அதில் இருந்து சில வார்த்தைகள்..அதற்குமுன் நான் ஏன் உலக புகழ்பெற்ற ஒரு மாபெரும் மனிதரும்.அறிவியலரும் ஆன அவரை "தாத்தா" என்று அழைக்கிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன்...
நமது நேரு அவர்களை நாம் அவர் மீது கொண்ட அன்பினால் அவரை "நேரு மாமா" என்று அழைக்கிறோம், தெரசா அவர்களை அவர் செய்த பல தொண்டுகளை அன்பாக நினைவு கூறும் வகையில் "அன்னைதெரசா" என அழைக்கிறோம்...
அந்த வகைதான் நான் அவரை தாத்தா என்று அழைப்பதும்..வேறொரு காரணமும இல்லை...உலகத்தில் நான் அதிகம் நேசிக்கும் மனிதர்களில் முதன்மையானவர்...
சரி நான் ஐன்ஸ்டீன் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளும்போது நான் அனுபவித்த சில விசயங்களை இங்கு பகிர்கிறேன்.....சில அறிவியலர்கள்களுக்கு ஐன்ஸ்டீன் தாத்தாவின் மீது கொஞ்சம் பொறாமை இருந்ததுதான் உண்மை..
அதை பற்றி அதிகம் விவரமாக இல்லாமல் ...... சுருக்கமாக இப்போது இருக்கும் மிக பிரபலமான அறிவியலார் st.hawking பற்றி மட்டும் பார்க்கலாம்...இவருக்கு ஐன்ஸ்டீன் மீது அவரது தத்துவங்களின் மீது முழு நம்பிக்கை ஈடுபாடு இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிகொள்ளமாட்டார்..
இவர் எழுதிய அனைத்து புத்தகங்களில் இருந்து அவர் நியூட்டன் அவர்களைத்தான் மிகைபடுத்தி சொல்லுவதாக நான் தெரிந்து இருக்கின்றேன்......ஒருவேளை அவரது சொந்த நாட்டுகாரர் மற்றும் அவர் Cambridge ல் அமர்ந்த Lucaisan chair ல் அமர்ந்தவர் .... என்பதால் கூட இருக்கலாம்...சில இடங்களில் ஐன்ஸ்டீனை பற்றி சொல்லி இருந்தாலும் அந்த இடத்தில..கட்டாயம் ஒரு வரி நியூட்டன் அவர்களின் எதாவது ஒன்றை ஒப்பிட்டு இருப்பார்...
இதை நான் சொல்வதற்கு காரணம் இவரின் அண்மை புத்தகமான the grand design என்ற புத்தகத்தில் கொஞ்சம் அவரது முந்தைய எண்ணத்தை மாற்றியிருந்தார்...கொஞ்சம் ஐன்ஸ்டீன் தத்துவத்தை பெருமையாக விளக்கி இருந்தார்...அதற்கு இந்த காலகட்டத்தில் ஐன்ஸ்டீன் அவர்களின் சில அறிவியல் தத்துவங்கள் மிக முக்கியமானவைகள் என்பது கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.
சரி ஐன்ஸ்டீன் அவர்களோடு உலகமே அறியும்படி ஒருவர் விவாதம் செய்தார்...அவர் Bohr .....இவர்களின் விவாதம் quantum theory,uncertainty principle பற்றியது...இருவரும் சண்டை போடாத குறைதான்...ஆனால் இவர்களின் இந்த விவாதம அறிவியலுக்கு மிக ஆரோக்கியமான ஒன்று என்று மக்கள் அப்போது அறியாமல் இல்லை...
ஐன்ஸ்டீன் அவர்களுடன் Bohr விவாதம் செய்த காரணத்தினால் அவரை பற்றியும் அவரது quantum theory யை பற்றியும் கிண்டல் செயுமாறு ஒரு நகைச்சுவையை இங்கே பகிர்வதால் எனக்கு கொஞ்சம் ஆறுதல்...Bohr ஒன்றும் சாதாரணமானவர் இல்லை...அவர் மிகபெரிய ஜாம்பவான்...ஐன்ஸ்டீன் அவர்களே வேறு சிலரிடம் Bohr பற்றி புகழ்ந்து சொல்லியிருக்கிறார்.... சரி இனி அந்த நகைச்சுவை...
ஒருமுறை Bohr தனது வாகனத்தை மிக வேகமாக ஓட்டி சென்று காவலரிடம் மாட்டிகொள்கிறார்...அந்த காவலர் Bohr டம் "நீங்கள் எவ்வளவு வேக(ம்)த்தில் வந்தீர்கள்?,எங்கே போகின்றீர்கள்?" என்று கேட்க அதுக்கு Bohr "எவ்வளவு வேகம் என்று தெரியாது ஆனால் எங்கு போகவேண்டும் என்று மட்டும் தெரியும்" என்று சொன்னாராம்...!!!!!!
மேலே சொன்ன நகைச்சுவை புரிந்தவர்கள சிரிக்கட்டும்...புரியாதவர்களுக்கு......இதை புரியவைக்க ஒரு தனி பதிவு போடும் அளவுக்கு அதில் விசயம் இருக்கின்றது என்பதால் ....அதை மறந்து தொடர்ந்து படியுங்கள்...
சரி இப்போது ஐன்ஸ்டீன் அவர்களின் வார்த்தைகளில் எனக்கு பிடித்த சிலவற்றை பகிர்கிறேன்...
Imagination is more important than knowledge
ஐன்ஸ்டீன் அவர்களின் வாழ்க்கையை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் அது மேலே சொன்ன வரிதான்..இந்த வார்த்தைகளை அவர் சொன்னார் என்பதை விட அவர் வாழ்ந்தார் என்றே சொல்லலாம்...
அதற்கு ஆதரங்கள... அவரது பல உலக புகழ்பெற்ற கண்டுபிடிப்புகளே...space time மற்றும் space time of curvature, இதன் காரணத்தினால் அந்த விசைக்கு ஒளி வளைந்து கொடுக்கும் என்று கண்டு பிடித்து சொன்னது, போன்ற பல விசயங்களை சொல்லலாம்...
எனக்கு மிக பிடித்த வாக்கியங்களில் மேலே சொன்னதும் ஒன்று...
அடுத்து நம் தமிழர்களுக்கு வள்ளுவர் எப்படி நாவடக்கம் பற்றி அருமையாக சொல்லி இருக்கின்றாரோ..அதே போல ஐன்ஸ்டீன் அவர்களும் அருமையாக நாவடக்கம் பற்றி சொல்லி இருக்கும் வார்த்தைகள்...
If "A" is a success in life, then "A" equals "X" plus "Y" plus "Z"..... Work is X; Y is play; and Z is keeping your mouth shut.
என்ன.....அவர் இங்கு நாவடக்கம் பற்றி சொல்லி இருக்கும் விதம அவருக்கே உரித்தான அறிவியல் கணித முறை....மற்றபடி விசயம் ஒன்றுதான்...
பல மாபெரும் மனிதர்கள் வாயை முடிந்தவரை மூடினால் நன்மையே என்று சொல்லி இருப்பதால் அதை நானும் கொஞ்சம் முயன்று கொஞ்சம் திருந்தினேன்...முக்கியமாக ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்னதற்காக....
கடைசியாக ஒரு கவிதை......
என்னவென்று சொல்வேன்..
என்மனம் எப்போதும் உன்னையே
எண்ணி கொண்டிருப்பதைப்பற்றி....
என்ன விதி கொண்டு விளக்குவேன் - இல்லை
என் விதியே உன்னை எண்ணி இருப்பதுதனோ??
என்பதை புரியாத நிலையில் நான்!!!
மேலே சொன்ன கவிதையின் மையம் ஒரு பெண்ணுக்கும் பொருந்தும் அதே நேரத்தில் ஐன்ஸ்டீன் தாத்தாவுக்கும் பொருந்தும்...நான் எழுதியது இரண்டாவதாக சொன்ன அர்த்தத்தில்....
.
10 comments:
ஐன்ஸ்டீன் மீது இவ்வளவு பற்றா? வியப்பாக இருக்கிறது. ஐன்ஸ்டீனை யாருக்குத்தான் பிடிக்காது.
Imagination is more important than knowledge. ரொம்ப நாட்கள் இந்த வரி கொண்ட படத்தைத்தான் டெஸ்க்டாப் வால்பேப்பராக வைத்திருந்தேன். உங்கள் வலைப்பதிவை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. நன்றி.
Rajkumar Ravi said...
ஐன்ஸ்டீன் மீது இவ்வளவு பற்றா? வியப்பாக இருக்கிறது. ஐன்ஸ்டீனை யாருக்குத்தான் பிடிக்காது.///
நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி..எனக்கு பதில் சொல்லும் வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்டிர்கள்))))
ஆமாம் ஐன்ஸ்டின் ரெம்ப பிடித்தவர்...
உங்களின் கருத்துக்கு நன்றி....
/Imagination is more important than knowledge /
இது உண்மை தான்..imagination தான் கொஞ்சம் develop ஆகி கனவாய் மாறுது..dream also one of the imagaination இல்லையா? தெரில..இது பத்தி கூட ஐன்ஸ்டீன் தாத்தா எதுவும் விதிகள் கண்டுபிடிசுருக்கரானு..நன்றி கணேஷ்..மறந்து போன..சிறுவயதில் ஆர்வம் இல்லாமல் படித்த அறிவியலை மீண்டும் சுவாரஸ்யமாய் நினைவூட்டுவதற்கு..அந்த கவிதை அற்புதம்..நிஜம் தான்! ரெண்டுபேருக்குமே தான் பொருந்தும்..! அந்த வேகம் பத்தி தனிபதிவு போடுங்க..what about porkodi-3??
அந்த வேகம் பத்தி தனிபதிவு போடுங்க..what about porkodi-3??////
கண்டிப்பாக போடுகிறேன்...அதை படித்த பிறகு இந்த நகைச்சுவையை படித்தால் உங்களுக்கு சிரிப்பு வருமா?? என்பது சந்தேகமே)))))
இன்னும் நீங்கள் பொர்கொடியை மறக்கவில்லையா???
ஹலோ..அப்போ பொற்கொடி அவளவு தானா? உதை கொடுக்கப்படும் பொற்கொடி மூலமாக..!!:-௦))
ஆனந்தி.. said...
ஹலோ..அப்போ பொற்கொடி அவளவு தானா? உதை கொடுக்கப்படும் பொற்கொடி மூலமாக..!!:-௦))////
உதை எல்லாம் வேண்டாம்..இங்குதான் இருக்கிறாள்...(மதுரைக்கு) வரசொல்லுகிறேன்))))
no prbs!! எங்க ஊரு சாப்பாட்டில் பொற்கொடி மயங்கிடும்..திருப்பி அது planet க்கு போகாது..:-)) ..சீக்கிரம் பொற்கொடி-3 வரணும்..:-))
ஆனந்தி.. said...
no prbs!! எங்க ஊரு சாப்பாட்டில் பொற்கொடி மயங்கிடும்..திருப்பி அது planet க்கு போகாது..:-)) ..சீக்கிரம் பொற்கொடி-3 வரணும்..:-))////
ஏன் சாப்பாடு அவ்வளவு மோசமகவா இருக்கும்))))
அப்படியாவது உங்கள் புண்ணியத்தில் அவள் மயங்கினால் சரி))))
மதுர சாப்பாடு பத்தி கோவில்பட்டிக்கு தெரியாதோ..?அனுப்புங்க பொற்கொடிய சீக்கிரம்...!!:-))
அடுத்த தடவை கோவில்பட்டி போகும்போது மறக்காமல் கேட்டு சொல்கிறேன்...)))
அனுப்புகிறேன்...
Post a Comment