சில விசயங்கள - 1

   இதில் கொஞ்சம் ஐன்ஸ்டீன் புராணம்.....அவரின் கண்டுபிடிப்புகள், தனிமை கலந்த அறிவியல் ஆராய்ச்சிகளை வைத்து சிலருக்கு அவர் உம்னாமூஞ்சி என்று நினைக்கத்தோன்றும்...உணமையில் ஐன்ஸ்டீன் நகைச்சுவை உணர்வு கொண்டவர்..

  அதோடு இல்லாமல் அவருக்கு இசையும் இயற்க்கையும் ரெம்ப பிடிக்கும்,நன்றாக வயலின் வாசிப்பார்..முறையாக கற்றவரும்கூட...அவரின் முதல் காதல் மனைவிக்கு இவரின் இசை பிடிக்குமாம்..இனிமையான இசையால் காதலியை மயக்கி இருக்கிறார்..

   அவர்களுக்கு திருமணம் நடந்து...சில காரணங்களுக்காக பிரிய நேர்ந்தது பின் அவருக்கு கிடைத்த நோபெல் பரிசை அவரின் காதல மனைவிக்கு கொடுத்தார்..காதலிக்கும்போதே சொல்லி இருந்தாராம்..பரிசு கிடைத்தால் கொடுப்பதாக..அதுக்கு பிறகு வேறொரு திருமணமும் செய்து கொண்டார்..

  கிழே உள்ள படத்தை பாருங்கள்..இது 1951 ஆம் ஆண்டு அவரின் 72 வது பிறந்தநாளின் போது எடுக்கபட்டது...அவர் இப்படி நாக்கை கிண்டலாக வெளியில் (நீ)காட்டுவதற்கு காரணம்..அப்போது ஐன்ஸ்டீன் புகழின் உச்சியில் இருந்தார்..அன்றைய நாளில் பத்திரிக்கைகாரர்கள் அவரை புகைப்படம் எடுத்துக்கொள்ள, அவரை அழகாய் சிரிக்க சொல்லி நகர விடாமல் சூழ்ந்து கொண்டனர்..அதனால் எடுக்கும் புகைப்படத்தை கிண்டலாக மாற்ற தனது நாக்கை வெளியில் நீட்டியிருக்கிறார்


   இது அவர் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட அறிய புகைப்படம்..மற்றபடி எல்லா புகைப்படங்களும் சாதாரணமானவை..இது ஒன்றுதான் அவரின் சந்தோஷமான முகபாவத்தை எடுத்து சொல்லும் படம்...புகழ்பெற்றதும்கூட..

   அடுத்து அவர் சொல்லும் நகைச்சுவை வாக்கியங்கள்...நிறையா சொல்லி இருந்தாலும் ஒன்றை பார்ப்போம்... அவர் 1905ஆம் ஆண்டு தனது special theory of relativity (SR) வெளியிடுகிறார்..சிலர் அதை யாருக்கும் புரியவில்லை..ஐன்ஸ்டீன் அதை சரியாக விளக்கவில்லை அல்லது விளக்க வேண்டும் என்று சொல்ல..மனிதர் எளிமையாக ஒரு வாக்கியத்தை சொல்கிறார்..அது..


"Put your hand on a hot stove for a minute, and it seems like an hour.
 Sit with a pretty girl for an hour, and it seems like a minute.
 THAT'S relativity."

   இதன்மூலம் சொல்ல வருவது time is relative எனபதுதான்....SR ன் படி பார்த்தால் காலம் தனித்து இருக்காது..ஒன்றை சார்ந்து மாறுபடும்...அல்லது அறிவியல் விதிகள் (LAW OF SCIENCE) எல்லா இடங்களிலும் பொதுவானதாக இருக்கும் என்பதை உணர்த்துவதாக இருக்கலாம்...

    அவருக்கு காதலின் அனுபவம் இருந்திருப்ப்பதால் இதை சொல்லியிருப்பார் ....இருந்தாலும் நகச்சுவை நிறைந்த எளிமையான விளக்கம்..

    இதுவரை ஒரு பெண்ணோடு அமர்ந்து வீணாக  நேரத்தை போக்கி பழக்கம் இல்லை..எனவே நான் நேரடியாகவே SR படித்து புரிந்து கொண்டேன்..

   அடுத்து கொஞ்சம் கவிதை மாதிரி....ஏற்க்கனவே காதல் கவிதைகள் எழுத  காதலில் விழவேண்டிய அவசியமில்லை என்று சொல்லி இருக்கிறேன்..இந்த நான்கு வரிகளுக்காக ஒரு பெண்ணின் பின் சுற்றி..அவளை திரும்பிபார்க்க வைத்து காதலை சொல்லி..அவளுக்கு முகத்தில் வர்ணம் பூச கிரீம் வாங்கி கொடுத்து அழகாக்கி அதுக்குப்பிறகு வர்ணித்து கவிதைகள் படைப்பதற்கு...காசில்லாமல் கற்பனையில் எழுதுவது தேவலை..கற்ப்பனை காசா பணமா?.....போதும் நான் ஏதாவது சொல்ல கவிதைகள் எழுதி காதலை வழர்ப்போர்கள் சண்டைக்கு வருவார்கள்..

எழுத வார்த்தைகள்
கிடைக்காததால்  - என்
மனதில் உணர்வுகுப்பைகளாய்
உன் காதல்..
*******

கவிதைகள் எழுதிவிட்டு
என் பெயர் போட
தயங்குகிறேன் எழுதும்
கவிதைகள்  -உன்
விழிகளிடம் கற்றதால்..

*******
கண்களை மூடினால
இமைகளில் நீ இருந்தும்
வெளியில் தேடுகிறேன் உன்னை..

*******
முயற்சித்து தோற்றுத்தான்
போகிறேன். உன்
விழிபேசும் மொழிகளை
சரியாக மொழிபெயர்க்க...
**

12 comments:

ஆனந்தி.. said...

ம்ம்...ஐன்ஸ்டீன் பத்தி சுவாரஸ்ய தகவல்கள்...

ஆனந்தி.. said...

/இதுவரை ஒரு பெண்ணோடு அமர்ந்து வீணாக நேரத்தை போக்கி பழக்கம் இல்லை..எனவே நான் நேரடியாகவே SR படித்து புரிந்து கொண்டேன்..//
முடியலப்பா சாமி..:)))

கணேஷ் said...

முடியலப்பா சாமி..:)))././/

அக்கா இதை பூஜை அறையில் சொல்லணும்)))

குறையொன்றுமில்லை. said...

ஐன்ஸ்டீன் பற்றியதகவல்கள் புதியதாக தெரிந்துகொண்டேன்.

உமர் | Umar said...

//அவர் 1905ஆம் ஆண்டு தனது special theory of relativity (SR) வெளியிடுகிறார்...

மனிதர் எளிமையாக ஒரு வாக்கியத்தை சொல்கிறார்..அது..

... THAT'S relativity.//

ஐன்ஸ்டீன் தொடக்கத்தில் தான் முன்வைத்த கோட்பாட்டை Special Relativity என்று அழைக்கவில்லை. Max Planck தான் அந்த சொற்றொடரை தொடர்ந்து உபயோகித்து பின்னர், ஐன்ஸ்டீனும் அதனையே உபயோகிக்கத் தொடங்கினார் என்று கூறப்படுகின்றது.

Hot Stove, Pretty Girl உதாரணத்தை அவர் 1905 ல் கூறியிருப்பாரா என்பது சந்தேகமே. இந்த உதாரணம் பின்னர் கூறப்பட்டிருக்க வேண்டும் அல்லது Relativity என்னும் வார்த்தை இந்த உதாரணத்தில் (வேறு யாராலும்) பின்னர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

---
ஐன்ஸ்டீன் இந்த சொற்றொடரை தொடக்கத்தில் உபயோகிக்கவில்லை என்பதை கூறும் கட்டுரை.

-----
விக்கி கட்டுரை ஒன்று
Einstein's "Zur Elektrodynamik bewegter Körper" ("On the Electrodynamics of Moving Bodies"), his third paper that year, was received on June 30 and published September 26. ... This later became known as Einstein's special theory of relativity.

----
இன்னொரு விக்கி கட்டுரை
In 1905 Albert Einstein published what is now called Special Relativity

---
ஐன்ஸ்டீன் Quote களில் எனக்குப் பிடித்த ஒன்று.

"For me the Jewish religion like all others is an incarnation of the most childish superstitions. "

.

கணேஷ் said...

பிளான்க் உபோகித்தது relativity principle இதில் ஒளி பரவுவதற்கு ether எனப்படும் ஒன்று அடிப்படையாக வேண்டும்(இதில் நிலையான ether இதற்கு முன்னாடி வரை ether நகரும்))) என்று கொள்ளப்பட்டு வந்தது...இதனால் சில அறிவியல் சோதனைகளை இந்த ether ஐ உள்ளடக்கி சரியாக விளக்கமுடியவில்லை..அப்போதைய பிரச்சினை இந்த ether ஐ சேர்த்து எப்படி சரியாக ((ஒளியின்)) இயக்கத்தை அளவிடுவது என்பதே..

அதற்கு பிற்கு Michelson-Morley என்பவர்கள் ஒரு முக்கியமான சோதனையை மேற்கொண்டார்கள் அதன் படி ஒளி பரவுவதற்கும் ether க்கும் உள்ள பிரச்சினை தெளிவாகியது..

அவர்களின் கூற்றுபடி ஒளியின் வேகம் ether ஐ பொருத்து இல்லை..அதே நேரத்தில் ஒளியின் வேகம் நிலையானது...அது வெளிப்படும் இடம் எந்த நிலையில் இருந்தாலும்..

ஐன்ஸ்டீன் செய்தது பிளான்க் உபோகித்த நிலையான ether ஐ முற்றும் நீக்கிவிட்டு அதை நிருபித்தார்..அதை srt என்பார்கள்.
http://en.wikipedia.org/wiki/Special_relativity

இதே தத்துவத்தில் கொஞ்சம் ஈர்ப்பு விசைக்கு வடிவம் கொடுத்து grt 1915 ஆம் ஆண்டு வெளியிட்டார்..

மேலே சொன்ன விசயங்களை உறுதியாக என்னால் சொல்ல முடியும்..
அந்த வார்த்தைகளை ஐன்ஸ்டீன் எப்போது சொன்னார் என்பது நான் தேடிபர்த்தும் கிடைக்கவில்லை...

சில விசயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

உமர் | Umar said...

//மேலே சொன்ன விசயங்களை உறுதியாக என்னால் சொல்ல முடியும்..
அந்த வார்த்தைகளை ஐன்ஸ்டீன் எப்போது சொன்னார் என்பது நான் தேடிபர்த்தும் கிடைக்கவில்லை.//

Hot Stove, Pretty Girl உதாரணத்தை 1905 ல் கூறியிருக்க வாய்ப்பில்லை என்றுதான் நானும் கூறியுள்ளேன். பிறகு கூறியிருக்கலாம்.

புரிதலுக்கு நன்றி.

----
1905 லேயே Ether ஒரு medium அல்ல என்று அறிவித்துவிட்டார். Max Planck பல்வேறு வகைகளில் அதனை உறுதிபடுத்தினார்.

---
தமிழ்மணத்தில் உங்கள் பதிவினை இணைக்க முடியவில்லை. feed settings சரிபார்த்து கொள்ளுங்கள்.

.

கணேஷ் said...

ஆனாலும் பிளான்க் ether ஐ immobile stuff ஆக வைத்து இருந்தார்..

**
நானும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன் இணய மறுக்கின்றது போகட்டும் என்று விட்டுவிட்டேன்)))

பல நல்ல தகவல்களை என்னோடு பகிர்ந்ததுக்கு மீண்டும் உங்களுக்கு நன்றி..

Butter_cutter said...

அருமை நிறைய எழுத வாழ்த்துக்கள்

கணேஷ் said...

சிட்டி பாபு said...//

நன்றிங்க..

கவிநா... said...

//காதல் கவிதைகள் எழுத காதலில் விழவேண்டிய அவசியமில்லை என்று சொல்லி இருக்கிறேன்.//

* முழுக்க உண்மை...இதை நானும் பல பேர்கிட்ட சொல்லியிருக்கேன். ஆனா, நம்பவே மாட்டாங்க.. :))

* ஐன்ஸ்டீன் புராணம்.. ம்ம்ம் ஏற்கனவே படித்திருந்தாலும், நீங்கள் சொன்ன விதம் அருமைங்க கணேஷ்...

* கடைசி கவிதை ரொம்ப அழகு...

கணேஷ் said...

ம்ம பெரிய கவிதாயினி சொன்னா சரியாகத்தான் இருக்கும்))))