கிழித்த கடிதங்கள்...1

உன் விழிகளால் நீ
இதயத்தில் வரைந்த
காதல் கோலங்களை
கவிதைகளாய் மாற்றி எழுதினேன்..

எழுதிமுடித்த அடுத்தகணமே
எழுத்துக்கள் அனைத்தும்
செத்துவிழுந்தன என்ன
காரணம் என்று தெரியாமல் நான்.

கேட்டேன் எழுத்திடம் காரணம்
எந்த விழிகளால்  - நீ
கவிதைகள் எழுதினாயோ அதே
விழிகள் படித்தால்  நாங்கள்
உயிர்பெறுவோம்  என்றன

இதோ இந்த கவிதை உயிர்பெற்றது நீ
இதை படித்த வேளையில்...

  இதை படித்து முடித்தவுடன் என்னை முறைத்து பார்த்தபடி என்ன இது? என்றாள்

கவிதைஎன்றேன்

நான் உன்னிடம் என்ன சொன்னேன் என்றாள்

   “அறிவியல் கலக்காமல் நம் காதலை பற்றி ஒரு கவிதை எழுத சொன்னேஎன்றேன்

இதுலதான் அறிவியல் இருக்கே என்றாள்


இல்லையே நான் அப்படி எழுதவில்லையே என்றேன்


இதோ இந்த கவிதை உயிர்பெற்றது நீ
இதை படித்த வேலையில்...


இதில் நீ சொல்லி இருப்பது என்ன?

    “உன் பார்வை பட்டதும் நான் எழுதிய கவிதைகள் உயிர்பெற்றதை எழுதி இருக்கிறேன் என்றேன்


     “அப்ப என் கண்ணில் இருந்து போட்டோன் துகளா வருது...அது போய் எலெக்ட்ரானை தாக்கி தள்ளி அதன் மூலம் மின்சாரத்தை உண்டுபண்ணி உயிர் கொடுக்க? என்றாள்

    “நான் அந்த அர்த்தத்தில் இப்படி எழுதவில்லை..நீதான் கற்பனை செய்து கொள்கிறாய் என்றேன்

     “எனக்கு தெரியும் இந்த கவிதை photoelectric effect சம்பந்தமான அர்த்தத்தில்தன் இருக்கு.....அதுவும் இல்லாம..... இது ஐன்ஸ்டீன் கண்டுபிடிச்சது..அதை வச்சுத்தான் நீ இதை எழுதி இருக்கே என்றாள்


    நான்  photoelectric ஐ சம்பந்தபடுத்தி கவிதையை எழுதவில்லை என்பதை அவளுக்கு எப்படி புரியவைக்க போகிறேன் என்று யோசித்து கொண்டு இருக்கும்போது...


     “எல்லோரும் நாய்க்கு, கரப்பான் பூசசிக்கு எல்லாம் என்ன அழகா இலக்கிய கவிதை எழுதறாங்க...ஆனா நீ எனக்கு ஒரு காதல் கவிதை எழுத சொன்னா அதுலேயும் அறிவியல் கலந்து எழுதறே என்று சொல்லி அதை கிழித்து போட்டுவிட்டு கோபமாக கிளம்பி சென்றாள்.




16 comments:

சௌந்தர் said...

எழுதிமுடித்த அடுத்தகணமே
எழுத்துக்கள் அனைத்தும்
செத்துவிழுந்தன – என்ன
காரணம் என்று தெரியாமல் நான்////

நல்ல பேனா வங்கி எழுது

“எல்லோரும் நாய்க்கு, கரப்பான் பூசசிக்கு எல்லாம் என்ன அழகா இலக்கிய கவிதை எழுதறாங்க...ஆனா நீ எனக்கு ஒரு காதல் கவிதை எழுத சொன்னா அதுலேயும் அறிவியல் கலந்து எழுதறே” என்று சொல்லி அதை கிழித்து போட்டுவிட்டு கோபமாக கிளம்பி சென்றாள்.////

அடிக்கலையா ரெண்டு போட்டு இருக்கணும்

கணேஷ் said...

அடிக்கலையா ரெண்டு போட்டு இருக்கணும்....

அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா என்ன?)))

Kousalya Raj said...

கவிதை எப்படி கணேஷ் தளத்தில் என்று ஒரு சந்தேகத்தில் தான் படித்தேன்...ம்..அதுதானே .....!!

அழகான கவிதை.....

கணேஷ் said...

Kousalya said...

கவிதை எப்படி கணேஷ் தளத்தில் என்று ஒரு சந்தேகத்தில் தான் படித்தேன்...ம்..அதுதானே .....!!

அழகான கவிதை.........////

அதானே கவிதை எங்கே இருக்கு இங்கே)))))

நன்றி sis...

test said...

பார்ரா கவிதைலயுமா? நல்ல இருக்கு! :-)

கணேஷ் said...

ஜீ... said...

பார்ரா கவிதைலயுமா? நல்ல இருக்கு! :-)///

நன்றி)))

கவிநா... said...

பாவம்ங்க நீங்க..!!!

--
அன்புடன்
கவிநா...

கணேஷ் said...

கவிநா... said...

பாவம்ங்க நீங்க..!!!

--
அன்புடன்
கவிநா...//


எதுக்குங்க..எல்லாம கற்பனைதான்..

கற்பனை காசா பணமா??)))))

ஆனந்தி.. said...

கணேஷ்...கவிதை சூப்பர் ஆ இருக்கு...ஒரு பதிவில் அறிவியல் கலக்காத கவிதை கூட போட ட்ரை பண்ணேன்...சரி அதை விடு...கவிதையிலும் அறிவியல்...கதையில் வரும் காதலியும் அறிவியல் பேசுறாள்...அறிவியலை சிந்திக்கிறாள்...என்னமோ கலக்கலா நடத்து போ....சூப்பர் சகோதரா...!!!

கணேஷ் said...

ஆனந்தி.. said...

கணேஷ்...கவிதை சூப்பர் ஆ இருக்கு...ஒரு பதிவில் அறிவியல் கலக்காத கவிதை கூட போட ட்ரை பண்ணேன்...சரி அதை விடு...கவிதையிலும் அறிவியல்...கதையில் வரும் காதலியும் அறிவியல் பேசுறாள்...அறிவியலை சிந்திக்கிறாள்...என்னமோ கலக்கலா நடத்து போ....சூப்பர் சகோதரா...!!!
////////

இது கற்பனை..உணமையில் காதலர்கள் சந்திக்கும்போது அறிவியல் பேசினால்..நம்ம நாடு எங்கேயோ போய்டும்)))

நன்றி சிஸ்

கருடன் said...

ப்ளீஸ் நான் ஒன்னும் சொல்லவில்லை. இல்லை வேண்டாம்... கவிதை பார்த்தாலே நக்கல் பண்ண தோனுதுபா.... :(

எஸ்.கே said...

அருமையான கவிதை! அதன் தொடர்ச்சியின் முடிவுதான்! பாவம்!
Better luck next time!:-)

கணேஷ் said...

TERROR-PANDIYAN(VAS) said...

ப்ளீஸ் நான் ஒன்னும் சொல்லவில்லை. இல்லை வேண்டாம்... கவிதை பார்த்தாலே நக்கல் பண்ண தோனுதுபா.... :(
///

அதுக்கு என்ன இப்ப இங்கதான் கவிதையே போடலையே பின என்ன உங்களுக்கு பிரச்சினை))))

கணேஷ் said...

எஸ்.கே said...

அருமையான கவிதை! அதன் தொடர்ச்சியின் முடிவுதான்! பாவம்!
Better luck next time!:-)////

என்ன செய்ய அடுத்த முறை முயற்சி செய்ய வேண்டியதுதான்))))

நன்றி

ஜெயந்தி said...

கணேஷ் உங்களுக்கு கவிதையும் அருமையா எழுத வருது.

கணேஷ் said...

ஜெயந்தி said...

கணேஷ் உங்களுக்கு கவிதையும் அருமையா எழுத வருது.///

நன்றி சிஸ்..