விடுமுறை நாள்களில் அம்மாவின் கண்டிப்புக்கு பயந்து பாட்டி ஊருக்கு சென்றுவிடுவது வழக்கம்..எப்படியாவது அம்மாவின் அதட்டல் இல்லாமல் சுதந்திரமாக இருக்கவேண்டும்..என்ற எண்ணமே காரணம்...
பாட்டியிடம் பாசம அதிகம் ..ஆறுவயதுவரை வளர்த்தவர்கள் என்பதால்.......வெயிலில் காடு சுற்றிய நேரம் தவிர பாட்டி சொல்லும் சிறு சிறு வேலைகளை செய்து அவர்களை கொஞ்சம் சந்தோசபடுத்துவது பிடிக்கும்...உள்ளூர் கடைக்கு போவது...சில மாதங்களில் காட்டில் கொஞ்சம் சிறு வேலைகள் இருக்கும்...
காட்டில் கம்பு(பயிறு) போட்டு இருந்தால் காலை மாலை குருவிகள் வரும்,அதை விரட்ட என்னை அனுப்புவார்கள்...
அங்கு போவதற்கு சில காரணங்களும் இருந்தது...அங்கு வரும் குருவிகளை விரட்ட சில முறைகள் உண்டு...தகர பானையில் ஒலி எழுப்புவது,வெடிகள் போடுவது, போன்றவைகள்...
தினமும் சில வெடிகள் கொடுப்பார்கள்.....படைக்குருவி என்று சொல்லப்படும் ஒரு குருவிகூட்டம் வரும் அந்த கூட்டத்தில் 200 முதல் 300 குருவிகள் வரை இருக்கும்...ஒருதடவை வந்து கம்பு திங்க பிஞ்சையில் அமர்ந்தால் பாதி பிஞ்சையை காலியாக்கிவிட்டுத்தான் போகும்...இந்த மாதிரி வருகின்றவற்றை விரட்ட வெடி போட்டால்தான் முடியும்..
மற்ற நேரங்களில் பானையின் ஒலி போதுமானது..நான் அங்கு போய் கொஞ்ச நேரத்தில் படைகுருவி வந்தாலும்....வராவிட்டாலும் வெடியை போட்டுவிட்டு ... மீதம் இருக்கும் நேரத்தை கஷ்ட்டபட்டு கழிப்பேன்...அந்த நேரத்தில் பானையில் தாளம் போடுவது பிடிக்கும்...
நான் தாளம்போடுவது என்பதை..ஒன்றும் இசை அறிவு வகையில் சேர்க்கமுடியாது...பள்ளியில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் மேசையில் தாளம் போட்டு நண்பர்களிடம் பாராட்டையும்...வலது பக்கம் அமர்ந்து இருக்கும் மாணவிகளிடம் திட்டையும் வாங்கும் நிலையில்தான் இருந்தது .....
இரண்டு குச்சிகளை வைத்துக்கொண்டு..பானையை கவுத்திவைத்து தாளம் போடுவேன்...அதற்கும் நேரம் உண்டு..காலையில் ஆறு மணியில் இருந்து ஒன்பது மணிவரை,மாலையில் நான்கு மணியில் இருந்து ஆறு மணிவரை...இதுதான் குருவி வரும் நேரம் என பாட்டி ஆய்வு செய்து கண்டுபிடித்து சொன்னது ...
சில நேரங்களில் அந்த வழியாக போகின்றவர்கள் நான் தாளம் போடுவதை பாட்டியிடம் மெச்சி இருந்ததின் விளைவு..எப்போதாவது...நான் சேட்டை செய்தால்.."நீ இப்படி அடங்காமல் சேட்டை செய்தால் தெருவில் கொட்டு அடித்துக்கொண்டு திரியவேண்டியதுதான்" என்று திட்டுவார்கள்
ஒருநாள் நாள் மாலையில் கையில் வெடியுடன் பிஞ்சைக்கு வரும்போது..உள்ளே நுழையும் இடத்தில ஒரு புது பானை இருந்தது...ஒருவேளை சிறிய துளைகள் இருக்கலாம்..அதான் பாட்டி குருவி விரட்ட வைத்துவிட்டார்கள் என்று அதையும் எடுத்து சென்றேன்..
அன்று அந்த புது பானையில் முழுத்திறனையும் காட்டி வாசித்ததில் அதன் மத்தியில் கொஞ்சம் நெளிந்து போனது...கொஞ்ச நேரத்தில் மறுவரப்பில் ஒரு பெண் நின்று என்னை பார்ப்பது போல இருந்தது..
அவளை எனக்கு தெரியும்...என் வீடு இருக்கும் தெருவில்தான் அவளின் வீடும் இருக்கிறது...ஒரே வயது..சிறுவயதில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம்...குறிப்பிட்ட வயதில் சில ஹோர்மொன்கள் சுரந்து எங்களை பிரித்துவிட்டது...
இப்போது நாங்கள் பார்த்தாலும் பேசிக்கொள்வது இல்லை..அவள் யாரிடம் அதிகம் பேசமாட்டாள்..மென்மையான குணம்..தானுண்டு தான் வேலையுண்டு இருப்பவள்..
இவள் ஏன் இங்கு வந்து நிக்கிறாள்? என்று நான் யோசித்தாலும்...அவர்களின் பிஞ்சையும் கொஞ்சம் தள்ளித்தான் இருந்தது ஒருவேளை அங்கு போவாள் என்று நான் அவளை கண்டுகொள்ளவில்லை...
சிறிதுநேரம் கழித்து பார்த்தால் அவள் அங்கேயே நின்றாள்..என்ன காரணமாக இருக்கும்..என்று யோசித்தும் விளங்கவில்லை..சிறிது நேரம் நின்றுவிட்டு கிளம்பிவிட்டாள்..
அவள் அங்கு இருந்த நேரத்தில் நான் தாளம்போடவில்லை ..கொஞ்சம் வெட்கம்தான் காரணம்...இருந்தாலும் அவள் எதுக்கு அங்கு வந்து நின்றுவிட்டு சென்றாள் என்பது மட்டும் புரியாமல் இருந்தது..
அன்று இரவு கொஞ்சம் யோசிக்கும்போதுதன் தெரிந்தது..ஒருவேளை அவள் என் இசைக்கு மயங்கி அங்கு வந்து இருக்கலாமோ? என்று நினைத்தேன்...அப்படி இருக்காது என்று தெரிந்தாலும் வேறெதுவும் காரணம் இருப்பதாக தெரியவில்லை...
மறுநாள் காலையில்.... அவள் அப்படி இசைக்கு மயங்கி இருந்தால் இன்றும் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டே சென்றேன்...சிறிதுநேரம் வரையில் வரவில்லை..வரும்வழியை அடிக்கடி பார்த்ததுதான் மிச்சம்...
அதிசயம் அன்று மாலையில் அதே நேரத்தில் வந்தாள்..எனக்கு கொஞ்சம் சந்தோசம்..அவள் என் இசைக்குத்தான் வந்து இருக்கின்றாள் என்று நினைத்து அவள் வந்தவுடன் கொஞ்சம் சிறப்பாக சத்தமாக வாசிக்க ஆரம்பித்தேன்...
அன்றும் கொஞ்சநேரம் நின்று விட்டு கிளம்பி விட்டாள்....சந்தோசத்தின் உச்சத்தில் நான்.. அன்று இரவு ஹோர்மொன்கள் தாறுமாறாக வேலைசெய்தது....இரவு தூங்காமல்.அவளைபற்றியே எண்ணங்கள் ஓடியது...சில நாட்கள் முன்னர் நான் கடைக்கு போகும்போது அவள் வெளியில் வந்து நின்றது,ஒரு முறை என் பாட்டியிடம் ஏதோ வாங்க வந்து என் பார்வையில் பட்டது இவற்றையெல்லாம் ஒரு கயிறாக திரட்டி காதல் எனும் பட்டம் விட்டு கொண்டு இருந்தது என் மனது..எல்லாம் ஹோர்மோன் வேலை....
மறுநாள் காலையில் அவள் கண்டிப்பாக வருவாள் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் வேகமாக சென்றேன்..நினைத்தமாதிரியே வந்து நின்றாள்..மீண்டும் ஒருவித சந்தோசம்..
அவளை ஒருமுறை திரும்பி பார்க்கும்போது என்னை கை அசைத்து கூப்பிடுவதுபோல இருந்தது..என்னைத்தான் என்பதை உறுதி செய்து கொண்டு அவள் அருகில சென்றேன்...உடம்பில் ஒருவித புது அனுபவத்தை ஹோர்மோனகள் சிறப்பாக செய்தன...கையில் அந்த பானையும் எடுத்து சென்றேன்..
"என்ன?" என்றேன்
அவள் கொஞ்ச நேரம் என்னை பார்த்துவிட்டு அப்படியே அந்த பானையை பார்த்தாள்..
"கொஞ்சநாள் முன்னாடி பிஞ்சைக்கு வேலைக்கு வந்த என் அம்மா திரும்பி வரும்போது வேறுவேலை இருந்ததால் இந்த இடத்தில பானையை வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்...அடுத்தநாள் மறந்து விட்டார்கள் ....அதான் என்னை போய் எடுத்துவர சொன்னார்கள் நானும் இரண்டு நாள்கள இந்த பக்கம் வந்து தேடிபார்த்தேன்...இப்போதுதான் பார்க்கிறேன் அது உன் கையில் இருக்கு..... அந்த பானையை கொஞ்சம் கொடேன் நான் சீக்கிரம் போகவேண்டும்" என்றாள்...
15 comments:
முடிவு சூப்பர்
LK said...
முடிவு சூப்பர்///
கருத்துக்கு நன்றி அண்ணா..
யதார்த்தமா நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.
கே.ரவிஷங்கர் said...
யதார்த்தமா நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.////
உங்களின் கருத்துக்கு நன்றி...
ரொம்ப அழகா வந்துருக்கு கணேஷ்... வாழ்த்துக்கள்
GSV said...
ரொம்ப அழகா வந்துருக்கு கணேஷ்... வாழ்த்துக்கள்///
உங்களின் பாராட்டுக்கு நன்றி..
ஆஹா......முடிவு சூப்பர்....ஆனா அதுக்குள்ளே என்ன ஒரு கற்பனை......?!! ஹார்மோன் வேலை அது.....இதுன்னு.....பொண்ணுங்க எப்பவும் சரியா தான் இருக்காங்க.....! இந்த கணேஷ் மாதிரி பசங்க தான் பாவம் கண்டபடி கற்பனை பண்ணி வீணா போறாங்க...??!! :)))
ஆமா இந்த போஸ்ட்ல தாத்தா மேட்டர எங்க காணும்....?
ஆமா இந்த போஸ்ட்ல தாத்தா மேட்டர எங்க காணும்....?///
உங்களின் கருத்துக்கு நன்றி அக்கா...
பொண்ணுங்க சரியா(நல்லா) இருக்க போய்தானே எங்களுக்கு ஹோர்மோன் வேலை செய்யுது))..))))
இந்த கதையில் தாத்தா மேட்டர் இருக்கு..
imagination is better than knowledge...
இதுதான் கதையில் இருக்கும் தாத்தா மேட்டர்...
சரியான நகைச்சுவை. இந்த தாத்தா மேட்டரெல்லாம் டிஸ்கியிலயாச்சும் சொல்லிருங்கப்பா. இல்லன்னா என்ன மாதிரி அறைகுறைகளுக்கு புரியாது.
தமிழ் மணத்தில் நீங்களும் ஒரு ஓட்டு போட்டுக்கொள்ளலாம்.
ஜெயந்தி said...
சரியான நகைச்சுவை. இந்த தாத்தா மேட்டரெல்லாம் டிஸ்கியிலயாச்சும் சொல்லிருங்கப்பா. இல்லன்னா என்ன மாதிரி அறைகுறைகளுக்கு புரியாது.////
தாத்தா என்பவர் நமது ஐன்ஸ்டீன் அவர்கள்தான்...பொதுவாக எனது எல்லா பதிவுகளிலும் அவரை கொஞ்சம் கொண்டு வந்து இருப்பேன்...
அதான் இதில் காணவில்லையென கேள்வி???
அதற்குத்தான் நான் அப்படி பதில் அளித்தேன்...
கணேஷ் ..பிஞ்சையா? புஞ்சையா??
ஆனந்தி.. said...
கணேஷ் ..பிஞ்சையா? புஞ்சையா??///
இதற்கு என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள் அப்புறம் நான் எது என்று சொல்கிறேன்)))]
//அவள் வந்தவுடன் கொஞ்சம் சிறப்பாக சத்தமாக வாசிக்க ஆரம்பித்தேன்...//
ஹா.. ஹா.. உனக்கு இந்த மாதிரி மானம் கெட்ட ரைட்டிங் நல்லா வருது... :))
குருவி விரட்டும் டீட்டெயில்ஸ் நல்லாருக்கு......
அப்புறம் அடுத்த நாள் அந்த பொண்ணு வந்துச்சா?
Post a Comment