குளோனிங் பற்றி படிக்க நேர்ந்தது. இதைப்பற்றி படிக்க படிக்க ஆர்வம அதிகமானதால். அதிக நேரம் செலவிட்டு குளோனிங் என்றால் என்ன என்பதை ஓரளவு தெரிந்துகொண்டேன்.
குளோனிங் பற்றி விரிவாக சொல்ல நினைப்பதற்கு முன் ஐன்ஸ்டீன் வந்து புகுந்து கொண்டார். என் நிலையில் ஐன்ஸ்டீனுக்கே முதலிடம் என்பதால் குளோனிங் பற்றியதை தள்ளிவைத்துவிட்டு இப்போது ஐன்ஸ்டீன் புராணம் பாடலாம் என்று நினைக்கிறேன்.
அது என்னமோ தெரியவில்லை ஐன்ஸ்டீனை பற்றி எழுதுவது என்றாலே எனக்குள் ஒரு இனம்புரியாத சந்தோசம்....
சரி இங்கு நான் சொல்வதற்கும் குளோனிங்க்கும் என்ன தொடர்போ அதைமட்டும் இப்போது சொல்லிவிடுகிறேன்.
அதாவது குளோனிங் என்றால் என்ன என்பதை மட்டும்.
குளோனிங் என்பது ஏற்க்கனவே இருக்கும் அல்லது இருந்த ஒரு உயிரினத்தை (ORGANISM) அப்படியே பிரதி எடுத்து(CHROMOSOME,GENE) அதைபோன்றே வேறொரு உயிரினத்தை உருவாக்குவது அப்படி உருவாக்கப்படும் உயிரினம் ஆனது எதில் இருந்து உருவாக்கபட்டதோ அதன் தன்மைகள் அனைத்தையும் அப்படியே கொண்டிருக்கும்.அதாவது CHROMOSOMES,GENES போன்றவைகள்,மற்றும் அதன் பண்புகள்.(இதில் பல வகைகள் உள்ளன..விரிவாக எழுத எண்ணம)
சொல்லப்போனால் இப்போது என்னை குளோனிங் செய்கிறோம் என்றால், உருவாக்காபட்ட இன்னொரு கணேஷ் 24 வருடங்கள் கழித்து இதே மாதிரி எதாவது ஒரு பெயரில் ஒரு வலைப்பூ தொடங்கி (பின்னூட்டம் யாரும் போடாவிட்டாலும் கவலை இல்லாமல்) எழுதிக்கொண்டிருப்பான் என வைத்துகொள்ளுங்கள்.
சரி அப்படி க்ளோனிங் முறையில் ஐன்ஸ்டீனை உருவாக்கினால் அவர் எப்படி இருப்பார் ..என்னென்ன மாற்றங்கள் இந்த உலகத்தில் நிகழும் என்பதை கொஞ்சம் பார்ப்போம்.
முதலில் அவர் சிறுவயதில் பாதிப்படைந்த DYSLEXIC என்ற நோயை அவரது ஜீனில் இருந்து நீக்கவேண்டும். இதனால் அவர் சிறுவ வயதில் பெறும் பாதிப்படைந்திருந்தார்.(இந்த நோய் மிகப்பிரபலமான LEONDRO DA VINCI.HANS CHRISTIAN ANDERSEN,NIELS BOHR போன்றவர்களையும் தாக்கி இருந்தது.)
இன்னும் சிலவருடங்களில் குளோனிங் முறையில் இப்போது இருக்கும் சில சிக்கல்களை தவிர்த்து எளிதாக குளோனிங் செய்யும் முறை வந்துவிடும். அதற்க்கு பிறகு ஐன்ஸ்டீனை வெற்றிகரமாக குளோனிங் செய்யலாம்.
அவர் இறந்த பின்னர் அவரது மூளையை இன்றுவரை பதப்படுத்தி வைத்து இருக்கின்றார்கள்.அதில் இருந்து GENETIC பொருள்களை எடுத்து இன்னொரு ஐன்ஸ்டீனை உருவாக்கலாம். அப்படி உருவாக்கினால்...என்ன நிகழும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து கிழே கொடுத்துள்ளேன்....
அவர் தனது 18 வயதிற்குள் என்னென்ன விசயங்களில் தேர்ச்சி பெற்றிருப்பார் என்பதை பார்ப்போம்.
1)அவரது முந்தைய வாழ்வில் கண்டுபிடித்த அனைத்தையும் பற்றி தெரிந்து கொண்டிருப்பார்.அதில் முழுவதும் தெளிவு பெற்றிருப்பார்.
2) தனது அறிவியல் அறிவுக்கு,ஆராய்ச்சிக்கு கணினியை எப்படி முழுமையாக பயன்படுத்தவேண்டும் என்பதை கற்றிருப்பார்
3)அவர் முதலில் செய்த தவறுகள் மற்றும் அது பின்வந்த காலங்களில் எப்படி சரி செய்ய பட்டு இருக்கின்றன என்பதை முழுவதும் அறிந்து இருப்பார்.
4) அவரது கண்டுபிடிப்புகள் அல்லாத மற்றவர்களின் கண்டுபிடிப்புகளையும் பற்றி முழு அறிவை கொண்டு இருப்பார்.
5) 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு நமது விண்வெளியில் என்னென்ன மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன என்பதை பற்றி முழு அறிவு அவரிடம் இருக்கும்.
இவைகளை அனைத்தும் தனது 18 ஆம் வயதிற்குள் முழுவதும் தெரிந்து வைத்து இருப்பார்.
பின் 18 வயதிற்கு மேல் ..
1) அவர் இறப்பதற்கு முன் செய்துகொண்டிருந்த UNIFIED THEORY யை மீண்டும் தொடருவார்.
2) அதோடு அப்போது இருக்கும் காலத்திற்கு ஏற்றவாறு சில THEORY கள்,மேலும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து கொண்டு இருப்பார்.
3) அணுசக்தியை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதில் புதிய முறைகளை கண்டுபிடித்து உலகிற்கு சொல்லுவார்.
4) தனது 22 ஆம் வயதில் அவர் முயன்று கொண்டிருந்த UNIFIED THEORY யை முழுவதும் கண்டுபிடித்து முடித்து இருப்பார். அதன் மூலம் இந்த பிரபஞ்சம் எப்படி(SINGULARITY) முதன் முதலில் உருவாகியது..இப்போது அது ஏன் இப்படி இருக்கின்றது..இனி வரும் எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் பிரபஞ்சத்தில் நிகழும் என்பதை சரியாக விளக்குவார்
.
இதனால் கோபம அடைந்த கடவுள் சம்பந்தபட்டவர்கள் ஐன்ஸ்டீனுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்கள். இதனால் ஐன்ஸ்டீன் மிகவும் மனவருத்தத்துக்கு உள்ளாவார்.
ஆனால் அடுத்து வரும் காலங்களில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்ததே சரியாய் இருக்கும் என்ற நம்பிக்கை அறிவியல் அறிஞ்ஞர்கள் அல்லாத சாதாரண மக்களுக்கும் வரும்.அப்போது ஐன்ஸ்டீனை பற்றி சாதரண மக்களுக்கும் தெரிந்து இருக்கும்.
அவருக்கு கிடைக்ககூடிய NOBEL PRIZE அவருக்கு 24 ஆம் வயதில் கிடைக்கும்.
அதுக்கு பிறகு வரும் காலங்களில் தனக்கு பிடித்தமான வயலின் வாசிப்பது,கடல் பிரயாணம் செய்வது போன்ற அவரது பொழுதுபோக்குகளில் அவரது காலங்களை கழிப்பார்.
இதற்க்கு இடையில் உலகெங்கும் உள்ள விஞ்ஞாநிகளுக்கு, மாணவர்களுக்கு பகுதிநேரமாக அறிவியல் சம்பந்தமான கல்வியுரை வழங்குவார்.
இது தவிர அவரது வாழ்க்கையில் ...கண்டிப்பாக எந்த ஒரு பெண்ணையும் காதலிக்க முயற்சிக்க மாட்டார்.
(ஐன்ஸ்டீன் முதல் திருமணம் காதல் திருமணம். அதுவும் அவர் படிக்கும் போது.அவர் காதல் திருமணம் சந்தோசமாக இருக்கவில்லை... பின்னர அந்த பெண்ணை (மிலேவா)விவாகரத்து செய்தார்..தனக்கு கிடைத்த நோபல் பரிசை தனது காதல் மனைவிக்கு கொடுத்தார் (ஏற்க்கனவே அந்த பெண்ணிடம் சொல்லிவைத்து இருந்தார் நோபல் பரிசு கிடைத்தால் கொடுப்பதாக்..)
பின்னர் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்))
இப்படி சொல்லி கொண்டே போகலாம்...ஆனால் நீங்கள் இந்த கணேஷுக்கு எதோ ஆகிவிட்டது என்று நினைக்கும், முன்னால் இங்கே நிறுத்தி விடுவது நல்லது..என நினைக்கிறேன்.
குளோனிங் முறையில் ஐன்ஸ்டீனை உருவாக்க வேண்டும் என்பது எனது ஆசையே..ஆனால் இப்பொது இருக்கும் குளோனிங் முறைகளில் மிகுந்த சிரமங்கள் இருக்கின்றன. வருகின்ற காலங்களில் சிரமங்கள் நீக்கப்பட்டு குளோனிங் முறையில் மனிதர்களை உருவாக்கலாம் என்பதே...எனது கருத்து...
ஆனால் இப்போதே சிலர் குளோனிங் முறையில் மனிதர்களை உருவாக்கி விட்டோம் என்கிறார்கள்...அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை நான் படித்து தெரிந்து கொண்டேன்....அப்படியே சிலர் உருவாக்கி இருந்தாலும் அது முழு வெற்றி அடைந்திருக்காது.
ஆனால் சில ஆண்டுகளில் இதில் உள்ள சிரமங்கள் எல்லாம் நீக்கப்படும்.என நம்புகிறேன்.
.
15 comments:
//) அணுசக்தியை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதில் புதிய முறைகளை கண்டுபிடித்து உலகிற்கு சொல்லுவார்.//
//அதன் மூலம் இந்த பிரபஞ்சம் எப்படி(SINGULARITY) முதன் முதலில் உருவாகியது..இப்போது அது ஏன் இப்படி இருக்கின்றது..இனி வரும் எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் பிரபஞ்சத்தில் நிகழும் என்பதை சரியாக விளக்குவார்//
உங்கள் கற்பனை நிஜமானால்.....நினைக்கவே சந்தோசமாக இருக்கிறது......!!
எப்படி கணேஷ் இந்த மாதிரி வித்தியாசமா யோசிக்கிறீங்க....??
நான் ஒன்று சொல்லட்டுமா? உங்கள் பதிவுகளை இன்னும் பலரும் படிக்க வேண்டும் இன்று விரும்புகிறேன். உங்கள் அறிவியல் விளக்கங்கள் பலரையும் சென்று அடைய வேண்டும்...
ஏற்கனவே இதை பற்றி சொல்லி இருக்கிறேன்... முயற்சி பண்ணுங்க....
எப்படி கணேஷ் இந்த மாதிரி வித்தியாசமா யோசிக்கிறீங்க....??
நான் ஒன்று சொல்லட்டுமா? உங்கள் பதிவுகளை இன்னும் பலரும் படிக்க வேண்டும் இன்று விரும்புகிறேன். உங்கள் அறிவியல் விளக்கங்கள் பலரையும் சென்று அடைய வேண்டும்...////
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க....
சரி பதிவுகளை பலரும் படிக்க எனக்கு ஆசைதான்...அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்களே சொல்லிவிட்டால்..சந்தோசப்படுவேன்...
நீங்கள் எதாவது அறிவுரை வழங்கினால் அதன்படி நான் முயற்சிப்பேன்...
இருந்தாலும் உங்களின் ஆதரவுக்கு நன்றி அக்கா......
கணேஸ் கட்டாஜம் ஐன்ஸ்டின் மீண்டும் வேண்டும். காரணம் நான் எழுதழய time related theory ஐ பொய் என்கிறார்கள்.
mathisutha.blogspot.com
கணேஸ் கட்டாஜம் ஐன்ஸ்டின் மீண்டும் வேண்டும். காரணம் நான் எழுதழய time related theory ஐ பொய் என்கிறார்கள்.////
உங்களது theory யை எனக்கு அனுப்ப முடியுமா?
வித்தியாசமான சிந்தனை ... ta.indli.com sendru ungal pathivai inayungal
வித்தியாசமான சிந்தனை ... ta.indli.com sendru ungal pathivai inayungal///
இணைக்கிறேன்...உதவிக்கு நன்றி.
ganesh...
sorry, நான் இப்போதுதான் பார்கிறேன். நண்பர் LK கூறியபடி இணையுங்கள்....சுலபம்தான்....இன்னும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்...
நன்றி அக்கா....
உங்கள் எழுத்து அற்புதமாக இருக்கிறது. தெளிவாக இருக்கிறது. உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.
உங்கள் எழுத்து அற்புதமாக இருக்கிறது. தெளிவாக இருக்கிறது. உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்\\\\
உங்களின் கருத்துக்கு நன்றி..
ஆஹா நீங்க கிரேட் எப்படி இப்படி ரூம் போட்டு யோசிக்கரப்ள தெரியல..எதோ இதுக்குன்னு ஒரு வீடுகட்டி யோசிக்கரேக போல...
மிக அழகான கற்பனை...அவரை குளோனிங் உருவாக்கினால் நிறைய அறிவியல் மாற்றங்களை நம் காணலாம்...அப்படியே அவரோட சேர்த்து கொஞ்சம் நம்ம காந்திஜி யையும் குளோனிங் பண்ண சொலுங்க நாடு நாசமா போயிட்டு இருக்கு...
மிக அற்புதமான பதிவு நண்பரே...
உங்கள் அனைத்து சோசியல் நெட்வொர்கிங் சிடேளையும் இந்த ப்ளாக் முகவரியை status message ஆக போடுங்கள்..முடிந்தால் ஒரு forward mail ready seyyungal அப்புறம் பாருங்க பிச்சுக்கிட்டு போகும்..உங்கள் அருமையான பதிவுகள் அனைவரை சென்று சேர வேன்டும்..நானும் ஏன் நண்பர்களுக்கு சொல்றேகிறேன்..
ஆஹா நீங்க கிரேட் எப்படி இப்படி ரூம் போட்டு யோசிக்கரப்ள தெரியல..எதோ இதுக்குன்னு ஒரு வீடுகட்டி யோசிக்கரேக போல...///
நீங்க வேற gurgaon ல் 3000 மாத வாடகை கொடுத்து இருக்கேங்க...உங்களின் அறிவுரைக்கு நன்றி...
கற்பனைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. சுற்றுப்புற சூழல் காரணமாக குளோனிங் தாறுமாறாக இருக்கவும் சாத்தியம் உண்டு.
சுற்றுப்புற சூழல் காரணமாக குளோனிங் தாறுமாறாக இருக்கவும் சாத்தியம் உண்டு////
இப்போது உள்ள முறையில் சாத்தியம் இல்லைதான்..அஆனல் வரும்காலத்தில் ஏதாவது புதிய முறையில் இது எளிமையாக சாத்தியமாகலாம் என்பது எனது நம்பிக்கை...
உங்களின் கருத்துக்கு நன்றி..
மிக அருமை........
தொடர்ந்து எழுத வாழ்துக்கள்
Post a Comment