“ நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே” இது சம்பந்தமாக சரியாக தெரியாததால் இது சரியா? தவறா? என்பதை நான் விவாதிப்பதை விட்டுவிட்டு நான் சொல்ல வந்த விசயத்திற்கு செல்கிறேன்...
அதாவது மூன்றாவது கண் என்று உண்மையில் உள்ளதா? அப்படி என்றால் அது நம்மில் எங்கு இருக்கின்றது? என்று எப்போதாவது நீங்கள் யோசித்து இருந்தால் நான் சொல்லபோகும் விசயங்கள் கண்டிப்பாக உங்களுக்கு உபோயோகமாக இருக்கும்...
அறிவியல் பேசாமல் இந்த மூன்றாவது கண் என்ன என்று பார்த்தால் நமது உடலில் உள்ள சக்கரங்களில் ஆஜ்னா சக்கரம் வரும் இடம் மூன்றாவது கண்ணாக சொல்லபடுகின்றது..
இது நமது புருவத்துக்கு மத்தியில் இருப்பதாக.சொல்கிறார்கள்...அதாவது நமது புருவத்தின் மையத்தில் இருந்து அப்படியே உள்நோக்கி சென்றால் நமது மூளையின் மையப்பகுதி அமைவதாக அர்த்தம்...
இந்த சக்கரங்கள் பற்றியோ,குண்டிலியை எப்படி எழுப்புவது, அல்லது அதனை எழுப்புவார்கள் பற்றியோ எனக்கு அறிதல் இல்லை என்பதால் என்னால் மூன்றாவது கண்ணை மேலே சொன்னபடி விளக்குவதே சரியானது
சரி இனி கொஞ்சம் அறிவியல் பேசலாம்...எப்போதும் சில சமய சடங்குகளோடு கொஞ்சம் அறிவியல் ஒத்துபோயவிட்டால் அதை அப்படியே தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ளும் பழக்கம் தொடர்ந்து கொண்டு வருவதை நான் பல இடங்களில் படித்து இருக்கிறேன்...
அந்த வகையில் இந்த மூன்றாவது கண்ணாக மூளையின் மையமாக சொலவது pineal gland எனப்படும் ஒரு சுரப்பியை...இதைப்பற்றி,இதன் வேலைகளை பற்றி கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்...
இது அமைந்து இருப்பது மூளையின் இரண்டு பகுதிகள் சந்திக்கும் ஒரு கீழ்புற இடத்தில..இதன் அளவு என்று பார்த்தால் மிகச் சிறியது..ஒரு அரிசியின் அளவு கொண்டது...இதுவும் சாதாரண சுரப்பிகளை போலவே ஹோர்மோன்களை நமது உடலுக்குள் சுரக்கின்றன...
இந்த pineal gland சுரக்கும் ஹோர்மோன் Melatonin. ...இந்த சுரப்பிக்கு என்று சில சிறப்பு அம்சங்கள் உள்ளன...இது பகலில் சமத்தாக சும்மா இருந்துவிட்டு இரவில் மட்டும்தான் அதிகமாக சுரக்கும்...இது சுரக்கும் ஹோர்மோன்கள உடலில் செய்யும் வேலைகளை...பின் பார்க்கலாம்...முதலில் இந்த சுரப்பி எப்படி வேலை செய்கின்றது என்பதை பார்ப்போம்..
இரவில் மட்டும் சுரப்பதற்கு காரணம் ஒளியின் மாறுதலதான். கொஞ்சம் விளக்கமாக பார்த்தால்...நமது கண்களில்(retina) இருந்து ஒளி பண்புகளை பெற்று அதற்கு தகுந்தவாறு இந்த சுரப்பி செயல்பட உதவி செய்வது suprachiasmatic nucleus.(SCN).
இந்த SCN கிட்டதட்ட 1500 முதல் 2000 நரம்புகளை(nerve) வைத்து கொண்டு இந்த வேலையை செய்கின்றது.இதன் வேலை என்று பார்த்தால் ரெடினா வில் இருந்து ஒளி தகவல்களை உள்ளே அனுப்பி அதற்கு ஏற்ப இந்த pineal gland கட்டுப்படுத்துவது.
இப்போது பகல் என்றால் ரெடினவில் ஒளி படும்........அந்த தகவல் அப்படியே உள்ளே அனுப்ப பட்டால் இந்த pineal சுரப்பியானது வேலை செய்யாது. அதே நேரத்தில் ரெடினவில் இருந்து ஒளி விலகிவிட்டால்..இந்த சுரப்பி ஆனது தனது வேலையை தொடங்கும்.....இதுதான் காரணம் இந்த சுரப்பி இரவில் மட்டும் அதிகம் சுரப்பதற்கு....மேலும் நமது மூளைக்கு இரவு பகல் என்பதை தெரிவிப்பதும் இந்த SCN தான்.
இந்த சுரப்பி சுரக்கும் ஹோர்மோன் melatonin செய்யும் வேலை என்று பார்த்தால்... கொஞ்சம் முக்கியமானவைகள்...நமது அன்றாட உடல்வேலைகளை கட்டுபடுத்துவதில் இதன் பங்கு முக்கியமானது..
குறிப்பாக நாம் சந்திக்கும் இரவு பகல் சுழற்சிக்கு ஏற்ப நமது உடலை கட்டுபடுத்துவது இந்த ஹோர்மோன்தான்.....இது.ஆழ்ந்த உறக்கத்தின் போது அதிகமாக சுரந்தாலும் நாம் தூங்கும் பழக்கத்துக்கு இதுவே காரணம்...சிலருக்கு இருக்கும் தூக்க குறைபாடு நோய்களுக்கு இந்த அமிலம் மருந்தாக பரிந்துரைக்க படுகின்றது.
இது தவிர..இதன் வேலைகள் என்று பார்த்தால்..வயதுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றங்களை கட்டுபடுத்துவது,இனபெருக்கத்திற்கு உதவி செய்யும் ஹோர்மோன்களை கட்டுபடுத்துவது அதுவும் முக்கியமாக பெண்களுக்கு, நமது உடலின் வளர்ச்சிக்கும் இது உதவும் என்று சொல்கிறார்கள் எனவே இது சிறு வயதில் அதிகமாகவும் பின் போக போக கொஞ்சம் குறைவாகவும் சுரக்கும்.
மேலும் சில ஆராய்ச்சிகள் இந்த ஹோர்மோனின் குறைபாட்டுக்கும் breast cancer,prostate cancer போன்றவற்றிக்கும் தொடர்பு இருப்பதாக சொல்கின்றது.
ஆனால் இது பொதுவாக இப்போது தூக்கம் சம்பந்தமான பிரசினைகளுக்கே மருந்தாக அதிகம் பயன்படுகின்றது.அதிகம் தூக்கம் இழப்பு உள்ளவர்கள்,இரவில் பணி செய்பவர்கள் போன்றவர்களுக்கு இது மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றது.
மேலே சொன்ன விசயங்களில் இருந்து நெற்றி கண்ணை திறந்தால் குற்றமா? இல்லையா? என்பதைவிட,உங்களின் நெற்றி கண்ணை திறக்க முதலில் இரு கண்களை மூட வேண்டும் என்பது தெரிந்து இருக்கும்.
நாமும் நெற்றி கண்ணை திறக்கலாம்...குற்றம் இல்லை...
6 comments:
நம் முன்னோர்கள் சொன்ன விஷயங்கள் அனைத்திற்கும் இது போல் காரணங்கள் உண்டு. நாம்தான் கண்மூடித்தனமாக அவற்றை நிராகரிக்கிறோம்
LK said...
நம் முன்னோர்கள் சொன்ன விஷயங்கள் அனைத்திற்கும் இது போல் காரணங்கள் உண்டு. நாம்தான் கண்மூடித்தனமாக அவற்றை நிராகரிக்கிறோம்//////
உங்களின் கருத்துக்கு நன்றி...
GOOD POST. KEEP IT UP.
THANKS FOR SHARING.
கக்கு - மாணிக்கம் said...
GOOD POST. KEEP IT UP.
THANKS FOR SHARING.////
உங்களின் கருத்துக்கு நன்றி...
புதிய விஷயம் தெரிந்துகொண்டேன்.
நம் முன்னோர்கள் சொன்ன விஷயங்கள் அனைத்திற்கும் இது போல் காரணங்கள் உண்டு. நாம்தான் கண்மூடித்தனமாக அவற்றை நிராகரிக்கிறோம்//
நம் முன்னோர்கள் என்று யாரை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை .
அவர்கள் எப்போதும் தங்களுக்கு தெரிந்த விஷயம் .கீழ் ஜாதி மக்களுக்கு தெரிய கூடாது என்று நினைத்தவர்கள் .
அதனால் பல்லாயிரம் ஆண்டு கல்வி மறுக்க பட்டது .குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் கல்வியறிவு .
மற்றவர்கள் அவர்களுக்கு அடிமை பின்னர் எப்படி வரும் வளர்ச்சி நல்ல அறிவு இருந்தும் . பல துறை களில்
முன்னேறி இருந்தும் . நம் வீழ்சிக்கு காரணம் நம் முன்னோர்களே.
Post a Comment