முதல் காதல் கடிதம்...

காதல் எங்கு எப்போது எப்படி வரும்
என்று சரியாக தெரியாது என்பதை - நான்
முன்னரே அறிந்து இருந்தால் - முதலிலேயே
ஹசைன்பெர்க்கிடம் ஐயபாட்டுகொள்கையை
முறையாக படித்து இருப்பேன்....


சரி வந்த பின்னாவது எப்படி
வந்தது என்று யோசித்தேன்  -அதற்கும்
விடை இல்லாமல் போனது - எப்படி இந்த
பிரபஞ்சம் உருவானது என்ற கேள்வியைபோல..


எத்தனையோ விதிகள்,சமன்பாடுகள்
கொண்டு முயற்சித்து பார்த்தாயிற்று..
முடிவில்லாமல் நீளுகின்றது - அதே
பிரபஞ்சத்தின் கேள்வியைபோல காதலும்..


சில காரணங்கள் சொல்வேன்...
கருந்துளைகள் வேகமாக செல்லும்
ஒளியையே தன்னுள்ளே இழுத்துபோட்டு
வெளிவிடாமல் விளையாடுமாம் - உன்
கருவிழிகளால் இதயத்துக்குள் என்னை
கட்டி இழுத்து போட்டுவிட்டு இப்போது
காதல் எனும் விளையாட்டு விளையாடுகின்றாய்.....


ஐன்ஸ்டீன் பார்வைக்கு
அணுவும தப்பாதாம் அவரையே - ஒரு
பெண்ணின் காதல் பார்வை துளைத்தது - நான்
உன் பார்வைக்கு எம்மாத்திரம்


உன் விழியின் விசைக்கு  - நான்
முழுதும் வளைந்து கொடுக்கிறேன் - எனக்குள்
என்ன நடக்கின்றது என்பதை அறியாமல் - எப்படி
ஈர்ப்பு விசைக்கு ஒளி வலைகின்றதோ அப்படி...


இன்னும் இயங்கிகொண்டு இருக்கிறேன்....
உன் கருவிழிகளின் விசையால் - எப்படி
பிரபஞ்சம் இதுவரை புரியாத ஒரு
கருவிசையினால் இயங்குகின்றதோ அதைப்போல...
((உன் காதல் எனும் பிரபஞ்சத்துக்குள் நானும்))

                    
                                                                                கணேஷ்   இதை எழுதி நான்காய் மடித்து எப்போதும் நானும் அவளும் சந்திக்கும் இடத்தில வைத்து அவளிடம்  கொடுக்க எண்ணம...இரவு இதை எழுதியதில் இருந்து சரியாக தூக்கம் வர மறுத்தது...

   எப்படி இதை நாளை அவளிடம் கொடுக்க போகிறோம்..அவள் எனது காதலை ஏற்றுகொள்வாளா? என்ற எண்ணங்கள் மனதில் விடாமல் ஓடிக்கொண்டு இருந்தன...

   மறுநாள் காலையில் அவள் வழக்கமாக நிற்க்கும்  இடத்தில நின்று இருந்தாள்...அந்த இடத்தில ஆட்களின் நடமாட்டம் அவ்வளவாக இல்லை..அருகில் சென்று அதை அவளிடம் நீட்டினேன்..வாங்கும்முன்

"என்ன?" என்றாள்

"பாரேன"

பிரித்து சில நிமிடங்கள் படித்து விட்டு...

"எதுக்கு கணேஷ் என்னை காதலிக்க நினைக்கின்றாய்?"

"உன்னை ரெம்ப பிடிக்கும்" என்றேன்

"அதான் எதுக்கு என்று சொல்?"

இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை அமைதியாக கிழே பார்த்தேன்..

"இதோ பார் நல்ல விதமாக அறிவியல் படித்து இருக்கின்றாய். தொடர்ந்து முயற்சி செய்..அதைவிட்டுவிட்டு இந்த காதல் பேரிக்காய் என்று என் பின்னால் மட்டுமில்லை எந்த பெண் பின்னாடியும் சுத்தாதே..அது எந்த விதத்திலும் உதவாது" என்று சொல்லி அந்த கடிதத்தை  கொடுத்துவிட்டு சென்றாள்

12 comments:

மதுரை சரவணன் said...

//ஐன்ஸ்டீன் பார்வைக்கு
அணுவும தப்பாதாம் அவரையே - ஒரு
பெண்ணின் காதல் பார்வை துளைத்தது - நான்
உன் பார்வைக்கு எம்மாத்திரம்
//


அருமை ... வாழ்த்துக்கள்

கணேஷ் said...

Blogger மதுரை சரவணன் said...
அருமை ... வாழ்த்துக்கள்////


உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..

Kousalya Raj said...

கணேஷையும் இந்த காதல், கவிதை எழுத வைத்துவிட்டதே.....!! கவிதை அருமை....! ஐன்ஸ்டீன் தாத்தா மாட்டியதும் இந்த காதலில் தானா ....??

//எந்த பெண் பின்னாடியும் சுத்தாதே..அது எந்த விதத்திலும் உதவாது//

இப்ப உள்ள பெண்கள் எவ்வளவு தெளிவா இருக்காங்க...!!?

கணேஷ் said...

Kousalya said...

ஐன்ஸ்டீன் தாத்தா மாட்டியதும் இந்த காதலில் தானா ....?? ///

மாட்டினார் என்பதைவிட தனது வயலின் இசையால் அந்த பெண்ணை(மிலேவா) மயங்க வைத்தார்...

ஆமாம் ஆமாம் பெண்கள் ரெம்ப தெளிவாகத்தான் இருக்காங்க)))

செழியன் said...

சூப்பர். ஒரு கவிதையையும் கதையையும் ஒன்றாக போட்டு கலக்கிட்டீங்க, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

கணேஷ் said...

செழியன் said...

சூப்பர். ஒரு கவிதையையும் கதையையும் ஒன்றாக போட்டு கலக்கிட்டீங்க, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்////

உங்களின் கருத்துக்கு நன்றி..

சௌந்தர் said...

"இதோ பார் நல்ல விதமாக அறிவியல் படித்து இருக்கின்றாய். தொடர்ந்து முயற்சி செய்..அதைவிட்டுவிட்டு இந்த காதல் பேரிக்காய்////

வித்யாசமான காதல் எல்லாம் கத்திரிக்காய் சொல்வாங்க...அது சரி நீ கவிதை எல்லாம் எழுதுவியா

கணேஷ் said...

சௌந்தர் said...@@


கத்திரிக்காய் எனக்கு பிடிக்காது..அதான் பேரிக்காய்...

சரி கவிதைன்னு சொன்னியே அது எங்கே இருக்கு?))))))

Gayathri said...

kaadhalilum ariviyala..super ponga

kavithai anna super

கணேஷ் said...

Gayathri said...
kavithai anna super////

அய்யோ அக்கா நான் உங்களை அக்கான்னு சொன்னா நீங்க என்னை அண்ணன்னு சொல்றிங்க))))))))))


தமிழ்தான் பிரச்சினை என்றால் இதுலேயுமா அக்கா உங்க திறமையை காட்டனும்)))))))

நன்றி

அம்புலியும் தும்பிளியும் said...

aana nnu sollavnadhu anna nu solten

Learn said...

அருமை வாழ்த்துக்கள்

http://tamilthottam.nsguru.com