உணமைக்காதல்...(THE CLONING)

   சரியாக இருந்தால் 35 வயது இருக்கும் அந்த பெண்ணுக்கு. அவள் கையில் ஒரு கடிதம் .....அவளுக்கு தெரியும் அந்த கடிதம் யாரிடம் இருந்து வந்து இருக்கின்றது என்று.  அதில் உள்ள எழுத்துக்கள் அவளுக்கு மிகவும் பரிச்சயம் ஆனவைகள். பிரித்து படித்தாள்  அந்த முழு பக்கத்தில் ஒரு வாக்கியம் மட்டுமே இருந்தது அதற்க்கு கீழ் கையெழுத்து மற்றும் தேதி.

நாம் செர்ந்துவிடுவோம்.....


XY
25-09-2025


     அவள் இதை படித்தவுடன் மெதுவாய் அழுதுகொண்டே அந்த கடிதத்தை கிழிக்க ஆரம்பித்து இருந்தாள். அவள் சிரித்த அந்த சிரிப்புக்கும்,அவள் அந்த கடிதத்தை கிழித்தற்க்கும் காரணம்......சொல்லுகிறேன்... முதலில் அவள் அழுததக்கு

     அவளுக்கு இன்னும் நினைவு இருக்கின்றது அவள் அவனை காதலித்த அந்த நாட்கள்..இருவரும்  உயிருக்கு உயிராக உண்மையாக காதலித்தார்கள். இருவரும் ஒரே இடத்தில வேலை பார்த்ததால் அவர்களின் காதல் வளர எதுவும் தடையாக இல்லை. ஆனால் வழக்கம் போல இறுதியாக சேரும்போதுதான் பிரச்சினை வந்தது

    இவள் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் அவளின் பெற்றோருக்கு நிறையா ஆசைகள்..அவர்களின் ஆசைகளுக்கு இவளின் காதலை பலி கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்ததால் இவளும் தன் காதலை பலி கொடுத்தாள்.

   ஆனாலும் தனது காதலை எடுத்து சொல்ல தவறவில்லை...கொஞ்சம் முரண்டு பிடித்தும் பார்த்தாள்..ஆனால் அவர்கள் ஜெயித்தார்கள். வீட்டை விட்டும் போக முடியாது. அவளுக்கு நன்றாக தெரியும் இவள் மீது பெற்றோர்கள் எந்த அளவு பாசம வைத்து இருக்கிறார்கள் என்று.

   அவள் காதலித்ததக்கும் இதுவே காரணம். இவ்வளவு பாசம வைத்து இருக்கும் பெற்றோர்கள் எப்படியும் தனது காதலை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் அவள் காதலுக்கு சம்மதம் சொல்லி அவனை காதலிக்க ஆரம்பித்தாள்.

  எப்படியோ அவளின் பெற்றோர்கள் ஒரு முடிவை அவளிடம் சொல்லிவிட்டார்கள் தாங்கள் பார்த்த மாப்பிளையைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று.

 அவளுக்கு இருந்தது எல்லாம் ஒரே கவலைதான் இந்த விஷயத்தை எப்படி தன் காதலனிடம் சொல்ல போகிறோம் என்பதுதான்..

   உண்மையான காதல் இப்போது சென்று "நீ என்னை மறந்துவிடு" என்று சொன்னால் உடைந்து போவான்.என்ன செய்வது என்று அறியாமல்  அவனை சந்தித்தாள்.ஒருவழியாக தயங்கி தயங்கி ஆரம்பித்து சொன்னாள்.

  நம்மை உயிராக காதலித்த இவளா இப்படி சொல்லுகிறாள் என்ற எண்ணம அவனின் மனதில் ஓடுவதை இவள் அவனின் முகத்தில் இருந்து  தெரிந்து கொள்ளாமல் இல்லை.

   நீண்ட மௌனம்.அடுத்து யார் பேச என்ன பேச என்று தெரியாத அமைதி.முதலில் அவன்தான் பேசினான்......"பார் நான் உணமையாக காதலித்தேன் ஆனால்  நீ இப்படி சொல்லுகிறாய் ....எனக்கு நன்றாக தெரியும் இதற்க்கு எதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும்.நான் உன்னை புரிந்து இருக்கிறேன்.சரி நீ உன் வீட்டில் சொல்வதை கேள்  எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை".... என்று சொல்லி முடித்தான். அவள் கண்களை பார்க்கவில்லை.

   அவளுக்கு தெரியும் இது அவனுக்கு எந்த அளவு வலியைத் தரும் என்று. இறுதியாக என்னை மன்னித்துவிடு எனறாள் அழுது கொண்டே. அவனிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.

     "என்னோடு ஒரு ஒருமணி நேரம் வரமுடியுமா" என்றான். அவள் எந்தவித தயக்கமும் இல்லாமல் சரி என்றாள்.               அவனை பற்றி நன்றாக தெரியும்..என்பதால். .....    அதனால் எங்கு என்று கூட கேட்காமல் சரி என்றாள்.

     அவன அவளை அழைத்து சென்றது ஒரு மருத்துவ ஆய்வுகூடத்துக்கு. இப்போதும் அவள் ஒன்றும் கேட்கவில்லை.

  அவன் தனியாக பிரிந்து சென்று அங்கு இருந்த மருத்துவரிடம் எதோ பேசினான்.அதற்க்கு பின் அவளை உள்ளே அழைத்தான்.உள்ளே சென்ற அந்த மருத்துவர் கையில் ஒரு குச்சி போன்ற கருவியோடு வந்தார்.

  அதை அவளின் கையில் மனிக்கட்டுகு மேல் வைத்து கொஞ்சம் மெல்ல அழுத்த அவளுக்கு சுருக்கென்று இருந்திருக்க வேண்டும் மெதுவாக கையை அவள் பக்கம் இழுத்தாள். மருத்துவர் அந்த குச்சியை வேகமாக எடுத்து கொண்டு உள்ளே சென்றார்.

அவள் பின் அவனிடம் கேட்டாள் "என்ன இது? எதற்காக இப்படி?" என்றாள்.

    "நான் உன்னை எந்த அளவு உண்மையாக காதலித்தேன் என்பது உனக்கே தெரியும், அப்டி இருக்க நான் உன்னை முழுவதும் மறந்துவிட்டு இன்னொருவளுடன் வாழ்வது என்பது என்னால் முடியாத காரியம்"..என்று சொல்லிவிட்டு தன் பேச்சை நிறுத்தினான்.

  அதான் இப்போது நம்மால்தான் ஒன்று சேரமுடியவில்லை ஆனால் நாம் ஒன்று சேர்வதற்கு ஒரு வாய்ப்பு இருப்பது என்பது எனக்கு தெரியும். அது நம்மை CLONING செய்வது. அப்படி உன்னையும் என்னையும் CLONING முறையில் உருவாக்கி அதன் மூலம்  நாம் இணைவோம் .....அதைத்தான் நான் செய்ய போகிறேன் என்றான்

   அவன் இதை சொல்ல சொல்ல அவளுக்கு இதை நம்புவதா இல்லை இவன் எதோ விபரீதமாக செய்ய போகிறான் என்று கவலை கொல்வதா என்று தெரியாமல் முழித்தாள்.

 "இப்படி கண்டிப்பாக செய்யவேண்டுமா" என்றாள் அவனிடம். அதற்க்கு அவன் "கண்டிப்பாக" என்றான். அதற்க்கு இவள் ஒன்றும் சொல்லவில்லை.

   அதற்க்கு பிறகு இருவரும் பிரிந்தார்கள். அவள்தான் வேலையைவிட்டு நின்றாள். நாட்கள் கழித்து தொலைபேசியில் மட்டும் தனக்கு திருமணம் என்று அவனை அழைத்து இருந்தாள். அவளுக்கு தெரியும் அவன் வரமாட்டான் என்று.

   அவனை பற்றி அவளின் தோழிகளிடம் கேட்டுவைத்து இருந்தாள். இன்னும் அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை அவனுக்கு அந்த எண்ணமும் இல்லை என்பதை.    இதை நினைக்கும் போதெல்லாம் அவளின் மனம் வலித்தது. எதோ அவனுக்கு பெரிய துரோகம் செய்ததாகவே நினைத்தாள்.


    அவனும் அதற்க்கு பிறகு எப்போதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவனது முழு ஈடுபாடும் எப்படி இருவரையும் குளோனிங் முறையில் உருவாக்குவது என்பதை பற்றியே..அதற்க்கு தேவையான அனைத்து முயற்சியையும் செய்து கொண்டிருந்தான்.


   இப்போது அவனுக்கு அதற்க்கு உண்டான வழி கிடைத்து இருக்க வேண்டும். அதன் இவளுக்கு நாம் சேர்ந்து விடுவோம் என்று கடிதம் எழுதி இருந்தான்.உணமையில் அவனுக்கு ஒரு வழியும் கிடைத்து இருந்தது.

.

கடிதத்தை கிழித்தற்க்கு காரணம்..........

   என்னதான் அவனை உயிருக்கு உயிராக காதலித்து இருந்தாலும் இப்பொது அவளுக்கென்று தனி குடும்பம்,இருக்கின்றது. கணவன் அவள் நேசிக்கும் ஒரு மகள் என்று. இந்த விசயங்கள் அவர்களுக்கும் தெரிந்தால் ஏற்ப்படும் பிரச்சினைகளை தவிர்க்கவே அதை கிழித்தாள். அவர்களுக்கு இது தெரியவும் அவள் விரும்பவில்லை.

   எப்படியோ அவனது காதல் நிறைவேறவில்லை என்றாலும் அவனது இந்த குளோனிங் எண்ணமாவது  நிறைவேற போகின்றது என்ற ஒரு சந்தோசம். அவளுக்கு.


  அப்படியே அவனின் குளோனிங் திட்டம் நிறைவேறி குளோனிங் ஜோடிகளுக்கு திருமணம் நடப்பதாக இருந்தால் ,....அப்போது அவன் இவளுக்கு திருமண அழைப்பிதல் அனுப்பவதாக இருந்தால் அதற்கு இவள் இன்னும் இருபது வருடங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டும்.அவள் காத்திருப்பாள் ஏனென்றால் அவள் அவனை உணமையாக காதலித்து இருந்தாள். அவர்களின் காதல் உணமையானது.

  

3 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை.....

Kousalya Raj said...

//ஆண் மற்றும் பெண்ணை வேறுபடுத்தி கருவில் பிரிப்பதில் ஆண்களுக்கே முழு உரிமை )//

அறிவியல் விளக்கத்தில் ஆங்காங்கே சுவாரசியமான வரிகள்....படிப்பதற்கு ஏற்ற வகையில் நல்ல தெளிவான புரியும் படியான விளக்கம்....!! அருமை கணேஷ்

கணேஷ் said...

அறிவியல் விளக்கத்தில் ஆங்காங்கே சுவாரசியமான வரிகள்....படிப்பதற்கு ஏற்ற வகையில் நல்ல தெளிவான புரியும் படியான விளக்கம்....!! அருமை கணேஷ்////

நன்றி அக்கா...