கிழித்த கடிதங்கள் - 2

துடிப்பை நிறுத்த போகும் எந்த

இதயமும் முன்னே சொல்வதில்லை 

நான் நிற்கப்போகிறேன் அதனால்

இறக்கபோகிறாய் என்று.....



ஆனால் பாழாய்ப்போன என்

இதயம் மட்டும் தினம் தினம் என்னை

இம்சை செய்கின்றது  -   நீயில்லை

என்றால் நின்றுவிடுவேன் என்று....



    படித்தவள் அப்படியே கடிதத்தையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தாள்... 

நான் பேச வாய் திறப்பதற்குள் அவள் பேச ஆரம்பித்தாள்...

        "கணேஷ் உன்னிடம் போனமுறை அப்படி நடந்து இருக்ககூடாது......ச்சே..நீ எழுதி கொடுத்த கவிதையை கூட கிழித்து போட்டு விட்டேன்.......உன் காதல் இந்த கவிதையில்  தெரியுது .....என்னை மன்னித்துவிடு இப்போதுதான் உன்னை புரிந்துகொண்டேன் இனிமேல் அப்படி செய்யமாட்டேன்" என்றாள்

       "இல்லை...போனமுறை நீ எனது கவிதையை கிழித்துப்போட்டு விட்டதால்...உனக்கு எந்தவிதமான  கவிதை பிடிக்கும் என்பதை அறிய நான் வேறொருவர் எழுதிய கவிதையை கொண்டுவந்தேன்.... அதுதான் நீ இப்ப  படிச்சது...இந்த கவிதை உனக்கு பிடித்து இருந்தால் இதே மாதிரியான கவிதைகள் நான் உனக்கு எழுதி தருகிறேன்" என்றேன்..


      முறைத்து பார்த்துவிட்டு ஏதும் பேசாமல் வேகமாக சென்றுவிட்டாள்...நான் கொடுத்த கவிதை சிறுகாகித துண்டுகளாக என்னை சுற்றி  காற்றில் பறந்துகொண்டு இருந்தது....

20 comments:

சௌந்தர் said...

ஆனால் பாலய்ப்போன என்

இதயம் மட்டும் தினம் தினம் என்னை

இம்சை செய்கின்றது - நீயில்லை

என்றால் நின்றுவிடுவேன் என்று....////

யாருப்பா அது

கணேஷ் said...

யாருப்பா அது////

தேடிக்கிட்டு இருக்கேன்..கிடைச்சா தகவல் கொடுக்கிறேன்)))

Unknown said...

விடுங்க பாஸ் இவிங்க எப்பவுமே இப்பிடித்தான்! :-)

கணேஷ் said...

ஜீ... said...

விடுங்க பாஸ் இவிங்க எப்பவுமே இப்பிடித்தான்! :-)///

இந்த "இவிங்க" யாரு??? நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு?)))))

கருடன் said...

//இந்த "இவிங்க" யாரு??? நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு?)))))//

அதான் பாஸ் அவங்க... எல்லாம் சரியாகிடும் விடுங்க... :))))

குறையொன்றுமில்லை. said...

"//இல்லை...போனமுறை நீ எனது கவிதையை கிழித்துப்போட்டு விட்டதால்...உனக்கு எந்தவிதமான கவிதை பிடிக்கும் என்பதை அறிய நான் வேறொருவர் எழுதிய கவிதையை கொண்டுவந்தேன்.//
சூப்பர்.இதுபோதாதா?

கணேஷ் said...

அதான் பாஸ் அவங்க... எல்லாம் சரியாகிடும் விடுங்க... :))))///


எங்க சரியாக.அதான் கிழிச்சி முகத்துலே எரியிருராங்களே பின்ன எப்படி சரியாகும்))))))

கணேஷ் said...

Lakshmi said...

சூப்பர்.இதுபோதாதா?///

ம்ம்ம் ...கவிதையை கிழிச்சி அர்ச்சனை பண்ணியிருக்கா ...நீங்க சூப்பர் சொல்றீங்க??))))))))

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த பொண்ணுங்களே இப்படி தான் பாஸ்.. நீங்க எதுக்கும் கவலை படாதீங்க..

கணேஷ் said...

வெறும்பய said...

இந்த பொண்ணுங்களே இப்படி தான் பாஸ்.. நீங்க எதுக்கும் கவலை படாதீங்க..///

அப்ப..ஒரு முடிவ எடுதுட்டிங்க)))

பாஸ் எல்லாம் கற்ப்பனை.)))

Kousalya Raj said...

ஆமா இப்ப என்ன கவிதையா வருது...அறிவியலை காணும்...?!

something wrong...!

ஒ.கே ஒ.கே கவிதை சூப்பர்..அப்ப அப்ப இந்த மாதிரி கவிதையும் எழுது...

வாழ்த்துக்கள் கணேஷ்.

கணேஷ் said...

Kousalya said...@

நன்றி சிஸ்..

கவிநா... said...

கடிதங்கள் கிழிந்துகொண்டே இருந்தாலும் உங்கள் கவிதைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
(எழுத தெரியாது-னு சொன்னது நீங்கதானே, இப்ப சொல்லுங்க நீங்க சொல்றது பொய் தானே!)

அன்புடன்
கவிநா...

கணேஷ் said...

அது நான் எழுதினது இல்லை கணேஷ் எழுதியது)))



நன்றி

கவிநா... said...

ஓ... கணேஷ் vs கணேஷா...? (அறிவியல் vs கவிதை?)
--
அன்புடன்
கவிநா...

கணேஷ் said...

ஆமாம்..ஒருவர் அறிவியல் மட்டும் எழுதுவார்..

நான் மற்ற கதைகள் கவிதைகள்(!!??) எழுதுவேன்...அவ்வளவுதான்..

கவிநா... said...

// நான் மற்ற கதைகள் கவிதைகள்(!!??) எழுதுவேன்...அவ்வளவுதான்..//

அப்போ, இந்த கவிதை எழுதினது நீங்கதான்-னு சொல்றீங்க... :)

கணேஷ் said...

இல்லை..நான் அறிவியல் எழுதற ஆள்...இதை எழுதியது கணேஷ்..

ஆனந்தி.. said...

excuse me...இது என் தம்பி கணேஷ் ப்ளாக் தானே..அந்த பையன் கூட எல்லாத்துலயும் அறிவியலை பொடி வச்சு எழுதுவான்..தப்பா எதுவும் நுழஞ்சுட்டேனா..:)))

கணேஷ் said...

அய்யோ நீங்க தப்பா வந்துட்டிங்க...அது அடுத்த தெருவுல இருக்கு))))

நன்றி