PARALLEL UNIVERSE..... BEFORE BIG BANG...

      எல்லாம் அவன் செயல்..அவன் இன்றி ஒரு அனுவும் அசையாதுபோன்வற்றின் மிது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் ...இதை படிப்பதினால் .... சிறு நன்மையும் இல்லை என்பது என் கருத்து..... அப்படியே இதை படித்த பின் தன் கருத்தை மாற்றிக்கொண்டால் நான் கொஞ்சம் சந்தோசப்படுவேன்......

  இதுவரை நாம் நினைத்து கொண்டிருப்பது போல big bang எனும் வெடிப்பு நடைபெறுவதற்கு முன் ஒன்றுமே இல்லாமல் இந்த big bang தான் universe ண் தொடக்கம் என்று நினைத்தால் . அது இல்லை.... சரி அது எப்படி என்று பார்ப்போம்.....

   big bang ஒரு வெடிப்பில் உருவானதாக கூறி இருந்தேன் (எங்கே என்பவர்கள் இங்கே போகவும்...பின் உங்களுக்கு எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்) சிலருக்கு அந்த வெடிப்பே எவ்வாறு? உண்டானது என்ற ஒரு கேள்வி எழுந்திருக்க வேண்டும் இப்போது அதைப்பார்க்கலம்......

நான் இதை சொல்லும் முன் இதனை விரிவு படுத்தும்  சில அடிப்படை theory களை சற்று மேலோட்டமாக பார்ப்போம்.

  இப்போது big bang கிற்கு முன்னால் இது நடந்திருக்கலாம் என கண்டுபிடித்து சொல்ல காரணமாய் இருப்பது M theory எனப்படும் ஒன்றாகும். இது இன்னும் முழுவதும் முடியடையவில்லை.

    இந்த  M theory  என்பது பல string theory கலை கோர்த்து உருவாக்கப்பட்டது


 string theory   இது அனுத்துகல்கலின இயக்கத்தை விளக்க முற்படுவது. அதை ஒரு சிறு படத்துடன் விளக்கினால் எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்....
.

     இதில் மேல் இருந்து......முதலில் ஒரு (apple) திடப்பொருள்...அடுத்து....உள்ளே சென்றால் atoms... அதற்கும் உள்ளே சென்றால்.... particle...  அதற்கும் உள்ளே சென்றால் quarks.... அல்லது elementary particle.... அதை உற்று நோக்கினால் அது ஒரு string போல இருக்கும் ...  இதன் நீளம் .. Planck length எனப்படும்..அது  
10 க்கு முன்னால் 33 ஜீரோ செர்துகொள்ளுங்கள் அத்தனை cm அவ்வளவுதான்... அவர்கள் கூற வருவது.. particles build up of string form.....

  இதில் பலவகை உண்டு. அனுத துகள்களின் (elementary particle) இயக்கத்தை(உந்தம்) பல்வேறு நிலைகளில் விளக்க முற்படும் போது ஒவ்வொரு முறைக்கும் ஒரு விதமான theory கள் பயன்படுகின்றன.

 மொத்தம் இதில் 6 வகையான string theory கள் உள்ளன. இவற்றையும் ஒன்றாக இணைத்து இருக்கிறார்கள். அதாவது இதனை இணைக்க coupling constant என்ற முறையை உபோயோகித்து இருக்கிறார்கள்.

  இதனை நான் விளக்கி என்னோடு சேர்ந்து உங்களையும் குழப்ப விரும்பவில்லை. பல வாரங்கள் என் தலையை பிய்த்து கொஞ்சம் கொஞ்சம்  நான் புரிந்து வைத்து இருப்பதையும் இப்போது நான் மறக்க விரும்பவில்லை.

   இல்லை எனக்கு கண்டிப்பாக இதைப்பற்றி தெரிய வேண்டும் என்பவர்கள் இங்கு செல்லலாம். string theory  ன் விளக்கம்... இதை படிக்க முற்பட்டு சட்டை கிழிந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல....

  இவ்வாறு coupling constant ண் முலம இணைத்த theory யைத்தான் M  theory  என்கிறார்கள். இது இன்னும் முழுவதுமாக விரிவாக்கபடவில்லை.பல்வேறு சொதானைகள் இதன் மீது நடந்து கொண்டு இருக்கின்றன.


  இந்த M theory தான் M theory cosmology முலம நம் universe ன்  தொடக்கத்தை விளக்க முற்படுகின்றது. அது எப்படி என்று பார்க்கலாம்.

 M theory ண் படி universe  என்பது தட்டையானது அதாவது parallel universe. (அது எப்படி universe  ஏன் தட்டையாகத்தான் இருக்க வேண்டுமா என் வேறு வடிவத்தில் இருக்கா கூடாதா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதில்...... இதோ பார்க்கலாம்...

     universe ன் அமைப்பு பல்வேறு வடிவங்களில் கூறப்பட்டாலும் இப்போது நம்பபடுவது அது தட்டையாக இருக்கும் என்பதுதான். அதாவது ஒரு காகிதம் போல.

  இதை விவரிக்கும் போது முக்கியமாக மூன்று காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்ஒன்று  (மேலிருந்து)

 density ஆனது universe ன் critical density யை விட அதிகமாக இருந்தால் அது கோளமாக இருக்கும்.

 ஏனென்றால்  அதன் gravitational effect ன் காரணமாக அது தன்னை தானே சுருக்கி கொள்ளும்

இரண்டு

  density ஆனது universe ன் critical density யை விட குறைவாக இருந்தால் அதன் curvature ஆனது saddle (ஆசனம்) போல் இருக்கும். (இதற்க்கு மிக வாய்ப்பு குறைவு எனவே இதற்க்கு பதிலாக கிழே உள்ள மாதிரி இருக்கும்)

மூன்று
  density ஆனது universe ன் critical density யை விட குறைவாக இருந்தால் அது தட்டையாக இருக்கும். density குறைவாக இருப்பதால் . Gravitational effect ஆனது வளைந்து கொடுக்க விடுவதில்லை.

  இந்த முறைதான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளபட்ட முறையாகும். M THEORY யும் இதைத்தான் கூறுகின்றது.
    ஒரு universe ண் தொடக்கம் இவ்வாறு  இருக்கும் எனக் விளக்குவது இப்படிதான்...அதாவது ஏற்கனவே இருக்கும் இரண்டு தனித்தனியான  parallel universe கள் ஒன்றோடு ஒன்று மோதி ஒரு புதிய universe ஆனது உருவாகியிருக்கும் என்று கூறுகிறார்கள்

.


       மேலே உள்ள பாடத்தில் தெரிவது இரண்டு parallel universe கள் ஒன்றோடு ஒன்று எப்படி மோதுகின்றது என்று காட்டப்பட்டுள்ளது.... இதில் இடது புறம ஒரு parallel universe மற்றும் வலது புறம ஒரு parallel universe.


   இந்த இடத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் இதுவரை நாம் universe  என்று பயன்படித்திகொண்டு இருந்தோம் அது ஒரு மிகப்பெரிய ஒரே ஒரு universe ஐ மட்டுமே குறிக்கும் ஆனால் M theory ண் படி பார்க்கும் போது ஒன்றுக்கு மேற்ப்பட்ட universe கள் இருக்க வேண்டும் அப்படி இருக்கும்போது அதை multiverse என்று அழைக்கிறார்கள். multiverse என்றால் பல universe இருப்பதாக கொள்ளாலம்.

  அது எப்படி சும்மா இருக்கும் இரண்டு universe கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அதற்க்கு வேறோதுவும் வேலை இல்லையா என்ன? என்று கேட்பவர்களுக்கு பதில்....

   Hubble  என்பவர் முதன் முதலாக universe ஆனது விரிவடைகின்றது அதாவது universe expanding என்பதை கண்டு பிடித்து சொன்னார்.

அது அப்படி விரிவடைந்து கொண்டே சென்றால் அது ஒரு இடத்தில collapse ஆகும் அதுவே big crunch...  universe ண் முடிவு....அல்லது ஒரு புதிய universe ண் தொடக்கம் m theory ன் படி.....
     மேலும் universe expand ஆகின்றது என்றால் அதில் உள்ள அனைத்தும் சேர்ந்துதான் expand ஆகின்றது... atoms..galaxy ...போன்றவைகள்... நிங்களும் expand ஆகிக் கொண்டு இருக்கிறிர்கள்  .. அனால் அதற்க்கு வேறு காரணம்... அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.......


     சரி universe expand எப்படி ஆகின்றது என்ற கேள்விக்கு விடையை நீங்கள் இங்கு எதிர்பார்த்தால் நான் உங்களிடம் சரணகதி அடைவதைத்தவிர வேறொன்றும் என்னால் செய்ய முடியாது.....


     ஏனென்றால் நமது universe ல் 70% நிரம்பி இருப்பது dark energy. இதுதான் நம் universe ண் பல்வேறு செயகளுக்கு ஆதராமாக இருப்பது... இதைப்பற்றி இதுவரை விளக்கப்படவில்லை என்பதே உண்மை... தேடிக்கொண்டிருக்கிறார்கள்.....


    அதற்குள் சிலர் இதுதான் கடவுள் .. சாத்தான் என்று பெயர்  சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... அவர்கள் எண்ணம ஒரு நாள் தோல்வி பெறுவது உண்மை... 


      எப்படியோ.... இந்த dark energy வழிநடத்தி universe expand ஆகின்றது...அப்படியே விரிவடைந்து Hubble சொன்னது போல் ஒரு நேரத்தில் அது big crunch ல் முடிவடையும்.... 

    இது ஒன்றும் உடனே நடக்காது அதற்க்கு பல ஆயிரம் வருடங்கள் உள்ளன எனவே அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என நினைக்கிறேன்....

 


  

  
.

1 comments:

செல்வா said...

நீங்க என்னதான் சொல்லுங்க . எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கு ..ஆனா அதே சமயம் அறிவியலையும் நம்புறேன் .. எல்லா விசயங்களையும் அறிவியல் முறைப்படி யோசிப்பேன்..