சில கண்ணீர்கள்..

ஏதாவது சொல்லித்தான் தொலையேன்

என்ன செய்யன்னு...தெரிந்தால் சொல்ல மாட்டேனா என்ன? என்றேன்

நிலமையை கொஞ்சம் முழுசா புரிஞ்சு யோசி என்றாள்

  மூன்று வருட காதலை திருமணத்தில் எப்படி முடிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டிய தருணத்தில் இருந்தோம்..இதுவரை வீட்டுக்கு தெரியாமல் காதலித்தது பெரிய விசயமாக இல்லை..திருமணத்திற்காக சம்மதம் பெறுவதின் கஷ்டம இப்போது புரிந்தது..எப்படி சொல்ல?மறுத்தால் என்ன செய்ய?முதலில் யார் வீட்டில் சொல்வது?

    “என் வீட்டில் முதலில் சொல்லி உன் பெற்றோரிடம் பேச சொல்கிறேன் இதில் ஏதும் பிரச்சினை வந்தால் பின்னர் பார்த்து கொள்ளலாம் என்றேன்.

சொல் என்ன நடக்கின்றது பார்க்கலாம் என்றாள் சோகமாய்.

   ஒருவிதமாக என் பெற்றோரிடம் சொல்ல கொஞ்சம் எதிர்ப்புக்கு பிறகு ஒருவழியாக சம்மதித்து அவளின் வீட்டில் பேசபோனோம்...அவளின் அப்பாவிடம் சொன்னவுடன் அவளை அழைத்து கேட்டார் ...பேச்சில் கோபம் இருந்தது...

   யோசித்து விட்டு சொல்வதாக சொல்ல திரும்பினோம்,அடுத்து வந்த நாள்களில் நாங்கள் சந்திக்கவில்லை...இரண்டு நாள்கள் கழித்து அவளின் அப்பா வந்து ஜாதக பொறுத்தம் பார்க்கலாம் பொருந்தி இருந்தால் சம்மதம் என்று சொல்லிவிட்டு சென்றார்...

மறுமுறை நாங்கள் சந்திக்கும் போது அவள் சோகமாகவே இருந்தாள்...

    “அதான் திருமணத்திற்கு சம்மதிச்சிட்டுங்களே பின்னே ஏன் உம்னு இருக்கே?

இல்லே ஜாதகம் சரியா பொருந்தலைன்னா என்ன செய்ய?

இதுவேற பிரச்சினையா? என்றேன்

   “ஒன்று செய்யலாம் நாமே ஜாதகம் பார்க்கலாம் ஏதும் பிரச்சினை இருக்கா இல்லையா தெரிஞ்சிகிட்டா நிமதியாக இருப்பேன் என்றாள்


சரி என்ற சொல்ல ஒரு நாள் இருவரும் ஜாதகத்தை எடுத்து கொண்டு பார்க்க சென்றோம்..

   குடும்ப ஜோதிடர்தான்... சிறிய அறை நாங்கள் போனபோது தனியாகத்தான் இருந்தார்..எங்கள் காதலை பற்றியும் அதுக்கு பிறகு வீட்டில் நடந்ததை பற்றியும் சொன்னோம்..சரி பார்க்கிறேன் என்று சொல்லி வாங்கி கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு..

    “இல்லை இந்த இரண்டு ஜாதககாரர்களும் திருமணம் செய்ய கூடாது என்றார் அவரது பாணியில்..அதற்குண்டான விளக்கங்களை அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ..அருகில் நின்று இருந்தவள் அழ ஆரம்பித்து விட்டாள்..அதை பார்த்தவுடன் அவர் சொல்வதை நிறுத்திவிட்டு...

ஏன் இப்ப அழுகிறாள்? என்னிடம் கேட்டார்.

நான் அவளை பார்க்க கண்களில் கண்ணீர் வழிந்த நிலையில் அழுது கொண்டு இருந்தாள்..

    “நான் இவனை ரெம்ப காதலிக்கிறேன் பிரிந்து வாழ்வது கஷ்டம..ஜாதகம் வேறு பொறுத்தம் இல்லை என்று சொல்றீங்க... வார்த்தை உடைந்தது..

நான் என்ன செய்ய இருப்பதை சொன்னேன் என்றார் ஜோதிடர்,

    “நீங்கள் நினைத்தால் எங்கள் காதலை சேர்த்து வைக்கலாம் ..எங்கள் வீட்டில் இருந்து பார்க்க வருவார்கள் அவர்களிடம் பொருத்தம் இருப்பதாக சொன்னால் தான் எங்கள் திருமணம் நடக்கும்..இவனை தவிர வேறு யாரயும் பிடிக்காது...திருமணமும் செய்ய மாட்டேன்..என்றாள் அழுது கொண்டே.

   அவர் கொஞ்ச நேரம் தலையை குனிந்து யோசித்தார்....முதன்முறை அவள் அழுது பார்க்கிறேன். கொஞ்சம் கஷ்டமாக இருந்தது..ஏதும் பேசவில்லை..

சரி வீட்டில் இருந்து வந்து கேட்டால் பொய் சொல்கிறேன் என்றார்.

அவருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு வெளியில் வந்தோம்...

எதுக்கு அப்படி அழுதே?

   “பின்னே என்ன செய்ய சும்மா சொன்னா அவரு கேட்பாரா என்ன அதான் அழுத மாதிரி நடிச்சேன்என்றாள்

அடிப்பாவி நடிச்சியா நான் பயந்து போனேன்..

    “அழுகலைன்னா அவர் மனசு எப்படி மாறும்..இன்னும் முழுசா அவரை நம்ப முடியாது..வீட்டில் இருந்து வந்து கேட்கும்போது அவர் பொய் சொன்னால்தான் ஆச்சு..இல்லேன்னா நாமும் எங்கேயாவது ஓட வேண்டியதுதான்

இல்லை அவர் நீ அழுததை நம்பிட்டார்.கண்டிப்பா பொய் சொல்லுவார்..

   அடுத்து வந்த நாளில் இருவீட்டாரும் போய் கேட்க எல்லாம் பொருந்தி இருப்பதாக் சொன்னதால் திருமணத்திற்கான வேலைகளை தொடங்கினார்கள்...

   திருமணத்திற்கு ஜோதிடரும் வந்து இருந்தார்..ஒருவழியாக திருமணம் முடிந்தது..இரண்டு வாரங்கள் கழித்து வெளியில் செல்லும் போது அந்த ஜோதிடரை பார்க்க நேர்ந்தது...நல விசாரிப்புக்கு பின்..

    “நீங்கள் பொய் சொன்னதுக்கு நன்றி..என்றுமே மறக்க மாட்டேன் என்று சொல்லிகொண்டே அப்போதும் அழுதாள்.

    “இதிலே என்ன இருக்கு எதிர்காலத்தில் நீங்கள் நல்லா இருந்தா போதும் அழாதேம்மா..எல்லாம் சரியா இருக்கும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்..

    “அடிப்பாவி அப்பதான் காரியம் ஆகணும் அழுதே இப்ப எதுக்கு இந்த நடுத்த தெருவில் அழுகை

    இது நடிப்பு இல்லை..அவர் மட்டும் பொய் சொல்லியிருக்கவில்லை என்றால் இப்போது நமது நிலையை யோசித்து பார்..எவ்வளவு கஷ்டபட்டுருப்போம் அதான் என்னையறியாமலே அழுதுட்டேன் என்றாள் சோகமாக.

18 comments:

Arun Prasath said...

இவங்க எப்போ அழுவாங்கன்னு யாருக்குமே தெரியாது :)

கணேஷ் said...

Arun Prasath said...//

யாருங்க?)))

Anonymous said...

மனம் கனக்க செய்யும் பதிவு

கணேஷ் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...//

இது வெறும் கதைதாங்க))

கருத்துக்கு நன்றி.

arasan said...

அசத்தல் கலக்குங்க

கணேஷ் said...

அரசன் said... //

நன்றிங்க..

Philosophy Prabhakaran said...

அவ்வ்வ்வ்.... இதிலும் உங்க சயின்ஸ் பிக்ஷன் டச்சை எதிர்பார்த்துக்கொண்டே படித்து இறுதியில் பல்பு வாங்கிவிட்டேன்...

ஆனந்தி.. said...

வித்யாசமான அப்ப்ரோச்சில் கதை முடிவு..நல்லா இருக்கு கணேஷ்..

கணேஷ் said...

Philosophy Prabhakaran said... //

பிரச்சினை இல்லை..அடுத்த கதை எழுதுகிறேன்..வாங்கிய பல்பை திருப்பி கொடுத்துருங்க)))_

கணேஷ் said...

ஆனந்தி.. said...//

உங்களின் பொய்க்கு நன்றி))))

கவிநா... said...

ஹாய் கணேஷ்... உங்க காதலி ரொம்ப புத்திசாலி.... :)))

கணேஷ் said...

எப்படி உங்களுக்கு தெரியும்)))

கவிநா... said...

நேத்து அவங்களை பார்த்தேன், கணேஷ் புத்திசாலி இல்லைன்னு சொன்னாங்க.
அப்படினா, அவங்க புத்திசாலிதானே..!! :)

கணேஷ் said...

ம்ம உணமைதான்))

THOPPITHOPPI said...

அருமையான முடிவு

குறையொன்றுமில்லை. said...

நல்லகதை கொடுத்திருக்கீங்க கணேஷ.

கணேஷ் said...

THOPPITHOPPI //

நன்றிங்க..

கணேஷ் said...

Lakshmi said...///

நன்றிம்ம்மா....