சுஜாதாவும் ..synthetic cell ம்.....

சுஜாதாவும் synthetic cell ம்...

      முதலில் நான் சொல்ல வரும் விஷயத்தை சொல்லி விடுகிறேன்...
அறிவியலில் மற்றுமொறு மைல் கல்லாக ஒன்றை கண்டு பிடித்து இருக்கிறார்கள்... அது synthetic CELL. (இதைப் பற்றி கொஞ்சம் ஆழமாக படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன் SYNTHETIC CELL என்பது சரியான வார்த்தை இல்லை என்பதை....பத்திரிக்கைகள் இதை தவறாக உபோயோகிகின்றன....சரியான வார்த்தை SYNTHETIC DNA.இங்கு நானும் அப்படி சொனதர்க்கு காரணம் செய்திகளில் அப்படி வந்ததால் நான் வேறுமாதிரி சொன்னால் கொஞ்சம் குழப்பும் அதான்...)

அமெரிக்கவை சேர்ந்த VENTER மற்றும் அவரது குழுவினர் இதை கண்டுபிடித்து உள்ளனர்.(இதில் தமிழ் நாட்டில் படித்தவர்களும் இருப்பதாக படித்தேன் கொஞ்சம் சந்தோசம்)

     அவர்கள் தங்கள உருவாக்கிய செயற்கையான DNA மூழக்கூறுக்களை ஏற்க்கனவே இருக்கும் ஒரு CELL ல் சேர்த்து பார்த்தார்கள்.(அந்த செல்லில் உள்ள DNA வின் ஒரு பகுதியை நீக்கிய பின் அந்த இடத்தில்) அது சாதாரண CELL களை போலவே பல்கி பெருகத்தொடங்கியது இதன் மூலாம் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் அதிகம். எடித்துகாட்டாக ஐன்ஸ்டீன்    E = MC^2 FORMULA எப்படியோ அப்படித்தான் இதுவும்.

    இதன் மூலாம் செயற்கையான முறையில் உயிரிகளை உருவாக்கும் சாத்தியம் உட்பட bio fuel போன்ற பல நல்ல விசயங்களை செய்ய முடியும் என்பதை அவர்கள் எடுத்து காட்டியுள்ளனர்.

   இதற்கும் சுஜாதா அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்றால்....

    சுஜாதா எனக்கு ஒரு நல்ல சிறந்த வழிகாட்டி.நல்ல மனிதர். என்னைபோன்ற இளைஞ்ர்களுக்கு அவரின் எழுத்து கண்டிப்பாக தேவை. அதை நான் என் வாழ்க்கையில் உணர்ந்த்தவன்.

   சரி இந்த SYNTHETIC CELL பற்றி என் சுஜாதா ஏற்க்கனவே எனக்கு சொல்லி இருக்கிறார். ஆம் அவர் எழுதிய வேலி என்ற கதையில் இதை தெயளிவாக எழுதி இருக்கிறார்.

   இந்த கதையை  அவரது விஞ்ஞான சிறுகதை தொகுப்பில் நிங்களும் 360 ஆம் பக்கத்தில் படிக்கலாம்.

   அவர் என்ன சொல்லியிருக்கிறோ அதைத்தான் இப்போது செய்து இருக்கிறார்கள்.

   இது மனிதர்க்கு எப்படி தெரிந்தது,எங்கே படித்தார் என்று தெரியவில்லை.

    நான் இந்த கதையை  படித்தது இரண்டு வருடங்களுக்கு முன். நான் இது சம்பந்தமான செய்தியை பார்த்தவுடன்..சிறிது நேரத்தில் என் மனதில் தோன்றியது சுஜாதாவின் இந்த புதிய செயற்கை உயிர் கதைதான்.... என் அறையில் இருந்த புத்தக குவியல்கலீல் அந்த புத்தகத்தை தேடிப்பிடித்து மிண்டும் அந்த கதையை படித்தேன்.....(என்னிடத்தில் உள்ள ஒரு சிறப்பு என் அதிக ஞாபகசக்தி தான் )

    சொல்ல முடியாத சந்தோசம், பெருமை,  நான் ஒரு நல்ல மனிதரை கடந்த ஐந்து வருடங்களாக பின்பற்றிவருகிறேன் என்பதை நினைத்து.

    அதிக சோகம் (சுஜாதா இப்போது இல்லை என நினைத்தால் எப்போதும் எனக்கு கொஞ்சம் கண்ணீர் வரும்.)

     உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் சுஜாதா போட்ட வட்டததில்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். அதுவே எனக்கு போதும்.



    முதலில் சுஜாதாவை எனக்கு எந்த அளவு எப்படி பிடிக்கும் என்பதை கொஞ்சம் சொல்லி விடுகிறேன். அவர் அப்படி,இப்படி என்று அதிகமாக சொல்லி ஜல்லியடிக்க விரும்பவில்லை  (இது அவரது வார்த்தை)

   அதிகம் பிடிக்கும் என்றால் இதுவரை நான் தமிழில் அதிகம் படித்த புத்தகங்களில் 99% சுஜாதா உடையது.

    என்ன சொல்ல ...நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை அவரைப்பற்றி.......ஆனால் ஒன்று சுஜாதா பூரானம் பாடினால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படிப்பேன்.....ஆனால் அவரைப்பற்றி கொஞ்சம் தவறாக படிக்க நேர்ந்தால் எழுதியவரின் குடுமபததில் உள்ளவர்களின் இரண்டு தலைமுறையினர் வரை கொஞ்சம் நினைவு கூர்வேன்...அவ்வளவுதான்....

   எனவே இதற்கு மேல் படிப்பவர்கள் அவரைப்பற்றி படித்துவிட்டு பிடித்து இருந்ததால் நல்லது.....இல்லை என்றால் எதாவது அவரைப் பற்றி  கருத்து தெரிவிக்கிறேன் என்று முயர்ச்சிப்பதைவிட வலது கைப்பக்கம் சற்று மேலே மூலையில்  உள்ள சிவப்பு நிற பெருக்கல் குறியை அழுத்துவது நல்லது.....

  

    இது நான் சுஜாதா அவர்களை படிக்கும் முன் வரைதான். நான் எப்போது அவரை படிக்க ஆரம்பித்தேனோ கொஞ்சம் கொஞ்சமாக   அவரின் கருத்துக்களை என்னுள் ஏற்ற தொடங்கினார். அதுவும் மிக எளிய முறையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல.

   அவர் கருவை மற்றும் சொல்லி விட்டு சென்று விடுவார். அதற்க்கு பிறகு அதை புரிந்து கொள்ள  அதைவைத்து கொண்டு நான் படும்பாடு அது எனக்குத்த்தான் தெரியும்..

   அப்படி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டதுதான். அதற்க்கு காரணம் என்னில் இருந்த புதியவற்றை கற்றுக்கொள்ளும் ஆர்வமே. அதற்க்கு சரியாக வழி காட்டியவர் அவரே.

    என்னை பொறுத்தவரையில் என் வாழ்க்கையில் சில நல்ல விசயங்களில் நான் இன்று ஈடுபடுகின்றேன் என்றால் அதற்க்கு முதல் காரணம் சுஜாதா அவர்களே.அவரது ஒரு அறிவுரையையும் நான் தட்டியதில்லை.

   என்னை பொறுத்தவரையில் சுஜாதாவின் வார்த்தைகளை கடைபிடிப்பது என்னை போன்ற இளைஞ்ர்களுக்கு ஒரு மிகபெரிய வரமே.கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

   அவரது எழுத்தின் மூலாம் என்னை செதுக்கி,வளர்த்து,தெரியாததை கற்று கொடுத்து இந்த நிலைவரை கொண்டு வந்து இருக்கிறார்.

   இதற்க்கு நான் அவருக்கு செய்யும் நன்றிகடன் அவரது வார்த்தைகளை கடைபிடிப்பதைவிட வேறொன்றும் இருக்க முடியாது.

   அவர் அதிகம் சொல்லுவது படிக்கத்தான். எதைப்படித்தால் நி உருப்பிடுவாய் என்பதை கூட அவரே எனக்காக சொல்லி இருக்கிறார்.

  அவருக்கு பெருமை சேர்ப்பது என்றால் அவரின் ஆசைப்படி நான் அதிம படிக்க வேண்டும். கட்டாயம் இன்னும் அதிகம் படிப்பேன்....என் சுஜாதாவுக்காக.



3 comments:

HVL said...

உங்கள் பதிவுகளைப் படித்தேன். நீங்கள் சொல்லும் விஷயங்கள் வித்தியாசமாக இருக்கின்றன. மேலே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. வாழ்த்துகள்!

கணேஷ் said...

மிக்க நன்றி....

Unknown said...

வாத்தியார் பற்றி சொன்னது நல்லா இருக்கு! சந்தோஷமா இருக்கு! சுஜாதா சுஜாதாதான்!! :))