தொடக்கமில்லாத முடிவுகள்..

                                                                   1

The messenger theory:

       John R Samuel  என்பவர் fifth annual conference on astronautics and communication பேசியதில் இருந்து ...

        மற்ற கிரகத்தில் உயிர்கள இருக்கிறதா என்பதை அறிய நம்மிடம் இருக்கும் தொழிநுட்பம் மிக குறைந்தது. மற்ற தூரகிரகங்களை  அலசிப்பார்க்க இன்னும் நாம் வளரவேண்டும் அல்லது சில வித்தியாசமான முறைகளை முயற்சிக்க வேண்டும்.

       அதோடு மொத்தம் இரண்டு வழிகளே  இருக்கிறது ஒன்று நாமே அவர்களை தேடிப்போவது அல்லது அவர்களே இதோ நாங்கள்  இங்கு இருக்கிறோம் வந்து பாருங்கள் என்று சொன்னால் ஒழிய வேற்றுகிரகவாசிகளின் இருப்பிடம் நமக்கோ அல்லது நமது இருப்பிடம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

       சரி இப்போதைய நிலையில் நம்மிடம் இருக்கும் அறிவியல் வளர்ச்சியில்  இருக்கும் சில வசதிகளை வைத்து முடியுமா என்று பார்த்தால்  Radio வைத்து? வாய்ப்பு  இல்லை, மிகவும் நேரம் எடுக்கும், செலவு அதிகமானதும் கூட . Tv வைத்து? இது radio வை விட சக்தி இழந்தது. இருக்கிற ஒரே வாய்ப்பு என்று பார்த்தல் அது ஒளி   மட்டுமே. இதையும் வெகுதூரம்  சென்று திரும்புமாறு உருவாக்குவது  மிக கடினம். அப்படியே உருவாக்கி விட்டாலும் இடையில் இருக்கும் பெரிய நட்சத்திரங்கள், வெளியில் இருக்கும் radiation   போன்றவற்றை கடந்து சென்று  திரும்பும் அளவுக்கு செய்வது மிக கடினமே.

      ஆக  இயற்பியலில் இருக்கிற சாத்தியக்கூறுகள் வெகுதுரம் சென்று தகவலை பெற்றுவரும் தகுதி இல்லாத பட்சத்தில் அல்லது இன்னும் கண்டுபிடிக்கபடதா படசத்தில் ஏன் உயிரியல் முறையை பயன்படுத்தி பார்க்ககூடாது. இந்த முறையில் உருவாக்கப்படும் ஒன்றானது தூரம்  மற்ற காரணிகளால் பாதிக்கபடாமல் இருக்கவேண்டும் .

     அதாவது உருவாக்கப்படும் செயற்கை உயிரியானது self replicating, குறைந்த செலவு, குறிப்பிட்ட  எண்ணிக்கையில் உருவாக்கிய பின்னர் அதுவே தானாக பில்லியன் அளவில் வளரும் தன்மையுடையாத இருக்க வேண்டும். அதோடு விண்வெளியில் நிலவும் வெப்பம், மற்ற காரணிகளால் எந்தவிதத்திலும் அதன் வளர்ச்சி பாதிக்கபடாதவாறு   இருக்க வேண்டும்.

     அந்த மாதிரியான ஒரு உயிரியை உருவாக்கி  விண்வெளியில் பரவவிட்ட பிறகு அது பகுப்படைந்து சென்று கொண்டே இருக்கும், தொலைவு என்பது அதுக்கு இல்லை.  எப்போது அது ஒருகிரகத்தில் உயிரினம் வளர்வதுக்கு உண்டான சூழ்நிலை நிலவுகிறதோ அதுவரை அதன் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அங்கு அந்த உயிரினம் இன்னும் அதிகமாக பகுப்ப்டைந்து பல பில்லியன் செல்களாக அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு வளர்ந்து ஒரு முழுமையான மூளை  உள்ள ஒரு உயிரினம் வந்து அது அங்கு உள்ள நிலமையை அலசி ஆராய்ந்து புரிதலை தான்  செல் நிலையில் அனுப்பிய  இடத்தை நினைவில் கொண்டுவந்து அந்த இடத்தை பற்றிய தகவலை  அனுப்புமாறு இருக்கவேண்டும்.
                                                            
                                              2

        அந்த கிரகத்துக்கு இன்னும் பெயர் ஏதும் என்னால் வைக்கப்படவில்லை என்பதால் அதை இந்தக்கதை முழுதும்  வெறுமனே கிரகம் என்றே குறிப்பிடுவது உத்தமம். அந்த கிரகம் உருவான முறை , அதில் உயிரிகள் தோன்றியவிதம், அவற்றின் வளர்ச்சி, இனப்பெருக்க முறை இவைகளை தெளிவாக எழுத நினைத்தால் இந்த சிறுகதை ஒரு பெரிய நாவலாகவோ அல்லது அறிவியல் கட்டுரையாகவோ மாற வாய்ப்பு இருப்பதால் இந்த கதைக்கு தேவையானதை மட்டும் படிக்க கொடுக்கிறேன்.

       அந்த கிரகத்தில் உள்ள உயிரிகளுக்கு ஒருகால கட்டத்தில் முக்கிய பணியாக இருந்தது என்றால் தங்களை போலவே இன்னும் பிற கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்பதை கண்டறிவதே. இதற்கு அவர்களுக்குள் பெரும் தொழிநுட்பபோட்டியே நடந்து கொண்டு இருந்தது. ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையை சோதனை செய்துகொண்டு இருந்தனர். எல்லா சோதனைகளும் பெரும்பாலும் ஒரே முடிவையே கொண்டு இருந்தன அது தோல்வி. கரணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரியாக இருந்தது.  

      பெரும்பாலும் ஒளியை வைத்தே சோதனை முயற்சி இருந்தது. பல்வேறு திசைகளில் பல்வேறு அதிர்வெண் அளவுகளை கொண்ட ஒளியை அனுப்பி மறு தகவலுக்கு காத்து இருந்தனர். அவர்களுக்கு இந்த மாதிரியான முறை பெரும்பாலும் தேறாது என்று தெரிந்து இருந்தாலும் கிடைக்கின்ற ஒரு சிறு வாய்ப்புகள்  இதன் மூலம்  கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

     மற்றொரு முறையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிரிகளை அதன் பகுப்படைதலை கட்டுக்குள்  கொண்டு வந்து அதனை ஒரு தொடர்ச்சியாக இருக்குமாறு அமைத்து அதனை விண்வெளியில் செலுத்தினர். எதிர்முனையில் ஏதாவது செய்திகள் கிடைத்தால் முதலில் இருக்கும் உயிர் அதன் தொடர்சியாக  இருக்கும் உயிர்களின் மூலம்  உடனே தகவலை அனுப்பும். அதாவது  ஒரு செல் உயிரி ஒன்று பகுப்படையும்போது அது ஒரு தொடர்ச்சியாக நீண்டு கொண்டே ஒன்றன்   பின் ஒன்றாக சங்கிலி போல சென்று கொண்டு  இருக்கும்.எப்படி பூனையின் வாலை  தொட்டால் அது தலையை திரும்பி பார்க்கிறதோ அதுமாதிரி முதலில் இருக்கும் உயிரி அங்கு எதாவது  தகவல் கிடைத்தாலோ அல்லது சூழ்நிலை உயிரிக்கு சாதகமாக இருந்தாலோ உடனே அதன் பின் இருக்கும் மற்ற செல்களின் தொடர்ச்சியின் வழியாக தகவலை அனுப்பும்.

        இதில் இருக்கும் ஒரு குறை  என்னவென்றால் சில   காரணங்களால் தொடரும் உயிரிகளுக்கு இடையில் ஏற்ப்படும் அழிவு தொடர்பை துண்டித்து அதனை வேறு திசையில் திருப்பி எங்கோ செல்ல வைத்ததுதான். ஒருமுறை இறந்த செல்களை நீக்கிவிட்டு தானாவே இணைத்துக்கொள்ளும் முறைக்கான விடை இதுவரை கிடைத்தபாடில்லை.

       இந்த சோதனையின் முடிவை   அடிப்படையாக வைத்து மற்றொரு குழு விசித்திரமான ஆய்வை சோதித்து பார்க்க முயன்றது.அதன்படி உருவாக்கிய செயற்கையாக செல்களை ஒரு தொடர்ச்சியாக இல்லாமல் அதிக எண்ணிக்கையில் உருவாக்கி அதனை அப்படியே பல்வேறு திசையில் இலக்கில்லாமல் பரவ விடுவது. அப்படி விடப்படும் நுண்ணுயிரிகள் எங்காவது தொடர்ந்து வாழ சூழ்நிலை இருந்தால் அங்கு தனது இனப்பெருக்கத்தை தொடர்ந்து பல் செல் உயிரியாக மாற்றி   எதோ ஒரு தருணத்தில் தன்னை தானே ஏன்?எதற்கு? எப்படி? யோசிக்கும் தருவாயில் இன்னும் அந்த இடத்தை அடையாத வெளியில் சுத்திகொண்டு இருக்கும் நுண்ணுயிரிகளை அடையாளம் கண்டு அது எங்கு இருந்து அனுப்பப்பட்டது என்ற தகவலை அறிவதன் முலம் தங்களை தொடர்புகொள்ளுமாறு அமைத்து இருந்தனர்.

       இது கிட்டத்தட்ட நம்பிக்கையான முறை இல்லை  என்றாலும் கூட  நடப்பதற்க்கான  சாத்திய கூறுகள்  அதிகமாகவே இருந்தன. அந்த சோதனையும் நிறைவேறியது.அதன்படி பில்லியன் உயிரிகள் விண்ணில் கலந்துவிடப்பட்டன். தகவலுக்கு காத்து இருக்கும் வேலை பாக்கி இருக்க   அதையும் செய்ய  தொடங்கி இருந்தார்கள்.

                                                                           3

     பூமிக்கு வேற்று கிரகத்தில் இருந்தோ அல்லது விண்வெளியில் வேறு எங்கு இருந்தோ  உயிர்கள் தோன்றுவதுக்கான மூலகூறுகள் வந்து இருக்கலாம் என்பதை திடமாக நம்பி அதன் மீது ஆராய்ச்சி  செய்கிறார்கள்.
    அதன் முன்னேற்றமாக சில நுண்ணியிரிகள் பல ஆண்டுகள் விண்ணில பயணிக்கும் தன்மை கொண்டவை என தெறிய வந்துள்ளது. இதை சோதனையாகவும் செய்து பார்த்து இருக்கிறார்கள்.
   இது சாத்தியமாகவே, விண்வெளிகளில் காணப்படும் தூசுகளின் வழியாக கூட இந்த மாதிரியான நுண்ணுயிரிகள் பூமிக்கு வந்து இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. ஏனென்றால் இந்த வகை நுண்ணுயிரிகள் பிரச்சினை இல்லாமல் பல நூறு வருடம் விண்வெளியில் பயணிக்கும் தன்மை கொண்டவை என்கிறார்கள்.
   அப்படி என்றால் கண்டிப்பாக நாமெல்லாம் எங்கு இருந்தோ காற்றில் அடித்துவரப்பட்டவர்கள் என்பதுதான் உண்மை. காற்றில் வந்த தூசுகள் வேறு கிரகங்களின் மீது விழுந்து இருந்தாலும் அங்கு நிலவும் தட்ப வெட்ப சூழலில் பிழைத்து வாழ முடியாமல் போய் இருக்க கூடும.


                                                                         4

       சூரிய குடும்பத்தில் ஒரு கோள்,  அந்த ஒரு செல் உயிரி வளர்வதுக்கு தேவையான அனைத்து சூழ்நிலைகளையும் கொண்டு இருந்தது. அதிக பட்சமாக இருந்தது நீர்  பரப்பு என்பதால் விண்வெளியில் இருந்து வந்த நுண்ணுயிரிகள் அதன் அனுப்பிய வேலையை செய்ய ஆரம்பித்தது. ஆம் அதை அனுப்பிய கிரகத்தின்   வடிவமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு படிநிலையாக தனது எண்ணிக்கையை பெருக்கிகொண்டே சென்றது.

      வெகுசீக்கிரம்  இல்லாவிட்டாலும் நீரில் உருவான அது கொஞ்சம் முயன்று நிலத்துக்கு வந்து தனது இருப்பை நிலவியது. தொடர்ந்த அதன் செல் பகுப்படைதலுக்கு  ஏற்றவாறு அதன் உருவ அமைப்பு,வாழும் முறை என எல்லா விதத்திலும்  மாற்றத்தை கண்டது.

       அதன் வகையில் சிலது சூழ்நிலைக்கு தாங்காமல் தனது இனத்தை பாதியிலியே அழித்துக்கொண்டது. இதெல்லாம் நடந்தது என்னமோ தற்ச்செயல்  போல தெரிந்தாலும்,  செல்லின்  உள்ளுக்குள்ளே எந்த கிரகத்தில் இருந்து முதல் செல்லை அனுப்பினார்களோ அவர்களின் வடிவமைப்பும்,கட்டளைகளுமே  அடிப்படையாக இருந்தன. ஆதாரமாக  இருந்த, இருக்கப்போகிற எல்லா உயிருகளுக்கும் செல்களின் அமைப்பும்,செயல்பாடுகளும் ஒரே மாதிரியே இருந்தன. எப்போது அதிக அளவிலான செல்களின்  வளர்ச்சி மாறியதோ அப்போது அவைகளுக்குள்   அதிகமான வேறுபாடுகள் தென்பட்டன.

       இப்படி தொடர்ந்த அதன் வளர்ச்சியில் அதை அனுப்பிய நோக்கத்துக்கான காலம் வந்தாதா  என்பது இன்றுவரை தெரியவில்லை. அதாவது  ஒரு செல் உயிரியாக அனுப்பிய கிரகத்தினை தொடர்பு கொள்ள விண்வெளியில்  இருக்கும் மற்ற நுண்ணுயிரிகளை ஆராயதொடர்ந்ததா என்பதுக்கான விடை இன்னும் கிடைக்கவில்லை, ஒருவேளை செய்து கொண்டு இருக்கலாம் அல்லது செய்ய இருக்கலாம்.

      ஆனால்  அவைகளுக்குள் ஒரு பெரிய மாற்றம் நடந்தது என்றால்..... ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பல் செல்களை கொண்ட இரண்டு உருவங்கள் சில சப்த்தங்களை பரிமாறிகொண்டன ..அவை
"உன் பெயர் என்ன?
"என் பெயர் ஆதாம்"
"உன் பெயர் என்னவாம்?"
"என் பெயர் ஏவாள் "

The messenger theory - the Andromeda strain என்ற நாவலில் இருந்து. 

மோட்சம்

"உன் விரல் நுனிகளில் வெப்பத்தை உணரும் சென்சார்கள் இருக்கிறதா?"

"இருக்கிறது"

"உன் கையின் மொத்த பலம் எவ்வளவு? அதை வேலைக்கேற்றாவரு மாற்றி தேவையான பலத்தை உபோயோகிக்க உன்னால் முடியுமா?"

" கண்டிப்பாக முடியும், இதற்க்கென்று தனியாக எனக்கு கட்டளைகள் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை"

"வெளிச்சம் இல்லாமல் இரவில் பார்க்கும்தன்மை, உனக்கு நீயே தேவையான போது மின்சார தேவையை பூர்த்தி செய்யும்பொருட்டு சார்ஜ் செய்து கொள்வாய?'

"நீங்கள் கேட்கும் எல்லா வசதிகளும் இந்த 2049 வருடத்தில் அறிவியலின் சாகசத்தில் எங்களிடம் மலிந்து கிடக்கிறது"

"பின்னே இங்கு உங்களுக்குள் இத்தனை வகைகளை எதுக்கு?"

    "எல்லாம் சிறிய அளவிலான தொழில்நுட்ப வேறுபாடு, உருவ அமைப்பு, பயனபடுகளுக்கேன்று சிறப்பு அம்சம் கொண்டது இந்த மாதிரி பல பிரிவுகளாக பல விதங்களில் நாங்கள் கிடைப்போம்"

"அப்படியா இப்போது இருக்கும் அதிகபட்ச தொழில்நுட்பம் என்ன உங்களுக்குள்?"

    "கட்டளைகளை கொடுக்க கணினி தேவை இல்லை நீங்கள் வாயால் சொன்னாலே போதும் அதை நாங்களே  எங்கள் கட்டளைகளாக  எழுதிககொள்வோம்,  நீங்கள் சம்மத்தித்தால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரோக்ராமை   அலசி ஆராய்ந்து அடுத்து என்ன உங்களுக்கு தேவை,  அதை   எங்களால் எப்படி பூர்த்தி செய்ய முடியும் என்பதை நாங்களே கட்டளைகாள்க எழுதி அதை உங்களுக்காக  செய்வோம்"

    "அப்படின்னா சொன்ன உடனே அதை செய்யும் திறமை உங்களுக்கு இருக்கா அதாவது இப்போ இருக்கிற எங்க வீட்டு வேலைக்காரி மாதிரி?"

     "இருக்கு ஆனா அது இன்னும் சோதனை முயற்சியில் தான் இருக்கு அதுக்கு எங்களுக்கு தானகவே யோசிக்கும் திறமையை கொடுக்க வேண்டும் இந்த ஒரு காரணத்துக்காகத்தான் மனித இனம் பயப்படுகிறது. அந்த முறையும் விரைவில்  வந்து விடும் இப்போதைக்கு நீங்கள் சொன்னால் அதை எங்களுக்குள் எழுதி வைத்துவிட்டு அடுத்த முறை சொல்லும்போது அதை செய்வோம் அவ்வளவுதான்"

"உன்னை பிடித்து இருக்கிறது, உன்னை வாங்குகிறேன் வா போலாம"

    "அதுக்கு அங்கு போய் பணம் செலுத்தி விட்டு அவர்கள் கொடுக்கும் ரகசிய எண்னை என்னுள் பதியுங்கள் அந்த கணம் முதல் நான் உங்களின் அடிமை"

      அந்த பெண் அங்கு இருந்த பணம் செலுத்தும் இடத்தை நோக்கி போய்கொண்டு இருந்தாள். இந்த உரையாடல் நடந்த இடம் ஒரு ரோபோ விறப்பனை நிலையம். நேரடியாக அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் ரோபோக்களிடம் பேசி அதன் தன்மைகளை அறிந்துகொண்டு விருப்பம் இருந்தால் வாங்கி கொள்ளலாம்.

சரி ஏன் ரோபோ வாங்க வேண்டும்?

    இதையே ஏன் ரோபோ வாங்க கூடாது? என்று கேட்டு இருந்தால் பதில் சொல்வது மிக எளிது. அதனால் அவ்வளவு நன்மைகளை பெற்றுக்கொண்டு இருந்தார்கள் மனிதர்கள்.வீட்டில் ஆரம்பிக்கும் வேலைகளில்  இருந்து தொழில்த்துறை    உட்பட எல்லா இடத்திலும் இந்த இரும்பு மனிதர்களின் ஆதிக்கம் இருக்கவே செய்தது. அதனால் அதனை உருவாக்குபவர்களுக்கு மத்தியில் தொழில் நுட்ப போட்டி வேறு. ஒவ்வொரு புதிய வகை ரோபோவும் ஒரு ஆச்சர்யமான தன்மையை கொண்டே வெளி வந்தது.

       தற்போது வரப்போவதாக  சொல்வது தானே சிந்தித்து கொண்டு நமக்கு வேலை செய்யகூடிய ஒன்று. அன்றாடம் செய்யும் வேலைகளுக்கான அடிப்படை தகவல்களை மட்டும் கொடுத்தால் போதுமானது.   சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு புரிந்து கொண்டு அந்த ரோபோ க்கள் வேலை செய்யும். அனால் மனிதனின் பயம் ரோபோக்களுக்கு சிந்திக்கும் திறனை எப்படி கொடுப்பது என்பதில் இல்லாமல் அப்படி  கொடுத்துவிட்டால் அதனை எப்படி நம்மை வெல்லாமல் கட்டுபடுத்துவது என்பதில்தான்.

     இந்த பயத்திற்கு மட்டும் விடை இருந்தால் இந்நேரம் அசிமோவ் பல வருடங்களுக்கு முன்னர்  "sanctification guaranteed" என்ற சிறுகதையில் எழுதின மாதிரி  தனது எஜமானிக்கு துணையாக இருக்கும் ஒரு ரோபோ, "வெறும் விரல் தான், வெறும் விரல் தான் பாருங்க ... பிரச்சினை இல்லை......" என்று  சில வேலைகளை செய்து எஜமானியை சந்தோசத்தில் ஆழ்த்தும் நிகழ்வு இன்று எங்கும்  சகஜமாகி போய் இருக்கும்.

     சில நேரங்ககளில் எங்காவது ஒரு இடத்தில் செய்துவிட்டோம் என்ற குரல் ஒலித்தாலும் அதனை சரியாக சோத்தித்து பார்க்கும்போது எங்காவது தவறு கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. காரணம் பெருகி வரும் ரோபோக்களின் எண்ணிக்கையினால்  மனித இனத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு வந்துவிட கூடாது  என்பதால் சர்வதேச அளவில்  ரோபோக்கேன்று ஆணையம் இருந்தது. எந்தவிதமான கண்டுபிடிப்புகளாக இருந்தாலும் இந்த ஆணையத்தின் அனுமதி பெற்ற பின்னரே மக்களிடத்தில் செயல்படுத்த வேண்டும்.

    ஒரு  நிறுவனம்  தனது புதிய வகையான ரோபோவை அறிமுகம் செய்த போது யாரும் நம்பவில்லை. சோதனை முயற்சி என்ற பெயரில் எல்லோர்க்கும் காட்டியபோது அதிசயித்து  போனார்கள். காரணம் அதனை கட்டுபடுத்த அவர்கள் கையாண்ட முறை.

     அந்த புதிய ரோபோ சர்வதேச ஆணையத்திடம் சரி என்று சான்றிதழை பெற அவ்வளவு கஷ்ட்டப்படவில்லை  . ஏனென்றால் ஏற்க்கனவே மக்களின் ஆதரவையும்,எதிர்பார்ப்பையும் அதிகம் பெற்று இருந்தது.

    குறைந்த காலத்தில் அதன் விற்பனை எண்ணிக்கையும்,பயன்பாடும்  பெருக எல்லா இடங்களிலும் சாதரணமாக அது பரவி இருந்தது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எந்தவித பிரச்சினை இல்லாமல் அவர்கள் கட்டுபடுத்தும் முறையின்படி செயலாற்றியது.

    கட்டுபடுத்தும் முறை ஒன்றும் அவ்வளவு பெரிய விசயம் இல்லை. அச்சு அசலாக அப்படியே   மனிதனை பின்பற்றி இருந்தார்கள். அதவது சொந்தமாக சிந்தனை செய்து செயலாற்ற முடிந்தால் கண்டிப்பாக அங்கு தவறு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஒரு பயத்தினால் கட்டுபடுத்தினால் தவறுகளை தவிர்க்கலாம். அதாவது மனிதனுக்கு எப்படி பல வருடங்ககளுக்கு முன்பு கடவுள்,சொர்க்கம்,நரகம்  போன்ற விசயங்களின் மீது நம்பிக்கை இருந்து கொஞ்சம் பயந்து வாழந்தானோ அது மாதிரி. ஆனால் இப்போது அந்த முறை மனிதனிடம் இருந்து விலக அதையே ரோபோ க்களுக்கு கொடுத்து வெற்றி கண்டுவிட்டார்கள்.

      நீங்கள் இந்த வகை ரோபோக்களை வாங்கி அதை என்ன வேலைகளுக்கு வேண்டுமானாலும் உபோயோகிக்கலம். ஆனால் அதன் அடிப்படை செயல்பாட்டில் ஒரு ப்ரோக்ராம் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.  கொடுக்கப்படும் தகவலை வைத்து சரியான வழியில் வேலை செய்யாமல் தவறுகள் செய்தால் அந்த ப்ரோக்ராம் ரோபோக்கு கிடைக்கபோகும் தண்டனையை அதன் மத்திய நினைவுப்பகுதிக்கு  அனுப்பும் உடனே அது தனது தவறை திருத்தி கொள்ளும்படி அமைக்க பட்டு இருந்தது.

     அந்த ப்ரோக்ராம் உருவாக்கிய முறை கொஞ்சம் வித்தியாசமானது. காரணம்  இந்த இடத்தில் சொர்க்கம் என்றால் எப்படி இருக்கும்?, நரகம் என்றால் எப்படி இருக்கும்? என்பதை ரோபோவின் நினைவுப்பகுதியில்  புரிய வைக்கவேண்டும். அதற்காக ஒரு செயற்கை  நரகம் உருவாக்கப்பட்டது. நான்கு புறமும் லேசர் ஒளியால் பாதிப்படையாத உலோக சுவர்கள் இருக்க  அதற்குள் ஒரு சோதனை சோதனை ரோபோ ஒன்று வைக்கப்பட்டு அதன் மேல் பல்வேறு அலைநிலம் கொண்ட ஒளிகற்றைகள் பாய்ச்சபட்டது.

     அப்போது அதன் மத்தியபகுதிகளில் ஏற்ப்படும் மாற்றத்தை பதிவு செய்து கொண்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கும் தண்டனை அதிகபட்சமாக அது உருகிப்போகும் அளவுக்கு இருக்கும் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை தெர்மல் சென்சர்களால் ஏற்ப்படும் மாற்றங்களை துல்லியாமக பதிவு செய்து தண்டனையை பிரித்து இருந்தார்கள்.

      இதில் முக்கிய பங்கு வகிப்பது தெர்மல் சென்சார்கள்தான். அதில் ஏற்ப்படும் வெப்ப நிலை  மாற்றத்திற்கு ஏற்றபடி வலிக்கிற மாதிரியான ஒருவித மாற்றத்தை ரோபோவின் மத்திய பகுதியில் உருவாக்கி இருந்தார்கள். தெர்மல் சென்சார்கள் அதன் உடலில் பல இடங்களில் இருந்தன.

      சொர்க்கம் ஒன்றும் பெரியதாக இல்லை. குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை  கூப்பிட்டு பொய் எல்லா இடத்திற்கும் கிரீஸ்,தேய்ந்துபோய் இருக்கும் பகுதிகளை மாற்றி அமைத்து திருப்பி அனுப்பும்படி பதிவு செய்து இருந்தார்கள். இந்த இரண்டும்தான் இந்த வகையான ரோபோக்களுக்கான வெற்றியின் காரணமாக இருந்தது.

      என்னதான் மனிதனை அப்படியே பின்பற்றி இருந்தாலும் பல வருடங்கள் கழித்து மனிதனுக்குள் ஏற்ப்பட மாற்றங்களை கவனிக்காமல் விட்டு இருந்தார்கள். அவர்களுக்கு அப்போது தெரிந்து இருக்கவில்லை அது எவ்வளவு பெரிய தவறுக்கு வழிவகுக்க போகிறது என்பது. ஆமாம் மனிதன் எப்படி காலபோக்கில் கடவுள் ,சொர்க்கம்,நரகம் போன்றவற்றை மறந்தானோ அல்லது மறக்கசெய்தானோ அதே முறையை ஏன் அந்த ரோபோவும் செய்ய முடியாது என்பதை மறந்து இருந்தார்கள்.

     பல வருடங்க்கள் கடந்த நிலையில் ரோபோவும் செய்தது. அதுவும் மனி தர்களிடமிருந்தே. அதுகளுக்கு இருக்கும் ஒரு சிறப்பு தன்மையை பயன்படுத்தி, வாயாலே  சொன்னால் தனக்குள் ப்ரோக்ராம் எழுதி கொள்ளும்  ஆற்றல் இருப்பதால் சில சந்தர்ப்பங்களில் எஜமனார்களிடமும், பல சந்தர்ப்பங்ககளில் எஜமானிகளிடமும்   பேசி தகவலை சேகரித்து திருட்டு தனமாக தெர்மல் சென்சார்கள் இருக்கும் இடங்ககளை அறிந்து கொள்வதோடு அது எப்படி நரகத்தில் வேலை செய்து மாற்றத்தை கொடுக்கிறது, எப்படி அதை நீக்குவது போன்ற எல்லா விசயத்தையும்  அறிந்து கொண்டு இருந்தன.

     விளைவு அதன் தவறுகள் அதிகரிக்க ஆரம்பித்து நரகம் என்பது மதிப்பிழந்து பொய் இருந்தது. அபப்டியே நரகத்துக்கு அழைத்து போனாலும் உடலில் இருக்கும் தெர்மல் சென்சார்களை கலட்டி போட்டுவிட்டு தானாகவே உள்ளே குதித்து உருகிபோயன.

    மனிதர்களுக்கு எதிரான மற்றொரு தானாக  சிந்திக்கும் வர்க்கம் உருவாகி இருந்தது அல்லது உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த மாற்றத்தை பரிணாம வளர்ச்சி, அல்லது மோட்சம் அடைவது என்று சொல்லலாம். உங்களுக்கு எது பிடித்து இருக்கிறது அதையே வைத்துகொள்ளுங்கள் ....

கனவின் கனவுகள்

     "நான்  சொல்ற விசயத்தில் முயற்சி செய்தால் இப்போது நடந்துகொண்டு இருக்கும் மனித இனத்தின் மாற்றத்தை சரி செய்யலாம்னு தோணுது" என்றாள் புனி எதிரில் அமர்ந்து இருந்த வைத்தியை பார்த்து

      "இப்ப ஏற்ப்பட்டு இருக்கிற மாற்றம் எந்த விதமான ஒன்றுன்னு தெரியுமா உனக்கு?  கேட்டார்  வைத்தி

"இல்லை ஆனா அதோட விளைவு தப்பா  இருக்குனு மட்டும் புரியுது"

    "ம்ம் உண்மைதான்.. இது மனிதன் தனது  செய்கையால் கொஞ்சம் அப்புறம் இயற்கை  விளையாடும் பரிணாம வளர்ச்சியினாலும்   மெல்ல மெல்ல நடந்துகொண்டு இருக்கு இதனை தடுப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை" என்றார் வைத்தி

        இந்த உரையாடல் இன்னும் தொடரும் முன்...என்னதான் சென்ற  காலத்தில்    சுஜாதா எனும் எழுத்தாளர் தனது சக நண்பரான பாலகுமாரனுக்கு  சிறுகதை எழுத கொடுத்த அறிவுரைகளில் ஒன்றான முதல் வரியிலயே கதையை ஆரம்பிக்கும் யுத்தியை இந்த கதையில் மட்டுமில்லாமல் பல கதைகளில் எழுதி இருந்தாலும் இப்போது இருக்கும் உங்களால் அதை எல்லாம் உணர்ந்து படிக்க முடியாததால் இதையும் கதையோடு  சொல்லிவிட்டு  அவர் சொன்ன மாதிரியே அடுத்த பத்தியில் கதைக்களத்தை விவரிக்கிறேன்.....

        மேலே சொன்ன  உரையாடல் நடந்த இடம் ஒரு ஆய்வுக்கூடம். இந்த 2086 ல் தனி நபர் ஆய்வுக்கு  ஒரு இடத்தை அமைப்பது ஒன்றும் கடினமான விசயாமாக  இல்லை. அது வைத்தி எனும் ஒரு உயிரியல் மருத்துவருக்கு சொந்தமானது. உயிரியல் துறையில் பல முக்கியாமான வெற்றிகளை நிகழ்த்தி பெயர் பெற்றவர். அவரிடத்தில் வேலை செய்பவர்களில் ஒருவள் புனி.

       இப்போது இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று  மனித இனத்தில் ஏற்ப்பட்ட மாற்றம். சிலர் இதை சத்தியம் அடித்து பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதன் இயந்திரமான ஒரு நிலைக்கு  மாறுகிற  தருணம் என்று சொன்னாலும் ஒரு நிரந்தரமான தீர்வு இல்லாமலே அந்த மாற்றம் மாற்றத்தை நடத்திக்கொண்டு இருந்தது. ஒவ்வொருவரும் ஒரு வழியில் தீர்வை தேடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் வைத்தியும் தனது பங்குக்கு மனித செல்களில் ஏற்ப்பட்ட மாற்றங்களால்தான்  இப்படி ஏற்ப்பட்டுல்லதா? என்பதை ஆராய்ந்து கொண்டு இருந்தார்.


      ஆனால் புனியின் தேடல் வேறு விதமாகவே இருந்தது. அவளுக்கு பரிணாம மாற்றம் என்ற கருத்தில் நம்பிக்கை இல்லை  அதுவும் இவ்வளவு சீக்கிரம் அது நடக்காது என்பதில் உறுதியாக இருந்தாள். கண்டிப்பாக மாறிவந்த மனித பழக்கவழக்கம் ஒருகாரணமாக இருக்கலாம் என்பது புனியின் ஒரு சந்தேகம்.

மீண்டும் புனி மற்றும் வைத்தியின் உரையாடலுக்கு வருவோம்...

      "என்னோட இந்த முறையை ஒரு சோதனையாக செய்து பார்த்தலே  தொடக்கத்தில் ஏற்ப்படும் மாற்றத்தை வைத்து  சரியாக சொல்லிடலாம்" என்றாள் புனி.

"சரி சொல்லு சரியாக இருக்கும் பட்சத்தில் செய்து பார்க்கலாம்"

"கனவுகளை பத்தி என்ன நினைக்கிறிங்க?"

       "சுவராசியமான ஒன்னு ஆனால் நம்மிடம் பலவருடங்கள்  முன்பே அது இல்லம போய்டுச்சே?"

"அதனால்தான் இந்த மாற்றம் வந்து இருக்கும்னு தோணுது  " என்றாள்

"என்ன சொல்ல வர்ற புரியல?"

      "முன்காலத்தில் நாம செஞ்சது என்ன இரவில் கனவுகள் வந்தால் வெறுமனே காலையில் எழுந்து தலையை சொரிந்துவிட்டு பல் விளக்க  போவதுதான். காரணம் அப்போதைக்கு கனவுகள்  பற்றிய சாதாரண எண்ணம். ஆனா அப்போதே   Freud, Jung போன்றவர்கள் கனவுகளை பற்றி ஆராய்ச்சி செஞ்சி சொன்னதை யாரும் பெருசா எடுத்துக்கள........."



       "ம்ம் அது எனக்கும் தெரியும் அவங்க சொன்னதுக்கும் நீ சொல்ல வர்றதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?"என்றார் வைத்தி

      "அவங்க சொன்ன தியரி   வச்சி மட்டுமில்லாம அடுத்த செஞ்ச ஆய்வுகளை வச்சி பார்த்தா கனவு மனித உணர்வுகள் விசயத்தில் முக்கிய பங்கை வகிசசிருக்கு முக்கியமா சிந்தனை  திறன், ஆழமான எண்ணங்கள் இந்த மாதிரி விசயத்தில்."


      "அப்படின்னா  இப்ப நம்மகிட்ட கனவுகாணும் திறன் இல்லாம இருக்கிறதுதான் நமது இந்த இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு காரணம்னு சொல்றியா?"

      "ஆமாம் அந்த திறனை நாமாகத்தான் அழிச்சிடோம் கனவு உருவாகும் இடமான மூளையின் parietal lobe ஏற்ப்பட்ட சிரிய மாற்றம்தான் நம்மை இங்கே கொண்டு வந்து விட்டு இருக்கு"


"மூளையில் மாற்றம்னு வச்சாலும் அது பாரிணாம வளர்ச்சிலதானே சேரும்?"

      "இல்ல  அந்த மாற்றம் வந்ததுக்கு காரணம் அப்போது வாழ்ந்த நமது வாழ்கை முறைதான். பணம் பார்க்கும் பாதி இயந்திரமாக வாழ்ந்த நம்ம  கற்பனை,கனவு என எல்லாத்தையும் கட்டுபடுத்திகிட்டதால  இப்ப கிட்டத்தட்ட முழு இயந்திரமாக மாறி இருக்கிறோம்"

       "அப்படின்னா இப்ப நம்ம கனவு காண ஆரம்பிச்சா நமது இந்த மனித உணர்ச்சிகள் அற்ற இயந்திர வாழ்க்கை மாறிவிடுமனு சொல்றியா? அப்படியே இருந்தாலும் நம்மகிட்ட இருந்து விட்டுப்போன ஒரு பழக்கத்தை எப்படி திரும்பி கொண்டுவருவது?"

       "அதை திரும்பி கொண்டுவரத்தான் உங்களின் உதவி வேணும் என்னால இதுவரைக்கு மட்டும்தான் யோசிக்க முடிஞ்சது"

      "இப்ப இருக்கிற இந்த மாற்றத்துக்கு பலரும் பலவிதமா ஆராய்ந்து கொண்டு இருக்கும்போது நீ சொல்றது ரெம்ப வித்தியாசமா இருக்கு  ஆனா செயற்கை கனவுகள் எந்த விதத்தில் சாத்தியம்னு எனக்கு தோணலை"

     "இல்ல இப்ப இருக்கிற மைக்ரோ தொழில்நுட்பத்தில் கண்டிப்பா சாத்தியம்னு தோணுது. இப்போது நீங்கள் செய்யும் செல்கள் சார்ந்த பரிணாம வளர்ச்சி ஆய்வோடு இதையும் சேர்த்து பண்ணினா வாய்ப்பு இருக்கு"

      எந்த வித பதிலும் சொல்லாமல் வைத்தி அங்கிருந்து நகர்ந்தார். அனால் அவரின் மனதில் செயற்கை கனவுகளை வரவைப்பது அவ்வளவு எளிதல்ல என்ற எண்ணம் இன்னும் இருந்தது.ஆனால் இதை அப்படியே விடுவதில் இஷ்ட்டமில்லை காரணம் புனி கேள்வி கேட்பாள் பதில் சொல்ல கண்டிப்பாக சில காரணம்  வேண்டும் அதுக்காவது கொஞ்சம் ஆராய்ந்து இந்த காரணத்தினால் முடியாது என்பதை அவளுக்கு விளக்க வேண்டும்.

      அவன் நாற்காலியில் உட்கார்ந்து இருக்க  தலையில் நான்கு  இடங்களில் வயர்கள் சொருகப்பட்டு  இருந்தன. செயற்கை கனவை வரவைக்கும் கருவியின் முதல் சோதனை. முதலில் வைத்தி முடியாது என்று நினைத்து இருந்தாலும் ஆய்வின் தொடகத்திலியே சில உண்மைகள் தெரிந்தன அது புனி சொன்னது போல parietal lobe ல் ஏற்ப்பட்ட சில மாற்றம் . அதை வைத்தி தீவிரமாக ஆராய்ந்த பொது கனவுகள் வர parietal lobe சரியான நிலைமையில் இருக்க வேண்டும் என்பதை அறிந்தார். அது பாதித்து இருந்தால் கனவுகள் வராது என்பதையும் உறுதி செய்ததோடு இப்போது இருக்கும் மனிதர்களுக்கு அது அடைந்து இருக்கும் பாதிப்பின் அளவையும் அறிந்தார்.

      அதனை அடிப்படையாக வைத்து உருவாகியதுதான் இந்த கருவி. ஸ்டெம் செல் முறையில் parietal lobe ஐ வெளியே வளர்த்து அதை மூளையோடு இணைத்து கனவு காண வைப்பது. அந்த செயற்கை மூளை பகுதி ஒரு கணினியில் இணைத்து இருக்க அதில் இருந்து செல்லும் தகவல்கள் அதில் பதிவான பிறகே அவனுக்கு செல்லும். அதாவது அவன் என்ன கனவு கண்டான் என்பதை சொல்ல மறக்கலாம் என்பதால் அதை பதிவு செய்யும்பொருட்டு இது செய்யப்பட்டு இருந்தது..


     முதலில் அவனை ஆழ்ந்த தூக்கத்துக்கு  அனுப்பிவிட்டு கணினி திரையில் மூளையில் இருந்து ஏதும் தகவல் வருகிறதா என்பதுக்கு காத்து இருந்தார்கள். சிறிது நேரத்தில் குறட்டை சத்தம் வந்தது. காத்து இருந்தார்கள்.

சிக்னல்கள் கடந்து சென்றன ஆச்சார்யத்துடன் அதனை மொழிபெயர்க்க தொடங்கி இருந்தார்கள். பலகாலம் கழித்து ஒரு மனிதன் கனவு காண்கிறான் அதுவும் செயற்கையான முறையில்..அவன் கண்ட கனவுகள் ....

1)  முத்தமிடுகிறாள் ..அடுத்து இவன் கைகள் எங்கோ செல்கின்றன..எதோ செய்கிறான் ...(வைத்தியும் புனியும் முகம் சுளித்து கொள்கிறார்கள்)

2) அது இவனது கனவு விமானம் ஒளியின் வேகத்தை மிஞ்சும் ஒன்று அதில் இவன் பெயர் இருக்கிறது..முதல் பயணம் முடித்துவிட்டு வருகிறான்..புகழ்கிறார்கள் .....
  இதுவே போதும் என  நினைத்து அவனை எழுப்புகிறார்கள்.  அவனிடம் நீ கனவு கண்டாய் என்பதை சொல்லும்போது நம்ப மறுக்கிறான்.

     கண்ட கனவுகளை காட்டி விளக்கம் கேட்கும்போது....ஆமாம அவள் எனக்கு வெறும் முத்தம் கொடுத்து விட்டு சென்று இருந்தாளே அடுத்து நடந்தது எல்லாம் என்ன? உண்மைக்கே நடந்ததா?  இருந்தாலும் இதை நினைத்து பார்கவே சுகமாகத்தான் இருக்கிறது,இது எனக்கு புதிய அனுபவம்  என்றான்

     அந்த விமானம் சாத்தியம்தான் அதை கனவில் சேர்க்காதீர்கள் என்றான் கொஞ்சம் கோபமாக.

     முயற்சி பலன் கொடுத்ததை அடுத்து ஒரு சிறிய உருளைக்குல்  ஸ்டெம் செல்கள் மூலம்  உருவாக்கப்பட்ட மூளையை வைத்து தலையில் ஏதும் வயர்கள் சொருகாமல் சில இடத்தில் பொத்தான் வடிவில் குத்திக்கொள்ளும்படி மாற்றி இருந்தார்கள்.

      இப்போது கனவுகான அந்த உருளையும்,சில பொத்தான்களும் போதுமானது. சோதனை முயற்சிக்கு சிலரை தொடர்ந்து செயற்கையாக கனவுகள் காண செய்ததில் அவ்ர்களிடத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் தெரிந்தன. சோதனை காலம் நீட்டப்பட்டு மாற்றங்களை கவனிக்கும் அதே நேரத்தில் வைத்தி அரசின் உதவியோடு இந்த செயற்க்கை மூளையை மனிதனுக்குள்ளேயே வளர்க்கும் முயற்சியில் இருந்தார்.
 
    சோதனை முடிவில் அன்றாடம் வாழும் மனிதர்களை விட ஆய்வுகூடத்தில் பல மாதங்கள் இருந்தவர்கள் முன்பு வாழ்ந்த மனிதர்களை போல சில நடவடிக்கைக  மாறி இருந்தார்கள்.

     இந்த வெற்றிக்கு காரணம் புனிதான் என்று சொல்ல அவளை போற்றுகிறார்கள். பலருக்கும் கனவு கண்ணியாகிறாள்  அவள்...

கதவு திறக்கும் சத்தம் கேட்க ..

"எத்தனை தடவை சொல்லி இருக்கேன் அந்த கனவு காணும் கருவியை எப்போ பார்த்தாலும்  மாட்டிகிட்டே இருக்காதேன்னு" என்று திட்டியபடியே புனியின் அம்மா உள்ளே வர அவள் அந்த கருவியை பத்திரமாக கழட்டி வைத்தாள்.   
 

கானல் காலம்

       சந்தித்து அதிக நாளாகியிருந்தது, ஆய்வுக்கூடத்தில் இருந்த கணேஷை சந்திக்கலாம் என்று சென்றேன். பெரும்பாலும் அவன் அங்குதான் இருப்பான். என்ன செய்கிறான், செய்யப்போகிறான் என்பது அவன்கூடவே படித்த எங்களுக்கே தெரிவதில்லை என்பதைவிட சொல்ல மாட்டான். அதிகமாக கேட்டால் கொஞ்சம் அடிப்படை விசயங்களை மட்டும் சொல்லுவான்.

     சிறிய ஆய்வுக்கூடம் ஒரு ஓரத்தில்  உட்கார்ந்து எதையோ படித்து கொண்டு இருக்க மற்றொரு இடத்தில்  அவனால் உருப்பெற்ற ரோமி எனும் இயந்திர பெண் நின்று இருந்தாள் சலனமில்லாமல். அனேகமாக கணேஷின் கட்டளையாக இருக்கும்.வந்ததை பார்த்தவுடன் பெரியதாக பொருட்படுத்தவில்லை.  ஒருமுறை அங்கு சுற்றி இருப்பதை பார்த்தேன் ஒரு விண்கலம் ஒன்று மூடி வைக்கப்பட்டு இருந்தது, இன்னும் சில கருவிகள் சிதறி கிடந்தன கூடவே புத்தகங்களும்.

"நான் வந்தது கூட தெரியாம என்ன படிக்கறே?" என்றேன்

    வெறுமனே படிக்கும் புத்தகத்தின் அட்டையை என்பக்கம் திருப்பி காட்டினான். வேற்றுகிரக வாசிகளோடு  எவ்வாறு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம், அதற்கான சாத்தியம் என்ன? என்பதைப்பற்றிய புத்தகம் அது.


  "ஆமா நீ கூட சொன்னியே கடைசியா நீ போன ஒரு கிரகத்துல கூட ஜீவராசிகள் இருக்காங்கன்னு அதுவும் வெறும் பெண்கள் மட்டும் பார்த்தேன்னு?" கேட்டேன்

"ஆமாம் அதுக்கென்ன இப்ப?" என்றான்

    "நீ படிச்சிட்டு இருக்கிற இந்த புத்தகமும் அது சம்பந்தமா இருக்கிறதானால  கேட்டேன்...சரி சொல்லு அது உண்மையா என்ன?"

     "நீ நம்பலன்னா அது பொய்யா என்ன? நான் போய் பர்த்துட்டுவந்துதான் சொன்னேன்" என்றான்

" கண்டிப்பா தெரியுமா அங்க வெறும் பெண்கள் மட்டும்தான் இருக்காங்களா என்ன?"

     "நான் பார்த்தவரைக்கும் அபப்டித்தான் ஆனா பெண்கள்னு சொல்ல முடியாது அதே அமைப்பு, உடை வேறமாதிரி இருந்துச்சி ரெம்ப நேரம் அங்க இருக்கல"

"போட்டோ ஏதும் எடுக்கலியா?"

      "எடுத்தேன்" என்று சொல்லியபடி மேஜையில் இருந்து ஒரு கவரை எடுத்து என் முன் போட்டான் உள்ளே சில வித்தியாசமான ஒளி அமைப்புடன் கூடிய புகைப்படங்கள் இருந்தன. அதில் சில தூரத்து உருவங்கள் தெரிந்தன. ஒருசிலவற்றில் தெளிவாக காண முடிந்தது. ஆமாம  அவன் சொன்னது சரிதான் உருவ அமைப்பில் அப்படியே பெண்களை போலவே இருந்தார்கள் உடைக்கு பதிலாக எதோ ஒன்று தடிமனாக பரவி இருந்தது ஒருவேளை அவர்களின் தோல் அமைப்பாக இருக்கலாம்.

"நீ ஏன் கிட்ட போய் பார்க்கல?" கேட்டேன்

    "போலாம்னுதான் இருந்தேன் ஆனா என்னோட விண்கலத்தை இங்கு ரோமியின் கட்டுபாட்டில் விட்டு இருந்தேன். குறிப்பிட நேரத்தில் விண்கலம் திரும்பவரவில்லை என்றால் அதை திரும்ப அழைக்கும் பொறுப்பு ரோமிக்கு. நான் அங்கு அவர்களை பார்த்த சில நிமிடத்தில் ரோமி என்னை திரும்ப அழைத்துக்கொண்டது அதான் பிரச்சினை" என்றான்

அந்த பக்கம் நின்ற ரோமியை வெறுப்பாக பார்த்தேன் அதில் சலனமில்லை..

"திரும்ப போகும் எண்ணம வரலியா உனக்கு?"

"போகணும் அதுக்குத்தான் தயாராகி கொண்டு இருக்கிறேன்"

"நானும் வரட்டுமா?"

"ஏன் அலையுற அது நம்ம பெண்களாக இருக்க வாய்ப்பு இல்ல"

"இருந்தாலும் பரவாயில்லை அங்க வந்து பார்த்துக்கிறேன்"

"அதோட விண்கலம் ஒரே ஆளுக்கு மட்டும் வடிவமைத்துள்ளது"

    "அப்ப நான் மட்டும் போறேன் நீ இங்க இருந்து இயக்கு உனக்கு தேவையான தகவலை கொடுக்கிறேன்" என்றேன்

"ஏண்டா இப்படி?" என்று சொல்லி முறைத்து பார்த்தான்

     "எனக்காக இந்த ஒருதடவை..ஒன்னாவே படிச்சி இருக்கோம் இந்த உதவி கூட செய்ய மாட்டியா"

     "அங்க போய் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நடக்க முடியாது அதோட ஆராய்ச்சிதான் முக்கிய நோக்கம். அதோட எதுவேண்டுமானாலும் நடக்கலாம் உனக்கு வேற திருமணம் ஆகிடுச்சி அதனால ஒத்துவராது"

     "நானே சரின்னு சொல்றேன் பின்னே என்ன வாழ்க்கைல இந்த மாதிரி எதாச்சும் செய்யணும் ரெம்ப நல ஆசை"

      "உன் ஆசை என்னனு எனக்கு நல்லாவே தெரியும். சரி எனக்கும் இதுல கொஞ்சம் பயன் இருக்கு நான் இங்கு இருந்து கவனித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி செயுறேன் ரோமியால் அந்தளவு  செய்ய முடியாத ஒரே காரணத்தால் உன்னை அனுப்புறேன் ஆனால் என் கட்டளையை மீறி எதுவும் செய்யலைனா"

    "சரி செய்ய மாட்டேன் ஆனா அந்த கிரகத்துல எந்த ஒரு ஆபத்தும் இல்லைன்னா என் இஷ்டப்படியே விடனும்?"

    "அதுல எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல.. உன்னோட மனைவி சம்மதம் வேணுமே."

"பொய் சொல்லிடலாம் நீ  எதுவும் சொல்லாம இருந்தா போதும்"

"எதாச்சும் ஆச்சுன்னா?"

"எனக்கு நம்பிக்கை இருக்கு எதுவும் ஆகாது சென்று திரும்புவேன்" என்றேன்

"சரி அப்ப அடுத்த வாரம் விடுப்பு எடுத்துக்கோ உன் பயணம் தொடங்கும்" என்றான்

      எனக்கு ஆச்சரியம்  எப்படி சரி என்றான்  தெரியவில்லை.



அன்றைய இரவில் சாப்பிடும்போது மனைவியிடம் சொன்னேன் அதற்கு அவள் ..

"சயங்காலம் சொல்லவே இல்ல?" கேட்டாள்

     "சொல்ல மறந்து இருப்பேன் ஒருவாரம் தான் அதுக்கு மேல இல்ல அலுவலக முக்கிய வேலை நானே போகணும்" என்றேன்

"சரி கிளம்ப என்ன தேவைன்னு சொல்லுங்க நான்  எடுத்து வைக்கிறேன்?"

"இல்ல நானே பார்த்துக்கிறேன்" என்று சொல்ல ஒரு மாதிரி பார்த்தாள்.

    படுக்கை அறையில்  இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. பேசினால் நான் பொய் சொல்லியதை  எப்படியாவது கண்டுபிடித்துவிடுவாள் என்ற பயம் எனக்கு. அப்படியே உறங்கி போனோம்.

     விண்கலம் அந்த கிரகத்தில் இறங்கிய போது அதிக எடையின் காரணமாக மண்ணில் கொஞ்ச ஆழம் பதிந்து இருந்தது. இறங்கினேன்  காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது ஆனால் சுவாசிக்க எந்தவித சிரமும் இல்லாமல் இருந்தது.

       கணேஷ் சொன்னதுபோல கிட்டத்தட்ட எல்லாமே பூமியை போலவே  இருந்தது. காற்றில் அதிக ஈரப்பதத்தின் காரணமோ என்னமோ மண்ணின் மேற்பரப்பில் ஒரு பசுமை நிற பாசி போல பரவி இருந்தது. நான்  நடந்த இடத்தில் அந்த பாசிகள் விலகி மண் பழுப்பு நிறத்தில் தெரிந்தது.

     மரங்கள் பூமியில் இல்லாத ரகம். அவன் சொன்னது போல ஆய்வுக்கு ஒரு குடுவையில் மண்ணை எடுத்து கொண்டேன். அடுத்து அங்கு இருக்கும் சில தாவர மாதிரிகள், கொஞ்சம் மண், பாறை துகள்கள் இவற்றை சேகரிக்க வேண்டும். கிளம்பும் முன் அங்கு ஒருவித படம் பிடிக்கும் கருவியை வைத்துவிட்டு வரவேண்டும்.

    இந்த வேலைகளை செய்யும்போதே என் மனம் அங்கு இருக்கும்  பெண்களின் மீது சென்றது. கொஞ்சம் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை.

       எல்லா வேலைகளையும் முடித்து இருந்தேன். இன்னும் அதிக நேரம் இருந்தது கிளம்புவதற்கு உலவினேன் பெண்களை தேடியபடி.    உயர்ந்த மரங்களுக்கு நடுவில் செல்ல பயமாகவே இருந்தது. புதிய கிரகம் என்ன  எப்போது வெளிப்படும் என்பது தெரியாது. ஆனால் கணேஷ் சொல்லி இருக்கிறான் வேறு கொடிய மிருகம்  அங்கு வசிக்க வாய்ப்பு இல்லை என்று அந்த தைரியம் எனக்கு.

     விண்கலத்தை விட்டு சிறிது தூரம் சென்ற போது தூரத்தில் சில உருவங்கள் அசைவது தெரிய அதை நோக்கி போனேன். அவன் சொன்னது உணமைதான் எல்லாமே பெண்கள். அதுவும் பூமியில் உள்ளதைபோல. ஆடை ஒன்றும் பெரிய அளவில் இல்லை. அது அவர்களுக்கு இயற்கையாக இருக்க வேண்டும். ஒரு மெல்லிய வலை போன்று  பரவி இருக்க உடல்  அமைப்பு அதில் வெளியில் தெரிந்தது. மெல்ல என்னை  நானே கிள்ளி பார்த்தேன் உண்மையா என்று.

     அருகில் சென்றேன் மனதுக்குள் பயம் இருந்தாலும் ஒரு நம்பிக்கை இருந்தது. கிழே சரிந்து கிடந்த மரம் ஒன்றில் அமர்ந்து இருந்தார்கள். நான் தயங்கியபடி அவர்களை நெருங்க பயத்தில் எழுந்து மொத்தமாக கொஞ்சதூரம் நகர்ந்து சென்றாகள்.

       சிறிது நேரம் எதுவும் பேசவில்லை அவர்களும் சரி நானும் சரி மாறி மாறி பார்த்து கொண்டோம். அவர்களுக்குள் எதோ பேசிகொண்டார்கள். பின் எல்லோரும் ஒரே மாதிரி பார்வையில் என்னை பார்த்தார்கள். இப்போது கொஞ்சம் பயம்  தொற்றி கொண்டது.

"நீ எங்கள் இனம் இல்லையே?" அவர்களில் ஒருவள் கேட்டாள்

"ஆம் நான் வேற்றுகிரகத்தில் இருந்து வந்து இருக்கிறேன் " என்றேன்

      மீண்டும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள் இப்போது அவர்களை கொஞ்சம் நெருங்கி போய் இருந்தேன்.தலையில் முடி இருந்தும் அதன் மீதும் ஒருவித வலை போல இருந்த்து. உடல் அமைப்பு அனைவருக்கும் ஒரே மாதிரி இல்லை வேறு பட்டு இருந்தது. கதைகளில் கேட்ட தேவதை போல இருந்தார்கள்.

"ஏன் வந்தாய்? எப்படி தெரியும்?"

"என் நண்பன் ஒருவன் ஏற்க்கனவே வந்து போய் இருக்கான் இப்போதும் ஆய்வுக்குத்தான் வந்தேன்" என்றேன்

அமைதி நிலவியது ...

"இங்கு வெறும் பெண்கள் மட்டும்தானா என்ன ?" கேட்டேன்

"ஆமாம்" என்று சொல்லி மெல்ல சிரித்தாள் ஒரு தேவதை

வந்ததின் புண்ணியம் கிடைத்த மாதிரி இருந்தாலும் ஒரு சந்தேகம் கிளம்பியது கேட்டேன் ..

"பின்னே எப்படி நீங்கள் பல்கி பெருகுகிறிர்கள்?"

அவர்களிடத்தில் மௌனம்  பதில் சொல்லாமல் கொஞ்சம் குழப்பமாக இருப்பது தெரிந்தது...

"நான் அதற்கு உதவட்டுமா நான் வந்ததின் ஒரு நோக்கமும் அதுதான்" என்றேன் எதோ ஒரு தைரியத்தில்.

"ம்ம் சரி...."

     "என்னது சரியா .... மெல்ல என்னை நானே மீண்டும் கிள்ளி  பார்த்து கொண்டேன் இது கனவா இல்ல உண்மையா என்று.

     "இன்னும் சொல்லி முடிக்கவில்லை ம்ம் சரி அதற்கு தகுதியானாவாரா இல்லையா என்பதை முதலில் நாங்கள் முடிவு செய்கிறோம். அதோடு ஆண்கள் இந்த பகுதியில் இல்லையென்று சொன்னோம் ஆனால் அவர்களுக்கு என்று பணிபுரியும் இடம் இருக்கிறது அவர்கள் அங்கு மொத்தமாக  இருப்பார்கள். இனபெருக்கம  செய்ய சில தகுதி உடையவர்களை நாங்கள் அதற்க்கென்று தேர்ந்து எடுத்து இருப்போம். மற்ற ஆண்கள் எல்லாம் பணிவிடைகள் செய்வார்கள். குழந்தைகளை கவனித்து கொள்வது, இருப்பிடத்தை சுத்தம் செய்வது இன்னும் பல அன்றாட வேலைகள்.

"என்ன சொல்றிங்க?"

"ஆமா இப்போது கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும் நீங்கள் எதுக்கு லாயக்கு என்று"

     கொஞ்சம் வேர்த்து இருக்க இப்போதும் கிள்ளி பார்த்து கொண்டேன்.அவர்கள் பேசியதை வைத்து பார்க்கும் போது  என்னை திருப்பி அனுப்பும் எண்ணம் இல்லை என்பது தெரிந்தது. விண்கலம் வேறு வெகு தொலைவில் இருக்க என்ன செய்வதென்று அறியாமல்  திகைக்க ...

      அதில் இருந்து வந்த சில பெண்கள் என்னை பிடித்து தூக்க ஆரம்பித்து இருந்தார்கள். ஒன்றும் செய்ய முடியாமல் அவர்களின் கை பஞ்சு போல மெதுவாக இருந்ததை மட்டும் உணர முடிந்தது. இப்போதும் இது உணமையாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற நம்பிக்கையில் கிள்ளி பார்த்தேன். ஆனால் அவர்கள்  தூக்கி போவதை நிறுத்தவில்லை என்பது தெரிந்தது . அவர்களின் உடம்பில் இருந்து ஒருவித  நறுமணம் வீசியதை உணரமுடிந்தது. அவர்களின் நடையில் இப்போது வேகம் அதிகரித்து இருந்தது.


    படுக்கை அறையின் திடீர் வெளிச்சத்தில் எழுந்து இருந்தேன். மனைவி   தனது கையை தடவிய படி நின்று இருந்தாள் ........என்னவென்று கேட்டேன் ..

"ஒரு வாரம் வெளியூர் போறீங்க சரி ....... பக்கத்துல தானே படுத்து இருக்கேன் .......அதுக்காக என்னை அப்படி கிள்ளனுமா என்ன ?" என்றாள் கோபமாக கையை பார்த்து கொண்டே ......



அதிசய தேடல்கள்

       எங்களிடம் எழுதும் பழக்கம் முன்பு இருந்து இருந்தாலும் நாளடைவில் மறந்து                                                                   இருந்தோம். எல்லாமே நவீனமாகி                             எழுத்துக்கே தேவையற்று                                 போய் இருந்தது.                                                                  இப்போது நான் எழுதுவதும்  பழமையான                                                         முறையான கையால் அல்ல.  நான் விமானத்தை செலுத்திகொண்டே எனது எழுதும்                                   இயந்திரத்தை  எழுத                                                                  வைத்துக்கொண்டு இருக்கிறேன்.                                    எழுதும் இயந்திரம் எங்களின் எண்ணங்களை கோரவையாக்கி அப்படியே எழுத்தாக்கும் ஒன்று. அதுக்கு நாங்கள் என்ன நினைக்கிறோம்என்பதை  பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. அதான் நான் விமானத்தை கட்டுபடுத்தி தானே இயங்கும் முறையில் செலுத்தியதை கூட இங்கே எழுதிவிட்டது. அது இந்த கடிதத்துக்கு தேவையில்லை என்பதால் அதை மறைத்து இருக்கிறேன். அதான் சில இடைவெளிகள்.

      விமானத்தை எப்படி செலுத்துகிறேன் என்பதுதான் தேவையில்லையே தவிர அதை எங்கு எதற்கு செலுத்துகிறேன் என்பதை தெரிவிக்கத்தான் இந்த கடிதம். இந்த கடிதம் மூலம் மட்டும் இல்லை ஏற்க்கனவே பலவிதமான முயற்சியில் நாங்கள் பயணிக்கக்கூடிய நோக்கத்தை அறிவிக்கும் வேலையை செய்து இருக்கிறோம். எல்லாம் எதாவது ஒன்றிலாவது எங்களுக்கு பயன் கிடக்கும் என்ற நம்பிக்கைதான்.

        பயன் என்பதைவிட எங்களின் முக்கியமான கடமை. ஒருதவறான தகவலால் பல வருடங்ககளுக்கு முன் எங்களில் இருபது பேர் கொண்ட குழுவை வெளியில் அனுப்பிவைத்தோம். என்னதான் முன்னேற்றம் இருந்தும் முன்னெச்சரிக்கை அல்லது பயம் சில நேரங்களில் முட்டாள்தனமான வேலைகளை செய்யவைத்துவிடுகின்றது.

       சொந்த கிரகம். ஒரேகிரகம் ஆனால் அதை இயக்க இரண்டு நட்சத்திரங்கள். எங்கள் அறிவினால் வெளியில் தேடிப்பார்த்ததில் எங்கேயும் இந்த அமைப்பு இல்லை. நாங்கள் இந்த பிரபஞ்சத்தை ஆழ பிறந்தவர்கள் எல்லாமே எங்களுக்கு மட்டுமே என்ற எண்ணம தலைதூக்கி பெருமைப்பட்டுக்கொள்ள இது ஒன்றே  போதுமானதாக இருந்தது. அதே நேரத்தில் நாங்கள் செய்த பெரிய தவறுக்கும் இதுவே காரணம்.


       ஒன்றையொன்று குறிப்பிட்ட கால இடைவெளியில் சுற்றிக்கொள்ளும் இரண்டு நட்சத்திரங்களில் ஒன்று பெரியது மற்றொன்று அதோடு ஒப்போடும்போது மிக சிறியது. இந்த இரண்டையும் மையமாக கொண்டு மிக தொலைவில் எங்களை சுமந்தபடி மெதுவாக நகர்வதுதன் எங்களது ஒற்றை கிரகம்.

        எங்களின் நட்சத்திர சுற்றும் முறையே காலநிலையையும் வாழ்கை முறையையும் தீர்மானித்தது. ஒரு மைய அச்சை பற்றி சுழலும் இரண்டு நட்சத்திரங்களில் பெரிய நட்சத்திரத்துக்கு அருகில் வரும்போது கடும் வெயில் காலமாகவும், சிறியதுக்கு அருகில் வரும்போது இனிமையான வசந்தகாலமாகவும் மாறும். இதனாலேயே அந்த சிறியதுக்கு பெண் கிரகம் என பெயர் வைத்து இருந்தார்கள் முன்னோர்கள்.


        பெண் ...     நாங்கள் அல்லாதவராக இருந்தால் புரிவது கடினம். எங்களது படைப்பில் எல்லாமே இரண்டு. அடிப்படையில் நட்சத்திரத்தில் இருந்து கிரகத்தில் இருக்கும் எல்லாமே. ஆண்,பெண் முற்றிலும் மாறான படைப்பாக இருந்ததால் மிக எளிதாக இரண்டுமே ஒன்றையொன்று கவர்ந்துகொண்டு ஈர்த்து கொள்ளும்படி இருந்தது. அதனால் எங்களின் வாழ்க்கையின் முக்கியமான திருப்பங்களை செய்வதில் பெண்கள் மிக முக்கிய பங்கை வகித்தார்கள்


      இது ஒரு முன்னறிவிப்பு கடிதம் என்பதால் எதையுமே விளக்கமாக சொல்ல எனக்கு உரிமை இல்லை. நாங்கள் கிரகத்தில்  இந்த வளர்ச்சியை அடைய காலங்கள் நிறையவே கடக்கவேண்டியது இருந்தது. இப்போது நாங்கள் இருக்கும் நிலைமையை எங்கள முன்னோர்கள் சிந்தித்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள் அவ்வளவு  வளர்ச்சி.

      அதிக அறிவு வளர்ச்சியில் கற்பனைகளும்,கண்டுபிடிப்புகளும் அளவின்றி போக சொந்த இடம் தவிர்த்து வேறு இடங்ககளுக்கும் எங்களின் பார்வை நீண்டது. எங்களின் தொடக்கம் அந்த கிரகத்தில் எப்படி என்பதை முழுமையாக அறிந்தது நாங்கள் செய்த பெரிய விசயம். அதுவரை இருந்த பழமையான விசயங்களை இனத்தவர்களிடம் இருந்து தூரமாக விலக்கிவிட்டு இப்படித்தான் நாம் தோன்றினோம் என்பதை நிலைநிறுத்தினோம். 


         என்னதான் பழைய நம்பகம் இல்லாத விசயங்களை நீக்கி இருந்தாலும் சில அறிவையே மழுங்க செய்து தவறுகள் செய்ய வைக்கும் என்பதுக்கு ஆதாரம்தான் இந்த கடிதமும் பயணமும். எங்களின் பிறப்பு பற்றி எப்போதுமே நிலவிவரும் ஒன்று எங்கள் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்துதான் எங்களை உருவாக்கின எனபதுதான். அதில் இருக்கும் சிறிய நட்சத்திரம் பெண் என்பதால் வெப்பம் குறைவானது மென்மையானது, பெரிய நட்சத்திரம்தான் ஆண் இரண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒன்றோடொன்று சேரும் அப்போது எங்கள் கிரகம் அழிந்து வேறொரு புதியதாக பிறக்கும். அபப்டி ஒருமுறை பிறந்ததுதான் இப்போதைய எங்களுடைய இருப்பிடம் என்பதுதான் அது.

       இதை எங்கள் அறிவால் மறுத்தாலும் சரியென நிரூபிக்க ஆதாரங்களாய் இனத்தவர் அறிய நிறையவே இருந்தன. முக்கியமாக எங்களின் படைப்பும், எங்களுக்கு கீழ் இருந்த உயிரின படைப்பும் இரண்டாக அதுவும் அவைகள் சேர்ந்து புதியதாக ஒன்றை உருவாக்கும் விதமே. இப்படி சொன்னவர்கள் குறிப்பிட்ட தந்திரத்தை கையாண்டார்கள் சில கணக்குகளை வைத்து எங்கள் அறிவையே மிரட்டினார்கள். அது எங்கள் கிரகம் ஒரு குறிப்பிட்ட சுற்றுக்களுக்கு பின் அதன்  நட்சதிரங்கள் மீண்டும் ஒன்றோடொன்று கண்டிப்பாக சேர்ந்தே ஆகும் என்பதுதான் அவர்களின் கணக்கு.

        அவர்களின் கருத்துக்கு ஆதரவாக எங்களின் அறிவின்பலனும் இருந்தது. அதாவது எங்கள் நட்சத்திரங்கள் எரிந்து வயதாகி பெரியாதாக மாறுவதால் அதன் மையத்தில் இருக்கும் ஈர்ப்பு விசையை விட நட்சதிரங்களுக்கிடையிலான ஈர்ப்பு விசைஅதிகமாகி   அதன் இருப்பிடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி நகர்ந்து கொண்டு இருப்பதை கண்டு பிடித்தோம். அதுவும் மிக சிறிய அளவில்தான் இருந்தது. இதையே அவர்களும் மிகப்பெரிய ஆதாரமாக எடுத்து கொண்டார்கள்.

      அவர்களின் கணக்குப்படி இரண்டு நட்சத்திரங்களும் சேரும்ம்காலம் வந்துவிட்டதாக சொன்னார்கள். ஆனால் இப்போது எங்களின் அறிவுக்கு புதியதான கண்டுபிடிப்பு ஒன்றுகிடைத்து இருந்தது. அதன்படி ஒருபோதும் அந்த இரண்டு நடச்திரங்கள் சேர வாய்ப்பே இல்லை. அது அளவில் பெரியதாகி மத்திய ஈர்ப்பு விசையை மிஞ்சுவதாக வைத்துகொண்டாலும் அது மெல்ல நகர்ந்து போவதக்குள் ஒரு நட்சத்திரத்தின் ஆயுள்காலம் முடிந்து இருக்கும்.

        அந்த முடியும்காலம் பழமைவாதிகள் கணித்த அளவில் இருந்து பல ஆண்டு தொலைவில் இருந்தது. அது அவர்களின் கருத்துகள் மேலோங்கி இருந்த நேரம் என்னதான் ஆதாரங்கள் எடுத்து காட்டினாலும் இனத்தவர்களிடம் நம்பிக்கை வரமறுத்தது. விளைவு இறுதியான முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ள பட்டோம். அந்த முடிவையும் அவர்களே முன்வைத்தனர்.


       அதன்படி எங்களின் பிறப்பு ரகசியங்களை கண்டுபிடித்தவர்கள், விண்ணியலில் சாதனை படைத்தவர்கள் என சிலரை கிரகத்தை விட்டு வெளியேற்றுவது. ஒருவேளை நட்சத்திரங்கள் சேர்ந்து ஒரு புதிய கிரகம் உருவாகி இருந்தால் அவர்கள் திரும்பி வந்து ஏற்க்கனவே இருந்ததைப்போல ஓர் உயிரன அமைப்பை ஏற்படுத்தவேண்டும். காரணம் புதியதாக உருவாகபோகும் கிரகத்தில் உயிரினம் உருவாக தடைகள் இருந்தால் அவர்கள் செயற்கையாக உருவாக்கலாம் என்பதே பழமைவாதிகளின் கருத்து.

         ஆனால் அதுக்கு தகுந்த சூழ்நிலை இருக்கவேண்டும் என்பதை நாங்கள் எடுத்து விளக்கியும் ஏற்றுகொள்ளாமல் அவர்களின் யோசனைக்கே இனத்தவர்களை தூண்டினார்கள். அப்படியொரு நட்சத்திர மோதலில் அழிவதற்கு முன் இன மோதலில் அழிந்துவிடுவோம் என்ற பயம் கொள்கிற அளவுக்கு நிலைமை மோசமாக இருந்ததால் மொத்தம் இருபது பேரை கிரகத்தை விட்டு நெடும்பயணத்திறக்கு தயாரக்கினோம்.

         அதற்கென்று தனிவிமானம் ஒன்றை வடிவமைத்து தேவையான எல்லாவற்றையும் அதில் அமைத்து பலமுறை வெள்ளோட்டம் பார்த்து அவர்களை அனுப்ப இருந்தோம். அவர்கள் செல்லும் வழி அவசர் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என எல்லாவற்றையும் பயிற்சி முறையில் கொடுத்து இருந்தோம்.

       அவர்களோடு எங்களின் பிறப்புக்கு காரணமாக இருக்கும் முதல் ஒரு செல்லையும், அது தொடக்க வளர்ச்சிக்கு தேவையான சில பொருள்களையும் சேர்த்தோம். அப்படி ஒருவேளை பயனகாலத்தில் ஏதாவது கிரகம் எங்களுடைதைய போல தென்பட்டால் அதில் எப்படி இறங்குவது எப்படி உயிர்களை தோற்றுவிப்பது அல்லது அதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்ப்படுத்துவது என எல்லாமே கொடுத்து இருந்தோம். எதுவுமே இதுதான் நடக்குமென்று கொடுக்கபட்டவை அல்ல. நடந்தால் இப்படி செய்ய வேண்டும் என்பதே எங்களின் அறிவுரை.           

        பழமைவாதிகள் கருத்துப்படி ஆண்,பெண் இருவரையும் அனுப்பி  புதியதாக ஒரு செல் உயிரினத்தில் இருந்து தொடங்காமல் நேராகவே எங்களது இனத்தை உருவாக்கும் எண்ணம ஏற்றுகொள்ளபடவில்லை. புதிய கிரகமோ அல்லது வேறொரு இடத்தில் கண்டிப்பாக எங்கள் இனம் பெருக சார்ந்த சூழல் அமைந்து விடாது. ஆனால் ஒரு செல் வளவதர்க்கான சுழலை ஏற்படுத்தி பின் அதைக்கொண்டு எங்களின் தேவையை நிறைவேற்றி கொள்ளமுடியும் எப்படி இப்போதைய கிரக அமைப்பு இருக்கிறதோ அது மாதிரி.

       அவர்கள் வெளியேறும் காலம் வந்தது. விமானம் ஏறி மனமில்லாமல் பிரிந்தார்கள். இப்போது நான் பயணிக்கும் அதேரக விமானம். போகும் வேகத்துக்கு ஏற்ப அளவை மாற்றிக்கொள்ளும். அதிகவேகத்தில் relative mass அதிகமாமல் இருக்க அதன் உருவம் மிக சிறியதாக அமைத்துவிடும். இதனால் அதன் mass அதிகமானாலும் பெரிய பாதிப்பு அதிகம் இருக்காது. அதிக காலத்துக்கு தானாக இயங்கும் முறையை பயன்படுத்தி பயணிக்கலாம். உராய்வு வெப்பம் இல்லாமல் பயணிக்க வெளியில் உள்ள காற்றை பணிக்கட்டிகளாக மாற்றிக்கொள்ளும் அமைப்பு அதன் வெளிப்புற சுவரில் இருந்தது,


            எங்கள்  கிரகத்தில் எல்லோரும் அனுப்பியவ்ர்களை மறந்து அழியப்போகும் தினத்துக்கு காத்து இருந்தோம். ஆனால் அது கடைசிவரை வரவே இல்லை. அதே பழமைவாதிகள் தனது கணக்கில் ஏதோ சிறுபிழை நேர்ந்துவிட்டதகவும் ஆனால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்பதை நம்பிக்கையோடு சொல்லி கொண்டார்கள். ஆனால் இனம் நம்ப தயாராக இல்லை. மாறாக அனுப்பியவர்களின் மீது கவனம் திரும்ப அவர்களை தேடும் பணியை தொடங்கும்படி வேண்டினார்கள்.

      அதன் விளைவே இந்த பயணம். இது எங்களின் முதல் பயணம் இல்லை. ஏற்க்கனவே பல காலமாக எங்களின் முன்னோர்கள் தேடுதல் வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பயன்தான் கிடைத்தபாடில்லை.

      எங்களின் கணிப்புப்படி பிரிந்து சென்றவர்கள் ஏதாவது கிரகத்தில் இருக்க வேண்டும். அல்லது விமானமாவது கிடைக்க வேண்டும். அதனாலேயே பலவிதங்களில் தகவல்கள் பரப்பும் வேளையில் இறங்கி இருக்கிறோம். இந்த கடிதம் கூட பெரியஅளவில் விண்வெளியில் எங்காவது நிறுத்தப்படும்.  கொஞ்சம் விளக்கம் அளித்து இருப்பது தேடுவது  நாங்கள் தான் என்று அறிந்துகொள்ளத்தான்.

     ஒருவேளை  வேறொரு கிரகத்தில் இறங்கி புதிய உயிர்களை தோற்றுவிக்கும் பணிகளை தொடங்கி இருந்தாலும் அது இன்னும் பாதியில்தான் இருக்கும். ஏனென்றால் வளர்ச்சியின்படி கடைசியாக வருவது நாங்கள். ஆனால் இப்போது இருக்கும் எங்கள் சொந்த கிரகத்தில் ஒருவேளை எதிர்காலத்தில் எங்களின் அடுத்த பரிணாம வளர்ச்சி வரலாம். ஆனால் நாங்கள் அனுப்பிய ஒரு செல்ல்லில் அதை எங்களின் பரிமாணத்தோடு நிறுத்தும் படி அமைத்து இருந்தோம். ஏனென்றால் அப்போதே அறிந்து இருந்தோம் கிரகம் அழியபோவதில்லை.  ஒருவேளை தேடுதல் ஆரம்பித்தால் வேலை எளிதாக இருக்கும் என்பதற்காக.


         அனுமானம் படி ஒரு இடத்தில் அந்த ஒருசெல்லை வளர்த்து இருப்பார்கள். அதற்கு தேவையான எல்லா சூழ்நிலையையும் உருவாக்கி இருப்பார்கள்.அதை கண்டுபிடித்தாலும் அங்கு ஒருவேளை எங்கள் இனம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதுக்கான பரிணாம வளர்ச்சி தொடங்கி இருக்கும். அதை கண்டாலே எங்களுக்கு புரிந்து விடும்.  அல்லது அவர்கள் பெருகி விண்வெளியில் பழைய கிரகத்தை தேடிக்கொண்டு இருந்தால் நாங்கள் விட்டு செல்லும் கடிதம்,தகவல்கள் உதவலாம்.

    மேலே சொன்னவை உங்களோடு அல்லது ஏதாவது ஒரு சூழ்நிலையோடு ஒத்துப்போனால் நீங்கள் எங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் அல்லது இனத்தால் தோற்றுவிக்கப்பட்டு பரிணாம வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டு இருக்கும் ஒரு பிரிவு. முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் பயணம் இந்த கடிதம் அமைத்த வழியில் இருந்தால் இங்கேயே இருக்கவும் எங்களின் பின்வருகை இந்த வழியில்தான் இருக்கும்.

சில விசயங்கள் - 12

       இதில் என் சுயபுராணம் மட்டும்...இந்தமுறை ஊர்பயணம் மற்றதைவிட நன்றாகவே இருந்தது. ஒருவேளை பொங்கல் பண்டிகை காலமாக இருந்திருக்கலாம். பண்டிகைகளை வெகு விமர்சியாக கொண்டாடுவதில் சுத்தமாக ஆரவம் இல்லைதான். இந்த நேரத்தில் எல்லா குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக கூடி இருக்க கிடைக்கும் ஒரு அறிய வாய்ப்பு அதுதான் என்னை பொருத்தவரைக்கும் பெரிய சந்தோசம்.இந்த காரணத்துக்காகவே இந்த மாதிரியான பண்டிகைகள் தொடங்கப்பட்டு இப்போது திசைமாறி போய் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

     அனேகமாக நான்கு வருடங்களுக்கு பிறகு இந்த பொங்கலுக்கு நான் ஊரில் இருந்தேன். அதுவும் புதிய வீட்டில் பொங்கல் கொஞ்சம் இனிப்பாகவே இருந்தது. ஏற்க்கனவே நினைத்தது போலவே காலை நான்கு மணிக்கே அடித்து எழுப்பி விட்டார்கள். இருந்தாலும் அசையவில்லை இதோ வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு தூங்கும் வேலையை தொடர்ந்தேன். கடைசியாக கையில் தண்ணி கொண்டுவந்து முகத்தில் தெளித்த பின்னர்தான் குளிர் தாங்காமல் எழுந்திருக்க வேண்டியதாயிற்று.

     முன்பெல்லாம் காலையில் சீக்கிரம் எழுந்துதான் வாசலில் கோலம போடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் இரவே வெகுநேரம் முழித்து இருந்து புத்தகத்தை பார்த்து போட்டுவிட்டு காலையில் சௌகரியாமாக எழுந்திருக்கும் வித்தையை எனதூரில் காண முடிந்தது.ஆனால் எங்கள் வீட்டில் காலையில் என்னை எழுப்பியது கோலத்துக்கு வண்ணம் கொடுக்குவாம்.

    முந்தைய நாள் இரவில் முழித்து இருந்து கோலம போட்டவர்கள் எல்லோரும் யாருக்கும் தெரிந்து இருக்காது என்ற நினைப்பில் ஏதோ இப்போதுதான் போட்டது போல பொங்கல் வேலையில் இருந்தார்கள். இன்னும் கொடுமை என்னவென்றால் இரவு போட்ட கோலத்துக்கு பாதுகாப்பாக பெரிய பெரிய கற்களை அதை சுற்றி வைத்து இருந்ததுதான்.யாரும் வாகனத்தை மேலே ஏற்றிவிட்டால்?. அதுவும் சாலையில் என்பதால் எத்தனை பேர் விழுந்தார்களோ அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

     நான் வெளியே வந்து பார்க்கும்போது போர்டிகோவில் மண்போட்டு பானைவைத்து எல்லாம் தயாராகி இருந்தது.எல்லோரும் அவர்களின் வேலையில் மும்மரமாக இருந்தார்கள். இப்போது போய் காபி கேட்டால் அடிவிழும் என்பதால் பொங்கல் பொங்கும்வரை வரை காத்திருந்து அப்புறம் சாமிகும்பிட்டு மாடியில் காக்கைக்கு முதலில் வைத்துவிட்டு பின் காத்திருந்த வேலையை முடித்தேன்.

      அதேநாள் காலையில் அறிவியல் வளர்ச்சியின் சாதனையை கண்கூடாக காணமுடிந்தது.சில வீடுகளில் காஸ் அடுப்பை வீட்டின் வாசலில் வைத்து பொங்கல் வைத்துக்கொண்டு இருந்தார்கள். என்னதான் இது முன்னரே பல இடங்களில் நடந்து இருந்தாலும் நான் நேரில் பார்ப்பது இதுதான் முதல்முறை. அடுத்த தடவை மின்அடுப்பு (induction) வைத்து பார்க்க நேர்ந்தாலும் ஆச்சர்யப்படமாட்டேன்.



     அடுத்து யோசிக்க வைத்த விசயம் கோலங்கள். முதலில் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்றுதான் நினைத்து இருந்தேன். என்னதான் கொஞ்சம் ENG. DWG ல் தேறியிருந்தாலும் சிலவற்றை நான் முயற்சித்தபோதுதான் உண்மை தெரிந்தது. முடிக்க முடியும்தான் ஆனால் அதற்கென்று போடுகிற முறையில் இருக்கும் ஒரு தரம் அழகு வராது. தனி தனியாக போட்டு எல்லாத்தையும் இணைக்க்முடியும் ஆனால் முறைப்படி போடுபவர்கள் ஒரே தொடர்ச்சியாக போடுவதால் இடையில் வெட்டு குத்துக்கள் நடந்த சுவடுகள் தெரியாமல் இருக்கும். கோலம எல்லோராலும்  அழகாக போடமுடியாது அது பெண்களாக இருந்தாலும் சரி.

                                     *********

        டெல்லி திரும்புவதுக்கு இரண்டு நாள் முன் இரவில் நடந்து வரும்போது கால் ஒரு இடத்தில் சருக்கென்று வழுக்கியது பின்திரும்பி மொபைல் வெளிச்சத்தில் என்னவென்று பார்த்தால் ஒரு பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. இதயம் சில வினாடிகள் துடிதததா தெரியவில்லை. நல்லவேளை பாம்பின் ஏதாவது ஒரு பகுதியை மிதிக்கவில்லை.

    அதாவது அதன் வால் பகுதியை மிதித்து இருந்தால் நிலமை வேறாக இருந்து இருக்கும். நடந்து வரும் அதிர்வுக்கு முதலிலேயே அது சுருண்டு இருந்திருக்கிறது. அதன் உடல் பகுதியினை மொத்தமாக சேர்த்து மிதித்து இருக்கிறேன். அதனால் உடனே ஒன்றும் செய்ய இயலாமல் நான் காலை எடுத்தபிறகு தலையை தூக்கி வலியால் ஓடி ஒரு ஓரத்தில் போய் மீண்டும் சுருண்டு நகர முடியாமல் கிடந்தது. அதற்கு என் எடை காரணமாக இருக்கலாம். கொஞ்ச நேரம் பார்த்துகொண்டு இருந்தேன் நகர்கிறதா என்று இல்லை அது இருந்த இடத்திலியே நெளிந்தது.பாவமாக இருந்தது. பெரிய பாம்பும் இல்லை. ஒரு இரண்டடி இருக்கும்.

     வீட்டில் போய் சொன்னால் அலறியடித்து காலை கழுவ சொல்லி ரத்தம் எங்கும் வருகிறதா என ஆள் ஆளுக்கு பார்த்தார்கள். எல்லா சோதனையும் முடிந்த பிறகு நான் எந்த காலால் பாம்பை மிதித்தேன் என்பதை மறந்துவிட்டேன் என்று சொல்ல எதிலும் விளையாட்டுத்தான் என செம கோபமாகி......... சரி அவை வேண்டாம். அப்புறம் அது என்ன பாம்பு என்று பார்த்து வரச்சொல்ல கிளம்பி போய் அந்த இடத்தில் லைட் அடித்து பார்க்க சில வினாடிகள் நின்ற இதயம இப்போது நிமிட கணக்கில் நின்றது. காரணம் அங்கு இரண்டு பெரிய பாம்புகள் அதனை சுற்றி இருந்ததுதான்.

     நான் லைட் அடித்ததும் அந்த வெளிச்சத்தில் வேகமாக நகர்ந்தது. நான் மிதித்த பாம்பு அந்த இடத்தை விட்டு நகராமல் அங்குதான் நெளித்து கொண்டு இருந்தது. அவ்வளவுதான் ஓடாத குறையாக வீடு வந்து சேர்ந்து நடந்ததை சொன்னால் முதலில் கொஞ்சம் அதிர்ச்சியானாலும் பின்னர் நான் கதைவிடுகிறேன் என நம்ப மறுத்தார்கள்.  வாருங்கள் போய் பார்க்கலாம் என்று சொல்ல வேண்டாம் நம்பிட்டோம் என்று முடித்தார்கள்.

     கொஞ்ச நேரம் கழித்து அங்கு என்ன நடந்தது என்பதை ஒருவழியாக அனுமானிக்க முடிந்து. அக்கம் பக்கம் எங்காவது வீடு கட்ட சுத்தம் செய்து இருப்பார்கள். அங்கு இருந்த ஒரு பாம்பு குடும்பம் இடத்தை காலி செய்துவிட்டு போகும்போதுதான் நான் அதனை மிதித்து இருக்கிறேன். மறுநாள் காலையில் போய் பார்த்தால் ஒன்றுமே அங்கு இல்லை. ஒருவேளை கொஞ்ச நேரம் கழித்து அது போய் இருக்கலாம். இல்லை காலையில் பூனைகள், பறவைகள் இவற்றிக்கு இரையாகி இருக்கலாம். என்னை பார்த்த  பாம்பு நாற்பது நாள் விரதம் இருந்து என்னை தேடி வருமா? அப்படி வரும்னு சொல்வாங்களேன்னு வீட்டில் கேட்க அப்படி வந்தால் உன்னுடைய முகவரி கொடுத்து பிளைட் ஏத்தி அனுப்பி வைக்கிறோம் என்றார்கள். 

                                           *******

      ஊருக்கு போனால் கண்டிப்பாக நான் போகும் இடம் பழைய புத்தக்கடை.  சிலவருடங்கள் முன்பே அதன் இருப்பிடம் அறிமுகமாகி இருந்தது. பிரபல VVR கடலை மிட்டாய்கடைக்கு இடது பக்கம் கொஞ்சமாக ஒரு இடத்தில  அலமாரிகள் நிறையா அடிக்கிய புத்தகங்களை கொண்டிருக்கும். ஒரு முதியவர்தான் இருப்பார். பழைய புத்த்கங்கள் மட்டுமே அங்கு இருக்கும் மற்றபடி பேப்பர்கள் அவர் சேகரித்து வைப்பது இல்லியாம்.அன்றைய தினத்துக்கு அரைப்புக்கு போட்டுவிடுவாரம். காரணம் கடைசியில் சொல்கிறேன்.

     ஒருவனின் சில ரகசியங்களை தெரிந்துகொள்ள அவனது குப்பை தொட்டியை பார்கவேண்டும் என்பார்கள். அதே போல ஒரு ஊரில் என்னமாதிரியான புத்த்கங்கள் படிக்கிறார்கள் என்பதை பழைய புத்தககடையின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி பார்த்தால் கோவில்பட்டியில் பெரும்பாலும் கல்வி சம்பந்தமான புத்தகங்கள்தான் அதிகம். காரணம் கல்லூரிகள் பள்ளிகள் அதிகம்.

     பெரியவரிடம் பாடப்புத்தகம் தவிர வேறுவகை கேட்க அலமாரியின் ஒரு வரிசையில்  அடுக்கில் இருந்த புத்தகத்தை மட்டும் காண்பித்து அதை எல்லாம் எடுத்து வெளியில் போட்டார். தேடியதில் பெரும்பாலும் பக்தி ததும்பும் புத்தகம்தான். இரண்டாவதாக யோகா செய்வது எப்படி என்ற மாதிரியானவை. நிறையா பேர் சும்மா இருக்கிறார்கள் போல. இறுதியாக சில நாஞ்சில் நாடன் சிறுகதைகள் உட்பட தமிழ் இலக்கண விளக்கங்கள் நிறைந்த புத்தகங்களோடு ஒரு எட்டு தேறியது. 

     அதில் திருவள்ளுவரும் சிவப்பிரகாசரும் என்ற புத்தகத்தை படிக்கும் முன்னரே சில விசயங்கள் தெரியவந்தது.  கோவில்பட்டி என்பது கோயிற்பட்டி என்றுதான் சொல்லி வரப்பட்டு இப்போது மாறியிருக்கிறது. பெரியமாற்றம் இல்லையென்றாலும் எனக்கு தெரியாத விசயம். அதுவும் இல்லாமல் திருவள்ளுவர் மன்றம் என்ற ஒன்று இருந்து இருக்கிறது நிறைய இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் இந்த மன்றத்தில் புலங்கபட்டு இருகின்றன என்பதை அதன் முதல் பக்கத்தில் ஒட்டியிருந்த அந்த மன்றத்தின் குறிப்பு சீட்டில் இருந்து தெரிந்து கொண்டேன்.      இப்போதும்  இருக்கிறதா தெரியவில்லை.


      கடைசியாக  எடுத்த புத்தகங்களை அங்கு வைத்தே புரட்டி கொண்டு இருக்க தம்பி கடையை மூடனும் என்று தயார் செய்தார் அந்த பெரியவர்.  துட்டை கொடுக்கும்போது இந்த மாதிரி புத்தகங்கள் வந்தால் எடுத்து வைங்கள் என்று சொல்ல போனமுறை வந்து இதைத்தான் சொல்லிட்டு போனே பார்த்தில்லே இவ்வளவுதான் வந்தது அப்படி வந்தால் நான் எடுத்துவைக்கிறேன் என்றார்.

      அவர் இந்த மாதிரியான புத்தகங்களையும், பள்ளி சம்பந்தமானவைகளையும் அரைப்புக்கு அனுப்பாமல் வைத்து இருப்பது யாராவது ஏழை மாணவர்கள் வந்து கேட்பார்களாம். கொடுக்கிற காசை வாங்கிக்கொண்டு அல்லது இலவசமாக கொடுத்துவிடுவார். ஆச்சர்யம் இன்னொன்று அவர் கடைக்கு பூட்டு போடுவதில்லை. காரணம் கேட்டேன் என்ன தம்பி கேள்வி இது இங்கு வந்து திருட என்ன இருக்கு என்றார்.என்னை பற்றி சரியாக தெரியவில்லை போலும்.  





  

இப்படியும் எழுதலாம்

         இதுவரை ஐம்பதுக்கும் மேலான சிறுகதைகள் எழுதி இருப்பேன். என்னை பொறுத்தவரையில் எல்லாமே ஒவ்வொரு மனநிலையில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடிப்படையாக வைத்து எழுதியவை. அதனால் எனக்கு எல்லாமே தேறும் வகைதான். ஆனால் வாசிப்பவர்களுக்கு எப்படி என்று இதுவரை யாரும் சொன்னதாக நினைவில்லை. அதற்காக எனது கதைகள் எல்லாம்  தமிழ் எழுத்தில் சிறந்தது என்றெல்லாம் சொல்ல வரவில்லை அடிக்க வருவார்கள். நான் என்ன மாதிரியான கதைகளை படிக்க நினைக்கிறன்றேனோ அதையே எழுதுகிறேன். அதிலே ஆர்வமும்கூட.

      படிப்பதைவிட தனது முயற்சியில் ஒன்றை எழுதிவிட்டு அது ஓரளவுக்கு தேறுகிற மாதிரி இருந்தால் அதில் இருக்கிற இன்பமே தனிதான். சில நேரங்களில் அனுபவித்தது உண்டு. இதில் இருந்து தெரிந்து கொண்ட ஒரு விசயம் எழுதுபவர் என்னதான் எதையுமே எதிர்பாராமல் எழுதுகிறார் என்றாலும் மற்றவர்களின் அங்கீகாரமும் பர்ரட்டுகளும் அவரின் வாருங்கால எழுத்துக்களுக்கு செய்யும் ஒரு சிறு உதவியாக இருக்கும் .ஆனால் மற்றவர்கள் தன் எழுத்தை அங்கிகரிக்க வேண்டும் என்பதற்காக எழுதினால் தொடர முடியாதுதான்.


      சரி விசயத்துக்கு வருகிறேன் இதுவரை நான் எழுதியவை எல்லாம் பெரும்பாலும் அறிவியல் புனைவுகளே. ஒரு அடிப்படையான அறிவியல் விசயம் அதனை விவரிக்க சில கற்பனை கதாப்பாத்திரங்கள் இப்படித்தான் என் கதைகள் நீளும். இந்த கற்பனைக்கு நான் எடுத்துக்கொள்ளும் இடங்கள் எல்லாமே உணமையானவை.அவை பெரும்பாலும் நான் வாழ்ந்து ரசித்த இடமாகவே இருக்கும்.சிலகதைகளில் வந்த பின்னுட்டங்கள் இது உண்மையா? கதையா? என்ற சந்தேகமே இந்த எனது முயற்சிக்கு வெற்றியும்கூட.

      இல்லாத ஒன்றை அப்படியே கற்பனையில் மனதில் விரிக்க நிறைய மெனக்கெட வேண்டும். ஆனால் ஏற்க்கனவே மனதில் ஆழமாக பதிந்த விசயங்களை அப்படியே எழுதும்போது கற்பனையில்  எழுதியதை விட கொஞ்சம் சிறப்பாகக்காட்டமுடியும் என்பது என் கருத்து. எல்லா கதைகளிலும் இந்த மாதிரி உண்மையானவைகளை சேர்த்து எழுதிவிட முடியாது. கதைக்கரு ஒத்துபோகவேண்டும்.

    நானும் சில கதைகளை இந்த வகையில் எழுதி இருக்கிறேன். இதுவரை படித்தவர்களுக்கு அது வெறும் என் கற்பனைதான்,ஆனால் இப்போது அதன் உண்மை உருவமும் உங்களுக்கு. இந்த விசயங்களை நான் எப்படி என் கதைகளோடு சேர்த்து இருக்கிறேன் என்பதற்கு ஆதாரமாய் சில...

ஒரு ரகசியம்     என்ற கதையில் வரும் கோயில் ..

   பல வருடங்களுக்கு முன் அந்த கோயில் மிக பிரபலமாக இருந்ததாம்....திருவிழாவின் போது யானை கட்டி தேர் இழுத்ததாக சொல்வார்கள் என் பாட்டி.
 
   நான் சிறு பிள்ளையில் பார்த்து இருக்கிறேன்.....மிகப்பெரிய தேர் ஊரின் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்......அந்த இடத்திற்கு தேரடி என்ற பெயர்.....மாலையில் பெரியவர்கள அமர்ந்து கதை பேசுவார்கள்..அதன் நான்கு சக்கரங்களுக்கு கிழே ஒரு பெரிய கல்லை வைத்து இருப்பார்கள்..எனக்கு தெரிந்து நான் பார்த்து அந்த கோயிலுக்கு விழாக்கள் நடந்ததாக இல்லை..அதற்கு பிறகு வந்த நாட்களில்..அந்த தேரின் பாகங்கள் ஊரில் உள்ளவர்களால் அடுப்பு எரிக்க பயன்படுத்தப்பட்டு...இப்போது அந்த கல் மட்டும் இருக்கின்றது..
கோயிலுக்கு முன்னால் கிடக்கும் கல் தூண்கள்
                                                                பெருமாள் கோயில்

   பெரிய கோயில், நிறைய சிலைகள் இருந்தன,ஒரு கட்டத்தில் எல்லாம் திருடுபோய் இன்று ஒரு சில மட்டுமே மிஞ்சி இருக்கின்றன..கோயிலின் கோபுரத்தை சுற்றியும் செதுக்கப்பட்டுள்ள சிற்ப்பங்கள் நேர்த்தியானவைகள்...உள்புறம் பெரிய தூண்கள் வைத்து கட்டப்பட்ட கோயில்..,...வெளியேயும் பெரிய தூண்கள் இருந்ததாகவும்...சில காரணங்களுக்காக அதை பிடுங்கி விட்டார்கள் என்றும் பாட்டி சொல்லி இருக்கிறார்கள்..

   இன்றும் அந்த கோயிலை சுற்றி பெரிய அளவிலான கல் தூண்கள் கிடக்கின்றன...அதை யாரும் பெயர்த்து எடுத்து கொண்டு போக முடியாது என்பதே அதற்கு காரணம்...

   மூலவர் பெருமாள்..சிறுவயதில் போய் இருக்கிறேன்...அதற்கு பிறகு அந்த கோயிலில் பூஜை நடந்ததாக நினைவில்லை....ஒரு நேரத்தில் கோயிலின் மீது இருந்த கலசம் காணமல் போனது..இப்போது இருப்பது வெறும் மூலவரும்,சில அழகான சிற்பங்களும்



தூண்கள்    கதையில்

     ஊரின் தொடக்கமே அந்த பெருமாள் கோயில்தான். அடுத்து வீடு ஆரம்பம் என்றால் கொஞ்ச தூரம் தள்ளிதான்.  அந்த கோயிலை சுற்றியும் பெரிய கல் தூண்கள் ஒழுங்கற்று கிடக்கும்.பழமை வாய்ந்த அந்த கோயிலில் இருந்து பிடுங்கி வெளியில் போடபட்டவை அவை..........
                                                           
                                                          கல் தூண்கள்

    .........தன்னிலை மறந்து மெல்ல தூணின் மீது சரிய அவள் சேலையில் கண்ணாடியில் பார்த்த அழகிய முகம், அதை கட்டி நடந்தவிதம் எல்லாம் ஒருமுறை வந்தபோனது. மெல்ல சிரிப்பது போன்ற உணர்வு கண்டிப்பாக சந்தோசத்தில் இல்லை. அதுதான் கடைசி. அவளது தலை சரிந்து கன்னம் அந்த கல்லில் ஒட்டியது.


தெரியலை..கதையில்

     ஆற்றை கடக்கும்போது தண்ணீர் முனங்கால் அளவிற்குத்தான் போனது... மழைக்காலம்...அந்த ஆறும் காட்டாறு..எப்போது மழை பெய்யுமோ அப்போதுதான் தண்ணீர் வரும்..அதுவும் சில நேரங்களில் அதிகமாக..குறைவாக..இப்படித்தான்.......முற்றிலும் மழை நின்றபிறகுதான் படிப்படியாக குறையும்..

                                                                            ஆறு 

     ஆற்றில் நீர் வந்தாலும் வராவிட்டாலும்  மிக பிடித்தமான இடம் அதுதான்..நிறைய பேசி இருக்கிறோம்..விளையாடியிருக்கிறோம்

நிஜம்கும் நிழல்கள்
  கதையில்

    ஊரின் தொடக்கம் முதல் கடைசிவரை ஒரே சாலை  அல்லது மண் பாதை. ஊரின் நுழைவு ஒரு பெரிய பெருமாள் கோயிலோடு ஆரம்பித்து அதே நேர்சாலையில் கொஞ்சதூரம் தள்ளி ஒரு சிவன் கோயிலோடு தொடரும் அந்த சாலையின் இருபுறங்களிலும்  வீடுகள் என அழகாக அமைத்திருக்கும் கிராமத்தை இன்னும் அழகாக்கும் விதத்தில் அதை சுற்றி வளைந்து ஓடியது ஒரு ஆறு.............
                                              ஆற்றங்கரையில் சிவன் கோயில்


                                                           கிணற்று உறை
                                              
 .........வழக்கமாக சந்திக்கும் இடமான ஆற்று வெள்ளத்தில் அடித்து வந்து அங்கு கொஞ்சம் ஒருபக்கமாக புரண்டு கிடந்த ஒரு கிணற்று உறையின மீது இருவரும் எதிர் எதிரே உட்க்கார்ந்து இருந்தார்கள். அந்த உரையின் உட்பக்கம் மண் நிரம்பி இருந்தது. இடுப்பு உயரம் இருக்கும். அவர்களுக்கு இதுதான் சந்தித்து பேசுவதற்க்கான இடம். அதுக்குள் உட்கார்ந்து கொண்டால் தூரத்தில் இருந்து பார்க்க ஒன்றும் தெரியாது. காதலின் தொடக்கத்தில் அதிக பேச்சுக்கள் இப்படித்தான் போனது


      இதோடு இன்னும் பல கதைகளில் சில இடங்களில் இந்த மாதிரியானவற்றை  வர்ணித்து கதையோடு சேர்த்து இருப்பேன். இவை இல்லாமல் நான் பார்த்து ஏன் இப்படி? என்று யோசித்ததையும் எழுத மறக்கவில்லை.

     இதில் என்ன இருக்கிறது பெரும்பாலும் எல்லோரும் இந்த மாதிரிதான் எழுதுவார்கள் என்றால் பதில் இல்லை. நான் எப்படி எழுதுகிறேன் என்பதைதான் சொல்லி இருக்கிறேன்.  அறிவியல் புனைவுகளுக்காக வெறுமனே கற்பனை செய்து எழுதியதும் உண்டு.

      எழுதுவதில் இன்பமும் ஆர்வமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சில விசயங்களை பார்க்கும்போது ஏன் எழுதுகிறோம் என்றும் யோசிப்பதோடு அதே யோசனை எழுதும் ஆர்வத்தையும் குறைத்து வெறுமனே படிக்கும் ஆர்வமே மிஞ்சுகிறது. எது எப்படியோ இன்னும் நிறைய எழுத வேண்டும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.  


அருள்

     பளிங்குத்தரையில் தண்ணீர் இருந்திருக்க வேண்டும்  அந்த பெண் தள்ளியதில் நின்றிருந்த சிறுமி வழுக்கி அருகில் இருந்த சுவற்றில் முன்தலையை மோதி அப்படியே பின்னோக்கி விழுந்தாள். கிழே கிடந்தவளை பார்த்து எதோ அந்த வீட்டுப்பெண் கோபமாக திட்டிவிட்டு உள்ளே செல்லும்போது அடிபட்ட தலையில் தடவி ரத்தம் வருகிறதா என பார்த்துகொண்டாள். வரவில்லைபோலும் மீண்டும் மீண்டும் தடவி அது வீங்குகிறதா என்பதை ஒரு கையால் பார்த்துகொண்டே மற்றொரு கையால் அந்த அழுக்கு தண்ணீரில் தவறி போட்ட வெள்ளை சட்டையை மீண்டும் துவைக்க வாளிக்குள் எடுத்து போட்டாள்.


     அதற்க்காகத்தான் அந்த பெண் கோபத்தில் தள்ளிவிட்டதும் திட்டியதும் என்பதை எதிர்வரிசையில் இரண்டாவது வீட்டின் மாடியில் இருந்து பார்த்த எனக்கு  புரிந்தது. தரையை கழுவி, துடைத்தபின் கிழே விழுந்த சட்டையை அலசி போட்டுவிட்டு வெளியேறி தெருவில் நடந்த அந்த சிறுமி இன்னும் தலையை தடவிகொண்டேதான் இருந்தாள் . வீங்கியிருக்க வேண்டும். வயது பதினான்கு இருக்கும், காலையில் மட்டும் அந்த வீட்டுக்கு வந்து வேலை செய்வாள். பள்ளி சென்று கொண்டிருக்க வேண்டும். சில நாள்களில் அவள் பள்ளி சீருடை ஸ்வெட்டர் அணிந்து வருவதை பார்த்து இருக்கிறேன். இரண்டு புறமும் வரிசையாக வீடுகளை கொண்ட அந்த நீளமான தெருவின் முடிவில் அவளது வீடு இருந்தது. சொந்தமான இடம் இல்லை. யாரோ வீடுகட்டாமல் விட்ட இடத்தில் இவர்கள் ஒரு தற்காலிக வீட்டை அமைத்து இருந்தார்கள்.

      அவள் தெருவை கடந்துபோகும் போது சயாங்காலம் நடக்கவிருக்கும் ஏதோ ஒரு விழாவுக்கு பந்தல் போடுவதை சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு சென்றாள். இப்போது என் கவனம் அந்த சிறுமியில் இருந்து விலகி அந்த பந்தல் மீதும் அதை எப்படி போடுகிறார்கள் என்பதின் மீதும் சென்றது. விடுமுறை நாள் என்பதால் டெல்லி குளிருக்கு வெயிலில் மொட்டைமாடியில் உட்கார்ந்து இருந்த எனக்கு இந்த மாதிரி சில காட்சிகள் நேரத்தை கடத்திச்சென்று கொண்டிருந்தன.

       நேரம் கடந்து போயிருந்தது வேலையில் மூழ்கி இருந்த எனக்கு நான்கு மணியளவில் காலையில் தயாரான பந்தல் தோரணங்கள் எதுக்கென்ன்று அங்கிருந்து ஒலிபெருக்கியில் வந்த செய்தி உணர்த்தியது. எல்லாம் பஜனைகூட்டத்துக்கு. ஒரு அம்மன் சிலை இருக்க ஒரு சாமியார் அல்லது குழு பாடகர்கள் வந்து இரவு ஒரு மணிவரை பாட்டிசைத்து துதிப்பார்கள் இறைவனின் அருளுக்காக. இது அதிக குளிர் நேரம் என்பதால் சீக்கிரம் தொடங்கியிருப்பார்கள். யராவது ஒரு வீட்டில் உள்ளவர் இதை முன்னிறுத்தி நடத்துவார்கள்.


      அந்த கூடாரத்தை சுற்றி கூட்டம் கூடிக்கொண்டிருக்க அதன் ஒருபக்கத்தில் எல்லோர்க்கும் சாப்பாடு தயார் செய்வதுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. அனேகமாக இரவு பத்து மணிவரை நீடிக்கலாம். எனது அறையில் இருந்து அங்கு நடப்பதை பார்க்க முடிந்தது. வந்தவர்கள் தனக்கு பிடித்த இடங்களில் அமர அந்த பாடகர் அல்லது சாமியார் அருகில் இருந்த அம்மன் சிலையை தொட்டு கும்பிட்டுவிட்டு பாட ஆரம்பித்தார். இடையிடையே சிறு கதைகள் சொல்ல கூட்டம் பக்தி மழையில் நனைந்து இருந்தது அவர்கள் எழுப்பிய கரகோஷம் மற்றும் அந்த படகரோடு சேர்ந்து பாடிய விதத்தில் இருந்து தெரிந்தது.

         சிலமணிநேரங்கள் கடந்து இருக்க இன்னும் அதே உற்சாகத்தோடு பாடிக்கொண்டு இருந்தார்கள். எட்டிப்பார்த்தேன் இப்போது கூடுதலாக சில விசயங்கள் எனது பார்வைக்கு கிடைத்தன. சிலர் பக்தி பரவசத்தில் அமர்ந்து இருந்தபடியே கைகளை கூப்பி உடலை அசைத்து ஆடிக்கொண்டு இருந்தனர். முக்கியமாக பெண்கள். அந்த கூடாரத்தின் வெளியில் சற்று தள்ளி அதாவது சமையல் ஆகி கொண்டிருக்கும்  இடத்துக்கு பக்கத்தில் ஒரு கூட்டம் இருந்தது. அவர்களின் கையில் இருந்த பொருள்களை பார்த்த போது அவர்கள் கண்டிப்பாக கடவுளின் அருளை பெற வந்தவர்கள் இல்லை எனபது தெளிவாகியது.



             உணவு படைப்பதற்காக தயார் செய்து கொண்டு இருந்தார்கள். அதை பார்த்து கொண்டு இருந்த  பின் வந்த கூட்டத்தில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். அதில் நான் காலையில் பார்த்த சிறுமியும் இருந்தாள்.ஆனால் அவள் நின்றிருந்த இடம்வேறு. பஜனை நடக்கும் பந்தலின் ஒரு ஓரத்தில் நின்று எல்லோரின் பக்தியை அளந்து கொண்டு இருந்தாள். முக்கியமாக தன்னை காலையில் தள்ளிவிட்ட எஜமானியம்மாவின் பக்தி அவரை அறியாமல் உடலை ஆடசெய்து கொண்டு இருந்தது. அப்போது அந்த சிறுமி எதுக்கு சிரித்தாள் என்று என்னால் குறிப்பாக ஒரு காரணம் கொண்டு யோசிக்க முடியவில்லை. கொஞ்சம் நேரம் அங்கு நின்று இருந்தவள் பின் தன் கூட்டத்தோடு போய்ச்சேர்ந்தாள்.

             பஜனை முடிந்து இருந்தது. பிரசாதமாக அந்த பாடகர் அல்லது சாமியார் ஒரு சிகப்பு கயிறையும் கொஞ்சம் லட்டும் கொடுக்க எல்லோரும் வரிசையாக வந்து வாங்கி சென்றார்கள். சிலர் மறக்காமல் கண்ணில் ஒத்திகொள்ள தவறவில்லை. சிலர் அந்த சாமியாரையே கட்டிவிட சொன்னார்கள்.ரசிகர்களாக அல்லது பக்தர்களாக மாறியிருக்ககூடும். அதே நேரத்தில் சமையல் செய்தவர்கள் விரைவாக  வரிசையில் சில பெஞ்சுகளை போட்டு உணவுகளை பரிமாறிக்கொள்ள ஏதுவாக வைத்தார்கள்.

            எல்லோரும் தனக்கு பிடித்த உணவுகளை பரிமாறி தின்று முடித்த பிறகு காலி தட்டுக்களை போடும் இடத்தில் கையில் பாத்திரங்களோடு இருந்த அந்த கூட்டத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு பார்க்காத மாதிரி கை கழுவிவிட்டு வந்தார்கள். கடவுள் இவர்களின் பக்திக்கு இல்லாவிட்டாலும் அங்கு சமைக்கப்பட்டிருந்த விதமான சமையளுக்காகவது கண்டிப்பாக அவர்களுக்கு அருள்புரிய வேண்டும்ம் அவ்வளவு சமையல் வகைகள். பக்தி செய்யும் இடத்தில் இவ்வளவு விதமான ருசிகள் எதுக்காக என்று யோசித்தும் என்னால் விடை காணமுடியவில்லை.அங்கு காத்து இருந்தவர்களின் நேரம் இப்போது நெருங்கி இருந்தது. ஆம் சாப்பிடுவோரின் கூட்டம் குறைந்து கொண்டே இருக்க அவர்களுக்கும் ஒருவித ஆர்வம.

         இந்த ஆர்வம கலந்த ஆசை சில் நேரங்களில் நிறைவேறாமல்கூட போய் விடும். சமையல் மீதி இருந்தாலும் இவர்களுக்கு கிடைக்காமல் மீதி இருப்பதை சமைத்தவர்கள் அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.அல்லது உணவு பற்றாக்குறை ஆகிவிடும். அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற ஏக்கம் அல்லது வேண்டுதல் ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்தது. எப்போதாவது கிடைக்கும் நல்ல விருந்து சாப்பாடு இது.


       பஜனைக்கு வராமல் வெறுமனே சாப்பிட மட்டும்வந்தவர்களோடு சேர்த்து பார்க்கும்போது இதுதான் கடைசியாக இருக்கவேண்டும் அந்த கூட்டம் இப்போது கொஞ்சம் முன்னாடி வந்து இருப்பதில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் நடவடிக்கைககளை பார்க்கும்போது முதலில் சாப்பிட்டுவிட்டு பின் மீதுவதை எடுத்துபோகலாம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் போல.

          இப்போது கூட்டம் எல்லாம் கலைந்து போய் கொண்டு இருந்தது.  நான் இருக்கும் வீட்டை கடந்து செல்லும் சிலர் நான் மேலே இருந்து பார்த்துக்கொண்டு இருப்பதை கவனிக்க தவறவில்லை. இப்போது சமையல் செய்தவர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் சிலர் சமையல்காரர்களோடு ஏதோ பேசுவது தெரிந்தது. மணி பத்தரைக்கு மேல் ஆகியிருந்தது. அவர்கள் தங்கள் கொண்டு வந்திருந்த வெவ்வேறான பாத்திரங்களை பிரித்துவைத்து கொண்டு இருந்தனர்..

           இருவர் வந்திருந்த சாமியாருக்கு பணம் கொடுத்து அவரை வழியனுப்பும் வேலையில் இருக்க அந்த சாமியார் விடைபெறும்போது பெரியதாக சிரித்தார். அவர் சென்றுவிட காசு கொடுத்து கடவுளின் அருளை வளர்த்த அல்லது பெற்ற திருப்தியில் வழியனுப்பியவர்கள் திரும்புகையில் அந்த கூட்டம் இப்போது பஜனை நடந்த கூடாரத்தில் அமர்ந்திருப்பதை பார்த்தார்கள். ஒருவேளை அவர்கள் எதாவது சொன்னால் சமைப்பவர்கள் சாப்பாடு கொடுக்கலாம் என்பதால் அவர்கள் முகம் எதிர் வருபவர்களை நோக்கி இருக்க கண்டுகொள்ளாமலே சென்றனர். இப்போது இவர்களுக்கு அருள்புரிய இருப்பது இரண்டு பேர் மட்டுமே. ஒன்று அங்கு பஜனை செய்ப்பட்ட கடவுள், இன்னொன்று சமையல்காரர்கள். அவர்களின் குழந்தைகள் மடியில் கிடந்து தூங்கி போக அதிக குளிராமல் இருக்க தாய் துணியால்  இழுத்தி மூடியிருந்த நிலையில் காத்து இருந்தார்கள்.


            கடைசியில் யார் அருள் அவர்களுக்கு கிடைத்தது என்பதை பார்க்கவில்லை. ஒருவேளை கிடைக்காமலும் போய் இருக்கலாம். தூங்கிப்போனேன்.மறுநாள் காலையில் அந்த பந்தல் இல்லை. உணவு தட்டுகள் தெருவில் சிதறி கிடக்க அதில் மிதிக்காமல் கவனமாக நடந்து எப்போதும் போல அந்த சிறுமி வேலைக்கு வந்தாள். உற்றுப்பார்த்தேன் தலையில் அந்த சிறிய வீக்கம் இன்னும் இருந்தது.



நிஜமாகும் நிழல்கள் -2

       முந்தைய பாகம் படிக்க.......
                                                                   நிஜமாகும் நிழல்கள் -1



    அதே நேரம் அங்கு இருந்த சுகாதார மையத்துக்கு   இரண்டு அல்லது மூன்று பேர்  வயிற்றுபோக்கு வாந்தி போன்ற பெரும் பிரச்சினைகளால் வந்துகொண்டு இருந்தார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் வந்தவர்களில் அனைவரும் ஒரு வாரம் முன் அந்த ஆசிரமம் சென்று திரும்பியவர்கள்.  

    சென்றுவந்தவர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சினை இல்லாததால் அந்த குறிப்பிட்ட நோய் பரவுவதைவிட ஒரு வதந்தி பரவி இருந்தது. அதாவது இவர்கள மீது எதோ தவறு இருக்கிறது அதான் அந்த சாமியே தண்டனை கொடுத்து இருக்கிறது என்பதுதான்.பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் சுகாதார மையத்தில் காட்டிவிட்டு முனேற்றம் இல்லாமல் அருகில் இருந்த நகரத்தில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    ஆச்சர்யம் என்னவென்றால் சிகிச்சை அளித்த மருத்துவருக்கே என்னவித நோய் என்ற முழுவிவரம் இப்போதைக்கு தெரிந்து இருக்கவில்லை. சாதாரண வயிற்று போக்குக்கு கொடுக்கும் சிகிச்சையை கொடுத்து அனுப்பி இருந்தார்கள். அவர்களுக்கும் கொஞ்சம் சுகமானதால் அதைப்பற்றி பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் அந்த நோய் தொடர்ந்து  ஊரில் மக்களுக்கு பரவிக்கொண்டிருந்தது. அந்த ஆசிரமத்துக்கு போகதவர்களுக்கும் வந்தபோதுதான் அந்த வதந்தி கொஞ்சம் நின்று போய் இருந்தது. மக்கள் உணர தொடங்கி இருந்தார்கள் எதோ ஒரு தோற்று நோய் பரவிக்கொண்டு இருக்கிறது என்பதை.



   ழக்கமாக சந்திக்கும் இடமான ஆற்று வெள்ளத்தில் அடித்து வந்து அங்கு கொஞ்சம் ஒருபக்கமாக புரண்டு கிடந்த ஒரு கிணற்று உறையின மீது இருவரும் எதிர் எதிரே உட்க்கார்ந்து இருந்தார்கள். அந்த உரையின் உட்பக்கம் மண் நிரம்பி இருந்தது. இடுப்பு உயரம் இருக்கும். அவர்களுக்கு இதுதான் சந்தித்து பேசுவதற்க்கான இடம். அதுக்குள் உட்கார்ந்து கொண்டால் தூரத்தில் இருந்து பார்க்க ஒன்றும் தெரியாது. காதலின் தொடக்கத்தில் அதிக பேச்சுக்கள் இப்படித்தான் போனது. ஆனால் இப்போது அவர்களுக்கு அந்த பயம் தேவையற்றதாக இருந்தது.வீசி அடிக்கும் காற்றில் முகத்தில் வந்து விழும் முடியை கண்ணை சுருக்கியபடி பின்புறம் எடுத்து விட்டுக்கொண்டே..


    "நம்ம ஊரில் புதுசு புதுசா என்னவெல்லாம் நடக்குது பார்த்தியா?" கேட்டாள் புனி

    "ம்ம கேள்விபட்டேன்..அந்த சாமியார், ஒரு நோய் வேற பரவுதுன்னு" என்றான் கணேஷ்


"சரி சொல்லு கணேஷ் நீ என்ன நினைக்கிறே அந்த சாமியார் பத்தி?"

"என்ன சொல்ல சொல்ற, நம்புறியா நம்பலையான்னு கேட்கிறியா?"


    "அதான் நீ நம்பமாட்டேன்னு தெரியுமே அங்கு நடப்பதை பத்தி என்ன சொல்ற?" என்றாள்


"இதுவரை இந்த மாதிரி நிறையா சாமியார் செய்த புரட்டு எல்லாம் வெளியில் வந்து இருக்கு இதுவும் ஒருநாள் வரும் அப்பா பார் "என்றான்

     "பார் கணேஷ் எதையும் ஆதாரத்தோடு எதிர்நோக்கு அந்த சாமியார் என்னதான் கடவுள் சக்தியை உதவியா வச்சி செஞ்சாலும் அது எப்படின்னு யோசிச்சியா அதாவது அறிவியலில் அது சாத்தியாமான்னு?"


     "என்ன பேசுறே நீ?  உனக்கே தெரியாதா என்ன இதெல்லாம் சாத்தியமில்லைன்னு ஒருவேளை அவர் ஹிப்னாடிசம் செய்றாருன்னா ஓரளவுக்கு நம்புற மாதிரி இருக்கும். ஆனால் இங்க அதுவும் இல்லை பின்னே எந்த ஆதாரத்தை வச்சி யோசிக்க சொல்றே?"



"சரி அப்ப அந்த நோய் பரவுதே அது எப்படி?"

"அதை நீதான் சொல்லணும் நீதானே மருத்துவம் படிச்சி இருக்கே?"


    "எனக்கென்னவோ அந்த சாமியாருக்கும் இந்த நோய்க்கும் எதாவது தொடர்பு இருக்கும்னு தோணுது" என்றாள்


"அப்ப நீ அதை எல்லாம் உண்மைன்னு நம்புறே கொடுமை"


      "கொடுமையுமில்லை ஒண்ணுமில்லை உனக்கு பிடிச்ச ஐன்ஸ்டீன் என்ன சொல்லி இருக்காரு ஒருவேளை  இந்த பிரபஞ்சத்தை படைச்சது கடவுளா இருந்தாலும் அதை எப்படின்னு விளக்குவது கண்டிப்பா அறிவியல விதிகாளாகத்தான் இருக்கணும்னு அப்படி பார்த்தா இது கடவுளின் வேலையா இல்லியான்னு  நமக்கு எப்படி தெரியவரும் சொல்லு ?"


     "நீ ஊருக்கு என்னை எதுக்கு கூப்பிட்ட காதல் செய்யவா? இல்ல இந்த மாதிரி சயின்டிஸ்ட் வேலை பார்க்கவா?"


    "அட நீ வேற எனக்கும் நம்பிக்கை இல்லைதான் முதல்ல ஆனால் நம்ம முன்னோர்கள் செஞ்ச சில விசயங்களை இதோடு பொருத்தி பார்க்கும்போது எனக்கும் கொஞ்சம் உண்மை மாதிரி இருந்துச்சி அதான் உன்கிட்ட சொல்லலாம்னு சொன்னேன் உனக்கு பிடிக்கலேன்னா விடு வேற பேசுவோம்" என்றாள்


    "ச்சே அபப்டி இல்லை அந்த விசயத்துல பேச என்ன இருக்கு அதான் அப்படி சொன்னேன்  ஆனா இப்ப நீ எதோ புதுசா சொல்றே என்ன அது நம்ம முன்னோர் விசயம்?"


    "ம்ம் அப்படி வா வழிக்கு சரி  இந்த மனவசியம், இயற்கையை தன்வசம் வைத்து சில வேலைகளை சித்தர்கள் செய்தார்கள்னு உனக்கு தெரியும்தானே?" என்றாள்


     "ஆமா அதுக்கென்ன இப்ப அதுவும் இதுவும் ஒண்ணுதான்னு சொல்லி சாமியாரும் அப்படியொரு சித்தர்னு சொல்ல வாரீயா?"


"இல்ல அவங்க எப்படி பண்ணினாங்கணு தெரியுமான்னு கேட்டேன்?"


"தெரியல அதெல்லாம் உணமையான்னு கூட எனக்கு தெரியாது" என்றான்

     "உண்மையாத்தான் இருக்கணும் ஏன்னா நம்ம அறிவியல் சொல்றபடி பார்த்தால் நம்ம மூளையில் இருந்து மின்காந்தஅலைகள்னு சொல்ற BEETA,THETA,DELTA, ALPHA  waves எல்லாமே 7~30 HZ அளவுல வெவேறு நேரத்துல வெளிப்படுத்தும். இந்த அலைகளை இன்னும் அதிகமாக்கி அவங்களுக்கு  தேவையானதை நிறைவேற்றி இருக்கலாம்ல?"

     "அப்படியே அவங்க அலைகளை அதிகமாக வெளியிட்டாலும் அதை வச்சி என்ன பண்ண முடிந்திருக்கும் சொல்லு?" என்றான்


    "இங்கதான் எனக்கு சந்தேகம் இருக்கு ஆனா இப்படியும் இருக்கலாம்னு தோணுது அந்த அலைகளை வச்சி வளிமண்டலத்துள இருக்கிற அணுக்களை கிளர்ச்சி அடையச்செய்து அந்த அணுக்களின் மூலம் தனது தேவையை நிறைவேற்றி இருக்கலாம்"


   "அப்படின்னா அந்த அணுக்கள் போய் அடுத்தவங்க மனசை மாத்துதுன்னு சொல்ல வர்றியா?"


     "ம்ம ஆமாம் அதாவது மற்றவர்களின் மூளையில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளை வெளியில் இருக்கும் கிளர்ச்சி அடைந்த அணுக்களின் மூலம் கட்டுபடுத்தி தனக்கு தேவையானதை செய்து இருக்கலாம்"

     "இதுக்கு எப்பயுமே ஒரே அலைநீளம்,அதிர்வெண்ணில் அலைகள் தேவைப்பட்டு இருக்காது வெவ்வேறான அளவுகளில் தேவைப்பட்டு இருக்கும் அதை எப்படி அவங்க சரியா வெளியிட்டு இருக்க முடியும்? அதோடு இல்லாம அவங்க அதை செய்யும்போது குறிப்பா அந்த ஒரு நபரை மட்டும் எப்படி அதுபோய் சேர்ந்து மாற்றுது இடையில் உள்ளவங்களும் பாதிக்க படுவாங்கள்ள?" என்றான்


     "நீ சொல்றது புரியுது ஆனால் இதுலே எதாச்சும் நமக்கு தெரியாம இருக்கலாம்ல?"

     " நம்ம புத்திக்கு தெரியாதது எல்லாம் கடவுள் செயல்னு முடிவுக்கு வர்றது இப்ப மட்டும் புதுசா என்ன இதை முன்னாடி இருந்தேதான் செஞ்சிக்கிட்டு வர்றோம் "


      "நீ என்ன சொல்லு கணேஷ் இதுக்கு பின்னாடி கண்டிப்பா ஒரு அறிவியல் காரணம் இருந்துதான் ஆகனும் அதுவும் இல்லாம நம்ம ஊரில் பரவும் நோய்க்கும் அந்த ஆசிரமத்துக்கும் கண்டிப்பா காரணம் இருக்கும்னு தோணுது?"

     "இருந்தாமட்டும் நீ என்ன செய்யபோறே? போய் கண்டுபிடிச்சு சொல்ல போறியா என்ன? இன்னும் கொஞ்ச நாள்ல படிக்க போயிருவே? அதுக்கு எதுக்கு இப்ப நம்ம சந்திச்சு காதலிக்கிற நேரத்தையும் அதைபத்தி பேசி வீணடிக்கணும் சொல்லு?"


     "கண்டுபிடிக்கேறேனோ இல்லியோ நாளைக்கு நம்ம சுகாதார மையத்துக்கு போய் என்னன்னு பார்த்துட்டு வர்ற போறேன் குறைஞ்சது பரவுற நோய் பத்தியாச்சும் தெரிஞ்சா நிம்மதியா இருப்பேன்"


   "எப்படியோ இன்னைக்கு கிடைச்ச நேரம் இதுலே போயிருச்சி..நான் எதெல்லாம் கிடைக்கும்னுவந்தேன் கடைசில ஒன்னுமே கிடைக்கலை"


"அலையாதே நாளைக்கு நீயும் வர்றியா அங்க?"

"நான் வரலை இப்பயே தலை சுத்துச்சு நீதான் போய் ஆராச்சி செய்" என்றான்


     கொஞ்சம் மங்கும் இருட்டு சூழ்ந்து இருக்க இருவரும் எழுந்து மண்ணை தட்டியபடியே கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அந்த அமைதியில் புனியின் மனதில் நாளைக்கு சுகதாரமையத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது.




    அந்த ஆசிரமத்தில்  சீரமைப்பு பணிகள் என்ற பெயரில் சில வடிவமைப்பு வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. முக்கியமாக அந்த சாமியாரின் அறையில் காற்று புகும் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு பிராதன வழியிலும் புதியத சில கருவிகள் பொருத்தப்பட்டன.இப்போது அந்த அறைக்கு ஒரே வழி. அதுவும் சில சாதனங்களின் முழுச்சோதனைக்கு பின்னே யாரும் உள்ளே வெளியே போகும்படி இருந்தது. இது அங்கு வருவோருக்கு எந்தவிதத்திலும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தனர்.ஒருபுறம் வேலைகள் நடந்து கொண்டு இருக்க இன்னொரு தனி அறையில் சாமியார் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார்.....


"இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாது"

"..........................."


    "நீங்கதானே சொன்னிங்க இதனால மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராதுன்னு இப்பயே நிறையே பேர் நோய்வந்து சந்தேகம் நம்ம பக்கம் திரும்பிரிச்சு"


".............."


   "நீங்க சொல்ற மாதிரி அந்த நோயெல்லாம் கடவுளின் தண்டனைன்னு போய் சொல்லி  மாற்றினாலும் அதுவும் ரெம்ப நாளைக்கு தாங்காது"


"..............."



    "இதுதான் கடைசி முயற்சி இந்த சுத்தபடுத்தும் கருவிகள் பயனளித்தால் நான் இதற்கு மேல் இந்த வேசத்தை தொடருவேன் இல்லை என்றால் என்னால் இங்கு தொடர்வது கஷ்டம அப்புறம் உங்களது எல்லா திட்டங்களும்,முயற்ச்சிகளும் வீண்தான்"


"......"


   "சரி நம்பிக்கை இருக்கு..நான் இப்ப வைக்கிறேன் யாரோ வர்ற மாதிரி இருக்கு" என்று சொன்னவர் அலைபேசியை  மறைத்தார். 




                                                 இன்னும் நிழல்கள் நிஜமாகும் ......