கண்ணாமூச்சி காதல்....

      இப்போது என் முறை. சுவற்று பக்கம் திரும்பிக்கொண்டு கண்ணை மூடி பத்தில் இருந்து ஒன்று வரை தலைகீழாக சத்தமாக எண்ண வேண்டும். ஒன்று வந்தவுடன் அந்த இடத்தை சுற்றி ஓடி ஒழிந்தவர்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு ஆரம்பம் ஆகும்.

   அப்படி எண்ணி முடித்ததும் நான் என் மனதில் நினைத்தது முதலில் அவள் என் கண்ணில் விழுந்து விடக்கூடாது என்பதே.ஏனென்றால் யார் முதலில் அகப்படுகிறார்களோ அடுத்த முறை அவர்களுடையது. அப்படி அவள் முறை வந்து விட்டால் அடுத்த முறை அவளோடு சேர்ந்து ஒரே இடத்தில ஒழிய முடியாது என்பதே.

   "அவள்" .....நான் சிறுவயது பள்ளி விடுமுறைக்கு என் அம்மாவின் கண்டிப்புக்கு பயந்து எப்படியாவது அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று எண்ணி.... என் பாட்டி ஊருக்கு வந்து இருந்தேன். அங்கு என்னை போலவே விடுமுறையில் தன் அம்மாவுக்கு பயந்து வந்தவர்களில் அவளும் ஒருவள்.

    என் சொந்தக்கார பெண்தான் நாங்கள் சந்திப்பது மூன்று மாத இடைவெளி விட்டு வரும் தேர்வு விடுமுறையில்தான்.


   இன்று எங்களுக்கு விடுமுறையின் கடைசி நாள். ஒருபக்கம் பள்ளி செல்ல வேண்டும் என்ற கவலை  இருந்தாலும் அன்று நாங்கள் விளையாட தவறவில்லை.

    அனேகமாக அன்று மாலை அவள் ஊருக்கு சென்றுவிடுவாள் நான் என் ஊருக்கு சென்று விடுவேன். இன்னும் இருப்பது கொஞ்சம் நேரம். அதற்குள் தான் இந்த விளையாட்டு.

    எப்படியும் அவள் என் கண்ணில் முதலில விழக்கூடாது என்று நினைத்து கொண்டே அங்கு ஒளிந்து இருப்பவர்களை தேட ஆரம்பித்தேன்.

    அப்படியே அவளை முதலில் பார்த்துவிட்டாலும் பார்க்காதது போல் இருந்து விடமுடியாது...நான் வருவதை யாராவது ஒழிந்து கொண்டு பார்த்து கொண்டு இருப்பார்கள். அப்படி நான் அவளுக்காக அப்படி செய்வதை பார்த்துவிட்டால் அந்த விளையாட்டில் இருந்து என்னை விளக்கி விடுவார்கள்.எனவே நான் அப்படி செய்ய முடியாது. இல்லை என்றால் நான் அப்படி செய்பவன்தான்.
  
    அது கிராமம் என்பதால் யார் வீட்டுக்குள் யார் வேண்டுமானாலும் தாரளமாக போய் வரலாம். அநேமாக எல்லாரும் கிராமத்தில் உறவினர்களாகவே இருப்பார்கள் என்பதால் அவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

    நல்ல அகலமான சந்துகள் சிறிய வீடுகள் என்பதால் எளிதில் ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடித்து விடலாம்...... அப்படித்தான் நான் அவர்களை தேடிக்கொண்டிருந்தேன்.

    கொஞ்ச நேரம் சுற்றி தேடியதில் ஒருவன் என் கண்ணில் மாட்டினான்...கொஞ்சம் சந்தோசம் நல்லவேளை முதலாக அவ்ள மாட்டவில்லை. தொடர்ந்து தேடினேன் ...தேடியதில் வேறு சிலர் என் கண்ணில் பட்டனர்.

   மொத்தம் நாங்கள் விளையாடியதில் கிட்டதட்ட எல்லோரும் கண்டுபிடிக்கப்பட்டு விற்றாயிட்டு.ஆனால் அவள் மட்டும் கிடைக்கவில்லை.

    நான்தான் தேடுகிறேன் என்று இல்லை...ஏற்க்கனவே OUT ஆனவர்கள் அவள் எங்கே ஒழிந்து இருக்கிறாள் என்ற ஆர்வத்தில் அவளை தேடிக்கொண்டு இருந்தார்கள்.அப்படியே அவர்கள் அவளை கண்டு பிடித்துவிட்டாலும் என்னிடம் சொல்ல மாட்டார்கள். மாறாக அவளுக்கு உதவுவார்கள்...

    ஆக மொத்தத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து அவளை தேடுகிறோம். கொஞ்ச நேரம் தேடியும் அவள் கிடைக்கவில்லை.

    அதற்குள் என்னோடு இருந்தவர்கள் சரி அவளை விடு..எங்காவது இடையிலேயே போய் இருப்பாள்..நாம் விளையாட்டை தொடரலாம் என்றார்கள்...நான் முதலில் கண்டுபிடித்தவன் தனியாக சென்று எண்ணுவதற்கு தயாரானான்.

    அங்கு இருந்தவர்களிடம் நான் கேட்டேன் "அவளை காணவில்லை என்றால் அப்படி அவள் எங்குதான் போய் இருப்பாள்" என்று......அதற்க்கு அதில் ஒருவன் ..."தெரியவில்லை.....அவள் வீட்டில் இன்று ஊருக்கு போவதாக சொல்லிக்கொண்டு இருந்தார்கள்..ஒருவேளை அவளை அழைத்து கொண்டு போய் இருக்கலாம்". என்றான்.

     ஒருவேளை அப்படி இருக்கலாம் என்று நான் எண்ணி கொண்டு விளையாட ஆரம்பித்தேன்.எதோ ஒரு சிறு கவலை என் மனதில்..அவளை பார்க்கவில்லை..ஊருக்கு போகும்பொது என்னிடம் சொல்லிவிட்டு போகவில்லை...

     ஒரு வழியாக் விளையாட்டு முடிந்து அவரவர் வீட்டுக்கு செல்லும்போது அப்படியே நான் அவள் வீட்டு பக்கம் சென்று அவள் இருக்கின்றாளா? என்று பார்த்தேன் அங்கு அவள் இல்லை போய் இருந்தாள்.

   கொஞ்சம் கவலை கொஞ்சம் வருத்தம்..அவளை நினைத்து.   அப்போது காதலுக்கு உண்டான ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கவில்லை என்பதால் இது கண்டிப்பாக காதலாக இறுக்க முடியாது. எதோ அவளை பார்க்காததால் கொஞ்சம் வருத்தம் ,கவலை இதுமட்டும்தான்.

   
    அன்று மாலையே நானும் என் ஊருக்கு சென்றுவிட்டேன். அதற்க்கு பிறகு என் எதிர்கால  நலன் கருதி என்னை பள்ளி மாற்றி விட்டார்கள்.அதுவும் விடுதியில். அப்போதும் விடுமுறை நாள்கள வரும்.ஆனால் அந்த நாள்கள என் சொந்த ஊரில்தான் கழியும்.

    என பாட்டி ஊருக்கு செல்ல சமயம் கிடைப்பதில்லை.அதற்க்கு அடுத்து வந்த காலங்களில் அவளை பார்க்கவே இல்லை.

   அடுத்து என் பள்ளி பருவம் முடிந்து மேல்கல்வி படித்து, அடுத்து கல்லூரி..என்று தொடர்ந்து....வேலைக்கு சேர்ந்து..அப்படியே காலம் இன்றுவரை ஓடிவிட்டது..

     அன்று அந்த விளையாட்டில் தொலைந்த்தவள் இன்றுவரை என் கண்ணில் படவேயில்லை ..இருந்தாலும் அவளை பற்றிய செய்திகள் நான் ஊருக்கு போகும் சமயங்களில் என் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறேன். என்ன படிக்கிறாள் என்ன செய்கிறாள் போன்ற விசயங்கள்.

    இதுவரை முடியாத அவளுடன் தொடரும்  அந்த விளையாட்டு எப்போது முடியும் என்ற ஆவல் எனக்கு எப்போதும் உண்டு...

    இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே "அப்படி என்ன ஆர்வமாக எழுதிரிங்க? என்று என் அன்பு மனைவி வந்து என் தோள் மீது கைவைத்தாள்...அதோடு வேகமாக நான் எழுதியதை படித்தும் முடித்தாள்....


    "அந்த விளையாட்டில் நான் அன்று தொலைந்து போனவள் அப்படியே போய் இருந்தால் சந்தோசம்..ஆனால் திரும்பி வந்து உங்க மனைவியாக மட்டிகொண்டேனே..... அதையும் சேர்த்து எழுதுங்கள்"..என்றாள்....செல்லமான கோபத்துடன்....

4 comments:

மதுரை சரவணன் said...

கடைசி வரி நச்...நல்ல விதமாய் கதை அமைந்துள்ளது . வாழ்த்துக்கள்

வலசு - வேலணை said...

நல்லா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்!

கணேஷ் said...

மதுரை சரவணன் said...

கடைசி வரி நச்...நல்ல விதமாய் கதை அமைந்துள்ளது . வாழ்த்துக்கள்////


உங்களின் வாழ்த்துக்கு நன்றிகள்.

கணேஷ் said...

வலசு - வேலணை said...

நல்லா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்!///

உங்களின் கருத்துக்கு நன்றி..தொடர்ந்து எழுதுகிறேன்..