எங்கே அது?

எங்கே அது..

   நான் அந்த சாலையில் நடந்து சென்ற விதத்தை யார் பார்த்தாலும் தெரிந்து கொள்ளுவார்கள் எதையோ ஒன்றை தேடுகிறேன் என்பதை..

     நானும் அதை அந்த ஊருக்கு வந்தபிறகு இரண்டு வாரங்களாக தேடிக்கொண்டு இருக்கின்றேன். அது இருப்பது எங்கே என யாருக்கும் தெரியவில்லை.என்னைப் பொறுத்தவரையில் யாருக்கும் அதன் மீது எந்தவொரு ஆர்வமும் இல்லாமல் போனதே காரணம்.

    சிலரிடம் நான் அதைப்பற்றி விசாரித்தபோது ..என்னங்க நீங்க இந்த கணினி காலத்தில்கூட அதை தேடிகிட்டு இருக்கீங்க...இப்பெல்லாம் அதை யாரும் விரும்புறது இல்லை...அது இருக்கிற பக்கமே போறதில்லை...என்னமோ நீங்கதான் அதை தேடிகிட்டு இருக்கீங்க...என் பதிலளித்தார்கள்.

    அவர்கள் சொன்னது உண்மையாகத்தான் இருந்தது கணினி ஆதிக்கத்தில் அது காணமல் போயிருந்தது உணமைதான்.

      அதனால் அதன் மீது அதிக ஆர்வம கொண்ட என்னைப்போன்றவர்களின் நிலைமை கொஞ்சம் கஷ்டமானது உணமைதான்...

  நீங்கள் கேட்கலாம் அப்படி என்ன அது மேல் உனக்கு ஒரு ஆர்வம?...என்று..

    ஆமாம் அதன் மீது எனக்கு அளவு கடந்த ஆர்வம்தான்...அதற்க்கு காரணமும் இருக்கின்றது...

     இருபது வருடங்களுக்கு முன் நான் டெல்லியில் வேலை பார்த்து கொண்டிருந்தேன்.
நான் தங்கி இருந்தது வீட்டின் மேல்கடைசி பகுதியில் அதாவது மொட்டைமாடியில் தனிமையான அறை.....தனிமை கலந்த ஏகாந்த நிலை எப்பவுமே எனக்கு பிடித்தமான ஒன்று...

     அந்த தனிமையில் எனக்குத்துனையாய் இருந்தது அது தான்.அதைவைத்துதான் என் தனிமையை சுகமாக கழித்தேன். அப்போது இருந்த நிலையில் அதோடு ஒரு நாள் நான் கழிக்கவில்லை என்றால் அந்த நாள் எனக்கு வீணான நாள்தான்.....

    வீட்டின் வெளியே வெட்டவெளியில் நாற்க்காலியில் அமர்ந்துகொண்டு ஒரு கையில் காப்பியுடன்....... பின்புறம் மெல்லிய இசை ..போன்றவற்றுடன் நான அதோடு அதிக நேரங்களை செலவழித்து இருக்கின்றேன்...அந்த காலங்கள் என் வாழ்வில் மிக இனிமையனவைகள்....

     இந்த மாதிரியான சுதந்திரமான சுகங்கள் கணினியில் எனக்கு கிடைக்கவில்லை..அதுதான் என் பிரச்சினை. என்னதான் அது தறாத வசதிகளை கணினி கொடுத்தாலும் எனக்கு பிடிக்கவில்லை...

     ஆண்டுகள் ஆக..ஆக அதை பயன்படுத்துவது குறைந்து கொண்டே வந்தது...அப்போதில் இருந்தே எனக்கு பிரச்சினை ஆரம்பித்தது...

     அது கிடைக்காமல் என் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்தது போல இருந்தேன்...இருந்தாலும் அதை தேடும் முயற்சியை விடவில்லை ..இப்போதும் அதைத்தான் செய்து கொண்டு இருக்கின்றேன்.

     ஒருவர் சந்தேகமாகச் சொன்னார் அங்கே போய் பாருங்கள் அங்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று.

     அங்கு போய் பார்த்தால் ஆச்சர்யம்....அந்த பெயர் பலகையை பார்த்தவுடனே என்னுள் அப்படி ஒரு சந்தோசம்..

     இருந்தும் தூரத்தில் இருந்து பார்த்த எனக்கு கொஞ்சம் சந்தேகம்...என்ன இருக்கும் இடம் மிக சிறியதாக இருக்கின்றது அது இங்கே கிடைக்குமா? என....

     அருகில் சென்றேன் ஒரு கணினியுடன் முதியவர் உட்கார்ந்து இருந்தார். நான சென்றவுடன் என்ன என்பது போல் பார்த்தார்.

      நான் அந்த இடத்தை கொஞ்சம் கண்களால அலசினேன்..பழைய காகிதங்கள் அங்கும் இங்கும் சிதறி கிடந்தன..சில காகிதங்களை அள்ளி அங்கு இருந்த இயந்திரத்தில் போட்டு கொண்டிருந்தனர்.

      இதைப்பார்த்து கொண்டு இருக்கும்போதே அந்த முதியவர் என்ன வேண்டும் என கேட்டார்.
இங்கே கிடைக்கும் எனச் சொன்னார்கள் அதான் வாங்கிபோகலம் என வந்தேன் என்றேன் அவரிடம்...

      அதற்க்கு அவர் பெயர் சொல்லுங்கள் இருபது நிமிடத்தில் தயராகிவிடும் என்றார்

என்ன சொல்றிங்க? தயாராகுமா? என்றேன்..

      இப்ப எல்லாம் யாருங்க புத்தகம் படிக்கிறாங்க?... அந்த பழக்கமே இல்லாமல் போச்சி...இப்ப எல்லாம் கணினி ஆதிக்கம்தான்..என்று எல்லோரும் சொல்லுவதை அவரும் சொன்னார்.

   அதனால்தான்...இருக்கின்ற புத்தக பிரியர்களுக்காக இதை வைத்து இருக்கின்றேன்..வருபவர்கள் என்ன புத்தகம் வேண்டும் சொன்னால் அதை கணினியில் இருந்து இறக்கி அதை பிரதி எடுத்து கொடுப்பேன் என்றார்.

    “கட்டணம் குறைவுதான்..நான பழைய காகிதங்களை அரைத்து அதை கூழாக்கி மீண்டும் அதை காகிதமாக்கி அதில்தான் அச்சடித்து தருகிறேன்..... எனவேதான் விலை குறைவு” என்றார்..

     எனக்கு பிடித்த புத்தகங்களின் பெயர் சொல்லி காத்திருந்து வங்கி வந்தேன்...கொஞ்சம் சந்தோசம்...முதலில் வீட்டிறக்கு சென்று காப்பி (coffee) போட வேண்டும் என நினைத்து கொண்டேன்....கதைக்கு மற்றுமொரு முடிவு....

அந்த பெரியவரிடம் கணேஷ் உடைய புத்தகங்கள் கிடைக்குமா என்றேன்..அதற்க்கு அவர் ஏற இறங்க பார்த்துவிட்டு கிடைக்கும் என்றார்..

நான் அவரிடம் “எல்லோரும் சொல்லுகிறார்கள் கணேஷ் எழுதியதை அவரே ஒரு முறை திரும்பி படித்தால் அவருக்கே புரியாது என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா”? என்றேன்...

அதற்க்கு அவர் “அதெல்லாம் என்னக்குதேரியது” எனச்சொல்லிகொண்டே பிரதி எடுக்க ஆரம்பித்தார்...

அதை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடக்கும் வழியில் அந்த புத்தகத்தின் ஒரு முனையில் மேலும் கணேஷ் ன் படைப்புகளை படிக்க இந்த http://ganeshmoorthyj.blogspot.com வலைப்பூ விற்கு செல்லுமாறு அச்சிடப்பட்டு இருந்தது.

(புத்தகம் வாசிப்பவர்களின் நிலைமை இன்னும் சில காலங்களில் என்ன ஆகும் என கொஞ்சம் கற்பனை செய்தேன்...இது உண்மையில் நடக்குமா என எனக்குத் தெரியாது..அது நம்ம கையில்தான் இருக்கிறது என நினைக்கிறேன்)

4 comments:

manjoorraja said...

இன்னும் கொஞ்ச காலம் கழிந்தால் இந்த நிலை வந்தாலும் வரலாம்.

manjoorraja said...

கதையை முடிவை கொஞ்சம் தவறாக ஊகித்துவிட்டேன்.

தபால்கார்டு அல்லது இன்லெண்ட் லெட்டர் என நினைத்துவிட்டேன்.

mynah said...

சூப்பர். நல்ல கற்பனை.

ஆமாம், இந்த நிலை வரும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை போலிருக்கிறது.

மைதிலி

கணேஷ் said...

சூப்பர். நல்ல கற்பனை.

ஆமாம், இந்த நிலை வரும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை போலிருக்கிறது.//////

உங்களின் கருத்துக்கு நன்றி.
ஆமாம் சீக்கிரம் வரலாம்..அது நம் கையில்தான் இருக்கின்றது...