மனசு எங்கே ?

(உங்களுக்கு வைத்தி, புனி புதியவர்கள் என்றால் ஒரு அறிமுகம்..வைத்தி மிகப்பிரபலமான ஒரு மருத்துவர்..தனது மருத்துவமனையில் செய்ய முடியாதவற்றை தனது ஆய்வுகூடத்தில் செய்பவர்..அவருக்கு உதவியாக இருப்பவள் புனி எனும்  ஒரு மாணவி))

    அந்த பெண் சொன்னதை கேட்டதில் இருந்து இருவரும் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தார்கள்..இது எப்படி சாத்தியம்?ஒருவேளை அந்த பெண் பொய் சொல்கின்றாளா? என்ற சந்தேகம் இருவருக்கும்...

   தனியாக உட்கார்ந்து ..அழகாய் அமைதியாக எதையோ  யோசித்துக்கொண்டு இருந்தாள்..

   வைத்தி அவள  சொன்னதை ஒருமுறை உறுதி படுத்திக்கொள்ளும் எண்ணத்தில் அவளிடத்தில் ..

 “நீ சொல்வது நம்பும்மாதிரி இல்லையே? சரியாகத்தான் சொல்றியா?

    “ஆமாம்... எனக்கு இந்த பிரச்சினை இல்லையென்றால் எதுக்கு உங்களை தேடிவருகிறேன்? என்றாள்

   உனக்கு என்ன நடந்தது இந்த பிரச்சினை எத்தனை நாள்களாக இருக்கு என்ன பாதிப்புகள்னு கொஞ்சம் தெளிவாக சொல்லேன்? கேட்டார்

    “என்ன நடந்தது தெரியல.. சில நாள்காளகத்தான் இருக்கு....எதோ மனசே இல்லாத மாதிரி இருக்கும்..ஒரே வெறுமையாய்...எல்லாமே இருண்ட மாதிரி..என்னுள் எந்த எண்ணமும் ஓடாது...என்னால் எதையும் யோசிக்கவோ?சிந்திக்கவோ முடியாது...என்மனசே என்கிட்டே இல்லாமல் என்னைவிட்டு எங்கோ போய்விட்ட மாதிரி ஒரு நிலை..அடிக்கடி அவதிபடுகிறேன்..அதான் என் மனசு என்னிடம் இருக்கா இல்லையான்னு உங்களின் உதவியால் சோதித்து பார்க்கலாம்னு வந்தேன்என்றாள்


   வைத்திக்கு மீண்டும் அதே குழப்பம்....மனசு எங்கே போகும்? தன்னுள் இல்லை என்கிறாளே?...அப்போதுதான் அவருக்கு சில நாள்களுக்கு முன்அவர் மனிதனுள் மனசு எங்கே இருக்கின்றது என்பதை கண்டுபிடிக்க எடுத்துக்  கொண்ட முயற்சி நினைவுக்கு வந்தது...சில காரணங்களுக்காக இடையிலேயே கைவிட்டு இருந்தார்...


  புனி இன்னும் அந்த பெண் சொன்னது உண்மையா இல்லையா என்ற சிந்தனையில்.இருந்தாள்..அருகில் வைத்தி வந்தார்..

என்ன செய்ய போறீங்க டாக்டர்? கேட்டாள் புனி

அதான் யோசிக்கிறேன் கேட்கவே வித்தியாசமா இருக்கே?

அந்த பெண் நல்லாதானே இருக்கா..இல்ல ஒரு  மாதிரியா..??

    “இல்லை.. அவள் மனநிலையில் எந்த வித பிரச்சினையும் இல்லை..அருமையாக கவிதை எழுதுவாலாம், நான் பேசியபோதும் நன்றாக புரிந்துகொண்டு பேசினாளே” என்றார்

அப்ப அந்த பெண்ணுக்கு உங்களின் முடிவு என்ன?

    “நான் கொஞ்சநாள் முன்னாடி மனத்தைக் கண்டறிய சில சோதனை முயற்சிகள் செய்து கைவிட்டேன். அதை மீண்டும் முயற்சிக்கலாம் நினைக்கிறேன்

மனசை கண்டறிய முயற்சியா எப்படி?என்றாள் ஆச்சர்யமாக..

      “மூளையில் ஒரு பகுதி அல்லது அதில் ஏற்படும்  எண்ணங்களே மனசு...அப்படி மூளையில் எண்ணங்கள் ஏற்படும்போதோ  அல்லது ஒரு தகவலை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு nerve cell கள் கடத்தும் போது வேதியல் ரசாயன மாற்றத்தால் neuron களில் ஏற்ப்படும் குறைந்த அளவு மின் சக்தியை வைத்து எண்ணங்கள் எங்கு இருந்து வருகின்றன என்பதை கண்டறிய nanotechnology முறையில் இரத்த செல்களை விட மிக நுண்ணிய அளவிலான சிப்களை உருவாக்கி இருந்தேன்...இந்த சிப்கள் குறைந்த அளவு மின்சார அளவைக்கூட கண்டுபிடித்து அது இருக்கும் இடத்திற்கு செல்லகூடியது..இதை ரத்தத்தில் கலந்த சில நிமிடங்களில் எங்கு மின்சார தூண்டுதல் இருக்குமோ அதை நோக்கி தானாக பயணிக்கும்...இதை வைத்து மனசு எங்கு இருக்கிறது என்பதை ஒருவாறு கணிக்கலாம்

      “அப்படி என்றால் மூளையில் நடக்கும் எல்லா தகவல் பரிமாற்றத்தின் போதும் இந்த மின்சார தூண்டுதல் இருக்குமே பின்னே எப்படி இந்த சிப்கள் சரியாக மனதை கண்டுபிடிக்கும்..அதோடு இதே மாதிரிதான் EEG (electroencephalograph) ஒன்னு இருக்கே இதுவும் நீங்க சொல்ற மாதிரிதான் மூளையில் நடக்கும் மின் அதிர்வுகளை அளந்து சிகிச்சை அல்லது ஆராய்ச்சி செய்யும் முறை இந்த முறையில் இது சாத்தியமில்லையா என்ன? என்றாள் புனி

      “இல்லை neuron கள் neurotransmitters மூலம் ஏற்படுத்தும் மின்சார விசை ஒரே அளவாக இருப்பது இல்லை...என்னை பொறுத்தவரை மிக ஆழ்ந்த எண்ணங்களின் போது அதிக மின்சாரம் வெளிபடுத்த வாய்ப்புண்டு...நாம் சோதனையின் போது அந்த மாதிரியான எண்ணங்களை உருவாக்க வேண்டும். மேலும். நீ சொல்லும் EEG முறையில் வெளியில் இருந்து மொத்தமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே மின்சார உணர்வுகளை  அளக்க முடியும்..ஆனால நான் உருவாக்கிய சிப் மூளையின் எல்லா முடுக்குகளிலும் செல்லக்கூடியது..அதோடு இந்த சிப் எங்கு செல்கின்றது என்பதை வெளியில் இருந்தே நாம் திரையில் அது கொடுக்கும் தகவலின் மூலம் காண முடியும்.

இதை ஏற்கனவே சோதித்துப் பார்த்து இருக்கிங்களா? என்றாள்

    “ஆமாம் ஒருமுறை சோதித்து பார்த்தேன்..செலுத்திய வேகத்தில் வேகமாக சென்று மூளையின் ஒரு பகுதியில் போய் எல்லாம் நின்று விட்டது அந்த இடத்தில்  பல பகுதிகள் உள்ளடக்கி இருந்ததால் என்னால் சரியாக முடிவை எடுக்க முடியவில்லை என்றார்

"இந்த முறை சரியாக இருக்குமா என்ன?"

சோதித்துதான் பார்க்க வேண்டும் என்றார்

   அந்த பெண்ணை அழைத்து செய்யபோவதை விளக்கி..சம்மதம் பெற்று அவளது உடலில் அந்த மிக நுண்ணிய சிப்களை செலுத்தியவுடன் ..முதலில் ரத்தத்தோடு வேகமாக பயணித்தாலும அது மூளையை நோக்கி செல்லவே இல்லை..இதை பார்த்த புனிக்கும் வைத்திக்கும் ஆச்சர்யம்.
.
இவள் சொன்னது உணமைதான் என்றார் வைத்தி.

   சிறிது நேரம் பார்த்தும் பயனில்லை என்பதால் ..வைத்தி சோகமாக திரும்பி வந்து யோசித்து கொண்டு இருக்க..புனி அவரின் அருகில் வந்து நிற்க ...அவர்களுக்குள் என்ன நடக்கின்றது என்பதே புரியாமல் அந்த பெண் அப்பாவியாய் உட்கார்ந்து இருந்தாள்..

புனி வேகமாக அவளை நோக்கி சென்று..

நீ யாரையாச்சும் காதலிக்கின்றாயா என்ன?

அவள் ஆமாம் என்பது போல தலையாட்டினாள்

  புனி மெல்ல சிரித்தாள் ...வைத்தி கண்டுபிடிக்க முடியாத ஒன்றை தான் கண்டுபிடித்தவிட்ட சந்தோசம் அந்த சிரிப்பில் இருந்தது..



((கதையில் மனதை கண்டறியும் முறை கற்பனை..EEG முறை மருத்துவ வழக்கத்தில் இருக்கும் ஒன்று..))

19 comments:

சக்தி கல்வி மையம் said...

அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

கவிநா... said...

வைத்தி, காதல் டாக்டரா ப்ரோமோசன் ஆயிட்டாரோனு நினைச்சேன்...!! எங்கே அவருக்கு அறிவியல் மட்டும் தான் தெரியுது...

புனிதான், அறிவியலையும் படிக்கிறா , மனசையும் படிக்கிறா!!! புனி இஸ் கிரேட்....

ஆமா, அந்த மனசு யார் கிட்ட இருக்குன்னு கண்டுபிடிக்கமுடியாதா?

கதை அருமைங்க கணேஷ்....

கணேஷ் said...

கவிநா... said...//

புனி கிரேட் ஆ..அவளை பத்தி தெரியாது உங்களுக்கு..அடுத்துவரும் கதைகளில் பாருங்க..

மனசையும் கண்டுபிடிக்க வைத்தியிடம் சொல்றேன்..

கருத்துக்கு நன்றிங்க..

ஆனந்தி.. said...

வாப்பா...மின்னல்..:)))

கணேஷ் said...

ஆனந்தி.. said...///

வந்துட்டேன் அக்கா..சொல்லுங்க))))))))

மதுரை சரவணன் said...

அறிவியல் புனைவு .. அருமை. வாழ்த்துக்கள்

கணேஷ் said...

மதுரை சரவணன் said.//
கருத்துக்கு நன்றிங்க..

Philosophy Prabhakaran said...

நண்பா... தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக இடுகை ஒன்றை எழுதுங்கள்...

கணேஷ் said...

Philosophy Prabhakaran said..//

எழுதுகிறேன் நண்பரே...

கருடன் said...

@கணேஷ்

//“நீ யாரையாச்சும் காதலிக்கின்றாயா என்ன?”


அவள் “ஆமாம்” என்பது போல தலையாட்டினாள்//

ஏலேய்!! நீ மனுஷன ஓவர டென்ஷனாக்கர..... :))))

கருடன் said...

@கணேஷ்

எதோ சொல்ல போற மாதிரியே வந்தான்யா... :))

கணேஷ் said...

TERROR-PANDIYAN(VAS) said... ///

அதான் சொல்லிட்டேன்ல நீங்க படிக்கலையா??)))))))))

காதலிச்சா மனசு உங்ககிட்டே இருக்காதாம் அதைத்தான் புனி கண்டுபிடிச்சு இருக்கா..

இது என்னை போன்ற இளைஞ்சர்களுக்கு மட்டும் புரியிற முடிவு))))

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான கதை சகோ...

கணேஷ் said...

தோழி பிரஷா said... //

நன்றிங்க..

கருடன் said...

@கணேஷ்

//இது என்னை போன்ற இளைஞ்சர்களுக்கு மட்டும் புரியிற முடிவு))))//

ஹும்ம்ம்... காதல் படம் நான் கூட பார்த்தேன். மனச தொலச்சிட்டு பரத் கிளைமாக்ஸ்ல ரோட்டல அலைவாரே... :)))

ஆனந்தி.. said...

கணேஷ்...நிறைய யோசிக்கிற...அந்த neuron செல்ஸ் ...நினைவலைகள் பற்றி நீ சொன்ன பாரா ரியல்லி இட் இஸ் குட்...வழக்கம்போலே உன் முடிவு....ஹலோ அந்த வைத்தி..புனி பேரை மாத்து...பெயர் போர் அடிக்குது தம்பி..:)))

கணேஷ் said...

ஆனந்தி.. said...///
அக்கா அது அவங்க பேரு நான் எப்படி மாத்த முடியும்)))

நன்றிக்கா..

கருடன் said...

//அக்கா அது அவங்க பேரு நான் எப்படி மாத்த முடியும்)))//

i like ur replies... :))

கணேஷ் said...

TERROR-PANDIYAN(VAS) said... //

i like ur replies... :))

இதுல ஏதோ உள்குத்து இருக்கா))