உண்மையா..

நாம இப்படி தனியா சந்திச்சு பேசி எவ்வளவு நாள் ஆச்சு?


     ”
ஆமாம் .இந்த தனிமையில் என்ன பேசணுமா பேசிக்கோ,ஏதாவது கொடுக்கணும்னு நினச்சா கொடுக்கலாம்" என்றேன்

    ”
பேச நிறையா இருக்கு கணேஷ் ஆனா கொடுக்க ஒண்ணுமே எடுத்துவரலியே நீ முதலலயே சொல்லி இருக்கலாம்ல?”

நீ புரியாம சொல்றியா இல்லை புரிஞ்சுதான் தெரியாத மாதிரி நடிக்கிறியா?”

    ”
நான் எதுக்கு நடிக்கணும் ஏதாவது கொடுன்னா என்ன கொடுக்கிறது அதான் ஒன்னும் எடுத்துட்டு வரலியே..நீதான் புக அதிகம் படிச்சு படிச்சு யாருக்குமே புரியாத மாதிரி பேச ஆரம்பிச்சிட்டே என்றாள் அப்பாவியாய்

    ”
சரி விடு நீ திருந்தமாட்டே ஏதோ நிறையா பேசனும்னு சொன்னியே அதையாவது சொல்லித்தொலை"

    ”
ரெண்டு பேருக்குள்ள உணமையான அன்போ காதலோ இருந்தா ஒருவரை பத்தி நினைக்கும்போது அது மற்றவருக்கும் தெரியுமா என்ன?”

எதுக்கு கேட்குறே? ஏதாவது படத்துல பார்த்தியா என்ன?”

    ”
இல்லை எப்பாவது உன் நினைப்பு வருமா...... அப்ப யோசிப்பேன் உன்னை மனசுல நினைக்கும்போது அது உனக்கு தெரிஞ்சு நீயும் என்னை நினைப்பியான்னு ஒரு சந்தேகம் அதான்..
 

     
நீ சொல்றது ESP(extra sensory power) மாதிரி...டெலிபதி இது எல்லாம் சும்மா நடக்காது...சிலர் சொல்லிக்கிட்டு இருக்காங்க..ஆனா உணமையில்லை...நன்மையோ தீமையோ உன் மனதால் உனக்கு மட்டுமே பலன்..மத்தபடி அதைவச்சு தகவல் அனுப்புறது, ஏதாவது சாமியார் மனதால் கட்டியை,நோயை குணபடுத்துகிறேன் சொல்றதும் எல்லாம் சும்மா..அந்த மாதிரிதான் என்னை நினைச்சதும்..அதிகமா மனசுல என்ன நினைக்கிறியோ அதன் தாக்கம் இருக்கும்...என்று சொல்லி முடிக்கும் முன்.
 
  உன்கிட்டே போய் இதை சொன்னேன் பாரு..எவ்வளவு ஆசையா காதலோடு சொன்னா நீ அது இதுன்னு சொல்லி உன் புத்தியை காட்றே...உன்னைபோய் தினமும் நினச்சு நீயும் என்னை நினப்பேன்னு இருந்தேன் என்னை சொல்லணும் என்றாள் கோபமாய்..

  சரி சரி இது உண்மையா பொய்யான்னு தெரியணும் அவ்வளவுதானே..இன்னைக்கு ராத்திரி  என்னை அதே மாதிரி நினை நீ நினைக்கிறது எனக்கு தெரியுதான்னு பார்க்குறேன் சரியா?”

 
   வேறெதுவும் பேசாமல் பிரிந்தோம்...எனக்கு இதன் மேல் நம்பிக்கையில்லை என்றாலும் அவளுக்காக சொல்லிவைத்தேன்...இன்று என்ன நடந்தாலும் நாளைக்கு அவளிடம் ஆமாம் நீ நினைச்சது எனக்கு தெரிஞ்சதுன்னு பொய் சொல்ல வேண்டும் சந்தோசபடுவாள்...வீடு வந்து சேர்ந்தேன்

    படுக்கும்முன் நினைவில் வந்தாள்...எவ்வளவு அதிகமாக காதலிக்கிறாள்.அவளிடத்தில் முதலிலேயே ஆமாம் என்று பொய் சொல்லிருக்கலாம் ரெம்ப சந்தோஷபட்டிருப்பாள்....இப்போது என்னை நினைக்க ஆரம்பித்து இருப்பாள்...மெதுவாக கண் மூடினேன்..மனம் வெறுமையாக மாறியது..கடைசியாக இருந்தது அவள் நினைவுதான்...எப்போது மறந்தேன்...தூங்கினேன்' தெரியாது...

  கனமான போர்வை விலகியதால் டெல்லி காலைகுளிரின் தாக்கத்தால் வேகமாக இழுத்து மூட முயலும்போதுதான் பார்த்தேன்..மணி 7:15 ஆகியிருந்தது..அலுவலகம் போக வேண்டும்...நேரம் ஆகிவிட்டது...எழுந்தேன்..வலப்புற சுவற்றில் ஐன்ஸ்டீன் சிரித்து கொண்டு இருந்தார்...கடைசியாய் மறந்துபோன அவளின் நினைவோடு ஏதோ ஒன்று மனதில் ஆழமாய் மீதம் இருப்பதாக ஒரு உணர்வு ...நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது...இது கனவா இல்லை உணமையில் அவள் நேற்றிரவு என்னை நினைத்து இருப்பாளா? பின்னர் அவளிடம் இது பற்றி கேட்க வேண்டும்..

23 comments:

சமுத்ரா said...

Sooooooooooooo???

MANO நாஞ்சில் மனோ said...

நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்...

கணேஷ் said...

Samudra said...//

என்ன ஆச்சு...உங்களுக்குத்தான் சிறுகதை பிடிக்காதே பின்னே எதுக்கு படிச்சிங்க)))))

கணேஷ் said...

MANO நாஞ்சில் மனோ said//

நன்றிங்க

கவிநா... said...

//அவளின் நினைவோடு ஏதோ ஒன்று மனதில் ஆழமாய் மீதம் இருப்பதாக ஒரு உணர்வு ...நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது...இது கனவா இல்லை உணமையில் அவள் நேற்றிரவு என்னை நினைத்து இருப்பாளா? பின்னர் அவளிடம் இது பற்றி கேட்க வேண்டும்..//

சீக்கிரம் கேட்டு சொல்லுங்க கணேஷ்... சஸ்பென்சா இருக்கு....

கணேஷ் said...

சரி சொல்றேன்..

இம்சைஅரசன் பாபு.. said...

முதல் தடவையாக பின்னூட்டம் இடுகிறேன் .....அதனால .......
நல்ல இருக்கு கணேஷ் .....(உண்மைலேயே நல்ல இருக்கு மக்கா )

ஆனந்தி.. said...

//ஆமாம் .இந்த தனிமையில் என்ன பேசணுமா பேசிக்கோ,ஏதாவது கொடுக்கணும்னு நினச்சா கொடுக்கலாம்" என்றேன்//

ஸ்டார்டிங் ஏ செம..செம..:))

ஆனந்தி.. said...

//சரி விடு நீ திருந்தமாட்டே ஏதோ நிறையா பேசனும்னு சொன்னியே அதையாவது சொல்லித்தொலை" //

ப்ச்..நீ ரொம்ப நல்லவன் தம்பி...நீ நல்லா இருக்கணும்...:)))

ஆனந்தி.. said...

/இல்லை எப்பாவது உன் நினைப்பு வருமா...... அப்ப யோசிப்பேன் உன்னை மனசுல நினைக்கும்போது அது உனக்கு தெரிஞ்சு நீயும் என்னை நினைப்பியான்னு ஒரு சந்தேகம் அதான்.”.//

இதுக்கு தான் அதிகமா குணா படம் பார்க்க கூடாதுங்கிறது..:)))

ஆனந்தி.. said...

அப்போ டெலிபதி னு ஒன்னு டுபாக்கூர் ஆ கணேஷ்????

ஆனந்தி.. said...

அந்த பினிஷிங் ரொம்ப பிடிச்சது கணேஷ்...ஏன் தெரியுமா...அது பிரக்டிகல் கூட...அதே சமயம் ஊகிப்பது பார்வையாளர்களின் கையில்...நல்லா இருக்கு வழக்கம்போலே உன் டச் இல்...:)

கணேஷ் said...

என்னக்கா நீங்க கேட்கிறதை பார்த்தா டெலிபதி ன்னு சொல்லி யரோ நல்லா ஏமாற்றியது மாறி இருக்கு))))

நன்றிக்கா..

கணேஷ் said...

இம்சைஅரசன் பாபு.. said///

பின்னுட்டம் பிரச்சினை இல்லை...நீங்க வந்ததுக்கு நன்றிங்க))))

Kousalya Raj said...

@@ ganesh said

//பின்னுட்டம் பிரச்சினை இல்லை...நீங்க வந்ததுக்கு நன்றிங்க//

நான் வந்திட்டேன்...கதை படிச்சிட்டேன்...கிளம்புறேன்.

:))

Kousalya Raj said...

ஆனந்தி மாதிரி வரி வரியா வர்ணிக்க நேரம் இன்மையால், ஒரே வரியில் சொல்றேன்...

"கதை கதை மாதிரி இருக்கு" :))

கணேஷ் said...

கதையை கதையாக படிச்சதுக்கு நன்றிக்கா..

Philosophy Prabhakaran said...

கணேஷ்... காதலியின் உணர்வுகளை கச்சிதமாக பிரதிபலிக்கின்றன வார்த்தைகள்... நிச்சயம் நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது...

அன்புடன் நான் said...

கதை உயிரோட்டமாய் செதுக்கி இருக்கிங்க ... ட்=உணர்வுள்ள கதை நன்றி... பாராட்டுக்கள்.

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் கதை ரொம்ப நல்லா இருக்கு.

Prabu Krishna said...
This comment has been removed by the author.
Prabu Krishna said...

ingae paarkkavum

விருது பெற்றவர்கள்- விளங்காச் செய்தி இடுகை!! ஜனவரி 2011

Philosophy Prabhakaran said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html