ஆமாம்...இல்லை...

  காதல் அபத்தமானது என்று அவளுக்கு எப்படி புரியவைக்கபோகிறேன் என்று யோசித்து கொண்டிருக்குபோதே அவள் தொடர்ந்தாள் ஏன் என்னை உனக்கு பிடிக்கவில்லையா? எதற்கு தயக்கம் காட்டுகிறாய்.என்றாள்.  அப்படி எல்லாம் ஒன்றுமில்லை நமக்குள் காதல் என்று ஒன்று தேவைதானா என்றேன் என்னிடம் காதலை சொன்ன அவளிடம்.

  பார் நம் இருவரும் காதலித்தால் என்னென்ன பிரச்சினை வரும் என்று   கொஞ்சம் யோசித்து பார்த்தாயா? என்று நான் சொல்லி முடிப்பதற்குள்..உனக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் நேராக சொல்லலாமே அதற்க்கு ஏன் இப்படி சுத்தி வளைத்து பேசுகிறாய் என்றாள் கோபமாய்.

  சரி இப்போ நம் இருவரும் காதலித்தால் எப்படியும் திருமணத்திற்கு நமது வீட்டில்  எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.  உன் வீட்டிலும் எதிர்ப்பு என் வீட்டிலும் எதிர்ப்பு..நமது சொந்தங்களுக்குள் சண்டை சச்சரவுகள்..  இப்படி சண்டைகளுக்கு நடுவில்  மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு ..பின் நம் இருவரும் சொந்தங்களை எதிர்த்து காதல்தான் பெருசு என்று தனியாக திருமணம் செய்து.......இதை எல்லாம் கொஞ்சம் நினைத்து பார்த்தயா? இது தேவையா? என்றேன்.

  அதற்க்கு அவள் நீ ஏன் இப்படி யோசிக்கின்றாய்? நம் காதல் வீட்டின் சம்மதத்தோடு திருமணத்தில் முடியும் என்ற நம்பிக்கையில் காதலிக்கலமே என்றாள்.

    நான் சொல்வது அந்த மாதிரி சுமுகமாக திருமணம் நடக்கவில்லை என்றால் எவ்வளவு பிரச்சினை என்றுதான். என்றேன்..... அவள் தலையை குனிந்து கொண்டாள்.

  அப்படியே நாம் வீட்டை எதிர்த்து தைரியமாக திருமணம் செய்து கொண்டாலும் அதற்க்கு பிறகு நாம் வாழப்போகும் வாழ்க்கையில் சந்தோசம் இருக்கும் என நீ நினைக்கின்றாயா? சொந்த பந்தங்களின் பாசம் தொடர்பு இல்லாமல் தானியாக வாழ்க்கை நடத்துவது எனக்கென்னவோ அவ்வளவு நல்லா இருக்கும் என தெரியவில்லை. என்றேன்.

    அப்படியே நாம் காதல் திருமணம் செய்து கொண்டாலும்... என்ன நன்றாக இருந்தால் சந்தோசமாக ஒரு ஒரு வருடம் இருப்போம். அதற்குள் நமக்குள் சில பிரச்சினைகள் வரலாம். அப்படி பிரச்சினை என்று வந்தால் உனக்கு அல்லது எனக்கு உதவி செய்ய அல்லது மனதளவில் ஆறுதல் சொல்ல கட்டாயம் நம் சொந்தங்கள் தேவை. என்றேன்.

  அவள் உடைந்த குரலில் கடந்த சிலமாதங்களாக நான் காதலால் மனதளவில்,கனவுகளில் உன்னோடு வாழ்ந்து இருக்கின்றேன் இப்போது நீ இப்படி சொல்லுகிறாய் என் நிலைமையும் கொஞ்சம் யோசித்து பார் என்றாள்.

   அதில் என் தவறும் இருக்கின்றது..., இதற்க்கு நானும் ஒருவிதத்தில் காரணமாக இருந்து இருக்கின்றேன். ஆனால் நீ சொல்லும் இந்த காதல் கனவுகள்,கற்பனை உலகம் எல்லாம் நம் உடம்பில் உள்ள ஹார்மோன்கள் செய்யும் வேலைதான்.  அது உனக்கு தெரியுமா. நம் சுஜாதா கூட அப்படித்தான் சொல்லி இருக்கின்றார். காதலே ஹார்மோன்களின் விளையாட்டுதான் அதை தவிர வேறொரு விசயமும் இல்லை என்பதுதான் அவர் கருத்து. இதன் பாதிப்புகள் எல்லாம் போக போக  நாளடைவில் சரியாகிவிடும்.என்றேன்.

   அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லி இருக்கட்டும்.ஆனால் நீ என்னிடம்  இப்படி சொல்லுவது என்னால் தாங்க முடியவில்லை. என்றாள்

     பார் நான் உன்னை காதலிப்பதில் ஒன்றும் பிரச்சினை இல்லை ஆனால் அதற்க்கு பிறகு வருவதைத்தான் கொஞ்சம் நினைத்துப்பார்க்க சொல்லுகிறேன்.நம் வீட்டில் சம்மதித்தால் இருவருக்குமே ஒரு பிரச்சினையும் இல்லை...நாம் இருவரும் காதலித்துவிட்டு பின் நம் வீட்டில் மறுத்து,அவர்களை தவிர்த்து திருமணம் செய்து,... அதற்க்கு பிறகு வரும் பிரச்சினைகளை யோசித்து பார்த்தால் நாம் இருவரும் காதலிக்கமலே இருப்பது நல்லது என்பதுதான் என் கருத்து என்ன சொல்லுகிறாய் நீ ? என்றேன்.

  அவள் தலையை குனிந்து இருந்தாள்.என் கண்களை பார்க்கவில்லை.ஏதும் பேசவும் இல்லை.

   பார் நான் என் நிலைமையை...., நாம் காதலித்தால் என்ன ஆகும் என்பதையும்  விளக்கிவிட்டேன். இப்பொது சொல் இதற்க்கு பிறகும் நாம் காதலிக்க வேண்டுமா? .

அதற்கு அவள் -------- என்றாள்.

LIQUID BREATHING....

 ‌‍‍‌‌‍‍‍   அழகாய் இருப்பாள்.அமைதியானவள். இருவரும் சேர்ந்து பேசும் போது நான்தான் அதிகம் பேசுவேன்...நான் என்ன புராணம் பாடினாலும் சரி அலட்டாமல் கேட்பாள். அவளுக்கு தேவையான விஷயம் என்றால் அதில் சந்தேகம் இருந்தால் அதை பற்றி மட்டும் கேட்பாள்..அப்படி இல்லை என்றால் நான் என்ன சொன்னாலும் ம் கொட்டி கொண்டு இருப்பாள். இது எல்லாத்தையும் விட ஒரே ஊர் சொந்தக்கார பெண். இதைவிட நான் அவளை காதலிக்க வேறொரு கரணம் இருக்க தேவையில்லை என் நினைக்கிறேன்.

   வருடத்தில் இரண்டு முறைகள் சந்தித்தபோதும் எங்கள் காதல் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.அவள் வீட்டில் திருமண பேச்சை எடுக்காதவரை.

    வீட்டில் அவளே சொல்லி இருக்கிறாள் எங்கள் காதலை பற்றி ....இதைக்கேட்ட அவர் அப்பா... அவளை அடிக்காத குறையாக...என்னையும் சேர்த்து திட்டி இருக்கின்றார்

    அவனே இங்கு வேலை கிடைக்காமல் டெல்லியில் போய் வேலை பார்க்கிறான்.....அந்த வேலையையாவது ஒழுங்க பார்த்தா பரவாயில்லை ..கண்ட கண்ட புத்தகங்களை படித்து கடவுள் இல்லை என்று தத்துவத்தை வேறு எதிலோ எழுதிக்கொண்டு இருக்கின்றானம்..நீ அவனை கல்யாணம் செய்தால் உன் வாழ்க்கை உருப்பிடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்று வசனம் வேறு... சொல்லி இருக்கின்றார்

    அவள் இதை என்னிடம் சொல்லும்போது அழுகாத குறைதான் ..இதற்க்கு முன் அவள் அப்படி இருந்து நான் பார்த்ததில்லை.

   ஒருவழியாக கொஞ்சம் நம்பிக்கையோடு நான் அவளிடம் இந்த முறை நான் செல்லும் பொது நீயும் என்னுடன் வந்து விடு என்றேன். அவள் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சரி என்று சொல்வது போல் தலை ஆட்டினாள்.

   இது எப்படியோ அவளின் வீட்டுக்கு தெரிந்துவிட...அவர் அப்பா என்னிடம் ஒருமுறை எச்சரித்தார். நான் ஒன்றும் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.அவர் எச்சரித்ததின் விபரீதம் பின்னர்தான் தெரிந்தது.

    அன்று தனியாக நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவளின் உறவினர்கள் மூன்று பேர்கள் என்னை வழிமறித்து நின்றார்கள். என்ன துணிச்சல் உனக்கு என்ற வார்த்தையை மட்டும்தான் சொன்னார்கள் அதற்க்கு பிறகு  என்னை அடிக்க ஆரம்பித்தார்கள்.

    சிறு பிள்ளை ஒரு கத்தியை காட்டி மிரட்டினலே  அதிக பயப்படுவேன்.....இப்போது அவர்கள் கோபம தீர அடித்து கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் மயக்கம் வருவது போல இருந்தது.இது நடந்த இடம் ஒரு குழிக்கு அருகில் வைத்து....அந்த சமயம் பேய்ந்திருந்த மழையால் அது நிரம்பி இருந்தது.

    அவர்களின் கோபம தீர்ந்து இருக்க வேண்டும் நிறுத்திவிட்டார்கள். நான் அரை மயக்கத்தில் இருந்தேன். அவர்கள் தள்ளி விட்டதில் அங்கு இருந்த தண்ணீருக்கு அருகில் சென்று விழுந்து இருக்கிறேன். அதற்க்கு பின் நான் உருண்டதில் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டேன்  

   நான் உணர்ந்து இருந்தேன் தண்ணீருக்குள் மூழ்குகிறோம் என்று ஆனால் அவர்கள் விட்டுப்போன நிலையில் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

   தண்ணீர் மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளே சென்றது. சரியாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகி இருக்கும் என நினைக்கிறேன் கொஞ்சம் மயக்கம் தெளிந்ததால் கண் திறந்து ..பின் நான் தண்ணிக்குள் இருப்பதை உணர்ந்து அவசர அவசரமாக வெளியில் எழுந்து வந்தேன்.

    மறுநாள் அவளை பார்க்கும் போது நடந்த்ததை  பற்றி சொன்னேன். அவளுக்கு அவர்கள் அடித்தது மட்டும் தெரிந்து இருநதது.  நான் தண்ணிக்குள் விழுந்தது பற்றி அவளுக்கு தெரிந்து இருக்கவில்லை.

    அவள் என்னிடம் இப்போது என்ன செய்யபோகிறோம் என்றாள் இதை கேட்கும்போது . பயம் மற்றும் கவலையோடு..உண்மையான காதல அவள் கண்களில் தெரிந்தது..அதற்க்கு நான் ஒன்றும் சொல்லாமல் நாளைக்கு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

    மறுநாள் சந்தித்தபோது இங்கு இருந்தால்தானே பிரச்சினை எல்லாம் அதான்... நான் டெல்லி போக  டிக்கெட் எடுத்துவிட்டதாக சொன்னேன்.அதறக்கு அவள் எத்தனை என்றாள் நான் இரண்டு என்றேன்.

    இந்த கதையை படித்து முடித்தவுடன் ஆஹா என்ன ஒரு மோசமான (மொக்கையான) காதல் கதை என்று யோசிக்காமல் அதில் உள்ள வார்த்தைகள் எப்படி சாத்தியம் என்று உங்களுக்குள் சந்தேகம் தோன்றி இருந்தால் அவர்கள் என் கட்சி...

   அதாவது மனிதன் தண்ணீரில் ஒரு மணி நேரத்திற்கு மேல் எப்படி இருக்க முடியும் எனபதுதான் நான் சொல்லவருவது. அறிவியல் பூர்வமாக பார்த்தால்  எந்த மனிதனும் சரி ஏன் எந்த ஒரு ஆனந்தாவும் இருக்க வாய்ப்பில்லை.

   இங்கு நான் சொல்லி இருப்பது ஒரு கற்பனைதான்.ஆனால் உணமையில் LIQUID BREATHING  என்ற ஒரு சமாச்சாரம் இருக்கின்றது. ஆனால் அதில் தண்ணீர் இருக்காது அதற்க்கு பதிலாக வேறொரு திரவம் உபோயிக்கப்படும்.

   PERFLUOROCARBONS (PFCS) இந்த திரவம்தான் LIQUID BREATHING முறைக்கு பயன்படுதபடுகின்றது.(இந்த திரவம்தான் ஐன்ஸ்டீன் தாத்தா பங்குபெற்ற அமெரிக்காவின் MANHATTAN  PROJECT ல் அதிகமாக பயன்படுத்தப்பட்டது என்பது கூடுதல் தகவல்)

   1960 ஆம் ஆண்டு முதன் முதலாக OXYGENATED SALINE SOLUTION ல் எலிகளை மூழ்க வைத்து சோதித்து பார்த்தார்கள்.ஆனால் அந்த சோதனை அவர்கள் நினைத்த அளவு நிறைவேறவில்லை.எலிகள மட்டும்தான் வீரமரணம் அடைந்ததன.

   பின் 1966 ஆம் ஆண்டு CLARK மற்றும் FRANK GOLLAN இருவரும் சேர்ந்து மீண்டும் சோதனை செய்தனர். ஆனால் அவர்கள் இந்த் முறை பயன்படுத்திய திரவம் PERFLUOROCARBONS. இதில் எலிகள கொஞ்ச நேரம் உயிரோடு இருந்தன அதற்க்கு பின் அவைகளும் வீரமரணம் அடைந்தன.

   இதற்க்கு காரணமாக அவர்கள் கண்டுபிடித்தது அந்த திரவமனது சரியாக சுத்த படுத்தபடாமல் இருந்துதான்.

    பின் அதை சுத்த படுத்தி அதற்க்கு தனி பெயர் வைத்தார்கள்.அதற்க்கு பெயர் PERFLUBRON. இப்போது உள்ள LIQUID BREATHING முறைக்கு இந்த திரவம்தான் உபோயிக்கப்டுகின்றது,

   இதன் தன்மைகள் என்று பார்த்தால் நிறமற்றது,மணமற்றது, நீரைவிட இரண்டு மடங்கு அடர்த்தி கொண்டது.

   முக்கியமாக காற்றை விட OXYGEN ஐ அதிகம் எடுத்து செல்லும் தன்மை கொண்டது.அதாவது குறிப்பிட்ட நிறையுள்ள காற்று எடுத்து செல்லும் OXYGEN விட அதே நிறையுள்ள PERFLUOBRON எடுத்து செல்லும் OXYGEN அளவு இருமடங்காகும்.

   இதன் முக்கிய பயன்பாடு என்று சொன்னால் மருத்துவ துறையில்தான். அதுவும் குழந்தைகளுக்குத்தான் அதாவது PRE MATURE BABIES அல்லது PEDIATRIC MEDICINE போன்ற சிகிச்சை முறைகளுக்கு பயன்படுத்தபடுகின்றது..


    இது தவிர மேலும் இதன் பயன்பாடுகள் என்று சொன்னால் DIVING,IMAGE,COSMETICS என இதன் பட்டியல் நீழுகின்றது.

   இதை பயன் படுத்துவதிலும் இரண்டுவிதமான முறைகள் இருக்கின்றன. ஒன்று TLV (TOTAL LIQUID VENTILATION), PLV (PARTIAL LIQUID VENTILATION)

   இதில் PLV முறை அதிகம் பயன்படுத்தபடுகின்றது. அதாவது திரவம் மற்றும் காற்றை சேர்த்து உபோயோகிக்கும் முறை.

   அண்மையில் 1996 ஆம் ஆண்டு PERFLUOROCORBONS திரவத்தில் COLD LIQUID VENTILATION என்ற முறையை MIKE DARWIN மற்றும் STEVEN கண்டு பிடித்தார்கள்.

    இதன் மூலம் உடலை குறிகிய நேரத்தில் குளிரவைப்பத்தின் மூலம் சில இருதய நோய்களின் ஆபத்தில் இருந்து காக்கலாம் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இது உதவியாக இருக்கும் என கண்டுபிடித்து சொன்னார்கள்.

    இதை GLV (GAS LIQUID VENTILATION ) என்று அழைக்கிறார்கள் இதன் மூலம் 0.5 DEGREE குளிரபடுத்த முடியும் என சொல்லுகிறார்கள்.

    என்ன இருந்தாலும் இந்த TLV முறை இன்னும் முழுமையாக் பயன்படுத்தப்படவில்லை...ஒரு பக்கம் பயம் இருந்தாலும் இதற்க்கு உபோயோகப்படும் பொருள்கள்,மற்றும் இதற்குண்டான செலவுகள்,தொழிநுட்பகோளாறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என நிறையவே இருப்பதால் கொஞ்சம் தயக்கம் காட்டுகிறார்கள்.

    இது தவிர இந்த வாயு நமது சுற்றுப்புற சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது என்பதால் இதன் பயன்பாட்டை தடுக்கும் எண்ணமும் இருக்கின்றது.

  வேண்டுகோள்: இதை படித்துவிட்டு எப்படி என்று சோதித்து பார்க்கும் முயற்சிக்காக தண்ணி தொட்டியில் தலையை அமுக்கி பார்த்து........டெல்லி போலீஸ் என்னை தேடும் அளவுக்கு பிரபலமாக்க வேண்டாம்.

உங்களுக்குள்ளே ஒரு கடவுள் - THE GOD GENE.


   கடவுள் வேறெங்கும் இல்லை அவர் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறார்..அவரை வெளியே தேடவேண்டிய அவசியம் இல்லை. என நான் படித்து இருக்கின்றேன்.
(அப்படி நமக்குள் இருக்கும் கடவுளை கண்டுகொள்ள உதவி செய்யத்தான்  இன்று நிறையா ஆனந்தாக்கள் இருக்கிறார்கள்..உள்ளேயும் வெளியேயும்....)

   நான இங்கே கொடுத்து இருப்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருக்கிறார்....இது முற்றிலும் உண்மை......அது எப்படி என்றுதான் இசொல்லி இருக்கின்றேன்.......அந்த கடவுள் நமக்குள் இருக்க காரணமாய் இருக்கும் VMAT 2 GENE ஐ பற்றி .....

அதற்க்கு முன் கொஞ்சம் சுஜாதா புராணம். இந்த பகுதிக்கு பொருத்தமாக மற்றும் தேவையாக இருப்பதால் எழுதுகிறேன்.(உண்மை.. கிடைத்த இடைவெளியில் சுஜாதா புராணம் மற்றும் ஐன்ஸ்டீன் புராணம் எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று) 

    சுஜாதா அவர்களை பொறுத்தவரையில் எப்போதும் எனக்கு இரண்டு ஆசைகள் இருந்ததுண்டு....ஒன்று அவரை எந்தவிததிலவ்து தொடர்பு கொள்ளவேண்டும்.மற்றோன்று அவரது புகைப்படத்தை என் அறையில் மாட்டவேண்டும் என்பது. இதில் இரண்டாவது ஆசையை நான் மிக எளிதாக நிறைவேற்றிவிட்டேன். ஆனால் முதலாம் ஆசை கடைசிவரை நிறைவேறாமலே போனது.

    சில வருடங்களுக்கு முன் நான் அவர் எழுதிய ஜினோம். என்ற புத்தகத்தை படித்து இருந்தேன். சில நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு இந்த புத்தகத்தை பரிந்துரைத்த போதுதான் எனக்கு நினைவுவந்தது அந்த புத்தகம் என்னிடம் இருப்பது. சரி சுஜாதா புத்தகம்தான் எத்தனை முறைவேண்டுமனாலும் படிக்கலாமே என்று படிக்க ஆரம்பித்தேன். நான் முதல் முறை அதை படித்ததற்கும் இப்போது படித்ததற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. ஜீனோம் விசயத்தில் கொஞ்சம் தேறியிருந்தேன். எல்லாம் சுஜாதா செயல்.

   இந்த புத்தகத்தில ஜீனோம் பற்றி அழகிய தமிழில் எளிமையாக சொல்லி இருப்பார் நமது சுஜாதா. இதே புத்தகத்தின் கடைசி பக்கத்தில் முடிக்கும் போது மனித ஜீனோம் ல் கடவுள் நம்பிக்கையை கொடுக்ககூடிய எதாவது ஒரு ஜீன் பொதிந்து இருக்கலாம் அதுவும் விரைவில் கண்டு பிடிக்கபடலாம் அப்படி கண்டுபிடித்தால் எனக்கு சொர்க்கத்துக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் என்று சொல்லி அந்த புத்தகத்தை முடித்து இருப்பார் சுஜாதா.(கடைசி பத்தியில்)

    இந்த GOD GENE  விசயம் பற்றி அவர் இந்த புத்தகம் எழுதிய நேரத்தில் அந்த GENE கண்டுபிடிக்கப்படவில்லை.அவர் இந்த புத்தகம் எழுதியது 2001 ஆண்டு இந்த GOD GENE (VMAT2) கண்டு பிடிக்கப்பட்டது 2004 ஆம் ஆண்டு. அதனால்தான் அவர் சொர்க்கத்துக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அதில் சொல்லியிருப்பார்.

    சரி இப்போது அவர் சொல்லிவிட்டு சென்ற அந்த GOD GENE விஷயத்தை கொஞ்சம் பார்ப்போம். நான் இந்த GOD GENE ஐ பற்றி என்னதான். கொஞ்சம் படித்து தெரிந்து இருந்தாலும்கூட இதை சுஜாதா சொல்லி அல்லது விளக்கி இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்ற எண்ணம எப்போதும் எனக்கு இருக்கும்..இந்த விஷயத்தில் மட்டும் இல்லை நான் புதியதாக கற்றுக்கொள்ளும் எல்லாவிசயத்திலும் ஏனோ அவரை நான் இழக்கிறேன்.

    சரி இந்த GOD GENE ஆனது அமெரிக்கா நாட்டை சேர்ந்த DEAN HAMER  என்பவரால் எடுத்து சொல்லபட்டது.அவர் இதைப்பற்றி THE GOD GENE HOW FAITH IS HARDWIRED INTO OUR GENE என்ற புத்தகமே எழுதி இருக்கிறார்.

    இந்த GENE செய்யும் வேலைகளாக அவர் சொல்லுவது மனிதர்க்களுக்குள் இருக்கும் ஆன்மிக உணர்வு மற்றும் MYSTIC  ஆற்றலுக்கு மூல காரணம் இந்த GENE தன என்கிறார்.மேலும் மனிதர்களின் நம்பிக்கைக்கும் காரணமாய் இருப்பது இதுதான் என்பது அவரின் விளக்கம்.

    இதை அவர் விரிவாக புத்தகமாக வெளியிட்டபோது ஆண்மிகவதிகளும் ஒரு சில அறிவியலரும் இதனை குறை கூறி எதிர்த்தனர். அவர்கள் சொல்வது ஆன்மிகமும் கடவுளும் நமக்குள் இருந்து வருவதில்லை அது நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடு வழியாக நமக்குள் செல்வது என தெரிவித்தார்கள்.

    HAMER இதை அறிவியல் பூர்வமாக விளக்கியும் இருக்கிறார். அதாவது இந்த GENE ஆனது மூளையில் உள்ள ரசயானங்களான DOPAMINE மற்றும் NON EPINEPHRINE இணைந்து வேலைசெய்ய காரணமாக இருக்கின்றது.மனித மூளையில் இந்த ரசாயனங்கள்தான் மேலே சொன்ன ஆன்மிக உணர்வு மற்றும் MYSTIC ஆற்றலுக்கு காரணமாய் இருப்பது.

   அவர் சொல்லுவது இந்த GENE களின் செயல்பாடானது முழுவதும் கடவுள் நம்பிக்கைக்கு காரணமாய் இருக்கின்றது என்று சொல்வதைவிட. ஒன்றின் மீது நம்பிக்கை வைக்க காரணமாயிருப்பது இதுதான் என்கிறார்.

   என்னை பொறுத்தவரையில் கடவுள் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே..எப்படி என்றால் நீங்கள் எந்த ஒரு மதநூலை எடுத்து கொண்டாலும் அதில் கடவுளின் மிது அயராத நம்பிக்கைவைக்கவே சொல்லி இருக்கிறது.சொல்லப்போனால் நம்பிக்கை இல்லாமல் கடவுளின் கிருபை கிட்டாது என்பதையே அவைகள் வலியுறுத்துகின்றன.

    அப்படி பர்க்கபோனால் இந்த நம்பிக்கை என்பது VMAT2 எனற GENE  களின் வேலைதான் என்பதை HAMER உறுதிபடுத்தி உள்ளார். எனவே அந்த GENE க்கு GOD GENE என்ற பெயரும் வைத்துவிட்டார்.
   இந்த GENE ஏற்படுத்தும் நம்பிக்கை கடவுளின் மீதுதான் இருக்கவேண்டும் என அவசியமில்லை.அது ஆட்களை பொறுத்தது. சிலர் இந்த GENE ன் வேலையை கடவுளுக்கு அற்பனிக்கிறார்கள்..சிலர் வேறுவிதத்தில் இதுதான் வித்தியாசம்.மற்றபடி இந்த GENE க்குக் கடவுளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.இந்த GOD GENE இருப்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்..ஆனால் கடவுளை அல்ல.

   அதே நேரத்தில் கடவுள் இல்லை என நம்புகிறவர்கலுக்கு இந்த GENE வேலை செய்யாத என்றால்..வேலை செய்யும் ஆனால் அவர்களின் நம்பிக்கை கடவுளின் மீது இல்லாமல் வேறோன்றின்மிது இருக்கலாம்.
 
    என்னை பொறுத்தவரையில் கடவுள் நம்பிக்கை என்பது என்னில் வெற்றிடமே. அதற்க்கு பதிலாக நான் வேறொன்றின் மீது பற்று அல்லது நம்பிக்கை வைத்து இருக்கிறேன்.அது ஐன்ஸ்டீன்,சுஜாதா,....,...ஏன்..என் வீட்டு நாய்க்குட்டி,பூனைகுட்டி என்று எதன மீது வேண்டுமானாலும் நான் வைத்து எனது GOD GENE ன் வேலையை பூர்த்தி செய்யலாம்

    கடைசியாக இந்த GOD GENE (VMAT2) எப்படி வேலை செய்கின்றது என கொஞ்சம் பார்க்கலாம்..HAMER தனது ஆராய்ச்சியின் மூலம் இந்த VMAT2 GENE கள் மொத்தம் நமது உடலில சுமார் 35000 இருக்கின்றன என கண்டுபிடித்தார்.

  இந்த GENE களின் கூட்டமைப்பானது ஒன்றாக இணைந்து ப்ரோடீன் களை உருவாக்குகின்றன இந்த ப்ரோடீன்கள் MONOAMINES எனப்படும் NEURO TRANSMITTER ள் உருவாக காரணமாக இருக்கின்றன.

     இந்த MONOAMINE ஆனது நமது மூளைக்குள் நடக்கும் ஒருவித ரசாயன மாற்றத்திற்கு முக்கியபங்கு வகிக்கின்றன.அப்படி இதன் மூலம் நடக்கும் ரசாயன மாற்றத்தால் FEELING OF EUPHORIA,POSITIVE EMOTION AND PROPENSITY FOR ADDICTION  போன்ற மன உணர்வுகள் நமக்கு ஏற்படுகின்றன.

    அவர் சொல்ல வருவது கடவுள் நம்பிக்கையும் இந்த வகையில் உருவாகும் (மன உணர்வுதான்) ஒன்றுதான் என சொல்லுகிறார். மேலும் தியானம் செய்வதின் மூலம் நம் மனதில் ஏற்ப்படும் மாற்றங்களும் இந்த ரசாயன மாற்றங்கள்தான் என அவர் விளக்கி உள்ளார்.

     கடவுள் நம்பிக்கை மனிதனுக்கு நன்மை பயக்குமா இல்லையா எனபது எனக்கு தெரியாது,ஆனால் அறிவியல் பூர்வமாக பார்க்கும்போது தியானம் செய்வது நல்லது என்பது நான் அந்த புத்தகம் படித்ததில் இருந்து தெரிந்து கொண்டேன்.

கடைசியாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த GOD GENE ஆனது முழுவதும் நிருபிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

மேலும் தெரிந்துகொள்ள HAMER எழுதிய THE GOD GENE..என்ற புத்தகத்தை படிக்கலாம்.





                  

செல்லில் சங்கேத பாசை...

 செல்லில் சங்கேத பாசை...(water marks)




   காகிதங்களில் சங்கேத பாசைகளை எழுதுவது போய் இப்போது உயரின செல்களில் எழுதி அதை கண்டுபிடியுங்கள் என சொல்லி இருக்கிறார்கள்.... எல்லாம் அறிவியலின் சாகசம்...


    செல்லில் எப்படி சங்கேத பாசையை அமைக்க முடியும் என்றால்....அமெரிக்கா நாட்டை சேர்ந்த VENTER என்பவர் ஒரு SYNTHETIC GENOME யை உருவாக்கி இருக்கிறார்.


    அதை எப்படி உருவாக்கினார் என்பதை ஏற்க்கனவே கட்டுரை,கதையாக எழுதிவிட்டதால் இப்போது அதை இங்கு சொல்ல விரும்பவில்லை....
அரைத்த மாவை எத்தனை முறை அரைத்தாலும் அதே தோசை தன் வரும் என்பதை யாரோ எங்கோ சொல்லி இருந்தததை நான் படித்து இருக்கின்றேன்..
எனவே நான அதை இங்கு சொன்னால் அதுவும் இதே கதைதான்...


     சரி இது எப்படி சாத்தியம் என்று பார்க்கலாம். நமது உடலில் உள்ள செல்லானது குரோமோசோம்கள்,DNA கள், புரோட்டின்கள்,அமினோ அமிலங்கள்,GENE கள்..போன்றவற்றை கொண்டது. இதைத்தான் GENOME என்கிறார்கள்.
இதில் உள்ள DNA வில்தான் இந்த சங்கேத பாசையை எழுதி இருக்கிறார்கள்.




     பொதுவாக DNA எனபது ATCG (A – ADENOSINE, T – THYMINE, C- CYTOSINE...G – GUANINE) எனற நான்கு ந்யூக்ளியோடைடுகளால் ஆனது. இந்த நான்கு ந்யூக்ளியோடைடுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு நுலேணி போல் DNA வாக அமைந்து இருக்கின்றது.


     சங்கேத பாசையை எழுதி இருப்பது இந்த நன்கு எழுதுக்களில்தான் அதாவது ATCG என்ற இந்த எழுத்துக்களை செயற்கையான முறையில் மாற்றி மாற்றி ஒரு செல்லில் எழுதி இருக்கிறார்கள்.




  சரி அதற்க்கு முன் சங்கேத பாசைக்கு ஒரு உதாரணத்தை பார்க்கலாம்...


     MN ZMRVDQ.. இது ஒருவகையான சங்கேத பாசைதான்...இதை நான தெரிந்து கொண்டது DAN BROWN உடைய THE LOST SYMBOL என்ற நாவலில் இருந்து. இதற்க்கு விடை கடைசியில் கொடுத்து இருக்கின்றேன். (உடனே ஆர்வத்தில் கடைசிக்கு போகாதிர்கள் நான அங்கு கொடுக்கவில்லை இதன் நடுவில் ஒரு இடத்தில கொடுத்து இருக்கின்றேன்...)


      சரி ஒரு DNA வில் எப்படி அந்த ATCG எழுத்துக்களை மாற்றி அமைக்க முடியும் என்றால் ..இயற்கையான DNA என்றால் இந்த A ஆனது T யுடன் தான் சேரும், அதே போல் G என்பது C யுடந்தான் சேரும்.ஆனால் அவர்கள் எழுதிய DNA ஆனது மனிதனால் உருவாக்கப்பட்டது ..எனவே இயற்கையான கூட்டமைப்பில் இருந்து இதனை வேறுபடுத்தி இருக்கிறார்கள்.அல்லது எழுதி இருக்கிறார்கள்..


      அப்படி வேறுபடுத்தி எழுதியதில்தான் இந்த சங்கேத பாசையையும் சேர்த்து இருக்கிறார்கள்.


    அந்த சங்கேத பாசையில் அந்த SYNTHETIC CELL யை உருவாக்கியவர்களின் பெயர்கள் உட்பட சில வாக்கியங்களையும் சேர்த்து இருக்கிறார்கள்.


   எடுத்துகாட்டாக சில வார்த்தைகளை இங்கே கொடுத்து இருக்கின்றேன்..பாருங்கள்...




CRAIGVENTER
TTAACTAGCTAATGTCGTGCAATTGGAGTAGAGAACACAGAACGATTAACTAGCTAA
மேலே உள்ள ந்யூக்ளியோடைடுகளின் எழுத்துக்களில்தான் இந்த SYNTHETIC GENOME PROJECT தலைமையேற்ற VENTER ன் பெயர் இருக்கின்றது.


      இதை எந்த முறையில் எழுதி இருக்கின்றார்கள் என்றால் இந்த ந்யூக்ளியோடைடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒருவகையான அமினோ அமிலங்களை உருவாக்கும்.




       அப்படி இந்த ந்யூக்ளியோடைடுகலின இணைபில் உருவாகும் அமிநோ அமிலங்களை அடிப்படையாக வைத்துதான் இந்த சங்கேத பாசையை அமைத்து இருக்கிறார்கள்.


    அது எப்படி என்று கண்டு பிடிக்க நானும் என சிறிய அறிவை பயன்படுத்தி முயற்ச்சி செய்து பார்த்தேன்...கடைசிவரை முடியவேயில்லை.......பிறகு சசி..ச்சி இந்த பழம் புளிக்கும் என்று இதை விட்டு விட்டேன்...
.
     சரி நான எந்த முறையில் முயன்றேன் என சொல்லிவிட்டால் யாராவது எனக்கு உதவ எளிதாக இருக்கும்.


      முதலில் அந்த ந்யூக்ளியோடைடுகள இணைந்தால் எந்த விதமான அமினோ அமிலங்கள் உருவாகும் என்பதை கண்டறிந்தேன்.அத்தாக்கு நான் உதவியாக எடுத்து கொண்டது இந்த வலைதளத்தைத்தான்.


http://people.alfred.edu/~bde1/dna.php


      இங்கு சென்று மேலே சரியான ந்யூக்ளியோடைடுகளின் இணைப்பை கொடுத்தால் அதன் முலாம் உருவாகும் அமினோமிலத்தின் பெயரை அங்கு தெரிந்து கொள்ளலாம்.


    எடுத்துகாட்டாக மேலே உள்ள TTAA என்ற எழுத்துக்களை கொடுத்தால் Asparagines என்ற அமினோமிலத்தின் பெயர் கிடைக்கும்.


    நான் அப்படிதேரிந்து கொண்டபிறகு அதில் இருந்து எப்படி இந்த பெயர் வந்த்தது என கண்டு பிடிக்க முடியவில்லை..யாராவது உதவி செய்தால் சந்தோசம்...




     இந்த முறையில் வடிவமைதுதான் அனைத்தையும் எழுதி இருக்கிறார்கள்...அதில் ஒரு EMIAL ID யை வேறு கொடுத்து இருக்கிறார்கள்..அதை நிங்கள் கண்டுபிடித்துவிட்டால் அதற்க்கு நீங்கள் மெயில் அனுப்பலாம்.


      மேலும் அதில் சந்கேதபாசை முறையில் எழுதிய வாக்கியங்களில் எனக்கு பிடித்த இரண்டை இங்கு கொடுக்கிறேன்..


WHAT I CANT BUILD, I CANT UNDERSATND.


SEE THINGS NOT AS THEY BUT AS THEY MIGHT BE.




(இடையில் சொன்ன சங்கேத பாசைக்கு விடை NO ANSWER என்பதுதான். எப்படி என்றால்.அதில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளுக்கு முன்னால் உள்ள எழுத்துகளை எடுத்து வாக்கியம் அமைக்கவேண்டும் அவ்வளவே...
MN ZMRVDQ NO ANSWER.)