அர்த்தமுள்ள மௌனங்கள்

"ஏதாவது பேசித்தொலையேன்"

"ஏன் உன்கிட்டே வாய் இல்லையா நீ பேசேன்" என்றாள் வெடுக்கென்று

"யாருமில்லாத தனிமையில் கிடைப்பது கொஞ்ச நேரம் அதுல நாம சண்டைதான் போடனுமா?"

"சரி சண்டை போடலை முதலில் என்னபேச சொல்லு"

"அது தெரிஞ்சா நான் பேசித்தொலைப்பேனே" என்றேன்

       இருவரும்  வரப்பில் எதிர் எதிராக அமர்ந்து இருந்தோம்..என் முகம் பாராமல் அங்கு இருந்த புல்லை கிள்ளி எரிந்துகொண்டு இருந்தாள்.. அவளின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தேன் ஏதாவது பேசுவாள் என்று...அவள் அவளது புல் கிள்ளும் வேளையில் முனைந்து இருக்க...

      "டெல்லியில் இருந்து நீ புல் பிடுங்கி போடுவதை பார்க்க வரலை ..நீ உடகார்ந்து ஒவ்வொன்னா மெதுவா பிடுங்கிட்டு வா நான் போறேன்" என்று எழுந்தேன்

"போகாதே சரி நானே பேசுறேன்" என்று கையை பிடித்து அமர வைத்தாள்

     "ஆமா... கேள்விப்பட்டேன் டெல்லியில் உள்ள பெண்கள் எல்லாம் ரெம்ப அழகாக இருப்பாங்காளமே?"

"ஆமாம் அதுக்கென்ன இப்ப?"

"நீயோ இல்லை உன்னைய யாரும் காதலிக்க முயற்சிக்கலையா என்ன?"

"அதான் முதலியே உன்னை காதலிச்சு தொலைச்சிட்டேனே பின்ன எப்படி?"

"ஏன் என்னை மறந்துட்டு வேற யாரையும் காதலிக்க முடியாத என்ன உனக்கு?"

      "ஏன் முடியாது இவ்வளவு காதலித்த உன்னால் என்னை பிரிய முடியும்னா ..என்னால் முடியாதா என்ன?" என்றேன்

     சட்டென்று அவள் கண்களில் நீர் கோர்த்தது....அதை காட்டாமல் தலையை கிழே குனிந்துகொண்டாள்

"இப்ப ஏன் அழுது புல்லுக்கு தண்ணீ பாச்சுரே?"

    "பின்னே நீ ஏன் அப்படி சொன்னே...நான் எங்கே உன்னை மறப்பதாக சொன்னேன்" என்றாள்

     "நீயும் சும்மா கேட்டேன்னு நானும் அப்படி சொல்லிட்டேன் சரி விடு அழாதே வேற ஏதாவது பேசு"

     தலையை நிமிராமல்  வழிந்த கண்ணீரை துடைத்துகொண்டாள்...கொஞ்ச நேரம் மௌனம்..திருமப்வும் புல்லை கிள்ள ஆரம்பித்து இருந்தாள்....    "இனிமேல் இந்தமாதிரி விசயத்தை நீயும் கேட்காதே நானும் மாட்டேன்..சரியா?"

      "சரி......அப்புறம் எங்க வீட்டுல ஒருவாரம் முன்னாடி என் ஜதாகத்தை யாருக்கோ கொடுக்கும் போது பார்த்தேன் அநேகமா என் திருமண விசயத்திற்க்காகத்தான் இருக்கும்." என்றாள்

    "அப்படி தெரிந்தால் நீ சொல்ல வேண்டியது தானே இப்போதைக்கு திருமணம் வேண்டாம்னு?"

"நான் சொன்னா எங்க வீட்டுல கேட்ப்பாங்கன்னு நினைக்கிறியா என்ன?"

"அப்படியே ஏற்ப்பாடு பண்ணா என்னதான் பண்றது?"கேட்டேன்

"அதான் எனக்கும் பெரிய கவலை..சரியா தூக்கம்கூட வரமாட்டிக்கு நீ சொல்லேன் என்ன செய்யலாம்?"

    "ஒரே வழி வீட்டில் சொல்லுவோம் நாம் காதலை..பின் என்ன நடக்குதுன்னு பார்ப்போமே"என்றேன்

"எனக்கென்னமோ சம்மதிப்பாங்கன்னு தோணலை"என்றாள்

"சொல்லித்தானே ஆகணும்..சொல்லாமல் எப்படி தெரியும்?"

"அப்படி சொல்லி சம்மதிக்கலைன்னா?"கேட்டாள்

     நான் ஏதும் சொல்லவில்லை ...அமைதியாக இருந்தோம்..அவளும் பேச்சை தொடரவில்லை..அவள் கேட்பதும் சரிதான் ..சம்மதம் இல்லையென்றால் என்ன செய்வது? பெரிய பிரச்சினையை எதிர்நோக்க வேண்டும் இருவரும்...எதுவும் தோணவில்லை..கேள்விக்கு வெறும் மௌனமே பதிலாக இருந்தது..

     "அதை இப்போது யோசிப்பதை விட..அப்போதைய நிலமையை பார்த்து முடிவெடுப்போம் சரியா?"

      சரி என்று தலை மட்டும் ஆட்டினாள்...இந்த கேள்விக்கு பிறகு மனம் வேற எங்கும் செல்ல மறுத்தது..அதிலேயே சுற்றிக்கொண்டு இருக்க இருவரும் நீண்டநேரம் பேசாமல் அமர்ந்து இருந்தோம்..

"சரி நான் போகிறேன்" என்று எழுந்தாள்

      அவள் கண்களை பார்த்தேன் எப்போதும் மழை பெய்யலாம் என்றிருக்கும் மேகம் போல் இருந்தது...என் பார்வையை தவிர்த்தாள்..

    "கவலைபடாதே எல்லாம் நல்ல படியாக நடக்கும்..ஏதாவது பிரச்சினையென்றால் போன் பண்ணு சரியா?"

     தலையாட்டியபடி நகர்ந்தாள்..ஏனோ அவள் தூரம் செல்ல செல்ல மனதில் பாரம் கூடி கொண்டுபோவதாய் ஒரு உணர்வு... எவ்வளவு அதிகமான புரிதலோடு காதலிக்கிறாள்..அவளை காதலிக்க ஆரம்பத்ததில் இருந்து அவள் காட்டும் அன்பு,காதல் எல்லாம் எனக்கு புதுமையானது ..சில நேரங்களில் ஆச்சர்யாமாகவும் இருந்ததுதான் உண்மை...அடுத்து வந்த நாளில் முயற்சித்தும் அவளோடு பேச முடியாமல் டெல்லி வந்து சேர்ந்தேன்...

     இரண்டு மூன்று மாதங்களில் சிலமுறை போனில் பேசினோம்...கடைசியாக பேசும்போது வீட்டில் திருமணத்துக்கு ஏற்ப்பாடு செய்கிறார்கள் என்ன செய்ய? என்று வருத்தத்தோடு அவள் கேட்டதுக்கு இதுவரை என்னிடம் பதில் இல்லை...நேரம் வரும்போது என் வீட்டில் சொல்வதென முடிவெடுத்து இருந்தேன்..அடுத்து அவளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை...கவலை பயம்..இதுசம்பந்தமாக ஊரில் யாரிடமும் பேச முடியாது...

      இரண்டுநாள் போய் இருந்தது..டெல்லி குளிருக்கு கதவை பூட்டிவிட்டு கம்பளிக்குள் இருந்தேன். ஏனோ இரவு ஆகியும் தூக்கம்வர மறுத்தது...அவள் பாவம்...என்ன செய்வாள்..எனக்கு தெரிந்து என்னை உருகி காதலிப்பதை விட அவளுக்கு ஒன்றும் தெரியாது...எண்ணங்கள் நிற்காமல் ஓடின...

      கதவு தட்டப்டும் சத்தம் கேட்க திறந்து பார்த்ததில் அதிர்ச்சி.....உடனே நம்பமுடியவில்லை என்றாலும் உண்மை...துப்பட்டாவை குளிருக்கு போர்த்தியபடி நின்று இருந்தாள் ..உதடுகள் குளிரில் நடுங்கின....முகம் சிவந்து இருந்தது..கொஞ்சம் நேரம் கண்களையே பார்த்து கொண்டு இருந்த நான் உள்ளே செல்ல விலகி வழிவிட்டேன்..

      உட்கார்ந்தவள் கம்பளியை எடுத்து மேலே போர்த்தி கொண்டாள்..ஏதும் பேசவில்லை........எப்படி வந்தாள் தெரியாது..ஆனால் எது அவளை இங்கு அழைத்து வந்தது என்று மட்டும் தெரியும்..எதிரில் அமர்ந்தேன்....என்னை பார்க்காமல குணிந்து அழுதாள்...இருவருக்குள்ளும் கண்ணீர்,மூச்சை தவிர வேறேதும் வெளிவராத மௌனம்...எனக்கு அப்போது எதுவும் தெரிய வேண்டியதிருக்கவில்லை ..தெரிய வேண்டியதை அங்கு இருந்த மௌனம் அதிகமாய் ஆழமாய் உணர்த்தியிருந்தது..

51 comments:

எஸ்.கே said...

கனமான காதல் கதை!
நல்லாயிருந்தது!

கணேஷ் said...

என்ன ஒரு 125 kg இருக்குமா??))

நன்றி

எஸ்.கே said...

//என்ன ஒரு 125 kg இருக்குமா??))//

ஹி..ஹி... அவங்க வெய்ட் எனக்கு எப்டி தெரியும்!:-)

கணேஷ் said...

நிறுத்துபார்த்தா "அவங்க" வெயிட் இல்ல ...யார் வெயிட்னாலும் தெரியும்))))

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு கணேஷ்....

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்

/சட்டென்று அவள் கண்களில் நீர் கோர்த்தது....அதை காட்டாமல் தலையை கிழே குனிந்துகொண்டாள்//

சும்மா கொளுத்தி போடாத. இதுக்கு எல்லாம் அழமாட்டாளுங்க. இங்க நான் எழுதரேன் கதைய

சட்டென நிமிர்ந்து பார்த்து நான் எப்போ மறக்க முடியும் சொன்னேன் என்று கேட்டாள். அவள் பார்வையின் உஷ்னம் தங்காமல் வேறு திசையில் நோக்கினேன்.

கணேஷ் : அப்போ நீ மட்டும் ஏன் அப்படி கேக்கர?

அவள் : நான் கேட்ட நீ இப்படி சொல்லுவியா...

(கேள்வியை முடிக்கும் முன் அவள் கண்களில் நீர் கோர்த்து நின்றது.)

"இப்ப ஏன் அழுது புல்லுக்கு தண்ணீ பாச்சுரே?"... Cont...

TERROR-PANDIYAN(VAS) said...

//சரி......அப்புறம் எங்க வீட்டுல ஒருவாரம் முன்னாடி என் ஜதாகத்தை யாருக்கோ கொடுக்கும் போது பார்த்தேன் அநேகமா என் திருமண விசயத்திற்க்காகத்தான் இருக்கும்//

பின்ன Schoola சேர்க்கவா ஜாதகம் கொடுப்பாங்க? :)

TERROR-PANDIYAN(VAS) said...

//அதிகமான புரிதலோடு காதலிக்கிறாள்..//

எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை.. :)

கணேஷ் said...

சும்மா கொளுத்தி போடாத. இதுக்கு எல்லாம் அழமாட்டாளுங்க. //

இது எப்படி உங்களுக்கு சரியாதெரியும்....))

உங்க கதையும் நல்லாத்தான் இருக்கு..உங்க மாதிரி அனுபவம் இருந்தா அப்படி எழுதி இருப்பேன்..என்ன பண்ண இல்லையே.((

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆனால் எது அவளை இங்கு அழைத்து வந்தது என்று மட்டும் தெரியும்..//

ஒரு பொம்பள புள்ள தைரியம கிளம்பி வந்து இருக்கு. இவருக்கு பேச்ச பாரு... :)

கணேஷ் said...

எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை.. :)//

இந்த கதையும் புரியலைன்ன நான் எப்படித்தான் கதை எழுதவோ..))))

திரும்பி அறிவியல் கட்டுரைகளை எழுதி சாகடிகிறேன் இருங்க..)))

TERROR-PANDIYAN(VAS) said...

//கதவு தட்டப்டும் சத்தம் கேட்க திறந்து பார்த்ததில் அதிர்ச்சி.....உடனே நம்பமுடியவில்லை என்றாலும் உண்மை...துப்பட்டாவை குளிருக்கு போர்த்தியபடி நின்று இருந்தாள்//

நீ ஏன் டெல்லியில் இருந்து நொய்டா போன இப்போ தான் தெரியுது. அந்த புள்ளைய கூட்டிகிட்டு போனியா இல்லை விட்டுட்டு தனியா ஓடி போய்ட்டியா? :))

கணேஷ் said...

நீ ஏன் டெல்லியில் இருந்து நொய்டா போன இப்போ தான் தெரியுது. அந்த புள்ளைய கூட்டிகிட்டு போனியா இல்லை விட்டுட்டு தனியா ஓடி போய்ட்டியா? :))///

இதை எழுத சொன்னதே அவள்தான்..என்னோடுதான் இருக்கிறாள்...அப்படி வந்தவளை எப்படி பிரிய முடியும்)))

எஸ்.கே said...

அந்த மௌனங்களுக்கு பின் என்ன நடந்தது?
கதைக்கு 2ஆம் பாகம் உள்ளதா?
அடுத்த பாகத்தில் அறிவியல் ரீதியாக திருமணம் நடக்குமா?

கணேஷ் said...

@எஸ்.கே//

அதை நமது terror சார் அவரது எழுது நடையில் கதையாக எழுதுவார்..பொருத்துது இருப்போம் இன்னும் 20 வருடம்...)))

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்

//இந்த கதையும் புரியலைன்ன நான் எப்படித்தான் கதை எழுதவோ..))))//

கதை புரியுது.. எதோ புரிதலோட காதலிக்கிறாங்க சொன்னியே அது தான் புரியவில்லை.. :)))

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்

//இதை எழுத சொன்னதே அவள்தான்..என்னோடுதான் இருக்கிறாள்...அப்படி வந்தவளை எப்படி பிரிய முடியும்)))//

சிக்கிட்டியே கணேசு... அப்படி வா வழிக்கு. பாபுவை கூப்பிட்டு உங்க வீட்டுல பங்சாயத்து பேச சொல்றேன். கவலைபடாத.. :)

கணேஷ் said...

அந்த புரிதல் உங்களுக்கு புரிஞ்சா அது எங்களுக்குள்ள இருக்கிற புரிதலான காதல் புரிதல் இல்லாம போயிடுமே..))

கணேஷ் said...

சிக்கிட்டியே கணேசு... அப்படி வா வழிக்கு. பாபுவை கூப்பிட்டு உங்க வீட்டுல பங்சாயத்து பேச சொல்றேன். கவலைபடாத.. :)//

ம்ம சரி..அப்ப சந்தோசம்...)))

கணேஷ் said...

TERROR-PANDIYAN(VAS)
அவள் பார்வையின் உஷ்னம் தங்காமல் வேறு திசையில் நோக்கினேன்.//

கண்ணுல ஸ்டவவா வச்சு எரிப்பாங்க சார் அவ்வளவு உஷ்ணம் இருக்க??..உங்க அனுபவத்தில இருந்து சொல்லுங்க..)))

TERROR-PANDIYAN(VAS) said...

//கண்ணுல ஸ்டவவா வச்சு எரிப்பாங்க சார் அவ்வளவு உஷ்ணம் இருக்க??..உங்க அனுபவத்தில இருந்து சொல்லுங்க..))) //

ஏற்க்கனவே மகளிரணி எனக்கு எதிரா தான் இருக்கு. இதுல டவுட் வேற கேக்கர. டைம் கிடச்சா உனக்காக இதை பற்றி எழுதுகிறேன். அடி வாங்கி வைக்காம விட மாட்ட... :)

கணேஷ் said...

அடி வாங்கி வைக்காம விட மாட்ட... :)//

உங்களுக்கு இது எல்லாம் புதுசா..எப்பயும் வந்குரதுதனே..)))

கண்டிப்பா எழுதுங்க..

இம்சைஅரசன் பாபு.. said...

கணேஷ் உண்மைலேயே ரொம்ப நன்றாக இருக்கு ...சூப்பர் ..

இம்சைஅரசன் பாபு.. said...

இருந்தாலும் இவ்வளவு தூரம் எழுதனும்ன ...ஒரு அனுபவம் இருக்க வேண்டும் ..ஒருவேளை அனுபவம் இருக்கா ....

எலேய் எதாவது இருந்தா சொல்லிரு ..இனி இந்த ப்ளாக் பக்கமே வரமாட்டேன் ...

கணேஷ் said...

@ இம்சைஅரசன் பாபு.
என்ன இப்படி சொல்லிட்டிங்க terror சார் உங்ககிட்ட சொல்லித்தான் எங்க வீட்டுல பேச சொல்றேன்னு சொல்லியிருக்காரு ..)))

TERROR-PANDIYAN(VAS) said...

@பாபு

//ஒரு அனுபவம் இருக்க வேண்டும் ..ஒருவேளை அனுபவம் இருக்கா ....//

என்ன கேள்வி மக்கா இது! மொச புடிக்கிற நாய முஞ்சிய பார்த்தா தெரியாது... :))

கணேஷ் said...

மொச புடிக்கிற நாய முஞ்சிய பார்த்தா ""தெரியாது""... :))///

வேற எதை பார்த்த தெரியும்..ஒரு டவுட்டு))))

இம்சைஅரசன் பாபு.. said...

////ஒரு அனுபவம் இருக்க வேண்டும் ..ஒருவேளை அனுபவம் இருக்கா ....//

என்ன கேள்வி மக்கா இது! மொச புடிக்கிற நாய முஞ்சிய பார்த்தா தெரியாது... :))//

மக்கா டெர்ரர் அவனை நேரடியா பார்த்து இருக்கேன் ..பயபுள்ள ..ஹிந்தி நடிகர் மாதிரி இருக்கான் ..இதுல உள்ள போட்டோவ பார்த்து எடை போட்டுராத ...

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்

//வேற எதை பார்த்த தெரியும்..ஒரு டவுட்டு))))//

மொச புடிக்கிற நாய முஞ்சிய பார்த்தா தெரியாதா?

(இப்போ தெரியுதா?)

கணேஷ் said...

நான் பார்பதர்க்குள் அந்த நாயி ஓடிரிச்சு என்ன பண்ண..)))

baln said...

machi ...sema lov feel

கவிநா... said...

கணேஷ் இப்போ, அறிவியல் வாசனை இல்லாம கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க.!! :)))
ரொம்ப அழகான காதல் கதை...

நீங்க சும்மா, பேசி பேசியே அவங்களை சமாளிச்சிட்டிருந்தீங்க. உங்க காதலிக்கு ரொம்பத்தான் தைரியம். கிளம்பி வந்துட்டாங்க. இனியாவது, எதையும் சொல்லாதீங்க. செய்ங்க... :))))))))))))

அருமையான கதை. முடிவு எதிர்பார்க்காதது.... வாழ்த்துகள்..

ஆனந்தி.. said...

உன் அனுபவத்தை பதிவாய் போடுட்ட....ஓகே...ரைட்:))))

ஆனந்தி.. said...

//மக்கா டெர்ரர் அவனை நேரடியா பார்த்து இருக்கேன் ..பயபுள்ள ..ஹிந்தி நடிகர் மாதிரி இருக்கான் ..இதுல உள்ள போட்டோவ பார்த்து எடை போட்டுராத ...//

அப்படியா பாபு..:)) ஓய் தம்பி....நொய்டா பத்திரம்...வடநாட்டு கேர்ல்ஸ் உன்னை தூக்கிட்டு போய்ட போறாங்க :)))

சேக்காளி said...

//இதை எழுத சொன்னதே அவள்தான்..என்னோடுதான் இருக்கிறாள்...அப்படி வந்தவளை எப்படி பிரிய முடியும்//
படிக்கும் போது சந்தோசமாக இருக்கிறது.
எல்லா காதலும் இப்படி இனிமையாக இறுதிவரை இருந்தால் நன்றாக இருகுமல்லவா?

ADMIN said...

நல்லா இருக்கு.. ! நிசமாவே...! ரொம் புடிச்சிருக்குது..!

கணேஷ் said...

கவிநா... said...///

சரிங்க..இனிமேல் நீங்க சொன்ன மாதிரி செய்யுறேன்..)))

கணேஷ் said...

@@ஆனந்தி sis//
ஏன்க்கா இப்படி?? எனக்கு ஒரு அனுபவும் இல்லை ..அப்படி இருந்தாதான் சந்தோஷ பட்டுஇருப்பேனே)))

கணேஷ் said...

@சேக்காளி...//

சார் இது கதை..உண்மையில் இப்படி இருந்தால சந்தோசம்தான்..)))

கணேஷ் said...

தங்கம்பழனி said...//

ரெம்ப சந்தோசம் சார்
நன்றி

சகா said...

//ஆனால் எது அவளை இங்கு அழைத்து வந்தது என்று மட்டும் தெரியும்.//

போங்க கணேஷ் ஏமாத்திட்டீங்க ! அவளை அழைத்து வந்தது "பிரோப்லெக்ஸ் ஹார்மோன்" அல்லது "அவளது ரசாயன கலவையில் ஏற்பட்ட திடுக் தூண்டல்" அது இது என்று ஏதாவது சொல்வீர்கள் என்று எதிபார்த்திருந்தேன் :)
இன்னும் கூட விரிவாக எழுதப்பட வேண்டிய கதை என நினைக்கிறேன் .
நன்றாக இருந்தது .

கணேஷ் said...

நீங்கள் சொன்னதை ஏற்க்கனவே நிறையா தடவை சொல்லிட்டேன்..இபோதும் சொன்னால் எனது பதிவுகளை முதலில் இருந்து படிக்கும் சில நல விரும்பிகள் விரட்டி விரட்டி அடிப்பார்கள்..

பழைய பதிவுகளில் நிறையா சொல்லிட்டேன்..இந்த ஹோர்மோன் பத்தி.

நன்றி

எஸ்.கே said...

தங்கள் கதையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_16.html

Prabu M said...

வணக்கம் கணேஷ்...

கதை என்றுதான் நினைத்துப் படித்தேன்... கதையல்ல நிஜம் என்று பின்னூட்டம் கூறியது....
அர்த்தமுள்ள ஒரு மௌனம்தான் என் அறையையும் சூழ்ந்தது...
உங்க ஊரு எதுன்னு தெரியல... அங்கே இருந்து அந்தப் பொண்ணு டெல்லி வரைக்கும் தனியா வந்திருக்காங்க... கிளம்புவதற்கு முன்னும், பயணத்தின்போதும், உங்கள் இடத்தை அடையும் முன்பும்னு அவங்க மனநிலைகளின் கிரஹிப்புதான் என் மௌனத்தை நிரப்பியது...

வெல்... என்ன சொல்லுறது??

நீங்க யாருன்னு தெரியாது.... but am happy for you!! All the best... அந்தப் பொண்ணு உங்க வாழ்க்கைக்கு ஒரு பெரிய‌ வெற்றியைக் கொடுத்திருக்கா...

Prabu M said...

ஆஹா... அடுத்தடுத்த பின்னூட்டங்கள் வேற மாதிரி சொல்லுதே...
பிரதர்.. இது கதையா? நிஜமில்லையா? ஆகமொத்தம் எனக்கு பல்பா..?? நல்லா இருப்பா... நல்லா இரு.... உன்னைய‌ மறக்கவே மாட்டேன்....

உண்மைன்னு நென‌ச்சுப் பார்த்த‌ப்போ ரிய‌லி ஒரு ந‌ல்ல‌ ஃபீல் கிடைச்சுச்சு.... இட்ஸ் ஓகே...இட்ஸ் ஆல் இன் தி கேம்!!! :-)

கணேஷ் said...

மிக்க நன்றி எஸ்கே

கணேஷ் said...

பிரபு எம் said...//

நீங்கள் என் வலைப்பூ வுக்கு புதுசு நினைக்கிறேன்..நானே நிறையா முறை சொல்லியிருக்கிறேன் இதில் என் பெயர் வயதை தவிர எதுவுமே உண்மையில்லை என்று..எல்லாம் கதைக்கு கற்பனைதான்)))

இது உணமையில் நடக்க எனக்கும் ஆசைதான ஆனால் அதுக்கு வாய்ப்பே இல்லாமல அல்லவா இருக்கு)))

இனிமேல் எதிர்பார்க்காமல் பலப் வாங்காமல் படிக்க முயற்சியுங்கள்)))

நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

மனதைத் தொட்ட கதை.
வாழ்த்துக்கள் கணேஷ்.

கணேஷ் said...

Blogger புவனேஸ்வரி ராமநாதன் ///

கருத்துக்கு ரெம்ப நன்றிங்க))

RMS said...

சீர்காழி------->இது நம்ம ஏரியா
http://sirkaliarea.blogspot.com/

செல்வா said...

ஐ நான்தான் ஐம்பத்தி ஒண்ணு ! எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.