என்னிடம் இருந்து திரும்ப கேட்பாள் என நினைத்தேன்..கேட்கவில்லை வருத்தம்...


   அடுத்து வந்த நாள்களில் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் நிறைய பேசினோம்...

      காலையில் அவளின் வீதி வழியே செல்லும்போது அவள் வீட்டின் முன் சிறு கூட்டம் கூடி இருந்தது......சில சாமியார்கள்..உட்பட வேடிக்கை பார்க்கவந்தவர்கள் என்று இருக்க..அவளுக்கு ஏதும் ஆச்சோ என்று போய் பார்த்தேன்...

       கூட்டத்தின் நடுவில் அவளது அம்மாவை உட்கார வைத்து இருக்க.... அவள் சோகமாக அருகில் உட்கார்ந்து இருந்தாள்...சாமியார்...ஏதோ மந்திரங்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்...


    அவளை பார்க்க..புரிந்து கொண்டு.அவள் அணிந்து இருந்த ஜடைமாட்டியை காட்டினாள்...நான் புரியவில்லை என்றேன்...எழுந்து என்னருகில் நிற்ப்பதுபோல நின்று...

"நேற்று இந்த ஜடை மாட்டியை என் அம்மா  மாட்டி இருந்தார்கள்"  என்று சிரித்துகொண்டே நழுவினாள்

          எனக்கு பிரச்சினை புரிந்தது..நேற்று அவளோடு நான் பேச முயற்சிக்க எந்த ஒரு பதிலும் வராததால்.."எழுந்து வெளியே வா"..என்று திரும்ப திரும்ப சொன்னேன்...அதை அறை தூக்கத்தில் இருக்கும் அவளது அம்மா கேட்டு இருக்க வேண்டும்...அந்த வார்த்தைகள் கிட்டத்தட்ட அவர்களுக்கு அரைதூக்க நிலையில் ஹிப்னோசைஸ் செய்வது போல இருக்க ..அதனால் தன்னையறியாமல் எழுந்து நடந்து இருப்பார்கள்....ஒரு கட்டத்தில் நினைவு வந்ததும்...பயந்து தனது காதில் ஏதோ ஓசை கேட்டதை தவறாக நினைத்ததின் விளைவு இந்த பூசைகள்....


         .பயந்து இருந்ததின் விளைவு நடுவில் உட்கார்ந்து இருந்த  அவர்களின் முகத்தில் தெரிந்தது...ஏதோ மந்திரம் ஒலிக்க...அவளை பார்த்தேன....நடந்ததை நான் புரிந்து கொண்டதை நினைத்து இருவரும் ஒருமுறை யாருக்கும் தெரியாமல் சிரித்து கொண்டோம்....

20 comments:

Kousalya said...

இந்த மாதிரி எனக்கு ஒரு கிளிப் தேவைபடுது....ரெடி பண்ணி தரலாமே...!! :)))

கதை சுவாரசியத்துக்கு குறை இல்லை....நிஜமா இந்த மாதிரி ஒண்ணு இருந்தா பொண்ணுங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.

ganesh said...

Kousalya said...@

கொடுக்கிறேன்...ஆனால் விலை அதிகம் பரவாயில்லையா?)))
நன்றி

philosophy prabhakaran said...

ஹைடெக் காதல்...

philosophy prabhakaran said...

ஆனாலும் இந்தக் கதையில் முதல் பாதி மட்டுமே உண்மை இரண்டாம் பாதி புனைவு என்றே தோன்றுகிறது... சொல்லப்போனால் முதல் பாதி கூட கற்பனையாக இருக்கலாம்...

ganesh said...

philosophy prabhakaran said@..


ஆமாம் ..கதைக்கு மட்டும்))))

ganesh said...

philosophy prabhakaran said...

ஆனாலும் இந்தக் கதையில் முதல் பாதி மட்டுமே உண்மை இரண்டாம் பாதி புனைவு என்றே தோன்றுகிறது... சொல்லப்போனால் முதல் பாதி கூட கற்பனையாக இருக்கலாம்...///

இல்லை எல்லாமே கற்ப்பனை...

இந்த வலைபூ முழுவதும் இருப்பதில் என் பெயர்,வயதை தவிர எல்லா கதைகளில் வருவது அடியேனின் கற்பனையே)))))

philosophy prabhakaran said...

// இந்த வலைபூ முழுவதும் இருப்பதில் என் பெயர்,வயதை தவிர எல்லா கதைகளில் வருவது அடியேனின் கற்பனையே))))) //

அப்படின்னா உங்க கிராமத்து காதலும் கற்பனை தானா :(

ganesh said...

அப்படின்னா உங்க கிராமத்து காதலும் கற்பனை தானா :(///


ஹ ஹ .முடிவை உங்களிடமே விடுகிறேன்...

அதுதானே சுவாரசியம்.))))

sasikala said...

hair clip tamil translation superb

really is this correct name or its ur own translation brother

ganesh said...

sasikala said...@//


இல்லை..இதுதான் சரியான பெயர்..


ஆச்சர்யம் உங்களுக்கே தெரியலையா))))))

நன்றி

தெய்வசுகந்தி said...

சுவாரசியமான கதை!

Hameed said...

நல்லா இருக்கு

ganesh said...

தெய்வசுகந்தி said...

சுவாரசியமான கதை!//


கருத்துக்கு நன்றி

ganesh said...

Hameed said...

நல்லா இருக்கு//

நன்றிங்க...

Geetha6 said...

nice story

ganesh said...

Geetha6 said...

nice story
///

நன்றி..

கவிநா... said...

நல்லா இருந்த அந்த அம்மாவுக்கு பைத்தியம் பிடிக்க வச்சிட்டீங்களே!!
நல்ல வேளை.. உங்க காதலிக்கு ஒன்னும் ஆகல.... :))))

ganesh said...

கவிநா... said...
உண்மை இல்லைங்க எல்லாம் கற்ப்பனை...)))

ஆமினா said...

//"கொட்டினா என்ன எப்படின்னாலும் உன்னை கட்டிக்கிட்டு அழப்போறது நான்தானே முடியே இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை"//

ஹா...ஹா...ஹா...

நல்ல காதல் கதை! அதுவும் //ஹைடெக் காதல்...//

ganesh said...

ஆமினா said...

நல்ல காதல் கதை! அதுவும் //ஹைடெக் காதல்...////

கருத்துக்கு மிக்க நன்றி