ஐன்ஸ்டீன் பா


  படிக்கின்ற காலத்தில் செய்யுள் பகுதியில் வரும் பாக்களை மதிப்பெண்களுக்காக கூட மனப்பாடம் செய்து எழுதியதில்லை...காரணம் மனப்பாடம் செய்ய கஷ்டம ....  மேலும் என் தமிழ் ஆசிரியர் இந்த பா வில் மட்டும் எழுத்துப்பிழை இருந்தால் அதிக மதிப்பெண் குறைப்பார்...ஒரு பாவுக்கு நான்கு மதிப்பெண் என நினைக்கிறேன்...


  அதனால் அந்த இடத்தை காலியாக விடுவதே என் வழக்கம்.....திருக்குறள் மட்டும் மனப்பாடம் செய்ததை எழுதுவேன்.....செய்யுள் பகுதியில் எனக்கு சிக்கலானது இந்த இரண்டுதான்....


   மற்றவர்கள் எழுதிய கவிதைகளை படிக்கும்போது  எப்படி இவர்காளால் மட்டும் எழுத முடிகின்றது என்று யோசித்திருக்கிறேன்...... சில கவிதைகள் எழுத முயற்சி செய்து எழுதியதை கிழித்த கடிதங்கள் என்ற தலைப்பில் எழுதினேன்...

   அடுத்த ஆர்வம் பா வின் மீது....அடிப்படை மட்டும் தெரியும்...முழு இலக்கணம் தெரியாது கற்கவேண்டும்...இந்த நிலையில் எழுதியதுதான் இது...எழுத ஏதும் அல்லது யாரும் கிடைக்கவில்லை என்றால் நான் கையில் எடுப்பது என் கற்பனைகாதலி அல்லது ஐன்ஸ்டீன..இருவரில் ஒருவரைத்தான்...இப்போது ஐன்ஸ்டீன்...


ஒளிதனை அறிவுப் பார்வையால் கூறுபோட்டாய்

வெளிதனை கற்பனையில் உருவம் காட்டினாய்

மண்ணில் இதுவரை யாரும் இல்லை

உனைப்போல் உயர்வாய் ஐன்ஸ்டீனே..


******



விண்ணியலை வளர்த்தாய் வியப்பூட்டும் உன்னறிவால்

உன்  விதிகளன்றி  ஏதுமிங்கு விளங்குவதில்லை.

இன்று மண்ணிலுள்ளோர் விண்ணை நோக்குவது

உன் பார்வையன்றி வேறொன்றுமில்லை



   மற்ற புனைவு கதைகள் எழுதும்போது நேரடியாகவே தட்டச்சு செய்துவிடுவேன்...ஆனால்  கவிதைகள் எழுதும்போது அது முடிவதில்லை...யோசிக்க வேண்டியதுள்ளது.....அப்படி பேனாவை கடித்து துப்பி எழுதிய சில கவிதைகள்...


மனதிலுள்ள உயிர்கவிதைகளை

உன் விழிகண்டு எழுத நினைத்தேன் ஆனால்

வெட்கம் எனும் இமைகொண்டு

மறைக்கின்றாய் ஒவ்வொறு முறையும்..

*******

கொஞ்சம் மனதைவிட்டு இறங்கிகொள்

என் துக்கத்தால் சிறிது நேரம்

அழுது கொள்கிறேன்


*********

ஏனென்று காரணம் தேடுகிறேன் உன்

விழி பாராமல் என்னால்

கவிதைகள் எழுத முடியாமைக்கு..


12 comments:

ஆனந்தி.. said...

So..Atlast..U have tried this "பா" also..:)))) good..:))

ஆனந்தி.. said...

கணேஷ்...கலக்கல்...இலக்கியமும் விட்டு வைக்கலையா..ப்ளீஸ் அதை விட்டுரு..அது பொழச்சுட்டு போகட்டுமே..:))

கணேஷ் said...

ஆனந்தி.. said...//

இல்லைக்கா...கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமே என்ன ஆகுதுன்னு...))))

VELU.G said...

கலக்கிட்டீங்க பாஸ்

//விண்ணியலை வளர்த்தாய் வியப்பூட்டும் உன்னறிவால்
உன் விதிகளன்றி ஏதுமிங்கு விளங்குவதில்லை.
இன்று மண்ணிலுள்ளோர் விண்ணை நோக்குவது
உன் பார்வையன்றி வேறொன்றுமில்லை
//

நடுவில

உன் விதிகள் ஏதுமிங்கு விளங்குவதில்லை.

அப்படின்னு படிச்சுட்டு கொஞ்சம் தடுமாறிட்டேன். அவ்வளவுதான்

superங்க

கணேஷ் said...

VELU.G said... ///

உன் விதிகள் ஏதுமிங்கு விளங்குவதில்லை.
//

நான் எப்படி சொல்லுவேன் இப்படி)))

கருத்துக்கு நன்றி..

test said...

சுஜாதா வழியில் கவிதை? தொடர்ந்து எழுதுங்க! :-)
கவிதை என்றாலே...காதல்! அதுக்கு ஒரு டெம்ப்ளேட்!
அதுவும் அன்பே, ஆருயிரே என்று ஆரம்பித்து,
அப்படிச்செய்து விட்டாய், இப்படிச் செய்து விட்டாய்...
நான் அப்பிடி ஆயிட்டேன், இப்பிடி ஆயிட்டேன்..
ன்று விளக்கம் கொடுத்து, அப்புறம் ஏன்? அல்லது காத்திருக்கிறேன்!
அதற்குப் பின்னூட்டம் - கவிதைல இருந்து 2 வரிய copy பண்ணி போட்டுட்டு,
அருமையான வரிகள்!, ஆழமான சிந்தனை!
- முடியல கணேஷ்!

கணேஷ் said...

ஜீ... said... //

என்னங்க இப்ப என்னை கவிதை எழுதுன்னு சொல்றிங்களா இல்லை வேண்டாம்னு சொல்றிங்களா??குழப்பமா இருக்கு..)))))

கருத்துக்கு நன்றி..

ஆமினா said...

சேம் பின்ச்

எனக்கும் செய்யுள் திருக்குறளுக்கும் ஆகாது :(

கணேஷ் said...

ஆமினா said...

சேம் பின்ச்

எனக்கும் செய்யுள் திருக்குறளுக்கும் ஆகாது///

ஒன்னும் பிரச்சினை இல்லை..அதை இப்போ எழுத முயற்சி பண்ணுங்க)))

Kousalya Raj said...

பா என்று சொன்னதும் அமிதாப் நடிச்ச 'பா' படம் பத்திய விமர்சனம் என்று நினைத்தேன்...

அடடா இது இலக்கியம் அன்றோ
என்றே படித்தேன் !
அறிவியல் இடத்தில் வெண்பா
என்றே வியந்தேன் !
பின் உணர்ந்தேன்....
கொஞ்சம் குழம்பினேன்
பின் தெளிந்தேன்....

காயத்ரி என்னை காப்பாற்று...!!!?

கணேஷ் said...

Kousalya said...

கொஞ்சம் குழம்பினேன்//

இதை நம்புகிறேன்...

பின் தெளிந்தேன்....///

இதை நான் நம்புவது கஷ்டம...காயத்திரி வந்து சொன்னால்கூட)))))

(என் பா வை படித்துவிட்டு போனவங்க என்ன ஆனாங்கண்ணு தெரியல அதை முதல்ல பாருங்க)))))

Anonymous said...

நல்லா இருக்கு பா...