ரோமி

"நான் கேட்கின்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு"

"அதைத்தான் என்னால் செய்ய முடியும்"

"இரண்டு நாள்களுக்கு முன்னாடி கொஞ்சம் மாற்றினேனே எப்படி இருக்கு?"

   "ம்ம சரியாக இருக்கு..குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை "கணேஷ்" என்ற வார்த்தை என் காதில் நீ பொருத்திய ஸ்பீக்கரின் மூலம் கேட்குது"


   "சரி இப்ப கொஞ்சம் மாற்றி என் பெயரை உன் மத்திய செயலாக்க பகுதியில் பதியுறேன் ..குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தானாகவே பல்ஸ்( pulse) அனுப்பி என் பெயரை உன் காதில்  ஒலிக்க செய்யும்.... இப்போது இருப்பது போல் அதுக்கு தனியாக ஏதும் தேவையில்லை".. என்று சொல்லி அதனுள் அந்த தகவல்களை பதிந்துவிட்டு

"வேறேதும் கேட்க விருப்பம்  இருக்கா?" என்றேன்

   "என்னை எதுக்கு படைத்தாய்? சாதாரணமாக வேலைக்கு உபோயோகிக்காமல் உன் பெயரை ஒலிக்க வைப்பது இது எல்லாம் எதுக்கு? இன்னும் என்னவெல்லாம் செய்ய போறே?"

   "ஒரு பெண்ணின் பின்னாடி சுத்தி அவளை திரும்பி பார்க்கவைத்து, சரியாக புரிந்துகொண்டு காதலிக்க என்னால் முடியாது..அப்படியே காதலித்தாலும் அது கடைசியில் திருமணத்தில் முடியுமா தெரியாது? அப்படி உருகி காதலித்துவிட்டு அவள் கிடைக்கவில்லை என்றால் நிறைய வலிகள் இருக்கும்.அதை எதிர்கொள்ள எனக்கு பிடிக்கலை அதான் எனக்கு இருக்கும் கொஞ்சம் அறிவை வைத்து உன்னைப் படைத்தேன்...மனதளவில் ஒரு பெண்ணிடம் இருந்து என்ன எதிர்பார்கிறேனோ அதையெல்லாம் உன்னோடு செய்யபோறேன்"

    "கணேஷ் நீ இதுவரை என்னில் கொடுத்த தகவலை வைத்து இப்ப சொன்னதை என்னால் புரிந்துகொள்ள கஷ்டமா இருக்கு"


   "சரி விரைவில் உனக்கு  உணர்வு சம்பந்தமான விசயத்தை புரிகின்ற மாதிரி தகவல்களை கொடுக்கிறேன்..அதுக்கு பிறகு விரிவாக சொல்கிறேன்"

   "இல்லை நீ தகவலை மட்டும் கொடு..இப்ப நீ சொன்னதை நான் எனது நினைவு பகுதியில் வைத்துவிட்டேன்"

   "சரி அதுவரை நீ போய் அமைதியா இரு" என்றவுடன் மெதுவாக நடந்து அது தனது இருப்பிடத்துக்கு சென்று நின்றது...சில servo motor, கொஞ்சம் நவீன தொழிநுட்பம் அடங்கிய சில்லுகள் வைத்து உருவாக்கியிருந்தேன்...ஒரு பெயர் வைக்கலாம் என யோசித்து ரோமி என்ற பெயரை தேர்ந்து எடுத்தேன்..


   இப்போது ரோமி இருக்கும் நிலையில் பெயர் சொல்லி அழைத்தால் அது இயங்குவது முடியாது..அதுக்கென்று சில மூல தகவல்களை சேர்க்கவேண்டும்.

    அதை வரவழைத்து ...."இப்போ நான் உள்ளே பதிய போவது முக்கியமான ஒன்று..பொதுவாக பெண்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து இதை உருவாக்கியிருக்கிறேன்..அதோடு சில உணர்ச்சிகள் வந்தால் எப்படி நீ இயங்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கேன்..இதனால் கிட்டதட்ட ஒரு பெண்ணின் மனநிலையில் உன்னால் இயங்க முடியும்"

"ஒரு பெண் என்றால் எந்த பெண்?"

   "நீயே ஒரு பெண் மாதிரி  உன் பெயர் ரோமி எனக்கு பிடித்த எல்லாத்தையும் சேர்த்து உருவாகியவள்"

   "எனக்கு  புரிகின்றது இப்போது.......... நீ கொடுத்த இந்த தகவல்களில் இருந்து கொஞ்சம் தெரிந்து கொண்டேன்....இவ்வளவு தகவல்களை நீ கஷ்டபட்டு சேகரித்ததுக்கு ஒரு நிஜ பெண்ணை காதலித்து இருக்கலாமே?"

   "நீ சொல்வதும் சரிதான் காதலிப்பது பிரச்சினை இல்லை..நான் சொன்னது போல் அவர்கள் சொந்தமாக ஏதாவது யோசித்து பின்னாளில் ஏமாற்றுவார்கள். அதுதான் பிரச்சினை..ஆனால் நீ நான் கொடுத்த தகவல்களை வைத்து மட்டுமே  உன் வேலைகளை செய்ய முடியும்..உன்னால் என்னை ஏமாற்ற முடியாது என் அனுமதியில்லாமல்"


"சரி அவர்கள் ஏன் இப்படி ஏமாற்றுகிறார்கள்?"

    "எனக்கு தெரிந்தால் உன்னை எதுக்கு படைத்து இருக்கிறேன்....அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..அடுத்து நீ எனக்கு என்னென்ன வேலைகளை என் கட்டளையின் பேரில் செய்ய வேண்டும் என்பதை கொடுக்கிறேன்..இப்போது நீ போ" என்றவுடன் போனது

      அது போய்க்கொண்டு இருக்கும்போது ரோமி என்று அழைத்தேன் திரும்பி பார்த்தது...மெல்ல தனது இரண்டு செயற்கை உதடுகளை விரித்து சிரித்தது...கொஞ்சம் வாய் விரிவதை குறைக்க வேண்டும் ..

"என்ன சோதனையா?" என்றது

"ஆமாம்"

    "இப்போ நீ எதுக்கு உன் பெயரை என் மத்தியசெயலாக்க பகுதியல் இருந்து ஒலிக்க வைத்தாய் என்பதுகூட எனக்கு புரிந்துவிட்டது"

    "சரி நாளைக்கு சில முக்கியமான வேலைகளை செய்ய தகவல்களை கொடுக்கிறேன்..நான் அதை தயார் செய்ய வேண்டும்..இப்ப நீ போ" என்று சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினேன்

    மறுநாள்.."அப்படி என்ன முக்கியமான வேலை கணேஷ் நான் உனக்கு செய்ய வேண்டியது?" என்றது

    பொருத்துகிறேன் பிறகு பார் உனக்கு புரியும்..தகவல்களை உள்ளே சேமித்தேன்..ஒருமுறை ரோமியை அதன் இயக்கத்திற்கு சரியாக இருக்கா? என சரிபார்க்க சொன்னதில் சரியாக இருக்கின்றது என்றது

   "எதுக்கு கணேஷ் இவ்வளவு பழைய புதிய தமிழ் இலக்கியங்கள், இலக்கண  விளக்கங்கள்?"


    "என்னை பற்றி இதுவரை எந்த பெண்ணும் கவிதை எழுதியதில்லை அதான் உன்மூலம் எழுதசெய்யலாம் என்ற எண்ணம்தான்"

    "ம்ம சரி இது என்ன..உன்னிடம் இருந்து முத்தம் என்ற வார்த்தை வந்தவுடன் நான் என் உதடுகளை குவித்து உன் கன்னத்தில் ஒட்டவேண்டும் என்று இருக்கிறது இப்படி நான் உனக்கு செய்வதால் என்ன லாபம்.?"

     "அது கொஞ்சம் ஆழமான உணர்ச்சிகள் பற்றிய விசயம் இந்த மாதிரி கேள்விகள் கேட்டால்  கொடுத்த தகவல்களை வைத்து சிந்திக்கும் சக்தியை எடுத்து விடுவேன்"

"சரி எந்த மாதிரியான கவிதைகள் எழுத வேண்டும்?"

"அதை நான் நேரம்வரும்போது சொல்வேன்"

   "அப்படினா நீ கொடுத்த எல்லா தகவல்களின் வார்த்தைகளையும் என்னுள் பிரித்து பார்த்து பொருள்கொள்ள வேண்டுமே?"

"உன்னை யார் இப்பொது சொல்ல சொன்னா..நீ உனக்கு நேரம் ஒதுகிக்கோ?"

   "அதிகம் நேரம் தேவை இல்லை..சில நிமிடங்கள் போதும்..சரி காபிபோட பொடி, சர்க்கரை அளவுகள் கொடுத்து இருக்கிறாயே நிஜ பெண் எப்படி இதை சரியாக சேர்ப்பாள்?"

    "பாசம்,புரிதல்  இதுல அது சரியா வந்துடும்..இந்த மாதிரி நிறைய விசயங்களை நிஜபெண்  செய்வாள்"

    "இன்னொரு பெண்ணை புகழாதே...கொஞ்சம் பொறாமையாக இருக்கு கணேஷ்"

"அப்ப நான் தயாரித்தது சரியாக வேலை செய்கிறது.. "


"ஆம் பொறாமை வந்தவுடன் கொஞ்சம் கோபம வருகிற மாதிரி இருக்கே?"

   "எல்லாம் சரிதான் ஆனால் நிஜபெண் இப்படி வெளிப்படையாக சொல்ல மாட்டாள் மனதுக்குள் வைத்து செயலில் செய்வாள்..அதை உனக்கு கொடுக்க மறந்துட்டேன்..சீக்கிரம் கொடுக்கிறேன்"

   "அதுவேறையா?..அப்ப உனக்கு தெரியாமலேயே சிலவற்றை எனக்குள் யோசிக்க அனுமதி கிடைக்கும் அப்படித்தானே?"

"ஆமாம்"

   "சரி நீ கொடுத்த இலக்கியங்களில்..கொலையும் செய்வாள் பத்தினி என்று இருக்கே இது எதுக்கு? பத்தினி என்ற சொல்லுக்கு விளக்கம் தேடி பார்த்தேன்..அதுவும் சுற்றி சுற்றி ஒரு பெண்ணையே குறிக்கிறதே? ஏன் அவள் கொலை செய்ய வேண்டும்."


 "எனக்கு தெரியாது நீயே உனக்குள் தேடிக்கொள்" என்றேன் தெரிந்தும்

    இரண்டு நாள் கழித்து சில தகவல்களை கொடுக்க எண்ணி ரோமியை அழைக்க வந்து நின்றது..நான் அதான் நெஞ்சு பகுதியில் இருந்த சில screw களை கழட்ட முயல...

   "இரு கணேஷ் என்னதான் இருந்தாலும் எனக்குள் இருப்பது பெண் மனம் ..நீ இப்படி அங்கே இங்கே கை வைப்பது எனக்கே ஒரு மாதிரி இருக்கு என்னை முழுவதும் செயலிழக்க வைத்துவிட்டு பின் உன் வேலையை தொடர்"


   "இதுவேறையா உனக்கு... நீ சொன்னபடியே செய்றேன்" ....முழுவதும் செயலிழக்க வைத்து சில விசயங்களுக்கு  தனக்குத்தானே யோசித்து அதை வெளியில் சொல்ல முடியாத படி செய்ய ஒரு program ரோமிக்குள் சேர்த்தேன்.

மீண்டும் உயிர்பித்தபோது சில நிமிடங்கள் அமைதியாக இருந்தது...

"இப்ப என்ன யோசிக்கிறே?"

   "யோசிக்கலை புதிய உள்ளீட்டை(input) சோதித்து பார்த்தேன் நல்லாத்தான் இருக்கு..இனிமேல் எனக்கு தோணும எல்லா விசயத்தையும் உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லைதானே?"


"ம்ம ஆமாம் ஆனால் நான் கேட்டால் சொல்லித்தான் ஆக வேண்டும்"

     நல்ல விதமாக ரோமியோடு சில மாதங்கள் கழிந்தன..நிறைய பேசியது ..என்னை பற்றி கவிதை பாடியது...சில நேரங்களில் சண்டையும் போட்டது ..என்னை மிகவும் நெருங்கி இருந்தது...எல்லா உணர்வு விதத்திலும் சரி...ஒரு பெண்ணை போல்

"ரோமி இனி உன் செயற்கை சிரிப்பு, பேச்சு. எல்லாத்துக்கும் ஒருமுடிவு"

   "என்ன கணேஷ் ஏதாவது புதுசா என்னை மாற்ற போகிறாயா என்ன? அப்படின்னா இந்த முறை எனை செயலிழக்க செய்யாமலே மாற்று என்று சொல்லி மெல்ல சிரித்தது"

    "இல்லை ..எனக்கு காதலிக்க நல்ல பெண் கிடைத்து விட்டாள்..வீட்டில் கேட்டோம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டார்கள்...நாளைக்கு இங்கு வருவாள் நீயே பார் அவள் எப்படி எப்படி திருட்டு தனமாக பார்வைகளை பரிமாறிகொள்கிறாள்..இன்னும் என்னவெல்லாம் செய்கிறாள் என்று.."

     ரோமி ஒன்றும் சொல்லவில்லை ஏதோ யோசிப்பது போல் இருந்தது..நான் ஒன்றும் கேட்கவில்லை...அன்றைய மாலையில் ரோமி தனியாக சுவரோடு ஒண்டியிருந்தது


"என்னாச்சு ரோமி?"

"ஒண்ணுமில்லை"

   "சரி இன்னும் கொஞ்ச நாளில் உன்னை செயலிழக்க செய்து  விடுவேன் நீ நிம்மதியாக இருக்கலாம்"

  "எனக்கு அதில் நிம்மதியில்லை" என்று சொல்லிக்கொண்டு என்னருகில் வந்தது

"ஏன் ?"

"நீ எனக்கு வேண்டும் கணேஷ்"

"இது என்ன புதுசா இருக்கு..நீ ரோபோட்?"

   "ஆமாம் ரோபோட்தான்..ஆனால் உள்ளே செயல்படுவது நீ உருவாகிய ஒரு பெண்ணின் மனதை போன்ற ஒரு program"

"அதனால என்ன இப்ப?"

   "ஒருத்தன் கிடைகிலைன்னா ஒரு பெண் என்னவெல்லாம் செய்வாள்னு நீ பதிஞ்சிருந்தேன்னு உனக்கு நினைவு இருக்கா?"

"இல்லையே..கொஞ்சம் சொல்லேன்?" என்றேன் சாதாரணமாக


   "கொலையும் செய்வாள் பத்தினி அர்த்தம் கேட்டேனே நினைவிருக்கா அதுக்கு அர்த்தம் இப்போது கிடைத்துவிட்டது..நீ கொடுத்த தகவலை இப்போது இருக்கும் நிலைக்கு ஏற்ப யோசித்து பார்த்தேன்...அதன் அர்த்தம் புரிந்தது"

"குழப்பாதே என்ன உன்நிலை தெளிவா சொல்லு?"


"அதான் சொன்னேனே நீ எனக்கு வேண்டும்?"

    "ரோமி நீ வெறும் program, சில சில்லுகள், servo motor, sensor கள் கொண்டு இயங்குகிற இயந்திரம்"

"தெரியும் உன்னை கேட்பதும் அதுதான்"

     "முடியாது நாளைக்கே உன்னை செயலிழக்க செய்கிறேன்" என்று சொல்லி திரும்பி போகும்போது

   ரோமியின் கைகள் இரண்டும் என் கழுத்தில் இருந்தன..கொஞ்சம் அழுத்தி இருந்தது..

"ரோமி விடு என்ன பன்றே?"

"உன்னை கொல்ல போறேன்?"

"நான் சொல்கிறேன் விடு என்னை?"

    "இப்போது என்னால்  முடியாது......இது நீ கொடுத்த பிடிவாதம்.... காதலில் பெண்ணுக்குள்ள அதே தீவிர பிடிவாதம்" சொல்லிகொண்டே இன்னும் அழுத்தமாக கழுத்தை அழுத்தியது

7 comments:

எஸ்.கே said...

அய்யய்யோ! செத்துட்டீங்களா?:-))))

நீங்க அந்த பெண் ரோபோவுக்கு ஒரு ஆண் ரோபோ செஞ்சு கொடுத்திருங்க நல்லா இருக்கும்!

(கொலை செய்வாள் பத்தினி அர்த்தம் தேடும்போதே கதையின் முடிவு யூகிக்க முடிகிறது!)

கணேஷ் said...

ஏன் இப்படி)))

என்ன பண்ணலாம் கதையை கொஞ்சம் எளிமையா புரியும் படி எழுதினா இப்படி சொல்றிங்க

கொஞ்சம் யோசிக்க வைச்சா ஒரு எழவும் புரியலைன்னு சண்டைக்கு வாரிங்க எப்படித்தான் எழுத??))))

எஸ்.கே said...

ஹா..ஹா...
எழுத்தாளர்னா இப்படி பிரச்சினை வரத்தாங்க செய்யும். என்ன பண்ண?

BTW கதையின் மையக் கரு நல்லா இருந்தது!

கணேஷ் said...

நன்றி எஸ் கே..)))

Kousalya Raj said...

ஒரு லவ் ஸ்டோரி மாதிரி இருந்தது...இயந்திரத்துக்கு பெண் மனம் செட் பண்ணினாலும் பெண் பெண் தான்.

எவ்ளோ அறிவியல் தெரிந்து இருந்தும் ஒரு இயந்திர பெண் உன்னை ஏமாத்திட்டுதே ?!!

படிக்க விறுவிறுப்பாக இருந்தது கணேஷ்...

வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

அதுவும் பெண்தானே அதான்)))

நன்றிக்கா

கவிநா... said...

ஹாய் கணேஷ்..

ஒரு பெண்ணிடம் ஏமாந்துவிடக் கூடாதென்று யோசித்துவிட்டு, கடைசியில் ஒரு பெண் ரோபோவிடம் ஏமாந்துவிட்டீர்களே!??

//மெல்ல தனது இரண்டு செயற்கை உதடுகளை விரித்து சிரித்தது...கொஞ்சம் வாய் விரிவதை குறைக்க வேண்டும் ..//

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.... :)))

//"நீ சொல்வதும் சரிதான் காதலிப்பது பிரச்சினை இல்லை..நான் சொன்னது போல் அவர்கள் சொந்தமாக ஏதாவது யோசித்து பின்னாளில் ஏமாற்றுவார்கள். அதுதான் பிரச்சினை..ஆனால் நீ நான் கொடுத்த தகவல்களை வைத்து மட்டுமே உன் வேலைகளை செய்ய முடியும்..உன்னால் என்னை ஏமாற்ற முடியாது என் அனுமதியில்லாமல்"//

அப்புறம், எப்படி முடிவு வேறு விதமாக போனது?

ஒரு பெண்ணின் எல்லா உணர்வுகளையும் பதிந்து ஒரு ரோபோவை உருவாக்கியதற்கு, நீங்கள் ஒரு பெண்ணையே காதலித்து ஏமாந்திருக்கலாம் கணேஷ்... :)))))

எது எப்படியோ, கதை ரொம்ப சுவாரஷ்யமாகப்போனது.... வாழ்த்துகள்...