சுஜாதா = St.Hawking

       சுஜாதா = St.Hawking  என்றவுடன் சுஜாதா St.Hawking க்கு இணையானவரா இல்லையா என்ற விவாதத்திற்கு செல்வதை விட இரண்டு பேருக்கும் உள்ள சில பொதுவான ஒற்றுமைகளை பார்ப்போம்..

    அப்படி என்ன சுஜாதா வுக்கும் St.Hawking க்கும் பெரிய ஒற்றுமை........இருவருக்கும் இருக்கும் ஒரு திறமை..தனது எழுத்தின் மூலம் எளிமையாக அறிவியலை எடுத்து சொல்லும் முறை அதைப்பற்றித்தான் இங்கு ஒப்பிட்டு உள்ளேன்.. அதற்கு முன் St.Hawking பற்றி சில வரிகள் சொன்னால் கொஞ்சம் புரிதலுக்கு எளிதாக இருக்கும். அவரை பற்றி விவரமாக மற்றொன்றில்  எழுத எண்ணம.


       St.Hawking ஜனவரி 8 ஆம் தேதி 1942 ஆம் வருடம் இங்கிலாந்தில் பிறந்தவர்.இவரது பிறப்புக்கு ஒரு பெருமை உண்டு.கலிலியோ இறந்து சரியாக 300 வருடம் கழித்து பிறந்தவர்.இவரது வாழ்க்கை 21 வயதுக்கு பிறகு மிகவும் வருத்தமானதாக மாறியது. ALS (motor neuron disease) என்ற நோயால் பாதிக்கபட்டு அன்றில் இருந்து இன்றுவரை சர்க்கர நாற்காலியில் தனது வாழ்நாளை கழித்து கொண்டிருக்கும் உலக விண்ணியல் அறிவாளிகளில் மிக மிக முக்கியமானவர்.(இவரை பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுவேன்)

    அடுத்து சுஜாதாவை பற்றி சொல்லத்தேவை இல்லை.எங்காவது ஒரு 18 வயதில் இருந்து 24 வயதுக்குள் இருக்கும் ஒரு இளைஞ்ன் காதல் கீதல் என்று சுத்தாமல் சமத்தாக உட்கார்ந்து புத்தகம் படித்து கொண்டு இருந்தால் கண்டிப்பாக அவன் சுஜாதாவால் பாதிப்படைந்து இருக்கவேண்டும்.

    அந்த அளவு இளைஞ்ஞர்களின் மத்தியில் ஆழமாக பதிந்தவர் சுஜாதா. அப்படி என்றால் பெரியவர்களின் மத்தியில் இல்லையா? என்று கேட்காதிர்கள்..நான் என் நிலையில் இருந்து சொல்லி இருக்கிறேன்..எனக்கு வயதான அப்புறம் அவரது எழுத்துக்களை மீண்டும் படித்துவிட்டு சொல்லுகிறேன்..அல்லது யாராவது பெரியவர்கள் இதை படித்து கொண்டு  இருந்தால் சொல்லலாம்.....

   மேலே சொன்னதிலிருந்தே ஒரு ஒற்றுமை இருக்கின்றது. நமது தமிழ் இளைஞ்ர்களுக்கு சுஜாதா எப்படியோ..அதே மாதிரிதான்..இங்கிலாந்து,மற்றும் அமெரிக்கா போன்ற நாட்டு இளைஞ்ர்களுக்கும். St.Hawking.

இந்த இருவருமே இளைஞ்ஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்டு..நேசிக்கப்படுகின்றவர்கள்.

   சரி அடுத்து என்ன ஒற்றுமை என்றால் இவர்களின் அறிவுத்திறமையை எழுத்துக்களில் கொண்டுவரும் முறை..... தனக்கு தெரிந்த மிக சிக்கலான ஒன்றை அப்படியே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அருமையாக எழுத்தின் மூலம் சொல்லக்கூடியவர்கள். நான் இங்கு சொல்ல வருவதும் இருவரின் எழுத்து ஒற்றுமையை பற்றித்தான்....

   இவர்களின் அறிவியல் சம்பந்தமான எழுத்துக்கள் என்னை போன்ற அறிவியல் அறிவு இல்லாதவர்களுக்கும் மிக எளிதாக புரியும்படி இருப்பதுதான் இவர்களின் சிறப்பு.


   தமிழில் சுஜாதாவின் அறிவியல் எழுத்துக்களை பற்றி நான் சொல்லித் தெரியவேன்டியாதில்லை,அதே போலத்தான் St.Hawking எழுத்தும். இவரது brief history of time எந்த அளவு உலக புகழ்  பெற்றது எனபது எல்லோர்க்கும் தெரிந்த விசயமே.அதற்க்கு காரணம் அதில் அவர் எளிமைப்படுத்தி இருந்த  அறிவியலே .


   அதுவரை குறிப்பிட்ட சிலருக்கே தெரிந்த அல்லது இருந்த விண்ணியல் (cosmological) சம்பந்தமான அறிவு இந்த புத்தகம் வெளியிட்ட அல்லது படித்த பின்னர் தலைகிழாக மாறியது என்பதே உணமை

    அந்த புத்தகத்தில் எந்த அளவு அறிவியலை எளிமைபடுத்த முடியுமோ அந்த அளவு எளிமைபடுத்தி அனைவருக்கும் புரியும்படி எடுத்து சொல்லி இருப்பார் St.Hawking. மூன்று வருடங்களுக்கு முன்னர் இதை படித்தபோது  சுஜாதா இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது எனக்கு...

   அந்த அளவு எழுத்து நடை இருவருக்கும் ஒத்துபோகின்றதுதான் உண்மை.   எளிமையான அறிவியல் விளக்கம்..இடையிடையே கொஞ்சம் நகைச்சுவை...போன்றவைகள் இருவருக்கும் பொதுவானவைகள். முடிந்தால் இந்த புத்தகத்தை படித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

    St.Hawking பொறுத்தவரை அவரது நிலைமையில் நகைச்சுவை எனபது இயலாத காரியம்..சாதாரண மனிதர்கள் என்றால அவரது நிலைமையில் அடுத்து என்ன செய்ய முடியும் என்ற மனநிலையில் துவண்டு போய் இருப்பார்கள்..ஆனால் இவரோ அந்த நோயின் பாதிப்புக்கு பின்னர்தான் மிக உபோயோகமான  விசயங்களை அறிவியல் உலகத்திற்கு தந்தார்.அதுமட்டும் இல்லாமல் விண்ணிற்கு ஒருமுறை பயணம் செய்து zero gravity ல் மிதந்து விட்டு வந்தவர்.

(அவரது உடம்பில் ஒரு வெளிப்பாகமும் வேலை செய்யாது.... அதாவது ஒருமனிதன் உயிரோடு இருந்து... வெறும் மூளை மட்டும் நன்றாக வேலை செய்து  கொண்டு இருந்தால் அதுதான் St.Hawking)

St.Hawking  பொதுவாக இளைஞ்ஞர்களின் மீது கொஞ்சம் நம்பிக்கை மற்றும் பற்று கொண்டவர்.

  அதே போல்தான் நமது சுஜாதாவும். அவரது அறிவுரை இன்றைய இளைஞ்ர்களுக்கு மிக முக்கியமானவைகள். அவர் அறிவுரை சொன்னாலும் நாசூக்காகச் சொல்லுவார். எப்படி மருத்துவர் வலிக்காமல் ஊசி போடுவாரோ அப்படி.

   அவர் அடிக்கடி அறிவுறுத்துவது முடிந்த அளவு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கடைபிடியுங்கள் என்றுதான்...இதை நான் பின்பற்றியதன் விளைவு இப்போது என் அறையில் 150 மேல் புத்தகங்கள்....

மேலும் சுஜாதா அவர்களுக்கு எழுத்து  துறையத்தவிர மற்ற திறமைகள் இருப்பது நாம் தெரிந்த விசயமே..

   ஒரு முறை நேர்காணலில் அவரிடம் “நீங்கள் ஏன் அறிவியலை உங்கள் எழுத்துக்களின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றிர்கள் “ என்று கேட்கப்பட்டது.

   அதற்க்கு அவர் அறிவியல் கொஞ்சம் சிக்கலான விசயம்...அதை சொல்லுகின்ற விதத்தில் எடுத்து சொன்னால் சாதாரண மக்களும் தெரிந்து கொள்வார்கள். சாதாரன கதைகளை எழுதுவதற்கு ஏராளமானோர் இருக்கின்றனர்.கதை எழுதும் வேலையை அவர்கள் பார்த்துகொள்வார்கள்... என்று பதில் அளித்து இருந்தார். அதை செய்தும் இருந்தார்..

(இதற்க்கு அர்த்தம மொக்கையான கதைகள் கணேஷ் போன்றவர்களால் கூட  எழுத முடியும் என்பதே)





.

7 comments:

Thekkikattan|தெகா said...

இதற்க்கு = இத ற் கு ;;;;; குற்றெழுத்து ற் -குபிறகு ஒற்றெழுத்து வரதாம். இத நான் வலைக்கு வந்துதான் தெரிஞ்சிக்கிட்டேன். ஏன்னா என் கையில நிறைய என்சைக்கிலோபீடியா, நடமாடும் மனித லைப்ரரி எல்லாம் கிடைக்கல மொழி பெயர்த்து சொல்ல. என்ன செய்ய!

இருந்தாலும் ஸ்டீவன் ஹாகிங்கோட, சுஜாதாவெல்லாம் கம்பேர் பண்றது கொஞ்சம் ஓவராத் தெரியல...

கணேஷ் said...

இருந்தாலும் ஸ்டீவன் ஹாகிங்கோட, சுஜாதாவெல்லாம் கம்பேர் பண்றது கொஞ்சம் ஓவராத் தெரியல...\\\\

அதைத்தான் நான் முதல் பத்தியிலேயே சொல்லி இருக்கின்றேன்..இங்கு நான் ஒப்பிட்டது இருவரின் அறிவியலை தனது எழுத்தின் மூலம் எடுத்து சொல்லும் திறமையை பற்றிதான்...

"அதற்கு" பற்றி உங்களின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி..உங்களின் கருத்துக்கும்..

அப்பாதுரை said...

சுஜாதா மாபெரும் சிறுகதை எழுத்தாளர் தான். still, சுஜாதா எழுதியது ஜனரஞ்சக கற்பனைக் கதை. வோடவுஸ், ப்ரேட்பரி, அசிமாவ் படிச்சிங்கன்னா சுஜாதா எழுத்தின் அடிப்படை புரியும். ஸ்டீவன் மாபெரும் விஞ்ஞானி. சுஜாதா ரசித்து எழுதியது ரத்தக்கறை படித்த லாண்டரி லிஸ்ட். ஸ்டீவன் எழுதியது நியூடன் தயங்கிய உலகக் கோள் சீர்மையைப் பற்றி. சுஜாதாவுடைய விஞ்ஞானப் புத்தகங்களெல்லாம் அசிமவ் எழுதியது ஐயா. ஸ்டீவன் எழுத்தை விட சுஜாதாவை படித்தவர்கள் அதிகம் என்பதென்னவோ உண்மை, but sad.

கணேஷ் said...

சுஜாதா மாபெரும் சிறுகதை எழுத்தாளர் தான். still, சுஜாதா எழுதியது ஜனரஞ்சக கற்பனைக் கதை. வோடவுஸ், ப்ரேட்பரி, அசிமாவ் படிச்சிங்கன்னா சுஜாதா எழுத்தின் அடிப்படை புரியும். ஸ்டீவன் மாபெரும் விஞ்ஞானி. சுஜாதா ரசித்து எழுதியது ரத்தக்கறை படித்த லாண்டரி லிஸ்ட். ஸ்டீவன் எழுதியது நியூடன் தயங்கிய உலகக் கோள் சீர்மையைப் பற்றி. சுஜாதாவுடைய விஞ்ஞானப் புத்தகங்களெல்லாம் அசிமவ் எழுதியது ஐயா. ஸ்டீவன் எழுத்தை விட சுஜாதாவை படித்தவர்கள் அதிகம் என்பதென்னவோ உண்மை, but sad.\\\\\
அய்யா St. hawking ன் மகத்தான அறிவியல் பங்களிப்பு உலகம் அறிந்த விஷயம்...நான் அதை சுஜாதாவோடு ஒப்பிடவில்லை....இருவரின் எழுத்து நடையத்தான் ஒப்பிட்டு இருக்கின்றேன்..இருவரின் எழுத்து நடையும் எனக்கு பிடித்து இருக்கின்றது...

மற்றபடி hawking அறிவியல் அறிவு இப்போது இருக்கும் அறிவியல் உலகத்திற்கு எவ்வளவு உயர்வானது என்பதை நானும் அறிவேன்...

உங்களின் கருத்துக்கு நன்றி..

புல்லாங்குழல் said...

வெவ்வேறு வகையில் இயங்கிய இரண்டு அறிவு ஜீவிகளின் இடையே உள்ள துளியூண்டு ஒற்றுமையை பூதகண்ணாடி வைத்து பார்த்து அழகாக ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள். வித்தியாசமான சிந்தனை.சுஜாதா ரசிகர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜெயந்தி said...

சுஜாதா புரிந்துகொள்ள முடியாத சிக்கலான விஷயங்களைக்கூட எளிமையாக கொடுக்கக்கூடியவர்.

நீங்கள் இன்டெல் ஆங்கிலத்தை இணைத்துள்ளீர்கள். தமிழ் இன்டெல்லை இணையுங்கள்.

கணேஷ் said...

உங்களின் கருத்துக்கு நன்றி...


நான் தமிழ் indli இணைக்கிறேன்..