"புனி"தன்

   ((உங்களுக்கு வைத்தி, புனி புதியவர்கள் என்றால் ஒரு அறிமுகம்..வைத்தி மிகப்பிரபலமான ஒரு மருத்துவர்..தனது மருத்துவமனையில் செய்ய முடியாதவற்றை தனது ஆய்வுகூடத்தில் செய்பவர்..அவருக்கு உதவியாக இருப்பவள் புனி எனும்  ஒரு மாணவி))

  புத்தகத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்த வைத்தியின் எதிரில் தயங்கிய படி நின்றவளை..நிமிர்ந்து என்ன? என்பது போல பார்த்தார்..

  "நான் ஒரு முயற்சி செய்தேன் கொஞ்சம் உருப்படியாக வருவது போல இருக்கு அதை சரியா முடிக்க  உங்க உதவி வேணும்" என்றாள்

"என்ன பண்ணியிருக்கே?"

   "குரங்குக்கும் மனுசனுக்கும் குரோமோசோம்களில் இருக்கும் வித்தியாசத்தை கொஞ்சம் செயற்கையாக மாறுபடுத்தி அதில் இருந்து  வேறொரு உயிரினம் உருவாகிறதா  பார்த்தேன் சாத்தியம் இருப்பது போல இருக்கு"


"இது எப்படி சாத்தியம்?" கேட்டார் வைத்தி

    "குரங்குக்கு உள்ள மொத்தம் 24 குரோமோசோம் நமக்கு 23, குரங்கின் 11&12 குரோமோசோம் தான் சுருங்கி மாற்றம அடைஞ்சி நமக்கு  2-ஆவது  குரோமோசோமா  இருக்கு..... இன்னும் சில குரோமொசோம்களில் மாற்றங்கள் இருந்தாலும் இந்த இரண்டு குரோமொசோம்கள் எப்படி சேர்ந்து தடித்து ஒன்றாக மாறி மனிதனில் பல  மாற்றங்களை தந்ததோ அதே மாதிரி இப்ப மனுசனுக்குள் இருக்கும் இரண்டு குரோமோசோமை  செயற்கையாக  மாற்றி அதை  ஒரு உயிராக வளரவைத்தால் என்ன? என்று செய்துபார்த்தேன். அந்த வகையில் மாற்றம்  செய்து ஒரு செல்லை உருவாக்கி விட்டேன். அதை முழுவதும் வளர வைக்கவேண்டும்..."

"அப்ப நீ உருவாக்கி இருக்கும் செல்லுக்கு 22 குரோமோசோம்தானா?"

  "ஆமாம்..இதுக்கு கருவில் இணைய பொருத்தமாக இன்னொரு ஜோடி  குரோமோசோமை (கருமுட்டையில் கொண்ட) வடிவமைத்து, இருக்கிறேன். எனவே, இந்த  இரண்டையும் in-vitro முறையில் இணைக்கும்போது இனைவதில் எந்த ஒரு பிரச்சினையும் வராது ..."என்றாள்

  வைத்தி அவளை  ஆச்சர்யமாக பார்த்தார்..என்ன வேலை செய்து இருக்கிறாள் இவள்..!

  "அப்படியே வளரவைத்தாலும்  இது முழு கருவாக வளரும் என்பதில்  முழு நம்பிக்கை எனக்கில்லை" என்றார்

"முயற்சி செய்து பார்க்கலாமே" என்றாள்

  சரி என்றவர் அதற்குத் தயாரானார். இரண்டு செல்களையும் சரியாக இணைத்து கருவாக வளரவைத்ததில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வளர்ந்தது. கவனமான கண்காணிப்பில் பல மாதங்கள் கடந்து இருந்தன.

    அவர்களின் பெரிய ஆச்சர்யம் அந்த கரு அதிக வேகமாக வளர்ந்ததுதான். சாதாரன மனிதக்கரு ஆறு மாதத்தில் என்ன வளர்ச்சி இருக்க வேண்டுமோ, அது  இதில் மூன்று மாதங்களில் வளர்ந்து இருந்தது. வளரும் உருவம் மனித அமைப்பைக்  கொண்டு இருந்தாலும் அதன் கணிக்க முடியாத வளர்ச்சியால் அவர்களுக்கு இந்த கரு எப்போது முழுமை அடையும் என்பதில் குழப்பம் இருந்தது...
    குழந்தையாக வளர்ந்து அதை வெளியில் எடுத்து செல்லை சோதித்து பார்த்தபோது இருந்த மொத்த குரோமோசோம்களின்  எண்ணிக்கை 44 -ஆக  இருப்பதை உறுதி செய்து ஆச்சர்யபட்டார்கள்.



     புனி உனது ஆசை நிறைவேறி விட்டது என்றார்...இதுக்கு ஒரு பெயர் வைக்கலாமா என்றாள்...அப்போது அது கையை காலை ஆட்டியபடி இருந்தது....
 

"இதை நீ கண்டு பிடிச்சதால் புனிதன் என்று  வைக்கலாமே?" 

     அவளும் சிரித்து கொண்டே சம்மதித்தாள்.... அதன் நிறம் கொஞ்சம் வேறமாதிரியாக இருந்தது. அவர்கள் காத்து இருந்தது அதிலுள்ள சிறப்பு அம்சம் என்ன இருக்கின்றது என்பதை அறியத்தான்.

      மறுநாள் சோதித்து பார்த்தபோது வைத்திக்கு அதிர்ச்சி. அதன் உடலில்   எந்த பொருள்கள் சென்றாலும் அது உருகி அழிந்தது.... ரத்தம் எடுக்க ஊசியை குத்தியபோதுதன் உணர்ந்தார். எலும்பு அமைப்புகளை பார்க்கும்போது என்ன செய்தாலும் உடைக்க முடியாதவை. சொல்லப்போனால் உலகத்தில் இப்போது இருக்கும் எந்த ஒன்றை வைத்தும் புனிதனை அழிக்க முடியாது என்பதை சரியாக  வைத்தி உணர்ந்து இருந்தார்.

    இருவரும் கவலையில் இருந்தனர்....
ஏதாவது பிரச்சினை என்றால் புனிதனை அழிப்பது சாத்தியமில்லை. அதே நேரத்தில் அவனால் எந்தவொரு பிரச்சினையும் இல்லையென்றால் ஒருவிதத்தில் வெற்றி. எதுவும் புனிதனின் வளர்ச்சிக்கு பிறகுதான் தெரியும்.

     உணவுமுறையில் எதுவுமே சரியில்லை...கண்ணில் படுவதை பிய்த்து திங்க ஆரம்பித்து இருந்தான்...கையை கட்டி போட்டும் பயனில்லை..புனிதனை பற்றி எதையுமே புரிந்துகொள்வது முடியாமல் போனது..அவனை வெளியில் இப்படியே நடமாடாமல் அடக்கி வைத்து இருப்பது முடியாத காரியம்..அதே நேரத்தில் ஏதாவது செய்து அழிப்பதுவும் சாத்தியமில்லை....


     என்னதான் யோசித்தும் புனிதனைப் புரிய முடியவில்லை என்பதால் அழிக்க முடிந்த வழிகளை யோசித்தார்கள்..புனிதனை உருவாக்கியதில் புனிக்கு முதலில் கொஞ்சம் சந்தோசம். இருந்தாலும் இப்போது பெரிய கவலையில் இருந்தாள்...புனிதனை அழிக்க முடியவில்லை என்பதை நினைத்து ...

      நாட்கள் கழிய புனிதனின் சேட்டைகள் அதிகமானது...செயல்கள் எல்லாம் வித்தியாசமாக இருந்தன..வேகமான வளர்ச்சியால் சில நாள்களில் நடக்க ஆரம்பித்து இருந்தான்..

"இவனை அழிக்க ஒரு வழியுமில்லையா டாக்டர் ?"

"அதான் நானும் முயற்சித்து தோத்துட்டேன்" என்றார்

"எல்லாம் என் தப்புதான்..இதை செய்யாமல் இருந்து இருக்கலாம்"

"ஒரே வழி இருக்கு"என்றார்

"என்ன வழி?"

"புனிதனின் கதையை முடிக்க ஒருவனால் மட்டுமே முடியும்"

   "யாரது? அவனிடம் சொல்லி வேகமா முடிக்க சொல்லுங்க அடுத்து இவன் என்ன செய்வான்னு நினைக்கவே பயமா இருக்கு" என்றாள்


"சரி கணேஷிடம் பேசி "புனி"தன் கதையை முடிக்க சொல்கிறேன்."என்றார்.





(இதில் "புனி"தன் கதை என்பது கணேஷ் மேலே  எழுதிய கதை ....புனிதனின் உயிர் இல்லை..)

15 comments:

கவிநா... said...

ரொம்ப அருமையான கதை...

கணேஷ் ரொம்ப பிசியா கதை எழுதிட்டிருப்பார். அவரைப்போய் புனிதன் கதையை முடிக்கச் சொன்னா எப்படி வைத்தி சார்..?

சமுத்ரா said...

story over???

இம்சைஅரசன் பாபு.. said...

கணேஷ் சீக்கிரம் கிளம்பி போங்க புனிதனை முடிச்சிட்டு வாங்க ........அல்லது அது உன்னை தேடி இங்க வந்திர போகுது

TERROR-PANDIYAN(VAS) said...

//"சரி கணேஷிடம் பேசி புனிதனின் கதையை முடிக்க சொல்கிறேன்."என்றார//

கணேஷ்! இப்போ அவன் கதை எப்படி முடிச்சேன் சொல்ற.. இல்லை உன் கதை முடிக்கிறத பத்தி நாங்க யோசிப்போம்... :))

கணேஷ் said...

TERROR-PANDIYAN(VAS) said..

அந்த கணேஷ் வேற நான் வேற))))

கணேஷ் said...

இம்சைஅரசன் பாபு.. said///

முடிச்சிட்டேன்..கதையை திரும்பி ஒருமுறை படிச்சு பாருங்க))))

கணேஷ் said...

TERROR-PANDIYAN(VAS) saiத//

இதோ இப்படித்தான்..

"""""சரி கணேஷிடம் பேசி புனிதனின் கதையை முடிக்க சொல்கிறேன்."என்றார"""""

சந்தேகம் என்றால் மேலே கதையில் சரிபார்த்து கொள்ளவும்..)))

ஆனந்தி.. said...

welcome back...:)) comment u later..

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்

//சந்தேகம் என்றால் மேலே கதையில் சரிபார்த்து கொள்ளவும்..)))//

ஹா..ஹா.. Excellent கணேஷ்... நிஜமா நீங்க புத்திசாலிதான்... வாழ்த்துகள்!!

(But தயவு செஞ்சி அவனை எப்படியாவது கொல்லுயா.. தலை வெடிக்குது.. :) )

கணேஷ் said...

யாரைங்க?

வைதியியா???பாவம் அவரு வயசான மனிதர் அவரை ஏன் கொல்லனும்?))))

உமர் | Umar said...

நல்லா முடிச்சிருக்கீங்க கதைய!

:-)

ஆனந்தி.. said...

நல்லா கொண்டு போயிட்டு...மீண்டும் க்ளைமாக்ஸ் இல் ஒரு ட்விஸ்ட் வச்சு முடிச்சு எங்களை யோசிக்க வச்சாச்சா?:)) பட் நல்லா கொண்டு போன கணேஷ்...இன்னும் நல்லா முடிச்சிருக்கலாமோ னு தோணிச்சு...'புனி' தன் கதை அப்டிங்கிறது செம சூப்பர் கதையில் satisfy கொஞ்சம் பண்ணல தான்..பட் ரொம்ப சுவாரஸ்யமான கதை..நீ இதை தொடர்கதையா போட்டு இருக்கலாம்...:))

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரா இருக்குங்க...

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப அருமையா இருந்தது.

சிவகுமாரன் said...

கொன்னுட்டீங்க போங்க. (புனிதனை )