ஆனால்..

((உங்களுக்கு வைத்தி, புனி புதியவர்கள் என்றால் ஒரு அறிமுகம்..வைத்தி மிகப்பிரபலமான ஒரு மருத்துவர்..தனது மருத்துவமனையில் செய்ய முடியாதவற்றை தனது ஆய்வுகூடத்தில் செய்பவர்..அவருக்கு உதவியாக இருப்பவள் புனி எனும்  ஒரு மாணவி))



"புனி உனக்கு காதல் ஏதும் உண்டா?"

"எதுக்கு டாக்டர் திடிர்னு கேட்க்கிறிங்க?" என்றாள் கொஞ்சம் பயந்தபடி

   "இல்லை நான் பார்த்தவரையில் நீ நல்ல அறிவாளி பெண்ணாயிற்றே அதான் இந்த காதல் பேரிக்காய் செய்கிறாயா என கேட்டேன்" என்றார்

    தந்தை வயதுடையவர்..மிகபிரபலமான மருத்துவர் இந்த கேள்வியை கேட்டதால்... அவளுக்குள் உணமைய சொல்லவா? இல்லை பொய் சொல்லவா? என யோசித்து கொண்டு இருக்கும் போதே....

   ஆய்வுகூடத்தில் ஒருவன் நுழைந்தான்..நேராக அவர்கள் உட்கார்ந்து இடம் நோக்கி வந்தவன்..

"இங்கு வைத்தி என்பவர்?".

"நான்தான் என்னவேண்டும்"

"எனக்கு ஒரு பிரச்சினை"என்றான்

"என்ன?" கேட்டார் வைத்தி

    "இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறேன் ஆனால் அவள் என் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள்"

   "நான் ஒரு மருத்துவர் அதற்கு என்னால் என்ன செய்யமுடியும்" என்று சொனவர்..புனியை அது நீதானா என்பது போல பார்த்தார்..அவள் வேகமாக இல்லை என்பது போல தலையசைக்க..

   "அவள் பின்னாடி சுற்றியதுதான் மிச்சம்.... இதுவரை என்னிடம் எந்த ஒரு பதிலையும் சொன்னதில்லை..இனிமேலும் அவளை பின்தொடரவோ.. என் காதலை வற்புறுத்தவோ போவதில்லை" என்றான்

   "நான் திருமப்வும் கேட்கிறேன்..நான் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்கள்"

   "அவளின் நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை..அவளின் வீடுவேறு என்தெருவில் அமைந்து இருப்பதால் பார்க்காமலும் இருக்க முடியாது.......நிறையா கனவுகள்......வலிகள் எல்லாம் கொடுக்கிறாள் காதலை தவிர.....எனக்கு வேண்டியது அவளை பார்க்கும் போது எந்த ஒரு உணர்வும் வரகூடாது..அவள் சாதாரண பெண் என்பதைத்தவிர..அதற்கு நீங்கள் என்ன செய்தாலும் நான் தயார்" என்று வேகமாக சொல்லி முடித்தான்...

    "ஏன் உலகத்தில் அவள் ஒருத்திதான் பெண்ணா? அவளை விட்டுவிட்டு வேறு யாரையாச்சும் கதாலிக்கலமே"

    "காதல் பற்றி உங்களுக்கு தெரியாது..அது ஒருவள் மேல் ஒரு தடவைதான் வரும் ..அது எனக்கு இப்போது வந்து இருக்கிறது ஆனால் அவள் மறுக்கிறாள்" என்றான்

    "அந்த ஹோர்மோன் விளையாட்டை பற்றி எனக்கு நல்லா தெரியும்....சரி இதுக்கு என்னை எந்தவிதத்தில்  நம்புகிறீர்கள்?"

   "நீங்கள் புதியவற்றை செய்வதில் திறமையானவர் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.".என்றான்

    "சரி அவளை முழுவதும் மறக்க வேண்டுமா? இல்லை அவளை பார்க்கும்போது வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உருளுமே அந்த உருளை மட்டும் உருள வேண்டாமா?"

"அந்த உருளை உருள வேண்டாம்" என்றான்

"அவளது புகைப்படம் இருக்கா?"

    "இப்போது இல்லை...நாளைக்கு எடுத்து வருகிறேன்..இப்போது இது சாத்தியமா என்று மட்டும் சொல்லுங்கள் நிம்மதியாக தூங்குவேன்"என்றான்

    "இது சாத்தியம் தான்.....நீங்கள் இனிமேல் அந்த பெண்ணை பார்க்கும்போது பழைய காதல் உணர்வுகள் ஏதும் தோன்றது.....இதற்கு பிறகு அவளை காதலிக்காமல் இருக்கும்வரை....மீண்டும் அவளின் பின் சுற்றி கர்ச்சிப் பிறக்கி காதல் வளர்த்தால் நான் பொறுப்பில்லை" என்றார்

    "இல்லை கண்டிப்பாக செய்ய மாட்டேன்.....நாளை புகைப்படத்தோடு வருகிறேன்"" என்று சொல்லிவிட்டு கிளம்பினான

" எப்படி இது சாத்தியம்?" கேட்டாள் புனி

    "கொஞ்சம் சிக்கலானது..காதல் எல்லாம் ஹோர்மோன் விசயம்தானே..அதே முறையில்தான் இதையும் செய்ய வேண்டும்" என்றார்

    "இதுமட்டும் சாத்தியம் என்றால் காதலுக்காக தற்கொலை,தாடிவளர்ப்பது, உருகி உருகி கவிதை எழுதுவது இல்லாமல் போயிடுமே"

"பாப்போம் முதல் முயற்சி."என்றார்

"எப்படி செய்ய போகிறீர்கள்?"

     "உனக்கு தெரியும் நமது பார்வை மண்டலம் எப்படி வேலை செய்கின்றது என்று.....முதலில் பிம்பம் நமது கண்ணில் படும்போது retina வில் இருக்கும் rod மற்றும் cone போன்ற photoreceptor செல்கள் வழியாக உணரப்பட்டு பின் இந்த rod,cone தான் உணரும் பிமப்ங்களுக்கு ஏற்றவாறு ஒருவிதமான glutamate எனும் அமினோ அமிலம் அளவில் கூடும....இதுதான் rod, cone ல் இருந்து தகவல்களை bipolar செல்களுக்கு கொடுக்கும் ... பின் அது ganglion செல்கள் வழியாக மூளைக்கு செல்கின்றது...

     இப்போது அவன் காதலியின் புகைப்படத்தை பார்க்கும்போது அவனுக்குள்  இந்த glutamate அமிலத்தின் சுரக்கும் அளவு அதான் தன்மை போன்றவற்றை தெரிந்துகொண்டு பின் அதை நாம் செயற்கையாக மாற்றினால் மூளைக்கு போகும் தகவலும் மாறும்..அவன் அந்த பெண்ணை பார்ப்பான் ஆனால் தெரிவது அவனது பழைய காதலி இல்லை.....ஏனென்றால் அந்த காதல எண்ணம் ஏற்பட ஆதாரம் இந்த தகவல்கள்தான்.....அதை நாம் மாற்றுவதால் அவனுக்கு அந்த காதல் உணர்ச்சிகள் இருக்காது...

    அதே நேரத்தில் அந்த புகைபடத்தில் இருப்பது சாதாரண பெண் என்பதை மட்டும் அவனது மூளை உணரும்..அவ்வளவுதான் விசயம்..அதற்கு பிறகு இவன் அந்த பெண்ணை எத்தனை முறை பார்த்தாலும் காதல இல்லை.. இவன் இன்னொருமுறை அவளை காதலிக்க ஆரம்பிக்காத வரையில்"

     "விழியில் விழுந்து இதயம் நுழைந்த உறவே என்ற காதலின் அடிப்படையை கொஞ்சம் மாற்றபோகிறீர்கள் அப்படித்தானே" என்றாள்

    "ஆமாம் இதில் விழியில் விழுவது ஒன்று இதயம் நுழைவது ஒன்று" என்றார் சிரித்துகொண்டே

     புகைபடத்தை பார்த்த வைத்தி அவனை ஒரு நாற்காலியில் உட்காரவைத்துவிட்டு அவனின் எதிர்புறத்தில் அந்த புகைபடத்தை தெரியுமாறு அமைத்தார்..அதற்குள் புணி அவனது தலையில் வயர்கள் கொண்டு பல இணைப்புகளை கணினியோடு இணைத்து இருந்தாள்...

    "இப்போது அந்த புகைப்படத்தை எப்போதும் பார்ப்பது போல பாருங்கள்" என்றார்

     புனி சில அளவுகளை குறித்துகொண்டாள்..அடுத்துவந்த சில மணிநேரத்தில் வைத்தியின் முயற்சியில் அவனுக்கு அவளின் புகைப்படம் பார்க்கும்போது சுரக்கும் அமிலத்தின் அளவில்,தன்மையில் மாற்றம் செய்து இருந்தார்கள்...

   அவன் அங்கு இருந்து வெளியில் வந்து வீடு திரும்பும் அதே நேரத்தில் அவனது தெருமுனையில்...இரண்டு பெண்கள்..

    "அவனை இவ்வளவு நாள் சுத்தவிட்டுட்டு இப்பபோய் உன் காதலை சொன்னால் அவன் சம்மதிப்பானா என்ன? என்றாள் ஒருவள்

   "படிக்கின்ற காலத்தில் காதல் பேரிக்காய் என்று சுற்றினால் சரியாக படிக்கமுடியாது என்பதற்காகத்தான் என் காதலை மறைத்தேன் என்பதை அவனிடம் சொல்வேன்" என்றாள் அவனின் முன்னால் காதலி

   அவன் தூரத்தில்  வருவதை பார்த்தவுடன் அவள் கண்களில் காதல்,முகத்தில் ஒருவித புரியாத வெட்கம்....

   அருகில் நெருங்கி வருவதை பார்த்தாள்...எப்படி ஆரம்பிப்பது..அவனை நிறையாமுறை தவிர்த்து இருக்கிறோம்..என்ற தவிப்பில்..... அவனே வழக்கம் போல வந்து பேசினால் சொல்லிவிடவேண்டுமென்று நினைக்கையில் ...அருகில வந்தான்...பார்த்தான்...

ஆனால்..




(இதில்  கண் செயல்படும்விதம சரியானது...அதில் செய்யும் மாற்றம் என் கற்ப்பனை))

16 comments:

ஆனந்தி.. said...

பின்னிட்ட கணேஷ்...என்ன ஒரு கற்பனை..:)

கணேஷ் said...

நன்றிக்கா)

ஆனந்தி.. said...

retina வழியாக ஊடுருவும் போது சுரக்கும் அமிலத்தை குறைக்கிறது பத்தி எல்லாம் உன் கற்பனை கொஞ்சம் ஓவர் தான்...ஆனாலும் ரசிக்கிற மாதிரி தான் இருந்தது...நல்லா ரசிச்சு படிச்சேன்...அந்த லிங்க் facebook இல் நீ கொடுக்கும்போதே படிச்சேன்...பட் இப்ப ஏன் னு தெளிவா புரிஞ்சுருச்சு...:)))

கணேஷ் said...

அப்பா ...ஒருவழியா உங்களுக்கு புரிஞ்சிரிச்சே அது போதும்))))

ஆனந்தி.. said...

நான் உன் சகோதரி..ஸோ புரிஞ்சே தான் ஆகும்..:))))

கணேஷ் said...

இல்லையே..எழுதிவிட்டு திரும்பி படித்து பார்த்தேன் மற்ற கதைகள் எப்படி எனக்கு புரிவதில்லையோ அதே மாதிரி இதுவும் எனக்கு புரியவே இல்லையே))))

ஆனந்தி.. said...

ஓகே..ஓகே...உனக்கு அந்த அமிலம் கம்மி ஆயருச்சோ:))))))))))))))

கணேஷ் said...

இப்போ நம்புறேன் உங்களுக்கு கதை புரிஞ்சு இருக்கு))))

Angel said...

Ganesh this is my first visit ,aaaannaaaalum "aaaanaaal" enakku romba pidichirukku


very nice.
wish you a happy prosperous 2011.

கணேஷ் said...

angelin said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

நன்றி

Ramesh said...

அருமையா எழுதறீங்க கனேஷ் வாழ்த்துக்கள்...

வித்தியாசமான தகவல்களோட கதையை அமைச்சிருக்கறது இன்னும் நல்லாருக்குங்க..

//திடிர்னு கேட்க்கிறிங்க?" 'என்றால்'// இல்லைங்க 'என்றாள்'

கணேஷ் said...

பிரியமுடன் ரமேஷ் said.//

கருத்துக்கு நன்றி..பிழையை திருத்திவிட்டேன்..

கவிநா... said...

ஐயோ, கணேஷ், வைத்தியோட முயற்சி வெற்றியா, தோல்வியானு சொல்லவே இல்லையே!!? "ஆனால்"னு இழுக்கிறதைப் பார்த்தா வெற்றிதான்னு நினைக்கிறேன்.

சூப்பர் கதைங்க கணேஷ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான கற்பனை கணேஷ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆனால்......... ஆனால்...... கண்களில் இருந்து மூளைக்கு போகும் கணத்தில் காதல் உணர்வு வரலைன்னாலும், அந்த இமேஜை மூளை ப்ராசஸ் செய்து பழைய மெமரியை தட்டி எடுத்துவிடாதா?

கணேஷ் said...

இந்த glutamate அமிலத்தின் சுரக்கும் அளவு அதான் தன்மை போன்றவற்றை தெரிந்துகொண்டு பின் அதை நாம் செயற்கையாக மாற்றினால் மூளைக்கு போகும் தகவலும் மாறும்.///

தகவலே மாறிவிடுவதால் அந்த பெண்தான் இவள் என்று மூளைக்குதெரிவதுக்கு வாய்ப்பு இல்லையே)))))