(இந்த கதை இப்போது புதியதாக கண்டுபிடிக்க பட்டுள்ள கிரகமான Gliese 581g வைத்து கொஞ்சம் கற்பனை செய்து எழுதி இருக்கிறேன்..அதில் உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்......... கொஞ்சம் நீளமானது...)
டெல்லி பகுதியில் குளிர்காலம் ஆரம்பிப்பதற்கான அறிகுறியாக மாலை வேளையில்
கொஞ்சம் இதமான குளிர்ந்தகாற்று வீசத்தொடங்கியிருந்தது.....
அதனால் மாலையில் என் அறைக்கு வெளியில் அமர்ந்து அந்த குளிர்ந்த தென்றலை
அனுபவித்துக்கொண்டே...எனக்கு பிடித்த காப்பி (பால் சேர்க்காமல்,சர்க்கரை
மிக குறைவாக,காப்பி பொடி அதிகம் சேர்த்து) குடித்து கொண்டே புத்தகம் படிப்பது
என்பது எனக்கு மிக பிடித்தமானது.....
அந்த வேலையில் உலகம் என்னை பிரிந்து இருக்கும்...எந்த ஒரு கவலை
இல்லாமல்..இருப்பது போன்ற ஒரு உணர்வு...என்ன காப்பி தீர்ந்து
போனால்..அப்போதைக்கு கொஞ்சம் கவலை...
அப்படித்தான் அன்றும் தொடர்ந்து இருந்தேன்....படித்து கொண்டு இருக்கும்போது “சத்”என்று ஒரு சத்தம் கேட்டது..அதாவது ஏதாவது ஒன்று மற்றொன்றின் மீது மெதுவாக மோதினால் வருகின்ற
சத்தம்போல இருந்தது..
அதை அப்போதைக்கு கண்டு கொள்ளவில்லை....தற்செயலாக நான் மேலே பார்க்க அங்கே ஒரு
உருவம் தன் தலைக்கு மேலே இருந்து காத்தாடி போன்ற ஒன்றை கழட்டிகொண்டு
இருந்தது..
நான் அதை பார்த்தவுடன் பயந்து எழுந்து நான் இருந்த இடத்தில இருந்து கொஞ்சம்
பின் சென்று அது என்ன செய்கின்றது என்பதை பார்த்தேன்...
அது தனது மேல் இருந்த சற்று கனமான உடுப்புகளை களைவதில் ஈடுபட்டு இருந்தது...அது
முடிந்ததும் நான் இருந்த பக்கம் அதன பார்வையை செலுத்தியது...
இப்போதுதான் எனக்கு கொஞ்சம் நிம்மதி அதை பார்க்கும்போது சாதாரண பெண் போலத்தான்
இருந்தது...ஆனால் எப்படி வானத்தில் இருந்து “சத்” என்று குதிக்க முடியும் என்று
யோசிக்கும்போது கொஞ்சம் பயம்..மனதுக்குள்..
அது பெண்ணா அல்லது வேறு ஒன்றா என்று உங்களுக்கும் எனக்கும் தெரியாத நிலையில் அதை “அது”என்றே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்...
அது என்னை நோக்கி வரத்தொடங்கியது..நான் பயந்து கொஞ்சதூரம் பின்வாங்கி ஒரு
இடத்தில நிலையாக நின்றேன்...
என்னை நெருங்கி வந்த அது என்னைவிட சற்று தொலைவில் நின்று என்னையே முறைத்து
பார்ப்பது போல இருந்தது...
சில வினாடிகள் வைத்த கண் வாங்காமல் என்னை பார்த்து கொண்டு இருந்தது..
பயம் அதிகமாகி நாக்கு சரியாக பேச வராமல் தயங்கி “யார் நீ? உனக்கு என்ன வேண்டும்
” என்று கேட்டேன்..
அதனிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை..இப்போதும் அதன் பார்வையை என் மீது
தொடர்ந்து கொண்டு இருந்தது..
நான் நகர்ந்து போகலாம் என்றுதான் நினைத்தேன்..அது என்னை ஏதாவது
செய்துவிட்டால்..இன்னும் நான் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கு...நல்ல
பெண்ணை பார்த்து காதலிக்க வேண்டும்..திருமணம் செய்யவேண்டும் ..கதைகள்
எழுதவேண்டும்...
அது இப்போது தனது பார்வையை என் பக்கம் இருந்து விளக்கி தனக்குத்தானே ஏதோ
யோசிப்பது போல இருந்தது...
பின் என்னை பார்த்து...”பயப்பட தேவை இல்லை..கணேஷ்.....நான் ஒன்றும் செய்யமாட்டேன்”என்றது..
இதை கேட்டதும் எனக்கு பயம் அதிகமானது...வானத்தில் இருந்து குதித்த ஒரு பெண்
போன்ற ஒன்றுக்கு என் பெயர் எப்படி தெரியும்...ஒருவேளை கடவுள் இல்லையென்று
கண்டபடி எழுதுவதால் ஒருவேளை தண்டனை கொடுக்க ஏதாவது வந்து
இருக்குமோ..என்றெல்லாம்..மனம் யோசித்தது...
இதை நான் யோசித்து கொண்டு இருக்கும்போதே “அந்த மாதிரி எல்லாம் இல்லை
கணேஷ்..நான் ஒன்றும் உனக்கு தண்டனை கொடுக்க வரவில்லை” என்றது..
இப்போது என் பயம் பலமடங்கு கூடியிருந்தது...எப்படி நான் மனதில் யோசிப்பது
அதுக்கு தெரியும்...ஏதோ விசித்திரமானது என்று நான் நினைக்கும்போதே...
“நான் அப்படி ஒன்றும் விச்திரமானவள் இல்லை” என்றது..
இப்போது நான் ஒன்றை கவனித்தேன் அது தன்னையே “அவள்” என்று
சொன்னது..அப்படிஎன்றால் அது இல்லை அவள் ..ஒரு பெண்....
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துகொண்டு “நான் யோசிப்பது உனக்கு எப்படி தெரியும்”என்றேன்...
“அது ஒன்றும் எங்களுக்கு பெரிய விசயம் இல்லை” என்றாள்
அப்படி என்றால் இவள் தனி ஆள் இல்லை என்று நினைத்துகொண்டேன்..
,”இப்போதைக்கு நான் தனியாளுதான் வேறு யாரும் இல்லை” என்றாள்..
நான், இவள் முன்னாடி வைத்து எதையுமே யோசிக்க கூடாது போல என்று நினைத்துகொண்டே வேறு திசை பார்த்தேன்..
“அப்படிஎல்லாம் இல்லை கணேஷ்..நான் என்னை பற்றி சொல்லிவிடுகிறேன்..நான் ஒனறும் உனக்கு தீமை செய்யமாட்டேன்” என்றாள்..
“சரி நீ யார்? எப்படி மேலே இருந்து வந்தாய்? எப்படி தமிழ் பேசுகிறாய் ?” என்று பயம் கலந்த வேகத்தில் கேட்டுவைத்தேன்...
“உனது பாசையில் சொல்வதென்றால் நான் ஒரு வேற்றுகிரக வாசி...சில நாட்களுக்கு முன் நானும் என் குழுவும் விண்வெளியில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும்போது இந்த இடத்தில இருந்து சில கதிர்கள் எங்களை வந்து அடைந்தன..
அதை பின்பற்றும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது இருக்கின்றது..அதை பின்பற்றி வந்தேன்...நான் இறங்க நினைத்த இடம் வேறு...உங்கள் கிரகம் சுற்றுவதினால் அந்த சுழற்சியின் மூலமாக எனது இறங்கும் இடம் மாறி இதுவாக அமைந்தது.”என்றாள்..
நான் இவள் சொல்லுவதை நம்புவதா இல்லையா என்று குழம்பியிருந்தேன்..
அவள் தொடர்ந்தாள்...”நான் எந்த கிரகத்தில் இருந்து வந்தேன் என்பது உனக்கு தெரிய எளிய வழி ..இங்கு இருந்து எந்த கிரகம் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிந்தால் அதுதான் என் கிரகம்..ஏனென்றால் இங்கு இருந்துதான் எங்களின் கிரகத்திற்கு கதிர்கள் வந்தன” என்றாள்..
நான் கொஞ்சம் யோசித்து பார்த்தேன்..சில நாட்களுக்கு முன் ஒரு புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கபட்டதை படித்து இருந்தேன்..அந்த கிரகம் Gliese 581 என்ற ஒரு dwarf நட்சத்திரத்தை சுற்றிவருவதாக கண்டுபிடித்து இருந்தார்கள..அதான் பெயர் Gliese 581g ..இதோடு சேர்ந்து சில கோள்களும் சுற்றிவருகின்றன என்பதையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள்..
ஒருவேளை அவள் இந்த கிரகவாசியாக இருப்பாளோ என்று நினைத்தேன்..அதை எப்படி உறுதி செய்வது...அந்த கோள்களின் தன்மைகள் பற்றி கொஞ்சம் படித்து இருந்தேன்..அதை பற்றி இவளிடம் கேட்டால் உண்மை தெரிந்துவிடும்...
“ஆம் சில நாட்களுக்கு முன் ஒரு கிரகம் கண்டு பிடித்தார்கள்..அதன் அமைப்பு பற்றி சொல்கிறேன் அது நீ இருக்கும் கிரகத்தோடு ஒத்துபோகிறதா என்று சொல்” என்றேன்..
“சரி சொல்..நான் சொல்கிறேன்” என்றாள்
“உன் கிரகம் தன்னை தானே சுற்றாது அப்படித்தானே..”என்றேன்.
, “ஆம்” என்றாள்
அருகில் நான் குடிக்க வைத்து இருந்த தண்ணீரை காட்டி “ இது மாதிரி திரவம் அங்கு இருக்கா ?” என்றேன்...
அவள், “ஆமாம் நிறையா இருக்கு” என்றாள்..
“நீ இங்கு நடக்கும்போதும், நகரும்போதும் உன் எடையை எப்படி உணர்கின்றாயோ உனது கிரகத்தில் இதே போன்றுதான் இருக்குமா?” என்றேன்.
“ஆமாம்....இதே ஈர்ப்பு அளவு விசைதான்” என்றாள்..
“நீ பார்க்கும் இந்த கிரகத்தைவிட உங்களின் கிரகம் 1.4 மடங்கு பெரியதாக இருக்குமா என்ன?” என்றேன்
“ஆமாம் கிட்டத்தட்ட” என்றாள்..
“அப்படி என்றால் உன் கிரகத்துக்கு நாங்கள் வைத்து இருக்கும் பெயர் Gliese 581g..இந்த கிரகம்தான் சில தினங்களுக்கு முன் எங்களால் கண்டுபிடிக்க பட்டுள்ளது..அது சரி அந்த கிரகம்தான் இங்கு இருந்து வெகு தொலைவில்(கிட்டத்தட்ட 20 light years) இருக்கின்றதே..எப்படி நீ இங்கு வந்தாய்?” என்றேன்..
“எங்கள் கிரகத்தில் இருந்து விண்வெளியில் ஒரு சிறு ஆய்வுகூடம் போன்று ஒன்றை அமைக்கின்றோம்...அதில் அதற்கான வேலையில் நாங்கள் எங்கள் கிரகத்தை விட்டு வெகு தொலைவில் இருந்தோம்....அதான் அங்கு இருந்து இங்கு வர எனக்கு குறைந்த நேரம் பிடித்தது” என்றாள்..
“அப்படியே என்றாலும் இவ்வளவு சீக்கிரம் எப்படி?” என்றேன்..
“நாங்கள் உபோயோகிப்பது ஒளியின் வேகம் கொண்ட ஒரு சாதனம்..அந்த சாதனத்தை பயன்படுத்திதான் இங்கு நான் வந்தேன் “ என்றாள்..
“அப்படி என்றால்..இங்கு ஐன்ஸ்டீன் தாத்தா சொன்னதை நீங்கள் பொய்யாக்கி விட்ட்ர்களா என்ன? ‘என்றேன்..
“என்ன சொல்கிறாய் ஒன்றும் புரியவில்லை எனக்கு”...என்றாள்..
நான், “சரி நீ முதலில் சொல்..நீ எப்படி தமிழ் பேசுகின்றாய்..அதுவும் என்னை போல பேச்சு வழக்கில்”.என்றேன்..
“நாங்களும் மொழியை பயன்படுத்தி பேசுவோம்..ஆனால் அதிகம் இல்லை..எங்களுக்கு ஒரு சிறப்பு அம்சம் இருக்கின்றது....அதாவது மூளையில் தகவல் பரிமாற்றங்கள் செய்ய உங்களைப்போலவே எங்களுக்கும் நியுரான்கள்(neurons) உண்டு ..உனக்கு தெரியும் அவை தகவலை எப்படி கடத்துகின்றது..என்று....அதில் உள்ள பொட்டாசியம்,சோடியம்.மற்றும் ஐயன்ஸ்..இவைகள்தான் மூல காரணம்.அப்படி கடத்தும் போது அது ஒரு மாதிரியான குறைந்த மின் அலைகளை உருவாக்கும்....அந்த மின் அலைகளை எங்களால் உணர முடியும் அதோடு இல்லாமல் எங்களிடம் ஒரு கருவி உள்ளது நாங்கள் தெரிய வேண்டியதை அதில் கொடுத்து மெல்லிய மின் அதிர்வுகளாக மாற்றி அதை எங்களின் மூளையால் விரைவாக பதிவு செய்துகொள்வோம்.” என்றாள்
“அப்படி என்றாள் எல்லோருடைய அதிர்வுகளும் சேர்ந்து உங்களின் புரிதலை சிக்கலாக்கி விடாதா?” என்றேன்..
அதற்கு அவள், “அப்படி இல்லை..அந்த அதிர்வுகளை நாங்கள் எல்லா நேரங்களிலும் உணரும் விதத்தில் இருக்காது...அதாவது எனக்கு எப்போது உன்னோடு பேச வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே எனது மூளை எனக்கு கட்டளை இடும்..அப்போதுதான் எனது அந்த பண்பு வேலை செய்யும்” என்றாள்..
“அதான் நான் நினைப்பதெல்லாம் நீ சரியாக சொன்னாயா,....அது சரி எப்படி தமிழ் பேசுகின்றாய்.?”.என்றேன்..
“இதுவும் அதே ரகம்தான்...உனது மூளை எங்களின் மூளையோடு ஒப்பிடும்போது செயல்பாடுகளில் மிக குறைவானது...அதனால் உனது மூளையை முழுவதும் படிக்க எனக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை..”என்றாள்..
“அப்படி என்றால் இதுவரை நான் என்னென்ன படித்து தெரிந்து வைத்து இருக்கின்றேனோ,எனக்கு என்னென்ன தெரியுமோ அது எல்லாம் உனக்கும் தெரியும் அப்படித்தானே”.என்றேன்
“ஆமாம்..இப்போது உனது மூளையில் ஏற்ப்படும் புதிய எண்ணங்களை தவிர மற்ற உன் மூளையில் உள்ள விசயங்கள் அனைத்தும் என்னிடம்” என்றாள்...
“தொடக்கத்தில் அதான் என்னை அப்படி உற்று பார்த்துக்கொண்டு இருந்தாயா?” என்றேன்..
“ஆம்..உனது மூளையின் தகவல்களை..எனக்குள் சரிபடுத்திகொண்டு இருந்தேன்” என்றாள்..
எங்களுக்குள் சிரிது மௌனம் இருந்தது..
அவள்தான் தொடர்ந்தாள்..”என்ன உன் மூளையில்..பல விசயங்கள் குழம்பி கிடக்கின்றன..நிறையா குழம்பி பின் தெளிவு அடைவே போல...அதில் சில விசயங்கள் எங்களுக்கும் உண்டு” என்றாள்..
”அப்படியா “என்று மட்டும் சொல்லி வைத்தேன்..
“என் மூளையை படித்ததில் இருந்து இங்கு உள்ள சில விசயங்களை நீ புரிந்து கொண்டு இருப்பாய் என நினைக்கிறேன்”..என்றேன்..
அதற்கு அவள், “ஆமாம்..கண்டிப்பாக..அதுசரி நீ ஏன் ஒருவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க உனது மூளையை பழக்க படுத்திவைத்து இருக்கிறாய்...அந்த பெயர்கூட...ம்ம்ம்..... ஐன்ஸ்டீன்”...என்றாள்..
. “ஆமாம் எனக்கு ரெம்ப பிடித்தவர் அதான் அப்படி....அதுசரி நீ எப்படி திரும்ப போவாய்?என்ன விசயமாக இங்கு வந்தாய்?” என்று கேட்டேன்....
, “நான் இங்கு வந்தது தற்செயலான விபத்து..எனக்கு இட்ட ஆணை..இந்த கிரகத்தின் வெளிப்புறத்தில் இருந்து இங்கு என்ன இருக்கிறது என்று பார்ப்பதுதான்...ஆனால் ஒரு விபத்தாக அதிக ஈர்ப்பு விசையின் காரணமாக என்னை உள்ளே இழுத்துவிட்டது..உடனே...எனது கட்டளை அரங்கத்திற்கு தொடர்பு கொண்டேன்..அவர்கள் சில வழிமுறைகள் சொன்னார்கள்..அதன்படி நான் பாதுகாப்பாக தரை இறங்கினேன் ..ஆனால் அவர்கள் சொன்ன அளவுகள கொண்ட இடம் வேறு..இந்த இடம்வேறு..அவர்கள் இந்த கிரகத்தின் சுழற்சியை கவனத்தில் கொள்ளவில்லை என நினைக்கிறேன் ஏனென்றால் எங்கள் கிரகம் தன்னைத்தானே சுற்றாது” என்றாள்..
“சரி அப்படின்னா நீ திரும்ப போக முடியாதா?” என்றேன்..
“அதுதான் எனக்கும் சந்தேகம் ..ஒருவேளை என்னை தேடி அவர்கள் வரலாம்..அப்படியே வந்தாலும் அவர்களுக்கும் இந்த இடமாற்று பிரச்சினை இருக்கும்”..என்றாள்..
நான், “சரி உனது கிரகத்தை பற்றி கொஞ்சம் சொல்லேன்” என்றேன்..
“அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை...எல்லாமே இதை போன்றுதான்...இதே தண்ணீர்,இதே காற்று, என்ன கொஞ்சம் இயற்கை சூழ்நிலைகள் வேறுபடுகின்றன..அதாவது, எங்களின் கிரகம் தன்னை தானே சுற்றாது என்பதால்..எங்கள் கிரகத்தில் எப்போதுமே ஒரு பக்கம் பகலாகவும் ஒருபக்கம் இரவாகவும் இருக்கும்...அதாவது கிரகத்தின் ஒரு பக்கம் எங்களது நட்சத்திரத்தை பார்த்த படியே இருக்கும்”..என்றாள்..
“எப்படி பின்னர் சமாளிக்கின்றிர்கள்?”..என்றேன்..
“இதில் என்ன சமாளிக்க வேண்டியது இருக்கின்றது..என்ன இரவு இல்லை அவளவுதான்..மறுபக்கத்தில் எப்போதும் இரவு..அங்குதான் உறைநிலையில் நீர் இருக்கின்றது..உனது மொழியில் சொல்வதென்றால் கடல்..அப்புறம் சில நட்சத்திர ஒளியில் வளரத தாவரங்கள்,விலங்குகள் இருக்கின்றன...அவர்களுக்கும் எங்களுக்கும் அடிக்கடி சண்டை வரும்” என்றாள்..
நான், “சரி உங்களின் உணவு வகை,பழக்கவழக்கங்கள் எல்லாம் எப்படி?” என்றேன்..
“அப்படி ஒன்றும் வித்தியாசம் இல்லை..இங்கு இருப்பதை போலத்தான்..கொஞ்சம் பேச்சு குறைவு....புரிதல் அதிகம்..அறிவியல் ஆதிக்கம் அதிகம்,...பொய் புரட்டு இல்லை”..என்றாள்..
நான், “சரி உங்களுக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லையா?”.என்றேன்..
“அதான் உன்னிடம் கேட்கவேண்டும் என நினைத்தேன்..யார் இந்த கடவுள்..உனது மூளையில் இந்த கடவுளுக்கு எதிராக மிக கோபமான எண்ணங்களே பதிவாகி இருக்கின்றன”.என்றாள்..
“அது ஒன்றும் இல்லை..இங்கு உள்ள மக்கள் உனது கிரகம்,எனது கிரகம்.இதை உள்ளடக்கிய எல்லாத்தையும் ஒரு சர்வசக்தி வாய்ந்த ஒன்றுதான் படைத்தது என்று நம்புகிறார்கள்..அதுதான் கடவுள்”..என்றேன்..
“கொஞ்சம் சிரித்து கொண்டே..எங்கள் கிரகத்தில் எல்லாம் அப்படி இல்லை..அதற்கு எங்கள் அறிவும் இடம் கொடுக்கவில்லை,அறிவியலும் இடம் கொடுக்கவில்லை” என்றாள்..
“நீங்கள் எல்லாம் புரிந்தவர்கள்,அறிவியல் தெரிந்தவர்கள்” என்றேன்..
மீண்டும் எங்களிடத்தில் மௌனம்..
அந்த நேரத்தில்தான்..இவள் வேற்றுகிரகவாசி ஆயிற்றே என்று அதிசயமாக பார்த்தேன்..அப்படி ஒன்றும் வித்தியாசம் இல்லை..பூமியில் உள்ள பெண்களைபோலவே இருந்தாள்...என்ன ஒரு சில மாற்றங்கள்...நிறம்,முடியின் அளவு,போன்றவைகள்..முக்கியமாக அவர்களுக்கு ESTROGEN கொஞ்சம் குறைவாக சுரந்து இருப்பதை என்னால் காணமுடிந்தது..
அவள்,”கணேஷ் நீ என்ன நினைக்கின்றாய் என்பது எனக்கு தெரியும் என்பதை நீ மறந்துவிடாதே என்றாள்” சிரித்து கொண்டே..
”சரி அடுத்த உன் திட்டம் என்ன?”என்றேன்..
“அதை பற்றி எனக்கு எந்தவொரு எண்ணமும் இல்லை..என்ன செய்வதென்று தெரியவில்லை” என்றாள்..
“சரி இப்போதுதான் இரவாகிவிட்டதே எங்கு தங்குவே..என்ன சாப்பிடுவே” என்றேன்..
“ஏன் நீ சாப்பாடு போட மாட்டிய என்ன?” என்றாள்
எனக்கு கொஞ்சம் பயம்,எங்கு இவள் என்னோடு தங்கி விடுவாளோ என்று,அப்படி தங்க நினைத்தால் என் நிலைமை ..யோசித்து பார்க்கவே ..ரெம்ப மோசமாக இருக்கும்..
“சரி இன்று இரவு வெறும் ரொட்டியும் வெண்னையும்தான் எனக்கு சாப்பாடு.... உனக்கு சம்மதம் என்றால் என்னோடு சாப்பிடு” என்றேன்..
கண்டிப்பாக அவள் ரொட்டி(bread) என்றால் என்ன,வெண்ணை என்றால் என்ன என்பதை என் மூளையை முழுவதும் படித்ததில் இருந்து தெரிந்து கொண்டு இருப்பாள்...
”ஒன்றும் பிரச்சினை இல்லை..நான் சாப்பிடுகிறேன்” என்றாள்..
அடுத்து எனக்கு ஒரு சந்தேகம்..சாப்பிட்டு விட்டு இவள் இங்கேயே தங்கி விட்டால் என்று நினைத்தேன்..
அதற்குள் அவள், “கவலைப்படாதே கணேஷ் உனக்கு பிரச்சினை என்றால் நான் இங்கு தங்கவில்லை..நான் எங்காவது போய் விடுகிறேன்” என்றாள்..
எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும் இவள் எங்கே போவாள்.என்ன செய்வாள்,வேற்று கிரகவாசி என்று பார்த்தவுடனே தெரியாவிட்டாலும்...இவளால் என்ன செய்யமுடியும் என்ற கவலை....இவளிடம் இருக்கும் ஒரு பெரிய விஷயம் மற்றவர்களின் மூளையை படிப்பது..இதுவே இவளுக்கு பெரிய ஆயுதம்..எப்படியாவது சமாளித்து கொள்வாள்..என்று நினைத்துகொண்டே சாப்பிட போனோம்..
”சரி நான் கிளம்புகிறேன்” என்றாள்
நான், “இதோ பார்..நீ என்னிடம் படித்தது...கொஞ்சம் தமிழ்,அரைகுறை ஹிந்தி மட்டும்தான்...நீ வெளியில் சென்று நிலைக்க வேண்டும் என்றால்..இன்னும் சில விசயங்களை கற்றுக்கொள்ளவேண்டும்” என்றேன்..
“சரி கணேஷ் உன் அறிவுரைக்கு நன்றி..நான் பார்த்து கொள்கிறேன்” என்றாள்.. எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது..அவள் போகும்போது....அன்றைய இரவு கொஞ்சம் தூங்க கஷ்டப்பட்டேன்..
அடுத்த ஒருநாள் சில தடவை அவளைப்ற்றிய கவலை வந்தது..என்ன செய்கின்றளோ..என்று..அப்படியே இரண்டு நாள்கள போயின..
அன்று மாலை வழக்கம் போல வெளியில் உட்கார்ந்து இருக்கும்போது..கிழே உள்ளவர்கள..என்னை பார்க்க ஒரு பெண் வந்திருப்பதாக சொன்னார்கள்..
எனக்கு கொஞ்சம் அவள்தான் அது என்று சந்தேகம்...
அதற்குள் அவள் மேலே வந்துவிட்டாள்...பார்த்தேன் அவளேதான்...கொஞ்சம் மாறியிருந்தாள்..
பார்த்தோம் ஒன்றும் பேசவில்லை..
“என்ன என்ன ஆச்சு ஏதும் பிரச்சினையா?” என்றேன்..
“எப்படி கணேஷ் இங்கு வாழ்கிறாய்..எல்லாம் எனக்கு கஷ்டமாக இருக்கின்றது..சிலர் உண்மையாக இருக்கிறார்கள்..சிலர் முற்றிலும் எப்போது ஏமாறுவர்கள்..ஏமாற்றாலம் என்று காத்து இருகிறார்கள்”..என்றாள் “ஆமாம், இங்கு அப்படித்தான்..உன் கிரகத்தில் அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்..முடிந்த வரையில் நீ திரும்பி போக பார்” என்றேன்..
“அதுக்குத்தான் நான் முயற்சி செய்து ஏதாவது வழிகள் இருக்கா என்று பார்த்தேன்..அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை”....என்றாள் வருத்தமாக..
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
“கணேஷ் இங்கு உள்ள வாயுக்கள் ஏதோ ஒன்று எனக்கு ஒவ்வாமையை தருவதாக இருக்கின்றது..எனக்கு தெரிந்து என்னால் அதிக நாள் இங்கு என்னால் இருக்க முடியாது என நினைக்கிறேன்” என்றாள்..
“அது என்ன வாயு..இதுவேறு பிரச்சினையா” என்றேன்..
“ஆம்..எங்கள் கிரகத்தில் எங்களுக்கு உதவும் சில வாயுக்கள் இங்கு இல்லாமல் போனாலும் இந்த மாதிரி பிரச்சினைகள் வரும்” என்றாள்...
“சில நாட்கள் மட்டும் இங்கு இருந்து கொள்கிறேனே..தயவுசெய்து கணேஷ்..முடியாது என்று சொல்லாதே” என்றாள்..
அந்த நிலையில் என்னால் என்ன சொல்வதென்றே குழப்பம்..கொஞ்சம் பரிதாபம்.பயம்..எல்லாம் குழப்பி இருந்தது...
அவள் என்னையே பார்த்து கொண்டு இருந்தாள்..
நான்,”சரி தங்கிகொள்..நீ போகும் வரை” என்பதையும் சொன்னேன்...அதாவது அவள் போகவேண்டும் என்ற அர்த்தத்தில்..
அவள் சந்தோசமாக, என் கையை பிடித்து “நன்றி கணேஷ்” என்றாள்.கை மென்மையாக இருந்தது...
”உங்கள் கிரகத்தில் கூட இந்த நன்றி போன்ற விசயங்கள் நடக்குமா என்ன” என்றேன்..
,”இல்லை..இங்கு வந்து உன்னிடம் கற்றுகொண்டதுதான்” என்றாள்..
”அப்படி என்றால் உங்களின் கிரகத்தை பற்றி கொஞ்சம் சொல்லேன்” என்றேன்.
”கண்டிப்பாக சொல்கிறேன்..உனது சந்தேகங்களை தீர்க்கிறேன்..ஆனால் அதுக்கு முன்னாடி எனக்கு ஒன்று நீ செய்ய வேண்டும்” என்றாள்..
”அப்படி என்ன நான் செய்யவேண்டும்” என்றேன்..
”கணேஷ் எனக்கு ஒரு நல்ல பெயரை வையேன்..”என்றாள்..
”ஏன் உங்கள் கிரகத்தில் உனக்கு பெயர் இல்லையா என்ன?” என்றேன்
”இருக்கு ஆனால் அந்த பெயர் இங்கு உனக்கு பொறுத்தமாக இருக்காது..அதான் நீ ஒரு பெயர் வை” என்றாள்.
நான் அவளுக்கு என்ன பெயர் வைக்க என்று யோசித்தேன்.
சிறிது நேரம் கழித்து நான் “உனக்கு வைக்கும் பெயர் பொற்கொடி” என்றேன்..
அவள் மெல்ல சிரித்தாள்..
(அந்த பெண்ணுக்கு பொற்கொடி என்று பெயர் வைக்க காரணம்..எனது பிறந்த நாள் பரிசு என்ற பதிவில் நான் போட்ட புதிருக்கான விடையும் இதுதான்...மேலும் இந்த கதையை தொடரவும் எண்ணம இருக்கின்றது..படித்துவிட்டு சொல்லுங்கள் எப்படி என்று...)
14 comments:
கதை முடிந்து விட்டதா இல்லையா?
Samudra said...
கதை முடிந்து விட்டதா இல்லையா?////
அதான் எனக்கும் தெரியவில்லை))))
It's very nice.. Plz continue..
Story is nice.. Plz continue... But the thing u said tat she is similar to human its impossible.. :-D
Story is nice.. Plz continue... But the thing u said tat she is similar to human its impossible.. ////
எல்லாம் கதைக்குத்தான்....நான் அப்படி சொன்னதுக்கு காரணம்.அங்கும் நீர் இருப்பதுக்கு உண்டான அறிகுறிகள் இருப்பதாக சொல்கிறார்கள்..அப்படி என்றால் நம்மை போல இருக்க கொஞ்சம் வாய்ப்பு இருக்கின்றது என்பது என் கற்பனை....
கதையை இன்னும் தொடர்கிறேன்...அப்போது அவள் வேருபடுவாள்...
உங்களின் கருத்துக்கு நன்றி
ganesh..jst i saw ur new post..i shall comment u l8r..
Thaneer irupathal manithargal pol iruka mudiyathu... Seri ithu verum swarasyamana kathai than. Irunthalum science sambanthamana ungal blog enaku pidithirukirathu... Keep going..
இண்ட்ரஸ்டிங்!
விந்தைமனிதன் said...
இண்ட்ரஸ்டிங்!////
உங்களின் கருத்துக்கு நன்றி..
அருமையான கற்பனை.
கணேஷ்..கதையை இப்போ தான் முழுசா படிக்க முடிஞ்சது..சயின்ஸ் பிக்ஸன் கதை..நான் கூட படிக்கும்போதே நினைச்சேன்..இது தொடர்கதையா போட்டால் நல்லா இருக்குமே னு...சுவாரஸ்யமா இருந்தது..புது கோள் கண்டுபிடிசுருக்காங்கனு உங்க போஸ்ட் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்.பரவால..ஸ்க்ரிப்ட் நல்லா டெவெலப் பண்றீங்க..அந்த பொற்கொடியை இங்கே கொண்டுவந்தது க்ளேவர்..
கணேஷ் அண்ட் பொற்கொடியின் சந்திப்பு எபிசொட் 2 வை எதிர்பார்க்கும்..அன்புடன்..ஆனந்தி..
ஜெயந்தி said...
அருமையான கற்பனை.///
மிக்க நன்றி..
ஆனந்தி.. said...
கணேஷ் அண்ட் பொற்கொடியின் சந்திப்பு எபிசொட் 2 வை எதிர்பார்க்கும்..அன்புடன்..ஆனந்தி..///
உங்களின் கருத்துக்கு நன்றி...கண்டிப்பாக எழுதுகிறேன்..படித்துவிட்டு சொல்லுங்கள்..
ஐ பொற்கொடி சூப்பர்.. எனக்கும் கூட புது கிரகம் கண்டுபிடிச்சது இப்பத்தான் தெரியும் .. ஹி ஹி .. உண்மைலேயே ரொம்ப அருமையா இருக்கு ..
Post a Comment