நட்சத்திர குழந்தைகள்.....

    அறிவுத்திறனைவிட கர்ப்பனைத்திறனே சிறந்தது என்று நமது ஐன்ஸ்டீன் தாத்தா சொல்லி இருக்கிறார். அந்த வகையில் பார்த்தல் இந்த உலகில் கற்பனைத்திறனை அதிகம் உபோயோகிப்பவர்கள் என்னை பொறுத்தவரையில் கவிஞர்களாகவே இருப்பார்கள்.

    முதல் பத்தியை கொஞ்சம் கவிஞர்களை  புகழ்ந்து எழுதி இருப்பதால் இனியும் தொடர்ந்து அப்படித்தான் இருக்கும் என நீங்கள் தொடர்ந்தால் அது தவறு...

     நான் இங்கு சொல்ல போவது கவிஞர்களின் கற்பனைத்திறன் எந்த அளவு ஆபத்தானது என்பதை கொஞ்சம் பார்க்கலாம்...

      என்னை பொறுத்தவரையில் உலக கவிஞர்கள் அதிகம் கவிதைகளில் கற்பனையாக எடுத்துகொள்ளுவது சில  விசயங்களைத்தன்....அவை...நிலவு,நட்சத்திரம்,மேகம் அல்லது வானம.
இந்த மூன்றில் இப்போதைக்கு இந்த நட்சத்திரத்தை மட்டும் கொஞ்சம் பார்க்கலாம்.(இதப்பத்தி மட்டும்தான் எனக்கு கொஞ்சம் தெரியும் என்பதற்காக)

    சரி அவர்கள் எப்படி நட்சத்திரத்தை பயன்படுத்துகிறார்கள் என கொஞ்சம் பார்ப்போம்...(நான் இவைகளை சில இடங்களில் படித்து இருக்கிறேன்)

      நட்ச்சத்திரங்களை காதலியின் பருவோடு,கண்ணோடு,பல்லோடு,சிரிப்போடு...என எல்லாவற்றோடும் ஒப்பிடுவார்கள்..

     நிலவு ஒருநாள் இல்லை என்றால் என்ன இருக்கும் நட்சத்திரங்களில் முகம் பர்த்துகொள்வோம் என்பார்கள்..

      காதலி கோலம போடா வைக்கப்பட்ட புள்ளிகள் என்பார்கள்..இந்த மாதிரி நீண்டு கொண்டே போகும் இந்த பட்டியல்.


    சரி இதில் என்ன தப்பு இருக்கு ..இதைப்பற்றி நீ எழுதவந்துட்டே  என கேட்க்கிறவர்களுக்கு........

      பொதுவாக எல்லோரும் நட்சத்திரங்களை பற்றி தெரிந்தவர்களே...இருந்தாலும் எனக்கு தெரிந்த சில விசயங்க்களை இங்கு சொல்லுகிறேன்..

     இதை படித்த பின் நட்சத்திரத்தை பருவோடோ,அல்லது அதில் முகம் பார்க்கும் என்னமோ வராது என நினைக்கிறேன்.

   உடனே இவன் எதோ கவிஞ்ஞர்களை பற்றி தவறாக எழுதுகிறான் என்று எண்ணி  கவிஞ்ஞர்கள்...

கவிதை எழுதுவது ஒரு
கலை என்று அறியாமல்...
கண்டதை படித்து விட்டு.
கவிஞ்ஞர்களையும் மேலான
கற்பனையையும் குறைசொல்லும்
கணேஷுக்கு கண்டனங்கள்...!!!!!

  இப்படி என்னை கவிதைகாளால் திட்ட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.
(மேலே உள்ளது கவிதை என்பதை இங்கே சொல்லி கொள்ளுகிறேன்)

   முதலில் நட்சத்திரம் எப்படி உருவாகின்றது என பார்ப்போம்.


     பொதுவாக நட்சத்திரம் என்பது ஒளிரும் மிகப்பெரிய தோற்றம் கொண்ட,அதன் சக்தியில் இருந்து அதிக ஒளியை வெளியிடுகின்ற ஒன்று.. இப்படிப்பட்ட நட்சத்திரதிற்கு பிறப்பு எப்படி என்றால்...விண்வெளியில் உள்ள தூசுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து முதலில் ஒரு மேகமாக உருவெடுக்கின்றது. இதை நட்சத்திரங்களுக்கு கரு என்று கூட சொல்லலாம்.

      அப்படி மேகம் போன்று அமைந்த அந்த தூசுகள் ஒன்றோடு ஒன்று(GRAVITATIONAL FORCE னால்) உராசுகின்றன.அப்படி உராசும்போது உராய்வினால் முதலில் கொஞ்சம் வெப்பம் வெளிப்படுகின்றது... பின் அங்கு இருக்கும் HYDROGEN&HELIUM வாயுவோடு சேர்ந்து ஜோராக எரிய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் அதில் உள்ள அணுக்கள் ஒன்றோடு ஒன்று COLLAPSE  ஆகி பின் அதிக வெப்பம்..பின் அதில் உள்ள அணுக்கள் மீண்டும் COLLAPSE ஆகுதல் இப்படியே அந்த மேகத்தில் உள்ள எரிபொருள்(HELIUM) தீரும்வரை இப்படி எரிந்துகொண்டே இருக்கும். இந்த எரிபொருள் என்ன என்றால் இந்த பிரபஞ்சம் உருவாகிய உடனே உருவான HYDROGEN மற்றும்  HELIUM வாயுதான்.(4 hydrogen atoms  எரிந்தால் = ஒரு  helium அணு உருவாகும்.)நட்சத்திரத்தில் ஹைட்ரோஜேன் எரிந்து அதில் இருந்து ஹீலியம் வாயு வெளிப்பட்டு அதையும் எரிபொருளாக வைத்து எரிகின்றது நட்சத்திரங்கள்.

       இந்த நட்சத்திரங்கள் தான் ஒரு கூட்டமாக அமைந்து இந்த பிரபஞ்சத்தின் உருவத்தை கொடுக்கின்றன....நட்சத்திரம் ஒளிர்வது போல நமக்கு தெரிந்தாலும் ஆடு சுடர் விட்டு ஜோராக எரிய மட்டுமே செய்யும்.ஆனால் அங்கு இருந்து வரும் ஒளி ஆனது காற்றலைகளில் விலக்க பட்டு நமக்கு ஒளிர்வது போல தெரியும்...

     இந்த பிரபஞ்சம் தொடங்கிய பிறகு முதலில் வானில் ஒளிரத்தொடங்கியது இந்த நட்சதிரங்கள்தான் இந்த நட்சத்திரங்களில் இருந்துதான் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மற்றவை உருவானது. நம்மின் பிறப்பிடமும் நட்சத்திரம்தான் என்றால் நீங்கள் என்னை ஒரு மாதிரி நினைப்பிர்கள்..ஆனால் உண்மை அதுதான்.எப்படி என்று பார்ப்பதற்கு முன் இந்த நட்சத்திர வாழ்க்கை மற்றும் வகைகளைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம். 

NEBULAE   - கரு முட்டை

PROTO STARS   - கரு

T - TAURUS STARS - குழந்தை பருவம்

MAIN SEQUENCE  - இளம் வயது பருவம்

RED GIANT   - முதுமை பருவம்

அதற்க்கு அடுத்தது நட்சத்திர மரணம். அதாவது SUPERNOVA (சாதாரண மரணம்), HYPER-NOVA (அகாலமரணம்)

சரி முதலில் NEBULAE பற்றி.


NEBULAE  என்பது தூசுகள் கலந்த புழுதி படலம் என்பதை ஏற்கனவே மேலே சொல்லிவிட்டேன்.

PROTO STARS


   அந்த மேகத்தில் உள்ள தூசுகள் உராய்ந்து அதில் இருந்து ஈர்ப்பு விசை ஏற்பட்டு அந்த தூசுகள் இன்னும் நெருக்கமாக இணைந்து ஒரு கூட்டமைப்பாக இருக்கும்.இந்த நிலையில் HYDROGEN FUSIONS ஆரம்பித்து இருக்காது.ஆனால் எப்போதுவேண்டுமனாலும் எரிகின்ற நிலையில் இருக்கும் இந்த நிலை மட்டும் உருவாகவே 100000 வருடங்கள் ஆகுமாம்.

T-TAURUS STARS

 இது HYDROGEN எரிவதற்கு முன்னாடி உள்ள நிலை.அதாவது அந்த மேகத் தூசுகளின் உராய்வின் மூலம் கொஞ்சம் வைப்பம் உருவாகி ஒளிரத்தொடங்கும் ஆனாலHYDROGEN FUSIONS நடக்க தேவைப்படும் வெப்பம் உருவகும்வரைதான் இப்படி எரியும் எப்போது HYDROGEN FUSIONS தொடங்கியதோ அவ்வளவுதான் அதற்க்குப்ப்பிறகு அந்த நட்சத்திரம் ஜோராக கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கும்.

MAIN SEQUENCE

     ஒருவழியாக HYDROGEN FUSION தொடங்கி அதில் உள்ள HYDROGEN ஐ வைத்து நட்சத்திரம் ஜோராக எரிந்து கொண்டிருக்கும் நிலை. இந்த நிலையில்தான் பல்வேறு பொருள்கள் ,தாதுக்கள் உருவாகின்றன. அதாவது CARBON,NEON,OXYGEN,SILICON,IRON போன்றவைகள்.இவை அப்படியே உருவாகி நட்சத்திரத்தை சுற்றி அடுக்கு அடுக்காக அமைகின்றது. இந்த அடுக்கு எப்போது வலுக்கின்றதோ அப்போது நட்சத்திரத்தின் மரணம் நெருங்கி விட்டது என்று அர்த்தம இப்படி எரியும் நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட சில பில்லியன் வருடங்கள் வரை எரியும் என்பது குறிப்பிடதக்கது.
இதில் உருவாகும் வெப்ப நிலை கிட்ட தட்ட 18000000 F .எனவேதான் சொன்னேன் இதைப்படித்த பிறகும் நட்சத்திரதில் முகம் பார்க்கும் அல்லது ஒப்பிடும் எண்ணம வராது என்று.....

RED GIANT

      இந்த நிலையில் நட்சத்திரம் ஆனது தனது HYDROGEN எரிபொருள் தீர்ந்த நிலையில் அதற்க்கு அடுத்தபடியாக இருக்கும் HELIUM வாயுவை வைத்து எரிய ஆரம்பிக்கும்.இந்த HELIUM வாயுவும் ஒரு கட்டத்தில் தீர்ந்து போகும் நிலை வரும்போது அதற்க்கு அடுத்தபடியாக அது எரியும்போது உருவான ELEMENT களை எரிக்க ஆரம்பிக்கின்றது.


    வரிசைப்படி பார்த்தல் முதலில் CARBON---- NEON... OXYGEN....SILICON....IRON.. இப்படியே வரும்போது பிரச்சினை இரும்புத்தாதுவில் வருகின்றது.அதாவது எல்லாவற்றையும் எரித்து தீர்த்த பின்னர் இரும்பு தாதுவே மிதம இருக்கின்றது..இரும்பு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.எனவே இதை எரித்து ஆற்றல பெறுவது என்பது முடியாத காரியம்...போதுமான வெப்ப அழுத்தம் இல்லாமல் நட்சத்திரமானது நிலையான GRAVITY லும்  இருக்க வேண்டும்..இந்த நிலையில் தான் இரும்பு தாதுக்கள் வேகமாக உள்ள்நோக்கி சுருங்கி விழுந்து அந்த நட்சத்திர கருவில் ஒரு மிக பெரிய வெடிப்பு ஏற்ப்பட வைக்கின்றது.இந்த வெடிப்பு நட்சத்திரத்தின் உருவ அமைப்புக்கு ஏற்றவாறு பிரிக்கப்டும்.

     சிறிய நட்சத்திரங்கள் 3~15 மடங்கு SOLAR MASS உள்ள நட்சத்திரங்கள் COLLAPSE ஆனால் அது SUPERNOVA. அதாவது நட்சத்திரங்களின் சாதாரண மரணம்.அதே நேரத்தில் 100 ~300 மடங்கு SOLAR MASS உள்ள நட்சத்திரங்கள் மரணத்திற்கு சென்றால் அது HYPER-NOVA அதாவது அகால மரணம்.

நட்சத்திரத்தின் SUPERNOVA வில் இருந்து WHITE DWARF,NEUTRON STAR கல் உருவாகின்றன.

  நட்சத்திரத்தின் நிறை 1.4 ~3 SOLAR MASS வரை இருந்தால் அது NEUTRON STAR ஆக முடியும்.
      மேலும் 1.4 SOLAR MASS இருக்கும் நட்சத்திரம் ஆனது மரணம் அடைந்தால் அது WHITE DWARF ஆக மாறும். இந்த WHITE DWARF க்கும் தமிழ் நாட்டுக்கும் அதிக தொடர்பு உண்டு..இதை கண்டுபிடித்து சொன்னவர் ஒரு தமிழர். அவர் சார்.சி.வி.ராமன்.அவர்கள். ஆனால் வெளி உலகத்திற்கு..SUBRAHMANYAN CHANDRASEKHAR. அவரது இந்த கண்டுபிடிபப்பை வைத்து இந்த 1.4 SOLAR MASS க்கு CHANDRA SEKA R LIMIT என்று பெயர். இதற்க்கு அவருக்கு NOBEL PRIZE கிடைத்தது. ஆசியா கண்டத்திலிருந்து முதன் முதலில் இந்த பரிசை பெற்றவர் இவரே அதுவும் அறிவியலுக்கு..அப்படி பட்ட தமிழகத்தில்தான்..இன்று ஏகப்பட்ட ஆனந்தாக்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது என்னை பொறுத்தவரையில் கொஞ்சம் வேதனையான விஷயம்.

    அடுத்து HYPER-NOVA நடக்க நட்சத்திரம் ஆனது 100~300 SOLAR MASS இருக்க வேண்டும். அப்படி இருந்து அது HYPER-NOVA ஆக வெடித்தால் அந்த நட்சத்திரம் ஆனது ஒரு BLACK HOLE உருவாக காரணமாகின்றது.(1 HYPER-NOVA = 100 SUPERNOVA)
   
     சரி இதில் நாம் எங்கு இருந்து வந்தோம் என்று கேட்டால் இப்படி வெடித்து சிதறும் பொருள்களில் இருந்துதான் விண்வெளியில் உள்ள பல பொருள்கள் உருவாகின்றன..
       நமது பூமியும் அப்படி உருவான ஒன்றுதான். அப்படி வெடிக்கும் போது CARBON---- NEON... OXYGEN....SILICON....IRON. போன்ற உயிர் வாழ தேவையான் கனிமங்களும் தூக்கி எறியப்படும். அப்படி தற்செயலாக நட்சத்திரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட பொருள்கள் சரியாக தற்செயலாக  இணைந்து ஒரு உயிர் உள்ள MOLECULES உருவாகி அது பல்கி பெருகி ..பரிணாம வளர்ச்சி பெற்று...மனிதனாக வளர்ந்து இங்கே இதை எழுதிக்கொண்டிருக்கின்றது


     நீங்கள் கவனமாக படித்து இருந்தால் நட்சத்திர வாழ்க்கை பருவத்தில் எங்கே இளமைப்பருவம் என்ற கேள்வி எழுந்து இருக்கவேண்டும் இதில் இளமை பருவம் இல்லை..... ஏனென்றால் இளமை பருவம் என்றால் ஒரு நட்சத்திரத்துக்கும் மற்றொரு நட்சத்திரத்திற்கும் காதல் என்ற ஒன்று வந்து அது போய் மற்றொன்டோடு இணைய அதில் இருந்து வேரேதுவும் ஆனால் பாதிப்பது நாம்தான்.எனவேதான் இயற்கையிலேயே நட்சத்திரத்துக்கு இளமை பருவம் இல்லை.(அதாவது நட்சத்திரமும் நட்சத்திரமும் மோதாது என்பதே இதன் விளக்கம்)

(நான் st.Hawking உடைய brief history of time புத்தகத்தில் படித்த கொஞ்ச அறிவைவைதுகொண்டு..கொஞ்சம் வலையில் தேடி இதை கொடுத்து இருக்கின்றேன்..உங்களுக்கு விரிவான விளக்கம் தேவை என்றால் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கலாம்)

4 comments:

Kousalya Raj said...

//இதை கண்டுபிடித்து சொன்னவர் ஒரு தமிழர். அவர் சார்.சி.வி.ராமன்.அவர்கள். ஆனால் வெளி உலகத்திற்கு..SUBRAHMANYAN CHANDRASEKHAR. அவரது இந்த கண்டுபிடிபப்பை வைத்து இந்த 1.4 SOLAR MASS க்கு CHANDRA SEKA R LIMIT என்று பெயர். //

இவர்கள் இருவரும் உறவினர்கள் தான். சர். சி.வி.ராமன் அவர்களின் சகோதரரின் மகன் தான் எஸ். சந்திரசேகர். விஞ்ஞானத்திற்காக ஒரே குடும்பத்திற்கு இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்து இருப்பததில் நம் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பெருமை.....

முதலில் சந்த்ரசேகர் தனது ஆய்வு கட்டுரையை இங்கிலாந்தில் தான் சமர்பித்தார்...ஆனால் அங்கே எடிங்டன் என்ற தலை சிறந்த விஞ்ஞானி அதனை கேலி செய்து எட்டு சுரைக்காய் என்று ஒதுக்கி தள்ளி விட்டார்.

இவரும் மனம் தளராமல் அங்கிருந்து அமெரிக்கா சென்று குடியேறினார்..பின் அங்கே 45 ஆண்டுகள் பல ஆராய்ச்சிகள் செய்து இறுதியாக தனது முதலில் கண்டுபிடித்த நட்சத்திர கண்டுபிடிப்பை உலகறிய செய்தார்.

சகோதரரே இன்னும் ஏன் indli.com இல் இணைக்கவில்லை....?

Gayathri said...

எப்படி கணேஷ் இப்படி கலக்றீங்க ???
எனக்கு உங்களால் நட்சத்திரங்களின் மீது ஆர்வம் வந்து விட்டது...
நட்சரங்கல்லுக்கு நடுவில் காதல் இருக்கிறதோ இல்லையோ மோதல் கண்டிப்பாக இருக்கிறது...எப்போ நம்ம மேல படைஎடுக்குமோ....இதே எல்லாம் படிக்கும் பொது ஆச்சர்யமாக இருக்கிறது...
பூமியே நமது பிரபஞ்சத்தில் குட்டி அதில் நாம் எத்தனை சிறியவர்கள்...ஹா ஹா
அருமையான பதிவு ப்ரோ...மிகவும் சுவாரஸ்சியமாக இருந்தது...

கணேஷ் said...

சகோதரரே இன்னும் ஏன் indli.com இல் இணைக்கவில்லை....? /////

இல்லை அக்கா நான் இணைத்து விட்டேன்...

கணேஷ் said...

எப்படி கணேஷ் இப்படி கலக்றீங்க ??? //////

உங்களின் கருத்துக்கு நன்றி.....