சில விசயங்கள் - 11


   ஒருவழியாக நீண்ட நாள்களாக இருந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வை கண்டுபிடித்துவிட்டார்கள். பொதுவாக விண்வெளியில் இருந்து வெளிப்படும் Unidentified Infrared Emission features சொல்லப்படும் ஒருவித அலைகளுக்கு காரணம் polycyclic aromatic hydrocarbon (PAH) molecules தான் காரணம் என்று தெரிந்து இருந்தாலும் அது எப்படி உருவாக்கபடுகிறது அல்லது உருவாகிறது  என்பது தெரியாமலே இருந்தது.

   அதுவும் சில தனிமங்களான  carbon, hydrogen இவைகளே இந்த மாதிரியான தகவலை உருவாக்கலாம் என நம்பப்பட்டது. இப்போது University of Hong Kong சேர்ந்தவர்கள் செய்த ஆராய்ச்சியில் இந்த அடிப்படை துகள்கலான பொருள்கள் மட்டுமில்லாமல் மிகவும் சிக்கலான கூட்டமைப்பு கொண்ட organic பொருள்களும் உருவாவதாகவும், அது எங்கு எப்படி உருவாகிறது என்கிறதையும் கண்டுபிடித்து உள்ளனர்.


   அவர்களின் கண்டுபிடிப்பின்படி இந்த organic பொருள்கள் நட்சத்திரங்கள் உருவாகும் நிலைக்கு முந்தைய நிலையான nebula வில் உருவாக்கபடுவதாக சொல்கிறார்கள். அதுவும் இதுக்கு முந்தைய நிலையில் இருக்கும் தூசு படலத்தில் இந்த மூலக்கூறுகள் இல்லாமல் அங்கு அழுத்தம் அதிகருக்கும்போது நடக்கப்படும் வேதிவினையில் இந்த பொருள்கள் உருவாவதாக கணக்கிட்டுள்ளனர்.

    அதோடு இது உருவாகும் நட்சத்திரத்தின் அளவைபொறுத்து அமைவாதாகவும், நிறை அதிகமுள்ள நட்சத்திரமே இந்த மூலக்கூறுகளை உருவாக்குவதாகவும் சிறிய அளவிலானவை அவ்வாறு செய்வதில்லை என்பது இவர்களின் ஆராய்ச்சி முடிவு.

    இதுவரைக்கும் நட்சத்திரங்கள் வெடிப்பில் பல organic பொருள்கள் தூக்கி எறியப்படும் என இருந்தது. இப்போது கூடவே அதன் பிறப்பும் இதை உருவாக்கிறது என்பதும் உறுதியாகிவிட்டது. எப்படியோ இதன்மூலம் ஒன்று உறுதியாக நம்ப தோன்றுகிறது அது விண்வெளியில் சுற்றி திரியும் தூசுகளில் இருந்துதான் பூமிக்கு முதல் செல் உருவாகியிருக்ககூடும என்ற கருத்து. மேலே சொன்ன கண்டுபிடிப்பின் படி பார்த்தால் அந்தமாதிரியான organic தூசுகள் பூமியில் விழுந்து சூழ்நிலை சரியாக அமைந்துவிட ஒரு செல்லாக மாறி இப்போது இதை எழுதிகொண்டு இருக்கலாம் போல.

                                                *****************
   அடுத்த விசயம்  2005 YU55 னும் asteroid பூமியை மிகவும் குறைந்த தூரமான 325,000  கிமீ தொலைவில் நவம்பர் 8 ஆம் தேதி கடக்கிறது. இது நமது பூமியில் இருந்து நிலவு இருக்கும் தூரத்தைவிட குறைவு. இது 2005 ஆம் ஆண்டு Robert McMillan என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு சொன்னது. நீண்ட பயணத்திற்கு பிறகு அது நம்மை கடக்கிறது. படத்தை பெரிதாக்கி பாருங்கள் அதன் மீது கிளிக்குங்கள்.
.


    இது பூமியோடு மோதுவதுக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்பதை உறுதியாக கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் நிம்மதி இப்போதைக்கு. ஏனென்றால் இது அளவில் கொஞ்சம் பெரிது என்கிறார்கள். இதுக்கு அடுத்து இன்னொரு asteroid   2001 WN5 என்ற ஒன்று 2028 ஆம் ஆண்டு நம்மை கடக்கபோகிறது. இதைவிட இப்போது கடப்பது அளவில் மிகப்பெரியது. 

                       ****************


    அதிகபட்சமாக இருபதுநிமிட நண்பர்களுடான அறிவியல் விவாதத்தின் முடிவில் கண்டிப்பாக அங்கு கடவுள் வந்து இருப்பார். நான் எவ்வளவுதான் அந்த பக்கம் என்பேச்சை கொண்டுபோகதவாறு பார்த்து கொண்டாலும் அவர்கள் விடுவதில்லை. அவர்கள் கேட்கும் கேள்வி “இப்ப என்ன சொல்ல வர்ற கடவுள் இருக்காரா? இல்லையா? என்பதுதான்.  தொடக்கத்தில் பல விளக்கங்ககள் எடுத்து சொல்லி அவர்கள் மறுத்து கடைசியில் என்ன விசயம் பேச ஆரம்பித்தோம் என்பதே மறந்து அரட்டை போய்க்கொண்டு இருக்கும்.

    இப்போதெல்லாம் இந்த கேள்விக்கு எளிய பதில் ஒன்று வைத்து இருக்கிறேன் . “அது உனக்குத்தான் தெரியும் அவர் இருக்கிறாரா இல்லையான்னு அவர்களால் இதன் மீது கேள்விகள் கண்டிப்பாக கேட்கமுடியாது. அதிக பேச்சுகள் தவிர்த்து பேசவந்த விசயத்தை பேசமுடிகிறது.

    தொடக்கத்தில் விவாதங்கள் செய்தாலும் நான் புரிந்துகொண்ட ஒன்று ஒருவரின் மனதை அவரால் அன்றி கடவுளால் நினைத்தால் கூட மாற்ற முடியாது என்பதே. அதாவது என்னதான் அவரது மனது மாறினாலும் அதில் மற்றவர்களின் பங்கு என்பது ஒரு சிறிய அளவே பெரும்பகுதி அவர் தனது மனதை மாற்றியதே.

   மனதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிது அல்ல. அதை மாற்றுவதுக்கு பல வழிகள் உள்ளன. அன்பு,பாசம்,காசு, என நீளும். இது எல்லாம் வெறும் காரணிகளே முக்கியம் நான் மேல் சொன்னது போல அவர்தான் முக்கியம்.   அண்மையில் பார்த்த ஏழாம் அறிவு படத்தில் வில்லன் நோக்குவர்மம்(hypnotism) என்ற பெயரில் செய்வதை பார்த்தால் sci fic படம் என்றாலும் இப்படியுமா என்று யோசிக்க வைத்தது. அதில் அந்த வில்லன் பார்த்த இரண்டு நொடிகளில் மற்றொருவரின் மனதை தனது கட்டுபாட்டில் கொண்டுவந்து தனது காரியத்தை சாதித்துகொள்வார்.

    இந்த நோக்கு வர்மம் முறையிலும் எவர்மீது செய்கிறோமோ அவர் துணை இல்லாமல் எதுவுமே வேலைக்கு ஆகாது என்பதுதான உண்மை. வெறுமனே அவரது கண்களை முறைத்து பார்த்துகொண்டோ இல்லை அவரை அரைநிலை தூக்கத்தில் படுக்கவைத்து நாம்மட்டும் பேசிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். அவர் எங்காவது கனவில் டுயட் பாடிக்கொண்டு இருந்தாலும் ஆச்சரியம் இல்லை.   

    இன்னொரு உண்மை என்னவென்றால் மனது உங்களுக்கே கட்டுப்படுகிறது என்பதே பெரிய விசயம் இதில் எங்கு மற்றவர்களுக்கு. இந்த மனதை கட்டுபடுத்ததான் உதவி செய்வதாக  நிறையா ஆனந்தாக்கள் கிளம்பி ஜல்லியடித்து கொண்டு இருக்கிறார்கள்.  அவர்கள் கதவை திறக்க சொல்வதும், ஜன்னலை திறக்க சொல்வதின் மையக்கருத்து இந்த மனதை அடக்குவதுதான். நமக்கு எல்லாம் சொல்லிகொடுத்துவிட்டு அவர்கள் கதவை பூட்டிக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பது அடிக்கடி எல்லோர்க்கும் தெரிந்து விடுவதுதான் ஒரு பெரிய சோகம்.

   நான் எப்போதும் ஒரு சில விசயங்களுக்கு self hypnotism பயன்படுத்துவேன். நல்ல பலனும் கிடைத்து இருக்கிறது. சிரமம் இல்லாத ஒன்றும்கூட இதுக்கு ஆனந்தாக்களின் அறிவுரைகள் ஏதும் தேவை இல்லை. உங்களின் முய்றசிமட்டும் போதும்.எனது பல சிக்கலான விசயங்களுக்கு எனது மனதை எளிமையாக கையாள இதை பயன்படுத்தி வருகிறேன்.

    சொல்லவருவது என்னவென்றால் உங்களின் மனது உங்களதுமுடிவில். அது மற்றவர்களால் சந்தோசபடுகிறது அல்லது துக்கபடுகிறது, ஆறுதல் அடைகிறது இது எல்லாமே நீங்கள் மனதுக்கு கொடுக்கும் ஒருவித கட்டளை அல்லது புரிதல் அவ்வளவுதான். இதை புரிந்துகொண்டால் கண்டிப்பாக எந்த ஒரு ஆனந்தாக்களும் உங்களுக்கு குருவாக தேவை இல்லை. இந்த குரு மற்றும் தீட்சை விசயத்தில் எனக்கு பிடிக்காத பல விசயங்கள் நடக்கிறது. என் நண்பர்களோடு மற்றும் அவர்களின் உறவினர்களோடு ஏற்ப்பட்ட அனுபவங்கள் நிறையா. அதையும் அவர்கள் சிலாகித்து சொல்வது எரிச்சலாக இருக்கும். அதை மற்றொன்றில் எழுதுகிறேன்.

    சரி விசயத்துக்கு வருகிறேன் முதல் பத்தியில் சொன்னது போல கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு எனது பதிலான “உங்களுக்குத்தான் தெரியும் என்ற பதிலுக்கு நீங்களே விடை காணலாம். தனிமையில் இருங்கள் ஒரு நேரத்தில் நமது இவ்வளவு நாள் வாழ்க்கையில் கடவுள் என்பவர் எந்த விதத்தில் நமக்கு உதவி இருக்கிறார்? எந்தவிதத்தில் நமக்குள் வருகிறார்? அவரால் நம்மிடமும் சமூகத்திலும்   என்னென்ன மாற்றங்கள் நடந்து இருக்கிறது? அவர் இல்லாமல் நம்மளால் வாழமுடியாதா? இந்தமாதிரி பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டுபாருங்கள். கடைசியாக வருகிற விடைதான் அவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்குமான விடையும்.     


12 comments:

மகேந்திரன் said...

அருமையான ஆய்வு விளக்கங்கள்
வானியல் பற்றிய தெரியாத பல தகவல்கள்..
பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே,,,

SURYAJEEVA said...

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது அவர் அவர் கேள்வி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியதே, என்ன கேள்வியை தூண்டுவதில் நம் பங்கு உள்ளது... என்ன என்ன கேள்வி கேட்டால் விடை கிடைக்கும் என்பன போன்ற கேள்விகள் தேவை...
இங்கு நீங்கள் கடைசியாக சொல்லிய நேரடி கேள்விகளை யாரும் காது கொடுத்து கேட்கப் போவதில்லை... காலம் மாறும், மாற்றம் மட்டுமே மாறாதது... மற்றபடி புதிய அறிவியல் செய்திகள் அருமை... ஏற்கனவே எரிகல் குறித்து படித்தாலும் தமிழில் படிக்க புரியும்படி இருந்தது.. தொடருங்கள்...

பால கணேஷ் said...

சில விசயங்கள்... பயனுள்ள விஷயங்களாகத்தான் அமைந்துள்ள. வானியல் தகவல்கள் புதியவை, அரியவை. எங்களோடு பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள் பல!

Unknown said...

நல்ல பதிவு நண்பரே அதுவும் மனதை அடக்குவதை பற்றிய உங்கள் சிந்தனை அருமை

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான ஆய்வு, தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்...!!!

கணேஷ் said...

மகேந்திரன் //

உங்களின் கருத்துக்கும் நன்றிங்க))

கணேஷ் said...

கேள்விகளை யாரும் காது கொடுத்து கேட்கப் போவதில்லை..//

ஹா ஹா இது என்னமோ உண்மைதான்

நன்றிங்க

கணேஷ் said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது //

எனக்கு இந்த வேலையெல்லாம் செய்ய தெரியாதுங்க ))

கணேஷ் said...

கணேஷ் //

சந்தோசம் கணேஷ் மற்றொரு கணேஷ்க்கு சொல்வது ))

கணேஷ் said...

ஜ.ரா.ரமேஷ் பாபு //

கருத்துக்கு நன்றிங்க

கணேஷ் said...

MANO நாஞ்சில் மனோ //

அப்படியா.. கருத்துக்கு நன்றிங்க ))

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.