ஐன்ஸ்டீன் செய்(யா)த தவறுகள்...

-->
ஐன்ஸ்டீன் செய்(யா)த தவறுகள்...


EINSTEIN MADE NO MISTAKES…………


       என்ன இவன் தலைப்பை ஐன்ஸ்டீன் செய்த தவறுகள் என்று எழுதி விட்டு முதல் வரியை இப்படி எழுதி இருக்கின்றனே என்று யோசித்தால் தொடர்ந்து படியுங்கள்.....

       ஐன்ஸ்டீன் செய்த ஒரு மிகப்பெரிய தப்பு அவர் செய்யாத தப்புக்கு அதுவும் அது தவறே இல்லாத போதும் ...அவரே தன மீது பழியை போட்டுகொண்டதுதான்....

     அப்படி அவர் செய்யாத த்வறுகளைத்தான் பர்ர்க்க போகின்றோம்.......சரி தலைப்பில் உள்ளதை படித்த உங்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில் அவர் செய்த சிறு சிறு தவறுகளை சில வரிகளில் சொல்லிவிடுகிறேன்..

     ஐன்ஸ்டீன் அதிகம் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்....அவர் அறையில் இருக்கின்றாரா இல்லையா என்பதை சற்று தூரத்தில் இருந்தே கண்டுபிடித்து விடலாம்....அவர் உள்ளே இருந்தால் அதிக புகை வெளியேறிக்கொண்டே இருக்கும்.......

      அவர் தன தலைமுடியின் மீது கொஞ்சம் கூட  பாசம இல்லாதவர்..அவர் குறிப்பிட்ட வயதிற்கு மேல் தன முடியை சீப்பால் சீவியதில்லையாம்.....எங்கு சென்றாலும் தலைவிரிகோலம்தான்....

    அவர் SHOE அணியும்போது அதற்க்கு அணியும் SHOCKS அணிவதில்லை...இத்தனைக்கும்..அவர் அமெரிக்க அதிபர் ரூஸ்வேல்ட்டுடன் சந்திப்பின் போதும் சரி அதற்க்கு பின் வந்த காலங்களிலும் சரி அவர் அதை அணிந்த்தது இல்லை....இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது....இரண்டு பொருள்களில் ஒரு பொருள் அந்த இரண்டு பொருள்களுக்கான மன நிறைவை தரும்போது அந்த மறறோன்றிக்கு என்ன அவசியம் என்று பதில் அளித்துள்ளார்.... .

      சரி இவைதான் என்னை பொறுத்த வரையில் ஐன்ஸ்டீன் செய்த சிறு சிறு... தவறுகள்...(இது அவருக்கு சரி எனப்பட்டதால் தான் இவைகளை செய்திருக்கிறார்.....எனவே நான் இவைகளை  தவறுகள் என்று சொன்னால் அது சரியல்ல....சுற்றி சுற்றி நான் சொல்ல வருவது அவர் தவறு செய்து இருந்தாலும் அவர் செய்யவில்லை.....)

   இனி இந்த உலகமே அவர் செய்த தவறுகளாக எதைப்பர்க்கின்றன என்பதை பார்ப்போம்...

EINSTEIN BIG BLUNDER   ( for me WORLD BIG BLUNDER)

  இந்த தவறை ஐன்ஸ்டீன் தன வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறாக எல்லோர் முன்னும் ஒத்துக்கொண்டிருக்கிறார்.....

    அது..COSMOLOGICAL CONSTANT.  இது நடந்தது 1917 ஆம் ஆண்டில்.... அந்த வருடத்தில் தான் அவர் தனது SPACE TIME,GRAVITATION AND THE THEORY OF   RELATIVITY முடித்துவிட்ட நிலையில் இருந்தார். அதற்க்கு அடுத்தபடியாக அவர் செய்ய நினைத்தது இந்த UNIVERSE எப்படி இருக்கும் என்று தான் கண்டுபிடித்த RELATIVE THEORY மற்றும் SPACE TIME  மூலம் விளக்க்நினைத்தார்.

    அவரது அனுமானத்தின் படி இந்த UNIVERSE ஆனது நிலையானது அதாவது STATIC. ஆனால் அடுத்துவந்த காலங்களில் UNIVERSE ஆனது STATIC இல்லை அது EXPANDING ஆகக்கூடியது என்பதை கண்டுபிடித்து சொன்னார்கள்.

    இதை கேள்விப்பட்டவுடன் மனிதர் மிகவும் வேதனைப்பட்டு தான் எதோ ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக நினைத்து தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இது என சொல்லிவிட்டார்.

       இதை அப்போது இருந்த அறிவு ஜீவிகள் அப்படியே கவ்வி பிடித்து கொண்டார்கள்...
அவர் இப்படி சொன்னதற்கு காரணம் அவர் உருவாக்கிய RELATIVE THEORY  ஆனது UNIVERSE ஆனது குறிப்பிட்ட (TIME)நேரத்தில் அது விரிவடையும் என்பதை அனுமதிக்கவில்லை.

     எனவே அவரது அந்த THEORY க்காக அவர் உருவாக்கியதுதான் நிலையான் UNIVERSE. அல்லது cosmological constant.

     பின் வந்த EDWIN HUBBLE என்பவர் UNIVERSE ஆனது STATIC இல்லை அது EXPANDING ஆகக் கூடியது என்பதை கண்டு பிடித்து சொன்னார்.

     அவர் தொலைநோக்கியில் பார்க்கும் போது நட்சத்திரங்கள் பூமியைவிட்டு விலகி நகர்வதை கண்டார்.

 அவர் அந்த RED SHIFT நிகழ்வை 1931 ஆம் ஆண்டு ஆதாரத்துடன் விளக்கிய பின்னரே இந்த உலகமே நம்பியது....ஆம் நம் UNIVERSE EXPAND ஆகின்றது என்று.......

     (DOPPLER EFFECT என்ற ஒரு சமாச்சாரம் உள்ளது...அதன்படி ஒரு LIGHT ஆனது நம்மை விலகிச்சென்றால் அது போக போக நம் கண்ணுக்கு RED ஆகா தெரியும்(RED SHIFT)...அதே போல் அது நம்மை நோக்கி வந்தால் அது WHITE ஆக தெரியும்(WHITE SHIFT)....இந்த முறை பல்ல்வேறு விதங்களில் பயான்ப்டுத்தப்டுகின்றன.....FOR LIGHT,SOUND,TEMPERATURE..etc..)


     ஐன்ஸ்டீன் அனுமானம் தவறு என்றானதும் அவர் அதை ஏற்றுக்கொண்டதோடு மட்டும் இல்லாமல்...அதை தன் வாழ்வில் பெரிய தவறு என்று சொல்லியும்விட்டார்..

     ஐன்ஸ்டீன் செய்த மிகபெரிய தவறு அவர் இப்படி தான் செய்த ஒரு கணிப்பை தனது தவறாக ஒத்துக்கொன்டதே... இது என்னதான்  அவரை ஒரு நல்ல மனிதராக எடுத்துகாட்டினாலும்....

      அவரது அறிவையும்,அவரின் அறிவியலின் பங்களிப்பையும் பார்க்கும்போது அவர் ஒன்றும் அப்படி பெரிய தவறு செய்யவில்லை....அப்படியே தெரியாமல் செய்து இருந்ததாலும் என்ன? அது தவறே இல்லை....

      ஏனென்றால் அவர் ஒன்றும் இளம் சூடான தேங்காய் எண்ணெயில் புளியங்க்கொட்டையை வரட்டி தின்றால் உல் மூலம் வெளி மூலம் சேர்ந்து  சரியாகும் என்றோ...
     பாலோடு எலுமிச்சை சாரு சேர்த்து கொண்டால் முடி நன்றாக வளரும் என்று கண்டுபிடித்து சொல்லுபவர் இல்லை....

    அவரது அறிவுக்கு சான்றாக பல விசயங்கள் உள்ளன....நான் இங்கு ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்....

  அதாவது ஐன்ஸ்டீன் சூரியனுக்கு பின்னால் உள்ள நட்சத்திரங்கள் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக நமக்கு அதன் ஒளியானது வளைந்து நமக்கு தெரியும் என்பதை கற்பனை செய்து சொன்னார்....

    ஆனால் அப்போது இருந்தவர்கள் அது எப்படி முடியும் .. ஒளி யாவது வளைந்து கொடுப்பதாவது.....வாய்ப்பே இல்லை என சூடம அடித்து சத்தியம் செய்தார்கள்....

   ஒரு சிலர் மட்டும்தான் அதை எப்படி என தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினர்.

   அடுத்து வந்த ஒரு கிரகணத்தின் போது அதை சோதனை செய்து பார்த்து விடுவது என முடிவு எடுத்து இருந்தார்கள்...

   அந்த நாளும் வந்தது... உலகமே அன்றைய தினத்தில் பார்த்து வியந்தது ஐன்ஸ்டீன்  அறிவுத்திறனை பார்த்துதான்...

  அவர் சொன்னது போலவே சூரியனுக்கு பின்னால் உள்ள நட்சதிரங்கள்  ஈர்ப்பு விசையின் மூலம் நமக்கு  தெரிந்தது உறுதி செய்யப்பட்டது....

   ஐன்ஸ்டீன் அதை கணித சமன்பாடக வெளியிட்டபோது இன்னும் அனைவருக்கும் ஆச்சர்யம்.....

   இது அப்போது அறிவியல் உலகில் ஒரு பெரிய விசயமாக இருந்ததுதான் உண்மை....

  
    .NILES BOHR என்பவர் QUANTUM MECHANICS யை வெளியிட்ட போது..அது எப்படி என எதிர்த்து விவாதம் செய்தவர் ஐன்ஸ்டீன்.....இந்த இருவரின் விவாதம் அப்போது உலகின் தலைசிறந்த மிகப்பெரிய அறிவியல் சம்பந்தமான விவாதமாக இருந்தது....


(இதைப்பற்றி ..ஒரு கட்டுரை எழுத முடிவு செய்திருக்கிறேன்...GOD DOES NOT PLAY THE DICE WITH UNIVERS என்ற தலைப்பில்...)  




மேலே கொடுத்துள்ள படங்கள் ஒளி எப்படி ஏன் வளைந்து கொடுக்கின்றது என்பதை விளக்கும் படம்தான்

   சரி கதைக்கு வருவோம்...அவர் கண்டுபிடித்த அந்த COSMOLOGICAL CONSTANT ஏன் தவறு இல்லை என்பதை பார்ப்போம்..

  நமது பிரபஞ்சத்தில் 75% விரிந்து இருப்பது DARK ENERGY OR DARK MATTER . இப்போது உள்ள அறிவியலர்கள் அதை நிலையாக இருப்பது எங்கும் அசையாதது என கண்டு பிடித்து உள்ளனர்.

   அப்படி என்றால் இங்கு ஐன்ஸ்டீன் அனுமானம் சரியாகின்றது.அவர் FORMULA இங்கு உபோயிக்கலம் என சொல்லுகிறார்கள்.இதுபற்றி ஆரைய்சிகள் நடக்கின்றன...இது முழுவதும் நிருபிக்க பட்டால்......அடுத்து என்ன சொல்ல வருகிறேன் என  .......அது உங்களுக்கே தெரியும்..

   என்னை பொறுத்த வரையில் ஐன்ஸ்டீன் அவர்களின் ஒரு எழுத்துகூட தவறு இல்லை..அது எப்போதாவது சரி என்று நிருபிக்க படும் எனபது என சிறிய அறிவின் மூலம
நான் கண்டுகொண்டது....


(குறிப்பு: இங்கு நான சொன்ன மருந்துகளை யாராவது சாப்பிட்டு முயற்ச்சித்து பார்த்துவிட்டு ஒன்றும் ஆகவில்லை என.கையில் என் போடோவுடன் என்னை டெல்லியில் தேடவேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.)

11 comments:

Kousalya Raj said...

என்ன அருமையாக எழுதி இருக்கீங்க?! ஆனா ஏன் இன்னும் பலரால் நீங்கள் தெரியபடாமல் இருக்கிறீர்கள்?

உங்கள் படிப்பையும், பொது அறிவையும் கலந்து கட்டி இருப்பது சூப்பர்...!! இன்னும் அதிகமாக எழுதுங்கள். வாழ்த்துகள்.

intha word verificationai eduththu vidunkal. mattravarkal comments poda uthaviyaka irukkum. nanri

கையேடு said...

//என்னை பொறுத்த வரையில் ஐன்ஸ்டீன் அவர்களின் ஒரு எழுத்துகூட தவறு இல்லை..அது எப்போதாவது சரி என்று நிருபிக்க படும் எனபது என சிறிய அறிவின் மூலம
நான் கண்டுகொண்டது....

//

அவரது பல கோட்பாடுகள் திருத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக திடநிலை இயற்பியலில் அவர் முன்வைத்த சில அனுமானங்கள் தவறு என்று முற்றுமுடிவாக அறியப்பட்டுவிட்டது. உதாரணமாக.. ஐன்ஸ்டீனின் தன்வெப்ப ஏற்புத்திறன் கோட்பாடுகள்.

உரையாட இன்னும் இருக்கிறது உங்கள் கட்டுரையில், இப்போதைக்கு இது மட்டும்.

கணேஷ் said...

\\\\என்ன அருமையாக எழுதி இருக்கீங்க?! ஆனா ஏன் இன்னும் பலரால் நீங்கள் தெரியபடாமல் இருக்கிறீர்கள்?

உங்கள் படிப்பையும், பொது அறிவையும் கலந்து கட்டி இருப்பது சூப்பர்...!! இன்னும் அதிகமாக எழுதுங்கள். வாழ்த்துகள்\\\\


உங்களின் கருத்துக்கு நன்றி..கண்டிப்பாக எழுதுவேன்...

கணேஷ் said...

அவரது பல கோட்பாடுகள் திருத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக திடநிலை இயற்பியலில் அவர் முன்வைத்த சில அனுமானங்கள் தவறு என்று முற்றுமுடிவாக அறியப்பட்டுவிட்டது. உதாரணமாக.. ஐன்ஸ்டீனின் தன்வெப்ப ஏற்புத்திறன் கோட்பாடுகள்.]]]

(நீங்கள் சொனவற்றை படித்து இருக்கின்றேன்..)

இருந்தும் நான் அப்படி சொன்னதற்கு காரணம் அவர் மீது கொண்ட அதிக பற்றே காரணம்....மேலும் நான் அதிகம் அறிவியல் படித்தவன் இல்லை...அதனால்தான் என் சிறிய அறிவுக்கு என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தேன்...
இருந்தும் அவரும் சாதாரண மனிதரே எனவே தவறு செய்ய வாய்ப்பிறுக்கின்றது....

அவர் சொன்ன ஒரு வாக்கியம்..

if someone feels that they had never made a mistake in their life then it means they had never tried a new thing in their life...

உங்களுக்கே தெரியும் அவர் புதியதை முயன்றார இல்லையா என்று...
நான் ஒரு ஐன்ஸ்டீன் பைய்த்தியம் என்பதால் இந்த மாதிரியான வார்த்தைகள் அதிக ஆர்வத்தினால் வருவது சகஜமே..மன்னியுங்கள்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கலா இருக்கு பாஸ்..

கணேஷ் said...

கலக்கலா இருக்கு பாஸ்..]]]

ரெம்ப நன்றி சார்...ஏதோ உங்களை பார்த்து கத்துகிட்டதுதான்.....

Abdul said...

Very nice Article.

கணேஷ் said...

Abdul said...
Very nice Article.////

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

Unknown said...

whether u know it or not i dont know, his letter to US president regarding atom and its energy in the time of second world war lead to invention of nucler bomb. And i am Einstein fan

Jayadev Das said...

Kindly make a change: It is "Theory of Relativity" and Not "Relative" Theory.

தமிழ் புத்திரன் said...

Some EINSTEIN'S equations will failure in the future.