உண்மையில்...

     என்னைத்தேடிவந்த மூவரில் ஒருவர் என்னவளின் அப்பா.....மற்ற இருவர் ஊரில் உள்ள பெரியவர்கள்...வீட்டிற்குள் இருந்து வரும்போதே வெளியில் நின்று இருந்தவர்களை பார்த்தவுடன் பயம் தொற்றி கொண்டது..


      விடுமுறைக்கு வந்ததில்.... நேற்றுதான் யாருக்கும் தெரியாமல் நாங்கள் சந்தித்து பேசினோம்...நிறையா விசயங்கள் சொன்னாள்..அவளின் கண்களில் காதல் அதிகமாய் இருந்தது... அதே எண்ணத்தில் அன்றைய இரவு தூக்கத்தில் என் பெயரை சொல்லி ஏதாவது உளறி இருப்பாள்..அந்த விசயமாகத்தான் அவளது அப்பா  ஊர் பெரியவர்களை அழைத்து வந்து இருக்கிறார் என்பதே என் பயத்தின் காரணம்....


      நல விசாரிப்புகளுக்கு பின் "எங்களோடு கொஞ்சம் வரமுடியுமா?" என்று கேட்டார்கள்...கொஞ்சம் மனம் நிம்மதி .....நல்லவேளை காதல விசயம் இல்லை.."வருகிறேன்" என்று சொல்லி அவர்களோடு நடக்க ஆரம்பித்தேன்....


     போகிற வழியில் கேட்டார்கள்..."நீ சங்கேத பாசை அலலது மறைத்து எழுதுதல் (encryption) முறையில் கதைகள் எழுதிகின்றாயமே?"


      "அது எப்படி உங்களுக்கு தெரியும்..... ஆமாம் சும்மா  கற்ப்பனை செய்து எழுதுகிறேன்" என்றேன்


      "அதே மாதிரி சங்கேத எழுத்துக்கள் அடங்கிய ஒன்று நமது ஊரிலும் இருக்கின்றது இதுவரை யாரும் அதை முயற்சிக்கவில்லை நீ முயற்சித்து பாரேன்" என்றார்கள்


      "நான் எழுதுகின்ற கதைகளில் அந்த எழுத்துக்களை அமைப்பதும்,அதை விடுவிப்பதும் என கற்பனையே..ஆனால் ஒரு உணமையான ஒன்றை என்னால் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை" என்றேன்


"இல்லை ஒருமுறை முயற்சி செய்துதான் பாரேன" என்றார்கள்..


"சரி எங்கு இருக்கின்றது" என்றேன்..



"நம்ம ஊர் சிவன் கோயிலில் ஒரு அறை கதவு மூடி இருக்கு அதை திறக்க வேண்டும்"


      போகின்ற வழியில் என்னவள் திண்ணையில் உட்கார்ந்து இருந்தாள்....அந்த இடத்தை கடக்கும்போது அவளை பார்த்தேன்...என்னை கண்டுகொள்ளவே இல்லை...யரோ போகிறார்கள் என்று திரும்பி உட்கார்ந்து இருந்தாள்...அடிப்பாவி... எப்படி எல்லாம்  நடிக்கிறாள் என்று நினைத்துகொண்டேன்


      கோயிலுக்கு போய் ஆறு ஏழு வருடங்கள் ஆகி இருந்தது...எந்த கோயிலுக்கும் போனதில்லை...விருப்பமில்லை அந்த சிவன் கோயில்  கோபுரங்கள் கொண்ட பெரிய  கோயில்..


     உள்ளே ஒரு மூலையில் அந்த கதவு இருந்தது...ஒரு சிறிய அறைக்கு சொந்தமானது ..முழுவதும் ஒரு கல்லால் செய்து இருந்தார்கள்...அதில் சில தமிழ் எழுத்துக்கள் வரிசையாக இல்லாமல் கோணலாக எழுதபட்டு இருந்தது......அந்த எழுத்துக்களுக்கு மேல் இரண்டு காலடி தடங்கள் ....பள்ளமாக செதுக்கப்பட்டு இருந்தது ... அது சாதாரண மனிதனுடையது.......அதில் இருந்த எழுத்துக்கள்


த ம் ள் உ க சு ள ப மி ச ம தி வு உ அ க பூ பொ ன் ந ம் தி ப ம கெ ச சு மி றி கி


இதை பார்த்தபிறகு பின்னாடி நின்று இருந்தவர்களை பார்த்தேன்...


"என்ன முடியுமா?" என்றார்கள்


"கொஞ்ச நேரம் ஆகும் முயற்சி செய்கிறேன்" என்றேன்


"சரி" என்று வெளியில் சென்று விட்டார்கள்..


     அந்த எழுத்துக்களை ஒரு முறை பார்த்தேன் அதைவைத்து ஒரு வார்த்தைக்கு பதில் நிறையா வார்த்தைகள் அமைக்கும் வாய்ப்புகள் இருந்தன.....அப்படி அமைத்தாலும் அதை வைத்து எப்படி திறப்பது..கதவில் இருப்பது வெறும் ஒரு ஜோடி காலடி தடங்கள மட்டுமே.....மற்ற படி எல்லாமே சமபரப்பு...


       பொதுவாக சங்கேத பாசை என்றால் விசயத்தை முழுமையாக மறைத்து வைத்து இருக்க வேண்டும் அல்லது அதை குறிப்பால் உணர்த்தவேண்டும் ..இந்த இரண்டை தவிர வேறு எந்த முறையிலும் அமைக்க முடியாது


      இந்த எழுத்துக்களை பார்க்கும்போது இரண்டாம் வகை...எதையோ உணர்த்துகின்றது...அந்த எழுத்துக்களில் விசயம் இல்லை..ஆனால் அந்த எழுத்துக்கள் உணர்த்துகின்றன...


      அந்த இரண்டு காலடித்தடம்...ஒரு வேலை மனிதனின் காலை அங்கு வைத்தால் திறக்குமோ..அப்படி என்றால் இந்த எழுத்துக்கள் எதுக்கு....அந்த இரண்டு காலடிகளுக்கும் எழுத்துக்கும் தொடர்பு உண்டு....


       காலடி சம்பந்தமான விசயங்களை அந்த எழுத்துக்களோடு சேர்த்துபர்த்தேன்...பாதம்,அடி,ஈரடி,கால்..போன்ற வார்த்தைகள்...எதுவும் சேரவில்லை...அந்த எழுத்துக்கள் எப்படி கதவை திறக்க வேண்டும் எனபதை  சொல்கிறது...அந்த எழுத்தை வைத்து திறக்க முடியாது என்பது எனக்கு புரிந்து இருந்தது ....


     அந்த இரண்டு அடிகள்,சில எழுத்துக்கள் மட்டும்தான்  என் மனதில்.....இந்த இரண்டையும் எப்படி சேர்ப்பது...


      அந்த இரண்டு அடிகள் அல்லது ஈரடி...ஒருவேளை அந்த எழுத்துக்களை ஈரடிமான எண் வரிசையில் அமைத்தால்...பார்த்தேன்...ஆச்சர்யம் அதில் வரும் எழுத்துக்களில் முதல்  எழுத்தை  பார்த்தால் ஒரு அர்த்தம் கொடுத்தது......மற்ற எழுத்துக்கள் கொடுக்க வில்லை.....


த ம் ள் உ க சு ள ப மி ச ம தி வு உ அ க பூ பொ ன் ந ம் தி ப ம கெ ச சு மி றி கி   
இதை அமைத்தால் ....


ம்


ள் உ க சு


ப மி ச ம தி


வு உ அ க பூ பொ ன் ந


ம் தி   ப  ம கெ   ச  சு  மி  றி  கி




     கிடைத்த வார்த்தை "தள்ளவும்"  அப்படிஎன்றால் இந்த கதவுக்கு ஒரு பூட்டும் இல்லை..சும்மா தள்ளினலே திறக்கும்...இதைத்தான் இவ்வளவு நாள் செய்யாமல் இருந்து இருக்கிறார்கள்..கடவுள் விசயம் என்றாலே எதையும் யோசிக்காமலேயே முரட்டு தனமாக பின்பற்றுபவர்கள இதை செய்து இருக்க  வாய்ப்பு இல்லை...


வெளியில் வந்தேன்...ஆர்வமாக கேட்டார்கள் "என்ன விடை கிடைத்ததா?"


    அது சும்மா தள்ளினாலே திறக்கும் என்று சொல்ல மனம் வரவில்லை...காரணம் என்னவளின் அப்பா வேறு இருந்தார்..இப்போது எனது திறமையை நிரூபித்தால் பின்னாளில் காதலுக்கு உதவும் என்று எண்ணி...


"அதை நான் திறந்துவிட்டேன் போய் தள்ளுங்கள் திறக்கும்" என்றேன்
போய் தள்ளினார்கள் அந்த பாறை கதவு பின்னோக்கி நகர்ந்தது

10 comments:

Unknown said...

//அது சும்மா தள்ளினாலே திறக்கும் என்று சொல்ல மனம் வரவில்லை...காரணம் என்னவளின் அப்பா வேறு இருந்தார்//
:-)
super! wishes!!

கணேஷ் said...

ஜீ... said...

//அது சும்மா தள்ளினாலே திறக்கும் என்று சொல்ல மனம் வரவில்லை...காரணம் என்னவளின் அப்பா வேறு இருந்தார்//
:-)
super! wishes!!////


ஹ ஹ ..கதையின் தலைப்பை தவிர அதில் ஏதும் உண்மை இல்லை எல்லாமே கற்ப்பனை))))

நன்றி

Unknown said...

ஆகா! நான் வாழ்த்துச் சொன்னது உங்கள் கதை எழுதும் திறமைக்குத்தான்! வேற ஒன்றுக்கும் இல்லை! :-))

கணேஷ் said...

ஜீ... said...

ஆகா! நான் வாழ்த்துச் சொன்னது உங்கள் கதை எழுதும் திறமைக்குத்தான்! வேற ஒன்றுக்கும் இல்லை! :-))///

அப்படியா..நீங்கள் சுட்டிக்காட்டிய வரிகள் அப்படி..நான் வேறு மாதிரி யோசித்தேன்)))))

KANA VARO said...

அட! விட்டு தள்ளுங்க... கதவை... கதை அருமை சகா...

கணேஷ் said...

KANA VARO said...

அட! விட்டு தள்ளுங்க... கதவை... கதை அருமை சகா...///


நன்றி..

Philosophy Prabhakaran said...

// எப்படி எல்லாம் நடக்கிறாள் என்று நினைத்துகொண்டேன் //
நடிக்கிறாள்...

Philosophy Prabhakaran said...

// எப்படி எல்லாம் நடக்கிறாள் என்று நினைத்துகொண்டேன் //
நடிக்கிறாள்...

உங்களுடைய கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் வரி விடாமல் படித்தேன்... அதனால் தான் சின்ன எழுத்துப்பிழை கூட சுலபமாக கண்ணில் தெரிந்துவிட்டது...

கணேஷ் said...

philosophy prabhakaran said...

// எப்படி எல்லாம் நடக்கிறாள் என்று நினைத்துகொண்டேன் //
நடிக்கிறாள்...

உங்களுடைய கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் வரி விடாமல் படித்தேன்... அதனால் தான் சின்ன எழுத்துப்பிழை கூட சுலபமாக கண்ணில் தெரிந்துவிட்டது...///


மிக்க நன்றி..
திருத்திவிட்டேன்...

ஆனந்தி.. said...

ok ok...rightttttttt...:)))