சில விசயங்கள் - 5


    பூமியில் முதல் பகுப்படையும் செல் உருவாகி பரிணாம வளர்ச்சி பெற்று எப்படி இங்கு இதை எழுதி கொண்டு இருக்கிறது என்பதில் எல்லோருக்குமே அதிக ஆர்வம் உண்டு.கடவுள்தான் இந்த உயிர்களை படைத்து இருக்கிறார் என்று திடமாக நம்புவர்களை தவிர.

   அண்மையில் NASA ஒரு அனுமானத்தை வெளியிட்டு இருக்கிறது.நமது சூரிய குடும்பத்தில் அதுவும் குறிப்பாக பூமியில் எப்படி DNA மூலகூறுகள் தோன்றி செல்லாக மாறி உயிரினம் தோன்றி இருக்கலாம் என்பதைப்பற்றி.

   அவர்கள் இதற்கு காரணமாக சொல்வது பாஸ்பரஸ் அடங்கிய NEBULA CLOUDS இருக்கின்ற இடத்தின் வழியாக நமது சூரிய குடும்பம் பயணித்து வரும்போது அந்த CLOUDS நம் மீது மோதி அதிலுள்ள மூலகூறுகள் பூமியில் விழ சரியான தட்பவெட்ப சூல்நிலை அமைய அப்படியே உயிராக வளர்ந்து இருக்கலாம். என்கிறார்கள்.

   இந்த CLOUDS களை interstellar medium என்பார்கள்.இது வெடித்து சிதறிய நட்சத்திரங்களில் இருந்து வந்த துசுக்கள், பொருள்கள எல்லாம் அடங்கியது. அதாவது ionic, atomic, and molecular form, dust,carbon இந்த மாதிரி. இதுதான் காலப்போக்கில் ஒன்றோடு ஒன்று உரசி மீண்டும் ஒரு புதிய நட்சத்திரங்கள் உருவாக காரணமாக இருக்கும்.

சரி கொஞ்சம் விளக்கமாக கிழே உள்ள படத்தை பாருங்கள்.



   இதில் நமது சூரியன் நகர்ந்து போகும் திசை violet கலரில் இருக்கிறது.அது வந்த இடம் என்று பார்த்தால் gum nebula (பச்சை)மற்றும் local bubble(கருப்பு) என்ற இடம் வழியாக.

இந்த gum nebula தான் நட்சத்திர வெடிப்புக்கு பிறகு இருக்கும் மூலக்கூறுகளை கொண்ட நிலை.

   இதில் இருந்துதான் hydrogen, carbon, oxygen, nitrogen, cyanide போன்றவை இணைந்து நமது DNA வில் உள்ள adenine தோன்றியிருக்கலாம் என்றும், oxygen and phosphorus இவை இணைந்து DNA வின் இணை ஏணிகள் (base pairs) உருவாகியிருக்கலாம் என்கிறார்கள். இன்னும் நமது DNA வில் சில பொருட்கள் இந்த NEBULA வில் இருப்பதாக சொல்கிறார்கள். ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

 *********

   சிறுவயதில் அம்மா அப்பாவின் கண்டிப்பை பார்த்து வந்த கோபம இப்போதெல்லாம் வருவதே இல்லை. நண்பர்களோடு கோபம கொண்டது, என் தம்பியோடு சண்டை போட்டு ரெண்டு பேரும் சேர்ந்து அடிவாங்கியது, இது எல்லாமே அப்போது இருக்கும் பெரிய பிரச்சினைகள்.இப்போது இதை எல்லாம் நினைத்து பார்க்கும்போது சொல்ல முடியாத சில உணர்வுகள். எவ்வளவு அருமையாக இருக்கிறது. இவை எல்லவாற்றிக்கும் பின்னால் ஒரு பாசபினைப்பு கண்டிப்பாக இருந்ததுதான் உண்மை.

    இப்போது நான் வாழும் வாழ்க்கையில் கண்டிப்பாக இது கிடைக்க போவதில்லை.சிறுவயதில் சேட்டைகள் செய்தாலும் இப்போது பெற்றோர கண்டிக்கும் அளவுக்கு எதையும் செய்வதில்லை.தம்பியோடு சண்டையில்லை. நண்பர்கள் எல்லோரும் அவர்களின் வாழ்க்கையை பார்க்க வேலைகளில் இருக்கிறார்கள்.பாதிபேர் இன்னும் ஊருகளில்.  எல்லாமே வேகமாக நடந்து இந்த நிலமை வந்தது போல தோன்றுகிறது.அதே நேரத்தில் ஏன் இது வந்தது என்ற ஒரு கவலையும்.

   பணம் ஈட்டுவதுக்கான போட்டி என இவைகளோடு வாழும் வாழ்க்கை அலுப்பாக தோன்றுகிறது. சம்பாதிக்க வேண்டும், தந்திரமாக சூட்சுமதோடு வாழனும் என அறிவுரை சொன்னாலும் அதன் படி இருக்க சுத்தமாக ஈடுபாடில்லை. புத்தக வாசிப்பு, அன்பு செலுத்துதல்,கற்பனை செய்தால் இவற்றை தவிர இப்போதைய என் வாழ்க்கையில் ரசிக்க ஒன்றுமே இல்லைதான்.

  எல்லோரும் ஒரே இலக்கை நோக்கி முண்டியடித்து ஓடுவது போல தோன்றுகிறது அது என்னவென்றே தெரியாமல். என்னமோ நானும் இந்த ஓடுகளத்தில் வந்துவிட்டேன் என்பதுதான் உண்மை. கடவுளை தவிர்த்து என்மீது எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்தும் சிலரும் அதில் இருப்பதால் அவர்களின் அனபுக்க்காகவாது அவர்களோடு ஓட வேண்டியது இருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

 *********

   ஊரில் சொந்தக்கார தாத்தா ஒருவர் அந்த காலத்திலயே ENGINEER (CIVIL) படிப்பு படித்துவிட்டு வேலை பார்த்ததால் அவரை எல்லோறும் ENGINEER தாத்தா என்றுதான் அழைப்போம். இடையிலேயே வேலையை RESIGN செய்துவிட்டு விவசாயம் பார்க்க தொடங்கி இன்னும் ஆள் வைத்து பார்த்து கொண்டு இருக்கிறார்.அருமையான மனிதர்.

   மிகுந்த மரியாதை கொண்டவர் என்பதால் எல்லோரும் அவரிடம் பேச தயங்குவார்கள். இதே காரணத்தால் அவரோடு சிறுவயதில் பேசியது இல்லை.நான் என்ன செய்கிறேன் எங்கு இருக்கிறேன் என்பதை என் அம்மாவிடம் கேட்டதாக சொல்ல போனமுறை சென்றபோது அவருடைய வீட்டுக்கு போய் இருந்தேன்.

   கடந்த பல வருடங்களாக தனியாக இருக்கிறார்.பேசிக்கொண்டு இருக்கும் போது பொழுதுபோக்காக புத்தகம் படிப்பேன் என்று சொல்ல என்ன மாதிரி புத்தகம் படிப்பாய் என்று கேட்டார்.

    நான் சில புத்தகங்களை சொல்ல, அதே ரகத்தில் புத்தகம் ஏதும்  இல்லையென்றும் வேறு புத்தகம் இருப்பதாக சொல்லி அலமாரியை காட்டினர்.கிட்டதட்ட 400 புத்தகங்களுக்கு மேல் இருக்கும்.தேடினேன் கொஞ்சம் விவசாயம், மீதம எல்லாமே ரஷ்யாவை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்கள்.

    எப்படி நம்ம ஊரில் இருந்து கொண்டு இந்த புத்தகங்களை வாங்கினீர்கள் என்று கேட்டதுக்கு எல்லாம் வேலை பார்க்கும்போது வாங்கியதாக சொன்னார். சம்பளத்தில் ஒரு பங்கை புத்தகத்திற்கு செலவிட்டுரிருக்கிறார்.அதுவரை வழக்கமாக பேசிக்கொண்டு இருந்தவன் சரியாக பேச முடியவில்லை. இவ்வளவு புத்தகங்கள் படித்து விட்டு எப்படி இவ்வளவு எளிமையாக இருக்க முடிந்தது இந்த மனிதரால் என்ற எண்ணம் மரியாதையை அதிகமாக்கியது.

    சில அறிவுரைகளோடு READER DIGEST ல் வந்த FOLK TALES AND FABLES OF THE WORLD (இது சின்ன பிள்ளைகள் படிக்கும் புத்தகம்) இன்னும் சில புத்தகங்ககளை எடுத்துக்கொண்டு கிளம்ப உனக்கு இந்த புத்தகம்தான் பிடிக்குதாக்கும் ஏன் ரஷ்யா பிடிக்காதா? என்று கேட்டததுக்கு அப்படியில்லை என்றுமட்டும் சொல்லிவிட்டு வந்தேன்.

 **********

   புத்தகம் படிக்க சில எளிய வழிகளை கையால்வதுண்டு.படிக்க வேண்டிய புத்தகங்களை ஒருபோதும் ஒழுங்காக அலமாரியில் அடிக்கி வைத்தது இல்லை. படுக்கை இடத்தில சிதறிதான் கிடக்கும். சும்மா இருக்கும் நேரங்களில் கையில் கிடைக்கும் புத்தகத்தை எடுத்து ஆர்வம் இல்லாமல் நேரம்போக ஒரு இரண்டு பக்கம் வாசித்துவிட்டால் போதும் அந்த புத்தகம் முடிந்த மாதிரிதான். தொடக்கம்தான் கஷ்டமானது.

   இதையே இப்போதும் கடைபிடிக்கிறேன். படிக்க வேண்டும் என்று நினைத்து ஆர்வமாக படிக்கும் புத்தகங்கள் தனியாக இருந்தாலும் இந்த மாதிரி படிப்பவையும் அடங்கும்.எப்படியோ என் கண் முன்னால் புத்தகம் இருக்கிற மாதிரி பார்த்துகொண்டாலே போதும்.

அதே போல் கதையில் வரும் விசயங்கள் புரியாமல் ஒருபோதும் அடுத்த பக்கத்துக்கு நகர்ந்தது இல்லை. அது சம்பந்தமாக இணையத்தில் தேடி புரிந்துகொண்ட பிறகேதொடர்வேன். இது இன்னும் அதை பற்றி படிக்க ஆர்வத்தை கொடுப்பது போல ஒரு உணர்வு.

   ஒரு குறிப்பிட்ட நபர் எழுதிய புத்தகம் என்பதுக்க்காக எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக ஆர்வமில்லாமல் படித்தது இல்லை. அப்படி படிப்பதால் முடி கொட்டுமே தவிர வேறொரு பயனுமில்லை என்பது என் அனுபவம்.

12 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
புத்தகங்கள் படிக்க விடா முயற்சி வேண்டும், நிறைய பொறுமை வேண்டும்.
வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

நன்றி அய்யா கருத்துக்கு

HVL said...

படிப்பதன் ருசி தெரிந்துவிட்டால் படிக்காமல் இருப்பது கஷ்டம்.

கணேஷ் said...

@hvl.

ம் உண்மைதான்
கருத்துக்கு நன்றி

கருணாகார்த்திகேயன் said...

நல்ல பதிவு
அன்புடன்
கருணா கார்த்திகேயன்

சமுத்ரா said...

New looks? :-)
'sila vishayangal' is good..keep writing..I dont know why we lost contact..Take care..

கணேஷ் said...

கருணா கார்த்திகேயன்//

thank you..)

கணேஷ் said...

சமுத்ரா//

நன்றி எழுதுகிறேன்

அப்படி ஒன்றும் இல்லையே. இருந்தால் கண்டிப்பாக உங்களோடு தொடர்கிறேன்)))

ஷர்புதீன் said...

//புத்தக வாசிப்பு, அன்பு செலுத்துதல்,கற்பனை செய்தால் இவற்றை தவிர இப்போதைய என் வாழ்க்கையில் ரசிக்க ஒன்றுமே இல்லைதான்.//

ஒரு மாதிரியான அளுப்புகள் வேண்டுமானால் அவ்வப்பொழுது தோன்றலாம், சலிப்பு மட்டும் கூடவே கூடாது

கணேஷ் said...

ஷர்புதீன்..///

ம் சரிங்க.

கருத்துக்கு நன்றி

ஆனந்தி.. said...

ம்ம்....ஒரு சுயசரிதையில் சில பக்கங்கள்...கொஞ்சம் அறிவியல் தகவல்கள்னு...ம்ம்....நல்லா இருந்தது கணேஷ் இந்த பதிவு...நல்லா சுவாரயஸ்யமா சொல்ற....

ஆனந்தி.. said...

galaxy..clusters பத்தி எப்பவும் தெரிஞ்சுக்க எனக்கு பயங்கர ஆர்வம்...அதுவும் இந்த nebulla cloud and formation of dna ..கொஞ்சம் சுவாரஸ்யம்...அப்டேட் பண்ணுடா ...செம...

தென்...புத்தகங்கள் பத்தி நீ சொன்னது கொஞ்சம் சிரிப்பு வந்தது...அதாவது நம்ம படிக்கிறது தான் சிறந்த புத்தகம் னு ...நமக்கு ஒத்துவரும் புத்தகம்னு உன்னை மாதிரி அறிவாளிஸ் எல்லாம் ஒரு comprise பண்ணிக்காத கணேஷ்...குண்டக்க மண்டக்க படி எந்த டைப் of புத்தகம் னாலும்...சுஜாதா சொல்றமாதிரி புறநானூறு முதல் சரோஜா தேவி புத்தகம் வரை ஏதோ ஒரு விஷயம் புரிஞ்சுக்கிறேன்..தெரிஞ்சுக்குறேன் னு சொல்றது இங்கே நினைவுக்கு வருது....:))))