படித்தும் நண்பர்கள் சொல்லி மட்டும் கேட்டு இருக்கிறேன் காதல் என்ற பெயரில் பெண்கள்
வாழ்க்கையில் வந்தால் அதை அழகாக்குவார்கள் என்று ஆனால் உணர்ந்ததில்லை. காரணம்
காதலிக்க கிடைத்த தருணங்களை சரியாக பயன்படுத்தாமல் தவிர்த்தேன் அல்லது
தவிர்க்கப்பட்டு இருந்தேன் என்பதே உண்மை.
அழகிய பெண்களை ஏதோ வேற்றுகிரக தேவதைகள் போல
பார்ப்பது, அவர்களின் கவனம் என்பக்கம் திரும்ப எதாவது செய்வது,அணிந்திருக்கும் “T shirt” வாசகங்களை
மெதுவாக எழுத்துக்கூட்டி படிப்பது போன்ற பொதுவான ஹோர்மொன்கள் வேலையை செய்து
இருந்தாலும் ஏனோ காதல் மட்டும் செய்யவில்லை.
அதற்காக காதலின் மீது வெறுப்பு என்றில்லை
அதே நேரத்தில் அதில் பெரிய மதிப்பும் இல்லாமல் இருந்தது. காரணம் நான் விரும்பி
படித்த சுஜாதா காதலை பற்றி சுவாராசியம் இல்லாமல் சப்பென சொல்லியிருந்த விசயங்களாக
இருக்கலாம்.
வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்யும்போதுகூட
யாரையும் காதல் செய்கிறாயா? என்று கிண்டலுக்கு கூட கேட்காத ஒரு பெரிய வருத்தத்தோடே
திருமணமும் நடந்தது முடிந்தது. வாழ்க்கை எப்படி இன்னும் அழகாக ஆகப்போகின்றது
அல்லது எப்படி ஆக்கப்போகிறாள் என்பதில் அதிக ஆர்வாமாய் இருந்தேன்
திருமணத்துக்கு முன்னாடியே பேசி இருக்கிறோம்.
எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டாள். எதைப்பற்றி பேசினாலும் சலிக்காமல் “உம்” கொட்டுவாள்.
ஏதாவது அவளுக்கு பிடிக்காதது வந்தால் முதலில் எடுத்து சொல்லி நான் கேட்கவில்லை
என்றாள் சண்டைபிடிப்பாள். வாழ்க்கையில் இதுவரை கண்டிராத அழகிய தருணங்களில் அதுவும்
ஒன்று. உங்களிடம் மேலே சொன்னா விசயங்களை அவளிடம்
ஏற்க்கனவே சொல்லியிருந்தேன். அதற்கு “ரெம்ப பாவம்தான் நீங்க”
என்று கிண்டல் அடித்தாள்.
ஒருமாதம் கழிந்த நிலையில் அதை அவளிடம்
சொன்னபோது கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள். திருமணத்திற்க்கு முன்னாடியே
சொல்லியிருக்க்கலாம்தான் அவள் ஏதாவது தவறாக நினைந்துகொள்வாள் என்ற தயக்கம்தான்.
இப்போது நான் சொன்னதும்
“கண்டிப்பா இப்படி செஞ்சுதான் ஆகணுமா என்ன?”
என்றாள்
“எனக்காக சம்மதியேன் ஏற்க்கனவே சொல்லி
இருக்கிறேன் உன்கிட்ட பெருசா ஆர்வம் இல்லனாலும் செஞ்சுதான் பார்ப்போமேனு தோணுது”
“ஏன் அதை இப்போதே செய்யலாமே?”
“இப்போது நீ என் மனைவி அதனால அவ்வளவு
சுவாரசியம் இருக்காது. யாருன்னு தெரியாத ஒரு பொண்ணுகிட்ட பேசி பழகி காதலை
சொல்லுவதில்தான் அந்த சுவாரசியம் இருக்கும்” என்றேன்
“சரி நீங்க சொல்லுகிற முறையில் ஏதாவது தவறு
நேர்ந்தால்?”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது நான் ஏற்க்கனவே
பலமுறை சோதனை செய்ததோடு பயணித்தும் இருக்கிறேன்”
“இது தேறும்னு தோணலை எனக்கு” என்றாள்
“நீ மட்டும் சரி என்று சொல் மத்ததை நான்
பார்த்துக்கிறேன்” என்றேன்.
“சரி செய்யலாம் ஆனால் எல்லாம் குறைந்த
காலத்தில் முடியுமாறு செய்யுங்கள்” என்றாள்
“நீ சம்மதித்ததே போதும் மற்றதை நான்
பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு என் ஆய்வுக்கூடம் நோக்கி ஓடினேன். அங்கு
போர்த்திவைக்கப்பட்டு இருந்த இரண்டு கால இயந்திரங்களை தயார் செய்யும் வேலையில்
இறங்கினேன்.
சரியாக ஐந்து வருடம் முன்பு அவளும்
சென்னையில் வேறொரு இடத்தில வேலை செய்துகொண்டு இருந்தது இன்னும் எனது வேலையை
எளிதாக்கியது. வெறும் ஐந்து வருடம் மட்டும் பின்னாடி பயணிப்பது என்பது அவ்வளவு
சிக்கலான விசயமாக இருக்கவில்லை. இயந்திரம் தயராகி இருந்தது.
அவளிடம் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்கி
கொண்டு இருந்தேன். அதாவது ஐந்து வருடம் அவளும் நானும் பின்னோக்கி பயணிப்பது.
என்னிடம் நான் அவளை காதலிக்க வேண்டும் என்ற நிகழ்கால குறிப்பு மட்டும் இருக்கும்.
அவளிடம் நான் அப்போது தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த தாம்பரம் கிளை
நூலகத்திற்கு வரவேண்டும் என்று இருக்கும். அதாவது காலத்தை குறைக்க அவளை சென்னை
முழுவதும் திரிந்து தேடுவதுக்கு பதில் இருவரும் சந்திக்க பொதுவான இடமாய் அந்த
நூலகத்தை தேர்ந்து எடுத்து இருந்தேன்.
காதலை சொன்ன அடுத்த சில மணி நேரங்களில்
இருவரும் நிகழ்காலத்துக்கு திரும்பிவிட முடிவெடுத்து இருந்தோம். திரும்பிவரும்
பொறுப்பு என்னுடையது அவளால் முடியாது. நான் வந்தவுடன் என் விருப்பப்படி அவளை திரும்ப
அழைத்துக்கொள்ளலாம். ஒருவழியாக வீட்டில் ஒரு சோதனைக்காக என்று பொய் சொல்லி சமாளித்து கிளம்பினோம்.
ஐந்து வருடம் முன் பார்த்த அதே சென்னை
கண்முன் விரிந்து இருந்தாலும் அந்த நினைவுகள் ஏதும் இல்லாததால் இது அன்றைய
ஒன்றாகவே இருந்தது. பிள்ளையார் கோயிலுக்கு எதிர் தெருவில் இருக்கும் அந்த கிளை
நூலகத்திற்கு எனது பணி முடித்து தினமும் செல்வேன். இன்றும் அங்குதான் இருந்தேன்.
ஆனால் இன்று மற்றொரு எதிர்பார்ப்பு ஒரு குறிப்பிட்ட பெண்ணை காதலிக்க வேண்டும் என்ற
குறிப்பு என் கையில் எனக்கு தெரியாமலே இருந்தது. உண்மையா என்று தெரியவில்லை
ஆனாலும் காத்து இருந்தேன்.
பழக்கமான அந்த நூலகப்பெண் “ஏன் இவ்வளவு
நேரம் காத்து இருக்கீங்க அதான் ஏதாவது சுஜாதா புத்தகம் திரும்பி வந்தால் தனியாக
எடுத்துவைத்து உங்களிடம் கொடுக்கிறேனே” என்றாள். அவளிடம்
இதை பற்றி சொல்லலாம் என்று இருந்தாலும் எனக்கே ஏனென்று தெரியாததால் அவளிடம்
சொல்லுவது சரியில்லை எனக்கருதி வெறுமனே சிரித்து வைத்தேன்.
சிறிது நேரத்தில் அந்த பெண் வந்தாள்.
அமர்ந்தவள் படிக்காமல் சுற்றி பார்த்து கொண்டே இருந்தாள். எல்லோரும் அவளை பார்க்க
அருகில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பதுபோல வைத்து கொண்டு மீண்டும்
பார்வையில் சுற்றினாள். என் குறிப்பின்படி இவள்தான் என்னை காதலிக்க அல்லது நான்
காதலிக்க போகிறவள். அழகியிருந்தாள் அப்போது இருந்த அவளின் நிலை செயற்கையாக
இருந்தது. ஏதோ ஒரு கட்டளையின் பேரில் செய்வதுபோல்.
அன்றைய இரவில் அவளது நினைவுகளோடே தூங்கபோய்
இருந்தேன். இது எல்லாம் உணமையா என்று தெரியாமலே. மறுநாள் கொஞ்சம் சீக்கிரமே வந்து
இருந்தாள். அன்று நூலகத்தில் இணைவதற்கு வேண்டிய வேலைளில் மூழ்கியிருந்தாள். அதில்
ஏற்க்கனவே உறுப்பினராக இருப்பவர் மற்றும் அந்த பகுதி கவுன்சிலர் கையெழுத்து
வேண்டும். அந்த விண்ணப படிவத்தை பிடித்தபடி வெளியில் நின்று இருக்க அருகில் சென்று
கவுன்சிலர் வீடு இதே தெருவில் கடைசியில் இருக்கு கொடுங்க இன்னொரு கையெழுத்து நான்
போடுகிறேன் என்று சொல்லி என் பெயரோடு போட்டு கொடுத்தேன். அன்று அவள் உறுப்பினர்
சேர்க்கை முடிந்து இருந்தது வேறெதுவும்
பேசவில்லை.
தொடர்ந்து இல்லாமல் வாரத்தில் மூன்று நாட்கள்
வருவாள்.நூலகம் மிக சிறியது என்பதால் அருகருகே அமர வேண்டிய சூழ்நிலை எங்களை
விரைவாக நண்பர்களாக்கி இருந்தது. அவளும் சுஜாதாவை விரும்ப நானும் சுஜாதா பிரியன்
என்பதை உணர்த்த அவளிடம் அவர் எழுதிய விரும்பி சொன்ன பொய்கள என்ற கதையின் முடிவில்
வரும் “ஆம்” “இல்லை”
என்ற இரு பொய்களில் ஒன்றை சொல்ல சொன்னால் எதை சொல்லுவாய் என்று கேட்க
அவளோ அதில் ஏதாவது ஒரு பொய்யை சொல்லிவிட்டால் அதுவரை படித்த அந்த கதை வீணாகி
போவதுமாதிரி அத்தோடு நிறுத்துவதே சரி என்றுதான் சுஜாதாவும் அப்படி செய்து
இருக்கிறார் என்று சொல்லி சிரித்தாள்.
என்னுடைய கெட்ட பழக்கமோ என்னமோ அவளிடம்
வெறுமனே படித்த புத்தகங்கள் அது சம்பந்தமான விசயங்களையே பேசிக்கொண்டு இருக்க அவளே
ஒருநாள் அதை சொல்லியிருந்தாள். இயல்பாய் பேசலாமே இந்த விசயங்களை தவிர அததான் இதை
நானும் படிக்கிறேனே என்று சொல்ல அடுத்துவந்த நாள்களில் எங்களின் உரையாடல் பொதுவாக
எல்லா விசயங்களிலும் இருந்தது.
இந்நிலையில் அவளிடம் ஒரு தருணத்தில் காதலை
சொல்லும் தைரியமும் வந்து தயங்கியபடி சொன்னேன். நீங்கள் நினைப்பது போல ஒரு
பெண் சிரித்து பேசிய சில மாதங்களில் அவளிடம் காதலை சொல்லும் ராகம் இது இல்லை
ஏற்க்கனவே முடிவெடுத்து நிகழ்கால குறிப்பெடுத்து வந்ததால் செய்ய நினைத்த ஒன்று. ஆனால்
இது அவளுக்கு தெரியாது. என்ன நினைத்தாளோ தெரியாது சட்டென்று கன்னத்தில்
அறைந்திவிட்டு வேகமாக அவளது பாதையில் நடந்தாள். அங்கு சாலையில் நின்று
இருந்தவர்கள் எல்லாம் உடனே திரும்பி பார்க்க நானும் அங்கிருந்து வேகமாக
திரும்பினேன்.
சென்று முதல் காரியமாக அங்கிருந்து அவளது இயந்திரத்தையும்
திரும்பி அழைக்க வந்து இறங்கியவள் என் கன்னத்தில் பதிந்து இருந்த விரல் தடத்தை கைவைத்து
தொட்டுபார்த்து பதறியபடி..
“யாருங்க இப்படி அடிச்சா உங்களை?” என்றாள்
8 comments:
காதலிக்க கிடைத்த தருணங்களை சரியாக பயன்படுத்தாமல் தவிர்த்தேன் அல்லது தவிர்க்கப்பட்டு இருந்தேன் என்பதே உண்மை.
-என் வாழ்க்கையிலும் இப்படித்தான். அழகான சயன்ஸ் ஃபிக்ஷனை ரசனையுடன் ரசித்தேன். நன்று.
இது உண்மை சம்பவமா, படிக்க சுவாரஸ்யமா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணே...!!!
கற்பனை சுவாரஸ்யமாய் இருந்தது! ரசித்து படித்தேன்.
கணேஷ் //
பொதுவா கணேஷ் ன்னு பேரு வச்சி இருக்கிறவங்குக்கு எல்லாம் இப்படித்தான் நடக்குதோ ))
நன்றிங்க கருத்துக்கு
MANO நாஞ்சில் மனோ //
இல்லங்க நான் எழுதும் கதைகள் எல்லாமே கற்பனைதான் )
அதுலேயும் இதை ஏங்க உண்மையான்னு கேட்டிங்க ஒருவேல உங்களுக்கும் என்னை பத்தி தெரிஞ்சி போச்சோ ))
HVL said...
கற்பனை சுவாரஸ்யமாய் இருந்தது//
நீங்கதான் நம்புரிங்க ))
கருத்துக்கு நன்றிங்க
சூப்பர் கற்பனைடா.... :) என்ன்ன்ன்னன எவ்வளவு கஷ்டபட்டாலும் கதையில் கூட எவளும் உன்னை லவ் பண்ண மாட்டரா. கட்டிகிட்ட பொண்டாட்டியா இருந்தாலும்.. :)
சூப்பர் கற்பனைடா.... :) ///
இதோட நிறுத்தியிருக்கலாம் .))
((இந்த கமெண்டை போய் காசு கொடுத்து வாங்கினேன் பாருங்க என்னைய் சொல்லணும் ))
Post a Comment