சில விசயங்கள் - 9


  நெருங்கியே விட்டார்கள். முழுமையான humanoid robot  ஐ விண்வெளியில் சோதனைக்கு அனுப்பும் முயற்சியில் ஒரு முக்கியமான கட்டம் இது. கிட்டதட்ட 15 வருட கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது.

   இந்த வருட தொடக்கத்தில் விண்ணுக்கு அனுப்பட்ட Robonaut 2  ரோபோட்க்கு உயிர் கொடுத்து சோதித்து இருக்கிறார்கள். இது தகவல்களை சரியாக பகிர்ந்ததோடு இல்லாமல் அதில் கண்களாக பொருத்தப்பட்ட camera வில் எடுக்கப்பட்ட படங்ககள் சரியாக வந்து சேர்வதாக சொல்கிறார்கள். எல்லாம் நினைத்தது போலவே திட்டமிட்டபடி அதான் செயல்பாடு இருப்பது சந்தோசம் அளிப்பதாக அதனை சேர்ந்தவர்கள் சொல்லும்போது அதை உருவாக்குவதில் இருந்த கஷ்டம் புரிகிறது.


  இந்த Robonaut 2  ரோபோட் நாசா மற்றும் General Motors உதவியுடன் இதை செய்து முடித்து இருக்கிறார்கள்.இதே போன்று Robonaut 1 ம் இருப்பது குறிப்பிட தக்கது.ஆனால் robonaut 2 க்கு கால்கள் இல்லாமல் சக்கரங்ககள் பொருத்தியிருகிறார்கள். இந்த வகை ரோபோட்களில் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதை ஈர்ப்புவிசைக்கு ஏற்றபடி சாமளித்து தனது வேலைகளை செய்ய வைப்பது. ஆனால் நான்கு சக்கரங்கள் என்றால் அது எளிது. கால்களும் விரைவில் பொருத்துவார்கள்.

   இதில் இந்த அளவு வெற்றியை அடைந்ததை தொடர்ந்து இன்னும் பல முன்னேற்றங்களை கொண்டு வர திட்டம் வைத்து இருக்கிறார்கள்.நான் கற்பனை செய்ததுபோல மனிதர்களையே அனுப்பாமல் வெறுமனே ரோபோட் ஐ கொண்டே விண்வெளியில் எல்லா வேலைகளையும் முடிக்குமாறு வசதிகள்  சீக்கிரம் வந்துவிடுமென நினைக்கிறேன்.

    அதாவது எல்லாம் செய்வது என்றால் இரண்டு வாசல்கள் உள்ள வீட்டின் ஒரு வாசலில் இருந்து அம்மா மறு வாசலில் இருக்கும் சிறு மகளிடம் ஒரு பொருளை எடுத்துவர சொன்னால் எப்படி இருக்கும் என்பதின் ஒரு கற்பனை இதே போலத்தான் நான் சொல்லும் எல்லாம் வல்ல ரோபோட்டும்

“இடது பக்கம் திரும்பேன்

“ம்ம் திரும்பிட்டேன்மா

“அங்க என்ன இருக்கு?

“மஞ்சள் ,நீல கலர்ல செருப்பு...அப்புறம் ஒரு  சருவத்தால் அப்புறம் எண்ணெய் பாட்டிலு

“ம்ம்சரி அந்த எண்ணெய் பாட்டிலை எடுத்துட்டு வா

“அம்மா இதானு பாருங்க

“ம்ம் அதான் கொண்டு வா கொட்டிராதே

   இதில் அந்த குழந்தை விண்வெளியில் இருக்கும் ரோபோட் என்று வையுங்கள் நாம் இங்கு இருந்து கட்டளைகள் மூலம தகவல்களை பெற்று அதை வைத்தே அதனை இயக்கி காரியங்ககளை செய்ய வைப்பது. அனேகமாக இதுக்கும் அதிக நாள்கள் இல்லையென நினைக்கிறேன் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

                                 *****

   கோள்கள எல்லாம் ஏன் சூரியனை ஒரே மாதிரியாக அதுவும் சூரியன் சுழலும் திசையில் சுற்றுகிறது என்பதுக்கு ஒரு புது விளக்கம் அளித்து இருக்கிறார்கள். பொதுவாக எல்லா நடச்சதிரங்களை சுற்றும் கோள்களும் நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களை போல சுற்றுவதில்லை. சில தனது நடச்சதிர சுழலும் திசைக்கு எதிராகவும் சுற்றும்.

   இதற்கு காரணமாக சொல்வது பொதுவாக ஒரு நடச்சதிரம் உருவாவதின் தொடக்கம் தூசுகள் அடைந்த மேக கூட்டதில் (gas,dust cloud) இருந்தே ஆரம்பிக்கிறது. அவை கொஞ்சம் நெருங்கி உரசி atom fusion ஏற்ப்பட்டு கொஞ்சம் எரிய ஆரம்பித்து இப்படியே தொடர்ந்து ஒரு நடச்சதிரமாக மாறும். இந்த நிலையில் அந்த மேக கூட்டம் ஈர்ப்பு விசையில் ஒரு பக்கமாக சுற்ற ஆரம்பித்து அதோடு இருக்கும் பெரிய அளவிலான பொருள்களையும் தனது திசையில் இழுத்து சென்று நாளடைவில் அந்த தூசு மேகங்கள் முழுவதும் எறிந்தோ அல்லது காணமல் போய் அதில் சிக்கி இருந்த பெரிய அளவிலான கோள்கள் மட்டும் இன்னும் அதே திசையில் சுற்றுவதாக சொல்கிறார்கள்.

   எப்படியோ நமது பூமி சரியான தூரத்தில் சிக்கி கொண்டதால் இதை நான் எழுதி கொண்டு இருக்கிறேன். இது எப்படி சரியாக நடந்தது என்ற கேள்விக்கு எல்லாம் தற்செயல்தான் என்ற பதில்தான் இருக்கும். எப்படி இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்கும் என்ற கேள்விக்கு இருக்கும் இப்போதைய பதிலை போல.

                         **********

     எல்லாம் சரியாய்,நேர்த்தியாய் அழகாய் எந்த வித குறையும் இல்லாமல் இருப்பது போல தோன்றுவது விடுமுறைகளில் வீட்டுக்கு போகும்போது பேருந்தில் ஊரை நெருங்கையில் கடைசியாக இருக்கும் சில மணி நேரங்கள்தான். சந்தோசத்தை விட வேறுவித உணர்வே இதுக்கு காரணம். நானும் பலமுறை அனுபவித்து இருக்கிறேன்.

    பயணத்தில் சாலையில் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் கட்டாயம் நமது சிறு வயது நிகழ்வுகளையோ அல்லது ஏதோ ஒரு இனிமையான ஒன்றையே நினைவூட்டும். கண்டிப்பாக யாருடனும் பேசும் எண்ணம் அப்போது இருக்காது.

   அதே நேரத்தில் சுற்றியுள்ள பகுதிகளை நிகழ்ந்துள்ள மாற்றங்களை பார்த்து முதலில் இப்படி இருந்தது, அது இப்படி கிடந்தது இப்ப எப்படி ஆகியிரிச்சு, அதோடு இல்லாமல் ஆட்களின் பழக்க வழக்கங்களில் உள்ள சிறு மற்றங்களையும் நான் அதிகமாக உற்று பார்ப்பதுண்டு. எல்லாமே ஒரு வித புது உணர்வுதான் என்னதான் அதே இடம் அதே ஊர் என்றாலும் ஒவ்வொரு முறை போகும்போதும் இந்த மாதிரியான புதியமாற்றங்கள் நிகழத்தான் செய்கிறது.

                      **********

     விரிகோணம் என்ற கதை தொடங்கிய வேகத்திலியே நின்று விட்டது. காரணமாக நேரம் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. கதையின் முடிவு அதில் என்னென்ன சேர்த்து எழுத வேண்டும் போன்ற குறிப்புகள் எழுதி வைத்து இருந்தாலும் அதை விரிவாக்கி எழுதும் எண்ணம் இல்லாமல்  இருக்கிறது.

   சொந்த ஊருக்கு போகும் சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை எழுத முழு மனது இல்லை. ஆர்வம் இல்லாமல் எழுதி இதை படியுங்கள் என்று கொடுக்க விரும்பவில்லை. திரும்பிவந்து நீளமாக எழுதி பல பதிவுகளாக ஒரே நேரத்தில் போடும் எண்ணம் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு பெரிய தொடர்கதையை ஒரே நேரத்தில்  படிக்கும் வகையில்.

   கண்டிப்பாக அதுவரை இதற்கு முன்னாடி எழுதின பகுதிகளில் உள்ள கதை மறந்துவிடும். முன்கதை சுருக்கம் வேறு எழுதவேண்டும் என் நினைக்கிறேன். வந்து தொடர்ந்து எழுதுகிறேன்.

  

13 comments:

Philosophy Prabhakaran said...

எல்லாம் அறிவியல் மயம் தானா...

HVL said...

ஊருக்கு போய் நல்லா enjoy பண்ணிட்டு வாங்க!
//
கிட்டத்தட்ட ஒரு பெரிய தொடர்கதையை ஒரே நேரத்தில் படிக்கும் வகையில்.
//
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

கணேஷ் said...

Philosophy Prabhakaran//

வேறென்ன எதிர்பார்க்கிரிங்க சொல்லுங்க அதையும் உங்களுக்காக எழுதிடிவோம்)))

கணேஷ் said...

HVL //

கண்டிப்பா ))

நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

புதிய தகவல்கள் நன்றி.....!!!

kobiraj said...

அருமையான தகவல்கள் நன்றிகள் .

ஆர்வா said...

அறிவியலை மிக அழகாக அறிந்து கொள்ள முடிகிறது நன்றி நண்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரோபோனாட் சூப்பர்....... இனி ஒரு காலவரையற்ற பயணம் தயாராகிடும்...... நினைக்கவே உற்சாகமா இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// எப்படியோ நமது பூமி சரியான தூரத்தில் சிக்கி கொண்டதால் இதை நான் எழுதி கொண்டு இருக்கிறேன். ///////

இதுதான் மேட்டர்...... இதுதான் ரேண்டம்னஸ்...... எத்தனையோ ஸ்டார்கள், எத்தனையோ கிரகங்கள்..... ஆனா இங்கதான் அது செட் ஆகி இருக்கு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////என்னதான் அதே இடம் அதே ஊர் என்றாலும் ஒவ்வொரு முறை போகும்போதும் இந்த மாதிரியான புதியமாற்றங்கள் நிகழத்தான் செய்கிறது. ///////

அது இல்லாமலா....? ஆனாலும் ஊர் ஊர்தான்.......

கணேஷ் said...

இனி ஒரு காலவரையற்ற பயணம் தயாராகிடும்...... நினைக்கவே உற்சாகமா இருக்கு!//

கண்டிப்பா அதுவும் சீக்கிரம் நடக்கும்))

செல்வா said...

ஊருக்குப் போயிட்டு வாங்க :)

அப்புறம் பூமி உருவானத நீங்க தற்செயல்னு சொல்லுறீங்க, நான் அத கடவுள்னு நம்புறேன் :)

கணேஷ் said...

வந்துட்டேங்க))

நம்புங்க பிரச்சினை இல்ல))