பொற்கொடி- 2

    (((இது  நான் இதற்கு  முன்  எழுதிய பொற்கொடி என்ற கதையின் தொடர்ச்சி.....முதலில் இதை படிப்பவர்கள் ..முன்னர் சொன்ன கதையை படித்துவிட்டால் இது கொஞ்சம் புரியும்...இல்லை அது எல்லாம் படிக்க முடியாது என்பவர்களுக்கு......வேற்று கிரகத்தில் இருந்து ஒரு பெண் வந்து எனை சந்தித்து..அவளுக்கு இருக்கும் சில சிறப்பு அம்சங்களை சொல்கிறாள்..அவளுக்கு ஒரு பெயர் வைக்க சொல்லுகிறாள்..நான் பொற்கொடி என்ற பெயரை வைக்க..அவள் சிரிக்கின்றாள்...அந்த சிரிப்போடு இப்போது தொடர்கிறேன்.......))


அவள் மெல்ல சிரித்தாள்.

“ஏன் சிரிக்கின்றாய்” என்றேன்..

  “இல்லை எங்கு இருந்து எங்கோ வந்து இங்கு உன்னால் பெயர் சூட்டபடுகின்றேன்”..என்றாள்.

  “உங்கள் தேசத்தில் இந்த அன்பு ..காதல்,போன்ற உணர்வுகள் எல்லாம்இருக்குமா என்ன?” என்று என் வயதின் ஆர்வத்தில் கேட்டேன்

“ஆமாம் ஒரு காலத்தில் இருந்தது”..என்றாள்

   “அப்படி என்றால் இப்போது உங்களுக்குள் காதல் போன்ற உணர்வுகள் இருக்காதா என்ன?” என்றேன்,


   “அதாவது எங்களுடைய முந்தைய காலத்தில் இந்த மாதிரியான சில அன்பான உணர்வுகள் இருந்தது..இப்போது தொடரும் எங்களின் அறிவியல் வளர்ச்சி,மற்றும் காலநிலை இவற்றில் அந்த அன்பு.காதல போன்ற உணர்வுகள் இல்லாமல் போனது” என்றாள்.

   “அப்படி என்றால் நீங்கள் எப்படி ஒற்றுமையாக அன்பாக இருக்கின்றிர்கள்” என்றேன்

   “உனக்கே தெரியும் இந்த அன்பு,கோபம,காதல போன்றவைகள் எல்லாம் ஹோர்மோன்கள் செய்யும் வேலைதான்...இந்த ஹோர்மோன்கள் எங்களுக்கு சுரப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டதே காரணம்.....இதனால் எங்களுக்கு  இனப்பெருக்கத்தில் பிரச்சினை,அதிக சண்டை சச்சரவுகள்..ஒரு கட்டத்தில் நாங்கள் எங்கள் இனத்தையே அடித்து கொன்று அழித்தோம்.....அதுவும் சில நேரங்களில் உணவுக்காக ...இதனால் எங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த ஹோர்மோன்கள் சுரப்பதற்காக செயற்கையாக மருந்துகள் கொடுக்கப்பட்டன..இதனால் எங்களின் நிலமை கொஞ்சம் சரியானது” என்றாள்

     “அப்படியா உங்களுக்குள் இத்தனை விசயங்களா ..அப்படி என்றால் நீங்கள் அன்பு காட்டுவது ... இனப்பெருக்கம் செய்வது எல்லாம் செயற்கையாக கொடுக்கப்படும் மருந்துகளால்தானா?” என்றேன்

   “ஆமாம் எல்லாம் செயற்கையாக கொடுக்கும் ஹோர்மோன்கள்தான் எங்களை தூண்டுகின்றன ” ..என்றாள்


   “இன்னொன்று தெரியுமா?” என்று அவள் சொல்லிக்கொண்டே அருகில் இருந்த கத்தியை எடுத்து தனது விரலின் ஒரு நுனியை வெட்ட ஆரம்பித்தாள்


    “ஏன் வேட்டுகின்றாய்?” என்று நான் கேட்டு முடிக்கும் முன்னே அவள் வெட்டி முடித்து இருந்தாள்..

    நான் ஆச்சர்யமாக அவள் வெட்டிய இடத்தை பார்த்தேன்...நமக்கு வருவது போல சிவப்பு ரத்தம் ஏதும் வரவில்லை..பதிலாக தேன் போன்ற ஒரு வண்ணம்,அதே திண்மையில்  கொஞ்சம் வெளி வந்து நின்று போனது...

“ஏன் வெட்டினாய்” என்று திரும்பவும் கேட்டேன்..

“இன்னும் சில நிமிடங்கள் பார்” என்றாள்..

     சில நிமிடங்கள் கழித்து அவள் வெட்டிய இடத்தை பார்த்தேன்...அந்த இடத்தில அவள் வெட்டியதால் இழந்த சதை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே இருந்தது..


     “இது எப்படி சாத்தியம்..உனக்கு வெட்டிய இடத்தில இருந்து புதியதாக சதை வளருகின்றது” என்று நான் கேட்டு முடிக்கும்போது அந்த வெட்டிய இடம் முழுவதும் சதையால் நிரம்பி இருந்தது...


    “உங்களுக்கு stem cell கள் இருக்கின்றது..அதே போலத்தான் எங்களுக்கும் சில செல்கள் இருக்கின்றன ....என்ன உங்களது stem cell கள் குறிப்பிட்ட ஒரு முக்கியமான வேலையை மட்டுமே  செய்யும் ...... செல்களை உருவாக்குதல், கருவில் உடல் உறுப்புகள் அமையும் போது அதற்கு தேவையான செல்களை உருவாக்குதல் இந்த மாதிரியான வேலைகளை மட்டும்தான் செய்யும்......அது தொடர்ந்து பிரிந்து வேறு மூல செல்களை உருவாக்கும்..தன்னைத்தானே பிரிதலின்போது போது புதிப்பித்து கொண்டு செல் பகுபாட்டில் தொடர்ந்து ஈடுபடும் போன்ற வேலைகள்...

    அதாவது உங்களது ஸ்டெம் செல்கள் உங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு உறுப்பை உருவாக்க உதவும்... அதுக்கு பிறகு அது சாதரணமாக செல் பகுபாட்டில் ஈடுபடும்...ஆனால் எங்களுக்கு இருக்கும் ஒருவிதமான செல்கள் எங்கள் உடம்பில் உயிர் இருக்கும் வரை அதன் பணியை தொடரும்” என்றாள்.


“இல்லை நீ சொல்வது எனக்கு புரியவில்லை” என்றேன்..

    “அதாவது இப்போது என் கையை உருவாக்க தனியாக ஒருவிதமான ஸ்டெம் செல்கள் வேலையில் ஈடுபடுகின்றது என்று வைத்துகொள், அந்த ஸ்டெம் செல்லானது நான் உயிர் வாழும் வரை அதன் வேலையை முழுமையாக செய்து கொண்டே இருக்கும்..என் கையில் என்ன குறை வந்தாலும் சரி அந்த ஸ்டெம் செல்கள் தேவையான செல்களை வளர்த்து அதை நிவர்த்தி செய்யும்”..என்றாள்

    “அப்படி தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் உன் கை வளர்ந்து கொண்டே அல்லவா இருக்க வேண்டும்” என்றேன்..

     “அதுதான் இல்லை என் கை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்,எப்படி இருக்க வேண்டும் என்று என் பெற்றோரிடம் இருந்த வந்த பண்பியக்கிகள் (gene) ஏற்க்கனவே தீர்மானித்து இந்த ஸ்டெம் செல்களை வழிநடத்தும்..எனவே ஒரு குறிப்பிட்ட எல்லையில் இது தனது வேலையை நிறுத்தும்..ஆனால் அந்த எல்லையை விட எனது கையில் உள்ள செல்கள் குறைந்தால் அதை உடனே நிவர்த்தி செய்யும்” என்றாள்..

     “அப்படி என்றால் உங்களுக்கு செல்களின் இறப்பே இருக்காதா? அப்படி என்றால் உங்களுக்கு மரணம் என்பதே கிடையாதா?” என்ன என்றேன்.

     “அப்படி இல்லை எங்களுக்கு மரணம் உண்டு..நான் உனக்கு சொன்னது அந்த ஸ்டெம் செல்கள் உடல் உறுப்புகள் அமைய காரணமாக இருக்கும் செல்களைத்தான் உருவாக்கும்..அந்த ஸ்டெம் செல்களே இறந்து போனால்...அப்போதுதான் எங்களுக்கு மரணம்.”.என்றாள்..

     “அப்படி என்ன நீங்கள் எங்களைவிட சிறப்பாக சாப்பிடுவிர்கள் .உங்களுக்கு மட்டும் இந்த மாதிரியான ஸ்டெம் செல்கள் கிடைத்து இருக்கின்றது” என்றேன்

     “எங்கள் கிரகத்தில் கிடைக்கும் சில வித்தியாசமான உணவு பொருள்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்..மற்றபடி எங்களுக்கு அங்கு கிடைக்கும் இயற்கை பொருள்கள்..சில நேரங்களில் எங்கள் கிரகத்தில் எப்போதும் இருளாக இருக்கும் மறு பகுதிக்கு சென்று அங்கு இருக்கும் சில உயிர்களை அடித்து சாப்பிடுவோம்” என்றாள்..

    “நான் கொஞ்சம் பயந்து என்ன அந்த உயிர்களை அடித்து சாப்பிடுவிர்களா என்ன?” என்றேன்

    “ஆமாம்”, “அதுசரி கணேஷ்.எல்லாம் சரியாக கேட்டாய் எனக்கு கொடுக்கும் அந்த செயற்கை ஹோர்மோன் மருந்து கடைசியாக எப்போது கொடுக்கபட்டது என்று கேட்கவில்லையே” என்றாள்..

“எப்போது” என்று சாதரணமாக கேட்டேன்

    “அது கொடுக்கும் நேரம் நேற்றோடு முடிந்தது ” என்று அவள் உட்கார்ந்து இருந்த இடத்தில இருந்து எழுந்து சென்று கதவை மூடினாள்..

    “எதுக்கு இப்ப கதவை மூடினாய்?” என்று நான் கேட்டு கொண்டு இருக்கும்போதே அவளது வாயை ஒரு விதமாக கோணலாக திறந்து கொண்டு என் மீது பாய்ந்தாள்

9 comments:

vinthaimanithan said...

அட! ட்விஸ்ட்டா!!! நல்லாருக்கு

கணேஷ் said...

விந்தைமனிதன் said...

அட! ட்விஸ்ட்டா!!! நல்லாருக்கு///

உங்களின் கருத்துக்கு நன்றி.

ஆனந்தி.. said...

சூப்பர் ட்விஸ்ட் கணேஷ்...செம கலக்கலா கதை போகுது.. ஸ்டெம் செல்ஸ் க்கும்,சுவாசத்துக்கும் லாஜிக்காவே இப்படி தானா கணேஷ்?
அடுத்த எபிசொட் எப்டி கொண்டுபோவிங்கனு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்..பொற்கொடியும் பிரியாணி சாப்பிட ஆரம்பிச்சுருமோ?? :-))..ஆர்வமாய் காத்திருக்கிறேன்...

ஆனந்தி.. said...

கணேஷ்...அதென்ன பொற்கொடிபக்கத்தில் இத்தனை கேள்வி குறிகள்...இது எபிசொட் ஆள போகுது கணேஷ்...பொற்கொடி-2 னு போடலாமே...

கணேஷ் said...

கணேஷ்...அதென்ன பொற்கொடிபக்கத்தில் இத்தனை கேள்வி குறிகள்...இது எபிசொட் ஆள போகுது கணேஷ்...பொற்கொடி-2 னு போடலாமே...///

உங்களின் கருத்துக்கு நன்றி..அடுத்த முறை அப்படி தொடர்கிறேன்...

Mythees said...

நல்ல ட்விஸ்ட் , உங்க ப்ளாக் கூகிள் கிறோம் ,நெருப்பு நரி ல ஓபன் பண்ணுன வைரஸ் காட்டுது என்னனு பாருங்க சார் .

உளவாளி said...

Wow intresting twist.. Waiting for next episode.

ஜெயந்தி said...

சரியா இருக்கு. அந்த மாதிரி செல்கள் நமக்கும் இருந்தா நல்லாயிருக்கும்ல? ஆனா அன்பு, கோபம், காதல் எல்லாம் போகக்கூடாது.

கணேஷ் said...

சரியா இருக்கு. அந்த மாதிரி செல்கள் நமக்கும் இருந்தா நல்லாயிருக்கும்ல? ஆனா அன்பு, கோபம், காதல் எல்லாம் போகக்கூடாது.////


நல்லாத்தான் இருக்கும் ...ஆனா இல்லையே ..ஆனால் அடுத்துவரும் காலங்களில் நாமே இந்த மாதிரியான செல்களை உருவாக்க முடியும்...

இனி வரும் காலங்களில் கோபம,அன்பு போன்ற அற்ற மனிதர்களை நாம் இங்கே காணலாம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை...)))