L = ETO...

L = ETO

   (கொஞ்சம் ஐன்ஸ்டீன் பைத்தியம் பொறுத்துக்கொள்ளுங்கள்)..



L = ETO

    இதற்கு முழு விளக்கத்தையும் சொல்ல வேண்டும் என்றால் ...எனக்கு ஒரு பாடல் நினைவுக்குவருகின்றது...

மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழாக்கூடுமோ.....

ஆம் இந்த வரிகள்தான் அதற்க்கு முழு விளக்கம்...


    இந்த FORMULA காதலின் ஆணி வேறை விளக்குவது. சரி அதை பார்க்கும் முன் காதல் எப்படி? ஏன்? உருவாகின்றது என்பதை கொஞ்சம் பார்க்கலாம்.


    இது என்ன கேள்வி காதல் என்பது நான்கு கண்களில் தோன்றி பின் இதயத்தில் நுழைந்து.... கனவில் வாழ்ந்து...கவிதை எழுதி.....யாருக்கும் தெரியாமல் அலை பேசியில்  முணுமுணு பேச்சுக்களில் வளர்ந்து.... ஊர் சுற்றி....கடைசியில்...ஜெயித்தால் திருமணம்.... எதிர்ப்பு என்றால்...வீட்டை விட்டு ஓடவைத்து....அல்லது தற்கொலை செய்ய வைத்து....ஒரு வழியாக அது தெய்விக காதலாக மாறுகின்றது.


    இவைகள்தான் நாம் காதலைப்பற்றி அன்றாடம் கேட்பது..படிப்பது..அல்லது பார்ப்பது.

    உணமையில் காதல் என்பது என்பதை சற்று உற்று பார்த்தால்... காதல் என்ற போர்வையில் செய்கின்ற அனைத்து செயல்களும் கொஞ்சம் பைய்த்தியக்காரத்தனமாகவே தெரியும்.


   சரி காதல் மேற்க்கூறிய விதத்தில் தோன்றுவதாக நமக்கு தெரிந்தாலும் அதற்க்கு பின்னணியில் என்ன என்பதை கொஞ்சம் பார்க்கலாம்...

    காதல் தோன்றுவதறக்கான காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பது...

 SEXUAL ATTRACTION AND ATTACHMENT

   இதில்  SEXUAL ATTRACTION என்பது பொதுவாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் முதல் பார்வையில் அல்லது நல்ல பழக்கத்திற்கு பிறகு தோன்றுவது.

    இது ஒருவரின் பழக்க வழக்கங்கள், நடை உடை,பாவனைகள் போன்றவற்றை பொறுத்தது.  ஒருவருக்கு இது எல்லாமே சரியாக இருந்தால் பலரால் பெரிதும் கவரப்படுவார்.

 

   SEXUAL ATTRACTION இருந்தாலே உடனே காதல் வந்து விடாது.. இதற்க்கு அடுத்த படியாக ஒன்று இருக்கின்றது அதுதான் ATTACHMENT..

 
    SEXUAL ATTRACTION ன் முலம தன் கவர்ந்த ஒருவரை தனது நிரந்தர துணையாக ஆக்கி கொள்ள விரும்புவதுதான் இந்த ATTACHMENT.

   நம் ஊரை பொருத்தவரைக்கும் SEXUAL ATTRACTION க்கு ஒரு தடையும் இல்லை, ஆனல் ATTACHMENT ல் தான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது. சதி, மதம். இவைகள் தங்கள் விளையாட்டை காண்பிப்பதும் இதில்தான்.


    காதல் என்பது ATTACHMENT க்காக (குடும்ப வாழ்க்கைக்காக) SEXUAL ATTRACTION ன் மூலம் ஒரு பெண்ணை தேடிக்கொள்வதே இதில் எந்த ஒரு மாற்றமும இல்லை.


    இதில் முக்கிய பங்கு வகிப்பது SEXUAL ATTRACTION தான். இதுதான் மூல காரணமும்.
  

    காதல் முதலில் மனதில் நுழைவது இந்த வடிவத்தில்தான். காதலின் நுழைவாயில் இதுதான் என்று சொன்னவுடன் இல்லை இல்லை எங்கள் காதல் புனிதமானது என்று சொல்லி அறிவியலை ஏமாற்ற முடியாது...


    ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு நம் இதயம் 70( FOR ADULT) முறை துடிக்கின்றது என்பதை சொன்ன அதே அறிவியல்தான் இதையும் சொல்லுகின்றது என்வே முரண்டு பிடிக்காமல் ஒப்புக்கொள்வது நல்லது.

    சரி இந்த SEXUAL ATTRACTION காதலுக்கு மட்டும்தான் உதவுமா என்றால் அது இல்லை. இது மற்றொரு முக்கிய பங்கையும் வகிக்கின்றது.

  அது RE PRODUCTION. இந்த SEXUAL ATTRACTION இல்லை என்றால் ஆண் மற்றும் பெண் அவர்கள் தன் தன் வழியில் தனித்தனியாக சென்று கொண்டிருப்பார்கள்.

   இது இருக்கப்போய்த்தான இந்த காதல், திருமணம், குடும்பம் எல்லாம். ஒருவகையில் இந்த SEXUAL ATTRACTION ஆனது SURVIVAL FUNCTION னுக்கும் துணை புரிகின்றது.

  அது சிலருக்கு காதலில் தொடங்குகின்றது..சிலர்க்கு திருமணத்தில் தொடங்குகின்றது.அவ்வளவே..

   சரி இந்த இரண்டிற்கும் காரணம் என்ன என்று பார்த்தால் இங்கு எனது FORMULA வை உபோயோகிக்கலாம்.


L = ETO

இங்கு   L  =  LOVE

        E  = ESTROGEN

        T  = TESTOSTERONE

O = OXYTOCIN

ESTROGEN, TESTOSTERONE , OXYTOCIN இந்த மூன்று விதமான HORMONE கள்தான் காதல் மணம் வீசுவதறக்கு முக்கிய  காரணமானவைகள்.

   இந்த HORMONE கள் நமது உடம்பில் மிக முக்கியமான பல வேலைகளை செய்தாலும்... இவைகள் காதலுக்கு எப்படி துணைபுரிகின்றன என்பதை மற்றும் இங்கு பார்க்கலாம்.



  முதலில்  ESTROGEN


   இந்த ESTROGEN அதிக அளவு சுரப்பதும், உதவி செய்வதும் பெண்களுக்ககத்தான். ஆண்களுக்கு மிகச் சிறிய அளவே சுரக்கின்றது.

  சரி இது காதலுக்கு எப்படி உதவுகின்றது என பார்ப்போம்... பெண்களை பொறுத்தவரை SEXUAL ATTRACTION க்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த HORMONE தான்.

  இது பெண்களை பொறுத்தவரையில் இந்த வேலையை தவிர வேறு சில முக்கியமான் வேலைகளை செய்கின்றது. அதை பற்றி தெரிந்து கொள்ள ஆசை என்றால் இதைப்பற்றி தேடு படிக்கவும்.... நான் இங்கு இது காதலுக்கு எப்படி உதவுகின்றது என்று மட்டுமே சொல்லி இருக்கிறேன்.

 ஆண்களை பொறுத்தவரையில் இது சிறிய அளவிலேதான் சுரக்கின்றது.

 பெண்களை (மெ)பெண்மை மிக்கவர்களாக காட்டுவது இந்த ESTROGEN தான். இது அளவில் குறைந்ததால் கொஞ்சம் ஆண் போல் இருப்பார்கள், நடந்து கொள்ளவார்கள். மற்றும் குரலில மாற்றம்  இருக்கும், உடலில் ரோம வளர்ச்சியில் மாற்றம் ஏற்ப்படும். இது பெண்களுக்கு...

 அதே நேரத்தில் ஆண்களுக்கு இது அதிகமாக சுரந்தால் அவர்கள் பெண்னை போல் நடந்து கொள்வார்கள்.


 ஆண் பெண் இந்த இரண்டையும் பிரிததுகாட்டுவதில் இந்த HORMONE முக்கிய பங்கு வகிக்கின்றது.

 இந்த ESTROGEN  தனியாக மருந்து வடிவிலும் கிடைக்கின்றது. பெண்களில் ESTROGEN குறைபாடுகாளால் உண்டாக்கும் நோய்களை போக்க இது பயன்படுத்தபடுகின்றது.

     ( மருந்து  CREAM, LIQUID, TABLETS  வடிவத்திலும் கிடைக்கின்றது. நான இது சம்பந்தமாக தேடி பிடித்து படித்துக்கொண்டிருக்கும் போது இதை படிக்க நேர்ந்தது. ...அதாவது ஒருவர் சந்தேக கேள்வியை எழுப்பி இருந்தார்.... ஒரு ஆண் இந்த ESTROGEN ஐ உண்டால் பெண்ணாக மாறிவிடுவான? என்று அவர் கேட்டு இருந்தார்.... அதற்க்கு மருத்துவரின் விளக்கம் மிகத் தெளிவாக நிளமாக இருந்தது  அதை முழுவதுமாக இங்கு சொல்ல முடியாது... அவர் சொன்னது... பெண்ணாக முழுவதும் மாற முடியாது கொஞ்சம் பெண்மைத்தன்மையோடு ஒரு சில மாற்றங்களே ஏற்ப்படும் என்று சொல்லி இருந்தார்.)


   அடுத்து TESTOSTERONE.....இது ஆண்களுக்கு மிக அதிகமாகவும் பெண்களுக்கு மிக குறைவாகவும் சுறக்கும். இது ஆண்களின் SEXUAL ATTRACTION க்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.


  மேலும் இது ஆண்களை பொறுத்தவரையில் சதை வளர்ச்சி, உடல் வளர்ச்சி, எடை சம்ந்த்மான விசயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

 பெண்களை பொறுத்த வரையில் ESTROGEN  என்ன வேலைகளை செயய்கின்றனவோ அதே வேலைகளை அதே பங்கை TESTOSTERONE  ஆண்களை பொறுத்த வரையில் செய்கின்றது.


  இது வரை ஆணுக்கும் பெண்ணுக்கும் SEXUAL ATTRACTION ஐ கொடுக்க காரணமாக இருந்த HORMONE களை பற்றி பார்த்தோம்...அடுத்ததாக ATTACHMENT க்கு காரணமான OXYTOCIN ஐ பற்றி பார்க்கலாம்.


    ஒருவர் மற்றோருவருடன் எந்தத அளவுக்கு நெருக்கமாக, அன்பாக பழகுகின்றரோ அதை பொறுத்தே அவரின் OXYTOCIN அளவை சொல்லி விடலாம்....ஆம் இது மற்றொருவருடன் பழக அல்லது நெருங்கி சுமுகமாக பழக உதவி செய்வது.


  இதனை ஆராச்சி செய்து நிறுபித்து இருக்கிறார்கள். மனித உறவுகளுக்கு இடையே உள்ள பாச பினைப்புகளுக்கு இதுவே காரணம்.

   இது காதலுக்கு மட்டும்தான் உதவுகின்றது என்பது இல்லை....எல்லவிதமான் உறவுகள் நெருக்கமாக..பாசமாக இருக்க இது உதவுகின்றது.... எடுத்துக்காட்டாக கணவன் மனைவி... தாய் குழந்தை.... அண்ணன் தம்பி....போன்றவைகளும் இதில் அடங்கும்.


  முக்கியமாக் தாய்மார்கள் தன் குழந்தையை அரவணைக்க இதுவே முக்கிய காரணம். அதனால் தான் இதற்க்கு CUDDLE HORMONE என்ற பெயரும் உண்டு. இது தவிர இது பெண்களுக்கு குழந்தைபேறு காலங்களில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது.


   சொல்ல வேண்டும் என்றால் இது செய்யும் வேலை தான் காதலனோ,காதலியோ ஒருவரையொருவர் பிரியும்போது எதோ இந்த உலகமே இருண்டுவிடுவது போல தெரிவதும் இதனாலதான்.

   அவ்வளவுதான் காதல் என்பது இந்த மூன்று HORMONE கள் சம்பந்தப்பட்டவையே......இதைத்தவிர வேறொரு வகையில் அமைய வாய்ப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

   எனவே இந்த காதலுக்காக நாம் என்னென செய்கிறோம என்பதை ஒரு முறை சற்று யோசித்து பார்த்து கொள்வது நல்லது.


   அதைவிட்டுவிட்டு இல்லை எங்கள் காதல் புனிதமானது ..தெயவிகமானாது....நாங்கள் வாழ்ந்தால் சேர்ந்தே வாழ்வோம் இல்ல என்றால் சேர்ந்தே சாவோம் ...என்று சொல்லி காதலுக்கு பெருமை சேர்ப்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

  அதற்காக காதலே செய்ய கூடது என்று சொல்லவில்லை.... இன்னும் நம் சமுகம் காதலுக்கு முழு அங்கீகாரம் கொடுக்கவில்லை... அப்படி கொடுத்தால் தாராளாமாக காதலிக்கலாம்.

  எனக்கு வருத்தம் அழிப்பது காதல் என்ற பெயரில் நடப்பதுதான்....வீட்டை விட்டு பெற்றோரை விட்டு ஓடிப்போவது, தோல்வியில் தற்கொலை செய்து கொள்வது, பெற்றோர் களின் மான மரியாதையை புதிதாக போட்டுகொண்டிருக்கும் சேது சமுத்திர கால்வாயின் வழியாக கப்பலேற்றி அனுப்பவது போன்றவற்றை செய்வதே .... காதல் செய்வது இல்லை...

  அப்படியே காதல் வயப்பட்டலும் அதில் ஒன்றும் அப்படி உருப்படியான காரியங்கள் நடப்பதாக எனக்குத்தெரியவில்லை....
ஊர் சுற்றுவது,இரவு விழித்து இருந்து பேசி கொள்வது...செல் போன்களின் பட்டன்களை பரண்டி ....பரண்டி செய்தி அனுப்புவது...

 முக்கியமாக் தேவை இல்லாமல் பணம் மற்றும்      நேரத்தை செலவிடுவது  இவையே காதலின் முக்கிய பணிகள்..


    காதல் செய்வதை கட்டுப்படுத்தவத்து     அவ்வளவு சுலபம் இல்லை ..ஏனென்றால் அது எங்கும் வெளியில் இருந்து வரவில்லை...அதற்க்கு உண்டான வேலைகள் நமக்குள்ளே தான் நடைபெறுகின்றது.... இது பொதுவாக HORMONE களின் வேலை என்பதால் யாரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது.... இதை தவிர்க்க  கொஞ்சம் அதைப்பற்றி புரிதலே போதுமானது....



  அதற்க்கு நான் எழுதியது கொஞ்சம் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.














3 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சைட் பார்ல இருக்கிற மனிதர்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் கணேஸ்.. இப்போதான் உங்கள் பழைய பதிவுகளையும் படித்துகொண்டு இருக்கிறேன்..

கணேஷ் said...

நன்றி...அந்த இருவருமே என் வாழ்வில் முக்கிய பங்கை வகித்தவர்கள்....முக்கியமாக என் சுஜாதா அவர்கள்....

கவிநா... said...

வாவ்.... நிறைய சுவாரஸ்யமான தகவல்கள்...

//செல் போன்களின் பட்டன்களை பரண்டி ....பரண்டி செய்தி அனுப்புவது...//


நல்ல நகைச்சுவை...