மீண்டும் ஜீனோ..


    மீண்டும் ஜீனோ என்ற தலைப்பை படித்ததும் அதே கதையை தொடரப்போகிறேன் என்று நினைக்க வேண்டாம்... ஜீனோவை வைத்து சில கதைகள் எழுத எண்ணம.

    சில கதைகள் எழுதுவதின் மூலம் புதியதாக உருவாக்கிய ஜீனோவின் குறைகளை கொஞ்சம் நிவர்த்தி செய்ய முடியும் அதற்குபிறகு  மீண்டும் ஜீனோ தொடரலாம் என  நினைக்கிறேன்..


    எப்படி ஜீனோவை உயிர்பிக்கலாம்,இதை எழுதியது சுஜாதா என்ற மிகபெரிய மனிதர் ஆயிற்றே,அதை எப்படி தொடரலாம்..

    காரணம் சுஜாதாவை மிக பிடிக்கும். கொஞ்சம் அறிவியல் தெரியும் ...இதைவைத்து தொடரலாம் என்ற எண்ணம்தான்....

    சரி ஜீனோவை எப்படி உயிர்ப்பிப்பது.. ஏற்க்கனவே ஜீனோவை போன்ற ஒரு நாயை பொற்கொடி-3 படைத்து இருக்கிறேன்...சுஜாதா அவர்களின் ஜீனோ முழுக்க ரோபோடிக் சம்பந்தமானது..நான் உருவாக்கியது ஜெனடிக்(genetic) முறையில்..இதுவும் சுஜாதா அவர்கள் உருவாக்கிய ஜீனோவை நிவர்த்தி செய்யும்..

     முக்கியமாக பழைய ஜீனோவில் அது தனக்கு தேவையான மினசாரத்தை சேமித்து வைக்கும் battery யில் இருக்கும் சில குறைப்டுகள்,கடைசியில் ஜீனோ இறக்க காரணமான அதன் க்லாக் (clock) செயல்படுவதில் பிரச்சினை போன்றவைகள் புதிய ஜீனோவில் இல்லை..

   அப்படி என்ன புதிய ஜீனோவில் இருக்கின்றது என்பதை அறிய பொற்கொடி -3 படிக்க வேண்டுகிறேன்..அதில் தெளிவாக இருக்கின்றது..மேலும் இந்த ஜீனோவை படைத்தது ஒரு வேற்று கிரகபெண்..அவர்களது கிரகத்தில் உள்ள தொழிநுட்பமுறைகளை வைத்து இந்த ஜீனோ படைக்கப்பட்டுள்ளது....


    புதிய ஜீனோ ஜெனடிக் முறையை மேம்படுத்தி அதில் உருவாக்கிய கொஞ்சம் ரொபோடிக் தன்மை கொண்ட நாய்....இனி எழுதப்போகும் சில கதைகளில் இந்த ஜீனோவை அதன் அறிவுத்திறமையை உபோயிக்கலாம் என் நினைக்கிறேன்...

   அதாவது கணேஷ் வசந்த் இவர்களில் கணேஷ் இப்போது கதை எழுதுவதால் அவனுக்கு பதில் இந்த ஜீனோ வசந்தோடு சேர்ந்து கொண்டு தன் வேலையை செய்யும்..ஜீனோவை எப்படி எந்த விசயங்களுக்கு வசந்த் பயன்படுத்திகொள்கிறான் என்பதில் இருந்து புதிய ஜீனோவின் திறமைகள் வெளிப்படும்...

   இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள் இருந்தால் எனக்கு சொல்லலாம்....எனக்கு கொஞ்சம் உபோயோகமாக இருக்கும்..

இசைப்புயல்..

       விடுமுறை நாள்களில் அம்மாவின் கண்டிப்புக்கு பயந்து பாட்டி ஊருக்கு சென்றுவிடுவது வழக்கம்..எப்படியாவது அம்மாவின் அதட்டல் இல்லாமல் சுதந்திரமாக இருக்கவேண்டும்..என்ற எண்ணமே காரணம்...

      பாட்டியிடம் பாசம அதிகம் ..ஆறுவயதுவரை வளர்த்தவர்கள் என்பதால்.......வெயிலில் காடு சுற்றிய நேரம் தவிர பாட்டி சொல்லும் சிறு சிறு வேலைகளை செய்து அவர்களை கொஞ்சம் சந்தோசபடுத்துவது பிடிக்கும்...உள்ளூர் கடைக்கு போவது...சில மாதங்களில் காட்டில் கொஞ்சம் சிறு வேலைகள் இருக்கும்...

     காட்டில் கம்பு(பயிறு) போட்டு இருந்தால் காலை மாலை குருவிகள் வரும்,அதை விரட்ட என்னை அனுப்புவார்கள்...

     அங்கு போவதற்கு சில காரணங்களும் இருந்தது...அங்கு வரும் குருவிகளை விரட்ட சில முறைகள் உண்டு...தகர பானையில் ஒலி எழுப்புவது,வெடிகள் போடுவது, போன்றவைகள்...

     தினமும் சில வெடிகள் கொடுப்பார்கள்.....படைக்குருவி என்று சொல்லப்படும் ஒரு குருவிகூட்டம் வரும் அந்த கூட்டத்தில் 200 முதல் 300 குருவிகள் வரை இருக்கும்...ஒருதடவை வந்து கம்பு திங்க பிஞ்சையில் அமர்ந்தால் பாதி பிஞ்சையை காலியாக்கிவிட்டுத்தான் போகும்...இந்த மாதிரி வருகின்றவற்றை விரட்ட வெடி போட்டால்தான் முடியும்..

     மற்ற நேரங்களில் பானையின் ஒலி போதுமானது..நான் அங்கு போய் கொஞ்ச நேரத்தில் படைகுருவி வந்தாலும்....வராவிட்டாலும் வெடியை போட்டுவிட்டு ... மீதம் இருக்கும் நேரத்தை கஷ்ட்டபட்டு கழிப்பேன்...அந்த நேரத்தில் பானையில் தாளம் போடுவது பிடிக்கும்...


        நான் தாளம்போடுவது என்பதை..ஒன்றும் இசை அறிவு வகையில்  சேர்க்கமுடியாது...பள்ளியில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் மேசையில் தாளம் போட்டு நண்பர்களிடம் பாராட்டையும்...வலது பக்கம் அமர்ந்து இருக்கும் மாணவிகளிடம் திட்டையும் வாங்கும் நிலையில்தான் இருந்தது .....

     இரண்டு குச்சிகளை வைத்துக்கொண்டு..பானையை கவுத்திவைத்து தாளம் போடுவேன்...அதற்கும் நேரம் உண்டு..காலையில் ஆறு மணியில் இருந்து ஒன்பது மணிவரை,மாலையில் நான்கு மணியில் இருந்து ஆறு மணிவரை...இதுதான் குருவி வரும் நேரம் என  பாட்டி ஆய்வு செய்து கண்டுபிடித்து சொன்னது ...
                                                         


     சில நேரங்களில் அந்த வழியாக போகின்றவர்கள் நான் தாளம் போடுவதை பாட்டியிடம் மெச்சி இருந்ததின் விளைவு..எப்போதாவது...நான் சேட்டை செய்தால்.."நீ இப்படி அடங்காமல் சேட்டை செய்தால் தெருவில் கொட்டு அடித்துக்கொண்டு திரியவேண்டியதுதான்" என்று திட்டுவார்கள்

      ஒருநாள் நாள் மாலையில் கையில் வெடியுடன் பிஞ்சைக்கு வரும்போது..உள்ளே நுழையும் இடத்தில ஒரு புது பானை இருந்தது...ஒருவேளை சிறிய துளைகள் இருக்கலாம்..அதான் பாட்டி குருவி விரட்ட வைத்துவிட்டார்கள் என்று அதையும் எடுத்து சென்றேன்..

      அன்று அந்த புது பானையில் முழுத்திறனையும் காட்டி வாசித்ததில் அதன் மத்தியில் கொஞ்சம் நெளிந்து போனது...கொஞ்ச நேரத்தில் மறுவரப்பில் ஒரு பெண் நின்று என்னை பார்ப்பது போல இருந்தது..

    அவளை எனக்கு தெரியும்...என் வீடு இருக்கும் தெருவில்தான் அவளின் வீடும் இருக்கிறது...ஒரே வயது..சிறுவயதில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம்...குறிப்பிட்ட வயதில் சில ஹோர்மொன்கள் சுரந்து எங்களை பிரித்துவிட்டது...

     இப்போது நாங்கள் பார்த்தாலும் பேசிக்கொள்வது இல்லை..அவள் யாரிடம் அதிகம் பேசமாட்டாள்..மென்மையான குணம்..தானுண்டு தான் வேலையுண்டு இருப்பவள்..

     இவள் ஏன் இங்கு வந்து நிக்கிறாள்? என்று நான் யோசித்தாலும்...அவர்களின் பிஞ்சையும் கொஞ்சம் தள்ளித்தான் இருந்தது ஒருவேளை அங்கு போவாள் என்று நான் அவளை கண்டுகொள்ளவில்லை...

     சிறிதுநேரம் கழித்து பார்த்தால் அவள் அங்கேயே நின்றாள்..என்ன காரணமாக இருக்கும்..என்று யோசித்தும் விளங்கவில்லை..சிறிது நேரம் நின்றுவிட்டு கிளம்பிவிட்டாள்..

     அவள் அங்கு இருந்த நேரத்தில் நான் தாளம்போடவில்லை ..கொஞ்சம் வெட்கம்தான் காரணம்...இருந்தாலும் அவள் எதுக்கு அங்கு வந்து நின்றுவிட்டு சென்றாள் என்பது மட்டும் புரியாமல் இருந்தது..

     அன்று இரவு கொஞ்சம் யோசிக்கும்போதுதன் தெரிந்தது..ஒருவேளை அவள் என் இசைக்கு மயங்கி அங்கு வந்து இருக்கலாமோ? என்று நினைத்தேன்...அப்படி இருக்காது என்று  தெரிந்தாலும் வேறெதுவும் காரணம் இருப்பதாக தெரியவில்லை...

       மறுநாள் காலையில்.... அவள் அப்படி இசைக்கு மயங்கி இருந்தால் இன்றும் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டே சென்றேன்...சிறிதுநேரம் வரையில் வரவில்லை..வரும்வழியை அடிக்கடி பார்த்ததுதான் மிச்சம்...

    அதிசயம் அன்று மாலையில் அதே நேரத்தில் வந்தாள்..எனக்கு கொஞ்சம் சந்தோசம்..அவள் என் இசைக்குத்தான் வந்து இருக்கின்றாள் என்று நினைத்து அவள் வந்தவுடன் கொஞ்சம் சிறப்பாக சத்தமாக வாசிக்க ஆரம்பித்தேன்...

     அன்றும் கொஞ்சநேரம் நின்று விட்டு கிளம்பி விட்டாள்....சந்தோசத்தின் உச்சத்தில் நான்.. அன்று இரவு ஹோர்மொன்கள் தாறுமாறாக வேலைசெய்தது....இரவு தூங்காமல்.அவளைபற்றியே எண்ணங்கள் ஓடியது...சில நாட்கள் முன்னர் நான் கடைக்கு போகும்போது அவள் வெளியில் வந்து நின்றது,ஒரு முறை என் பாட்டியிடம் ஏதோ வாங்க வந்து என் பார்வையில் பட்டது இவற்றையெல்லாம் ஒரு கயிறாக திரட்டி காதல் எனும் பட்டம் விட்டு கொண்டு இருந்தது என் மனது..எல்லாம் ஹோர்மோன் வேலை....

     மறுநாள் காலையில் அவள் கண்டிப்பாக வருவாள் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் வேகமாக சென்றேன்..நினைத்தமாதிரியே வந்து நின்றாள்..மீண்டும் ஒருவித சந்தோசம்..

      அவளை ஒருமுறை திரும்பி பார்க்கும்போது என்னை கை அசைத்து கூப்பிடுவதுபோல இருந்தது..என்னைத்தான் என்பதை உறுதி செய்து கொண்டு அவள் அருகில சென்றேன்...உடம்பில் ஒருவித புது அனுபவத்தை ஹோர்மோனகள் சிறப்பாக செய்தன...கையில் அந்த பானையும் எடுத்து சென்றேன்..

"என்ன?" என்றேன்

      அவள் கொஞ்ச நேரம் என்னை பார்த்துவிட்டு அப்படியே அந்த பானையை பார்த்தாள்..

       "கொஞ்சநாள் முன்னாடி பிஞ்சைக்கு வேலைக்கு  வந்த என் அம்மா திரும்பி வரும்போது வேறுவேலை இருந்ததால் இந்த இடத்தில  பானையை வைத்துவிட்டு  சென்றுவிட்டார்கள்...அடுத்தநாள் மறந்து விட்டார்கள் ....அதான் என்னை போய் எடுத்துவர சொன்னார்கள் நானும் இரண்டு நாள்கள இந்த பக்கம் வந்து  தேடிபார்த்தேன்...இப்போதுதான் பார்க்கிறேன் அது உன் கையில் இருக்கு..... அந்த பானையை கொஞ்சம் கொடேன் நான் சீக்கிரம் போகவேண்டும்" என்றாள்...

பொற்கொடி - 3

   ((இதை ஒரு தொடர்கதையாகத்தன் எழுத நினைத்தேன்..ஆனால் என் கால தாமதத்தால் இது ஒரு நெடுந்தொடராக போகின்றது....பொற்கொடி-1,பொற்கொடி-2...நீங்கள் ..படித்துவிட்டால் நல்லது...இல்லை என்றால் பொற்கொடியை அறிய ஒரு சிறிய அறிமுகம் போதுமானது...அவள் வேற்றுகிரகத்தில் இருந்து வந்து அவர்களின் கிரகம்,அவளுக்குள் இருக்கும் சில சிறப்பு அம்சங்களை பற்றி சொல்லுகிறாள்...அவளுக்கு இருக்கும் சில குறைபாட்டால் என்னையே அழிக்க வருகிறாள்...இனி...))

     முரட்டுத்தனமாக அவள் என் மீது பாய்வாள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்ப்ர்க்கவில்லை என்பதால்...அவளால் எளிதாக என் கழுத்தை இரண்டு கைகளால் பிடிக்க முடிந்து இருந்தது....

   ”என்ன செய்கின்றாய்? ஏன் என்னை இப்படி....”என்று நான் தொடரும்போதே என் குரல்வளை கொஞ்சம் நசுங்க ஆரம்பித்து இருந்தது..

   அவளின் முழுத்திறனையும் என் மீது செலுத்துவதில் இருந்தாள்..இப்போதைக்கு எப்படியாவது இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டும்...என் திறனை கொஞ்சம் காட்டி அவளது கைகளை விளக்க முயன்றேன் முடியவில்லை...கொஞ்சம் என்னைவிட பலசாலியாக இருந்தாள்...

    என்னை அறியாமல் கண்ணில் தண்ணீர் வந்தது...என்ன செய்ய என்று யோசிக்கக்கூட அப்போது எனக்கு நேரம் இருப்பதாக தெரியவில்லை..நான் யோசிக்கும் அந்த நேரத்தில் அவள் என்னை முழுவதும் செயல் இழக்க வைக்கமுடியும்...அந்த நேரத்தில்..என் மனதில் தோன்றிய ஒரு எண்ணம...நான் உயிர் பிழைக்க கடைசி முயற்சியும் கூட..அது..

     நான் என் மனதில் "பொற்கொடி இப்படி செய்ய மாட்டாள்..நான் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கின்றேன்..அவள் திரும்பி கிரகம்போக என்னால் உதவ முடியும்..அதை கண்டிப்பாக நான் செய்வேன்...என்னை ஒன்றும் செய்ய மாட்டாள்...விட்டுவிடுவாள்...." இந்த எண்ணங்களை ஓட விட்டேன்...

    அவளது முகத்தில் .....செயலில் ஏதாவது மாற்றம் தெரிகின்றதா என்று பார்த்தேன்....மாற்றம் இருந்தது...அவளின் பிடி கொஞ்சம் தளர்ந்தது...

    சில வினாடிகளில் என்னை விட்டு முழுவதுமாக விலகி இருந்தாள்..நான் எனது கழுத்தை சரி செய்துகொண்டு இருக்கும்போது...அவள் தன் தலையை கிழே குனிந்து ஏதோ செய்து கொண்டு இருப்பதை நான் பார்த்தேன்....

    அவளிடம் ஒன்றும் பேசாமல் எழுந்து கதவை திறக்கும் போது அவள் மேலே நிமிர்ந்து பார்த்தாள்...

”வெளியே போ..என்னையே கொல்ல பார்த்தியே??”

     “இல்லை கணேஷ் எனக்கு என்ன ஆயிற்று என்று எனக்கே தெரியவில்லை...ஒருவேளை அந்த ஹோர்மொன்கள் பிரச்சினையாக இருக்கலாம்...உணமையில் நான் தெரிந்து செய்யவில்லை...”

    “உனது விளக்கம் ஏதும் தேவை இல்லை..நீ இப்போது வெளியில் போ.. “ என்று சொன்னாலும் மனதுக்குள் கொஞ்சம் பயம் இருந்தது..மீண்டும் அவள் என்னை தாக்கிவிட்டால்...


    அவள் ஒன்றும் சொல்லாமல்..மெதுவாக எழுந்து வெளியே சென்றாள்..”கணேஷ் ....”என்று ஏதோ சொல்ல அவள் முயலும்போது நான் கதவை மூடி இருந்தேன்...

     சில நிமிடங்கள் கழித்து அவள் இருக்கின்றாளா இல்லையா என்று பரிதாபத்தில் பார்க்க முயன்றாலும் ...ஒரு எண்ணம பார்க்க வேண்டாம் என்று தடுத்தது..பார்க்கவில்லை...

      மறுநாள் காலையில் சென்று வெளியில் பார்த்தேன் அவள் இல்லை..போய் இருந்தாள்...கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும் மனதுக்குள் அவள் எங்கு போவாள்..பாவம் கஷ்ட்டபடுவாள் என்ற எண்ணம இருந்தது...

     இதை நான் நினைத்து கொண்டு இருக்கும்போதே எங்கு இருந்து வந்தாள் என்று நான் கணிக்கும் முன்னே என் முன்னாடி வந்து நின்று"எனக்கு தெரியும் கணேஷ் நீ என்னை அப்படி ஒன்றும் துரத்திவிட்டு சந்தோசமாக இருக்க மாட்டாய் என்று"..என்றாள்

     நான் ஒன்றும் பதில் அளிக்காமல் வீட்டிற்கு உள்ளே வந்தேன்..கதவை பூட்டவில்லை...அவள் வரட்டும் என்றுதான்..

     பின்னாடியே வந்தாள்.."அதான் சொன்னேன்ல என்னை அறியாமல் நடந்த ஒன்று அதற்கு அந்த ஹோர்ர்மோன்தான் காரணம்..நம்பு கணேஷ் என்றாள்..

”சரி அந்த நேரத்தில் என் உயிர் போய் இருந்தால் ?”

    அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை...இருவருக்கும் இடையே மௌனம்......

"அதான் நீதான் புத்திசாலித்தனமாக தப்பித்து விட்டாயே" என்றாள்..

    நான் ஒன்றும் சொல்லவில்லை...இருவருக்கும் கொஞ்சம் துரம் இருந்தது..முகம் பார்க்கவில்லை...

     "சரி கணேஷ் இனிமேலும் உன்னை தொந்தரவு செய்ய விரும்பவில்லை..நான் போகிறேன்...என்னை பொறுத்தவரையில்...உங்கள் கிரகத்தில் என்னால் நீண்ட நாள் வாழ முடியும் என்ற நம்பிக்கை இல்லை..இங்குள்ள ஏதோ ஒரு வாயு எனக்கு ஒத்துபோகவில்லை..கண்டிப்பாக இனி கொஞ்சம் நாள்தான்...அதுவரை என்னால் வெளியில் சமாளிக்க முடியும்” என்று சொல்லி கொண்டே வெளியில் போனாள்....

    “சரி நான் உன்னை அப்படியே இங்கு தங்க வைத்தாலும் என் உயிருக்கு என்ன உத்திரவாதம்..திரும்பவும் நீ என்னை தாக்கினால்..??”.

    “அதான் உனக்கு எப்படி தப்பிப்பது என்று தெரிந்து விட்டதே அப்படி தப்பித்து கொள்” என்றாள்

     அவள் சொல்ல வருவது .... என்னை தாக்கியபோது என் மனதில் நினைப்பதை அவளால் உணரமுடியும் என்பதை தெரிந்து இருந்த நான்... அவளை பற்றி சில நல்ல விசயங்களையும்,அவளை அவள் கிரகத்துக்கு திரும்ப அனுப்புவதாகவும் மனதில் நினைத்தேன்..அதை அவள் உணர்ந்துகொண்டு என்னை தாக்குவதை நிறுத்தினாள்... இதே போல அப்படி இன்னொருமுறை தாக்க நேர்ந்தாலும் அதையே செய்ய சொல்லுகிறாள்...

    “சரி என்னை ஒருவழி செய்யாமல் நீ போகமாட்டே..எப்படியோ இங்கேயே இரு நடப்பதை பார்க்கலாம்” என்றேன்..

     போக நினைத்தவள் திரும்பி வந்து..”எப்படி கணேஷ் அந்த நேரத்தில் உனக்கு அந்த எண்ணம வந்தது..??” என்றாள் கொஞ்சம் சாதரணமாக...

    அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை...நீங்கள் எப்படி மனதில் நினைப்பதை தெரிந்து கொள்கின்றிகளோ..அதேபோல எங்கள் கிரகத்திலும் சில விசயங்களை நம்புகின்றார்கள்....

    அதாவது எங்களது மூளையில் கிட்டத்தட்ட 97% உபோயோகிக்காமல் இருக்கின்றதாம்..அதை எல்லாம் உபோயோகித்தால்..எல்லாமே சாத்தியம் என்கிறார்கள..

     இதை NOETIC SCIENCE என்கிறார்கள்..அதாவது மனதுக்கு நிகரான ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்கிறார்கள்...MIND OVER MATTER...நாங்கள் மனது வைத்தால் எல்லாமே முடியுமாம்..

     அது தவிர எங்களால் எல்லாவற்றையும் மனதால் எங்களுக்குள்ளேயே உணர்ந்து அறியா முடியுமாம்...இது போன்ற நிறைய விசயங்கள் உள்ளன...எல்லாமே உள்ளுணர்வு மூலம் செயல் படுத்த முடியும் என்பதே...

    “அப்படிஎன்றால் இன்னும் சில காலத்தில் உங்களுக்குள் ஒரு மாற்றம் வரும்”என்றாள்

“ஆமாம்” என்றேன்..


    “சரி கணேஷ் நான் இங்கு இருக்கபோவது கொஞ்ச நாள்தான் என்னை உபோயோகித்து கொள்” என்றாள்..

    “இல்லை இதுவரை உன் மீது அப்படி ஒரு எண்ணம வந்தது இல்லை..அதிலும் நீ வேற்றுகிரகவாசி எப்படி நீ இப்படி கேட்கின்றாய் என்று எனக்கு தெரியவில்லை என்றேன்...”அவளின் முகம் பார்க்காமல்


    “உனக்கு புத்தி எப்படி போகின்றது பார் ..எப்போதும் இனபெருக்கத்துக்கான ஹோர்மோன்கள் சுரந்தால் இதுதான் பிரச்சினை...நான் சொன்னது என்னிடம் இருக்கும் அறிவுதிறமையை உபோயோகித்துகொள் என்று”...என்றாள்..

    “அப்படியா!!!! எல்லாம் என் வயசுதான் காரணம்” என்பதை தவிர வேறொன்றும் சொல்லவில்லை..

“எங்களது இனபெருக்க முறை தெரிந்தால் நீ அப்படி சொல்லி இருக்க மாட்டே”

“அப்படி என்ன வித்தியாசம் உங்களது இனபெருக்க முறையில்” என்றேன்..

    “அது உனக்கு தேவை இல்லை..இப்பொது என்னை எப்படி சரியாக பயன்படுத்தி கொள்வது என்பதை பற்றி யோசி” என்றாள்

    “எனக்கு ஒரு கனவுத்திட்டம் உள்ளது..இப்போது உன்னை பார்த்த பின் அதில் சில மாற்றங்களை செய்து முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்” என்றேன்...

“எதுவாக இருந்தாலும் சொல் நான் உனக்காக கண்டிப்பாக செய்கிறேன்” என்றாள்..

   “நான் ஒரு வித்தியாசமான உயிர் ஒன்றை உருவாக்க ஆசை படுகிறேன்..அது சாதரணமாக இருக்ககூடாது...கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும்..”.

“அப்படி என்ன மாதிரி வித்தியாசத்தை நீ எதிர்பர்கின்றாய்...”

    “அது எங்களை போல பேசவேண்டும்,எப்படி உனக்கு உடம்பில் சில செல்கள் இறந்தால்,அல்லது நீக்க பட்டால் அது தானாக வளர்ந்து பூர்த்தியாகின்றதோ அதே மாதிரி, ...அப்புறம் தனியாக மேம்படுத்த பட்ட சில தகவல்களை MEMORY CHIP போன்ற ஒன்றை அதன் மூளையோடு தேவையான போது இணைக்கும் விதத்தில் இருக்க வேண்டும், முக்கியமாக நாம் இணைக்கும் அந்த MEMORY CHIP ல் இருந்து தானாகவே சில தகவல்களை பெற்று அது செயல்பட வேண்டும். அப்புறம் சில தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் ..கதிரியக்கம்,லேசர் போன்ற தாக்குதல் அதை ஒன்றும் செய்ய கூடாது...”

     “இது நீ நினைப்பது போல சாதாரணம் இல்லை கணேஷ்..ஆனால் நான் முயற்சி செய்தால் முடியும்..எங்கள் கிரகத்தில் நான் கற்றவற்றை வைத்து முயற்சித்து பார்க்கிறேன்..”.

    “உண்மையாகவே இது சாத்தியமா?” என்றேன் ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தில்..

“சாத்தியம்தான் முயற்சிக்கிறேன்” என்றாள்.

    “அப்படி என்றால் இனிமேல் நீ இருக்கவேண்டிய இடம் இது இல்லை” என்று சொல்லி அவளை என் ஆய்வுகூடத்திற்கு அழைத்து சென்றேன்..

“இந்த வசதிகள் போதுமா என்று பார் உனது ஆராய்ச்சிக்கு” என்றேன்

“அவள் கொஞ்சம் சுற்றி பார்த்து விட்டு போதும் என நினைக்கிறேன்” என்றாள்..

     “சரி அந்த உயிரினம் எந்த உயிரினத்தின் GENOME அடிப்படையில் இருக்கவேண்டும்” என்றாள்

“நாய்” என்றேன்..

    “சரி அதற்கு உரிய GENOME யை நீங்கள் படித்து இருக்கின்றிர்களா? அப்படி என்றால் அது சம்பந்தமான எல்லா தகவல்களையும் எனக்கு கொடு..அப்புறம்..அது எந்த அளவில் இருக்க வேண்டும்,என்ன வண்ணம் போன்ற தகவல்களையும் கொடு..”என்றாள்...

    என்னிடம் இருந்த நாயின் GENOME பற்றிய தகவல்களையும்,நாய் உருவம் ,வண்ணம் எல்லாவற்றையும் கொடுத்தேன்...

“அதற்கு முன் இதை எப்படி செய்ய போகின்றாய் என்பதை கொஞ்சம் சொல்லேன்” என்றேன்..

    “அந்த நாயின் GENOME யை கொஞ்சம் செயற்கையாக மாற்றம் செய்து முதலில் அதன் ஸ்டெம் செல்களை உருவாக்கும் பண்புகளை மாற்றுவேன்.இதன் மூலம் உருவாக்க படும் ஸ்டெம் செல்கள் இந்த உயிர் வாழும் வரை தனது வேலையை செய்யும்..எப்படி எனக்கு இருக்கின்றதோ அதே மாதிரி...அப்புறம் பேசுவதற்கு காரணமான சில GENE களை இதற்குள் சேர்ப்பேன் இதன் மூலம் பேசும்.அப்படியே இது உருவாக்கும் உடல் செல்கள் நீ சொன்ன கதிரியக்கம்,லேசர் போன்றவற்றிக்கு எதிராக செயல்படும்படி மாற்றுகிறேன்...அவ்ளவுதான்...”என்றாள்..

எனக்கு நம்பிக்கை இருந்தது இவள் இதை உருவாக்கி விடுவாள் என்று..

     “என்னை நீ தொந்தரவு செய்யாமல் இருந்தால் எனது வேலைகளை வேகமாக பார்ப்பேன்” என்றாள்..


    “சரி நான் தொந்தரவு செய்யமாட்டேன் ஏதாவது உதவி என்றால் மட்டும் கேள்” என்றேன்..

      அவள் சில நாட்கள் தனிமையாக வேலை செய்தால்..சில நேரங்களில் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் நான் சீக்கிரம் இறக்க போவதாகவும் சொல்லி கொண்டாள்..நான் அப்படி ஒன்றும் நடக்காது என்று மட்டும் சொல்லி வைத்தேன்...

    அதற்கு பிறகு என்னை அவள் தாக்கவில்லை.சமத்தாக அவளது ஆராய்ச்சியில் இருந்தாள்...மிக குறைவாக பேசினோம்...

     சில நாட்கள் கழித்து அந்த உயிற்கான செல்லை உருவாக்கி விட்டதாகவும் அதை இனி வளர வைக்க வேண்டும் என்பதை சொன்னாள்..

     எனக்கு சந்தோசம்...”நீ என்ன நினைக்கின்றாய் இது நன்றாக வளர்ந்து வருமா” என்றேன்..

    “பார்க்கலாம் முதல் 500 முதல் 1000 செல்கள் வளர்ந்து விட்டால் அப்புறம் ஒன்றும் பிரச்சினை இருக்காது என நினைக்கிறேன்...வளரும்வரை காத்து இருக்கவேண்டும்” என்றாள்..

    அந்த செல்களில் சில முறை அது நன்றாக வளருகின்றதா என்பதை தெரிந்து கொள்ள சில முறை அதை சோதித்து பார்த்த நேரம் போக நாங்கள் நிறைய பேசினோம்..

     அவள் முன்னர் சொல்லாமல் விட்ட அவர்களது இனப்பெருக்க முறை பற்றி சொன்னாள்..நம்மை போல பத்து மாதம் சுமக்க வேண்டிய அவசியம் ஏதும் அவர்களுக்கு இல்லையாம்,அதற்கு என்று தனியாக மருத்துவமனைகள் இருக்குமாம்..அங்கு சென்று விருப்பத்துக்கு தகுந்த மாதிரி உருவம் வண்ணம் கொண்ட ஒரு வரைபடத்தை தேர்ந்து எடுத்து கொடுத்தால் அதற்கு ஏற்ப செல்களை உருவாக்கி குழந்தையாக வளரவைத்து கொடுப்பார்களாம்..

   நான் விளையாட்டாக நீ அப்படி எத்தனை குழந்தை வாங்கி இருக்கின்றாய் என்றேன்..
அவள் இதுவரைக்கும் இல்லை என்றாள்

    ஒருவேளை நீ திரும்பி போனால் அங்கு போன பிறகு என்னை போல உருவம் கொண்ட ஒரு குழந்தைக்கு விண்ணப்பிபாயா? என்றேன்...

    உனக்கு இன்னும் அந்த ஹோர்மோன் செய்யும் சேட்டை போகவில்லை என்றாள்...

    எப்படியோ சில நாட்கள் நகர்ந்தது..அந்த உயிரின் கரு நன்றாக வளர்ந்தாலும் இவள் சில முறை மயங்கி விழுந்தாள்...என்ன காரணம் என்று அவளுக்கே தெரிந்து இருக்கவில்லை...கொஞ்சம் கவலையாக இருந்தது...

     “இன்னும் சில நாட்களில் அந்த செயற்கையாக உருவாக்கபட்ட நாயை பர்க்க முடியும்” என்றாள்..

     சேர்ந்து பார்த்தோம்..வெள்ளை நிறத்தில் முடியோடு அழகாய் இருந்தது...இன்னும் சில நாட்களில் வெளியில் வரலாம் என்றாள்..அதற்கு பின் அதனை சோதனை செய்வதாக அவளுடைய எண்ணம,

    ஒரு முறை மயங்கி விழுந்து நெடுநேரம் அவள் எழ முடியாமல் நினைவற்று கிடந்தாள்...

     “என்வென்று கேட்டேன்..இல்லை என்னால் இன்னும் சில நாட்கள்தான் உயிர் வாழமுடியும்..அது எனக்கு தெரியும்...அப்படியே நான் போனாலும் உனக்கு ஒன்றும் பிரச்சினை இருக்காது கணேஷ்..எங்கள் உடல் அமைப்பு அப்படி ..எங்களின் செல்களுக்கு தேவையான உணவு வழங்கபடவில்லை என்றால் அதுவே எங்களின் உடம்பை அரித்து காற்றோடு கரைத்துவிடும்....இப்பொது நான் உணர்கிறேன் ...சில பகுதிகளின் செல்களுக்கு செல்லும் பாதை செயல் இழந்து விட்டது...வரும் நாளில் ஒவ்வொன்றாக செயல் இழக்கும் ..அதற்குள் உன் அதிசய நாய் நல்லபடியாக வெளிய வந்துவிட்டால் எனக்கு கொஞ்சம் சந்தோசம்” என்றாள்..

    எனக்கு என்ன சொல்வது என்று புரியாமல் நின்று இருந்தேன்...இவ்வளவு நாள் என்னோடு இருந்தவள் ..உதவி செய்து இருக்கின்றாள்...இப்போது சாகபோகின்றேன் என்கிறாள்..நிறைய வருத்தம்...

“நீ பிழைக்க வேறு வழியே இல்லையா?” என்றேன்..

    அவள் “இல்லை” என்பது போல தலையை அசைத்தாள்...அதற்குபிறகு நாங்கள ஒன்றும் பேசவில்லை...அவள் தனிமையில் ஒரு இடத்தில உட்கார்ந்து இருந்தாள்..அடிக்கடி போய் அந்த நாயை சோதித்துவிட்டு வந்தாள்..

    அன்றைய நாள் கொஞ்சம் முக்கியமான நாள் செயற்கையாக வளர்த்த அந்த நாயை அவள் வெளியில் எடுத்தாள்...சாதாரணமாகத்தன் இருந்தது... அவள் சில சோதனைகளை செய்துவிட்டு என கையில் கொடுத்தாள்...

    மென்மையாக இருந்தது..இது எப்போது பேசும்,மற்ற திறன்கள் எல்லாம் இதற்கு எப்போது வரும் என கேட்டேன்

    “நீ பொறுத்த வேண்டிய அந்த MEMORY CHIP ல் இது பேச வேண்டிய தகவல்களை சேர்த்து இதன் மூளையில் பொறுத்தினால் இப்போதே இது பேசும்..மற்றபடி அது தானாக கற்றுகொண்டுதான் பேசவேண்டும், மற்ற பண்புகள் எல்லாம் இப்போது இருந்தே வேலை செய்யும்” என்றாள்..

    “இல்லை அந்த MEMORY CHIP யை அப்புறம் நான் பொறுத்தி கொள்கிறேன்...”என்றேன்..

    அதற்கு பிறகு வந்த நாள்களில்.. அந்த நாய் அவளது கண்காணிப்பில் இருந்தது..அந்த நாட்களில் நான் குறைவாகவே பேசினேன்....கொஞ்சம் கவலை..அவள் இன்னும் சில நாட்களில் காற்றோடு கலக்க போகிறாள் .....

    எப்போதும் போல என் அருகில் வந்தாள் ...மிகவும் வித்தியசமாக உணர்வதாக சொன்னாள்..எப்படி உணர்கிறாய் என்று நான் கேட்டும் அவள் ஏதும் பதில் அழிக்கவில்லை...

    அப்படியே உட்கார்ந்து இருந்த இடத்தில சரிந்து விழுந்தாள்..நான் அவளை எழுப்பவதற்கு முயற்சி செய்யும் விதமாக அவளை பற்றி குலுக்கினேன் ..எந்த வித சலனமும் இல்லை..

     சிறிது நேரத்தில் அவளை நான் தொடும்போது மிகவும் மென்மையாக உணர்ந்தேன்...அதாவது அவள் சொன்னது போல அவள் உடலுக்குள் இருக்கும் அந்த திரவம் அவளை கொஞ்சம் கொஞ்சமாக அரிது காற்றில் கரைத்து கொண்டு இருந்தது....

     கொஞ்ச நேரத்தில் அவள் விழுந்த கிடந்த இடத்தில அவள் இருந்ததுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை....

     தனிமையில் உட்கார்ந்து இருந்தேன்...அப்போது அந்த நாய் மெதுவாக நடந்து என் அருகில் வந்தது....அவள் உருவாக்கிய நாய்..அவளின் நினைவாக இன்னும் சில காலங்கள் என்னோடு இருக்கும்....

     அதை பார்த்த போதுதான் அவள் கேட்ட கேள்வி ஒன்று எனக்கு நினைவு வந்தது..இந்த அழகான நாய்க்கு என்ன பெயர் வைக்கபோகிறாய் என்று கேட்டு இருந்தாள்..


    அப்போது இருந்த நிலையில் அவளிடம் அதை சொல்லவில்லை...இப்போது அந்த நாயை பார்த்து "ஜீனோ இங்கே வா" என்றேன் அது வாலை ஆட்டியபடி என்னிடம் ஓடி வந்தது...

நெற்றிகண்ணை திறக்கலாம்...

   “ நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே” இது சம்பந்தமாக சரியாக தெரியாததால் இது சரியா? தவறா? என்பதை நான் விவாதிப்பதை விட்டுவிட்டு நான் சொல்ல வந்த விசயத்திற்கு செல்கிறேன்...

     அதாவது மூன்றாவது கண் என்று உண்மையில் உள்ளதா? அப்படி என்றால் அது நம்மில் எங்கு இருக்கின்றது? என்று எப்போதாவது நீங்கள் யோசித்து இருந்தால் நான் சொல்லபோகும் விசயங்கள் கண்டிப்பாக உங்களுக்கு உபோயோகமாக இருக்கும்...


    அறிவியல் பேசாமல் இந்த மூன்றாவது கண் என்ன என்று பார்த்தால் நமது உடலில் உள்ள சக்கரங்களில் ஆஜ்னா சக்கரம் வரும் இடம் மூன்றாவது கண்ணாக சொல்லபடுகின்றது..

    இது நமது புருவத்துக்கு மத்தியில் இருப்பதாக.சொல்கிறார்கள்...அதாவது நமது புருவத்தின் மையத்தில் இருந்து அப்படியே உள்நோக்கி சென்றால் நமது மூளையின் மையப்பகுதி அமைவதாக அர்த்தம்...

      இந்த சக்கரங்கள் பற்றியோ,குண்டிலியை எப்படி எழுப்புவது, அல்லது அதனை எழுப்புவார்கள் பற்றியோ எனக்கு அறிதல் இல்லை என்பதால் என்னால் மூன்றாவது கண்ணை மேலே சொன்னபடி விளக்குவதே சரியானது

     சரி இனி கொஞ்சம் அறிவியல் பேசலாம்...எப்போதும் சில சமய சடங்குகளோடு கொஞ்சம் அறிவியல் ஒத்துபோயவிட்டால் அதை அப்படியே தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ளும் பழக்கம் தொடர்ந்து கொண்டு வருவதை நான் பல இடங்களில் படித்து இருக்கிறேன்...

      அந்த வகையில் இந்த மூன்றாவது கண்ணாக மூளையின் மையமாக சொலவது pineal gland எனப்படும் ஒரு சுரப்பியை...இதைப்பற்றி,இதன் வேலைகளை பற்றி கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்...



        இது அமைந்து இருப்பது மூளையின் இரண்டு பகுதிகள் சந்திக்கும் ஒரு கீழ்புற இடத்தில..இதன் அளவு என்று பார்த்தால் மிகச் சிறியது..ஒரு அரிசியின் அளவு கொண்டது...இதுவும் சாதாரண சுரப்பிகளை போலவே ஹோர்மோன்களை நமது உடலுக்குள் சுரக்கின்றன...

     இந்த pineal gland சுரக்கும் ஹோர்மோன் Melatonin. ...இந்த சுரப்பிக்கு என்று சில சிறப்பு அம்சங்கள் உள்ளன...இது பகலில் சமத்தாக சும்மா இருந்துவிட்டு இரவில் மட்டும்தான் அதிகமாக சுரக்கும்...இது சுரக்கும் ஹோர்மோன்கள உடலில் செய்யும் வேலைகளை...பின் பார்க்கலாம்...முதலில் இந்த சுரப்பி எப்படி வேலை செய்கின்றது என்பதை பார்ப்போம்..

     இரவில் மட்டும் சுரப்பதற்கு காரணம் ஒளியின் மாறுதலதான். கொஞ்சம் விளக்கமாக பார்த்தால்...நமது கண்களில்(retina) இருந்து ஒளி பண்புகளை பெற்று அதற்கு தகுந்தவாறு இந்த சுரப்பி செயல்பட உதவி செய்வது suprachiasmatic nucleus.(SCN).


     இந்த SCN கிட்டதட்ட 1500 முதல் 2000 நரம்புகளை(nerve) வைத்து கொண்டு இந்த வேலையை செய்கின்றது.இதன் வேலை என்று பார்த்தால் ரெடினா வில் இருந்து ஒளி தகவல்களை உள்ளே அனுப்பி அதற்கு ஏற்ப இந்த pineal gland கட்டுப்படுத்துவது.


      இப்போது பகல் என்றால் ரெடினவில் ஒளி படும்........அந்த தகவல் அப்படியே உள்ளே அனுப்ப பட்டால் இந்த pineal சுரப்பியானது வேலை செய்யாது. அதே நேரத்தில் ரெடினவில் இருந்து ஒளி விலகிவிட்டால்..இந்த சுரப்பி ஆனது தனது வேலையை தொடங்கும்.....இதுதான் காரணம் இந்த சுரப்பி இரவில் மட்டும் அதிகம் சுரப்பதற்கு....மேலும் நமது மூளைக்கு இரவு பகல் என்பதை தெரிவிப்பதும் இந்த SCN தான்.


     இந்த சுரப்பி சுரக்கும் ஹோர்மோன் melatonin செய்யும் வேலை என்று பார்த்தால்... கொஞ்சம் முக்கியமானவைகள்...நமது அன்றாட உடல்வேலைகளை கட்டுபடுத்துவதில் இதன் பங்கு முக்கியமானது..


     குறிப்பாக நாம் சந்திக்கும் இரவு பகல் சுழற்சிக்கு ஏற்ப நமது உடலை கட்டுபடுத்துவது இந்த ஹோர்மோன்தான்.....இது.ஆழ்ந்த உறக்கத்தின் போது அதிகமாக சுரந்தாலும் நாம் தூங்கும் பழக்கத்துக்கு இதுவே காரணம்...சிலருக்கு இருக்கும் தூக்க குறைபாடு நோய்களுக்கு இந்த அமிலம் மருந்தாக பரிந்துரைக்க படுகின்றது.



     இது தவிர..இதன் வேலைகள் என்று பார்த்தால்..வயதுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றங்களை கட்டுபடுத்துவது,இனபெருக்கத்திற்கு உதவி செய்யும் ஹோர்மோன்களை கட்டுபடுத்துவது அதுவும் முக்கியமாக பெண்களுக்கு, நமது உடலின் வளர்ச்சிக்கும் இது உதவும் என்று சொல்கிறார்கள் எனவே இது சிறு வயதில் அதிகமாகவும் பின் போக போக கொஞ்சம் குறைவாகவும் சுரக்கும்.

    மேலும் சில ஆராய்ச்சிகள் இந்த ஹோர்மோனின் குறைபாட்டுக்கும் breast cancer,prostate cancer போன்றவற்றிக்கும் தொடர்பு இருப்பதாக சொல்கின்றது.

     ஆனால் இது பொதுவாக இப்போது தூக்கம் சம்பந்தமான பிரசினைகளுக்கே மருந்தாக அதிகம் பயன்படுகின்றது.அதிகம் தூக்கம் இழப்பு உள்ளவர்கள்,இரவில் பணி செய்பவர்கள் போன்றவர்களுக்கு இது மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றது.

     மேலே சொன்ன விசயங்களில் இருந்து நெற்றி கண்ணை திறந்தால் குற்றமா? இல்லையா? என்பதைவிட,உங்களின் நெற்றி கண்ணை திறக்க முதலில் இரு கண்களை மூட வேண்டும் என்பது தெரிந்து இருக்கும்.

நாமும் நெற்றி கண்ணை திறக்கலாம்...குற்றம் இல்லை...

ஐன்ஸ்டீன் தாத்தா சொன்னவைகள் ...

     நான் இந்த வலைப்பூவை ஆரம்பித்தும்  இட்ட முதல் பதிவு ஐன்ஸ்டீன் தாத்தா சொன்ன சில முக்கியமான வார்த்தைகளைத்தான்......அதை நீங்கள் படித்து இருக்க வாய்ப்பு இல்லை..

       அதில் இருந்து சில வார்த்தைகள்..அதற்குமுன் நான் ஏன் உலக புகழ்பெற்ற ஒரு மாபெரும் மனிதரும்.அறிவியலரும் ஆன அவரை "தாத்தா" என்று அழைக்கிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன்...

     நமது நேரு அவர்களை நாம் அவர் மீது கொண்ட அன்பினால் அவரை "நேரு மாமா" என்று அழைக்கிறோம், தெரசா அவர்களை அவர் செய்த பல தொண்டுகளை அன்பாக நினைவு கூறும் வகையில் "அன்னைதெரசா" என அழைக்கிறோம்...

     அந்த வகைதான் நான் அவரை தாத்தா என்று அழைப்பதும்..வேறொரு காரணமும இல்லை...உலகத்தில் நான் அதிகம் நேசிக்கும் மனிதர்களில் முதன்மையானவர்...

      சரி நான் ஐன்ஸ்டீன் அவர்களை  பற்றி தெரிந்து கொள்ளும்போது நான் அனுபவித்த சில விசயங்களை இங்கு  பகிர்கிறேன்.....சில அறிவியலர்கள்களுக்கு ஐன்ஸ்டீன் தாத்தாவின் மீது கொஞ்சம் பொறாமை இருந்ததுதான் உண்மை..

       அதை பற்றி அதிகம் விவரமாக இல்லாமல் ...... சுருக்கமாக இப்போது இருக்கும் மிக பிரபலமான அறிவியலார் st.hawking பற்றி மட்டும் பார்க்கலாம்...இவருக்கு ஐன்ஸ்டீன் மீது அவரது தத்துவங்களின் மீது முழு  நம்பிக்கை ஈடுபாடு இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிகொள்ளமாட்டார்..

      இவர் எழுதிய அனைத்து புத்தகங்களில் இருந்து  அவர் நியூட்டன் அவர்களைத்தான் மிகைபடுத்தி சொல்லுவதாக நான் தெரிந்து இருக்கின்றேன்......ஒருவேளை அவரது சொந்த நாட்டுகாரர் மற்றும் அவர் Cambridge ல் அமர்ந்த Lucaisan chair ல் அமர்ந்தவர் ....  என்பதால் கூட இருக்கலாம்...சில இடங்களில் ஐன்ஸ்டீனை பற்றி சொல்லி இருந்தாலும் அந்த இடத்தில..கட்டாயம் ஒரு வரி நியூட்டன் அவர்களின் எதாவது ஒன்றை ஒப்பிட்டு இருப்பார்...


       இதை நான் சொல்வதற்கு காரணம் இவரின் அண்மை புத்தகமான the grand design என்ற புத்தகத்தில் கொஞ்சம் அவரது முந்தைய எண்ணத்தை மாற்றியிருந்தார்...கொஞ்சம் ஐன்ஸ்டீன் தத்துவத்தை பெருமையாக விளக்கி இருந்தார்...அதற்கு இந்த காலகட்டத்தில் ஐன்ஸ்டீன் அவர்களின் சில அறிவியல் தத்துவங்கள் மிக முக்கியமானவைகள் என்பது கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.


     சரி  ஐன்ஸ்டீன் அவர்களோடு உலகமே அறியும்படி ஒருவர் விவாதம் செய்தார்...அவர் Bohr .....இவர்களின் விவாதம் quantum theory,uncertainty principle பற்றியது...இருவரும் சண்டை போடாத குறைதான்...ஆனால் இவர்களின் இந்த விவாதம அறிவியலுக்கு மிக ஆரோக்கியமான ஒன்று என்று மக்கள் அப்போது அறியாமல் இல்லை...

       ஐன்ஸ்டீன் அவர்களுடன்  Bohr விவாதம் செய்த காரணத்தினால் அவரை பற்றியும் அவரது quantum theory யை பற்றியும் கிண்டல் செயுமாறு ஒரு நகைச்சுவையை இங்கே பகிர்வதால் எனக்கு கொஞ்சம் ஆறுதல்...Bohr ஒன்றும் சாதாரணமானவர் இல்லை...அவர் மிகபெரிய ஜாம்பவான்...ஐன்ஸ்டீன் அவர்களே வேறு சிலரிடம் Bohr  பற்றி புகழ்ந்து சொல்லியிருக்கிறார்.... சரி இனி அந்த நகைச்சுவை...

      ஒருமுறை Bohr தனது வாகனத்தை மிக வேகமாக ஓட்டி சென்று காவலரிடம் மாட்டிகொள்கிறார்...அந்த காவலர் Bohr டம் "நீங்கள் எவ்வளவு வேக(ம்)த்தில் வந்தீர்கள்?,எங்கே போகின்றீர்கள்?" என்று கேட்க அதுக்கு Bohr "எவ்வளவு வேகம் என்று தெரியாது ஆனால் எங்கு போகவேண்டும் என்று மட்டும்  தெரியும்" என்று சொன்னாராம்...!!!!!!

    மேலே சொன்ன நகைச்சுவை புரிந்தவர்கள சிரிக்கட்டும்...புரியாதவர்களுக்கு......இதை புரியவைக்க ஒரு தனி பதிவு போடும் அளவுக்கு அதில் விசயம் இருக்கின்றது என்பதால் ....அதை மறந்து  தொடர்ந்து படியுங்கள்...

      சரி இப்போது ஐன்ஸ்டீன் அவர்களின் வார்த்தைகளில் எனக்கு பிடித்த சிலவற்றை பகிர்கிறேன்...

Imagination is more important than knowledge

      ஐன்ஸ்டீன் அவர்களின் வாழ்க்கையை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் அது மேலே சொன்ன வரிதான்..இந்த வார்த்தைகளை அவர் சொன்னார் என்பதை விட அவர் வாழ்ந்தார் என்றே சொல்லலாம்...

      அதற்கு ஆதரங்கள... அவரது பல உலக புகழ்பெற்ற கண்டுபிடிப்புகளே...space time மற்றும் space time of curvature, இதன் காரணத்தினால் அந்த விசைக்கு ஒளி வளைந்து கொடுக்கும் என்று கண்டு பிடித்து  சொன்னது, போன்ற பல விசயங்களை சொல்லலாம்...

 எனக்கு மிக பிடித்த வாக்கியங்களில் மேலே சொன்னதும் ஒன்று...


   அடுத்து நம் தமிழர்களுக்கு வள்ளுவர் எப்படி நாவடக்கம் பற்றி அருமையாக சொல்லி இருக்கின்றாரோ..அதே போல ஐன்ஸ்டீன் அவர்களும் அருமையாக நாவடக்கம் பற்றி சொல்லி இருக்கும் வார்த்தைகள்...

If "A" is a success in life, then "A" equals "X" plus "Y" plus "Z"..... Work is X;  Y is play; and Z is keeping your mouth shut.

       என்ன.....அவர் இங்கு நாவடக்கம் பற்றி சொல்லி இருக்கும் விதம அவருக்கே உரித்தான அறிவியல் கணித முறை....மற்றபடி விசயம் ஒன்றுதான்...

     பல மாபெரும் மனிதர்கள் வாயை முடிந்தவரை மூடினால் நன்மையே என்று சொல்லி இருப்பதால் அதை நானும் கொஞ்சம் முயன்று கொஞ்சம் திருந்தினேன்...முக்கியமாக ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்னதற்காக....


கடைசியாக ஒரு கவிதை......

என்னவென்று சொல்வேன்..
என்மனம் எப்போதும் உன்னையே
எண்ணி கொண்டிருப்பதைப்பற்றி....

என்ன விதி கொண்டு விளக்குவேன் - இல்லை
என் விதியே உன்னை எண்ணி இருப்பதுதனோ??
என்பதை புரியாத நிலையில் நான்!!!

மேலே சொன்ன கவிதையின் மையம் ஒரு பெண்ணுக்கும் பொருந்தும் அதே நேரத்தில் ஐன்ஸ்டீன் தாத்தாவுக்கும் பொருந்தும்...நான் எழுதியது இரண்டாவதாக சொன்ன அர்த்தத்தில்....







.

பொற்கொடி- 2

    (((இது  நான் இதற்கு  முன்  எழுதிய பொற்கொடி என்ற கதையின் தொடர்ச்சி.....முதலில் இதை படிப்பவர்கள் ..முன்னர் சொன்ன கதையை படித்துவிட்டால் இது கொஞ்சம் புரியும்...இல்லை அது எல்லாம் படிக்க முடியாது என்பவர்களுக்கு......வேற்று கிரகத்தில் இருந்து ஒரு பெண் வந்து எனை சந்தித்து..அவளுக்கு இருக்கும் சில சிறப்பு அம்சங்களை சொல்கிறாள்..அவளுக்கு ஒரு பெயர் வைக்க சொல்லுகிறாள்..நான் பொற்கொடி என்ற பெயரை வைக்க..அவள் சிரிக்கின்றாள்...அந்த சிரிப்போடு இப்போது தொடர்கிறேன்.......))


அவள் மெல்ல சிரித்தாள்.

“ஏன் சிரிக்கின்றாய்” என்றேன்..

  “இல்லை எங்கு இருந்து எங்கோ வந்து இங்கு உன்னால் பெயர் சூட்டபடுகின்றேன்”..என்றாள்.

  “உங்கள் தேசத்தில் இந்த அன்பு ..காதல்,போன்ற உணர்வுகள் எல்லாம்இருக்குமா என்ன?” என்று என் வயதின் ஆர்வத்தில் கேட்டேன்

“ஆமாம் ஒரு காலத்தில் இருந்தது”..என்றாள்

   “அப்படி என்றால் இப்போது உங்களுக்குள் காதல் போன்ற உணர்வுகள் இருக்காதா என்ன?” என்றேன்,


   “அதாவது எங்களுடைய முந்தைய காலத்தில் இந்த மாதிரியான சில அன்பான உணர்வுகள் இருந்தது..இப்போது தொடரும் எங்களின் அறிவியல் வளர்ச்சி,மற்றும் காலநிலை இவற்றில் அந்த அன்பு.காதல போன்ற உணர்வுகள் இல்லாமல் போனது” என்றாள்.

   “அப்படி என்றால் நீங்கள் எப்படி ஒற்றுமையாக அன்பாக இருக்கின்றிர்கள்” என்றேன்

   “உனக்கே தெரியும் இந்த அன்பு,கோபம,காதல போன்றவைகள் எல்லாம் ஹோர்மோன்கள் செய்யும் வேலைதான்...இந்த ஹோர்மோன்கள் எங்களுக்கு சுரப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டதே காரணம்.....இதனால் எங்களுக்கு  இனப்பெருக்கத்தில் பிரச்சினை,அதிக சண்டை சச்சரவுகள்..ஒரு கட்டத்தில் நாங்கள் எங்கள் இனத்தையே அடித்து கொன்று அழித்தோம்.....அதுவும் சில நேரங்களில் உணவுக்காக ...இதனால் எங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த ஹோர்மோன்கள் சுரப்பதற்காக செயற்கையாக மருந்துகள் கொடுக்கப்பட்டன..இதனால் எங்களின் நிலமை கொஞ்சம் சரியானது” என்றாள்

     “அப்படியா உங்களுக்குள் இத்தனை விசயங்களா ..அப்படி என்றால் நீங்கள் அன்பு காட்டுவது ... இனப்பெருக்கம் செய்வது எல்லாம் செயற்கையாக கொடுக்கப்படும் மருந்துகளால்தானா?” என்றேன்

   “ஆமாம் எல்லாம் செயற்கையாக கொடுக்கும் ஹோர்மோன்கள்தான் எங்களை தூண்டுகின்றன ” ..என்றாள்


   “இன்னொன்று தெரியுமா?” என்று அவள் சொல்லிக்கொண்டே அருகில் இருந்த கத்தியை எடுத்து தனது விரலின் ஒரு நுனியை வெட்ட ஆரம்பித்தாள்


    “ஏன் வேட்டுகின்றாய்?” என்று நான் கேட்டு முடிக்கும் முன்னே அவள் வெட்டி முடித்து இருந்தாள்..

    நான் ஆச்சர்யமாக அவள் வெட்டிய இடத்தை பார்த்தேன்...நமக்கு வருவது போல சிவப்பு ரத்தம் ஏதும் வரவில்லை..பதிலாக தேன் போன்ற ஒரு வண்ணம்,அதே திண்மையில்  கொஞ்சம் வெளி வந்து நின்று போனது...

“ஏன் வெட்டினாய்” என்று திரும்பவும் கேட்டேன்..

“இன்னும் சில நிமிடங்கள் பார்” என்றாள்..

     சில நிமிடங்கள் கழித்து அவள் வெட்டிய இடத்தை பார்த்தேன்...அந்த இடத்தில அவள் வெட்டியதால் இழந்த சதை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே இருந்தது..


     “இது எப்படி சாத்தியம்..உனக்கு வெட்டிய இடத்தில இருந்து புதியதாக சதை வளருகின்றது” என்று நான் கேட்டு முடிக்கும்போது அந்த வெட்டிய இடம் முழுவதும் சதையால் நிரம்பி இருந்தது...


    “உங்களுக்கு stem cell கள் இருக்கின்றது..அதே போலத்தான் எங்களுக்கும் சில செல்கள் இருக்கின்றன ....என்ன உங்களது stem cell கள் குறிப்பிட்ட ஒரு முக்கியமான வேலையை மட்டுமே  செய்யும் ...... செல்களை உருவாக்குதல், கருவில் உடல் உறுப்புகள் அமையும் போது அதற்கு தேவையான செல்களை உருவாக்குதல் இந்த மாதிரியான வேலைகளை மட்டும்தான் செய்யும்......அது தொடர்ந்து பிரிந்து வேறு மூல செல்களை உருவாக்கும்..தன்னைத்தானே பிரிதலின்போது போது புதிப்பித்து கொண்டு செல் பகுபாட்டில் தொடர்ந்து ஈடுபடும் போன்ற வேலைகள்...

    அதாவது உங்களது ஸ்டெம் செல்கள் உங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு உறுப்பை உருவாக்க உதவும்... அதுக்கு பிறகு அது சாதரணமாக செல் பகுபாட்டில் ஈடுபடும்...ஆனால் எங்களுக்கு இருக்கும் ஒருவிதமான செல்கள் எங்கள் உடம்பில் உயிர் இருக்கும் வரை அதன் பணியை தொடரும்” என்றாள்.


“இல்லை நீ சொல்வது எனக்கு புரியவில்லை” என்றேன்..

    “அதாவது இப்போது என் கையை உருவாக்க தனியாக ஒருவிதமான ஸ்டெம் செல்கள் வேலையில் ஈடுபடுகின்றது என்று வைத்துகொள், அந்த ஸ்டெம் செல்லானது நான் உயிர் வாழும் வரை அதன் வேலையை முழுமையாக செய்து கொண்டே இருக்கும்..என் கையில் என்ன குறை வந்தாலும் சரி அந்த ஸ்டெம் செல்கள் தேவையான செல்களை வளர்த்து அதை நிவர்த்தி செய்யும்”..என்றாள்

    “அப்படி தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் உன் கை வளர்ந்து கொண்டே அல்லவா இருக்க வேண்டும்” என்றேன்..

     “அதுதான் இல்லை என் கை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்,எப்படி இருக்க வேண்டும் என்று என் பெற்றோரிடம் இருந்த வந்த பண்பியக்கிகள் (gene) ஏற்க்கனவே தீர்மானித்து இந்த ஸ்டெம் செல்களை வழிநடத்தும்..எனவே ஒரு குறிப்பிட்ட எல்லையில் இது தனது வேலையை நிறுத்தும்..ஆனால் அந்த எல்லையை விட எனது கையில் உள்ள செல்கள் குறைந்தால் அதை உடனே நிவர்த்தி செய்யும்” என்றாள்..

     “அப்படி என்றால் உங்களுக்கு செல்களின் இறப்பே இருக்காதா? அப்படி என்றால் உங்களுக்கு மரணம் என்பதே கிடையாதா?” என்ன என்றேன்.

     “அப்படி இல்லை எங்களுக்கு மரணம் உண்டு..நான் உனக்கு சொன்னது அந்த ஸ்டெம் செல்கள் உடல் உறுப்புகள் அமைய காரணமாக இருக்கும் செல்களைத்தான் உருவாக்கும்..அந்த ஸ்டெம் செல்களே இறந்து போனால்...அப்போதுதான் எங்களுக்கு மரணம்.”.என்றாள்..

     “அப்படி என்ன நீங்கள் எங்களைவிட சிறப்பாக சாப்பிடுவிர்கள் .உங்களுக்கு மட்டும் இந்த மாதிரியான ஸ்டெம் செல்கள் கிடைத்து இருக்கின்றது” என்றேன்

     “எங்கள் கிரகத்தில் கிடைக்கும் சில வித்தியாசமான உணவு பொருள்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்..மற்றபடி எங்களுக்கு அங்கு கிடைக்கும் இயற்கை பொருள்கள்..சில நேரங்களில் எங்கள் கிரகத்தில் எப்போதும் இருளாக இருக்கும் மறு பகுதிக்கு சென்று அங்கு இருக்கும் சில உயிர்களை அடித்து சாப்பிடுவோம்” என்றாள்..

    “நான் கொஞ்சம் பயந்து என்ன அந்த உயிர்களை அடித்து சாப்பிடுவிர்களா என்ன?” என்றேன்

    “ஆமாம்”, “அதுசரி கணேஷ்.எல்லாம் சரியாக கேட்டாய் எனக்கு கொடுக்கும் அந்த செயற்கை ஹோர்மோன் மருந்து கடைசியாக எப்போது கொடுக்கபட்டது என்று கேட்கவில்லையே” என்றாள்..

“எப்போது” என்று சாதரணமாக கேட்டேன்

    “அது கொடுக்கும் நேரம் நேற்றோடு முடிந்தது ” என்று அவள் உட்கார்ந்து இருந்த இடத்தில இருந்து எழுந்து சென்று கதவை மூடினாள்..

    “எதுக்கு இப்ப கதவை மூடினாய்?” என்று நான் கேட்டு கொண்டு இருக்கும்போதே அவளது வாயை ஒரு விதமாக கோணலாக திறந்து கொண்டு என் மீது பாய்ந்தாள்

பொற்கொடி... - 1


  (இந்த கதை இப்போது புதியதாக கண்டுபிடிக்க பட்டுள்ள கிரகமான Gliese 581g வைத்து கொஞ்சம் கற்பனை செய்து எழுதி இருக்கிறேன்..அதில் உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்......... கொஞ்சம் நீளமானது...)
 
      டெல்லி பகுதியில் குளிர்காலம் ஆரம்பிப்பதற்கான அறிகுறியாக மாலை வேளையில்
கொஞ்சம் இதமான குளிர்ந்தகாற்று வீசத்தொடங்கியிருந்தது.....

     அதனால் மாலையில் என் அறைக்கு வெளியில் அமர்ந்து அந்த குளிர்ந்த தென்றலை
அனுபவித்துக்கொண்டே...எனக்கு பிடித்த காப்பி (பால் சேர்க்காமல்,சர்க்கரை
மிக குறைவாக,காப்பி பொடி அதிகம் சேர்த்து) குடித்து கொண்டே  புத்தகம் படிப்பது
என்பது எனக்கு மிக பிடித்தமானது..... 

   அந்த வேலையில் உலகம் என்னை பிரிந்து இருக்கும்...எந்த ஒரு கவலை
இல்லாமல்..இருப்பது போன்ற ஒரு உணர்வு...என்ன காப்பி தீர்ந்து
போனால்..அப்போதைக்கு கொஞ்சம் கவலை...

   அப்படித்தான் அன்றும் தொடர்ந்து இருந்தேன்....படித்து கொண்டு இருக்கும்போது சத்என்று ஒரு சத்தம் கேட்டது..அதாவது ஏதாவது ஒன்று மற்றொன்றின் மீது மெதுவாக மோதினால் வருகின்ற
சத்தம்போல இருந்தது..

   அதை அப்போதைக்கு கண்டு கொள்ளவில்லை....தற்செயலாக நான் மேலே பார்க்க அங்கே ஒரு
உருவம் தன் தலைக்கு மேலே இருந்து காத்தாடி போன்ற ஒன்றை கழட்டிகொண்டு
இருந்தது..

   நான் அதை பார்த்தவுடன் பயந்து எழுந்து நான் இருந்த இடத்தில இருந்து கொஞ்சம்
பின் சென்று அது என்ன செய்கின்றது என்பதை பார்த்தேன்...

    அது தனது மேல் இருந்த சற்று கனமான உடுப்புகளை களைவதில் ஈடுபட்டு இருந்தது...அது
முடிந்ததும் நான் இருந்த பக்கம் அதன பார்வையை செலுத்தியது...

   இப்போதுதான் எனக்கு கொஞ்சம் நிம்மதி அதை பார்க்கும்போது சாதாரண பெண் போலத்தான்
இருந்தது...ஆனால் எப்படி வானத்தில் இருந்து சத் என்று குதிக்க முடியும் என்று
யோசிக்கும்போது கொஞ்சம் பயம்..மனதுக்குள்..

   அது பெண்ணா அல்லது வேறு ஒன்றா என்று உங்களுக்கும் எனக்கும்  தெரியாத நிலையில் அதை அதுஎன்றே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்...


அது என்னை நோக்கி வரத்தொடங்கியது..நான் பயந்து கொஞ்சதூரம் பின்வாங்கி ஒரு
இடத்தில நிலையாக நின்றேன்...

  என்னை நெருங்கி வந்த அது என்னைவிட சற்று தொலைவில் நின்று என்னையே முறைத்து
பார்ப்பது போல இருந்தது...


சில வினாடிகள் வைத்த கண் வாங்காமல் என்னை பார்த்து கொண்டு இருந்தது..


   பயம் அதிகமாகி நாக்கு சரியாக பேச வராமல் தயங்கி யார் நீ? உனக்கு என்ன வேண்டும்
என்று கேட்டேன்..

   அதனிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை..இப்போதும் அதன் பார்வையை என் மீது
தொடர்ந்து கொண்டு இருந்தது..



   நான் நகர்ந்து போகலாம் என்றுதான் நினைத்தேன்..அது என்னை ஏதாவது
செய்துவிட்டால்..இன்னும் நான் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கு...நல்ல
பெண்ணை பார்த்து காதலிக்க வேண்டும்..திருமணம் செய்யவேண்டும் ..கதைகள்
எழுதவேண்டும்...


  அது இப்போது தனது பார்வையை என் பக்கம் இருந்து விளக்கி தனக்குத்தானே ஏதோ
யோசிப்பது போல இருந்தது...


பின் என்னை பார்த்து...பயப்பட தேவை இல்லை..கணேஷ்.....நான் ஒன்றும் செய்யமாட்டேன்என்றது..


   இதை கேட்டதும் எனக்கு பயம் அதிகமானது...வானத்தில் இருந்து குதித்த ஒரு பெண்
போன்ற ஒன்றுக்கு என் பெயர் எப்படி தெரியும்...ஒருவேளை கடவுள் இல்லையென்று
கண்டபடி எழுதுவதால் ஒருவேளை தண்டனை கொடுக்க ஏதாவது வந்து
இருக்குமோ..என்றெல்லாம்..மனம் யோசித்தது...


   இதை நான் யோசித்து கொண்டு இருக்கும்போதே அந்த மாதிரி எல்லாம் இல்லை
கணேஷ்..நான் ஒன்றும் உனக்கு தண்டனை கொடுக்க வரவில்லைஎன்றது..

   இப்போது என் பயம் பலமடங்கு கூடியிருந்தது...எப்படி நான் மனதில் யோசிப்பது
அதுக்கு தெரியும்...ஏதோ விசித்திரமானது என்று நான் நினைக்கும்போதே... 

நான் அப்படி ஒன்றும் விச்திரமானவள் இல்லைஎன்றது..

  இப்போது நான் ஒன்றை கவனித்தேன் அது தன்னையே அவள்என்று
சொன்னது..அப்படிஎன்றால் அது இல்லை அவள் ..ஒரு பெண்....

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துகொண்டு நான் யோசிப்பது உனக்கு எப்படி தெரியும்என்றேன்...

அது ஒன்றும் எங்களுக்கு பெரிய விசயம் இல்லை என்றாள்

அப்படி என்றால் இவள் தனி ஆள் இல்லை என்று நினைத்துகொண்டேன்..

,இப்போதைக்கு நான் தனியாளுதான் வேறு யாரும் இல்லை என்றாள்..

   நான், இவள் முன்னாடி வைத்து எதையுமே யோசிக்க கூடாது போல என்று நினைத்துகொண்டே வேறு திசை பார்த்தேன்..

   அப்படிஎல்லாம் இல்லை கணேஷ்..நான் என்னை பற்றி சொல்லிவிடுகிறேன்..நான் ஒனறும் உனக்கு தீமை செய்யமாட்டேன் என்றாள்..

 சரி நீ யார்? எப்படி மேலே இருந்து வந்தாய்? எப்படி தமிழ் பேசுகிறாய் ? என்று பயம் கலந்த வேகத்தில் கேட்டுவைத்தேன்...

   உனது பாசையில் சொல்வதென்றால் நான் ஒரு வேற்றுகிரக வாசி...சில நாட்களுக்கு முன் நானும் என் குழுவும் விண்வெளியில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும்போது  இந்த இடத்தில இருந்து சில கதிர்கள் எங்களை வந்து அடைந்தன..

   அதை பின்பற்றும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது இருக்கின்றது..அதை பின்பற்றி வந்தேன்...நான் இறங்க நினைத்த இடம் வேறு...உங்கள் கிரகம் சுற்றுவதினால் அந்த சுழற்சியின் மூலமாக எனது இறங்கும் இடம் மாறி இதுவாக அமைந்தது.என்றாள்..

நான் இவள் சொல்லுவதை நம்புவதா இல்லையா என்று குழம்பியிருந்தேன்..

  அவள் தொடர்ந்தாள்...நான் எந்த கிரகத்தில் இருந்து வந்தேன் என்பது உனக்கு தெரிய எளிய வழி ..இங்கு  இருந்து எந்த கிரகம் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிந்தால் அதுதான் என் கிரகம்..ஏனென்றால் இங்கு இருந்துதான் எங்களின் கிரகத்திற்கு கதிர்கள் வந்தன  என்றாள்..

  நான் கொஞ்சம் யோசித்து பார்த்தேன்..சில நாட்களுக்கு முன் ஒரு புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கபட்டதை படித்து இருந்தேன்..அந்த கிரகம் Gliese 581 என்ற ஒரு dwarf நட்சத்திரத்தை சுற்றிவருவதாக கண்டுபிடித்து இருந்தார்கள..அதான் பெயர் Gliese 581g ..இதோடு சேர்ந்து சில கோள்களும் சுற்றிவருகின்றன என்பதையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள்..


  ஒருவேளை அவள் இந்த கிரகவாசியாக இருப்பாளோ என்று நினைத்தேன்..அதை எப்படி உறுதி செய்வது...அந்த கோள்களின் தன்மைகள் பற்றி கொஞ்சம் படித்து இருந்தேன்..அதை பற்றி இவளிடம் கேட்டால் உண்மை தெரிந்துவிடும்...

    ஆம் சில நாட்களுக்கு முன் ஒரு கிரகம் கண்டு பிடித்தார்கள்..அதன் அமைப்பு பற்றி சொல்கிறேன் அது நீ இருக்கும் கிரகத்தோடு ஒத்துபோகிறதா என்று சொல் என்றேன்..

சரி சொல்..நான் சொல்கிறேன் என்றாள்

உன் கிரகம் தன்னை தானே சுற்றாது அப்படித்தானே..என்றேன்.

, ஆம் என்றாள்

   அருகில் நான் குடிக்க வைத்து இருந்த தண்ணீரை காட்டி இது மாதிரி திரவம் அங்கு இருக்கா ? என்றேன்...
அவள், ஆமாம் நிறையா இருக்கு என்றாள்..

   நீ இங்கு நடக்கும்போதும், நகரும்போதும் உன் எடையை எப்படி உணர்கின்றாயோ உனது கிரகத்தில் இதே போன்றுதான் இருக்குமா? என்றேன்.

ஆமாம்....இதே ஈர்ப்பு அளவு விசைதான் என்றாள்..

   நீ பார்க்கும் இந்த கிரகத்தைவிட உங்களின் கிரகம் 1.4 மடங்கு பெரியதாக இருக்குமா என்ன? என்றேன்
ஆமாம் கிட்டத்தட்ட என்றாள்..

    அப்படி என்றால் உன் கிரகத்துக்கு நாங்கள் வைத்து இருக்கும் பெயர் Gliese 581g..இந்த கிரகம்தான் சில தினங்களுக்கு முன் எங்களால் கண்டுபிடிக்க பட்டுள்ளது..அது சரி அந்த கிரகம்தான் இங்கு இருந்து வெகு தொலைவில்(கிட்டத்தட்ட 20 light years)  இருக்கின்றதே..எப்படி நீ இங்கு வந்தாய்? என்றேன்..

    எங்கள் கிரகத்தில் இருந்து விண்வெளியில் ஒரு சிறு ஆய்வுகூடம் போன்று ஒன்றை அமைக்கின்றோம்...அதில் அதற்கான வேலையில்  நாங்கள் எங்கள் கிரகத்தை விட்டு வெகு தொலைவில் இருந்தோம்....அதான் அங்கு இருந்து இங்கு வர எனக்கு குறைந்த நேரம் பிடித்தது என்றாள்..

  அப்படியே என்றாலும் இவ்வளவு சீக்கிரம் எப்படி? என்றேன்..

    நாங்கள் உபோயோகிப்பது ஒளியின்  வேகம் கொண்ட ஒரு சாதனம்..அந்த சாதனத்தை பயன்படுத்திதான் இங்கு நான் வந்தேன் என்றாள்..

     அப்படி என்றால்..இங்கு ஐன்ஸ்டீன் தாத்தா சொன்னதை நீங்கள் பொய்யாக்கி விட்ட்ர்களா என்ன? என்றேன்..

  என்ன சொல்கிறாய் ஒன்றும் புரியவில்லை எனக்கு...என்றாள்..

நான், சரி நீ முதலில் சொல்..நீ எப்படி தமிழ் பேசுகின்றாய்..அதுவும் என்னை போல பேச்சு வழக்கில்.என்றேன்..

    நாங்களும் மொழியை பயன்படுத்தி பேசுவோம்..ஆனால் அதிகம் இல்லை..எங்களுக்கு ஒரு சிறப்பு அம்சம் இருக்கின்றது....அதாவது மூளையில் தகவல் பரிமாற்றங்கள் செய்ய உங்களைப்போலவே எங்களுக்கும் நியுரான்கள்(neurons) உண்டு ..உனக்கு தெரியும் அவை தகவலை எப்படி கடத்துகின்றது..என்று....அதில் உள்ள பொட்டாசியம்,சோடியம்.மற்றும் ஐயன்ஸ்..இவைகள்தான் மூல காரணம்.அப்படி கடத்தும் போது அது ஒரு மாதிரியான குறைந்த மின் அலைகளை உருவாக்கும்....அந்த மின் அலைகளை எங்களால் உணர முடியும் அதோடு இல்லாமல் எங்களிடம் ஒரு கருவி உள்ளது நாங்கள் தெரிய வேண்டியதை அதில் கொடுத்து மெல்லிய மின் அதிர்வுகளாக மாற்றி அதை எங்களின் மூளையால் விரைவாக பதிவு செய்துகொள்வோம். என்றாள்


   அப்படி என்றாள் எல்லோருடைய அதிர்வுகளும் சேர்ந்து உங்களின் புரிதலை சிக்கலாக்கி விடாதா? என்றேன்..

   அதற்கு அவள், அப்படி இல்லை..அந்த அதிர்வுகளை நாங்கள் எல்லா நேரங்களிலும் உணரும் விதத்தில் இருக்காது...அதாவது எனக்கு எப்போது உன்னோடு பேச வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே எனது மூளை எனக்கு கட்டளை இடும்..அப்போதுதான் எனது அந்த பண்பு வேலை செய்யும் என்றாள்..

  அதான் நான் நினைப்பதெல்லாம் நீ சரியாக சொன்னாயா,....அது சரி எப்படி தமிழ் பேசுகின்றாய்.?.என்றேன்..

   இதுவும் அதே ரகம்தான்...உனது மூளை எங்களின் மூளையோடு ஒப்பிடும்போது செயல்பாடுகளில் மிக குறைவானது...அதனால் உனது மூளையை முழுவதும் படிக்க எனக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை..என்றாள்..

     அப்படி என்றால் இதுவரை நான் என்னென்ன படித்து தெரிந்து வைத்து இருக்கின்றேனோ,எனக்கு என்னென்ன தெரியுமோ அது எல்லாம் உனக்கும் தெரியும் அப்படித்தானே.என்றேன்

  ஆமாம்..இப்போது உனது மூளையில் ஏற்ப்படும் புதிய எண்ணங்களை தவிர மற்ற உன் மூளையில் உள்ள விசயங்கள் அனைத்தும் என்னிடம் என்றாள்...

  தொடக்கத்தில் அதான் என்னை அப்படி உற்று பார்த்துக்கொண்டு இருந்தாயா? என்றேன்..

   ஆம்..உனது மூளையின் தகவல்களை..எனக்குள் சரிபடுத்திகொண்டு இருந்தேன் என்றாள்..

எங்களுக்குள் சிரிது மௌனம் இருந்தது..

   அவள்தான் தொடர்ந்தாள்..என்ன உன் மூளையில்..பல விசயங்கள் குழம்பி கிடக்கின்றன..நிறையா குழம்பி பின் தெளிவு அடைவே போல...அதில் சில விசயங்கள் எங்களுக்கும் உண்டு என்றாள்..

  ”அப்படியா என்று மட்டும் சொல்லி வைத்தேன்..

      என் மூளையை படித்ததில் இருந்து இங்கு உள்ள சில விசயங்களை நீ புரிந்து கொண்டு இருப்பாய் என நினைக்கிறேன்..என்றேன்..

     அதற்கு அவள், ஆமாம்..கண்டிப்பாக..அதுசரி நீ ஏன் ஒருவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க உனது மூளையை பழக்க படுத்திவைத்து இருக்கிறாய்...அந்த பெயர்கூட...ம்ம்ம்..... ஐன்ஸ்டீன்...என்றாள்..

    . ஆமாம் எனக்கு ரெம்ப பிடித்தவர் அதான் அப்படி....அதுசரி நீ எப்படி திரும்ப போவாய்?என்ன விசயமாக இங்கு வந்தாய்? என்று கேட்டேன்....

       , நான் இங்கு வந்தது தற்செயலான விபத்து..எனக்கு இட்ட ஆணை..இந்த கிரகத்தின் வெளிப்புறத்தில் இருந்து இங்கு என்ன இருக்கிறது என்று பார்ப்பதுதான்...ஆனால் ஒரு விபத்தாக அதிக ஈர்ப்பு விசையின் காரணமாக என்னை உள்ளே இழுத்துவிட்டது..உடனே...எனது கட்டளை அரங்கத்திற்கு தொடர்பு கொண்டேன்..அவர்கள் சில வழிமுறைகள் சொன்னார்கள்..அதன்படி நான் பாதுகாப்பாக தரை இறங்கினேன் ..ஆனால் அவர்கள் சொன்ன அளவுகள கொண்ட இடம் வேறு..இந்த இடம்வேறு..அவர்கள் இந்த கிரகத்தின் சுழற்சியை கவனத்தில் கொள்ளவில்லை என நினைக்கிறேன் ஏனென்றால் எங்கள் கிரகம் தன்னைத்தானே சுற்றாது என்றாள்..

சரி அப்படின்னா நீ திரும்ப போக முடியாதா? என்றேன்..

      அதுதான் எனக்கும் சந்தேகம் ..ஒருவேளை என்னை தேடி அவர்கள் வரலாம்..அப்படியே வந்தாலும் அவர்களுக்கும் இந்த இடமாற்று பிரச்சினை இருக்கும்..என்றாள்..

நான், சரி உனது கிரகத்தை பற்றி கொஞ்சம் சொல்லேன் என்றேன்..

      அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை...எல்லாமே இதை போன்றுதான்...இதே தண்ணீர்,இதே காற்று, என்ன கொஞ்சம் இயற்கை சூழ்நிலைகள் வேறுபடுகின்றன..அதாவது, எங்களின் கிரகம் தன்னை தானே சுற்றாது என்பதால்..எங்கள் கிரகத்தில் எப்போதுமே ஒரு பக்கம் பகலாகவும் ஒருபக்கம் இரவாகவும் இருக்கும்...அதாவது கிரகத்தின் ஒரு பக்கம் எங்களது நட்சத்திரத்தை பார்த்த படியே இருக்கும்..என்றாள்..

   எப்படி பின்னர் சமாளிக்கின்றிர்கள்?..என்றேன்..

      இதில் என்ன சமாளிக்க வேண்டியது இருக்கின்றது..என்ன இரவு இல்லை அவளவுதான்..மறுபக்கத்தில் எப்போதும் இரவு..அங்குதான் உறைநிலையில் நீர் இருக்கின்றது..உனது மொழியில் சொல்வதென்றால் கடல்..அப்புறம் சில நட்சத்திர ஒளியில் வளரத தாவரங்கள்,விலங்குகள் இருக்கின்றன...அவர்களுக்கும் எங்களுக்கும் அடிக்கடி சண்டை வரும் என்றாள்..

நான், சரி உங்களின் உணவு வகை,பழக்கவழக்கங்கள் எல்லாம் எப்படி? என்றேன்..

      அப்படி ஒன்றும் வித்தியாசம் இல்லை..இங்கு இருப்பதை போலத்தான்..கொஞ்சம் பேச்சு குறைவு....புரிதல் அதிகம்..அறிவியல் ஆதிக்கம் அதிகம்,...பொய் புரட்டு இல்லை..என்றாள்..

நான், சரி உங்களுக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லையா?.என்றேன்..

     அதான் உன்னிடம் கேட்கவேண்டும் என நினைத்தேன்..யார் இந்த கடவுள்..உனது மூளையில் இந்த கடவுளுக்கு எதிராக மிக கோபமான எண்ணங்களே பதிவாகி இருக்கின்றன.என்றாள்..

     அது ஒன்றும் இல்லை..இங்கு உள்ள மக்கள் உனது கிரகம்,எனது கிரகம்.இதை உள்ளடக்கிய எல்லாத்தையும் ஒரு சர்வசக்தி வாய்ந்த ஒன்றுதான் படைத்தது என்று நம்புகிறார்கள்..அதுதான் கடவுள்..என்றேன்..

      கொஞ்சம் சிரித்து கொண்டே..எங்கள் கிரகத்தில் எல்லாம் அப்படி இல்லை..அதற்கு எங்கள் அறிவும் இடம் கொடுக்கவில்லை,அறிவியலும் இடம் கொடுக்கவில்லை என்றாள்..

  நீங்கள் எல்லாம் புரிந்தவர்கள்,அறிவியல் தெரிந்தவர்கள் என்றேன்..

மீண்டும் எங்களிடத்தில் மௌனம்..

  அந்த நேரத்தில்தான்..இவள் வேற்றுகிரகவாசி ஆயிற்றே என்று அதிசயமாக பார்த்தேன்..அப்படி ஒன்றும் வித்தியாசம் இல்லை..பூமியில் உள்ள பெண்களைபோலவே இருந்தாள்...என்ன ஒரு சில மாற்றங்கள்...நிறம்,முடியின் அளவு,போன்றவைகள்..முக்கியமாக அவர்களுக்கு ESTROGEN கொஞ்சம் குறைவாக சுரந்து இருப்பதை என்னால் காணமுடிந்தது..

  அவள்,கணேஷ் நீ என்ன நினைக்கின்றாய் என்பது எனக்கு தெரியும் என்பதை நீ மறந்துவிடாதே என்றாள் சிரித்து கொண்டே..

    ”சரி அடுத்த உன் திட்டம் என்ன?என்றேன்..

     அதை பற்றி எனக்கு எந்தவொரு எண்ணமும் இல்லை..என்ன செய்வதென்று தெரியவில்லை என்றாள்..

சரி இப்போதுதான் இரவாகிவிட்டதே எங்கு தங்குவே..என்ன சாப்பிடுவே என்றேன்..

   ஏன் நீ சாப்பாடு போட மாட்டிய என்ன? என்றாள்

   எனக்கு கொஞ்சம் பயம்,எங்கு இவள் என்னோடு தங்கி விடுவாளோ என்று,அப்படி தங்க நினைத்தால் என் நிலைமை ..யோசித்து பார்க்கவே ..ரெம்ப மோசமாக இருக்கும்..

  சரி இன்று இரவு வெறும் ரொட்டியும் வெண்னையும்தான் எனக்கு சாப்பாடு.... உனக்கு சம்மதம் என்றால் என்னோடு சாப்பிடு என்றேன்..

     கண்டிப்பாக அவள் ரொட்டி(bread) என்றால் என்ன,வெண்ணை என்றால் என்ன என்பதை என் மூளையை முழுவதும் படித்ததில் இருந்து தெரிந்து கொண்டு இருப்பாள்...

   ”ஒன்றும் பிரச்சினை இல்லை..நான் சாப்பிடுகிறேன் என்றாள்..

அடுத்து எனக்கு ஒரு சந்தேகம்..சாப்பிட்டு விட்டு இவள் இங்கேயே தங்கி விட்டால் என்று நினைத்தேன்..

  அதற்குள் அவள், கவலைப்படாதே கணேஷ் உனக்கு பிரச்சினை என்றால் நான் இங்கு தங்கவில்லை..நான் எங்காவது போய் விடுகிறேன் என்றாள்..

   எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும் இவள் எங்கே போவாள்.என்ன செய்வாள்,வேற்று கிரகவாசி என்று பார்த்தவுடனே தெரியாவிட்டாலும்...இவளால் என்ன செய்யமுடியும் என்ற கவலை....இவளிடம் இருக்கும் ஒரு பெரிய விஷயம் மற்றவர்களின் மூளையை படிப்பது..இதுவே இவளுக்கு பெரிய ஆயுதம்..எப்படியாவது சமாளித்து கொள்வாள்..என்று நினைத்துகொண்டே சாப்பிட போனோம்..

   சரி நான் கிளம்புகிறேன் என்றாள்

   நான், இதோ பார்..நீ என்னிடம் படித்தது...கொஞ்சம் தமிழ்,அரைகுறை ஹிந்தி மட்டும்தான்...நீ வெளியில் சென்று நிலைக்க வேண்டும் என்றால்..இன்னும் சில விசயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்றேன்..
   சரி கணேஷ் உன் அறிவுரைக்கு நன்றி..நான் பார்த்து கொள்கிறேன் என்றாள்..

  எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது..அவள் போகும்போது....அன்றைய இரவு கொஞ்சம் தூங்க கஷ்டப்பட்டேன்..

   அடுத்த ஒருநாள் சில தடவை அவளைப்ற்றிய கவலை வந்தது..என்ன செய்கின்றளோ..என்று..அப்படியே இரண்டு நாள்கள போயின..

   அன்று மாலை வழக்கம் போல வெளியில் உட்கார்ந்து இருக்கும்போது..கிழே உள்ளவர்கள..என்னை பார்க்க ஒரு பெண் வந்திருப்பதாக சொன்னார்கள்..

எனக்கு கொஞ்சம் அவள்தான் அது என்று சந்தேகம்...

அதற்குள் அவள் மேலே வந்துவிட்டாள்...பார்த்தேன் அவளேதான்...கொஞ்சம் மாறியிருந்தாள்..

பார்த்தோம் ஒன்றும் பேசவில்லை..

  என்ன என்ன ஆச்சு ஏதும் பிரச்சினையா? என்றேன்..
     எப்படி கணேஷ் இங்கு வாழ்கிறாய்..எல்லாம் எனக்கு கஷ்டமாக இருக்கின்றது..சிலர் உண்மையாக இருக்கிறார்கள்..சிலர் முற்றிலும் எப்போது ஏமாறுவர்கள்..ஏமாற்றாலம் என்று காத்து இருகிறார்கள்..என்றாள்

  ஆமாம், இங்கு அப்படித்தான்..உன் கிரகத்தில் அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்..முடிந்த வரையில் நீ திரும்பி போக பார் என்றேன்..

        அதுக்குத்தான் நான் முயற்சி செய்து ஏதாவது வழிகள் இருக்கா என்று பார்த்தேன்..அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை....என்றாள் வருத்தமாக..

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

      கணேஷ் இங்கு உள்ள வாயுக்கள் ஏதோ ஒன்று எனக்கு ஒவ்வாமையை தருவதாக இருக்கின்றது..எனக்கு தெரிந்து என்னால் அதிக நாள் இங்கு என்னால் இருக்க முடியாது என நினைக்கிறேன் என்றாள்..

   அது என்ன வாயு..இதுவேறு பிரச்சினையா என்றேன்..

       ஆம்..எங்கள் கிரகத்தில் எங்களுக்கு உதவும் சில வாயுக்கள் இங்கு இல்லாமல் போனாலும் இந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்றாள்...


  சில நாட்கள் மட்டும் இங்கு இருந்து கொள்கிறேனே..தயவுசெய்து கணேஷ்..முடியாது என்று சொல்லாதே என்றாள்..

  அந்த நிலையில் என்னால் என்ன சொல்வதென்றே குழப்பம்..கொஞ்சம் பரிதாபம்.பயம்..எல்லாம் குழப்பி இருந்தது...

அவள் என்னையே பார்த்து கொண்டு இருந்தாள்..

  நான்,”சரி தங்கிகொள்..நீ போகும் வரை என்பதையும் சொன்னேன்...அதாவது அவள் போகவேண்டும் என்ற அர்த்தத்தில்..

அவள் சந்தோசமாக, என் கையை பிடித்து நன்றி கணேஷ் என்றாள்.கை மென்மையாக இருந்தது...

    ”உங்கள் கிரகத்தில் கூட இந்த நன்றி போன்ற விசயங்கள் நடக்குமா என்ன என்றேன்..

   ,”இல்லை..இங்கு வந்து உன்னிடம் கற்றுகொண்டதுதான் என்றாள்..


    ”அப்படி என்றால் உங்களின் கிரகத்தை பற்றி கொஞ்சம் சொல்லேன் என்றேன்.

     கண்டிப்பாக சொல்கிறேன்..உனது சந்தேகங்களை தீர்க்கிறேன்..ஆனால் அதுக்கு முன்னாடி எனக்கு ஒன்று நீ செய்ய வேண்டும் என்றாள்..

    அப்படி என்ன நான் செய்யவேண்டும் என்றேன்..

      ”கணேஷ் எனக்கு ஒரு நல்ல பெயரை வையேன்..என்றாள்..

     ”ஏன் உங்கள் கிரகத்தில் உனக்கு பெயர் இல்லையா என்ன?” என்றேன்

      ”இருக்கு ஆனால் அந்த பெயர் இங்கு உனக்கு பொறுத்தமாக இருக்காது..அதான் நீ ஒரு பெயர் வை என்றாள்.

நான் அவளுக்கு என்ன பெயர் வைக்க என்று யோசித்தேன்.

சிறிது நேரம் கழித்து நான் உனக்கு வைக்கும் பெயர் பொற்கொடி என்றேன்..

அவள் மெல்ல சிரித்தாள்..




(அந்த பெண்ணுக்கு பொற்கொடி என்று பெயர் வைக்க காரணம்..எனது பிறந்த நாள் பரிசு என்ற பதிவில் நான் போட்ட புதிருக்கான விடையும் இதுதான்...மேலும் இந்த கதையை தொடரவும் எண்ணம இருக்கின்றது..படித்துவிட்டு சொல்லுங்கள் எப்படி என்று...)