உங்களுக்குள்ளே ஒரு கடவுள் - THE GOD GENE.


   கடவுள் வேறெங்கும் இல்லை அவர் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறார்..அவரை வெளியே தேடவேண்டிய அவசியம் இல்லை. என நான் படித்து இருக்கின்றேன்.
(அப்படி நமக்குள் இருக்கும் கடவுளை கண்டுகொள்ள உதவி செய்யத்தான்  இன்று நிறையா ஆனந்தாக்கள் இருக்கிறார்கள்..உள்ளேயும் வெளியேயும்....)

   நான இங்கே கொடுத்து இருப்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருக்கிறார்....இது முற்றிலும் உண்மை......அது எப்படி என்றுதான் இசொல்லி இருக்கின்றேன்.......அந்த கடவுள் நமக்குள் இருக்க காரணமாய் இருக்கும் VMAT 2 GENE ஐ பற்றி .....

அதற்க்கு முன் கொஞ்சம் சுஜாதா புராணம். இந்த பகுதிக்கு பொருத்தமாக மற்றும் தேவையாக இருப்பதால் எழுதுகிறேன்.(உண்மை.. கிடைத்த இடைவெளியில் சுஜாதா புராணம் மற்றும் ஐன்ஸ்டீன் புராணம் எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று) 

    சுஜாதா அவர்களை பொறுத்தவரையில் எப்போதும் எனக்கு இரண்டு ஆசைகள் இருந்ததுண்டு....ஒன்று அவரை எந்தவிததிலவ்து தொடர்பு கொள்ளவேண்டும்.மற்றோன்று அவரது புகைப்படத்தை என் அறையில் மாட்டவேண்டும் என்பது. இதில் இரண்டாவது ஆசையை நான் மிக எளிதாக நிறைவேற்றிவிட்டேன். ஆனால் முதலாம் ஆசை கடைசிவரை நிறைவேறாமலே போனது.

    சில வருடங்களுக்கு முன் நான் அவர் எழுதிய ஜினோம். என்ற புத்தகத்தை படித்து இருந்தேன். சில நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு இந்த புத்தகத்தை பரிந்துரைத்த போதுதான் எனக்கு நினைவுவந்தது அந்த புத்தகம் என்னிடம் இருப்பது. சரி சுஜாதா புத்தகம்தான் எத்தனை முறைவேண்டுமனாலும் படிக்கலாமே என்று படிக்க ஆரம்பித்தேன். நான் முதல் முறை அதை படித்ததற்கும் இப்போது படித்ததற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. ஜீனோம் விசயத்தில் கொஞ்சம் தேறியிருந்தேன். எல்லாம் சுஜாதா செயல்.

   இந்த புத்தகத்தில ஜீனோம் பற்றி அழகிய தமிழில் எளிமையாக சொல்லி இருப்பார் நமது சுஜாதா. இதே புத்தகத்தின் கடைசி பக்கத்தில் முடிக்கும் போது மனித ஜீனோம் ல் கடவுள் நம்பிக்கையை கொடுக்ககூடிய எதாவது ஒரு ஜீன் பொதிந்து இருக்கலாம் அதுவும் விரைவில் கண்டு பிடிக்கபடலாம் அப்படி கண்டுபிடித்தால் எனக்கு சொர்க்கத்துக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் என்று சொல்லி அந்த புத்தகத்தை முடித்து இருப்பார் சுஜாதா.(கடைசி பத்தியில்)

    இந்த GOD GENE  விசயம் பற்றி அவர் இந்த புத்தகம் எழுதிய நேரத்தில் அந்த GENE கண்டுபிடிக்கப்படவில்லை.அவர் இந்த புத்தகம் எழுதியது 2001 ஆண்டு இந்த GOD GENE (VMAT2) கண்டு பிடிக்கப்பட்டது 2004 ஆம் ஆண்டு. அதனால்தான் அவர் சொர்க்கத்துக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அதில் சொல்லியிருப்பார்.

    சரி இப்போது அவர் சொல்லிவிட்டு சென்ற அந்த GOD GENE விஷயத்தை கொஞ்சம் பார்ப்போம். நான் இந்த GOD GENE ஐ பற்றி என்னதான். கொஞ்சம் படித்து தெரிந்து இருந்தாலும்கூட இதை சுஜாதா சொல்லி அல்லது விளக்கி இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்ற எண்ணம எப்போதும் எனக்கு இருக்கும்..இந்த விஷயத்தில் மட்டும் இல்லை நான் புதியதாக கற்றுக்கொள்ளும் எல்லாவிசயத்திலும் ஏனோ அவரை நான் இழக்கிறேன்.

    சரி இந்த GOD GENE ஆனது அமெரிக்கா நாட்டை சேர்ந்த DEAN HAMER  என்பவரால் எடுத்து சொல்லபட்டது.அவர் இதைப்பற்றி THE GOD GENE HOW FAITH IS HARDWIRED INTO OUR GENE என்ற புத்தகமே எழுதி இருக்கிறார்.

    இந்த GENE செய்யும் வேலைகளாக அவர் சொல்லுவது மனிதர்க்களுக்குள் இருக்கும் ஆன்மிக உணர்வு மற்றும் MYSTIC  ஆற்றலுக்கு மூல காரணம் இந்த GENE தன என்கிறார்.மேலும் மனிதர்களின் நம்பிக்கைக்கும் காரணமாய் இருப்பது இதுதான் என்பது அவரின் விளக்கம்.

    இதை அவர் விரிவாக புத்தகமாக வெளியிட்டபோது ஆண்மிகவதிகளும் ஒரு சில அறிவியலரும் இதனை குறை கூறி எதிர்த்தனர். அவர்கள் சொல்வது ஆன்மிகமும் கடவுளும் நமக்குள் இருந்து வருவதில்லை அது நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடு வழியாக நமக்குள் செல்வது என தெரிவித்தார்கள்.

    HAMER இதை அறிவியல் பூர்வமாக விளக்கியும் இருக்கிறார். அதாவது இந்த GENE ஆனது மூளையில் உள்ள ரசயானங்களான DOPAMINE மற்றும் NON EPINEPHRINE இணைந்து வேலைசெய்ய காரணமாக இருக்கின்றது.மனித மூளையில் இந்த ரசாயனங்கள்தான் மேலே சொன்ன ஆன்மிக உணர்வு மற்றும் MYSTIC ஆற்றலுக்கு காரணமாய் இருப்பது.

   அவர் சொல்லுவது இந்த GENE களின் செயல்பாடானது முழுவதும் கடவுள் நம்பிக்கைக்கு காரணமாய் இருக்கின்றது என்று சொல்வதைவிட. ஒன்றின் மீது நம்பிக்கை வைக்க காரணமாயிருப்பது இதுதான் என்கிறார்.

   என்னை பொறுத்தவரையில் கடவுள் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே..எப்படி என்றால் நீங்கள் எந்த ஒரு மதநூலை எடுத்து கொண்டாலும் அதில் கடவுளின் மிது அயராத நம்பிக்கைவைக்கவே சொல்லி இருக்கிறது.சொல்லப்போனால் நம்பிக்கை இல்லாமல் கடவுளின் கிருபை கிட்டாது என்பதையே அவைகள் வலியுறுத்துகின்றன.

    அப்படி பர்க்கபோனால் இந்த நம்பிக்கை என்பது VMAT2 எனற GENE  களின் வேலைதான் என்பதை HAMER உறுதிபடுத்தி உள்ளார். எனவே அந்த GENE க்கு GOD GENE என்ற பெயரும் வைத்துவிட்டார்.
   இந்த GENE ஏற்படுத்தும் நம்பிக்கை கடவுளின் மீதுதான் இருக்கவேண்டும் என அவசியமில்லை.அது ஆட்களை பொறுத்தது. சிலர் இந்த GENE ன் வேலையை கடவுளுக்கு அற்பனிக்கிறார்கள்..சிலர் வேறுவிதத்தில் இதுதான் வித்தியாசம்.மற்றபடி இந்த GENE க்குக் கடவுளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.இந்த GOD GENE இருப்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்..ஆனால் கடவுளை அல்ல.

   அதே நேரத்தில் கடவுள் இல்லை என நம்புகிறவர்கலுக்கு இந்த GENE வேலை செய்யாத என்றால்..வேலை செய்யும் ஆனால் அவர்களின் நம்பிக்கை கடவுளின் மீது இல்லாமல் வேறோன்றின்மிது இருக்கலாம்.
 
    என்னை பொறுத்தவரையில் கடவுள் நம்பிக்கை என்பது என்னில் வெற்றிடமே. அதற்க்கு பதிலாக நான் வேறொன்றின் மீது பற்று அல்லது நம்பிக்கை வைத்து இருக்கிறேன்.அது ஐன்ஸ்டீன்,சுஜாதா,....,...ஏன்..என் வீட்டு நாய்க்குட்டி,பூனைகுட்டி என்று எதன மீது வேண்டுமானாலும் நான் வைத்து எனது GOD GENE ன் வேலையை பூர்த்தி செய்யலாம்

    கடைசியாக இந்த GOD GENE (VMAT2) எப்படி வேலை செய்கின்றது என கொஞ்சம் பார்க்கலாம்..HAMER தனது ஆராய்ச்சியின் மூலம் இந்த VMAT2 GENE கள் மொத்தம் நமது உடலில சுமார் 35000 இருக்கின்றன என கண்டுபிடித்தார்.

  இந்த GENE களின் கூட்டமைப்பானது ஒன்றாக இணைந்து ப்ரோடீன் களை உருவாக்குகின்றன இந்த ப்ரோடீன்கள் MONOAMINES எனப்படும் NEURO TRANSMITTER ள் உருவாக காரணமாக இருக்கின்றன.

     இந்த MONOAMINE ஆனது நமது மூளைக்குள் நடக்கும் ஒருவித ரசாயன மாற்றத்திற்கு முக்கியபங்கு வகிக்கின்றன.அப்படி இதன் மூலம் நடக்கும் ரசாயன மாற்றத்தால் FEELING OF EUPHORIA,POSITIVE EMOTION AND PROPENSITY FOR ADDICTION  போன்ற மன உணர்வுகள் நமக்கு ஏற்படுகின்றன.

    அவர் சொல்ல வருவது கடவுள் நம்பிக்கையும் இந்த வகையில் உருவாகும் (மன உணர்வுதான்) ஒன்றுதான் என சொல்லுகிறார். மேலும் தியானம் செய்வதின் மூலம் நம் மனதில் ஏற்ப்படும் மாற்றங்களும் இந்த ரசாயன மாற்றங்கள்தான் என அவர் விளக்கி உள்ளார்.

     கடவுள் நம்பிக்கை மனிதனுக்கு நன்மை பயக்குமா இல்லையா எனபது எனக்கு தெரியாது,ஆனால் அறிவியல் பூர்வமாக பார்க்கும்போது தியானம் செய்வது நல்லது என்பது நான் அந்த புத்தகம் படித்ததில் இருந்து தெரிந்து கொண்டேன்.

கடைசியாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த GOD GENE ஆனது முழுவதும் நிருபிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

மேலும் தெரிந்துகொள்ள HAMER எழுதிய THE GOD GENE..என்ற புத்தகத்தை படிக்கலாம்.





                  

12 comments:

துளசி கோபால் said...

125

துளசி கோபால் said...

ரொம்பச் சரி.

அரசியல் வியாதிகளின் மீதும் சினிமா நடிகநடிகைகள் மீதும் கண்மூடித்தனமான அன்பையும் வெறியையும் நம்ம மக்களிடம் பார்க்கும்போது இந்த உண்மை சுலபமாப் புரியுது இப்போ!!!!!

கணேஷ் said...

உங்களின் கருத்துக்கு நன்றி...நீங்கள் சொல்வது சரிதான் ..எல்லாமே gene செய்யும் வேலைதான்...

அது என்ன 125 எனக்கு புரியவில்லை...

துளசி கோபால் said...

125

துளசி கோபால் said...

அட ராமா!!!! எனக்கும்தான் புரியலை. அந்த 125 எப்படி அங்கே வந்துச்சுன்னு!

ஜீனோமைப் பத்திப்பேசுறதால் எதோ ஜீனி வேலையா இருக்கணும்:-))))

கணேஷ் said...

சரி விடுங்க அந்த 125 அங்கே இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை...

அப்புறம் என பெயர் கணேஷ்....அட கணேஷ் என்று நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்))))))))

mynah said...

நல்ல பதிவு கணேஷ்.

சிந்திக்க வைத்த ஒரு பதிவு.
இந்த மாதிரியே இன்னும் பல நல்ல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வணக்கம்
மைதிலி

கணேஷ் said...

கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

நானும் சுஜாதா ரசிகன் என்ற வகையில் ஃபாலோயர் ஆகிட்டேன்.நல்ல பதிவு

கணேஷ் said...

நானும் சுஜாதா ரசிகன் என்ற வகையில் ஃபாலோயர் ஆகிட்டேன்.நல்ல பதிவு////

மிக்க நன்றி...

Gayathri said...

அருமையான பதிவு சகோதிரரே! நிறைய தெரிந்துகொண்டேன்..நன்றி..மேலும் பல இதே போன்ற பதிவுகளை எழுதுங்க..இனி தினமும் வரேன்...

கணேஷ் said...

அருமையான பதிவு சகோதிரரே! நிறைய தெரிந்துகொண்டேன்..நன்றி..மேலும் பல இதே போன்ற பதிவுகளை எழுதுங்க..இனி தினமும் வரேன்...//////

உங்களின் கருத்துக்கு நன்றி..கண்டிப்பாக எழுதுகிறேன்....