புது - 1

      கடிதத்தை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் இதில் உள்ள விசயத்தை குறிப்பிட்ட காலம்வரை யாருக்கும் தெரியாமல் வைத்து இருக்க வேண்டும்...இந்த கடிதம் உங்களை சேர்ந்ததற்கான காரணம், எங்கு இருந்து வந்து இருக்கிறது போன்ற காரணங்கள் கீழே படிக்கும்போது உங்களுக்கு விளங்கும்.

       எதற்காக உங்களின் தகவல் கொண்ட ஒரு ஒளிக்கற்றை எங்களின் கிரகத்துக்கு வர வேண்டும், அதன் அர்த்தங்கள் ஏன் எங்களுக்கு புரிய வேண்டும்? எல்லாமே ஆச்சர்யம். நீங்கள் என்ன காரணத்திற்கு அதை அனுப்பினீர்கள் என்று எங்களால் ஓரளவு கணிக்க முடிந்தது.

      நீங்களும் எங்களைப் போலவே வேற்று கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கலாம் அல்லது தெரியாமல் வந்து இருக்கலாம். உங்களை போலவே நாங்களும் பல ஆண்டுகளாக வேற்று கிரக ஆராய்ச்சியில் இருக்கிறோம். இந்த ஒளிக்கற்றை எங்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இல்லையென்றாலும் எதிர்பாராமல் கிடைத்த ஒரு வாய்ப்பு. அதை முழுதும் பயன்படுத்திக் கொள்வதுதான் எங்களின் எண்ணம். அதன் தொடக்கமாகத்தான் இந்த கடிதம்...

       இந்த கடிதம் சேர்ந்த நேரத்தில் இருந்து சில நிமிடங்களில் எங்கள் கிரகவாசி உங்களின் இருப்பிடம் சேர்ந்து இருப்பான். அவன் வந்தது உங்களின் ஒளிகற்றைக்கு நாங்கள் அனுப்பிய பதில் கற்றையை பின்பற்றித்தான். என்னதான் பல வருடங்கள் முயற்சித்தும் ஒளியின் வேகத்தில் பயணிக்க எங்களால் முடியவில்லை. அதுதான் அந்த சில நிமிட இடைவெளி. நீங்கள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தருணத்தில் இருந்தால் எங்களை மன்னிக்கவும்.

      இப்போதைக்கு எங்களின் ஒரு ஆள் தங்கத்தேவையான இடத்தை ஏற்படுத்தி கொடுங்கள். உங்களின் காலநிலை என்னவென்று அறியோம், அதைப்  பற்றி கவலை வேண்டாம் எங்கள் ஆள் பார்த்துக்கொள்வான். அவனுக்கு தேவையான உதவிகளை மட்டும் செய்தால் போதும்.

     அவன் உங்களின் கிரகத்தில் நாங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து எங்களுக்கு அனுப்புவான், பின்னர் ஒரு குழு வந்து இறுதிகட்ட ஆய்வை மேற்கொள்ளும். பின்னர் எங்களின் விஜயம் உங்களின் கிரகத்துக்கு எப்போது எப்படி என்று நாங்கள் தீர்மானிப்போம்.

      எங்களின் வருகை எந்த விதத்திலும் உங்களுக்கு தொந்தரவாக இருக்காது. சொன்னதுபோல எங்களுக்கு கிடைத்த இந்த அறியவாய்ப்பை நமக்குள் பலப்பரிட்சை செய்து தீர்த்துக்கொள்ள விரும்பவில்லை. ஏற்கனவே இந்த ஆராய்ச்சியில் நிறைய இழந்து இருக்கிறோம். நாங்கள் ஆய்வுக்கு அனுப்பிய சிலர் இதுவரை எங்கள் கிரகத்துக்கு திரும்பியே வரவில்லை. அவர்கள் வேற்று கிரகத்தை அடைந்து அங்கு உள்ளவர்களால் பாதிப்படைந்தார்களா? இல்லை பயணத்தில் பிரச்சினையா? எதுவும் எங்களுக்கு தெரியாமலேயே அவர்களை இழந்து இருக்கிறோம்.

    ஆகவே எங்களுக்கு இதில் முழுவதும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். திரும்பவும் உறுதியளிக்கிறோம், எங்களால் உங்களுக்கோ, கிரகத்துக்கோ எந்தவித தீமையும் வராது.  அனேகமாக எங்கள் ஆள் வந்து இருப்பான், நம்பிக்கையுடன்...



     இதைப் படித்துக் கொண்டு இருக்கும்போதே என் பின்னால் ஒரு வித்தியாசமான சத்தத்துடன் அந்த உருவம் வந்தது. உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து வேகமாய் எழுந்து பயந்து நகர... அது என்னை கவனிக்காமல் தனது மேல் இருந்த titanium போன்ற தகடுகளை தனது நான்கு கைகளால் கழட்டிகொண்டு இருந்தது..

    அதன் இரு கைகள் நம்ம்மைப்  போல் நிலையாக இருக்க மற்ற இரு கைகள் அதன் இடுப்புப் பகுதியில் இருந்து மேலும் கீழும் நகரும் படி இருந்தது. இன்னும் அது தனது வேலையில் லயித்து இருக்க, சொல்ல முடியாத பயம் எனக்கு. என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் நான்...

     தனியாக சில முயற்சிகள் செய்து பார்க்கலாம் என்று சில தகவல்கள் கொண்ட ஒளிக்கற்றைகளை விண்வெளியில் பரவவிட்டேன். இந்த நிலை வருமென்று நினைக்கவில்லை. நீண்ட நாட்களாக நம் மனித இனம் முயற்சிப்பதுதான். இதில் நான் கொஞ்சம் அனுப்பிய ஒளிக்கற்றையில் தகவல்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் தன்மையை வேறுமாதிரி அமைத்து இருந்தேன். அதுதான் இந்த வேற்று கிரகவாசிகள் எளிதாகப்  புரிந்துகொண்டு அதே முறையில் தகவல் அனுப்பியதோடு அவர்களில் ஒருத்தனையும் அனுப்பியிருந்தார்கள்..

      தனது உடலில் இருந்த தகடுகள் போன்றவற்றை முழுதும் அகற்றியிருந்தது. உடலில் நமக்கு இருக்கும் இணைப்புகள் போல் இல்லை. எல்லாம் ஒரே கட்டமைப்பில் இருந்தது. ஆனால் தேவையான இடத்தில் வளைந்து கொடுக்கும் அமைப்பு. அதை நடக்கும்போது பார்த்தேன். கால் ஒரு குறிப்பட்ட இடத்தில மட்டும் வளைந்து கொடுத்தது. அங்கு இணைப்பு இல்லை.

    முடி இல்லை, எல்லாம் மலுக்கென்று இருந்தது. மூக்கு இல்லை. வாய் இருந்தது. உயரம் நம்மைவிட கொஞ்சம் அதிகம். காது வெறும் ஓட்டையாக இருந்தது. கண் ஒரு நிரந்தரமான விலகாத திரையால் மூடப்பட்டு இருக்க உள்ளே ஒரே கலரில் உருண்டையாக இருந்தது. தலை நம்மைப் போல் திரும்பியது. ஆனால் இணைப்பு இருப்பதாக தெரியவில்லை. மற்ற அமைப்புகள் நம்மை ஒத்திருந்தன.

     பயத்தில் இருந்த நான் எனது தாய்மொழியிலேயே முதல் கேள்வியை கேட்டுவைத்தேன்..

"நீங்கள் யார்?"

"எங்களைத்தான் நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்து இருக்கின்றீர்களே" என்றது

எனக்கு ஆச்சர்யம் எப்படி இது தமிழ் பேசுகின்றது...கேட்டேவிட்டேன்..

"உனக்கு எப்படி எனது மொழி தெரியும்?"

"உனது மொழியென்று இல்லை...எனக்கு யாருடனும்  தகவல் பரிமாற்றம் செய்யமுடியும்"

"எப்படி?" என்றேன்

      " என்னால் பரிமாறிக் கொள்பவரின் மூளை எந்த மாதிரியான தகவலை கிரகித்து கொள்ளும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும், நாங்கள் எங்களுக்கான மொழியில் பேசினாலே போதும் எங்களுக்குள் இருக்கும் ஒரு அமைப்பு தானாகவே எதிரில் இருப்பவரின் மூளைக்கு ஏற்றவாறு மொழிபெயர்த்து கொடுக்கும். இந்த அமைப்பு எங்களில் எல்லோர்க்கும் இல்லை. யார் வேற்று கிரக ஆராய்ச்சிக்கு செல்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான்"

   "சரி ஏற்கனவே எங்களை அறிந்து இருக்கீறிர்கள் என்று சொன்னாயே அது ஏன்?"

     "வருகின்ற வழியில்  எங்களை போல் உருவம் கொண்ட சில சிற்பங்களை, படங்களை பார்த்தேன். அதுவும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் எங்களின் உருவத்தை உங்களின் உருவத்தோடு ஒத்துபோவதுபோல கொஞ்சம் மாற்றியிருக்கீறிர்கள்........அந்த இடங்கள் கூட மிக உயரமான, கோபுரங்கள் கொண்டவையாக இருக்க மக்கள் கூட்டம் எங்களவர்களை என்னமோ செய்துவிட்டு செல்கிறார்கள்.அவர்கள் என்னைபோலவே வேற்று கிரக ஆராய்ச்சிக்கு வந்தவர்கள் அவர்களை நீங்கள் என்ன செய்தீர்கள்? ஏன் திருப்பி அனுப்பவில்லை? அனேகமாக அவர்களின் ஆயுள் காலம் முடிந்து இருக்க வேண்டும். பின்னர் ஏன் அவர்களை சிற்பமாக, ஓவியமாக வைத்து இருக்கிறிர்கள்?" என்று அது கேட்டுகொண்டு இருக்க எனக்கு கொஞ்சம் உண்மை புரிய ஆரம்பித்தது. அதே பயத்தில் என்னையறியாமல் சுவற்றோடு சரிந்து உட்கார்ந்து இருந்தேன். அப்படிஎன்றால் வந்து இருப்பது.....



இது  தொடர்கதை அடுத்த பகுதி  - புது - 2

11 comments:

Unknown said...

try this http://developers.facebook.com/docs/reference/plugins/like/

கணேஷ் said...

முயற்சி செய்து பார்க்கிறேன்

நன்றி

TERROR-PANDIYAN(VAS) said...

அட கடவுளே... :))

கணேஷ் said...

என்னாச்சு சார்??

TERROR-PANDIYAN(VAS) said...

கடைசியில் கடவுள் ஒரு வேற்று கிரகவாசியா? :)))

கணேஷ் said...

தெரியலை சார்? நீங்க என்ன நினைக்கிறிங்க??))

எஸ்.கே said...

அப்ப பாவம் வேற்றுகிரகவாசிகள் கிட்ட கடவுளே இல்லையா!:-)

கணேஷ் said...

அவங்க பாவமா நம்ம பாவமா??

அவங்க நிம்மதியா இருப்பாங்க)))

கவிநா... said...

@ எஸ்.கே..

//அப்ப பாவம் வேற்றுகிரகவாசிகள் கிட்ட கடவுளே இல்லையா!:-)//

:))))))))))

கவிநா... said...

கணேஷ், அழகான கற்பனை... ஆனால், முடிவு எதிர்பார்க்காதது. :))))

உங்கள் பாணியில் நகைச்சுவையான சில உரையாடல்களை இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.

வழமை போல உங்கள் அறிவியல் கதை அருமை...

கணேஷ் said...

கவிநா//

கருத்துக்கு நன்றிங்க