தமிழ் மூளை

((உங்களுக்கு வைத்தி, புனி புதியவர்கள் என்றால் ஒரு அறிமுகம்..வைத்தி மிகப்பிரபலமான ஒரு மருத்துவர்..தனது மருத்துவமனையில் செய்ய முடியாதவற்றை தனது ஆய்வுகூடத்தில் செய்பவர்..அவருக்கு உதவியாக இருப்பவள் புனி எனும்  ஒரு மாணவி))
   அந்த பெண் உள்ளே நுழையும்போது வைத்தியும் புனியும்  படித்துக்கொண்டு இருந்தார்கள்.அவள் வந்து அமைதியாக எதிரில் நின்ற பிறகுதான் கவனித்தார்கள்.. பேசத்தொடங்கினாள்

"உங்களின் உதவி வேண்டும்?"

"எதுக்கு என்ன பிரச்சினைக்கு?"என்றார்

    புனியும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அந்த பெண் சொல்வதை கேட்க ஆர்வமானாள்..

    "எனக்கு வர வர மொழியை படிக்க எழுதுவதில் சிரமம் இருக்கின்றது...என்ன எழுத்து இருக்கின்றது என்பதில் இருந்து படித்தவற்றை புரிந்துகொள்வது வரை  பிரச்சினை...இதனால் எதையும் கற்றுகொள்ள முடியவில்லை...பகிரமுடியவில்லை..இந்த பிரச்சினை முன்னர் இருந்தே எனக்குள் இருந்து இருக்கின்றது வீரியம் இப்போதுதான் அதிகமாக இருக்கு...அதான் உங்களிடம் வந்தேன் ஏதாவது செய்து சரிபடுத்துங்கள்"

"உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?"கேட்டார்

     "தமிழ் மட்டும் நன்றாக தெரியும் மற்ற மொழிகள் சொல்லி கொள்ளும்படி இல்லை"

"நீங்கள் படிக்க முனைவது தமிழ சார்ந்தவை மட்டும்தானே?"

"ஆமாம்"என்றாள்

     "சரி பிரச்சினை இல்லை சரிசெய்து விடலாம்.. சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும்..ஆனால் அதுக்கு பிறகு நீங்கள் தமிழை சரியான முறையில் பேசலாம் எழுதலாம்..மற்ற மொழிகள் பற்றி உறுதியாக சொல்ல முடியாது இதற்கு சம்மதம் என்றால் ஒருவாரம் கழித்து வாருங்கள்"

    "சம்மதம்தான் தமிழ் மட்டும்போதும்" மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினாள்

"நீங்கள் எதுக்குமே மறுப்பு தெரிவிக்க மாட்டிங்களா டாக்டர்?" கேட்டாள் புனி

    "எதுக்கு தெரிவிக்கணும் எல்லாமே அறிவியல் சார்ந்த மருத்துவத்தில் சாத்தியமாக இருக்கும் போது"

    "சரி இதை எப்படி செய்ய போகின்றிர்கள்...அதுவும் அறுவை சிகிச்சையின் மூலம நல்லா தமிழ் பேசமுடியுமா என்ன?"


"தமிழ் மட்டுமில்லை எந்த மொழி வேண்டுமானாலும் பேச செய்யலாம்"

    "இப்ப தமிழ் நாட்டுல தமிழ் இருக்கிற நிலைமைக்கு உங்களின் இந்த முறை ரெம்ப பயனுள்ளதாக இருக்கும்" என்றாள் சிரித்துக்கொண்டே

    "இந்த ஒருவாரத்தில் தமிழில் உள்ள வார்த்தைகள், இலக்கண முறை கொண்ட எல்லா தகவலையும் சேகரித்து எனக்கு கொடு முக்கியமாக பழைய தமிழாக இருந்தால் நல்லா இருக்கும்"என்றார்

      "முதலில் என்ன செய்ய போகின்றீர்கள் என்பதை சொல்லுங்கள் எனக்கும் ஆர்வம் அதிகம்"கேட்டாள்

   மொழிகளை பேச புரிந்து கொள்ள நமக்கு உதவுவது மூளையில் உள்ள left mid temporal lobe தான், இதற்கு அடுத்த படியாக உதவுவது frontal and parietal cortex இதில் left mid temporal lobe ல் ஏதாவது பிரச்சினை என்றால் இந்த மாதிரியான பிரச்சினைகள் வரும்... நாம் செய்ய போவது தமிழின் எல்லா வார்த்தைகளையும் அந்த பெண்ணின் மூளை புரிந்து கொள்ள ஏதுவாக  தமிழ் வார்த்தைகள் அடங்கிய ஒரு சிறிய chip ஐ left mid temporal lobe ல் பொருத்தி அதை மூளையோடு சரியாக சேர்ந்து இயங்கும்படி செய்துவிட்டால் பிரச்சினை தீர்ந்தது...அதோடு பல புதிய வார்த்தைகளையும் அந்த பெண் நமது சிப ன் மூலம் தெரிந்திருப்பாள்..நல்ல தமிழ் பேசுவாள் எழுதுவாள்...

    "அப்படின்னா தமிழ் நாட்டில் தமிழை வளர்க்க நவீன முறை இதுவகாத்தான் இருக்கும் "

"முயற்சி செய்வோம்"என்றார்

    புனி தேடிபிடித்த  தமிழ் வார்த்தைகளை மூளையில் பொருத்துவதறக்கான சிப் ல் ஏற்றி தயார் செய்து இருந்தாள்...வைத்தி அறுவைசிகிச்சை சம்பந்தமான பிரச்சினைகளை ஆராய்ந்து தெளிவு பெற்று இருந்தார்....

   அந்த பெண் வந்தாள் ...அறுவை சிகிச்சையின் போது அந்த சிப்போடு பொருத்த வேண்டிய மூளையின் சரியான நீயுரான்ளை மற்றும் நரம்புகளை  இணைத்து சிப்பில் இருந்து தகவல் சரியாக கடத்தபடுகின்றதா எனபதை ஒருமுறை சோதித்து பார்த்துவிட்டு  முடித்தார் வைத்தி.

    முழித்தபிறகு அவளது கையில் ஒரு தமிழ் புத்தகம் கொடுத்து சில நிமிடங்கள்வரை வாசிக்க சொல்லிவிட்டு..


"என்ன புரிகின்றதா? முந்தைய நிலைக்கு இப்ப எப்படி இருக்கு?"கேட்டார்

"எளிமையாக இருக்கு" என்றாள் அந்த பெண்

     "உங்களுக்கு நான் பொருத்திய சிப்பில் அதிகம் பழமையான வார்த்தைகள்...நீங்கள் ஆதிகால தமிழையும் எளிதாக புரிந்து கொள்ளலாம்" என்றார்

நன்றி சொல்லிவிட்டு அவள் கிளம்பிசென்ற சிலமணி நேரத்தில்...

     "நாம் அந்த பெண்ணுக்கு பெரிய தவறை செய்துவிட்டோம்.இதை பற்றி நாம் முன்னமே கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும்...அவள் பாவம்". என்றார் கவலையாக

"ஏன் டாக்டர் ஏதாவது சிகிச்சையில் தவறு நடந்து விட்டதா என்ன?"

    "இல்லை சிகிச்சை எல்லாம் சரிதான்...அவளுக்கு இப்போது இருப்பது நல்ல செயற்கையான தமிழ் அறிவு அதைவைத்து கொண்டு இப்போதைய தமிழ்நாட்டு சூழலில்  எப்படி சமாளிக்க போகிறாள்...இப்போ இருக்கிற தமிழின் நிலமைதான் உனக்கு தெரியுமே...இதை நாம் முதலிலேயே யோசிக்க்காம்ல் இந்த தவறை செய்து விட்டோமே என்ற கவலைதான் எனக்கு" 


(இந்த பிரச்சினை யாருக்காவது இருந்தால் வைத்தியின் முகவரி கிடைக்கும்..கொடுக்கிறேன் சரிசெய்து கொள்ளுங்கள்..புனியின் முகவரி கிடையாது))))

18 comments:

Lakshmi said...

ஆஹா, நல்ல கற்பனைதான்.:)

கணேஷ் said...

Lakshmi said...//

நன்றிங்க...

ஆனந்தி..(மதுரை) said...

/"எனக்கு வர வர மொழியை படிக்க எழுதுவதில் சிரமம் இருக்கின்றது...என்ன எழுத்து இருக்கின்றது என்பதில் இருந்து படித்தவற்றை புரிந்துகொள்வது வரை பிரச்சினை...இதனால் எதையும் கற்றுகொள்ள முடியவில்லை...பகிரமுடியவில்லை..இந்த பிரச்சினை முன்னர் இருந்தே எனக்குள் இருந்து இருக்கின்றது வீரியம் இப்போதுதான் அதிகமாக இருக்கு...அதான் உங்களிடம் வந்தேன் ஏதாவது செய்து சரிபடுத்துங்கள்"//

கணேஷ்..அந்த பொண்ணுக்கு கண்ணுல தான் கோளாறு இருக்கும்...ஸோ..rectina,optic nerve,cornea லஆராய்ச்சி தான் சரி:)))..அடுத்த முறை அதை வச்சும் ஒரு கதை ப்ளீஸ்....ஹ ஹ...

ஆனந்தி..(மதுரை) said...

/"தமிழ் மட்டுமில்லை எந்த மொழி வேண்டுமானாலும் பேச செய்யலாம்"//

நல்லா தான் இருக்கு கற்பனை..ஒழுங்கா எனக்கும் காப்பி ரைட் பாதி கொடுத்திரு :)))))

ஆனந்தி.. said...

//இந்த பிரச்சினை யாருக்காவது இருந்தால் வைத்தியின் முகவரி கிடைக்கும்..//

ஆமா.. வேணும்...ஒரு வெடிகுண்டு வைக்கலாம்னு ஐடியா இருக்கு வைத்தி வீட்டில்...:))))

கணேஷ் said...

ஆனந்தி.. said...///

வைங்க அக்கா அந்த வைத்தியும் என்னை....அவர் செய்வதை கதையாக எழுத சொல்லிகிட்டே இருக்காரு...

ஆனா புனி இல்லாத நேரமா பார்த்து வைங்க சரியா))

ஆனந்தி.. said...

//வைங்க அக்கா அந்த வைத்தியும் என்னை....அவர் செய்வதை கதையாக எழுத சொல்லிகிட்டே இருக்காரு...

ஆனா புனி இல்லாத நேரமா பார்த்து வைங்க சரியா))//

உனக்கும் சேர்த்து தான் குண்டு...:)))

கணேஷ் said...

அப்ப நானும் புனியும் சேர்ந்து இருக்கும்போது வைங்க)))

அண்டத்தில் ஒன்று சேராவிட்டாலும்
குண்டில் ஒன்று சேருவோம்....

இந்த கவிதைக்கு காபி ரைட், டீ ரைட் உங்களுக்குத்தான்..))))

ஆனந்தி.. said...

//அண்டத்தில் ஒன்று சேராவிட்டாலும்
குண்டில் ஒன்று சேருவோம்....

இந்த கவிதைக்கு காபி ரைட், டீ ரைட் உங்களுக்குத்தான்..))))//

ஹ ஹ..எனக்கு பதிவை விட இந்த கம்மென்ட் தான் ரொம்ப பிடிச்சிருக்கு...ஓகே...ஓகே..உன் மொழியில் சொல்ல போனால் ஹோர்மோன்ஸ் விளையாட்டா...:)))

கலக்கு...ரெண்டுபேருக்கும் சேர்த்தே குண்டு வச்சுடுறேன்..புனி ய விட்டால் அதுவும் அறிவியல் கதை எழுதும்...வேணாம் சாமி..:)))

sakthistudycentre.blogspot.com said...
This comment has been removed by the author.
சர்பத் said...

நல்ல கதை

Philosophy Prabhakaran said...

சூப்பர்... இந்த மாதிரி ஒரு வைத்திய முறை வந்துச்சுன்னா மும்பை நடிகைகள் எல்லாருக்கும் ஒரு ஆப்பரேஷனை பண்ணிட வேண்டியதுதான்...

Philosophy Prabhakaran said...

புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

கணேஷ் said...

சர்பத் said...//

மிக்க நன்றிங்க..

கணேஷ் said...

Philosophy Prabhakaran said...//

கருத்துக்கு நன்றிங்க..

கடைக்கு வருகிறேன்)))

பலே பாண்டியா/பிரபு said...

உலவு திரட்டியில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே !!

கணேஷ் said...

பலே பாண்டியா/பிரபு said... //

மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு.

கோமாளி செல்வா said...

சரி சரி வைத்தியின் முகவரி குடுங்க .. நான் போய் அவருக்கு உதவுறேன்.. ஹி ஹி