அது....


    இதுக்கு மேலும் பொறுத்து இருக்க பொறுமையில்லை.அதை தேடி நிறையா படித்து குழம்பியாகிவிட்டது.விடைதான் கிடைத்தபாடில்லை. ஐன்ஸ்டீன் சொன்னதில் இருந்து எதாவது கிடைக்கும் அல்லது ஹாவ்கிங் எதாவது புதியதாக செய்வார் என்று இதுவரை பொறுமையாக காத்து இருந்துவிட்டேன்.

   சரி அறிவியலில்தான் விடை கிடைக்க நேரம் ஆகும் ஆன்மிக வழியில் எதாவது கிடைக்குமா என்று யோசித்தால் அந்த பக்கம் போகவே பிடிக்கவில்லை. நான் அதை கொடுக்கிறேன் இதை கொடுக்கிறேன் முக்தியை அடையபோகிறேன் என்று நல்ல இலக்கண நிறைந்த தமிழை பேசிக்கொண்டு ஆசிரமங்கள் துறந்துவிட்டு பின் பெண்களுக்காக கதவையும் ஜன்னலையும் மட்டுமே திறப்பதில் குறியாயிருக்கிறார்கள்.அவர்களுக்கு ஆன்மிகம் தன்னை ஒரு நல்லவனாக காட்டவும், அதுக்கு பின்னாடி ஒளிந்து கொண்டு சில வேலைகளை செய்ய மட்டுமே என்பதை உணர்ந்தேன்.

   பயனில்லாமல் போனதால் நானே எனது முயற்சியை தொடங்க தீர்மானித்து அதற்கு உரிய வேலைகளை துவங்கியிருந்தேன்.மற்றவர்களை போல துவக்கத்தில் இருந்து ஆராச்சி செய்து அது தவறு இது தவறு என்று ஆராய்ந்து எனது பதிலை தேடினால் அதுக்கு  என் வாழ்க்கையில் மீதி இருக்கும் நாள்கள் போதாது.எனவே வித்தியாசமாக வேகமாக எதாவது செய்ய எண்ணினேன்.

    எனது முறைக்கு சாத்தியம் நிறையவே இருந்தது.அதாவது ஒரு மூளையை ஸ்டெம் செல்கள் மூலம் தனியாக வெளியில் வளர்த்து அதை செயற்கையாக கட்டுபடுத்தி இதுவரை நாம் கண்டுபிடித்த எல்லா தகவல்களையும்,தத்துவங்ககளையும் அதற்குள் கொடுத்து அதை புரிந்து கொள்ள செய்து அதனிடம் நமக்கு வேண்டிய கேள்விகளை கேட்டால் பதில் தரும்படி அமைப்பதுதான் எனது முறை.

   இது எப்படி கணினி hard disk ல் எல்லாதகவல்களையும் சேமித்து வைத்துவிட்டு தேவையான தகவல்களை தெரிந்துகொள்வது போன்றதுதான்.கணினிக்கும் நான் செய்ய போகும் முறைக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.மூளை கொடுத்த தகவல்களை ஒன்றோடு ஒன்று பொருத்தி பார்த்து அதில் இருந்து தானாக யோசிக்கும்.அதோடு சிந்தனை திறனும் அதிகம்.


   இதுவரை ஸ்டெம் செல்களை வைத்து மூளையின் பாதிப்படைந்த (அல்சிமர் நோயால்) செல்களை மட்டுமே புதுப்பித்து கொண்டு இருந்தனர். இதில் அடுத்த கட்டமாக மூளையையே புதியதாக உருவாக்க போகிறேன்.

   சிரமமான விசயம் அதை தனியாக உருவாக்கி,செயற்க்கையாக oxygen கொடுத்து metabolism நடக்க வைத்து, அதில் உள்ள பில்லியன் நியூரன் செல்களை கட்டுபடுத்துவது.

    புதியதாக சில மாற்றங்களை செய்தேன் வெறும் மூளை மட்டும் என்பதால் அது நமது உடல் செய்யும் அன்றாட பணிகளுக்கான கட்டளைகள் கொடுக்கும் தன்மையை தடுத்து இருந்தேன்.இதன் மூலம் அதன் திறன் அதிகரிக்கும் என்ற எண்ணம.அதாவது அதன் வேலை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் யோசித்து பதில் அளிப்பது மட்டுமே.

    எனக்கு இருந்த சில சந்தேகங்கள் வைத்தியிடம் வேலைபார்க்கும் புனியின் உதவியால் தீர்ந்தது.நல்ல அறிவாளி பெண்.குறைவாக பேசி நிறையா யோசிப்பவள்.அவளின் அறிவை விட அவள் பேசும் அழகு,யோசிக்கும் வேளைகளில் அவள் செய்யும் பாவனைகள பிடித்து இருந்ததுதான் உண்மை.

   அவளின் உதவியால் ஸ்டெம் செல்களை பிரித்து க்ளோனிங் முறையில் மூளையை உருவாக்கி இருந்தேன். அது இப்போது நான் செயற்கையாக உருவாகியிருந்த ரத்தத்தை அனுப்பும் இயந்திரத்தின் உதவியுடன் சுவாசித்து கொண்டு இருந்தது.

   வெற்று மூளை எதாவது தகவல்களை கொடுத்து அதுசம்பந்தமான கேள்விகளை கேட்டால் பதில் அளிக்கும் அவ்வளவே.

   அதுக்கு தகவல்களை கொடுப்பதும்,பெறுவதும் பெரிய விசயமாக இல்லை.மூளைக்கு நமது உடலின் பகுதிளில் இருந்து உணர்வு தகவல்களை பரிமாற்றம் செய்யும் dendrite ஐ இந்த தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தியிருந்தேன்.

   நான் கொடுக்கும் தகவல்கள் dendrite உதவியால் axon வழியாக நியுரன்களுக்கு neurotransmitter மூலம் கடத்தப்பட்டு சேமித்து வைக்கப்படும்.

   நியுட்டன் காலத்துக்கு முன்னில் இருந்து இப்போது வரை உள்ள எல்லா தகவல்களையும் உள்ளே அனுப்பும் எனது வேலை அடுத்த சில நாள்களில் முடிந்து இருந்தது.இடையிடையே எப்படி வேலை செய்கின்றது என்பதை சில கேள்விகள் கேட்டு சோதித்து பார்த்ததில் நான் நினைத்ததைவிட அருமையாகவே வேலை செய்தது.

   கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டு எனக்கு விடை கிடக்க வேண்டிய கேள்வியை கேட்க எண்ணி அதுக்கு தயார் செய்தேன்.கேள்விக்கான எல்லா தகவல்களும் கொடுத்தாயிற்று. அதுக்கு தெரியாத ஒன்றுமே இல்லை என்ற நிலை. எனது கேள்விகளை கோர்வையாக உள்ளே அனுப்பினேன்..

1)     1) பிரபஞ்சம் முதலில் எப்படி தோன்றியது?

2)     2) தானாக தோன்றியதா? எதாவது ஒரு சக்தியால் தோற்றுவிக்கப்பட்டதா?
3)     3) அப்படியெனில் அந்த சக்தி என்ன?
4)     4)அதை சரியாக புரியும்படி விளக்க முடியுமா?

   இந்த கேள்விகளை உள்ளே அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்து இருந்தேன்.இந்த  நேரத்தில் உள்ளே செல்லும் oxygen அளவை அதிகரித்து இருந்தேன் அது யோசிக்க மிக உதவியாக இருக்கும் என்பதற்காக.

   தகவல்களை கொடுக்க ஆரம்பித்து இருந்தது. அதை கணினி புரிகின்ற மொழியில் மாற்றி கொடுத்தது. அதை படித்து முடித்த போது வெறுபுதான் மிஞ்சியிருந்தது. அதை அப்படியே இங்கே கொடுக்கிறேன்...

   இது மிக எளிமையான கேள்விகள்தான் பதில் சொல்கிறேன்.இருந்தாலும் நீ அதிகம் கேள்விகள் கேட்கின்றாய்.காதலிக்க ஏதும் பெண்கிடைக்க வில்லை என்பது உன் இந்த தேடலில் இருந்து தெரிகின்றது. இதற்கான பதிலுக்கு நீ இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டும்.அந்த முறையைத்தான் உனக்கு சொல்ல போகிறேன்.அதில் உனக்குண்டான பதில் கண்டிப்பாக கிடைக்கும். இதோ..


   முதலில் ஒரு மூளையை செயற்கையாக உருவாக்கி அதை உன்கட்டுபாட்டில் வைத்து அதுக்குள் தகவல்களை கொடுத்து அந்த தகவல்களில் இருந்து பதில்கள் கிடைக்கும் வகையில் உருவாக்கு. எனது அறிவின் மூலம் உனக்கு இதைத்தான் சொல்ல முடியும்.ஆனால் நான் சொன்ன இந்த முறையில் கண்டிப்பாக உன் கேள்விக்கு விடைகிடைக்கும்.

இதை சொல்லி முடித்து விட்டு வழக்கம் போல ..

வேற ஏதும் கேள்விகள் இருக்கா? என்றது


(நான் மேலே சொல்லியிருப்பது பொதுவாக நமது மூளை வேலை செய்யும் விதம்தான். நமது மூளையில் பில்லியன் அதிகமான நியுரன்கள் இருக்கும்.இது கொஞ்சம் வித்தியாசமான செல்கள். ஒவ்வொரு செல்லும் ஒரு உடலமைப்பை கொண்டு இருக்கும்.அதன் பெயர் axon. இதுதான் ஒரு நியுரன்களில் இருந்து மற்ற நியுரன்களுக்கு தகவல்களை கடத்தும். இந்த செல் உடலமைப்பு மற்ற செல்களைபோலவே ஒரு nucleus ஐ கொண்டு அதன் மூலம நியூரன் செல்களை கட்டுபடுத்தும் வேலைகளை பார்க்கும்.

உடலில் உள்ள உணர்வு செல்களில் இருந்து முதலில் dendrite  பகுதி வழியாக நியூரனுக்கு தகவல்களை கடத்தி பின் axon மூலம் மற்ற நியூரன்களுக்கு வேதி வினை பொருள்கள் (neurotransmitter) மூலம் தொடந்து கடத்துகின்றது.)

4 comments:

நாகராஜசோழன் MA said...

:) உங்க மூளை இப்போ உன்கிட்ட தானே இருக்கு?

கணேஷ் said...

என்கிட்டே இல்லை ))

இக்பால் செல்வன் said...

ஹிஹி // நான் அதை கொடுக்கிறேன் இதை கொடுக்கிறேன் முக்தியை அடையபோகிறேன் //

பெண்களுக்கு மட்டும் தானே !!! சாய்பாபா போன்றோர் ஆண்களுக்கு நிர்வாண முக்திக் கொடுத்தாரமே ...

// மூளையை ஸ்டெம் செல்கள் மூலம் தனியாக வெளியில் வளர்த்து அதை செயற்கையாக கட்டுபடுத்தி இதுவரை நாம் கண்டுபிடித்த எல்லா தகவல்களையும்,தத்துவங்ககளையும் அதற்குள் கொடுத்து அதை புரிந்து கொள்ள செய்து அதனிடம் நமக்கு வேண்டிய கேள்விகளை கேட்டால் பதில் தரும்படி அமைப்பதுதான் எனது முறை.

//

இது நல்லாருக்கே !!!


சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை பழமொழிக் கேட்டது இல்லையா.. மூளையே ஆனாலும் - அதனை புராக்கிரம் செய்ததை விட வேறேதும் சிந்திக்காது .. சிந்தித்துவிட்டால்.. அதற்கு பேர் நாத்திகமாகிவிடும்.. ..ஹிஹி

கணேஷ் said...

ஆண்களுக்குமா?? எனக்கு இது இப்பதான் தெரியும்..))

ஆமாம் தானாக புதிய ஒன்றை சிந்திதுவிட்டால் அதை பிடிக்காதவர்கள் சொல்வதுதானே அந்த நாத்திகம் எல்லாம்..

நன்றி