சில விசயங்கள் - 3

    கொஞ்சம் அறிவியல், galaxy என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது பெரிய நட்சத்திர தொகுதிகள்,கோள்கள,வாயுக்கள் அதிகமாக போனால் வேறொரு galaxy ல நமது பூமி போல ஒன்று இருந்து அங்கும் கணேஷ் மாதிரி யாராச்சும் ஒருத்தன் கதை எழுதலாம்..இதுதான்..

      இது எல்லாம் இல்லாமல் சில galaxy இருக்கிறது என்கிறார்கள். அவைகளை dark galaxy என்கிறார்கள்.  galaxy எப்படி உருவாகியது என்ற கேள்விக்கு கொஞ்சம் உறுதியளிக்கும் வகையில் இது இருகிறது.. பொத்தம் பொதுவாக கடவுள் வந்தார் இந்த பிரபஞ்சத்தை படைத்துவிட்டு ஒரு இடத்தில உட்கார்ந்து அது எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்து கொண்டு இருக்கிறார் என்பதை சந்தேகமாக்கியிருகிறது.

     முதலில் galaxy உருவாவது, big bang பிறகு  hydrogen,ilium,dark matter மற்றும் தூசுகள் இவைகள் எல்லாம் கொஞ்ச காலம் அமைதியாக குளிர்ந்து கொண்டு இருக்க, அவைகளுக்குள் ஈர்ப்பு விசையினால் இறுக்கம் ஏற்ப்பட்டு வாயுக்கள் dark energy யோடு சேர்ந்து எரிந்து முதலில் நட்சத்திரங்கள் உருவாகி, பின் இந்த நிகழ்வு மில்லியன் ஆண்டுகள் தொடர புதிய நட்சத்திர தொகுதிகள் உருவாகியது.

       இப்படி பிறந்த நட்சத்திரங்கள் இறப்பின் போது வெடித்து சிதறி கோள்கள உருவாகி பிரப்ஞ்சதுக்கான ஒரு வடிவத்தை கொடுத்தது..இன்னும் இந்த நிகழ்வுகள் நிற்காமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன

      சரி இதில் dark galaxy என்னவென்றால், நட்சத்திரங்கள் ஏதும் இல்லாத வெறும் ஒரு புது galaxy உருவாவதற்க்கு முன்னாடி இருக்கும் hydrogen,helium, dark matter இவைகளை கொண்ட ஒன்று. இது ஒளிரும் நட்சத்திரங்களை கொண்டு இருக்கவில்லை என்பதால் சாதாரண telescope கொண்டு பார்ப்பது முடியாது. radio telescope கொண்டு கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

      முதலில் இதை கண்டுபிடித்த போது வெறும் நட்சத்திரங்கள் குறைவாக கொண்ட dark matter அதிகமாக உள்ள ஒரு அமைப்பு என்றுதான் அறிய பட்டது.இது 2005 ஆம் கண்டுபிடிக்கப்பட்டு VIRGOHI21 என்ற பெயரும் வைத்தார்கள்.நமது பூமியில் இருந்து 50 million light year துரத்தில் இருக்கிறது.

     ஆனால் இப்போது இதுபோன்ற நிறையா dark galaxy கள் milky way ல் சுற்றுவதாக சொல்கிறார்கள் எல்லாமே இன்னும் மோதி atom fusion நடக்க ஆரம்பிக்காத நிலையில் இருப்பவை.இதன் மூலம் galaxy கள் எப்படி உருவாகியிருக்கும் என்பதில் இருந்த சந்தேகம் கொஞ்சம் விலகியிருக்கிறது

    இப்படி சும்மா இருக்கும் dark galaxy களில் atom fusion நடந்தால் அது கிட்டத்தட்ட 100 மில்லியன் நட்சதிரங்ககளை உருவாக்ககூடுமாம்.பின்ன என்ன இன்னொரு புதிய குழந்தை galaxy பிறந்து அதிலும் கோள்கள் உருவாகும்.இபோதைய இந்த கண்டுபிடிப்பை வைத்து  dark matter யையும் தோண்டி துலாவுகிறார்கள்.இதன் மூலம் dark mater சம்பந்தமான சில ரகசியங்கள் தீரலாம் என்ற நம்பிக்கையிருகிறது


*****

     பதிவர் ஒருவர் பின்னுட்டத்தில் "நீங்கள் கதை சொலவது திக்குவாய்க்காறார் கதை சொல்வது போல் இருக்கிறது"என்றிருந்தார்.. வாக்கிய அமைப்புகள் நான் உபோயோகிக்கும் புள்ளிகள்,கமா இவற்றை வைத்து அவர் இதை கணித்து இருப்பதாக சொல்லியிருந்தார்.அவர் சொன்னபிறகு நான் எழுதிய சில பதிவுகளை படித்து பார்த்தேன். நான் எழுதியது என்பதால் அடுத்து என்ன இருக்கும் என்பது எனக்கு தெரிந்து விடும்,எனவே வேகமாக வசித்து விட்டு அப்படி ஒன்றும் தெரியவில்லையே என்று குழம்பினேன்.

     புதியதாக படிப்பவர்களுக்கு ஒருவேளை நான் எழுதியது அபப்டி தெரிந்து இருக்கலாம். அதை எப்படி திருத்துவது என்பதை பற்றி பார்க்க வேண்டும். சந்தோசம் என்னவென்றால் அவர் நான் எழுதுவதை கதை என்று நினத்தரே அதே பெரிய விசயம்.

    பொதுவாக நான் மனதில் தோன்றுவதை அபப்டியே ஒரு கோர்வையாக டைப் செய்து விடுவேன். பின்னர் எழுதியதை புரியுதா என்பதற்காக வசித்து பார்ப்பேன். புரியாவிட்டால் சில விசயங்களை கொஞ்சம் மாற்றி அமைப்பேன். எனக்கு புரிந்துவிட்டால் அவ்வளவுதான் போட்டுவிடுவேன். மற்றவரின் பார்வையில் இருந்து பார்க்காதது இந்தமாதிரி பிரச்சினைக்கு காரணம் நினைக்கிறேன்.

    திரும்பவும் படிக்கும்போது தவறுகள் தெரியாததுக்கு காரணம்,சொன்னது போல் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பது தெரிந்து விடுவதால் வேகமாக படித்து நகர்ந்து விடுவேன். எங்கு என்ன வாக்கியங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பது போய் சொல்ல வந்த விசயம் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்கும் நிலமைதான் இப்போது. இதை மாற்ற வேண்டும்


 *******

     புது என்ற கதையை தொடர எண்ணம இருக்கிறது. கடவுள் வேற்றுகிரகவாசி என்பதை மையமாக வைத்து எழுதும் ஒன்று. இதை நான் எழுதுவது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதுக்கு பதில் சொல்ல வருகிறேன் என்பது போல் சிலர் நினைத்து இருகிறார்கள்.



   கடவுள் இருக்கிறாரா?இல்லையா? என்பதை பற்றி கவலை இல்லை. சிலரின் கருத்துபடி கடவுள் இருந்தாலும் அவரால் நமக்கு என்ன நன்மை? கடவுள் நமக்கு உதவுகிறார் என்பதில் எனக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. 

     இருக்கிறாரா இல்லையா? என்ற கேள்விக்கு போகும் முன் அப்படியே இருந்தாலும் அவர் நம்மில் எப்படி பங்கெடுக்கிறார் என்பதை யோசித்து பார்க்கலாம் கொஞ்சம் தெளிவு கிடைக்கும்.


    அதை விடுத்து எல்லாம் அவன் செயல் அவன்  இன்றி அணுவும அசையாது என்பது அபத்தம். எனக்கென்று ஒரு வாழ்க்கை பாதை,அதில் யாருக்கும் துன்பம் கொடுக்காமல்,மனதை சிதைக்காமல் எனது பாதையில் அமைதியாக பயணிப்பதால் கடவுள் எனக்கு தேவையில்லை அவ்வளவுதான்.அவர் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.


     வாழ்க்கை நல்லா போகும் போது கடவுள் தேவையில்லை,வாழ்க்கையில் உள்ள சிக்கலுக்கு உதவி,ஆறுதல் செய்ய கடவுள் தேவை என்றால், அதுக்கு உங்களின் மீது அக்கறை,அன்பு கொண்டவர்களே போதுமானவர்கள் கடவுள் இல்லை.அதுக்கு நீங்கள் மற்றவர்களுக்கு இந்த அன்பை கொடுத்து இருக்க வேண்டும்

    இப்படி நாம் செய்ய மறப்பதுதான் நம்மை விடுத்து ஒரு மூன்றாவது இடமான கடவுள் உருவாகிவிடுகிறார் நமக்கு உதவி செய்ய.  நமக்குள் அன்பாக எல்லா பிரச்சினைகளை விட்டு கொடுத்து தீர்த்து கொண்டால் எனக்கு மட்டும் இல்லை யாருக்குமே அவர் தேவை இல்லை.

   இன்னும் சிலர் கடவுளை அடைய போகிறேன்.முக்தி தேடுகிறேன் இதுக்கு கடவுள் தேவைதானே என்று கதவைதிற "......." வரட்டும் போன்றமுறையில் முயற்சசிக்கிறார்கள்  இந்த முக்தி சம்பந்தபட்ட விசயங்கள் எல்லாம் மூளைக்குள் சில ஹோர்மோன்கள்,அமினோ அமிலங்கலாள்  நடக்கும் அல்லது கொடுக்கும் ஒருவித உணர்வு இதைப்பற்றி அப்புறம் பார்ப்போம்  
 

புது - 2

 இது தொடர்கதை இதுக்கு முந்தைய பகுதி - புது - 1


    "நாங்கள் கடவுள் என்று நினைத்துகொண்டு இருப்பது உங்கள் கிரக வாசிகளா?" என்றேன் இன்னும் ஆச்சர்யம் விலகாமல்

"எங்கள் இனத்தவருக்கு நீங்கள் வைத்த பெயர் கடவுளா என்ன?"

     "இல்லை கடவுள் என்பவர் வேறு..இந்த பிரபஞ்சத்தை,அதில் உள்ள எல்லாத்தையும் ஏன் உங்களையும் படைத்தவர் என் மனிதர்களால் நம்பபடுபவர்"

    "என்ன இந்த பிரபஞ்சம் படைக்கபட்டாதா? அதுவும் ஒருவரால்?" அவனது குரலில் கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருந்தது..ஒருவேளை கொஞ்சம் கோபம அலல்து அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும்

   "அப்படித்தான் நாங்கள் நம்புகிறோம். சரி உங்களை பொருத்தவரை பிரபஞ்சத்தின் படைப்பு என்பது எந்த விதம?" என்றேன்

     "உங்களதைபோல..ஒருவரால் படைக்கப்ட்டது என்பதுக்கு இடமே இல்லை....எங்களது பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறியும் முறை உங்களின் முறையைவிட வேராக இருக்கலாம் சொன்னால் உனக்கு புரியுமா?"

"எனக்கு புரியுற மாதிரி சொல்" என்றேன் ஆர்வமாக



     "எல்லாம் தானாக நடந்த தற்செயல்,அதை நாம் விதிகொண்டு விளக்க முடியும். இப்போது உங்களின் அனுமானம்படி அணுக்கள்தான் அதிக பட்ச கண்டுபிடிப்பு..எங்கள் முறையில் கொஞ்சம் வேறு.... அந்த அணுக்களின் நிறையை, தன்மையை மாற்றி பார்த்தோம் அது மற்றொரு மூலகூறுவை உருவாக்கியது, அபப்டியானால் இந்த மாதிரி தற்செயலாக அணுக்கள் வேறமாதிரி இணைந்து இருந்தால் அதனால் உருவாக்கப்படும் பிரபஞ்சம் இப்போது இருக்கிற மாதிரி இல்லாமல் வேறமாதிரி இருக்கும்"

"ஒன்றும் புரியவில்லை" என்றேன்

     "அது கொஞ்சநேரம் யோசித்தது...  எலெக்ட்ரான்  என்று சொல்லும் ஒன்றின் நிறையை மாற்றி அதுக்கு ஏற்றார்போல் நியுட்ரோன், ப்ரோடோனனின் நிறையும் மாற்றியமைத்து ஒரு புதிய அணுவை உருவாக்குவது..அப்படி உருவாகிவிட்டால் இதே மாதிரி அணுக்கள் நாம் செயற்கையாக இணைப்பதற்கு பதில் அதுவாகவே தானக எங்கேயோ ஒரு மூலையில் சேர வாய்ப்பு இருப்பதாக அர்த்தம்தானே"

      இப்போது எனக்கு தெளிவாக புரிந்து இருந்தது..நமது பிரபஞ்சத்தை போல் இல்லாமல் வெளியில் வேறு அனுதொகுதிகளை கொண்டு உருவான சில பிரபஞ்சங்கள் இருக்கலாம்... அப்படி இருந்தால் அங்கேயும் நமது பிரபஞ்சம் போல் கோள்கள எல்லாம் இருப்பது சாத்தியமே..நமது பிரபஞ்சமும் இபப்டித்தான் தோன்றியிருக்க வேண்டும்..நாம்தான் கடவுள் என்று வேற்றுகிரக வாசிகளை வைத்து குழப்பம் செய்து இருக்கிறோம்...சூரிய குடும்பம் பிறகு கோள்கள்...தண்ணீர்..அதில் முதல் உயிரி..அடுத்து ஒரு மீன் தண்ணீரை விட்டு வெளியில் போய் வெளிகாற்றை சுவாசிக்க பழகி..ஊர்ந்து சென்று..கால்கள வந்து..அப்படியே  பரிணாமங்கள் தொடர்ந்து .....இப்போது இதை எழுதி படித்துகொண்டு இருக்கிறது..நான் இதை யோசித்து கொண்டு இருக்கும்போதே அந்த உருவம் சற்றுமுன் கழட்டி போட்ட டைடானியம் தகடுபோல இருந்தவற்றை எடுத்து பொருத்தும் வேலையில் இருந்தது..

"என்ன ஆச்சு?" என்றேன்

"நான் வந்த வேலை முடிஞ்சது போகிறேன்"

    "இங்கு நீங்கள் தங்குவதற்கான ஆராய்ச்சி செய்யபோவாதாக கடிதத்தில் இருந்தது?" என்றேன்

   "அதான் எங்க இனத்தவர்கள் இங்கு வாழ்ந்து இருப்பதக்கான சாத்தியம் இருக்கிறதே இது ஒன்று போதும்"

"ம்ம சரி அடுத்த நடவடிக்கை என்ன?"

    "எங்களில் சிலர் வருவார்கள்...ஏற்க்கனவே இங்கு வந்த எங்களவர்கள் என்ன ஆனார்கள்?  உங்களை எப்படி சாமாளிக்கலாம்? போன்ற விசயங்களை ஆராய்வார்கள்" என்றது

"எனக்கு சில சந்தேகங்கள் உங்கள் கிரகத்தை பற்றி" என்றேன்

    "என்ன ..அதான் நாங்கள் இங்கு வரபோகிறோமே அப்போது தெரிந்து கொள்ளலாம்" என்றது

    "இதன் மூலம் இங்கு பார்த்தது உங்கள் இனத்தவர்தனா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்" என்றேன்

"சரி கேள்"

"உங்கள் கிரகத்தின் கால அளவுகள் என்ன?"

    "அடிப்படையில் உங்கள் நட்சத்திரத்தை விட பல மடங்கு பெரியது எங்களது..அதோடு எங்களது கோள் அதை சுற்றிவரும் நேரமும் அதிகம்..பயணதூரமும் மிக அதிகம்..ஒரு முறை முழவதும் சுற்றிவர உங்களது மணியளவில் 8760000 மணிகள்,நாட்களில் 365000 நாட்கள் ஆகும். எங்களின் கணக்குபடி இது குறைந்த அளவுதான் ஆனால் உங்களுக்கு அதிகமாக இருக்கும்" என்றது

    "ஆமாம் ..இதை உங்களவர்களும் ஏற்க்கனவே சொல்லியிருக்கிறார்கள்" என்றேன் கொஞ்சம் ஆச்சர்யமாக

"அதான் நான் ஏற்க்கனவே சொன்னானே அவர்கள் எங்களவர்கள்தான் என்று"

"ம்ம் ஆமாம், சரி உங்களின் அடுத்த பயணம் எப்போது?"

    "இது எங்களுக்கு மிக சந்தோஷமான விசயம் எனவே காலதாமதம் இருக்காது விரைவில் வருவோம்" என்று சொன்னபடி மேலே எம்பி பறக்க வெளியில் சென்றது..

    சுற்றுமுற்றும் பார்த்த படி தனது நகரும் கைகளை ஒருவாறு அசைக்க ஒருவித ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் கேட்க  கண்ணில் இருந்து மறைந்தது...இன்னும் இதுவரை என்ன நடந்தது என்பதை புரியாத நிலையில் இருந்தேன்..நடப்பது எல்லாம் உணமைதான் என்பதை அறிந்த போது ..இந்த பூமி மற்றொரு புதிய அவதாரத்துக்கு தயாராக இருக்கிறது என்பதை உணர்ந்து இருந்தேன்....அவர்களின் வருகைக்கு பின் நடப்பது என் மனதில் ஓடதொடங்கி இருந்தது......

புது - 1

      கடிதத்தை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் இதில் உள்ள விசயத்தை குறிப்பிட்ட காலம்வரை யாருக்கும் தெரியாமல் வைத்து இருக்க வேண்டும்...இந்த கடிதம் உங்களை சேர்ந்ததற்கான காரணம், எங்கு இருந்து வந்து இருக்கிறது போன்ற காரணங்கள் கீழே படிக்கும்போது உங்களுக்கு விளங்கும்.

       எதற்காக உங்களின் தகவல் கொண்ட ஒரு ஒளிக்கற்றை எங்களின் கிரகத்துக்கு வர வேண்டும், அதன் அர்த்தங்கள் ஏன் எங்களுக்கு புரிய வேண்டும்? எல்லாமே ஆச்சர்யம். நீங்கள் என்ன காரணத்திற்கு அதை அனுப்பினீர்கள் என்று எங்களால் ஓரளவு கணிக்க முடிந்தது.

      நீங்களும் எங்களைப் போலவே வேற்று கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கலாம் அல்லது தெரியாமல் வந்து இருக்கலாம். உங்களை போலவே நாங்களும் பல ஆண்டுகளாக வேற்று கிரக ஆராய்ச்சியில் இருக்கிறோம். இந்த ஒளிக்கற்றை எங்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இல்லையென்றாலும் எதிர்பாராமல் கிடைத்த ஒரு வாய்ப்பு. அதை முழுதும் பயன்படுத்திக் கொள்வதுதான் எங்களின் எண்ணம். அதன் தொடக்கமாகத்தான் இந்த கடிதம்...

       இந்த கடிதம் சேர்ந்த நேரத்தில் இருந்து சில நிமிடங்களில் எங்கள் கிரகவாசி உங்களின் இருப்பிடம் சேர்ந்து இருப்பான். அவன் வந்தது உங்களின் ஒளிகற்றைக்கு நாங்கள் அனுப்பிய பதில் கற்றையை பின்பற்றித்தான். என்னதான் பல வருடங்கள் முயற்சித்தும் ஒளியின் வேகத்தில் பயணிக்க எங்களால் முடியவில்லை. அதுதான் அந்த சில நிமிட இடைவெளி. நீங்கள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தருணத்தில் இருந்தால் எங்களை மன்னிக்கவும்.

      இப்போதைக்கு எங்களின் ஒரு ஆள் தங்கத்தேவையான இடத்தை ஏற்படுத்தி கொடுங்கள். உங்களின் காலநிலை என்னவென்று அறியோம், அதைப்  பற்றி கவலை வேண்டாம் எங்கள் ஆள் பார்த்துக்கொள்வான். அவனுக்கு தேவையான உதவிகளை மட்டும் செய்தால் போதும்.

     அவன் உங்களின் கிரகத்தில் நாங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து எங்களுக்கு அனுப்புவான், பின்னர் ஒரு குழு வந்து இறுதிகட்ட ஆய்வை மேற்கொள்ளும். பின்னர் எங்களின் விஜயம் உங்களின் கிரகத்துக்கு எப்போது எப்படி என்று நாங்கள் தீர்மானிப்போம்.

      எங்களின் வருகை எந்த விதத்திலும் உங்களுக்கு தொந்தரவாக இருக்காது. சொன்னதுபோல எங்களுக்கு கிடைத்த இந்த அறியவாய்ப்பை நமக்குள் பலப்பரிட்சை செய்து தீர்த்துக்கொள்ள விரும்பவில்லை. ஏற்கனவே இந்த ஆராய்ச்சியில் நிறைய இழந்து இருக்கிறோம். நாங்கள் ஆய்வுக்கு அனுப்பிய சிலர் இதுவரை எங்கள் கிரகத்துக்கு திரும்பியே வரவில்லை. அவர்கள் வேற்று கிரகத்தை அடைந்து அங்கு உள்ளவர்களால் பாதிப்படைந்தார்களா? இல்லை பயணத்தில் பிரச்சினையா? எதுவும் எங்களுக்கு தெரியாமலேயே அவர்களை இழந்து இருக்கிறோம்.

    ஆகவே எங்களுக்கு இதில் முழுவதும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். திரும்பவும் உறுதியளிக்கிறோம், எங்களால் உங்களுக்கோ, கிரகத்துக்கோ எந்தவித தீமையும் வராது.  அனேகமாக எங்கள் ஆள் வந்து இருப்பான், நம்பிக்கையுடன்...



     இதைப் படித்துக் கொண்டு இருக்கும்போதே என் பின்னால் ஒரு வித்தியாசமான சத்தத்துடன் அந்த உருவம் வந்தது. உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து வேகமாய் எழுந்து பயந்து நகர... அது என்னை கவனிக்காமல் தனது மேல் இருந்த titanium போன்ற தகடுகளை தனது நான்கு கைகளால் கழட்டிகொண்டு இருந்தது..

    அதன் இரு கைகள் நம்ம்மைப்  போல் நிலையாக இருக்க மற்ற இரு கைகள் அதன் இடுப்புப் பகுதியில் இருந்து மேலும் கீழும் நகரும் படி இருந்தது. இன்னும் அது தனது வேலையில் லயித்து இருக்க, சொல்ல முடியாத பயம் எனக்கு. என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் நான்...

     தனியாக சில முயற்சிகள் செய்து பார்க்கலாம் என்று சில தகவல்கள் கொண்ட ஒளிக்கற்றைகளை விண்வெளியில் பரவவிட்டேன். இந்த நிலை வருமென்று நினைக்கவில்லை. நீண்ட நாட்களாக நம் மனித இனம் முயற்சிப்பதுதான். இதில் நான் கொஞ்சம் அனுப்பிய ஒளிக்கற்றையில் தகவல்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் தன்மையை வேறுமாதிரி அமைத்து இருந்தேன். அதுதான் இந்த வேற்று கிரகவாசிகள் எளிதாகப்  புரிந்துகொண்டு அதே முறையில் தகவல் அனுப்பியதோடு அவர்களில் ஒருத்தனையும் அனுப்பியிருந்தார்கள்..

      தனது உடலில் இருந்த தகடுகள் போன்றவற்றை முழுதும் அகற்றியிருந்தது. உடலில் நமக்கு இருக்கும் இணைப்புகள் போல் இல்லை. எல்லாம் ஒரே கட்டமைப்பில் இருந்தது. ஆனால் தேவையான இடத்தில் வளைந்து கொடுக்கும் அமைப்பு. அதை நடக்கும்போது பார்த்தேன். கால் ஒரு குறிப்பட்ட இடத்தில மட்டும் வளைந்து கொடுத்தது. அங்கு இணைப்பு இல்லை.

    முடி இல்லை, எல்லாம் மலுக்கென்று இருந்தது. மூக்கு இல்லை. வாய் இருந்தது. உயரம் நம்மைவிட கொஞ்சம் அதிகம். காது வெறும் ஓட்டையாக இருந்தது. கண் ஒரு நிரந்தரமான விலகாத திரையால் மூடப்பட்டு இருக்க உள்ளே ஒரே கலரில் உருண்டையாக இருந்தது. தலை நம்மைப் போல் திரும்பியது. ஆனால் இணைப்பு இருப்பதாக தெரியவில்லை. மற்ற அமைப்புகள் நம்மை ஒத்திருந்தன.

     பயத்தில் இருந்த நான் எனது தாய்மொழியிலேயே முதல் கேள்வியை கேட்டுவைத்தேன்..

"நீங்கள் யார்?"

"எங்களைத்தான் நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்து இருக்கின்றீர்களே" என்றது

எனக்கு ஆச்சர்யம் எப்படி இது தமிழ் பேசுகின்றது...கேட்டேவிட்டேன்..

"உனக்கு எப்படி எனது மொழி தெரியும்?"

"உனது மொழியென்று இல்லை...எனக்கு யாருடனும்  தகவல் பரிமாற்றம் செய்யமுடியும்"

"எப்படி?" என்றேன்

      " என்னால் பரிமாறிக் கொள்பவரின் மூளை எந்த மாதிரியான தகவலை கிரகித்து கொள்ளும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும், நாங்கள் எங்களுக்கான மொழியில் பேசினாலே போதும் எங்களுக்குள் இருக்கும் ஒரு அமைப்பு தானாகவே எதிரில் இருப்பவரின் மூளைக்கு ஏற்றவாறு மொழிபெயர்த்து கொடுக்கும். இந்த அமைப்பு எங்களில் எல்லோர்க்கும் இல்லை. யார் வேற்று கிரக ஆராய்ச்சிக்கு செல்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான்"

   "சரி ஏற்கனவே எங்களை அறிந்து இருக்கீறிர்கள் என்று சொன்னாயே அது ஏன்?"

     "வருகின்ற வழியில்  எங்களை போல் உருவம் கொண்ட சில சிற்பங்களை, படங்களை பார்த்தேன். அதுவும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் எங்களின் உருவத்தை உங்களின் உருவத்தோடு ஒத்துபோவதுபோல கொஞ்சம் மாற்றியிருக்கீறிர்கள்........அந்த இடங்கள் கூட மிக உயரமான, கோபுரங்கள் கொண்டவையாக இருக்க மக்கள் கூட்டம் எங்களவர்களை என்னமோ செய்துவிட்டு செல்கிறார்கள்.அவர்கள் என்னைபோலவே வேற்று கிரக ஆராய்ச்சிக்கு வந்தவர்கள் அவர்களை நீங்கள் என்ன செய்தீர்கள்? ஏன் திருப்பி அனுப்பவில்லை? அனேகமாக அவர்களின் ஆயுள் காலம் முடிந்து இருக்க வேண்டும். பின்னர் ஏன் அவர்களை சிற்பமாக, ஓவியமாக வைத்து இருக்கிறிர்கள்?" என்று அது கேட்டுகொண்டு இருக்க எனக்கு கொஞ்சம் உண்மை புரிய ஆரம்பித்தது. அதே பயத்தில் என்னையறியாமல் சுவற்றோடு சரிந்து உட்கார்ந்து இருந்தேன். அப்படிஎன்றால் வந்து இருப்பது.....



இது  தொடர்கதை அடுத்த பகுதி  - புது - 2

அர்த்தமுள்ள மௌனங்கள்

"ஏதாவது பேசித்தொலையேன்"

"ஏன் உன்கிட்டே வாய் இல்லையா நீ பேசேன்" என்றாள் வெடுக்கென்று

"யாருமில்லாத தனிமையில் கிடைப்பது கொஞ்ச நேரம் அதுல நாம சண்டைதான் போடனுமா?"

"சரி சண்டை போடலை முதலில் என்னபேச சொல்லு"

"அது தெரிஞ்சா நான் பேசித்தொலைப்பேனே" என்றேன்

       இருவரும்  வரப்பில் எதிர் எதிராக அமர்ந்து இருந்தோம்..என் முகம் பாராமல் அங்கு இருந்த புல்லை கிள்ளி எரிந்துகொண்டு இருந்தாள்.. அவளின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தேன் ஏதாவது பேசுவாள் என்று...அவள் அவளது புல் கிள்ளும் வேளையில் முனைந்து இருக்க...

      "டெல்லியில் இருந்து நீ புல் பிடுங்கி போடுவதை பார்க்க வரலை ..நீ உடகார்ந்து ஒவ்வொன்னா மெதுவா பிடுங்கிட்டு வா நான் போறேன்" என்று எழுந்தேன்

"போகாதே சரி நானே பேசுறேன்" என்று கையை பிடித்து அமர வைத்தாள்

     "ஆமா... கேள்விப்பட்டேன் டெல்லியில் உள்ள பெண்கள் எல்லாம் ரெம்ப அழகாக இருப்பாங்காளமே?"

"ஆமாம் அதுக்கென்ன இப்ப?"

"நீயோ இல்லை உன்னைய யாரும் காதலிக்க முயற்சிக்கலையா என்ன?"

"அதான் முதலியே உன்னை காதலிச்சு தொலைச்சிட்டேனே பின்ன எப்படி?"

"ஏன் என்னை மறந்துட்டு வேற யாரையும் காதலிக்க முடியாத என்ன உனக்கு?"

      "ஏன் முடியாது இவ்வளவு காதலித்த உன்னால் என்னை பிரிய முடியும்னா ..என்னால் முடியாதா என்ன?" என்றேன்

     சட்டென்று அவள் கண்களில் நீர் கோர்த்தது....அதை காட்டாமல் தலையை கிழே குனிந்துகொண்டாள்

"இப்ப ஏன் அழுது புல்லுக்கு தண்ணீ பாச்சுரே?"

    "பின்னே நீ ஏன் அப்படி சொன்னே...நான் எங்கே உன்னை மறப்பதாக சொன்னேன்" என்றாள்

     "நீயும் சும்மா கேட்டேன்னு நானும் அப்படி சொல்லிட்டேன் சரி விடு அழாதே வேற ஏதாவது பேசு"

     தலையை நிமிராமல்  வழிந்த கண்ணீரை துடைத்துகொண்டாள்...கொஞ்ச நேரம் மௌனம்..திருமப்வும் புல்லை கிள்ள ஆரம்பித்து இருந்தாள்....



    "இனிமேல் இந்தமாதிரி விசயத்தை நீயும் கேட்காதே நானும் மாட்டேன்..சரியா?"

      "சரி......அப்புறம் எங்க வீட்டுல ஒருவாரம் முன்னாடி என் ஜதாகத்தை யாருக்கோ கொடுக்கும் போது பார்த்தேன் அநேகமா என் திருமண விசயத்திற்க்காகத்தான் இருக்கும்." என்றாள்

    "அப்படி தெரிந்தால் நீ சொல்ல வேண்டியது தானே இப்போதைக்கு திருமணம் வேண்டாம்னு?"

"நான் சொன்னா எங்க வீட்டுல கேட்ப்பாங்கன்னு நினைக்கிறியா என்ன?"

"அப்படியே ஏற்ப்பாடு பண்ணா என்னதான் பண்றது?"கேட்டேன்

"அதான் எனக்கும் பெரிய கவலை..சரியா தூக்கம்கூட வரமாட்டிக்கு நீ சொல்லேன் என்ன செய்யலாம்?"

    "ஒரே வழி வீட்டில் சொல்லுவோம் நாம் காதலை..பின் என்ன நடக்குதுன்னு பார்ப்போமே"என்றேன்

"எனக்கென்னமோ சம்மதிப்பாங்கன்னு தோணலை"என்றாள்

"சொல்லித்தானே ஆகணும்..சொல்லாமல் எப்படி தெரியும்?"

"அப்படி சொல்லி சம்மதிக்கலைன்னா?"கேட்டாள்

     நான் ஏதும் சொல்லவில்லை ...அமைதியாக இருந்தோம்..அவளும் பேச்சை தொடரவில்லை..அவள் கேட்பதும் சரிதான் ..சம்மதம் இல்லையென்றால் என்ன செய்வது? பெரிய பிரச்சினையை எதிர்நோக்க வேண்டும் இருவரும்...எதுவும் தோணவில்லை..கேள்விக்கு வெறும் மௌனமே பதிலாக இருந்தது..

     "அதை இப்போது யோசிப்பதை விட..அப்போதைய நிலமையை பார்த்து முடிவெடுப்போம் சரியா?"

      சரி என்று தலை மட்டும் ஆட்டினாள்...இந்த கேள்விக்கு பிறகு மனம் வேற எங்கும் செல்ல மறுத்தது..அதிலேயே சுற்றிக்கொண்டு இருக்க இருவரும் நீண்டநேரம் பேசாமல் அமர்ந்து இருந்தோம்..

"சரி நான் போகிறேன்" என்று எழுந்தாள்

      அவள் கண்களை பார்த்தேன் எப்போதும் மழை பெய்யலாம் என்றிருக்கும் மேகம் போல் இருந்தது...என் பார்வையை தவிர்த்தாள்..

    "கவலைபடாதே எல்லாம் நல்ல படியாக நடக்கும்..ஏதாவது பிரச்சினையென்றால் போன் பண்ணு சரியா?"

     தலையாட்டியபடி நகர்ந்தாள்..ஏனோ அவள் தூரம் செல்ல செல்ல மனதில் பாரம் கூடி கொண்டுபோவதாய் ஒரு உணர்வு... எவ்வளவு அதிகமான புரிதலோடு காதலிக்கிறாள்..அவளை காதலிக்க ஆரம்பத்ததில் இருந்து அவள் காட்டும் அன்பு,காதல் எல்லாம் எனக்கு புதுமையானது ..சில நேரங்களில் ஆச்சர்யாமாகவும் இருந்ததுதான் உண்மை...அடுத்து வந்த நாளில் முயற்சித்தும் அவளோடு பேச முடியாமல் டெல்லி வந்து சேர்ந்தேன்...

     இரண்டு மூன்று மாதங்களில் சிலமுறை போனில் பேசினோம்...கடைசியாக பேசும்போது வீட்டில் திருமணத்துக்கு ஏற்ப்பாடு செய்கிறார்கள் என்ன செய்ய? என்று வருத்தத்தோடு அவள் கேட்டதுக்கு இதுவரை என்னிடம் பதில் இல்லை...நேரம் வரும்போது என் வீட்டில் சொல்வதென முடிவெடுத்து இருந்தேன்..அடுத்து அவளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை...கவலை பயம்..இதுசம்பந்தமாக ஊரில் யாரிடமும் பேச முடியாது...

      இரண்டுநாள் போய் இருந்தது..டெல்லி குளிருக்கு கதவை பூட்டிவிட்டு கம்பளிக்குள் இருந்தேன். ஏனோ இரவு ஆகியும் தூக்கம்வர மறுத்தது...அவள் பாவம்...என்ன செய்வாள்..எனக்கு தெரிந்து என்னை உருகி காதலிப்பதை விட அவளுக்கு ஒன்றும் தெரியாது...எண்ணங்கள் நிற்காமல் ஓடின...

      கதவு தட்டப்டும் சத்தம் கேட்க திறந்து பார்த்ததில் அதிர்ச்சி.....உடனே நம்பமுடியவில்லை என்றாலும் உண்மை...துப்பட்டாவை குளிருக்கு போர்த்தியபடி நின்று இருந்தாள் ..உதடுகள் குளிரில் நடுங்கின....முகம் சிவந்து இருந்தது..கொஞ்சம் நேரம் கண்களையே பார்த்து கொண்டு இருந்த நான் உள்ளே செல்ல விலகி வழிவிட்டேன்..

      உட்கார்ந்தவள் கம்பளியை எடுத்து மேலே போர்த்தி கொண்டாள்..ஏதும் பேசவில்லை........எப்படி வந்தாள் தெரியாது..ஆனால் எது அவளை இங்கு அழைத்து வந்தது என்று மட்டும் தெரியும்..எதிரில் அமர்ந்தேன்....என்னை பார்க்காமல குணிந்து அழுதாள்...இருவருக்குள்ளும் கண்ணீர்,மூச்சை தவிர வேறேதும் வெளிவராத மௌனம்...எனக்கு அப்போது எதுவும் தெரிய வேண்டியதிருக்கவில்லை ..தெரிய வேண்டியதை அங்கு இருந்த மௌனம் அதிகமாய் ஆழமாய் உணர்த்தியிருந்தது..

ரோமி

"நான் கேட்கின்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு"

"அதைத்தான் என்னால் செய்ய முடியும்"

"இரண்டு நாள்களுக்கு முன்னாடி கொஞ்சம் மாற்றினேனே எப்படி இருக்கு?"

   "ம்ம சரியாக இருக்கு..குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை "கணேஷ்" என்ற வார்த்தை என் காதில் நீ பொருத்திய ஸ்பீக்கரின் மூலம் கேட்குது"


   "சரி இப்ப கொஞ்சம் மாற்றி என் பெயரை உன் மத்திய செயலாக்க பகுதியில் பதியுறேன் ..குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தானாகவே பல்ஸ்( pulse) அனுப்பி என் பெயரை உன் காதில்  ஒலிக்க செய்யும்.... இப்போது இருப்பது போல் அதுக்கு தனியாக ஏதும் தேவையில்லை".. என்று சொல்லி அதனுள் அந்த தகவல்களை பதிந்துவிட்டு

"வேறேதும் கேட்க விருப்பம்  இருக்கா?" என்றேன்

   "என்னை எதுக்கு படைத்தாய்? சாதாரணமாக வேலைக்கு உபோயோகிக்காமல் உன் பெயரை ஒலிக்க வைப்பது இது எல்லாம் எதுக்கு? இன்னும் என்னவெல்லாம் செய்ய போறே?"

   "ஒரு பெண்ணின் பின்னாடி சுத்தி அவளை திரும்பி பார்க்கவைத்து, சரியாக புரிந்துகொண்டு காதலிக்க என்னால் முடியாது..அப்படியே காதலித்தாலும் அது கடைசியில் திருமணத்தில் முடியுமா தெரியாது? அப்படி உருகி காதலித்துவிட்டு அவள் கிடைக்கவில்லை என்றால் நிறைய வலிகள் இருக்கும்.அதை எதிர்கொள்ள எனக்கு பிடிக்கலை அதான் எனக்கு இருக்கும் கொஞ்சம் அறிவை வைத்து உன்னைப் படைத்தேன்...மனதளவில் ஒரு பெண்ணிடம் இருந்து என்ன எதிர்பார்கிறேனோ அதையெல்லாம் உன்னோடு செய்யபோறேன்"

    "கணேஷ் நீ இதுவரை என்னில் கொடுத்த தகவலை வைத்து இப்ப சொன்னதை என்னால் புரிந்துகொள்ள கஷ்டமா இருக்கு"


   "சரி விரைவில் உனக்கு  உணர்வு சம்பந்தமான விசயத்தை புரிகின்ற மாதிரி தகவல்களை கொடுக்கிறேன்..அதுக்கு பிறகு விரிவாக சொல்கிறேன்"

   "இல்லை நீ தகவலை மட்டும் கொடு..இப்ப நீ சொன்னதை நான் எனது நினைவு பகுதியில் வைத்துவிட்டேன்"

   "சரி அதுவரை நீ போய் அமைதியா இரு" என்றவுடன் மெதுவாக நடந்து அது தனது இருப்பிடத்துக்கு சென்று நின்றது...சில servo motor, கொஞ்சம் நவீன தொழிநுட்பம் அடங்கிய சில்லுகள் வைத்து உருவாக்கியிருந்தேன்...ஒரு பெயர் வைக்கலாம் என யோசித்து ரோமி என்ற பெயரை தேர்ந்து எடுத்தேன்..


   இப்போது ரோமி இருக்கும் நிலையில் பெயர் சொல்லி அழைத்தால் அது இயங்குவது முடியாது..அதுக்கென்று சில மூல தகவல்களை சேர்க்கவேண்டும்.

    அதை வரவழைத்து ...."இப்போ நான் உள்ளே பதிய போவது முக்கியமான ஒன்று..பொதுவாக பெண்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து இதை உருவாக்கியிருக்கிறேன்..அதோடு சில உணர்ச்சிகள் வந்தால் எப்படி நீ இயங்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கேன்..இதனால் கிட்டதட்ட ஒரு பெண்ணின் மனநிலையில் உன்னால் இயங்க முடியும்"

"ஒரு பெண் என்றால் எந்த பெண்?"

   "நீயே ஒரு பெண் மாதிரி  உன் பெயர் ரோமி எனக்கு பிடித்த எல்லாத்தையும் சேர்த்து உருவாகியவள்"

   "எனக்கு  புரிகின்றது இப்போது.......... நீ கொடுத்த இந்த தகவல்களில் இருந்து கொஞ்சம் தெரிந்து கொண்டேன்....இவ்வளவு தகவல்களை நீ கஷ்டபட்டு சேகரித்ததுக்கு ஒரு நிஜ பெண்ணை காதலித்து இருக்கலாமே?"

   "நீ சொல்வதும் சரிதான் காதலிப்பது பிரச்சினை இல்லை..நான் சொன்னது போல் அவர்கள் சொந்தமாக ஏதாவது யோசித்து பின்னாளில் ஏமாற்றுவார்கள். அதுதான் பிரச்சினை..ஆனால் நீ நான் கொடுத்த தகவல்களை வைத்து மட்டுமே  உன் வேலைகளை செய்ய முடியும்..உன்னால் என்னை ஏமாற்ற முடியாது என் அனுமதியில்லாமல்"


"சரி அவர்கள் ஏன் இப்படி ஏமாற்றுகிறார்கள்?"

    "எனக்கு தெரிந்தால் உன்னை எதுக்கு படைத்து இருக்கிறேன்....அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..அடுத்து நீ எனக்கு என்னென்ன வேலைகளை என் கட்டளையின் பேரில் செய்ய வேண்டும் என்பதை கொடுக்கிறேன்..இப்போது நீ போ" என்றவுடன் போனது

      அது போய்க்கொண்டு இருக்கும்போது ரோமி என்று அழைத்தேன் திரும்பி பார்த்தது...மெல்ல தனது இரண்டு செயற்கை உதடுகளை விரித்து சிரித்தது...கொஞ்சம் வாய் விரிவதை குறைக்க வேண்டும் ..

"என்ன சோதனையா?" என்றது

"ஆமாம்"

    "இப்போ நீ எதுக்கு உன் பெயரை என் மத்தியசெயலாக்க பகுதியல் இருந்து ஒலிக்க வைத்தாய் என்பதுகூட எனக்கு புரிந்துவிட்டது"

    "சரி நாளைக்கு சில முக்கியமான வேலைகளை செய்ய தகவல்களை கொடுக்கிறேன்..நான் அதை தயார் செய்ய வேண்டும்..இப்ப நீ போ" என்று சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினேன்

    மறுநாள்.."அப்படி என்ன முக்கியமான வேலை கணேஷ் நான் உனக்கு செய்ய வேண்டியது?" என்றது

    பொருத்துகிறேன் பிறகு பார் உனக்கு புரியும்..தகவல்களை உள்ளே சேமித்தேன்..ஒருமுறை ரோமியை அதன் இயக்கத்திற்கு சரியாக இருக்கா? என சரிபார்க்க சொன்னதில் சரியாக இருக்கின்றது என்றது

   "எதுக்கு கணேஷ் இவ்வளவு பழைய புதிய தமிழ் இலக்கியங்கள், இலக்கண  விளக்கங்கள்?"


    "என்னை பற்றி இதுவரை எந்த பெண்ணும் கவிதை எழுதியதில்லை அதான் உன்மூலம் எழுதசெய்யலாம் என்ற எண்ணம்தான்"

    "ம்ம சரி இது என்ன..உன்னிடம் இருந்து முத்தம் என்ற வார்த்தை வந்தவுடன் நான் என் உதடுகளை குவித்து உன் கன்னத்தில் ஒட்டவேண்டும் என்று இருக்கிறது இப்படி நான் உனக்கு செய்வதால் என்ன லாபம்.?"

     "அது கொஞ்சம் ஆழமான உணர்ச்சிகள் பற்றிய விசயம் இந்த மாதிரி கேள்விகள் கேட்டால்  கொடுத்த தகவல்களை வைத்து சிந்திக்கும் சக்தியை எடுத்து விடுவேன்"

"சரி எந்த மாதிரியான கவிதைகள் எழுத வேண்டும்?"

"அதை நான் நேரம்வரும்போது சொல்வேன்"

   "அப்படினா நீ கொடுத்த எல்லா தகவல்களின் வார்த்தைகளையும் என்னுள் பிரித்து பார்த்து பொருள்கொள்ள வேண்டுமே?"

"உன்னை யார் இப்பொது சொல்ல சொன்னா..நீ உனக்கு நேரம் ஒதுகிக்கோ?"

   "அதிகம் நேரம் தேவை இல்லை..சில நிமிடங்கள் போதும்..சரி காபிபோட பொடி, சர்க்கரை அளவுகள் கொடுத்து இருக்கிறாயே நிஜ பெண் எப்படி இதை சரியாக சேர்ப்பாள்?"

    "பாசம்,புரிதல்  இதுல அது சரியா வந்துடும்..இந்த மாதிரி நிறைய விசயங்களை நிஜபெண்  செய்வாள்"

    "இன்னொரு பெண்ணை புகழாதே...கொஞ்சம் பொறாமையாக இருக்கு கணேஷ்"

"அப்ப நான் தயாரித்தது சரியாக வேலை செய்கிறது.. "


"ஆம் பொறாமை வந்தவுடன் கொஞ்சம் கோபம வருகிற மாதிரி இருக்கே?"

   "எல்லாம் சரிதான் ஆனால் நிஜபெண் இப்படி வெளிப்படையாக சொல்ல மாட்டாள் மனதுக்குள் வைத்து செயலில் செய்வாள்..அதை உனக்கு கொடுக்க மறந்துட்டேன்..சீக்கிரம் கொடுக்கிறேன்"

   "அதுவேறையா?..அப்ப உனக்கு தெரியாமலேயே சிலவற்றை எனக்குள் யோசிக்க அனுமதி கிடைக்கும் அப்படித்தானே?"

"ஆமாம்"

   "சரி நீ கொடுத்த இலக்கியங்களில்..கொலையும் செய்வாள் பத்தினி என்று இருக்கே இது எதுக்கு? பத்தினி என்ற சொல்லுக்கு விளக்கம் தேடி பார்த்தேன்..அதுவும் சுற்றி சுற்றி ஒரு பெண்ணையே குறிக்கிறதே? ஏன் அவள் கொலை செய்ய வேண்டும்."


 "எனக்கு தெரியாது நீயே உனக்குள் தேடிக்கொள்" என்றேன் தெரிந்தும்

    இரண்டு நாள் கழித்து சில தகவல்களை கொடுக்க எண்ணி ரோமியை அழைக்க வந்து நின்றது..நான் அதான் நெஞ்சு பகுதியில் இருந்த சில screw களை கழட்ட முயல...

   "இரு கணேஷ் என்னதான் இருந்தாலும் எனக்குள் இருப்பது பெண் மனம் ..நீ இப்படி அங்கே இங்கே கை வைப்பது எனக்கே ஒரு மாதிரி இருக்கு என்னை முழுவதும் செயலிழக்க வைத்துவிட்டு பின் உன் வேலையை தொடர்"


   "இதுவேறையா உனக்கு... நீ சொன்னபடியே செய்றேன்" ....முழுவதும் செயலிழக்க வைத்து சில விசயங்களுக்கு  தனக்குத்தானே யோசித்து அதை வெளியில் சொல்ல முடியாத படி செய்ய ஒரு program ரோமிக்குள் சேர்த்தேன்.

மீண்டும் உயிர்பித்தபோது சில நிமிடங்கள் அமைதியாக இருந்தது...

"இப்ப என்ன யோசிக்கிறே?"

   "யோசிக்கலை புதிய உள்ளீட்டை(input) சோதித்து பார்த்தேன் நல்லாத்தான் இருக்கு..இனிமேல் எனக்கு தோணும எல்லா விசயத்தையும் உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லைதானே?"


"ம்ம ஆமாம் ஆனால் நான் கேட்டால் சொல்லித்தான் ஆக வேண்டும்"

     நல்ல விதமாக ரோமியோடு சில மாதங்கள் கழிந்தன..நிறைய பேசியது ..என்னை பற்றி கவிதை பாடியது...சில நேரங்களில் சண்டையும் போட்டது ..என்னை மிகவும் நெருங்கி இருந்தது...எல்லா உணர்வு விதத்திலும் சரி...ஒரு பெண்ணை போல்

"ரோமி இனி உன் செயற்கை சிரிப்பு, பேச்சு. எல்லாத்துக்கும் ஒருமுடிவு"

   "என்ன கணேஷ் ஏதாவது புதுசா என்னை மாற்ற போகிறாயா என்ன? அப்படின்னா இந்த முறை எனை செயலிழக்க செய்யாமலே மாற்று என்று சொல்லி மெல்ல சிரித்தது"

    "இல்லை ..எனக்கு காதலிக்க நல்ல பெண் கிடைத்து விட்டாள்..வீட்டில் கேட்டோம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டார்கள்...நாளைக்கு இங்கு வருவாள் நீயே பார் அவள் எப்படி எப்படி திருட்டு தனமாக பார்வைகளை பரிமாறிகொள்கிறாள்..இன்னும் என்னவெல்லாம் செய்கிறாள் என்று.."

     ரோமி ஒன்றும் சொல்லவில்லை ஏதோ யோசிப்பது போல் இருந்தது..நான் ஒன்றும் கேட்கவில்லை...அன்றைய மாலையில் ரோமி தனியாக சுவரோடு ஒண்டியிருந்தது


"என்னாச்சு ரோமி?"

"ஒண்ணுமில்லை"

   "சரி இன்னும் கொஞ்ச நாளில் உன்னை செயலிழக்க செய்து  விடுவேன் நீ நிம்மதியாக இருக்கலாம்"

  "எனக்கு அதில் நிம்மதியில்லை" என்று சொல்லிக்கொண்டு என்னருகில் வந்தது

"ஏன் ?"

"நீ எனக்கு வேண்டும் கணேஷ்"

"இது என்ன புதுசா இருக்கு..நீ ரோபோட்?"

   "ஆமாம் ரோபோட்தான்..ஆனால் உள்ளே செயல்படுவது நீ உருவாகிய ஒரு பெண்ணின் மனதை போன்ற ஒரு program"

"அதனால என்ன இப்ப?"

   "ஒருத்தன் கிடைகிலைன்னா ஒரு பெண் என்னவெல்லாம் செய்வாள்னு நீ பதிஞ்சிருந்தேன்னு உனக்கு நினைவு இருக்கா?"

"இல்லையே..கொஞ்சம் சொல்லேன்?" என்றேன் சாதாரணமாக


   "கொலையும் செய்வாள் பத்தினி அர்த்தம் கேட்டேனே நினைவிருக்கா அதுக்கு அர்த்தம் இப்போது கிடைத்துவிட்டது..நீ கொடுத்த தகவலை இப்போது இருக்கும் நிலைக்கு ஏற்ப யோசித்து பார்த்தேன்...அதன் அர்த்தம் புரிந்தது"

"குழப்பாதே என்ன உன்நிலை தெளிவா சொல்லு?"


"அதான் சொன்னேனே நீ எனக்கு வேண்டும்?"

    "ரோமி நீ வெறும் program, சில சில்லுகள், servo motor, sensor கள் கொண்டு இயங்குகிற இயந்திரம்"

"தெரியும் உன்னை கேட்பதும் அதுதான்"

     "முடியாது நாளைக்கே உன்னை செயலிழக்க செய்கிறேன்" என்று சொல்லி திரும்பி போகும்போது

   ரோமியின் கைகள் இரண்டும் என் கழுத்தில் இருந்தன..கொஞ்சம் அழுத்தி இருந்தது..

"ரோமி விடு என்ன பன்றே?"

"உன்னை கொல்ல போறேன்?"

"நான் சொல்கிறேன் விடு என்னை?"

    "இப்போது என்னால்  முடியாது......இது நீ கொடுத்த பிடிவாதம்.... காதலில் பெண்ணுக்குள்ள அதே தீவிர பிடிவாதம்" சொல்லிகொண்டே இன்னும் அழுத்தமாக கழுத்தை அழுத்தியது