பொன்விகித காதல் கடிதம் ...

    ஒரு பெண் வந்து காதல் கடிதம் கொடுத்தால்..மனதில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அன்றுதான் நான் உணர்ந்தேன்...எல்லாம் ஹோர்மோன்களின் விளையாட்டுத்தான் என்று தெரிந்தாலும் அதிலும் சுகம் இருக்கத்தான் செய்தது...
    வேலைக்கு செல்ல நாங்கள் சந்தித்து கொள்வது ஒரே பேருந்து நிறுத்தம்..அவள் வேறு பேருந்தில் பயனிப்பாள்..நான் வேறொன்றில்....


  அதனால் காலையில் தவறாமல் ஒருவரையொருவர் பார்த்துகொள்ள தவறுவது இல்லை..சில நாள்களில் அவள் எனக்கு பிடித்து போனாள்.......என்றாவது ஒருநாள் அவள் விடுமுறை என்றால் என்னவோ போலிருந்தது..

   சில நாட்கள் வரை வெறும் பார்வை பரிமாற்றங்களையே செய்துவந்தோம்...ஒருநாள் நான் கொஞ்சம் தாமதமாக வர அங்கு நிறைய ஆள்கள் இருந்தும் நான் நேராக அவளிடம சென்று 'நான் செல்லும் பேருந்து போய்விட்டதா?" என்று கேட்டேன்..

அதற்கு அவள்.."இல்லை இன்னும் போகவில்லை" என்றாள்..

     இதுதான் நாங்கள் பேசிய முதல் வார்த்தை...அடுத்த நாளில்தான் ஒரு சிறிய அதியம் நடந்தது..அவளை பார்க்கும் போது எப்போதும் போல பார்த்ததோடு மட்டும் இல்லாமல் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தாள்...

   அன்றுவரை நான் பார்க்காத ஒன்று என்பதால் அது அழகாய்த்தான் இருந்தது..பதிலுக்கு நானும் சிரித்து வைத்தேன்..

  அடுத்த வந்த நாள்களில பேசதொடங்கியிருந்தோம்..எங்கள் பேச்சு  அப்படி ஒன்றும்  உருப்பிடியாக இல்லை..என்னை பற்றி அவளை பற்றி..எங்களின் முன்னால் கடந்து சென்ற தெருநாயை பற்றித்தான் இருந்தது..

    என்னதான் தேவை இல்லாத பேச்சுகள் பேசினாலும் அவளுடன் பேசும் நேரங்கள் எல்லாம் இனிமையானது...மனசுக்குள் ஏதோ ஒன்று.....ஹோர்மோன்கள் தங்களின் வேலையை சரியாக செய்தன...

   அடுத்து வந்த நாள்களில் நிறைய பார்த்து கொண்டோம் ..நிறைய பேசிகொண்டோம்...

   இந்த நிலையில்தான்..அவள் வந்து என்னிடம் அந்த கடிதத்தை கொடுத்துவிட்டு "படித்துவிட்டு சொல்" என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றாள்...

    அவள் கொஞ்ச தூரம்தான் போயி இருப்பாள் அதற்குள் அவள் கொடுத்த அந்த கடிதத்தை படித்து முடித்து இருந்தேன்.....எளிமையாக தனது காதலை சொல்லி இருந்தாள்...

      கொஞ்சம் சந்தோசம் அவளை நானும் காதலித்தேன் ஆனால் சொல்ல பயம்...அவள் சொல்லிவிட்டாள்....எப்படியும் நாளைக்கு சம்மதம் சொல்லவேண்டும்...அன்றைய இரவு புரியாத சில காரணங்களால் தூக்கம் இல்லாமல் இருந்தது...

    அடுத்தநாள் அவளை பார்க்கும் போது மெல்ல சிரித்தேன்..."நானும் உன்னை காதலிக்கிறேன்.....சொல்ல பயம் அதான்"..என்றான்

அது "எனக்கு தெரியும்..அதன் நானே சொன்னேன்" என்றாள்...

  மற்றவர்களின் காதலைபோலத்தான் எங்களின் காதலும் சில மாதங்கள் சென்றது...

   ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது..எப்போதும் போல நான் கொஞ்சம் அதிகமாக அறிவியல் பேச எங்களுக்குள் செல்லமான சண்டை வந்தது..

   "உனக்கு அறிவியலை தவிர ஏதாவது உருப்பிடியா தெரியுமா?" என்று அவள் கேட்க..
  "அப்படி என்ன உனக்கு தெரியும்..ஏதாவது சொல் பார்ப்போம்" என்றேன்..
    அவள், "உனக்கு கொடுத்த காதல் கடிதத்தை பார்த்தியா..அதில் என்ன இருக்கு என்று"என்றாள்..
   நான், "அதில் என்ன அப்படி பெருசா இருக்கு..நீ என்னை காதலிப்பதாக சொல்லி இருக்கே வேற என்ன" என்றேன்..
   அவள்,"உனக்கு அது மட்டும்தான் தெரியும் அதில் மற்றொரு பெரிய விஷயம் இருக்கு"..என்றாள்..
    "அப்படி என்ன பெரிய விசயம்" என்றேன்.. 

  அவள், "அந்த கடிதத்தை நான் பொன் விகித முறையில் அமைத்து இருந்தேன்" என்றாள்..
   நான், "அது என்ன பொன் விகிதம் என்றேன்" தெரியாதது போல..
   அவள், "அதான் உன்னிடம் முதலில் சொன்னேன்..உனக்கு ஒன்றும் தெரியாது என்று"...என்றாள்..
அதற்கு நான் "சரி நீ சொல் எனக்கு ஒன்றும் தெரியாதுதான்" என்றேன்...

   அவள்,"பொன் விகிதம் என்ற ஒருவிகிதம் இருக்கின்றது..அந்த விகிதத்தில் இருந்து பெறப்படும் எண் ஆனது 1.681..அந்த விகிதமானது ..இரண்டு வெவ்வேறு அளவிற்கும் (எண்ணிற்கும்) உள்ள கூட்டு தொகையை அந்த இரு எண்களில் உள்ள பெரிய எண்ணால் வகுத்தால் வரும் எண் ஆனது, அந்த இரண்டு எண்களின் விகிதத்துக்கு சரி சமமாக இருக்க வேண்டும்...என்ன புரியுதா" என்றாள்..நான், "சத்தியமா ஒண்ணுமே புரியலை" என்றேன்..

அவள், "என்னோமோ ஒரு நாளைக்கு நூறு தடவை ஐன்ஸ்டீன் தாத்தா பெயரை சொல்லுறே..எனக்கு புரிந்தது கூட உனக்கு புரியலையா என்ன?" என்றாள்..
   "சரி இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் இதோ பார்" என்று காகிதத்தில் எழுதினாள்..
இதில் "a" பெரிய அளவு அல்லது எண் என்று வைத்துகொண்டால்..

நான், "சரி அதுக்கு என்ன இப்ப? இந்த எண்ணில் அப்படி என்ன இருக்கு?" என்றேன்..

   அவள்."இது மிகப்பிரபலமான ஒரு எண் விகிதம்...சிலர் சொல்கிறார்கள இந்த பிரபஞ்சத்தில் எல்லா படைப்பும் இந்த விகிதத்தில்தான் படைக்கப்பட்டு இருக்கின்றது ..இதை phi என்று அழைப்பார்கள்"..


   "ஏன் நமது உடம்பில் கூட இந்த விகிதம் இருக்கு...உன் கையின் தோல் பட்டையில் இருந்து உன் விரல் நுனிவரை அளந்துகொள் அப்புறம் உன் முழங்கையில் இருந்து விரல் நுனிவரை அளந்து வரும் அளவை முதலில் அளந்த மொத்த அளவோடு வகுத்து பார் வருகிற எண் கண்டிப்பாக 1.618..இப்படித்தான் இருக்கும்."..

   மேலும் "உன் இடுப்பில் இருந்து உன் பாதம் வரை..அப்புறம் உன்  முழங்காலில் இருந்து தரைவரை அளந்து வரும் அளவை கொண்டு வகுத்து பார் வருவது 1.618.. என்ற எண்..நமக்கு மட்டுமில்லை தாவரங்கள்,விலங்குகள் எல்லாத்துக்கும் இது பொருந்துவதாக சொல்கிறார்கள்"..என்றாள்..
"அதைவிட இந்த விகிதம் Fibonacci எண் வரிசையில் தொடர்ந்து வரும்" என்றாள்..

    "Fibonacci பற்றி என்னிடம் பேசாதே அவரைபற்றி முன்னாடியே ஒரு கதை Fibonacci யும் என்கற்பனையும் என்ற தலைப்பில்  எழுதி இருக்கிறேன்..அவரை பற்றி தெரியும்......சரி இதுக்கும் நீ அந்த எண் அடிப்படையில் எனக்கு காதல் கடிதம் கொடுத்ததற்கும் என்ன சம்பந்தம்" என்றேன்..

  அவள், "பொதுவாக இந்த எண் விகிதம் ஒருவிசித்திரமாக கருதபட்டாலும் கொஞ்சம் புனிதமாக கருதப்பட்டது..பழைய காலத்து ஒரு சில கட்டிடங்கள்,பிரமிடுகள் எல்லாம் இந்த விகிதத்தில் தான் கட்டப்பட்டுள்ளன..... என்று சொல்கிறார்கள்"..

   "சரி அதான்..உன்னை அதிகம் காதலித்தேன்..இந்த எண் விகிதம் பற்றி கொஞ்சம் தெரிந்து இருந்தேன்..நம் காதல் கொஞ்சம் வெற்றியடைய இது ஒருவேளை உதவலாம் என்ற எண்ணம்தான் காரணம்" என்றாள்...

   அன்று வீடு வந்து அவள் கொடுத்த அந்த துண்டு கடிதத்தை அளந்து பார்த்தேன்..அதில் இருந்த அளவுகள்..89mm மற்றும் 144mm. இந்த இரண்டையும் வகுத்துபர்த்தேன்..வந்தது..1.618..

சந்தோசம் கொஞ்சம் அறிவாளியான காதலி..எப்படி எல்லாம் யோசித்து இருக்கிறாள்.....

சில  வருடங்களுக்கு பிறகு....
    நானும் என் காதல் மனைவியும் பேசிக்கொண்டு இருந்தோம்...தற்செயலாக அவள் "நான் என் காதலை சொல்ல ஒரு கடிதம் கொடுத்தேன் நினைவிருக்கா?" என்றாள்.

  நான், "அதை எப்படி மறப்பேன் இன்னும் நான் அதை வைத்து இருக்கிறேன்" என்றேன்
   அவள், "அது சாதாரன கடிதம் இல்லை நாம் காதல் வெற்றியடைய அதில் நான் ஒரு மந்திரம் செய்து இருந்தேன்..அது தெரியுமா?": என்றாள்.

   இதை சொல்லும்போது அவளது கண்களில் வெட்கம் கலந்த காதல் இருந்தது...அவளது பேச்சு பழைய காதல் நினைவுகளை நினைவுபடுத்துவதாக இருந்தது..அருமையான நினைவுகள்..அதுவும் அவள் சொல்லி கேட்பது...என்பது..

அதனால்..நான் "தெரியாது" என்றேன்.. 

  அந்த பொன்விகித காதல் கடிதத்தை அவள் கொடுத்த சில நாட்களில் அதில் இருந்தவற்றை நான் கண்டுபிடித்து  ஏற்கனவே அவளைவைத்து கற்பனை செய்து ஒரு கதையாக எழுதிவிட்டதை மறைத்து....

அவள்,"சரி நான் சொல்கிறேன்" என்று ஆர்வமாக  அந்த காதல கடிதத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்...







(Fibonacci எண்களை பற்றி ஏற்க்கனவே கொஞ்சம் எழுதி இருக்கிறேன்.. .மிக ஆர்வமான ஒன்று.. ..இதில் நான் சொன்னதுபோல கை கால்களை அளந்து பார்த்தால் அவர்கள் என் கட்சி......நான் முதலில் இதை அறியும்போது படிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு அளந்துபார்த்து அது சரியாக இருக்க ஆச்சர்யத்தோடு மேலும் படிக்க தொடர்ந்தேன்...)


8 comments:

எல் கே said...

வித்யாசமா அறிவியலை சொல்றீங்க வாழ்த்துக்கள்

கணேஷ் said...

LK said...

வித்யாசமா அறிவியலை சொல்றீங்க வாழ்த்துக்கள்///

நன்றி அண்ணா..

velji said...

பாராட்டுக்கள் கணேஷ்(வசந்த் என்று நண்பர்கள் யாரும் உண்டா?).

நான் அளந்து பார்க்கவில்லை.ஆனாலும் உங்க கட்சிதான்.

தொடருங்கள்!

கணேஷ் said...

velji said...

பாராட்டுக்கள் கணேஷ்(வசந்த் என்று நண்பர்கள் யாரும் உண்டா?).
நான் அளந்து பார்க்கவில்லை.ஆனாலும் உங்க கட்சிதான்.
தொடருங்கள்!///



உங்களின் பாராட்டுக்கு நன்றி..

((ஆமாம் வசந்த் என்கிற ஒரு நண்பன் இருந்தான்...எங்களுக்கு ஒரு குரு
நாதரும் இருந்தார்...அவர்தான் வழிநடத்தினார்...அவர் பிரிந்த பின்பு நங்களும் பிரிந்துவிட்டோம்...))

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

ஆனந்தி.. said...

கணேஷ்..இந்த அளவீடுகள் பெரிய ஆச்சர்யத்தை கொடுக்குது..உங்க குரு சுஜாதா கதை படிக்கிற மாதிரி இருக்கு உங்களோட presentation ..குரு வின் நல்ல சிஷ்யன்..வாழ்த்துக்கள்..(ஐயோ..இன்னும் அந்த புதிரில் அந்த பொண்ணு பெயரையும் கண்டு பிடிக்கலை..நான் ராஜேஷ் குமாரின் ரூபலா கதாபாத்திரம் மாதிரின்னு நினைக்கிறேன்..ஹ ஹா..சொல்லிடுங்க அந்த புதிர் விடையை..)

கணேஷ் said...

denim said...

மிக அருமையான பதிவு ////


உங்களின் கருத்துக்கு நன்றி..

கணேஷ் said...

ஆனந்தி.. said...

கணேஷ்..இந்த அளவீடுகள் பெரிய ஆச்சர்யத்தை கொடுக்குது..உங்க குரு சுஜாதா கதை படிக்கிற மாதிரி இருக்கு உங்களோட presentation ..குரு வின் நல்ல சிஷ்யன்..வாழ்த்துக்கள்..(ஐயோ..இன்னும் அந்த புதிரில் அந்த பொண்ணு பெயரையும் கண்டு பிடிக்கலை..நான் ராஜேஷ் குமாரின் ரூபலா கதாபாத்திரம் மாதிரின்னு நினைக்கிறேன்..ஹ ஹா..சொல்லிடுங்க அந்த புதிர் விடையை..)/////

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி...


அப்படி என்றால் நீங்கள் முயற்சி செய்யவில்லை என்று அர்த்தம...மிக எளிதான ஒன்றுதான்..முயற்சி செய்யுங்கள்....

உங்களுக்காக ஒரு உதவி ....அடுத்த கதையின் தலைப்பு அந்த பெண்ணின் பெயர்தான்...))))

அதற்குள் கண்டு பிடியுங்கள்..))))