அந்த நீளமான சாலை வளையும் இடத்தில புத்தககடை இருந்ததால் அந்த உருவம் எப்படி சாலையில் இறங்கியது என்பதை கடையில் இருந்த அவனால் தெளிவாக பார்க்க முடிந்தது. எல்லாமே சில வினாடிகளில் முடிந்து இருக்க அது அவனது கடையை நோக்கி நகர்ந்தது. இரவு பத்து மணிக்கு கடையை மூடும் வேலையில் இருந்தவன் அதை நிறுத்திவிட்டு அந்த உருவத்தின் மீது கவனம் செலுத்தினான்.
அது வானத்தில் இருந்து இறங்கிய விதத்திலியே அவனுக்கு புரிந்து பயந்து இருக்க இப்போது கடையை நெருங்க என்னசெய்வதென்று புரியாதநிலை. அதன் உருவம் தெளிவாக அவனுக்கு தெரிந்தது. உடைஏதும் இல்லை மேலே ஒரு மெல்லிய இலைபோல முழவதும் பரவி இருக்க உடல் அங்கங்கள் அதில் எம்பி ஒரு உருவத்தை காட்டியது. கிட்டதட்ட மனித உருவத்தை ஒத்துபோகும் ஒன்று. ஆனால் அதன் முக அமைப்பு இறங்கிய விதம கண்டிப்பாக அது மனித இனம் இல்லை என்பதை தெளிவாக்கியது.
அவன் எதிர்பார்க்காதது அங்கு நிகழ தொடங்கியிருந்தது. அந்த உருவம் கடைக்கு எதிரில் வந்து நின்று புத்தக கடைக்குள் தனது பார்வையை விரித்து எதையோ தேட ஆரம்பித்து இருக்க அதன் பார்வை படும் இடத்தில எல்லாம் அவனும் பார்த்தான்
சிலவினாடிகள் நகர்ந்த நிலையில் அதன் பார்வை அவனும் மீது விழ பயந்து பின்வாங்கினான். மெல்லிய கீச்சு குரலில் பேசியது. வாய் பெரியதாக பேசுவதற்கு சம்பந்தமாக அசையாமல் வெறும் சப்தம் மட்டும் வெளியில் வந்தது.
“எனக்கு ஒரு புத்தகம் வேண்டும்” என்றது
“அப்பாடா அதுக்கு எதுக்கு இந்த வேசத்தில் வரணும் நான் கொஞ்ச நேரத்தில் பயந்துட்டேன் ஏதோ வேற்றுகிரக வாசிதான்னு நினைச்சி” என்றான்
“வேற்றுகிரகவாசிதான் நான் கேட்கிற புத்தகம் கிடைத்தால் கிளம்புவேன்”
மீண்டும் பயத்தில் பின்வாங்க “கணேஷ் சிறுகதைகள் அடங்கிய நான் இல்லாத நான் புத்தகம் கொடு கிளம்பனும்” என்றது
அவன் மெல்ல பின்னாடி திரும்பி பார்த்துகொண்டே அந்த
புத்தகத்தை எடுத்து தூரத்தில் இருந்தபடியே தூக்கி எறிந்தான்
“இந்த புத்தகத்தை வேறு எங்காவது படிக்க வழி இருக்கா?”
“இருக்கு இந்த இணைப்பில் படிக்கலாம் என்று சொல்லியபடி ஒரு காகிதத்தில்
PDF - http://www.4shared.com/document/1i85TiT8/Naan_Allaatha_Naan.html
SWF - http://www.4shared.com/document/iksxEV0O/Naan_Allaatha_Naan.html
EXE - http://www.4shared.com/file/r_P7pQnv/Naan_Allaatha_Naan.html
SWF - http://www.4shared.com/
EXE - http://www.4shared.com/file/r_
எழுதி கொடுக்க அது எதுவும் சொல்லாமல் திரும்பி சாலையில் நடக்க ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் செல்லும் போது புத்தகத்தில் அந்த காகிதத்தை வைத்து தனது உடைக்குள் பொதித்து வைத்த சில வினாடிகளில் வேகமாக மேலே எலும்ப அவன் எடுத்த இரண்டு புத்தகங்களில் நான் இல்லாத நான் புத்தகம் ஒன்று அவன் கையில் இருக்க அதை கொஞ்சம் வித்தியாசமாக பார்த்தான்
"நான் இல்லாத நான்" எனது முதல் சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் இருபது கதைகளோடு ஒரு குறுநாவலும் இருக்கிறது.எல்லாமே கொஞ்சம் அறிவியல் கலந்த கற்பனைகள். சிலவை அன்றாடம் நிகழும் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எழுதியது.
அறிவியல் வளர்ச்சியில் இப்படியும் நிகழ்ந்தால் என்பதை ஒரு சில கற்பனை கதாபாத்திரங்களோடு சொல்லியிருக்கிறேன் ரசிக்குபடி இருக்கும் என நினைக்கிறேன்.
வலைப்பூவில் தேங்கி கிடந்த இந்த கதைகளை தொகுத்து ஒரு மின்புத்தகமாக வெளியிட முழு உதவிகளை செய்த எஸ்.கே அவர்களுக்கு எனது நன்றிகள்.
தொடர்ந்து என் கதைகளை படித்து கருத்துக்களை சொல்லும் வலைப்பூ நண்பர்களுக்கும் நன்றிகள்.தொடர்ந்து எழுதுகிறேன் அடுத்த பாகம் மற்ற இருபது கதைகளோடு வெளியிடும் எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
23 comments:
அடீ ஆத்தாடி!!! பயங்கரமாயில்ல இருக்கு?!?
வாழ்த்துக்கள் நண்பரே!
ஹா ஹா அப்படியா படிச்சு பாருங்க எப்படின்னு சொல்லுங்க
நன்றிங்க ))
வாழ்த்துக்கள் கணேஷ்.. அறிமுகமே அசத்தலா இருக்கு.. :)
வாழ்த்துக்கள்... டவுன்லோட் பண்ணிட்டேன்... நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்...
வாழ்த்துகள் கணேஷ்!
Philosophy Prabhakaran //
நன்றிங்க படிச்சிட்டு சொல்லுங்க))
HVL //
வாழ்த்துக்கு நன்றிங்க ))
புத்தகத்தை பற்றிய அறிமுகம் நன்றாக இருந்தது ...
உங்களின் கதைகள் மின் நூலின் மூலமாக அடுத்த நிலைக்கு செல்வதை எண்ணி மகிழ்கிறேன்...
தலைப்பு அழகு.
மின் நூல் வெளியிட உதவிய எஸ்.கே அவர்களை பாராட்டுகிறேன்.
இன்னும் பல சிகரங்களை நோக்கி உங்களின் எழுத்து பயணிக்கவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.
என் பெயர் கொண்டவருக்கு... புத்தகம் வெளியானதற்கும், இன்னும் பல சிகரங்களை நீங்கள் தொடவும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். முழுமையாகப் படித்துவிட்டு மீண்டும் வந்து கருத்துச் சொல்ககிறேன். நன்றி.
வாழ்த்துக்கள் கணேஷ்.......
முதல் மின்புத்தக முயற்சிக்கு வாழ்த்துக்கள் கணேஷ்,
தொடர்ந்து கலக்குங்க.....
மின்புத்தகம் வெளியிட உதவிய எஸ்.கேவுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!
வாழ்த்துகள்ங்க. நான் முதல் சில பத்திகளைப் படிச்சுட்டு அது என்னமோ புதுசான ஒரு சிறுகதைனு நினைச்சிட்டேன் :))
கதைகளைப் படிச்சுப் பார்க்கிறேன்:))
நன்றிகளும் வாழ்த்துக்களும்...!
Kousalya //
உங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றிங்க ))
கணேஷ் //
ஹா ஹா ரெம்ப நன்றிங்க வாழ்த்துக்கு ))
பன்னிக்குட்டி ராம்சாமி //
வாழ்த்துக்கு நன்றிங்க
மாணவன் //
கண்டிப்பா கலக்குவோம் ))
கோமாளி செல்வா //
அட அது உண்மைக்கே சிறுகதைதாங்க )
MANO நாஞ்சில் மனோ //
ரெம்ப நன்றிங்க
இனிய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
Fascinating Intro. Hope this EBook will be a pleasant buddy for one of my holidays. :)
// ரசிக்குபடி இருக்கும் என நினைக்கிறேன். //
காமெடி பண்ணுகிறீர்களா, இவ்வளவு அருமையாக கூறிவிட்டு ஒண்ணுமே தெரியாத பிள்ளை போல பதுங்குகிறீர்கள்......
தாங்கள் கூறிய விதம் மிக அருமை..
கொஞ்சம் பொறுங்க மின்னூலையும் படித்துவிட்டு வருகிறேன்....
Post a Comment