எங்கே அது?

எங்கே அது..

   நான் அந்த சாலையில் நடந்து சென்ற விதத்தை யார் பார்த்தாலும் தெரிந்து கொள்ளுவார்கள் எதையோ ஒன்றை தேடுகிறேன் என்பதை..

     நானும் அதை அந்த ஊருக்கு வந்தபிறகு இரண்டு வாரங்களாக தேடிக்கொண்டு இருக்கின்றேன். அது இருப்பது எங்கே என யாருக்கும் தெரியவில்லை.என்னைப் பொறுத்தவரையில் யாருக்கும் அதன் மீது எந்தவொரு ஆர்வமும் இல்லாமல் போனதே காரணம்.

    சிலரிடம் நான் அதைப்பற்றி விசாரித்தபோது ..என்னங்க நீங்க இந்த கணினி காலத்தில்கூட அதை தேடிகிட்டு இருக்கீங்க...இப்பெல்லாம் அதை யாரும் விரும்புறது இல்லை...அது இருக்கிற பக்கமே போறதில்லை...என்னமோ நீங்கதான் அதை தேடிகிட்டு இருக்கீங்க...என் பதிலளித்தார்கள்.

    அவர்கள் சொன்னது உண்மையாகத்தான் இருந்தது கணினி ஆதிக்கத்தில் அது காணமல் போயிருந்தது உணமைதான்.

      அதனால் அதன் மீது அதிக ஆர்வம கொண்ட என்னைப்போன்றவர்களின் நிலைமை கொஞ்சம் கஷ்டமானது உணமைதான்...

  நீங்கள் கேட்கலாம் அப்படி என்ன அது மேல் உனக்கு ஒரு ஆர்வம?...என்று..

    ஆமாம் அதன் மீது எனக்கு அளவு கடந்த ஆர்வம்தான்...அதற்க்கு காரணமும் இருக்கின்றது...

     இருபது வருடங்களுக்கு முன் நான் டெல்லியில் வேலை பார்த்து கொண்டிருந்தேன்.
நான் தங்கி இருந்தது வீட்டின் மேல்கடைசி பகுதியில் அதாவது மொட்டைமாடியில் தனிமையான அறை.....தனிமை கலந்த ஏகாந்த நிலை எப்பவுமே எனக்கு பிடித்தமான ஒன்று...

     அந்த தனிமையில் எனக்குத்துனையாய் இருந்தது அது தான்.அதைவைத்துதான் என் தனிமையை சுகமாக கழித்தேன். அப்போது இருந்த நிலையில் அதோடு ஒரு நாள் நான் கழிக்கவில்லை என்றால் அந்த நாள் எனக்கு வீணான நாள்தான்.....

    வீட்டின் வெளியே வெட்டவெளியில் நாற்க்காலியில் அமர்ந்துகொண்டு ஒரு கையில் காப்பியுடன்....... பின்புறம் மெல்லிய இசை ..போன்றவற்றுடன் நான அதோடு அதிக நேரங்களை செலவழித்து இருக்கின்றேன்...அந்த காலங்கள் என் வாழ்வில் மிக இனிமையனவைகள்....

     இந்த மாதிரியான சுதந்திரமான சுகங்கள் கணினியில் எனக்கு கிடைக்கவில்லை..அதுதான் என் பிரச்சினை. என்னதான் அது தறாத வசதிகளை கணினி கொடுத்தாலும் எனக்கு பிடிக்கவில்லை...

     ஆண்டுகள் ஆக..ஆக அதை பயன்படுத்துவது குறைந்து கொண்டே வந்தது...அப்போதில் இருந்தே எனக்கு பிரச்சினை ஆரம்பித்தது...

     அது கிடைக்காமல் என் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்தது போல இருந்தேன்...இருந்தாலும் அதை தேடும் முயற்சியை விடவில்லை ..இப்போதும் அதைத்தான் செய்து கொண்டு இருக்கின்றேன்.

     ஒருவர் சந்தேகமாகச் சொன்னார் அங்கே போய் பாருங்கள் அங்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று.

     அங்கு போய் பார்த்தால் ஆச்சர்யம்....அந்த பெயர் பலகையை பார்த்தவுடனே என்னுள் அப்படி ஒரு சந்தோசம்..

     இருந்தும் தூரத்தில் இருந்து பார்த்த எனக்கு கொஞ்சம் சந்தேகம்...என்ன இருக்கும் இடம் மிக சிறியதாக இருக்கின்றது அது இங்கே கிடைக்குமா? என....

     அருகில் சென்றேன் ஒரு கணினியுடன் முதியவர் உட்கார்ந்து இருந்தார். நான சென்றவுடன் என்ன என்பது போல் பார்த்தார்.

      நான் அந்த இடத்தை கொஞ்சம் கண்களால அலசினேன்..பழைய காகிதங்கள் அங்கும் இங்கும் சிதறி கிடந்தன..சில காகிதங்களை அள்ளி அங்கு இருந்த இயந்திரத்தில் போட்டு கொண்டிருந்தனர்.

      இதைப்பார்த்து கொண்டு இருக்கும்போதே அந்த முதியவர் என்ன வேண்டும் என கேட்டார்.
இங்கே கிடைக்கும் எனச் சொன்னார்கள் அதான் வாங்கிபோகலம் என வந்தேன் என்றேன் அவரிடம்...

      அதற்க்கு அவர் பெயர் சொல்லுங்கள் இருபது நிமிடத்தில் தயராகிவிடும் என்றார்

என்ன சொல்றிங்க? தயாராகுமா? என்றேன்..

      இப்ப எல்லாம் யாருங்க புத்தகம் படிக்கிறாங்க?... அந்த பழக்கமே இல்லாமல் போச்சி...இப்ப எல்லாம் கணினி ஆதிக்கம்தான்..என்று எல்லோரும் சொல்லுவதை அவரும் சொன்னார்.

   அதனால்தான்...இருக்கின்ற புத்தக பிரியர்களுக்காக இதை வைத்து இருக்கின்றேன்..வருபவர்கள் என்ன புத்தகம் வேண்டும் சொன்னால் அதை கணினியில் இருந்து இறக்கி அதை பிரதி எடுத்து கொடுப்பேன் என்றார்.

    “கட்டணம் குறைவுதான்..நான பழைய காகிதங்களை அரைத்து அதை கூழாக்கி மீண்டும் அதை காகிதமாக்கி அதில்தான் அச்சடித்து தருகிறேன்..... எனவேதான் விலை குறைவு” என்றார்..

     எனக்கு பிடித்த புத்தகங்களின் பெயர் சொல்லி காத்திருந்து வங்கி வந்தேன்...கொஞ்சம் சந்தோசம்...முதலில் வீட்டிறக்கு சென்று காப்பி (coffee) போட வேண்டும் என நினைத்து கொண்டேன்....



கதைக்கு மற்றுமொரு முடிவு....

அந்த பெரியவரிடம் கணேஷ் உடைய புத்தகங்கள் கிடைக்குமா என்றேன்..அதற்க்கு அவர் ஏற இறங்க பார்த்துவிட்டு கிடைக்கும் என்றார்..

நான் அவரிடம் “எல்லோரும் சொல்லுகிறார்கள் கணேஷ் எழுதியதை அவரே ஒரு முறை திரும்பி படித்தால் அவருக்கே புரியாது என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா”? என்றேன்...

அதற்க்கு அவர் “அதெல்லாம் என்னக்குதேரியது” எனச்சொல்லிகொண்டே பிரதி எடுக்க ஆரம்பித்தார்...

அதை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடக்கும் வழியில் அந்த புத்தகத்தின் ஒரு முனையில் மேலும் கணேஷ் ன் படைப்புகளை படிக்க இந்த http://ganeshmoorthyj.blogspot.com வலைப்பூ விற்கு செல்லுமாறு அச்சிடப்பட்டு இருந்தது.

(புத்தகம் வாசிப்பவர்களின் நிலைமை இன்னும் சில காலங்களில் என்ன ஆகும் என கொஞ்சம் கற்பனை செய்தேன்...இது உண்மையில் நடக்குமா என எனக்குத் தெரியாது..அது நம்ம கையில்தான் இருக்கிறது என நினைக்கிறேன்)

ஐன்ஸ்டீன் செய்(யா)த தவறுகள்...

-->
ஐன்ஸ்டீன் செய்(யா)த தவறுகள்...


EINSTEIN MADE NO MISTAKES…………


       என்ன இவன் தலைப்பை ஐன்ஸ்டீன் செய்த தவறுகள் என்று எழுதி விட்டு முதல் வரியை இப்படி எழுதி இருக்கின்றனே என்று யோசித்தால் தொடர்ந்து படியுங்கள்.....

       ஐன்ஸ்டீன் செய்த ஒரு மிகப்பெரிய தப்பு அவர் செய்யாத தப்புக்கு அதுவும் அது தவறே இல்லாத போதும் ...அவரே தன மீது பழியை போட்டுகொண்டதுதான்....

     அப்படி அவர் செய்யாத த்வறுகளைத்தான் பர்ர்க்க போகின்றோம்.......சரி தலைப்பில் உள்ளதை படித்த உங்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில் அவர் செய்த சிறு சிறு தவறுகளை சில வரிகளில் சொல்லிவிடுகிறேன்..

     ஐன்ஸ்டீன் அதிகம் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்....அவர் அறையில் இருக்கின்றாரா இல்லையா என்பதை சற்று தூரத்தில் இருந்தே கண்டுபிடித்து விடலாம்....அவர் உள்ளே இருந்தால் அதிக புகை வெளியேறிக்கொண்டே இருக்கும்.......

      அவர் தன தலைமுடியின் மீது கொஞ்சம் கூட  பாசம இல்லாதவர்..அவர் குறிப்பிட்ட வயதிற்கு மேல் தன முடியை சீப்பால் சீவியதில்லையாம்.....எங்கு சென்றாலும் தலைவிரிகோலம்தான்....

    அவர் SHOE அணியும்போது அதற்க்கு அணியும் SHOCKS அணிவதில்லை...இத்தனைக்கும்..அவர் அமெரிக்க அதிபர் ரூஸ்வேல்ட்டுடன் சந்திப்பின் போதும் சரி அதற்க்கு பின் வந்த காலங்களிலும் சரி அவர் அதை அணிந்த்தது இல்லை....இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது....இரண்டு பொருள்களில் ஒரு பொருள் அந்த இரண்டு பொருள்களுக்கான மன நிறைவை தரும்போது அந்த மறறோன்றிக்கு என்ன அவசியம் என்று பதில் அளித்துள்ளார்.... .

      சரி இவைதான் என்னை பொறுத்த வரையில் ஐன்ஸ்டீன் செய்த சிறு சிறு... தவறுகள்...(இது அவருக்கு சரி எனப்பட்டதால் தான் இவைகளை செய்திருக்கிறார்.....எனவே நான் இவைகளை  தவறுகள் என்று சொன்னால் அது சரியல்ல....சுற்றி சுற்றி நான் சொல்ல வருவது அவர் தவறு செய்து இருந்தாலும் அவர் செய்யவில்லை.....)

   இனி இந்த உலகமே அவர் செய்த தவறுகளாக எதைப்பர்க்கின்றன என்பதை பார்ப்போம்...

EINSTEIN BIG BLUNDER   ( for me WORLD BIG BLUNDER)

  இந்த தவறை ஐன்ஸ்டீன் தன வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறாக எல்லோர் முன்னும் ஒத்துக்கொண்டிருக்கிறார்.....

    அது..COSMOLOGICAL CONSTANT.  இது நடந்தது 1917 ஆம் ஆண்டில்.... அந்த வருடத்தில் தான் அவர் தனது SPACE TIME,GRAVITATION AND THE THEORY OF   RELATIVITY முடித்துவிட்ட நிலையில் இருந்தார். அதற்க்கு அடுத்தபடியாக அவர் செய்ய நினைத்தது இந்த UNIVERSE எப்படி இருக்கும் என்று தான் கண்டுபிடித்த RELATIVE THEORY மற்றும் SPACE TIME  மூலம் விளக்க்நினைத்தார்.

    அவரது அனுமானத்தின் படி இந்த UNIVERSE ஆனது நிலையானது அதாவது STATIC. ஆனால் அடுத்துவந்த காலங்களில் UNIVERSE ஆனது STATIC இல்லை அது EXPANDING ஆகக்கூடியது என்பதை கண்டுபிடித்து சொன்னார்கள்.

    இதை கேள்விப்பட்டவுடன் மனிதர் மிகவும் வேதனைப்பட்டு தான் எதோ ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக நினைத்து தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இது என சொல்லிவிட்டார்.

       இதை அப்போது இருந்த அறிவு ஜீவிகள் அப்படியே கவ்வி பிடித்து கொண்டார்கள்...
அவர் இப்படி சொன்னதற்கு காரணம் அவர் உருவாக்கிய RELATIVE THEORY  ஆனது UNIVERSE ஆனது குறிப்பிட்ட (TIME)நேரத்தில் அது விரிவடையும் என்பதை அனுமதிக்கவில்லை.

     எனவே அவரது அந்த THEORY க்காக அவர் உருவாக்கியதுதான் நிலையான் UNIVERSE. அல்லது cosmological constant.

     பின் வந்த EDWIN HUBBLE என்பவர் UNIVERSE ஆனது STATIC இல்லை அது EXPANDING ஆகக் கூடியது என்பதை கண்டு பிடித்து சொன்னார்.

     அவர் தொலைநோக்கியில் பார்க்கும் போது நட்சத்திரங்கள் பூமியைவிட்டு விலகி நகர்வதை கண்டார்.

 அவர் அந்த RED SHIFT நிகழ்வை 1931 ஆம் ஆண்டு ஆதாரத்துடன் விளக்கிய பின்னரே இந்த உலகமே நம்பியது....ஆம் நம் UNIVERSE EXPAND ஆகின்றது என்று.......

     (DOPPLER EFFECT என்ற ஒரு சமாச்சாரம் உள்ளது...அதன்படி ஒரு LIGHT ஆனது நம்மை விலகிச்சென்றால் அது போக போக நம் கண்ணுக்கு RED ஆகா தெரியும்(RED SHIFT)...அதே போல் அது நம்மை நோக்கி வந்தால் அது WHITE ஆக தெரியும்(WHITE SHIFT)....இந்த முறை பல்ல்வேறு விதங்களில் பயான்ப்டுத்தப்டுகின்றன.....FOR LIGHT,SOUND,TEMPERATURE..etc..)


     ஐன்ஸ்டீன் அனுமானம் தவறு என்றானதும் அவர் அதை ஏற்றுக்கொண்டதோடு மட்டும் இல்லாமல்...அதை தன் வாழ்வில் பெரிய தவறு என்று சொல்லியும்விட்டார்..

     ஐன்ஸ்டீன் செய்த மிகபெரிய தவறு அவர் இப்படி தான் செய்த ஒரு கணிப்பை தனது தவறாக ஒத்துக்கொன்டதே... இது என்னதான்  அவரை ஒரு நல்ல மனிதராக எடுத்துகாட்டினாலும்....

      அவரது அறிவையும்,அவரின் அறிவியலின் பங்களிப்பையும் பார்க்கும்போது அவர் ஒன்றும் அப்படி பெரிய தவறு செய்யவில்லை....அப்படியே தெரியாமல் செய்து இருந்ததாலும் என்ன? அது தவறே இல்லை....

      ஏனென்றால் அவர் ஒன்றும் இளம் சூடான தேங்காய் எண்ணெயில் புளியங்க்கொட்டையை வரட்டி தின்றால் உல் மூலம் வெளி மூலம் சேர்ந்து  சரியாகும் என்றோ...
     பாலோடு எலுமிச்சை சாரு சேர்த்து கொண்டால் முடி நன்றாக வளரும் என்று கண்டுபிடித்து சொல்லுபவர் இல்லை....

    அவரது அறிவுக்கு சான்றாக பல விசயங்கள் உள்ளன....நான் இங்கு ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்....

  அதாவது ஐன்ஸ்டீன் சூரியனுக்கு பின்னால் உள்ள நட்சத்திரங்கள் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக நமக்கு அதன் ஒளியானது வளைந்து நமக்கு தெரியும் என்பதை கற்பனை செய்து சொன்னார்....

    ஆனால் அப்போது இருந்தவர்கள் அது எப்படி முடியும் .. ஒளி யாவது வளைந்து கொடுப்பதாவது.....வாய்ப்பே இல்லை என சூடம அடித்து சத்தியம் செய்தார்கள்....

   ஒரு சிலர் மட்டும்தான் அதை எப்படி என தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினர்.

   அடுத்து வந்த ஒரு கிரகணத்தின் போது அதை சோதனை செய்து பார்த்து விடுவது என முடிவு எடுத்து இருந்தார்கள்...

   அந்த நாளும் வந்தது... உலகமே அன்றைய தினத்தில் பார்த்து வியந்தது ஐன்ஸ்டீன்  அறிவுத்திறனை பார்த்துதான்...

  அவர் சொன்னது போலவே சூரியனுக்கு பின்னால் உள்ள நட்சதிரங்கள்  ஈர்ப்பு விசையின் மூலம் நமக்கு  தெரிந்தது உறுதி செய்யப்பட்டது....

   ஐன்ஸ்டீன் அதை கணித சமன்பாடக வெளியிட்டபோது இன்னும் அனைவருக்கும் ஆச்சர்யம்.....

   இது அப்போது அறிவியல் உலகில் ஒரு பெரிய விசயமாக இருந்ததுதான் உண்மை....

  
    .NILES BOHR என்பவர் QUANTUM MECHANICS யை வெளியிட்ட போது..அது எப்படி என எதிர்த்து விவாதம் செய்தவர் ஐன்ஸ்டீன்.....இந்த இருவரின் விவாதம் அப்போது உலகின் தலைசிறந்த மிகப்பெரிய அறிவியல் சம்பந்தமான விவாதமாக இருந்தது....


(இதைப்பற்றி ..ஒரு கட்டுரை எழுத முடிவு செய்திருக்கிறேன்...GOD DOES NOT PLAY THE DICE WITH UNIVERS என்ற தலைப்பில்...)  




மேலே கொடுத்துள்ள படங்கள் ஒளி எப்படி ஏன் வளைந்து கொடுக்கின்றது என்பதை விளக்கும் படம்தான்

   சரி கதைக்கு வருவோம்...அவர் கண்டுபிடித்த அந்த COSMOLOGICAL CONSTANT ஏன் தவறு இல்லை என்பதை பார்ப்போம்..

  நமது பிரபஞ்சத்தில் 75% விரிந்து இருப்பது DARK ENERGY OR DARK MATTER . இப்போது உள்ள அறிவியலர்கள் அதை நிலையாக இருப்பது எங்கும் அசையாதது என கண்டு பிடித்து உள்ளனர்.

   அப்படி என்றால் இங்கு ஐன்ஸ்டீன் அனுமானம் சரியாகின்றது.அவர் FORMULA இங்கு உபோயிக்கலம் என சொல்லுகிறார்கள்.இதுபற்றி ஆரைய்சிகள் நடக்கின்றன...இது முழுவதும் நிருபிக்க பட்டால்......அடுத்து என்ன சொல்ல வருகிறேன் என  .......அது உங்களுக்கே தெரியும்..

   என்னை பொறுத்த வரையில் ஐன்ஸ்டீன் அவர்களின் ஒரு எழுத்துகூட தவறு இல்லை..அது எப்போதாவது சரி என்று நிருபிக்க படும் எனபது என சிறிய அறிவின் மூலம
நான் கண்டுகொண்டது....


(குறிப்பு: இங்கு நான சொன்ன மருந்துகளை யாராவது சாப்பிட்டு முயற்ச்சித்து பார்த்துவிட்டு ஒன்றும் ஆகவில்லை என.கையில் என் போடோவுடன் என்னை டெல்லியில் தேடவேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.)

ஒரு முடிவு....

     சத்தம் இல்லாமல் அழுவது என்பது அவளுக்கு நன்கு பழக்கம் ஆகியிருந்தது..... இன்றும் அவள் அதைத்தான் செய்து கொண்டிருந்தாள்...
அந்த திருமணதிற்கு சென்றுவந்ததுதான் பிரச்சினை....இந்த திருமணம் மட்டும் இல்லை..... எந்த ஒரு சுபகாரியத்திற்கு சென்று வந்தாலும் அவளுக்கு இதே நிலைதான்.....

   அதிகம் அழுது கண்கள் வீங்கி தலையை குணிந்து உட்கார்ந்து இருந்தவளின் அருகில் வந்து  கணவன் உட்கார்வதை பார்த்த அவள் சற்று நொறுங்கிய குரலில் ஏங்க நமக்கு மட்டும் இப்படி......என்று தான் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லும் முன் சத்தமாக அழுதேவிட்டாள்....

   நன்கு படித்தவள் ..எதையும் சிந்தித்து பிரித்துபர்த்து கொள்ளும் திறமை கொண்டவள்...இருந்தும் அந்த நிலையில் அவளுக்கு ஏதும் உதவவில்லை.....

  அவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியிருந்த்தன...நல்ல வசதியான வாழ்க்கை,நிறைவான குடும்பம்..அவளுக்கு குழந்தை இல்லை என்ற குறையை தவிர.

   அதன் மூலம் அவள் வாழ்க்கையில் பட்டிராத துன்பங்களை கடந்த மூன்று வருடங்களில் அனுபவித்து இருக்கிறாள்.

  முதல் வருடத்தில் குழந்தை இல்லை என்று இருவருமே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்கள்.சோதனையில் கணவனுக்குத்தான் சில குறைபாடுகள் இருப்பதாக தெரியவந்தது..அவளுக்கு இல்லை.

   இது அவர்களின் வீட்டிற்கு தெரியாது....அதற்க்கு காரணம் இவளே.....அவள் தன் கணவனிடம்.....அதான் கொஞ்ச நாள் மருந்து சாப்பிட்டால்...சரியாகி விடும் என்று மருத்துவரே சொல்லி இருக்கிறாரே..பின்ன என்ன எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என சொல்லி அவனை தடுத்து இருந்தாள்....
அதற்க்கு பரிகாரமாய்..இன்று அனுபவிக்கிறாள்...

   எந்த ஒரு சுபகரியங்களிலும் இவளை பார்ப்பவர்கள் எதோ வேற்றுகிரகவாசியை போலத்தான் பார்த்தார்கள்.

    பார்த்ததோடு இல்லாமல்..அவள் காது படும்படியே....இவள் ராசி இல்லாதவள்....அதான் கடவுள் இவளுக்கு இப்படி செய்துவிட்டான்.....இவள் போன இடம் ஏதும் விளங்காது..இன்னும் சில நல்ல வார்த்தைகளை தவறாமல் சொல்லி வந்தார்கள்...எதோ அவர்கள் பெற்ற பிள்ளைகள் இந்த நாட்டை ஆள்வது போல நினைத்துக்கொண்டு....

   அவளுக்கென இருக்கும் சில நலவிரும்பிகள்..நி கவலைப்படாதே...கடவுள் உன்னை கைவிடமாட்டான்...என்று சொன்னதோடு மட்டும் இல்லாமல் சில கடவுள்கள்,கோயில்கள்,,குளங்கள்,,பரிந்துரைத்து வைத்தார்கள்..

   அவளும் எதோ ஒரு நம்பிக்கையில்..அங்கெல்லாம் சென்று விழுந்து,மூழ்கி...உருண்டு..எல்லாம் பார்த்துவிட்டாள்....

   குறை அவளுக்கு இல்லை என்று தெரிந்தும் அனைத்தையும்செய்து இருந்தாள்...பரிகாரமாய் கடவுளிடம் இருந்து கிடைத்தது என்னமோ ஒன்றும் இல்லைதான்...இதில் இருந்து கடவுள் உண்மையா? இல்லையா? என்பது வேறு விசயமாக இருந்ததாலும்...அவளுக்கு உண்டான...தியாகம்,காதல்,போன்ற பெண்மையின் சிறப்புகள் இருந்தது உண்மை.

  அவள் என்னதான் வெளி நிகழ்ச்சிகளை தவிர்க்க நினைத்தாலும்...கட்டாயம் போகவேண்டிய நிகழ்ச்சிகளுக்கு போகும்போது....அங்கு கேட்க்கும்.... அவளின் மனதை கிழிக்கும்.....அந்த நல்லவர்களின் கூர்மையான கடுஞ்ச்சொறகள்....அவளின் படித்த புத்தி கூர்மையை மலுங்கச்செய்தது என்பது உண்மை.

   அவள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற எண்ணத்திற்கு அவளின் மனதை செல்ல விடாமல்..அவளை துக்கத்திலேயே கட்டி போட்டுவைத்து இருந்தது.....

   அது வெகுநாள் நீடிக்கவில்லை...அன்று இரவு அவ்ள கணவனிடம் கேட்டே விட்டாள். நாம் ஏன் செயற்கையான முறையில்...கருத்தரிப்பு செய்து குழந்தை பெற்றுகொள்ளக்கூடது? என்று.......அவளுக்கு நன்றாக தெரியும்..அவன் இதற்க்கு மறுப்பு தெரிவிக்க மாட்டன் என்று...

  தினமும் அவள் மனதளவில்..நொந்து புலம்புவது அவனுக்கே தாங்கமுடியவில்லை.......தவறு அவன் பக்கம் இருந்தும் தினம் தினம் அவள் தண்டனை அனுபவிப்பதற்கு ஒரு முற்றுபுள்ளி கிடைத்து இருக்கின்றது..எனபதை உணர்ந்த்தவன்..சரி என்று சொல்லிவிட்டான்.

  மருத்துவமனை சென்று செயற்கை கருத்தரிப்பு முறையை பற்றி வழிமுறைகள்,விளக்கங்களை கேட்டு தெரிந்துகொண்டுவந்தார்கள்.

  அதற்க்குபின் ஒருநாள் இது சம்பந்தமாக சில தகவல்களை தேடும் போதுதான்..அவளுக்கு அது கண்ணில் பட்டது.

அது...SYNTHETIC GENOME..

  அதை பற்றி விளக்கமாக படித்து தெரிந்துகொள்ள முயன்று நேரம் செலவிட்டு...கொஞ்சம் தெரிந்தும் கொண்டாள்...அவள் தெரிந்து கொண்டது...

   SYNTHETIC GENOME எனபது அமெரிக்காவை சேர்ந்த VENTER  என்பவர் MYCLOPLASMA GENITALIUM என்ற ஒரு பாக்டிரியாவின் DNA வை நீக்கி விட்டு அதற்க்கு பதிலாக செயற்கையாக (GENOME )வடிவமைக்கப்பட்ட ஒரு DNA வை அந்த செல்லில் பொருத்தினார்..அது சாதரண செல்களை போல வெற்றிகரமாக தன்னை பிரதி எடுத்துக்கொள்ள ஆரம்பித்தது. இதை அவள் படித்த போது கொஞ்சம் ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.

  அவளுக்குள் இது எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.......அவள் சில நாள்களுக்கு முன் படித்த ஒரு விஷயம் அவளுக்கு நினைவுவரும்வரை....

   அது ஒரு LONDON மருத்துவமனையில்...mtDNA பாதிப்பு உள்ள தாய் ஒருவள் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட..அது நிறைவேறியது....

  அந்த பாதிப்படைந்த தாயின் கருமுட்டையில் இருந்த பாதிப்படைந்த mtDNA வை நீக்கி விட்டு வேறொரு பெண்ணின் கருமுட்டையில் இருக்கும் நல்ல mtDNA வை பொறுத்தி..பிறக்கும் குழந்தையை mtDNA SYNDROME ள் இருந்து காப்பற்றி இருந்தார்கள்.

  அதுவரை mtDNA SYNDROME என்பது ஒரு குணப்படுத்த முடியாத GENETIC வியாதிகளில் ஒன்றாக இருந்துவந்தது...அதை இப்போது மாற்றி இருந்தததை அவள் படித்து இருந்தாள்.

  அன்று இரவு வெகு நாள்களுக்கு பிறகு கொஞ்சம் சந்தோஷம்,மன நிறைவோடு படுக்க சென்றாள்....

  காலையில் எழுந்து அந்த விஷயத்தை தன் கணவனிடம் சொன்னபோது அவன் சற்று அதிர்ந்து போனது என்னமோ உணமைதான்....

  இதை கட்டாயம் செய்யவேண்டுமா? என்று அவன் கேட்டான். இத்தனை நாள் நான் பட்ட கஷ்டத்திற்கு இது ஒன்றுதான் எனக்கு பெரிய ஆறுதல் என்றாள் அவள்.

   முந்தைய நாள் அவள் சில விசயங்களை தேடிக்கொண்டிருக்கும்போதுதான் அந்த விஷயம் கண்ணில் பட்டது...

அதாவது ஒரு GENETIC ஆராய்ச்சிக்கு ஆள் தேவை.

   இவள் செய்ய ஒத்துக்கொண்ட ஆரயச்சி..மனிதனின் கடவுள் நம்பிக்கையை அறவே அகற்றும் முயற்சி. அவள் முதலில் இதை நம்பவில்லை...அதற்க்கு பிறகு அங்கு கிடைத்த விளக்கங்களை பார்த்தபின்னர்தான் நம்பினாள்...

  அதாவது மனிதனின் ஆன்மிக எண்ணங்களுக்கு துணைபோகும் VMAT2 என்ற GENE ஐ கொஞ்சம் மாற்றி அமைப்பதன் மூலம் மனிதனுக்குள் ஆன்மிகம் சம்பந்த்தமான ,கடவுள் சம்பந்த்தமான எண்ணங்களையே முற்றிலுமாக நீக்கிவிட முயற்சிப்பது.

  இதற்காக அவர்கள் VENTER ன் SYNTHETIC GENOME முறையை உபோயோகித்து அந்த VMAT2  GENE ல் (அது உள்ள DNA வில்)  செயற்கையான GENOME அமைப்பதன் மூலம் இதை செய்யமுடியும் என நம்பினார்கள்.

  இதை mtDNA SYNDROME மாற்றத்தை செய்தது போல கருமுட்டையிலியே செய்து அதை வளர்க்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது கருமுட்டையில் உள்ள அந்த GENE களின் தன்மையை மாற்றி அதை வளரவைப்பது.

  இது அதிகம் சிக்கலான செலவான விசயம்தான்..இருந்தும் அவளுக்குள் இருந்த சமுகத்தின்,கடவுளின் மீது இருந்த  கோபம்தான் அவளை இதை செய்ய வைத்தது.

  அவளைபொறுத்தவரையில் இதை செய்வதன் மூலம் அவளை குறை கூரிய சமூகத்தையும்,கடவுளையும் பழிவாங்குவதாக நினைதிருந்த்தாள் என்பது தான் உண்மை.

  சில நாட்களில் மருத்துவர்கள் VMAT2 GENE ல் செயற்கையான GENOME ஐ மாற்றி அமைத்து அந்த கருவை அவளுக்குள் வளரச்செய்தனர்.
  கருவின் வளர்ச்சியை கண்காணிக்கும் பொருட்டு அவள் பத்து மாதத்தில் பெரும்பாலான் நாட்களை மருத்துவ மனையிலே கழிக்க நேர்ந்தது.

  மருத்துவர்களின் வெற்றியாக கடவுள் என்றாள் யார் என்று கேட்ககூடிய ஒரு குழந்தை நல்லவிதமாக பிறந்ததது. அவளின் ஆசைப்படியே பெண்குழந்தை. கருமுட்டையிலே பிறக்கவேண்டியது.. ஆனா?பெண்ணா என்பதை அமைத்துவிட்டதால்  அந்த ஆர்வம இல்லாமல்..பிறந்த குழந்தை எப்படி இருக்கின்றது என்பதில் அனைவரின் கவனமும் இருந்தது.

 சில மாத தொடர் பரிசோதனைக்கு பின் அவளை வீடு செல்ல அனுமதித்தனர். எந்த வித பிரச்சினை என்றாலும் உட்டன்டியாக வந்து சோதித்து பார்த்துகொள்ளும்படி சொல்லி அனுப்பி இருந்ததார்கள்.

  குழந்தைக்கு கடவுளின் நம்பிக்கை இல்லாமல் இருந்ததுதான் காரணமோ தெரிய வில்லை...பிள்ளை நல்லவிதமாக வளர்ந்தது..
வளர்க்கப்பட்டது...மிகுந்த போராட்டத்திற்கு பிறகு...பெற்ற குழந்தை.....என்பதால்....

    இப்போதெல்லாம் வீட்டை விட்டு கடைக்கு செல்வதாக இருந்ததாலும் அவ்ள அந்த குழந்தையை தூக்கி கொண்டே சென்றாள்.....
   அப்படியே அவள் தாய்பாசத்தில் அந்த குழந்தை தனது நான்கு வயதினை முடித்து இருந்தது.

 அவள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தாள்...அவளை மிகவும் புகழ்ந்தவர்களின வாய் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அந்த குழந்தை இருந்தததால் அவர்கள் வாய் திறக்கவில்லை......இப்போது அவர்களுக்கு இவளைபோல வேறொரு பெண் கிடைத்து இருந்திருப்பாள் ...அவர்களின் மேன்மையான விமர்சனங்களை சொல்லுவதற்கு........அவ்ளிடதிலும் இவளுக்கு ராசியில்லை...இவள் போன இடம்..........இப்படி தொடங்குவார்கள்..இது அவர்களின் தவிர்க்க முடியாத வேலைகளில் ஒன்று....

   இவளது நலம் விரும்பிகள் இவளை கையில் குழந்தையுடன் பார்த்தவுடன்...நான் அன்றைக்கே சொன்னேன்..!!!!.அந்த கடவுள் உன்னை கைவிட மாட்டார் என்று!!!!!!..பார்த்தாயா..உன்னை போலவே ஒரு அழகான பெண் ......என்று  தொடர்ந்து அவர்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பெருமை சேர்த்துக்கொள்ள தொடங்கி இருந்தார்கள்...இவள் அதை கேட்க்கும் போது.. தன் மனதிற்க்குள் சிரித்துக் கொண்டாள்...

   வீட்டிற்கு வரும்போது அந்த குழந்தை அவளிடம் கேட்டது...அம்மா அங்கு அவர்கள் கடவுள்.... கடவுள் என்று கேட்டார்களே அப்படின்னா என்னம்மா? ஏன் அவர் உனக்கு உதவி செய்ய வேண்டும் எனக்கேட்டாள் அந்த குழந்தை....

  அதற்க்கு இவள் அது ஒன்னும் இல்லை.....மனிதர்கள் பொதுவாக எது மறைக்கப்பட்டு இருக்கின்றதோ அல்லது எந்த ஒன்று இல்லையோ அதையே அதிக ஆர்வமாக பின்பற்றுவார்கள்..அதில் என்ன இருக்கின்றது என  பார்ப்பதற்க்கு.....கடைசியில்தான் தெரியவரும் அதில் எந்த் ஒரு பயனும் இல்லையென்று....அப்படி ஒரு விசயம்தான் கடவுள்...இது ஒரு பெரிய கதை....இதெல்லாம் இப்ப நான் உனக்கு சொன்னால் புரியாது...நி வளர்ந்த பிறகு அது உனக்கு தானாகவே... புரியும்...என்றாள்...

அதற்க்கு பிறகு அந்த குழந்தை அந்த கேள்வியை அம்மாவிடம் கேட்கவே இல்லை....அவளிடத்தில் கடவுளும் இல்லை.... அவள புரிந்து இருந்தாள் என்பதைவிட...அவள் கடவுளை புரிய வேண்டிய அவசியம் அவளுக்கு இருக்கவில்லை....



குறிப்பு:

SYNTHETIC GENOME என்ற ஒன்றை VENTER என்பவர் தனது ஆராய்ச்சி கூடத்தில் செய்து நிருபித்து உள்ளார்.

LONDON ல் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு முன்னேற்றமாக mtDNA வை மாற்றி பிறக்கும் குழந்தையை mtDNA SYNDROME ல் இருந்து காப்பாற்ற முடியும் என்பதை நிருபித்து இருக்கிறார்கள்.

மற்றபடி நான் சொன்ன அந்த VMAT2 GENE ல் மற்றம் என்பது என் கற்பனையே....என்னைபொறுத்தவரையில் இந்த மதிரியான விசயம் நடக்க வெகு காலம் இல்லை என்பது தான் உண்மை...ஒருவேளை நான் சொன்ன முறையிலேயே நடக்க வாய்ப்பு இருக்கின்றது.

ஆனால் நம் கடவுள் நம்பிக்கை சார்ந்த விசயங்களுக்கு காரணமாய் இருப்பது VMAT2 என்ற GENE தானே தவிர கடவுள் இல்லை.. .....
  


நீங்களே சொல்லுங்கள்......

     நீங்கள் தான்  சொல்லணும் ..உங்களைத்தான் ஒரு உதவியாளராக  நினைத்து என் பிரச்சினையை சொல்லுகிறேன்....
நான் ஒரு தவறு செய்து விட்டேன் .......இல்லை....இல்லை இதோடு சேர்த்து இரண்டு தவறுகள் ...முதல் தவறு கணேஷ் என்பவன் சுஜாதாவை உலகமாக நினைத்து ..கண்டதை படித்து.....ஒரு வலைப்பூ உருவாக்கி அதில் L = ETO என்ற தலைப்பில் ஒரு பதிவை போட்டு இருந்தான் அதை நான் முதலிலேயே பார்த்து படித்து இருந்தால் இந்த இரண்டாவது தவறு நடந்து இருக்காது.... என்ன செய்ய என் கெட்ட நேரம்...அதை படித்தது இரண்டாவது தவறை செய்த பின்தான்....

    அப்படி என்ன நீ பெரிய இரண்டாவது தவறு செய்து விட்டாய்? என்று நீங்கள் கேட்டால் அந்த கொடுமையை சொல்லுகிறேன் .....

   அவளுக்கும் எனக்கும் கொஞ்சம் இடைவெளிதான் இருந்தது....அந்த தூரத்தில் நான் அவளை பின் தொடர்ந்தேன்...

    அவள் ஒரு முறை என்ன பின்னால் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் அவள் வழியில் நடந்ததாள்....சற்று தூரம் சென்ற பிறகு மீண்டும் திரும்பி பார்த்தவள் அப்படியே நின்று என்னையே பார்த்து கொண்டிருந்தாள்....
அதை பார்த்தவுடன் என் நடையின் வேகம் குறைந்தது.....நான் சற்று தயங்கி தயங்கி அவளின் அருகே செல்ல....உனக்கு என்ன வேண்டும் நானும் பார்க்கிறேன் நீ தினமும் என் பின்ன்னாடியே வருகிறாய்.....என்று கோபமாய் கேட்டாள்.

   எனக்கு சற்று பேச பயமாய் இருந்தது...நாக்கு உளறியது..என்ன சொல்ல்வதென்று என்னக்கு அப்போது தெரியவில்லை..அதனால் ...சும்மாதான் என்று மட்டும் சொல்லி விட்டு அவளை பிரிந்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன்...

   அவள் சற்று நேரம் அதே இடத்தில நின்று விட்டு பின் அவளும் என்ன பின்னாடியே நடந்து வர ஆரம்பித்தாள்.

  மற்றொரு நாளும் அப்படியே நான் பின் தொடர்ந்தேன்......சற்று தூராம் சென்றவுடன் அவள் திரும்பி பார்த்தாள்..நான் வருவதை பார்த்தவுடன்...ஒரே இடத்தில நின்று என்னையே முறைத்து பார்த்தாள்....

   நான் ஏதும் அவளை கண்டு கொள்ளாதது  போல அவளை விலகி நடந்தேன்...

   இப்படியே பல நாட்கள் நான் அவளை பின் தொடர்வதும்...அவள் என்னை பார்த்து கண்டிப்பதும் தொடர்ந்த்தது...

   நிங்கள் கேட்ட்கலாம் அவளை நீ ஏன் காரணம் இல்லாமல் பின் தொடர்ந்தாய் என்று? காரணம் இல்லாமல் இல்லை ...அதற்க்கு ஒரு பெரிய காரணம் இருக்கின்றது.

  அவள் வேலை பார்ப்பது நான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு அருகில் உள்ள ஒரு கம்பெநியில்தான் அவளுக்கும் வேலை.

 தினமும் காலை வரும்போதும் போகும்போது நாங்கள் உபோயோகிப்பது அந்த ஒரே சாலையைத்தான்...

  நான் அவளை தினமும் காலை மாலை பார்ப்பதோடு சரி அதற்க்கு பிறகு அவளை வேறு எங்கும் பார்க்கமாட்டேன்.....

..அந்த இருமுறை பார்த்த பொழுதே அவளால் என் மனதில் காதல் எனும் பட்டாம் பூசசி பறக்க ஆரம்பித்தது.இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் நான் ஏன் அவளை பின்தொடர்ந்தேன் என்று....

   ஆனால் ஒன்று இதுவரை அவள் பின்தொடர்ந்ததறக்கு அவளிடத்தில் இருந்து எதிர்வினையே எனக்கு கிடைத்ததே தவிர நன்மை ஒன்றும் இல்லை....

  இருந்தாலும் என் விடாமுயற்சிக்கு ஒருநாள் பயன் கிடைத்தது.....பாருங்க .....யார் யாரோ எதில் எல்லாம் விடாமுயற்சி செய்கிறார்கள் நான் என்னடா என்றால் இதில் விடாமுயற்சி செய்து இருக்கிறேன்.....

  என்ன இருந்தாலும் அந்த நாளை என்னால் மறக்க முடியாது .......

  அன்றும் அப்படியே நான் அவளின் பின்னால் செல்ல...அந்த சாலை கொஞ்சம் வெறிச்சோடி இருந்தது.... அன்று கொஞ்சம் அதிக இடைவெளி எங்களுக்குள் இருந்தது...எல்லாம் என் பயம்தான்....

     அவள் எப்போதும் போல நடந்து கொண்டிருந்த்தவள்..திடிரென்று..உட்கார்வது போல் உட்கார்ந்து அப்படியே கிழே சரிந்தாள்....
 
     நான் சற்று வேகமாக ஓடிப்போய் என்னவென்று அருகில் சென்று பார்த்தால் அவள் மயங்கி இருக்கிறாள்....அவள் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொஞ்சம் அவள் மூஞ்கியில் தெளித்த இரண்டு நிமிடத்தில் அவள் கண்களை திறந்தாள்....

    சற்று வேகமாக எழுந்து தனக்கு என்ன ஆனது என்பதை உணர்ந்து கொண்டாள்....என் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை பிடிங்கி கொண்டு வேகமாக நடக்க ஆரப்பித்தாள்....

    நிங்கள் ஒன்றும் அவள் இந்த கதைக்ககத்தான் மயங்கி விழுந்ததாள் என்று நினைக்க வேண்டாம்....அன்று வெள்ளிக்கிழமை அவள் அன்று முழு விரதமாம்...அதான் விழுந்து இருக்கிறாள்..இது அவளுடன் நான் நன்றாக பழகிய பின்னர்தான் ஒருமுறை கேட்டு தெரிந்துகொண்டேன்.....

  அடுத்த நாள் நான் வரும்போது அவளேதான் பேசினாள்...அவள் என்ன சொல்லி இருப்பாள் என்று நீங்களே சொல்ல முடியும்......

     அன்று நான் அவளுக்கு செய்த உதவிக்கு நன்றி சொன்னாள்...நானும் கொஞ்சம் பல்லை இழித்துவைத்தேன்...அதோடு மட்டும் இல்லாமல் என்ன வேலை செய்கிறாய்....எங்கிருக்கிறாய்....போன்ற நாட்டுக்கு முக்கியமான கேள்விகளை நாங்கள் இருவருமே கேட்டுக்கொண்டோம்.

அடுத்து வந்த நாள்களில் நான் முதலில் வந்தாலும் சரி இல்லை அவள் முதலில் வந்தாலும் சரி இருவரும் ஒருவருக்காக காத்திருந்து நாங்கள் போக வேண்டிய இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.....இங்குதான் ஆரம்பித்தது வினை...


அவளது நடத்தையிலும் சரி ஏன் நடத்தையிலும் சரி கொஞ்சம் மற்றம் ஏற்பட்டது...ஒருநாள் அவளை பார்க்க வில்லை என்றாலும் கூட எதோ இந்த உலகமே இருண்டு போய்விட்டதுபோல் எனக்கு இருந்தது...

அதிகமாக கனவில் வந்தாள்...தூக்கம் கெடுத்தாள்....எதோ என் மனதில் இனம் புரியாத மற்றம் மற்றும் வலியினை கொடுத்தாள்....

அவளுக்கும் அப்படித்தான் இருந்து இருக்கும் என நான் நினைத்ததுதான் மிகப்பெரிய தவறு....

இருந்தும் அவள் பழ்கும்போது அவள் மனதில் என்ன இருக்கின்றது என்பதை கொஞ்சம் கூட கணிக்க முடியவில்லை....

இருந்தும் அவள் நன்றாக பழகினாள்.... முண்பைவிட அதிகம் கனவில் வந்து தொல்லைகொடுத்தாள்...காதல் கவிதை எழுத வைத்தாள்...

எதோ எனக்குள் நான் ஒரு புதிய மனிதனாக ஆகியது போல உணர வைத்தாள்....இது எல்ல்லாம் ஒரு மண்ணும் இல்லை என்பது பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது...


என்னுள் இருந்த இந்த மாற்றங்களை வைத்து இது காதல் என்று நினைத்து இருந்ததால் நிங்கள் அறிவாளி.... இதற்க்க்காகத்தனே அவள் பின்னாடி நான் சுற்றியது....

அதை சோதிக்கத்தான்...ஒரு நாள் அவளிடம் கேட்டேன்...காதலைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்று?

அதற்க்கு அவள் காதல் புனிதமானது...தெயவிகமானது....இரண்டு உடல் ஒரு மணம் கொண்டு வாழ  முடியும் என்றால் அது காதலில் மட்டும்தான்..இன்னும் அந்த நாசமாய் போன காதலைப்பற்றி நிறையா சொன்னால் அந்த கருமம் எல்லாம் எனக்கு இப்போது நினைவுக்கு வரமாட்டேங்கின்றது....

அன்று இரவு என் மனதில் ஆயிரம் பட்டம்புச்சிகள் இங்கும் அங்கும் பறந்து எனது தூகக்கத்தை முற்றிலும் கெடுத்து தொலைத்தன.....

அன்றுதான் இந்த முடிவையும் எடுத்தேன்..அது அவளிடம் என் காதலை சொல்ல வேண்டும் என்று....

அன்று மாலை இருவரும் நடந்து வரும்போது நான் தான் ஆரம்பித்தேன்....எப்படி ஆரம்பிப்பது..எப்படி முடிப்பது என்று தெரியாமல் எனக்கு உன்னை பார்க்கும்போது என்னுள் எதோ ஒரு மாற்றம் ஏற்படுகின்றது...எனக்கு உன்னை ரெம்ப பிடித்து இருக்கின்றது...என்று சிறு பிள்ளை மாதிரி உளறியப்டியே எப்படியோ சொல்லி முடித்தேன்....

இதற்க்கு அவளின் பதிலை எதிர்பாத்து அவள முகத்தை பார்த்தேன்...ஆனால் அவளோ என்னை முறைத்து பார்த்துவிட்டு என்னைவிட வேகமாக நடந்து சென்று விட்டாள்....

எனக்கு அது பெரிய ஏமாற்றமாக இருந்தது ..இருந்தாலும் மனதில் ஒரு நம்பிக்கை இருந்தது....அவள் எப்படியும் ஒத்துக்கொண்டு விடுவாள்..என்று..ஆனால் எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே .......

மறுநாள் மாலை அவள் எனக்காக காத்திருக்க வில்லை... அவள் சற்று தூரத்தில் சென்று கொண்டிருந்தாள்....நான் வேகமாக சென்று அவளிடத்தில் என்ன நேற்று ஒரு பதிலும் சொல்லாமல் போய்விட்டாய்? என்றேன்....

அதற்க்கு அவள் இனிமேல் என்னை பின்தொடரதே....உன்னிடம் பேச எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு அவள் வழியில் நடக்க ஆரம்பித்தாள்......


 இப்போதுதான் உங்களின் நேரம் ஆரம்பிக்கின்றது...இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று நிங்களே சொல்லுங்கள்...

ஏனென்றால் நான் படித்த காதல் செய்வது எப்படி என்ற புத்தகத்தில் இதற்கு அல்லது இந்த மாதிரி ஒரு பெண் சொல்லி விட்டால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அதில் கொடுக்க வில்லை...

இதுதான் ஏன் பிரச்சினை...அந்த புத்தகம் படித்ததற்காக..அவளை காதலித்து பார்க்க பொய் அவள் அதை மறுக்க ...உணமையில் பாதிப்பு என்னவோ எனக்குத்தான்....



அந்த புத்தகத்தில் காதலிக்க மட்டும்தாம் சொல்லி கொடுத்து இருந்தார்கள்....அதற்கு பிறகு அவள் கனவில் வந்து தொல்லை கொடுத்தால் அதை எப்படி சாமளிப்பது....இல்லை அவள் காதலை மறுத்தால் என்ன செய்வது என்று அதில் சொல்ல வில்லை....

இந்த புத்தகத்தை முதலில் படிக்கும் முன் அந்த கணேஷ் எழுதிய L = ETO  என்ற பதிவை படித்து இருந்தால் இதை முயன்று இருக்க மாட்டேன்...

எப்படியோ இதில் மட்டிவிட்டேன்...இன்னும் அவள் என் மனதை அதிகம் துன்பபடுத்துகிறாள்....கனவில் வருகிறாள்..ஆனால் நிஜத்தில் என்ன விலகி ஓடுகிறாள் ..இதற்க்கு பதில் அந்த புத்தகத்தில் இல்லை ..



சொல்லுங்கள் நான் அடுத்து என்ன செய்ய?