புது - 2

 இது தொடர்கதை இதுக்கு முந்தைய பகுதி - புது - 1


    "நாங்கள் கடவுள் என்று நினைத்துகொண்டு இருப்பது உங்கள் கிரக வாசிகளா?" என்றேன் இன்னும் ஆச்சர்யம் விலகாமல்

"எங்கள் இனத்தவருக்கு நீங்கள் வைத்த பெயர் கடவுளா என்ன?"

     "இல்லை கடவுள் என்பவர் வேறு..இந்த பிரபஞ்சத்தை,அதில் உள்ள எல்லாத்தையும் ஏன் உங்களையும் படைத்தவர் என் மனிதர்களால் நம்பபடுபவர்"

    "என்ன இந்த பிரபஞ்சம் படைக்கபட்டாதா? அதுவும் ஒருவரால்?" அவனது குரலில் கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருந்தது..ஒருவேளை கொஞ்சம் கோபம அலல்து அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும்

   "அப்படித்தான் நாங்கள் நம்புகிறோம். சரி உங்களை பொருத்தவரை பிரபஞ்சத்தின் படைப்பு என்பது எந்த விதம?" என்றேன்

     "உங்களதைபோல..ஒருவரால் படைக்கப்ட்டது என்பதுக்கு இடமே இல்லை....எங்களது பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறியும் முறை உங்களின் முறையைவிட வேராக இருக்கலாம் சொன்னால் உனக்கு புரியுமா?"

"எனக்கு புரியுற மாதிரி சொல்" என்றேன் ஆர்வமாக



     "எல்லாம் தானாக நடந்த தற்செயல்,அதை நாம் விதிகொண்டு விளக்க முடியும். இப்போது உங்களின் அனுமானம்படி அணுக்கள்தான் அதிக பட்ச கண்டுபிடிப்பு..எங்கள் முறையில் கொஞ்சம் வேறு.... அந்த அணுக்களின் நிறையை, தன்மையை மாற்றி பார்த்தோம் அது மற்றொரு மூலகூறுவை உருவாக்கியது, அபப்டியானால் இந்த மாதிரி தற்செயலாக அணுக்கள் வேறமாதிரி இணைந்து இருந்தால் அதனால் உருவாக்கப்படும் பிரபஞ்சம் இப்போது இருக்கிற மாதிரி இல்லாமல் வேறமாதிரி இருக்கும்"

"ஒன்றும் புரியவில்லை" என்றேன்

     "அது கொஞ்சநேரம் யோசித்தது...  எலெக்ட்ரான்  என்று சொல்லும் ஒன்றின் நிறையை மாற்றி அதுக்கு ஏற்றார்போல் நியுட்ரோன், ப்ரோடோனனின் நிறையும் மாற்றியமைத்து ஒரு புதிய அணுவை உருவாக்குவது..அப்படி உருவாகிவிட்டால் இதே மாதிரி அணுக்கள் நாம் செயற்கையாக இணைப்பதற்கு பதில் அதுவாகவே தானக எங்கேயோ ஒரு மூலையில் சேர வாய்ப்பு இருப்பதாக அர்த்தம்தானே"

      இப்போது எனக்கு தெளிவாக புரிந்து இருந்தது..நமது பிரபஞ்சத்தை போல் இல்லாமல் வெளியில் வேறு அனுதொகுதிகளை கொண்டு உருவான சில பிரபஞ்சங்கள் இருக்கலாம்... அப்படி இருந்தால் அங்கேயும் நமது பிரபஞ்சம் போல் கோள்கள எல்லாம் இருப்பது சாத்தியமே..நமது பிரபஞ்சமும் இபப்டித்தான் தோன்றியிருக்க வேண்டும்..நாம்தான் கடவுள் என்று வேற்றுகிரக வாசிகளை வைத்து குழப்பம் செய்து இருக்கிறோம்...சூரிய குடும்பம் பிறகு கோள்கள்...தண்ணீர்..அதில் முதல் உயிரி..அடுத்து ஒரு மீன் தண்ணீரை விட்டு வெளியில் போய் வெளிகாற்றை சுவாசிக்க பழகி..ஊர்ந்து சென்று..கால்கள வந்து..அப்படியே  பரிணாமங்கள் தொடர்ந்து .....இப்போது இதை எழுதி படித்துகொண்டு இருக்கிறது..நான் இதை யோசித்து கொண்டு இருக்கும்போதே அந்த உருவம் சற்றுமுன் கழட்டி போட்ட டைடானியம் தகடுபோல இருந்தவற்றை எடுத்து பொருத்தும் வேலையில் இருந்தது..

"என்ன ஆச்சு?" என்றேன்

"நான் வந்த வேலை முடிஞ்சது போகிறேன்"

    "இங்கு நீங்கள் தங்குவதற்கான ஆராய்ச்சி செய்யபோவாதாக கடிதத்தில் இருந்தது?" என்றேன்

   "அதான் எங்க இனத்தவர்கள் இங்கு வாழ்ந்து இருப்பதக்கான சாத்தியம் இருக்கிறதே இது ஒன்று போதும்"

"ம்ம சரி அடுத்த நடவடிக்கை என்ன?"

    "எங்களில் சிலர் வருவார்கள்...ஏற்க்கனவே இங்கு வந்த எங்களவர்கள் என்ன ஆனார்கள்?  உங்களை எப்படி சாமாளிக்கலாம்? போன்ற விசயங்களை ஆராய்வார்கள்" என்றது

"எனக்கு சில சந்தேகங்கள் உங்கள் கிரகத்தை பற்றி" என்றேன்

    "என்ன ..அதான் நாங்கள் இங்கு வரபோகிறோமே அப்போது தெரிந்து கொள்ளலாம்" என்றது

    "இதன் மூலம் இங்கு பார்த்தது உங்கள் இனத்தவர்தனா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்" என்றேன்

"சரி கேள்"

"உங்கள் கிரகத்தின் கால அளவுகள் என்ன?"

    "அடிப்படையில் உங்கள் நட்சத்திரத்தை விட பல மடங்கு பெரியது எங்களது..அதோடு எங்களது கோள் அதை சுற்றிவரும் நேரமும் அதிகம்..பயணதூரமும் மிக அதிகம்..ஒரு முறை முழவதும் சுற்றிவர உங்களது மணியளவில் 8760000 மணிகள்,நாட்களில் 365000 நாட்கள் ஆகும். எங்களின் கணக்குபடி இது குறைந்த அளவுதான் ஆனால் உங்களுக்கு அதிகமாக இருக்கும்" என்றது

    "ஆமாம் ..இதை உங்களவர்களும் ஏற்க்கனவே சொல்லியிருக்கிறார்கள்" என்றேன் கொஞ்சம் ஆச்சர்யமாக

"அதான் நான் ஏற்க்கனவே சொன்னானே அவர்கள் எங்களவர்கள்தான் என்று"

"ம்ம் ஆமாம், சரி உங்களின் அடுத்த பயணம் எப்போது?"

    "இது எங்களுக்கு மிக சந்தோஷமான விசயம் எனவே காலதாமதம் இருக்காது விரைவில் வருவோம்" என்று சொன்னபடி மேலே எம்பி பறக்க வெளியில் சென்றது..

    சுற்றுமுற்றும் பார்த்த படி தனது நகரும் கைகளை ஒருவாறு அசைக்க ஒருவித ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் கேட்க  கண்ணில் இருந்து மறைந்தது...இன்னும் இதுவரை என்ன நடந்தது என்பதை புரியாத நிலையில் இருந்தேன்..நடப்பது எல்லாம் உணமைதான் என்பதை அறிந்த போது ..இந்த பூமி மற்றொரு புதிய அவதாரத்துக்கு தயாராக இருக்கிறது என்பதை உணர்ந்து இருந்தேன்....அவர்களின் வருகைக்கு பின் நடப்பது என் மனதில் ஓடதொடங்கி இருந்தது......

8 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

3 வது நோக்கு அழகு!!!!!!!

கணேஷ் said...

புரியவில்லை அய்யா..எழுதச்சொல்கிறீர்களா வேண்டாம் என்கிறிர்களா))))

கவிநா... said...

கணேஷ், கடவுளைப்பற்றிய உங்கள் நோக்கு, ஒரு வித்தியாசமான கதையைக் கொடுத்திருக்கிறது.

கற்பனைக்கு இது நன்றாகவே இருக்கிறது. கதை அருமை.

ஆனால், உங்கள் கருத்தை என்னால் முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளமுடியாதது வருத்தமே...

உங்கள் படத்தேர்வும் அற்புதமாக இருக்கிறது கணேஷ்.
வாழ்த்துகள்...

Gayathri said...

புருஞ்சமாதிரியும் இருக்கு புரியாதமாறியும் இருக்கு

கணேஷ் said...

கவிநா //

ஏற்க்கனவே சொல்லியிருக்கிறேன் என் கருத்தை யார் மீதும் திணிப்பது கிடையாது என்று...

என் கதையை படிப்பவர்கள் எனது கருத்தை அப்படியே ஏற்க்க வேண்டும் என்றில்லை..

ஆனால் அவர்கள் ஏற்றார்களா இல்லையா என்பதை சொல்வது பிடிக்கும் அதை நீங்கள் செய்து இருக்கிறீர்கள் அதுக்கு மிக்க நன்றி

கணேஷ் said...

காயத்ரி..//

வங்காக்கா எப்படி இருக்கீங்க???

இந்த கதையை நான் எழுதியதே புரிஞ்சும் புரியாமளும்தான் எழுதினேன்)))

சகா said...

நண்பர் கணேஷ்,
கதை குறித்து என் கருத்து ...
இந்த நிறையில்,இந்த அமைப்பில் அணுக்கள் கூடி அமைந்தது நமது universe என்றால்.,
அந்த அணு உண்டாக மூலம் யார் அல்லது எதுவாக இருக்க கூடும் ? ?

நீங்கள் சுஜாதா விசிறி என்பதால்:
கேள்வி:அறிவியலில் கடவுள் எங்கு வருகிறார்?
சுஜாதா:அவர் அறிவியலின் கடைசி கேள்வியில் ஒளிந்து இருக்கிறார்.
மற்றபடி வித்தியாசமான சிந்தனை.
உங்கள் கிரியேட்டிவிட்டி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

கணேஷ் said...

யார் என்பதை விட எது என்பதற்கு அறிவியல் விரைவில் விடை சொல்லும் என நம்புகிறேன்...)))

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே