கடவுள் இன்ன கிழமை இந்த ஊருக்கு வருவதாக சொன்னால் போதும் அதை கேட்டதில் இருந்தே அங்கு பயணிக்க தயாராகி விடுவாள் என் அன்பு காதலி..
அந்த அளவு அவளின் அம்மாஅவளை கெடுத்து வைத்து இருந்தார்கள்......மாதம் ஒருமுறை கண்டிப்பாக எங்காவது வெளியூரில் இருக்கும் கோயில்களுக்கு பயணிப்பாள்....அப்படி ஒரு பக்தி...
அன்று வழக்கமாக சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும்போதுதான் கவனித்தேன்..எப்போதும் துறுதுறு என்று பேசுபவள் இன்று ஏனோ கொஞ்சம் சோகராகம் பாடுவது போல இருந்தாள்...
என்ன விஷயம் என்று கேட்டேன்...இரண்டு நாட்களுக்கு முன் அவள் அம்மா இவளுக்கு சாதகம் பார்த்தார்களாம்...இவளுக்கு சில நாட்களில் இருந்து ஏழரை சனி ஆரம்பிக்கிறதாம்...எந்த செயலை செய்தாலும் இடர்கள் வரும் என்றுவேறு அந்த ஜோசியர் பயம்காட்டி இருக்கின்றார்...இதுதான் இவளின் சோக ராகத்திற்கு காரணம்...
அதோடு மட்டும் இல்லாமல் சனிக்கிழமைகளில் நவகிரக கோயில்களுக்கு சென்று சனி பகவானுக்கு நெய் விளக்கு ஏற்ற வேண்டுமாம்...நாங்கள் அதிகம் சந்தித்து கொள்வதே சனிக்கிழமையன்றுதான் அதுக்கும் சனி பகவான் வேட்டு வைத்து விட்டார்...என்று நினைத்துகொண்டேன்...
நான் அவளுக்கு ஆறுதல் சொல்லுவிதமாக "அதை எல்லாம் நம்பாதே நீயும் படித்த பெண்தானே..அந்த நவகிரகம் மற்றது எல்லாம் சும்மா..அது எல்லாம் ஒன்றும் செய்யாது..நீ நல்ல படியாக முயற்சி செய்தால் எல்லாம் நல்ல படியாக முடியும்"என்றேன்.
”நீ சும்மா எதுக்கு எடுத்தாலும் அறிவியல் பேசாதே..அது உண்மை இல்லாமையா பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்தே இந்த நவகிரக வழிபாட்டை செய்துகொண்டு வருகிறார்கள்...அதுவும் அந்த காலத்தில் எந்த ஒரு அறிவியல் கருவியும் இல்லாமல் நம்மை சுற்றிவரும் கிரகங்களை துல்லியமாக வடிவமைத்து இருக்கிறார்கள்”...என்றாள்...
”நான் ஒன்றும் அறிவியல் பேசவில்லை..அது உணமையோ பொய்யோ அதைவைத்து ஏன் நாம் மனதை குழப்பி கொள்ளவேண்டும் என்றுதான் சொல்கிறேன்” என்றேன்...
”இல்லை இல்லை..அந்த கிரகங்களின் நகர்வுக்கும் நமக்கும் தொடர்பு உண்டு...அது நாம் முன்னோர்கள் சொன்னது..அவர்கள இதை கடவுளின் உதவி இல்லாமல் எப்படி இந்த கிரகங்களை கண்டுபிடிக்க முடியும்....எனவே எல்லாத்துக்கும் கடவுள் பின்னாடி இருக்கிறார்” என்றாள் அமைதியாக....
அதை நான் ஒரேயடியாக மறுத்தால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவாள்....அதனால்..."நான் சொல்லபோவதை கொஞ்ச நேரம் கேள் அதில் ஏதும் தவறு இருந்தாள் சொல்லு” என்றேன்..
அதற்கு அவள் “சரி” என்றாள்...
”முதலில் நவகிரகங்களாக சொல்லபடும் அந்த கிரகங்களில் எத்தனை கிரகங்கள் என்று உனக்கு தெரியுமா??....”அதில் இருப்பது மொத்தம் ஐந்தே கோள்கள்தான்..சூரியன் (sun) ஒரு நட்சத்திரம்... சந்திரன் (moon)ஒரு துணைக்கோள்..ஆக இந்த இரண்டுமே கோள்கள் இல்லை..
“அதுக்கு அடுத்த படியாக மீதம் இருப்பது புதன் (mercury) ,சுக்ரன் (nevus),செவ்வாய் (mars),குரு (Jupiter),சனி (sat run) இவைகள்தான்....அது தவிர ராகு.. கேது...இதுவும் கோள்கள் இல்லை...
“நான் மேலே சொன்ன இந்த கோள்களை பற்றி சில விசயங்கள் தெரியுமா...இவைகள் நாம் சாதாரன கண்கள் கொண்டே பார்க்க முடியும்....அதாவது அதிகம் இருட்டான தெளிவான வானவெளியில் இவைகளை நாம் பார்க்கமுடியும்”....
“மேலும் இவகைளை முதன்முதலில் நாம் மட்டும் கண்டுபிடித்து வணங்க வில்லை..நமக்கு முன்னாடியே பாபிலோனியர்கள் இந்த முறையை பின்பற்றி வந்தார்கள்..அப்புறம் எகிப்தியர்கள்.. அப்படியே நாம்”..
“என்னை பொறுத்தவரை இதுக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை...ஏனென்றால் அப்படி கடவுள் இதுக்கு பின்னாடி இருந்து இந்த கோள்களை மனிதனுக்கு தெரியபடுத்த வேண்டும் என்று இருந்தால் மீதம் இருந்த இரண்டு கோள்களான யுரேனஸ் (Uranus), நேப்டுன் (Neptune) இதை ஏன் அவர்கள கண்டு பிடிக்கவில்லை”?..
“அது ஏன் என்றும் உனக்கு சொல்லுகிறேன்... இந்த இரண்டு கோள்களும் கொஞ்சம் மங்கலானவை மற்ற கோள்களைவிட.....நம்மில் இருந்து வெகு தூரத்தில் இருப்பவை....அதாவது சாதாரன கண்களால் பார்ப்பதை விட binocular வைத்தே இவற்றை இருண்டவான வெளியில் பார்க்க முடியும்”...
அவள் சற்று கோபமாக “அப்படி என்றால் இந்த நவகிரக கோள்கள் அனைத்தும் மனிதன் கண்களால் பார்த்து சொன்னதுதான் என்கின்றாயா?” என்றாள்..
அதுக்கு நான் ..”ஆமாம்... ..அது எப்படி என்றால் நிலையாக இருக்கும் வான நட்சத்திரங்களை பார்க்கும்போது சில மட்டும் நகர்வதை பார்த்து இருப்பார்கள்..அப்படியே தொடந்து கண்காணித்து வந்தால் அந்த நகரும் பொருள்கள் அனைத்துமே ஒரே கால இடைவெளியில் பார்வைக்கு வந்து போய் இருக்கும்...
"இந்த மாதிரி கண்ணால் பார்த்துதான் அதை மக்களுக்கு சொன்னார்கள்..ஆனால் அதை சொன்னதில் தவறு இல்லை..அதை ஏன் வழிபட சொன்னார்கள் என்றுதான் தெரியவில்லை..ஒருவேளை அவர்கள் வானத்தில் தெரியும் ஒருவிதமான அதிசயமாக அதை கருதி இருக்கலாம்"என்றேன்...
உடனே அவள் “சரி நீ சொலவது போல வைத்து கொண்டாலும் இந்த சனி கிரகம் மெதுவாக சுற்றுவதை அப்போதே எப்படி சனி பகவானுக்கு கால் ஊனம் என்று சொல்லி வைத்தார்கள” என்றாள்..
எனக்கு என்ன சொல்வதேன்றே தெரியவில்லை எப்படி எல்லாம் யோசிக்கிறாள் இவள்....
அதற்கு நான் ..”அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை..கோள்களுக்கு இடையே ஒளி மாறுதல்களை வைத்துதான் அவர்கள் வகை பிரித்து இருப்பார்கள்..அப்படி பிரித்து பார்க்கும் போது இந்த சனி கிரகம் மட்டும் மற்ற கிரகங்கள் சுற்றும் நேரத்தோடு ஒப்பிடும்போது..
கொஞ்சம் தாமதமாக தெரிந்து இருக்கலாம்”..
“உடனே மக்களுக்கு எளிதாக புரியவைக்க அதை ஊனம் என்று சொல்லி இருப்பார்கள்...அது எப்படி என்றால்..ஒரு சிறு குழந்தை உன்னிடம் அங்கு பழுது அடைந்து நிற்கும் ஒருவாகனத்தை பார்த்து கேக்கின்றது இதில் என்ன பிரச்சினை என்று”...
“அந்த வாகனத்தில் பற்சக்ரங்கள் கொஞ்சம் பிரச்சினை என்று உனக்கு தெரியும்..ஆனால் இதை எப்படி அந்த சிறு குழந்தைக்கு புரியவைப்பே...அந்த இடத்தில நீ சொல்வது அந்த வாகனம் ஓட்டை வாகனம் என்றுதான்...இதைகேட்ட அந்த குழந்தையும் சாந்தியடையும்...இதே காரணம்தான் அப்போதும் நிகழ்ந்து இருக்கலாம்...அப்போது இருந்த மக்களின் அறிவுத்திறனுக்கு ஏற்றபோல அப்படி சொல்லி இருப்பார்கள்” என்றேன்..
“அப்படி நீ சொல்வதை பார்த்தால் இப்போதும் நம் வெறும் கண்களால் இந்த ஐந்து கிரகங்களை பார்க்க முடியுமா என்ன?” என்றாள்
“கண்டிப்பாக பார்க்க முடியும்..என்ன அதற்கு தனி நேரம் இருக்கு அதுபடி நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும்” என்றேன்..
சரி ப்ளுடோ (Pluto) வும்தான் சூரியனை சுற்றிவருகிறது அதை ஏன் உன் அறிவியல் கோள்களின் வகையில் சேர்க்கவில்லை என்றாள்..
இதோ பார்..அதுவும் கோள்களின் பட்டியலில் இருந்தது...ஒவ்வொருவரும் குறைந்த இடைவெளியில் சிலவற்றை கண்டுபிடித்துகொண்டே இருந்ததால் எல்லோரும் சேர்ந்து கோள்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு வரைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்..அதன் படி பார்த்தால் இந்த ப்ளுடோ கோள்களின் பட்டியலில் இருந்து துரத்த படுகின்றது..என்றேன்..
அதற்கு அவள் "அப்படி என்ன வரைமுறை" என்றாள்
அதாவது கோள்கள் என்று சொன்னால் அது சூரியனை சுற்றி வரவேண்டும்..,அதன் உருவம் ஆனது...அது தனது ஈர்ப்பு விசையில் நிலையாக நிலைத்து இருக்கவேண்டும்,அதுவும் முடிந்தவரை கோளமாக, அடுத்து அது சூரியனை சுற்றும் பாதையில் தனக்கு அருகில் உள்ள எல்லாவற்றையும் தன்பால் இழுத்து அது செல்லும் பாதையை சுத்தமாக வைத்து இருக்கவேண்டும் அதாவது அது செல்வதற்கு உதவியாக....
இதுதான் ஒன்று கோள்களாக இருக்க காரணமான காரணிகள்..நீ சொல்லும் ப்ளுடோ இந்த மூன்றாம் விதியில் இருந்து விளகுகின்றது..ஏனென்றால் அதை சுற்றி asteroid belt போல ஒருவிதமான kuiper belt என்ற ஒன்றை அதை சுற்றி பெற்று இருப்பதால் அதை துரத்தி விட்டார்கள்..என்றேன்..
அவள் சற்று கோபமாக சரி உனக்கு இதன் மேல் நம்பிக்கை இல்லை என்றால் விடு நான் நம்பிகொள்கிறேன்..என்றாள்..
அதற்கு நான் "உன்னை நம்ப வேண்டாம் என்று சொல்லவில்லை..இல்லாத ஒன்றுக்கு ஏன் அதை நினைத்து நமது மனதை போட்டு கவலைபடுத்தவேண்டும்..நீ நன்றாக முயற்சி செய்தால் அந்த சனி கூட உன்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று அவளை சமாதானப்படுத்துவதற்காக சொன்னேன்.
அதற்கு அவள் "சனி இனிதான் என்னை பிடிக்கவேண்டும் என்று இல்லை அதான் மூன்று வருடம் முன்னாடியே பிடிச்சிரிச்சே இனி எதுக்கு இன்னொருதடவை பிடிக்க வேண்டும்" என்று கோபமாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்...
அவள் மூன்று வருடம் முன்னால் பிடித்த சனி என்று சொன்னது என்ன என்று எனக்கு புரிந்து இருந்தது.....