மீண்டும் ஜீனோ..


    மீண்டும் ஜீனோ என்ற தலைப்பை படித்ததும் அதே கதையை தொடரப்போகிறேன் என்று நினைக்க வேண்டாம்... ஜீனோவை வைத்து சில கதைகள் எழுத எண்ணம.

    சில கதைகள் எழுதுவதின் மூலம் புதியதாக உருவாக்கிய ஜீனோவின் குறைகளை கொஞ்சம் நிவர்த்தி செய்ய முடியும் அதற்குபிறகு  மீண்டும் ஜீனோ தொடரலாம் என  நினைக்கிறேன்..


    எப்படி ஜீனோவை உயிர்பிக்கலாம்,இதை எழுதியது சுஜாதா என்ற மிகபெரிய மனிதர் ஆயிற்றே,அதை எப்படி தொடரலாம்..

    காரணம் சுஜாதாவை மிக பிடிக்கும். கொஞ்சம் அறிவியல் தெரியும் ...இதைவைத்து தொடரலாம் என்ற எண்ணம்தான்....

    சரி ஜீனோவை எப்படி உயிர்ப்பிப்பது.. ஏற்க்கனவே ஜீனோவை போன்ற ஒரு நாயை பொற்கொடி-3 படைத்து இருக்கிறேன்...சுஜாதா அவர்களின் ஜீனோ முழுக்க ரோபோடிக் சம்பந்தமானது..நான் உருவாக்கியது ஜெனடிக்(genetic) முறையில்..இதுவும் சுஜாதா அவர்கள் உருவாக்கிய ஜீனோவை நிவர்த்தி செய்யும்..

     முக்கியமாக பழைய ஜீனோவில் அது தனக்கு தேவையான மினசாரத்தை சேமித்து வைக்கும் battery யில் இருக்கும் சில குறைப்டுகள்,கடைசியில் ஜீனோ இறக்க காரணமான அதன் க்லாக் (clock) செயல்படுவதில் பிரச்சினை போன்றவைகள் புதிய ஜீனோவில் இல்லை..

   அப்படி என்ன புதிய ஜீனோவில் இருக்கின்றது என்பதை அறிய பொற்கொடி -3 படிக்க வேண்டுகிறேன்..அதில் தெளிவாக இருக்கின்றது..மேலும் இந்த ஜீனோவை படைத்தது ஒரு வேற்று கிரகபெண்..அவர்களது கிரகத்தில் உள்ள தொழிநுட்பமுறைகளை வைத்து இந்த ஜீனோ படைக்கப்பட்டுள்ளது....


    புதிய ஜீனோ ஜெனடிக் முறையை மேம்படுத்தி அதில் உருவாக்கிய கொஞ்சம் ரொபோடிக் தன்மை கொண்ட நாய்....இனி எழுதப்போகும் சில கதைகளில் இந்த ஜீனோவை அதன் அறிவுத்திறமையை உபோயிக்கலாம் என் நினைக்கிறேன்...

   அதாவது கணேஷ் வசந்த் இவர்களில் கணேஷ் இப்போது கதை எழுதுவதால் அவனுக்கு பதில் இந்த ஜீனோ வசந்தோடு சேர்ந்து கொண்டு தன் வேலையை செய்யும்..ஜீனோவை எப்படி எந்த விசயங்களுக்கு வசந்த் பயன்படுத்திகொள்கிறான் என்பதில் இருந்து புதிய ஜீனோவின் திறமைகள் வெளிப்படும்...

   இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள் இருந்தால் எனக்கு சொல்லலாம்....எனக்கு கொஞ்சம் உபோயோகமாக இருக்கும்..

16 comments:

Mythees said...

நீங்க என் சார் அறிவியல் கலந்த பதிவாவே எழுதுறிங்க ...

ஜீனோ நல்லா இருக்கு ...

நிகழ்காலத்தில்... said...

எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ஜீனோதான்:))

மீண்டும் காண ஆர்வமாக இருக்கிறேன்

வாழ்த்துகள்

natbas said...

நல்ல முயற்சி நண்பரே, ஓரிரு வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன்.

robotics, genetics இரண்டையும் இணைத்து ஜீனோவை உருவாக்க நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கூடவே கொஞ்சம் biomimetics http://en.wikipedia.org/wiki/Biomimicry என்ற துறையையும் சேர்த்துக் கொள்ளலாமே?

இதுவரை தமிழில் யாரும் இதை செய்யவில்லை என்று நினைக்கிறன்.

சுஜாதாவிடம் சிறப்பான விஷயம் முதலாவதாக அவரது மொழி நடை. அடுத்தது, அவர் புதிது புதிதாக எங்கெங்கிருந்தோ விஷயங்களைக் கொண்டு வருவார்.

துணிச்சலாக இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண என் வாழ்த்துகள்.

கணேஷ் said...

mythees said...

நீங்க என் சார் அறிவியல் கலந்த பதிவாவே எழுதுறிங்க ...////

வேறெதுவும் உருப்படியாக தெரியாது சார் அதான்.)))

கணேஷ் said...

நிகழ்காலத்தில்... said...

எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ஜீனோதான்:))

மீண்டும் காண ஆர்வமாக இருக்கிறேன்

வாழ்த்துகள/////


கருத்துக்கு நன்றி எனக்கும் ஜீனோ பிடிக்கும்...

கணேஷ் said...

natbas said...

நல்ல முயற்சி நண்பரே, ஓரிரு வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன்.

robotics, genetics இரண்டையும் இணைத்து ஜீனோவை உருவாக்க நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கூடவே கொஞ்சம் biomimetics http://en.wikipedia.org/wiki/Biomimicry என்ற துறையையும் சேர்த்துக் கொள்ளலாமே?////


கண்டிப்பாக சேர்த்துகொள்கிறேன்..தகவலுக்கு நன்றி..

ஆனந்தி.. said...

genitic முறைநாள் biomimicry யும் சேர்த்து include ஆய்டும் இல்லையா? சோ..வலை உலகில் ஒரு சூப்பர் எந்திரனுக்கு ரெடி ஆகுரிங்க..வாழ்த்துக்கள்...வசந்த் வேற னால் நிறைய காமடி எதிர் பார்க்கலாம்..

கணேஷ் said...

ஆனந்தி.. said...
ஒரு சூப்பர் எந்திரனுக்கு ரெடி ஆகுரிங்க..வாழ்த்துக்கள்...வசந்த் வேற னால் நிறைய காமடி எதிர் பார்க்கலாம்..////

நிறையா எதிர்பார்க்கிறிங்க..பார்ப்போம்...

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் சனிக்கிழமைகளில் அம்பலம் அரட்டையில் கலந்து கொண்ட கணேஷா. ?எல்லாமே ஸ்வப்னம் போலிருக்கிறது.
சுஜாதா சாரின் ஆசிகள் உங்களுக்கு நிறையக் கிடைக்கட்டும்.வாழ்த்துகள்.

கணேஷ் said...

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் சனிக்கிழமைகளில் அம்பலம் அரட்டையில் கலந்து கொண்ட கணேஷா. ?எல்லாமே ஸ்வப்னம் போலிருக்கிறது.
சுஜாதா சாரின் ஆசிகள் உங்களுக்கு நிறையக் கிடைக்கட்டும்.வாழ்த்துகள்.////


இல்லைங்க..நான் அந்த கணேஷ் இல்லை....

உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி...

ஜெயந்தி said...

ஜீனோ கதை படித்து நிறைய ஆண்டுகள் ஆகிறது. உங்கள் ஜீனோவை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

கணேஷ் said...

ஜெயந்தி said...

ஜீனோ கதை படித்து நிறைய ஆண்டுகள் ஆகிறது. உங்கள் ஜீனோவை படிக்க ஆவலாக இருக்கிறேன்.////

இதே ஆவலோடு படித்துவிட்டு சொல்லுங்க; நன்றி

Philosophy Prabhakaran said...

நான் ஜீனோவின் தீவிர ரசிகன் என்பதால் இன்று முதல் உங்கள் வலைப்பூவை பின்தொடர்கிறேன்... உங்களது ஜீனோ கதைகளுக்காக காத்திருக்கிறேன்...

கணேஷ் said...

philosophy prabhakaran said...

நான் ஜீனோவின் தீவிர ரசிகன் என்பதால் இன்று முதல் உங்கள் வலைப்பூவை பின்தொடர்கிறேன்... உங்களது ஜீனோ கதைகளுக்காக காத்திருக்கிறேன்..////

மிக்க நன்றி..விரைவில் எழுதுகிறேன்..

Unknown said...

Best wishes!! waiting!! :)

கணேஷ் said...

ஜீ... said...

Best wishes!! waiting!! :)//

அந்த கதையை எழுதி இருக்கிறேன்..செல்லும் சொல்லும்..என்ற தலைப்பில்..படியுங்கள்