LIQUID BREATHING....

 ‌‍‍‌‌‍‍‍   அழகாய் இருப்பாள்.அமைதியானவள். இருவரும் சேர்ந்து பேசும் போது நான்தான் அதிகம் பேசுவேன்...நான் என்ன புராணம் பாடினாலும் சரி அலட்டாமல் கேட்பாள். அவளுக்கு தேவையான விஷயம் என்றால் அதில் சந்தேகம் இருந்தால் அதை பற்றி மட்டும் கேட்பாள்..அப்படி இல்லை என்றால் நான் என்ன சொன்னாலும் ம் கொட்டி கொண்டு இருப்பாள். இது எல்லாத்தையும் விட ஒரே ஊர் சொந்தக்கார பெண். இதைவிட நான் அவளை காதலிக்க வேறொரு கரணம் இருக்க தேவையில்லை என் நினைக்கிறேன்.

   வருடத்தில் இரண்டு முறைகள் சந்தித்தபோதும் எங்கள் காதல் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.அவள் வீட்டில் திருமண பேச்சை எடுக்காதவரை.

    வீட்டில் அவளே சொல்லி இருக்கிறாள் எங்கள் காதலை பற்றி ....இதைக்கேட்ட அவர் அப்பா... அவளை அடிக்காத குறையாக...என்னையும் சேர்த்து திட்டி இருக்கின்றார்

    அவனே இங்கு வேலை கிடைக்காமல் டெல்லியில் போய் வேலை பார்க்கிறான்.....அந்த வேலையையாவது ஒழுங்க பார்த்தா பரவாயில்லை ..கண்ட கண்ட புத்தகங்களை படித்து கடவுள் இல்லை என்று தத்துவத்தை வேறு எதிலோ எழுதிக்கொண்டு இருக்கின்றானம்..நீ அவனை கல்யாணம் செய்தால் உன் வாழ்க்கை உருப்பிடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்று வசனம் வேறு... சொல்லி இருக்கின்றார்

    அவள் இதை என்னிடம் சொல்லும்போது அழுகாத குறைதான் ..இதற்க்கு முன் அவள் அப்படி இருந்து நான் பார்த்ததில்லை.

   ஒருவழியாக கொஞ்சம் நம்பிக்கையோடு நான் அவளிடம் இந்த முறை நான் செல்லும் பொது நீயும் என்னுடன் வந்து விடு என்றேன். அவள் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சரி என்று சொல்வது போல் தலை ஆட்டினாள்.

   இது எப்படியோ அவளின் வீட்டுக்கு தெரிந்துவிட...அவர் அப்பா என்னிடம் ஒருமுறை எச்சரித்தார். நான் ஒன்றும் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.அவர் எச்சரித்ததின் விபரீதம் பின்னர்தான் தெரிந்தது.

    அன்று தனியாக நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவளின் உறவினர்கள் மூன்று பேர்கள் என்னை வழிமறித்து நின்றார்கள். என்ன துணிச்சல் உனக்கு என்ற வார்த்தையை மட்டும்தான் சொன்னார்கள் அதற்க்கு பிறகு  என்னை அடிக்க ஆரம்பித்தார்கள்.

    சிறு பிள்ளை ஒரு கத்தியை காட்டி மிரட்டினலே  அதிக பயப்படுவேன்.....இப்போது அவர்கள் கோபம தீர அடித்து கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் மயக்கம் வருவது போல இருந்தது.இது நடந்த இடம் ஒரு குழிக்கு அருகில் வைத்து....அந்த சமயம் பேய்ந்திருந்த மழையால் அது நிரம்பி இருந்தது.

    அவர்களின் கோபம தீர்ந்து இருக்க வேண்டும் நிறுத்திவிட்டார்கள். நான் அரை மயக்கத்தில் இருந்தேன். அவர்கள் தள்ளி விட்டதில் அங்கு இருந்த தண்ணீருக்கு அருகில் சென்று விழுந்து இருக்கிறேன். அதற்க்கு பின் நான் உருண்டதில் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டேன்  

   நான் உணர்ந்து இருந்தேன் தண்ணீருக்குள் மூழ்குகிறோம் என்று ஆனால் அவர்கள் விட்டுப்போன நிலையில் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

   தண்ணீர் மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளே சென்றது. சரியாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகி இருக்கும் என நினைக்கிறேன் கொஞ்சம் மயக்கம் தெளிந்ததால் கண் திறந்து ..பின் நான் தண்ணிக்குள் இருப்பதை உணர்ந்து அவசர அவசரமாக வெளியில் எழுந்து வந்தேன்.

    மறுநாள் அவளை பார்க்கும் போது நடந்த்ததை  பற்றி சொன்னேன். அவளுக்கு அவர்கள் அடித்தது மட்டும் தெரிந்து இருநதது.  நான் தண்ணிக்குள் விழுந்தது பற்றி அவளுக்கு தெரிந்து இருக்கவில்லை.

    அவள் என்னிடம் இப்போது என்ன செய்யபோகிறோம் என்றாள் இதை கேட்கும்போது . பயம் மற்றும் கவலையோடு..உண்மையான காதல அவள் கண்களில் தெரிந்தது..அதற்க்கு நான் ஒன்றும் சொல்லாமல் நாளைக்கு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

    மறுநாள் சந்தித்தபோது இங்கு இருந்தால்தானே பிரச்சினை எல்லாம் அதான்... நான் டெல்லி போக  டிக்கெட் எடுத்துவிட்டதாக சொன்னேன்.அதறக்கு அவள் எத்தனை என்றாள் நான் இரண்டு என்றேன்.

    இந்த கதையை படித்து முடித்தவுடன் ஆஹா என்ன ஒரு மோசமான (மொக்கையான) காதல் கதை என்று யோசிக்காமல் அதில் உள்ள வார்த்தைகள் எப்படி சாத்தியம் என்று உங்களுக்குள் சந்தேகம் தோன்றி இருந்தால் அவர்கள் என் கட்சி...

   அதாவது மனிதன் தண்ணீரில் ஒரு மணி நேரத்திற்கு மேல் எப்படி இருக்க முடியும் எனபதுதான் நான் சொல்லவருவது. அறிவியல் பூர்வமாக பார்த்தால்  எந்த மனிதனும் சரி ஏன் எந்த ஒரு ஆனந்தாவும் இருக்க வாய்ப்பில்லை.

   இங்கு நான் சொல்லி இருப்பது ஒரு கற்பனைதான்.ஆனால் உணமையில் LIQUID BREATHING  என்ற ஒரு சமாச்சாரம் இருக்கின்றது. ஆனால் அதில் தண்ணீர் இருக்காது அதற்க்கு பதிலாக வேறொரு திரவம் உபோயிக்கப்படும்.

   PERFLUOROCARBONS (PFCS) இந்த திரவம்தான் LIQUID BREATHING முறைக்கு பயன்படுதபடுகின்றது.(இந்த திரவம்தான் ஐன்ஸ்டீன் தாத்தா பங்குபெற்ற அமெரிக்காவின் MANHATTAN  PROJECT ல் அதிகமாக பயன்படுத்தப்பட்டது என்பது கூடுதல் தகவல்)

   1960 ஆம் ஆண்டு முதன் முதலாக OXYGENATED SALINE SOLUTION ல் எலிகளை மூழ்க வைத்து சோதித்து பார்த்தார்கள்.ஆனால் அந்த சோதனை அவர்கள் நினைத்த அளவு நிறைவேறவில்லை.எலிகள மட்டும்தான் வீரமரணம் அடைந்ததன.

   பின் 1966 ஆம் ஆண்டு CLARK மற்றும் FRANK GOLLAN இருவரும் சேர்ந்து மீண்டும் சோதனை செய்தனர். ஆனால் அவர்கள் இந்த் முறை பயன்படுத்திய திரவம் PERFLUOROCARBONS. இதில் எலிகள கொஞ்ச நேரம் உயிரோடு இருந்தன அதற்க்கு பின் அவைகளும் வீரமரணம் அடைந்தன.

   இதற்க்கு காரணமாக அவர்கள் கண்டுபிடித்தது அந்த திரவமனது சரியாக சுத்த படுத்தபடாமல் இருந்துதான்.

    பின் அதை சுத்த படுத்தி அதற்க்கு தனி பெயர் வைத்தார்கள்.அதற்க்கு பெயர் PERFLUBRON. இப்போது உள்ள LIQUID BREATHING முறைக்கு இந்த திரவம்தான் உபோயிக்கப்டுகின்றது,

   இதன் தன்மைகள் என்று பார்த்தால் நிறமற்றது,மணமற்றது, நீரைவிட இரண்டு மடங்கு அடர்த்தி கொண்டது.

   முக்கியமாக காற்றை விட OXYGEN ஐ அதிகம் எடுத்து செல்லும் தன்மை கொண்டது.அதாவது குறிப்பிட்ட நிறையுள்ள காற்று எடுத்து செல்லும் OXYGEN விட அதே நிறையுள்ள PERFLUOBRON எடுத்து செல்லும் OXYGEN அளவு இருமடங்காகும்.

   இதன் முக்கிய பயன்பாடு என்று சொன்னால் மருத்துவ துறையில்தான். அதுவும் குழந்தைகளுக்குத்தான் அதாவது PRE MATURE BABIES அல்லது PEDIATRIC MEDICINE போன்ற சிகிச்சை முறைகளுக்கு பயன்படுத்தபடுகின்றது..


    இது தவிர மேலும் இதன் பயன்பாடுகள் என்று சொன்னால் DIVING,IMAGE,COSMETICS என இதன் பட்டியல் நீழுகின்றது.

   இதை பயன் படுத்துவதிலும் இரண்டுவிதமான முறைகள் இருக்கின்றன. ஒன்று TLV (TOTAL LIQUID VENTILATION), PLV (PARTIAL LIQUID VENTILATION)

   இதில் PLV முறை அதிகம் பயன்படுத்தபடுகின்றது. அதாவது திரவம் மற்றும் காற்றை சேர்த்து உபோயோகிக்கும் முறை.

   அண்மையில் 1996 ஆம் ஆண்டு PERFLUOROCORBONS திரவத்தில் COLD LIQUID VENTILATION என்ற முறையை MIKE DARWIN மற்றும் STEVEN கண்டு பிடித்தார்கள்.

    இதன் மூலம் உடலை குறிகிய நேரத்தில் குளிரவைப்பத்தின் மூலம் சில இருதய நோய்களின் ஆபத்தில் இருந்து காக்கலாம் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இது உதவியாக இருக்கும் என கண்டுபிடித்து சொன்னார்கள்.

    இதை GLV (GAS LIQUID VENTILATION ) என்று அழைக்கிறார்கள் இதன் மூலம் 0.5 DEGREE குளிரபடுத்த முடியும் என சொல்லுகிறார்கள்.

    என்ன இருந்தாலும் இந்த TLV முறை இன்னும் முழுமையாக் பயன்படுத்தப்படவில்லை...ஒரு பக்கம் பயம் இருந்தாலும் இதற்க்கு உபோயோகப்படும் பொருள்கள்,மற்றும் இதற்குண்டான செலவுகள்,தொழிநுட்பகோளாறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என நிறையவே இருப்பதால் கொஞ்சம் தயக்கம் காட்டுகிறார்கள்.

    இது தவிர இந்த வாயு நமது சுற்றுப்புற சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது என்பதால் இதன் பயன்பாட்டை தடுக்கும் எண்ணமும் இருக்கின்றது.

  வேண்டுகோள்: இதை படித்துவிட்டு எப்படி என்று சோதித்து பார்க்கும் முயற்சிக்காக தண்ணி தொட்டியில் தலையை அமுக்கி பார்த்து........டெல்லி போலீஸ் என்னை தேடும் அளவுக்கு பிரபலமாக்க வேண்டாம்.

0 comments: