ஐன்ஸ்டீன் தாத்தா சொன்னவைகள் – 1

   சில அறிவியல் விசயங்களை பகிர்ந்து கொள்ளும்போது ஏற்ப்படும் பிரச்சினைகளில் ஒன்று அதற்கு என்ன தலைப்பு வைப்பது என்பதே...

   வழக்கம் போல ஐன்ஸ்டீன் புராணம், கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் சொந்த சோககதை இவற்றை சேர்த்து எந்த தலைப்பில் எழுத.....குழப்பமான விஷயம்..எனவே இதே தலைப்பில் தொடரலாம் என நினைக்கிறேன்....

   போன இதே பகுதியில் ஒரு சிரிப்பு சொல்லியிருந்தேன்,அதை எத்தனை பேர் புரிந்து சிரித்தார்கள் என்பது அவர்களுக்குத்தான். தெரியும்...அந்த சிரிப்பு...

   ஒருமுறை Bohr தனது வாகனத்தை மிக வேகமாக ஓட்டி சென்று காவலரிடம் மாட்டிகொள்கிறார்...அந்த காவலர் Bohr டம் "நீங்கள் எவ்வளவு வேக(ம்)த்தில் வந்தீர்கள்?,எங்கே போகின்றீர்கள்?" என்று கேட்க அதுக்கு Bohr "எவ்வளவு வேகம் என்று தெரியாது ஆனால் எங்கு போகவேண்டும் என்று மட்டும்  தெரியும்" என்று சொன்னாராம்...!!!!!!

   காரணம் ...BOHR முக்கிய பங்கு வகித்த குவாண்டம் தத்துவத்தில் ஒரு அனுத்துகளின் இருப்பிடத்தை(position) அறிந்தால் அதன் திசைவேகத்தை(velocity) துல்லியமாக அளக்க முடியாது... இதுதான் மேலே சொன்ன சிரிப்பு...அந்த காருக்கு பதில் ஒரு அணுத்துகள் வைத்து பார்த்தால்..பொருந்தும்....சரி இனி கொஞ்சம் அறிவியல்...
 


   குவாண்டம் தத்துவத்தை வளர்த்தவர்களில் முக்கியமானவர் இந்த bhor , ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் ஐன்ஸ்டீன் அவர்கள் இந்த தத்துவத்தை ஏற்றுகொள்ள மறுத்து விட்டார்...அதனால் அந்த தத்துவத்தை  சோதித்து நிருபிக்க ஏதாவது ஒரு சோதனையை செய்ய சொல்லிக்கொண்டே இருப்பார்......

   ஒரு சில விவாதங்களுக்கு பிறகு ஐன்ஸ்டீன் சொன்னதை..செய்து பார்த்து அதில் இருந்து சில விசயங்கள் பெற்று, இப்படியேதான் போய் கொண்டு இருந்தது...ஐன்ஸ்டீன் கடைசிவரை குவாண்டம் தத்துவத்தை ஒரு முழுமையான தத்துவமாக ஏற்றுக்கொள்ளவே இல்லை....அவரது கணிப்பு படி இதை கடந்த ஒரு முழுமையான தத்துவம் இருக்கின்றது ...அதன் மூலம் இந்த அனுத்துகளையும்..துல்லியமாக கணக்கிடலாம் என்பதே...

  என்னதான் அவர் ஒளி மின்விளைவின் (photo electric effect) ன் மூலம் குவாண்டம் தத்துவம் உருவாக ஒரு காரணமாக இருந்தாலும்..அடுத்த வந்த bohr  ன் கருத்துக்கள் மற்றும் பங்களிப்பு அவருக்கு முழு திருப்தி அளிக்கவில்லை...அதற்கு காரணம் அனுத்துகளின் இருப்பிடம்.,நிறை,திசைவேகம் போன்றவற்றில் எதையாவது ஒன்றைத்தான் தெளிவாக சொல்ல முடியும்..மற்றவற்றை இருக்கலாம் என்றே சொல்ல முடியும்.... உறுதியாக சொல்ல முடியாது..

   ஒரு எலெக்ட்ரான் எங்கு என்ன செய்கின்றது என்பதை உறுதியாக சொல்ல முடியாதநிலை...position and momentum, time and energy இவற்றில் எதையாவது ஒன்றைத்தான் மிகச்சரியாக விளக்க முடியும்...சொல்லப்போனால்....அந்த எலேக்ட்ரோன்கள் ஒரு இடத்திற்கு வரும் ஆனா வராது...என்று மட்டுமே சொல்லலாம்...

   இதுதான் ஐன்ஸ்டீனுக்கு பிடிக்கவில்லை...அறிவியல் விதி ஒன்றை விளக்குமானால் அதை சத்தியமாக சொல்ல வேண்டும் சாத்தியமாக இல்லை என்பதே அவரது வாதம..இந்த சத்தியமான நிலை குவாண்டம் தத்துவத்தில் இல்லை... இதற்காக அவர் போடாத சண்டை இல்லை..செய்யாத சோதனைகள் இல்லை..   இதையெல்லாம் விட அவரின் கோபத்தை அதிகமாக்கியது ஹசைன்பெர்க்ன் uncertainty principle தான்..அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

  ஐன்ஸ்டீனின் தனிமை கலந்த அறிவியல் கண்டுபிடிப்புகள்,அவரது சாதனைகள் எல்லாவற்றையும் பார்த்து அவரை உம்மனாமூஞ்சி என்று நினைத்தால் தவறு...அவர் மிக ரசித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன...படகு பயணம் அவருக்கு பிடிக்கும், வாயலின் ரசித்து வாசிப்பார்...அவருக்கு அதிகம் மன அழுத்தம் வந்து விட்டது என்றால்..தனது அறையைவிட்டு வெளியில் வந்து தெருவில் மெதுவாக உலா வருவார்....அது எந்த நேரமாக இருந்தாலும் சரி..


இனி வரும் பகுதிகளிலும் ஐன்ஸ்டீன் தாத்தாவின் அறிவியல் கலந்த புராணம் தொடரும்....இப்போதைக்கு இது மட்டும்...

9 comments:

பொன் மாலை பொழுது said...

Fantastic stories, carry on dude!

செந்திலின் பாதை said...

nice pls cont.............

ஜெயந்தி said...

அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்னே நடந்தவைகள். நல்ல பதிவு.

DREAMER said...

அருமையான தொடக்கம்.
பதிவுலகின் அடுத்த பரிமாணமே இது போன்ற தொடர்கள்தான் என்று நான் நம்புகிறேன். தொடருங்கள்! காத்திருக்கிறோம்...!

-
DREAMER

அணில் said...

உங்களைப் போன்ற ஆட்களைத்தான் மாணவ சமுதாயம் எதிர்பார்க்கிறது. பாடத்திலிருப்பை அப்படியே ஒப்பிப்பவர்களை அல்ல.

கணேஷ் said...

உங்களின் கருத்துகளை பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி,,,

Unknown said...

Nice! Carry on!! :)

கணேஷ் said...

ஜீ... said...

Nice! Carry on!! :)///

நன்றி

செல்வா said...

சரி நான் போய் அடுத்த பகுதிய படிக்கிறேன் ..